1
00:00:20,312 --> 00:00:24,354
நேனிதால்
2
00:00:57,937 --> 00:00:59,603
ஹனி, நாம பேசணும்.
3
00:00:59,604 --> 00:01:02,021
இப்பவா? பேசு.
4
00:01:02,812 --> 00:01:05,104
நம்மை சுற்றி என்ன தெரியுது?
5
00:01:06,271 --> 00:01:07,146
குழந்தைகள்.
6
00:01:07,854 --> 00:01:08,854
தூங்கும் குழந்தைகள்.
7
00:01:09,521 --> 00:01:11,021
இதிலிருந்து என்ன புரியுது?
8
00:01:12,271 --> 00:01:13,146
ஹனி!
9
00:01:13,271 --> 00:01:14,521
என்ன புரியுது?
10
00:01:14,646 --> 00:01:16,979
குழந்தைகளுக்கு எல்லாம்
தப்பா நடக்குது
11
00:01:17,729 --> 00:01:20,561
மணியை பாரு! காலை 7 மணிக்கு
பள்ளி தொடங்குது.
12
00:01:20,562 --> 00:01:24,186
நாங்க காலை 6 மணிக்கு எழுந்திருக்க
கட்டாயப்படுத்தப் படுகிறோம்.
13
00:01:24,187 --> 00:01:27,312
நியாயமில்லை. பள்ளி நேரம்
சரியே இல்லை.
14
00:01:27,937 --> 00:01:30,603
நேரத்தில் தூங்கினால், இது சரியான
நேரம்தானே?
15
00:01:30,604 --> 00:01:34,020
பாரு, ஹனி, நல்ல தூக்கம்னா
நல்ல கவனம்.
16
00:01:34,021 --> 00:01:37,228
நல்ல கவனம்னா நல்ல மதிப்பெண்கள்.
17
00:01:37,229 --> 00:01:40,145
நல்ல மதிப்பெண்கள்னா நல்ல எதிர்காலம்.
18
00:01:40,146 --> 00:01:42,728
இப்ப தெரியுது பெரிசானப்புறம்
என்னவாகணும்னு.
19
00:01:42,729 --> 00:01:43,978
பள்ளி முதல்வர்!
20
00:01:43,979 --> 00:01:46,062
இந்த அமைப்பை
மாத்திடுவேன்!
21
00:01:46,521 --> 00:01:47,729
அமைப்பையா நேரத்தையா?
22
00:01:48,271 --> 00:01:49,270
இரண்டுமே.
23
00:01:49,271 --> 00:01:51,811
நேற்று ரயில் ஓட்டுனரா
ஆகணும்னியே?
24
00:01:51,812 --> 00:01:53,395
பள்ளி முதல்வரே பரவாயில்லை.
25
00:01:53,396 --> 00:01:55,186
யார் வேணா ரயில் ஓட்டலாம்.
26
00:01:55,187 --> 00:01:57,562
ஆனால் யாரும் குழந்தைகள்பற்றி
யோசிப்பதில்லை.
27
00:01:58,271 --> 00:02:00,811
பிள்ளைங்க எப்படினு
பெரியவங்களுக்கு தெரியாது.
28
00:02:00,812 --> 00:02:03,187
அப்படியா? கராத்தேக்கு
உன்ன யாரு அனுப்புனா?
29
00:02:03,854 --> 00:02:06,729
அனுப்பலைன்னா, உனக்கு கராத்தே பிடிக்கும்னு
எப்படி தெரியும்?
30
00:02:08,021 --> 00:02:09,186
நாளை முதல் நடன வகுப்பு?
31
00:02:09,187 --> 00:02:12,395
வேண்டாம்! ப்ளீஸ், நடனம் வேண்டாம்!
32
00:02:12,396 --> 00:02:14,603
எனக்கு ஆடவே வராது.
33
00:02:14,604 --> 00:02:16,395
உனக்கு ஆட வராம இல்லை.
34
00:02:16,396 --> 00:02:17,853
நீ நல்லாவே ஆடறே.
35
00:02:17,854 --> 00:02:19,603
வி அங்கிளுக்கு கூட பிடிக்கும்.
36
00:02:19,604 --> 00:02:20,811
- நிஜமாவா?
- ஆமாம்.
37
00:02:20,812 --> 00:02:22,146
ஆனால் எனக்கு ஆட வேண்டாம்.
38
00:02:22,521 --> 00:02:24,271
பாரு, அம்மா யாரு?
39
00:02:25,771 --> 00:02:27,520
நாளை முதல் நடன வகுப்புகள். போ.
40
00:02:27,521 --> 00:02:30,854
அம்மான்னு சொல்லிட்டு யார் வேணா
விவாதத்தை வெல்லலாம்.
41
00:02:31,687 --> 00:02:32,687
இரு.
42
00:02:35,396 --> 00:02:36,895
- எப்பவுமே...
- எச்சரிக்கை.
43
00:02:36,896 --> 00:02:38,811
- நீ வாங்க கூடாது...
- யாரிடம் திட்டும்.
44
00:02:38,812 --> 00:02:40,812
- கொடுமை படுத்தினா...
- விட மாட்டேன்.
45
00:02:41,771 --> 00:02:44,146
- முதல் குத்து...
- என்னோடதா இருக்கும்.
46
00:02:55,104 --> 00:02:57,520
கஃபே
க்ரௌன்
47
00:02:57,521 --> 00:02:58,561
இதோ.
48
00:02:58,562 --> 00:03:00,061
- நன்றி.
- நன்றி.
49
00:03:00,062 --> 00:03:01,146
எல்லாம் சரியா?
50
00:03:03,312 --> 00:03:05,061
நாடியா டான்ஸ்க்கு சரினாளா?
51
00:03:05,062 --> 00:03:06,520
நிறைய ட்ராமா செய்த பின்.
52
00:03:06,521 --> 00:03:09,270
ஆனா ஒத்துக்கிட்டாளே!
அற்புதம். அவளுக்கு பிடிக்கும்.
53
00:03:09,271 --> 00:03:12,811
பிடிக்க ஆரம்பிச்சுதுன்னா,
எல்லாரை விடவும் சிறப்பா ஆடுவா!
54
00:03:12,812 --> 00:03:14,396
- நடந்தா நல்லது.
- ஹனி.
55
00:03:15,562 --> 00:03:17,146
நீ ஆடி நான் பார்த்ததில்லை.
56
00:03:21,312 --> 00:03:24,645
விவேக், நான் சந்தைக்கு போய்
சாமான் வாங்கி வர்றேன்.
57
00:03:24,646 --> 00:03:28,228
பெரிய பட்டியல்.
உன்னால தனியா முடியாது.
58
00:03:28,229 --> 00:03:30,978
சமாளிப்பேன். கடவுள் எனக்கு
உயரத்தை தரலை,
59
00:03:30,979 --> 00:03:32,646
வலிமையால ஈடு கட்டறேன்.
60
00:03:33,021 --> 00:03:34,686
வங்கி வேலையை முடிக்கறியா?
61
00:03:34,687 --> 00:03:37,561
கடனை அடைச்சிட்டா நாம கஃபேவை
விரைவில் விரிவாக்கலாம்.
62
00:03:37,562 --> 00:03:39,812
அதனால்தான் நம் கூட்டணி
பிடிக்கும்.
63
00:03:40,354 --> 00:03:42,687
நீ எனக்கு ஆதரவு, நான்
உனக்கு ஆதரவு.
64
00:03:43,229 --> 00:03:44,396
நாம சிறந்த அணி, இல்ல?
65
00:03:47,187 --> 00:03:48,187
நான் போகணும்.
66
00:03:51,729 --> 00:03:53,936
பத்து ரூபாய்.
67
00:03:53,937 --> 00:03:56,312
தண்ணி 10 ரூபாய்! தண்ணி 1
0 ரூபாய்!
68
00:04:02,146 --> 00:04:04,229
{\an8}சாந்த் டேலர்ஸ்
பெண்கள் மற்றும் ஆண்கள்
69
00:04:18,354 --> 00:04:19,853
[ஃப்ரெஞ்ச்] உங்க பெயரென்ன?
70
00:04:19,854 --> 00:04:22,811
உங்கள் பெயர் என்ன?
71
00:04:22,812 --> 00:04:25,395
என் பெயர்...
72
00:04:25,396 --> 00:04:26,561
இப்ப பேரு.
73
00:04:26,562 --> 00:04:28,853
என் பெயர் நாடியா.
74
00:04:28,854 --> 00:04:29,771
ஆமாம்.
75
00:05:00,229 --> 00:05:01,436
திரும்ப சொல்றீங்களா?
76
00:05:01,437 --> 00:05:02,937
[ஃப்ரெஞ்ச்] என் பெயர்...
77
00:05:04,229 --> 00:05:06,228
சரி. "எப்படி இருக்கீங்க"ங்கறதை
சொல்வோம்.
78
00:05:06,229 --> 00:05:07,146
ப்ளே
79
00:05:08,187 --> 00:05:10,936
எப்படி இருக்கீங்க?
80
00:05:10,937 --> 00:05:13,645
நல்லது, மாணவர்களே.
நாம சேர்ந்து சொல்லுவோமா?
81
00:05:13,646 --> 00:05:15,520
எப்படி இருக்கீங்க?
82
00:05:15,521 --> 00:05:18,103
அதுக்கு எப்படி பதில் சொல்வீங்க?
நான் நலம்.
83
00:05:18,104 --> 00:05:19,936
அதை எப்படி ஃப்ரெஞ்சில் சொல்வது?
84
00:05:19,937 --> 00:05:21,895
- நல்லா இருக்கேன்.
- மிஸ்!
85
00:05:21,896 --> 00:05:23,896
"நான் நலம்" என்பதை எப்படி
சொல்றது?
86
00:05:24,312 --> 00:05:26,812
- நல்லா இருக்கேன்.
- பிரமாதம்! திரும்ப.
87
00:05:27,396 --> 00:05:28,562
நல்லா இருக்கேன்.
88
00:06:35,021 --> 00:06:38,271
சினிமா
89
00:07:57,146 --> 00:07:59,396
சிட்டடெல்
ஹனி பனி
90
00:08:40,396 --> 00:08:43,312
பம்பாய்
91
00:09:30,437 --> 00:09:33,437
கட்! அடா! அடா! சபாஷ்பா!
92
00:09:36,354 --> 00:09:39,271
- பைக்கை உன்னிடம் வேகமா கொண்டு வர்றேன்.
- சார்.
93
00:09:40,062 --> 00:09:41,854
நல்லாருந்துச்சா? மதிய வணக்கம்.
94
00:09:44,021 --> 00:09:46,061
- ஹேய்.
- நாயே.
95
00:09:46,062 --> 00:09:48,687
என் நாய்க்கு
உன் பெயரை வைப்பேன்.
96
00:09:49,937 --> 00:09:52,895
என்ன ஆச்சு? மாஸ்டர் ரொம்ப
உழைக்க வெச்சுட்டாரா?
97
00:09:52,896 --> 00:09:54,436
சக்தியெல்லாம் போச்சா?
98
00:09:54,437 --> 00:09:55,686
ஸ்டன்ட் எப்படி?
99
00:09:55,687 --> 00:09:57,395
உன் ஸ்டன்ட் தீ, தீ.
100
00:09:57,396 --> 00:09:58,854
எனக்கு ஜிகுஜிகுனு இருந்தது.
101
00:09:59,687 --> 00:10:02,437
நாம சேர்ந்து ஸ்டன்ட் பண்ண
மாஸ்டர்ட்ட கேளேன்.
102
00:10:03,271 --> 00:10:05,561
சரி, செய்வோம். டபுள் பல்டி
அடிப்போம்.
103
00:10:05,562 --> 00:10:07,437
நான் டெர்மினேடர், நீ ப்ரெடேடர்.
104
00:10:08,229 --> 00:10:11,395
நான் டர்மினேடர்,
நீ ப்ரெடேடர்.
105
00:10:11,396 --> 00:10:13,770
- கடைசி முறையா சொல்றேன்.
- நான் டர்மினேடர்.
106
00:10:13,771 --> 00:10:14,729
அடுத்து!
107
00:10:17,354 --> 00:10:19,771
- ஆக்ஷன்.
- ஹலோ, என் பேர் ஹனி.
108
00:10:22,312 --> 00:10:23,812
{\an8}இது என் ப்ரொஃபைல்ஸ்.
109
00:10:30,396 --> 00:10:31,728
- தொடங்குவோமா?
- சரி.
110
00:10:31,729 --> 00:10:32,896
ஆக்ஷன்.
111
00:10:36,146 --> 00:10:37,146
எங்கே?
112
00:10:38,229 --> 00:10:39,396
சுவிட்சர்லாந்தா?
113
00:10:40,396 --> 00:10:41,646
வாவ், சோனம்!
114
00:10:42,271 --> 00:10:45,229
- அழகான மலைகள்...
- நீ என்ன பண்றே?
115
00:10:47,479 --> 00:10:48,603
என் வசனம், அமர் சார்.
116
00:10:48,604 --> 00:10:51,687
இது ஹீரோயின் தோழியோட வசனம்.
அது தீர்மானமாயிடுச்சு.
117
00:10:52,312 --> 00:10:53,645
இது எதுக்கு ஆடிஷன்?
118
00:10:53,646 --> 00:10:55,561
கிராமத்து பெண்ணுக்கு.
119
00:10:55,562 --> 00:10:57,770
- நீ பொருந்தலை. சாரி.
- இல்லை, சார்.
120
00:10:57,771 --> 00:11:00,187
நான் எல்லாமே செய்வேன். என்ன செய்யணும்?
121
00:11:02,646 --> 00:11:03,479
ஆச்சரியம்.
122
00:11:04,271 --> 00:11:06,228
- என்ன?
- ஆச்சரியமா நடி.
123
00:11:06,229 --> 00:11:08,229
சரி, அது செய்ய முடியும்.
124
00:11:10,812 --> 00:11:11,812
இன்னும் கொஞ்சம்.
125
00:11:13,146 --> 00:11:14,187
இப்ப பயந்த மாதிரி.
126
00:11:15,437 --> 00:11:16,437
இன்னும் கொஞ்சம்.
127
00:11:17,687 --> 00:11:18,604
இப்ப, கலந்து.
128
00:11:19,854 --> 00:11:20,854
இன்னும் கொஞ்சம்.
129
00:11:22,854 --> 00:11:23,771
அலறு.
130
00:11:26,229 --> 00:11:27,062
நல்லா அலறு.
131
00:11:28,021 --> 00:11:28,896
இன்னும்!
132
00:11:29,354 --> 00:11:31,104
ஆஹா!
133
00:11:32,979 --> 00:11:34,229
- என்ன?
- எப்படி இருக்கு?
134
00:11:34,604 --> 00:11:35,811
எனக்கு மந்திர கைகள்.
135
00:11:35,812 --> 00:11:38,521
அப்படியா? வேறு எங்கெல்லாம்
மந்திரம் இருக்கு?
136
00:11:40,437 --> 00:11:41,437
ஹேய், ஜகன்.
137
00:11:41,854 --> 00:11:43,396
இங்க என்ன பண்றீங்க, லூடோ?
138
00:11:45,021 --> 00:11:47,312
பாபா கூப்டார். வேலை
இருக்காம்.
139
00:11:47,812 --> 00:11:50,479
விவரங்களை சொல்ல எப்ப
சந்திப்பது?
140
00:11:50,979 --> 00:11:52,312
ராஹி, மாஸ்டர்.
141
00:11:52,812 --> 00:11:54,978
இயக்குனருக்கு டேக் தேவை.
ஃபோகஸ் இல்லை போல.
142
00:11:54,979 --> 00:11:56,311
- பனி?
- சார்.
143
00:11:56,312 --> 00:11:58,686
இன்னொரு டேக் வேணுமாம்.
ஃபோகஸ் வரல. தயாரா?
144
00:11:58,687 --> 00:12:01,020
ஆர்டர் போடுங்க, மாஸ்டர்.
என் உயிரே உங்களுக்கு.
145
00:12:01,021 --> 00:12:02,187
- சீக்கிரம் வா.
- சரி.
146
00:12:03,562 --> 00:12:04,395
ஷூட்டுக்கு பின்.
147
00:12:04,396 --> 00:12:05,853
- பனி.
- வர்றேன் மாஸ்டர்.
148
00:12:05,854 --> 00:12:07,021
நீங்க கவனமா இருங்க.
149
00:12:07,896 --> 00:12:08,979
கவனம்தானே இல்லை.
150
00:12:16,479 --> 00:12:17,437
பாத்தேனே நான்.
151
00:12:19,312 --> 00:12:22,021
உனக்குள்ளே அது இருக்குன்னு
கவனிச்சேன்.
152
00:12:23,729 --> 00:12:24,729
என்ன சொல்றீங்க?
153
00:12:25,479 --> 00:12:28,229
நட்சத்திர தரம். நீ பெரிய நட்சத்திரமாகலாம்.
154
00:12:28,979 --> 00:12:31,311
பாரு, உன் திறமையை வீணாக்காதே.
155
00:12:31,312 --> 00:12:33,604
என்ன தேவையோ செய்.
பின் வாங்காதே.
156
00:12:34,312 --> 00:12:36,520
ஹீரோயின் தோழி பாத்திரம்
வேணுமா?
157
00:12:36,521 --> 00:12:39,104
அது நல்ல, திறமையான,
கவர்ச்சி பாத்திரம்.
158
00:12:39,812 --> 00:12:40,937
நான் சொல்றேன்,
159
00:12:42,062 --> 00:12:43,896
இந்த ரோல் உன் வாழ்வை அமைக்கும்.
160
00:12:47,021 --> 00:12:48,104
ரொம்ப யோசிக்காதே.
161
00:12:49,604 --> 00:12:52,521
இந்த பாத்திரத்தை பெற
என்ன செய்யணுமோ
162
00:12:53,521 --> 00:12:54,771
அதை நீ செய்யணும்.
163
00:13:04,771 --> 00:13:08,478
வடாபாவ்காரன் சொல்றான், முன்னேறும், அழகான,
திறமையான பெண் ஒருத்தி
164
00:13:08,479 --> 00:13:09,937
இயக்குனரை அடித்தாளாம்.
165
00:13:10,271 --> 00:13:13,104
அந்த பெண்ணை பாராட்டணும்.
நேரா இயக்குனரை அடிச்சிட்டா!
166
00:13:16,479 --> 00:13:19,353
இந்தா, ஏதாவது சாப்பிடு.
நீ பட்டினியா இருப்பே.
167
00:13:19,354 --> 00:13:21,562
- இந்தா.
- அந்த ரோல் எனக்கு ரொம்ப தேவை.
168
00:13:22,646 --> 00:13:26,396
பனி,ஹிந்தில சொல்லுவாங்களே?
சந்துல வந்துடுவேன்னு?
169
00:13:26,729 --> 00:13:28,271
- நடுத்தெரு.
- நடுத்தெரு.
170
00:13:28,979 --> 00:13:31,396
அது நான், நிஜமா.
171
00:13:35,187 --> 00:13:36,937
பல மாதங்களா வாடகை
தரலை.
172
00:13:38,687 --> 00:13:41,312
எல்லா இடத்திலும் முயற்சித்தேன்,
ஆனா வேலை இல்லை.
173
00:13:42,896 --> 00:13:45,771
பயனற்று உணர்றேன். நான்
என்ன பண்றேன்?
174
00:13:46,687 --> 00:13:48,479
யாருக்காக இதை செய்றேன்?
175
00:13:49,062 --> 00:13:50,770
இங்கே நான் என்ன செய்றேன்?
176
00:13:50,771 --> 00:13:52,270
நான் ஏன் பம்பாய் வந்தேன்?
177
00:13:52,271 --> 00:13:53,811
- ஹனி...
- நான் பயனற்றவள்.
178
00:13:53,812 --> 00:13:56,729
ஹனி, முதலில் ஏதாவது சாப்பிடு.
பிறகு கோபப்படு.
179
00:13:57,812 --> 00:13:59,729
நான் காலி. முடிஞ்சுது.
180
00:14:00,354 --> 00:14:03,020
என்ன "காலி, பயனற்றவள், முடிஞ்சுது."
என்ன இதெல்லாம்?
181
00:14:03,021 --> 00:14:05,311
உன்னை இங்கே எவ்வளவு
மதிக்கிறாங்க!
182
00:14:05,312 --> 00:14:09,396
உனக்காக நான் ரொம்ப கவலை படறேன்.
உனக்கு தனி அக்கறை உண்டு. நிஜமா.
183
00:14:09,729 --> 00:14:11,979
ஹனி, என்னை பார். என்னை பார்.
184
00:14:13,604 --> 00:14:14,937
ஹனி, நீ பயனற்றவள் இல்லை.
185
00:14:15,896 --> 00:14:18,896
எதிர்காலத்தில் பெரிசா ஏதாவது
செய்வேன்னு நம்பிக்கை இருக்கு.
186
00:14:24,187 --> 00:14:25,770
இப்ப எனக்கு அவசரமா பணம் தேவை.
187
00:14:25,771 --> 00:14:29,271
- எவ்வளவு வேணும்? நான் தர்றேன்.
- எனக்கு தானமெல்லாம் வேண்டாம்.
188
00:14:36,687 --> 00:14:37,771
ஒரு வேலை இருக்கு.
189
00:14:41,104 --> 00:14:44,229
ஸ்டன்ட்மேனா இருந்து மட்டுமே
சம்பாதிக்கிறேன்னா?
190
00:14:44,937 --> 00:14:47,479
வேறு வேலையும் செய்யறேன்.
அதுல நிறைய பணம்.
191
00:14:49,062 --> 00:14:50,104
என்ன வேலை?
192
00:14:52,187 --> 00:14:53,187
நடிப்பு மாதிரிதான்.
193
00:14:53,979 --> 00:14:57,979
ஆனால் ஷூட் இல்லை, கேமரா இல்லை.
நிஜ வாழ்க்கை.
194
00:15:00,396 --> 00:15:02,811
ஒருத்தரோட நீ முப்பது நிமிஷம்
செலவழிக்கணும்.
195
00:15:02,812 --> 00:15:04,561
நான் ஒருத்தரோட
படுக்கணுமா?
196
00:15:04,562 --> 00:15:08,187
சே! அப்படி சொன்னேனா?
நான் அப்படி சொல்வேனா...
197
00:15:09,021 --> 00:15:13,062
சரி, சாரி. ஆனால் இது
ஆபத்தா, சந்தேகமா இருக்கு.
198
00:15:14,562 --> 00:15:15,979
நன்றி, ஆனா வேண்டாம்.
199
00:15:22,437 --> 00:15:24,603
மேடம், நீங்க அறை 203 தானே?
200
00:15:24,604 --> 00:15:27,061
- சாமான் எடுத்துட்டு போ.
- எப்படி, சோனார் அங்கிள்?
201
00:15:27,062 --> 00:15:28,978
சொல்லாம என் சாமானே
எறியறீங்க?
202
00:15:28,979 --> 00:15:30,478
இரண்டு நாள் காக்க சொன்னேலே?
203
00:15:30,479 --> 00:15:32,979
மேனேஜர் காக்க முடியாதுன்னார்.
எடுத்துட்டு போ.
204
00:15:33,979 --> 00:15:36,436
சட்டா அங்கிளிடம் முழு வாடகையும்
தருவேன்.
205
00:15:36,437 --> 00:15:38,603
சரி. சாமானை எடுத்துட்டு போ,
அவரிடம் பேசு.
206
00:15:38,604 --> 00:15:41,228
அபத்தம்!
பெண்களை இப்படி நடத்தக்கூடாது.
207
00:15:41,229 --> 00:15:42,686
இதுல என் தப்பென்ன?
208
00:15:42,687 --> 00:15:45,354
- போலீஸை கூப்பிடுவேன்.
- சரி. யாரை வேணா கூப்பிடு. போ!
209
00:15:58,062 --> 00:16:00,062
மெத்தையை அங்க வை.
210
00:16:03,104 --> 00:16:06,311
மூச்சு விடவே இடமில்லை, இன்னொரு
ஆளை கூட்டி வந்திட்டீயா?
211
00:16:06,312 --> 00:16:07,396
அவ பணம் தருவாளா?
212
00:16:18,187 --> 00:16:21,729
{\an8}ஃபியர்லெஸ் நாடியா
டயமண்ட் க்வீன் - எதையும் முயற்சிப்பேன்!!!
213
00:16:37,979 --> 00:16:41,979
ஒரு ஹைடெக் பொருளை தரகம் செய்ய
டேவிட் டிசூசா பம்பாய் வர்றான்.
214
00:16:42,937 --> 00:16:45,103
அவர் நடவடிக்கை பற்றி என்ன
தகவல் இருக்கு?
215
00:16:45,104 --> 00:16:47,853
சில மணி நேரத்துக்கு
பம்பாய் வருவதாக தகவல்.
216
00:16:47,854 --> 00:16:50,561
தொழில்நுட்பத்தை இரவில் பெற்று,
ஹோட்டல் போய்டுவார்.
217
00:16:50,562 --> 00:16:52,270
மறுநாள் காலை லண்டன்
கெளம்பறார்.
218
00:16:52,271 --> 00:16:54,311
செய்ய வேண்டியது
இதுக்குள்ள செய்யணும்.
219
00:16:54,312 --> 00:16:57,146
ஹோட்டெல், அறை எண் எல்லாம்
நானே கண்டுபிடித்தேன்.
220
00:16:57,521 --> 00:16:59,853
நன்றி, லூடோ. நீ இல்லாம
என்ன செய்வோம்?
221
00:16:59,854 --> 00:17:01,061
உண்மைத்தான்.
222
00:17:01,062 --> 00:17:03,603
ஆனால் கவனமா இருக்கணும்.
பாதுகாப்பு இருக்கும்.
223
00:17:03,604 --> 00:17:05,396
இந்த ஆயுத
விநியோகஸ்தர்களுக்கு
224
00:17:05,521 --> 00:17:06,771
ஸ்டைல் காட்ட பிடிக்கும்.
225
00:17:08,021 --> 00:17:10,145
கவனி! இது முக்கியம்.
226
00:17:10,146 --> 00:17:12,521
நான் என்ன பண்றேன்?
விளையாடறேனா?
227
00:17:13,646 --> 00:17:15,770
- வேலை பண்றேன்.
- சோர் பஜார் பொருட்களோடா?
228
00:17:15,771 --> 00:17:17,270
அவைதான் சிறந்தவை, சரியா?
229
00:17:17,271 --> 00:17:19,853
இதைவிட மலிவா, சிறப்பா
எதுவும் கிடைக்காது.
230
00:17:19,854 --> 00:17:23,520
நான் செய்வதை காத்திருந்து பார்.
தகவல்தொடர்பு திடமா இருக்கும்!
231
00:17:23,521 --> 00:17:25,436
- திட்டம் என்ன?
- எளிமையானது.
232
00:17:25,437 --> 00:17:28,353
டிசூசா அறைக்குள் நுழைந்து,
தொழில்நுட்பத்தை திருடுவோம்,
233
00:17:28,354 --> 00:17:30,686
லூடோ அதனோடு சல்லாபிக்க.
234
00:17:30,687 --> 00:17:33,020
காய படாம உள்ள போய்
வருவோம். புரியுதா?
235
00:17:33,021 --> 00:17:35,896
சிறந்த திட்டம். சிறந்த தலைமை!
236
00:18:18,062 --> 00:18:19,062
ஹனி?
237
00:18:19,687 --> 00:18:22,771
வேலையை செய்யறேன்.
என்ன செய்யணும்?
238
00:18:43,271 --> 00:18:45,270
முற்றும்
239
00:18:45,271 --> 00:18:46,562
இயக்குனர்
ஆர்யமான் சௌத்ரி
240
00:19:27,396 --> 00:19:29,562
வியை அழை.
241
00:19:33,521 --> 00:19:36,979
அங்கிள், உள்ளூர் அழைப்பு.
இந்த எண்ணை டயல் பண்றீங்களா?
242
00:19:37,979 --> 00:19:39,896
432731
243
00:19:40,354 --> 00:19:43,437
கண்ணு, டயல் செய்ய உன் பெற்றோர்
சம்மதம் தேவை.
244
00:19:44,104 --> 00:19:46,062
இருக்கட்டும். நானே டயல் பண்றேன்.
245
00:19:46,896 --> 00:19:47,854
ஹேய்!
246
00:19:57,646 --> 00:19:58,979
- ஹலோ?
- வி அங்கிள்?
247
00:19:59,687 --> 00:20:00,603
நாடியா?
248
00:20:00,604 --> 00:20:03,812
லேட் ஆகும்னா ஹனி உங்களை
அழைக்கச் சொன்னாங்க.
249
00:20:05,312 --> 00:20:07,187
- இன்னும் வரலையா?
- இல்லை.
250
00:20:08,354 --> 00:20:10,520
- சரி, இரு. நான் வர்றேன்.
- வி அங்கிள்.
251
00:20:10,521 --> 00:20:12,437
- சொல்லு?
- நீங்க என்ன கூட்டி போகணும்.
252
00:20:14,562 --> 00:20:16,646
கூட்டி போகணுமா? எங்கிருந்து?
எங்கிருக்கே?
253
00:20:17,271 --> 00:20:18,354
படம் பார்க்கிறேன்.
254
00:20:21,396 --> 00:20:24,354
1992
பம்பாய்
255
00:20:39,604 --> 00:20:42,228
- எல்லாத்துக்கும் பிறகா?
- என்ன எல்லாம்?
256
00:20:42,229 --> 00:20:43,811
- சொல்லு.
- சொல்லணுமா?
257
00:20:43,812 --> 00:20:44,770
- பூஜ்யம்?
- ஆமாவா?
258
00:20:44,771 --> 00:20:47,020
பூஜ்ஜியம்! எனக்கு
மன அழுத்தம் கொடுத்தே.
259
00:20:47,021 --> 00:20:48,311
முடி வெளுத்து போச்சு.
260
00:20:48,312 --> 00:20:50,978
இங்கே ஹீரோவாக வந்தேன்,
ஹீரோவோட நண்பனானேன்!
261
00:20:50,979 --> 00:20:52,311
- அடச்சே!
- என்ன தைரியம்?
262
00:20:52,312 --> 00:20:53,645
என்னவெல்லாம் செய்தேன்!
263
00:20:53,646 --> 00:20:57,895
என்ன கிடைச்சுது? இந்த முதல் தர
போலி பரிசுகள்?
264
00:20:57,896 --> 00:21:00,478
மலிவான, மலிவான பரிசுகள்.
265
00:21:00,479 --> 00:21:02,395
- எல்லாத்தையும் எடுத்துக்கோ!
- ஹேய்!
266
00:21:02,396 --> 00:21:05,145
ஆமாம், ஏதோ பெரிய ப்ராண்ட்
அணிந்த மாதிரிதான்!
267
00:21:05,146 --> 00:21:07,853
நான் முதல்தர போலி தந்தாலதான்
பாதி ப்ராண்டே தெரியும்.
268
00:21:07,854 --> 00:21:09,187
டேவிட் அறை 1101.
269
00:21:09,646 --> 00:21:12,686
- ஹைடெக் டிஸ்க் எப்படி இருக்கும்?
- என்ன சொல்ற?
270
00:21:12,687 --> 00:21:15,020
வட்டமா, சதுரமா? உன் முகம் போல இருக்குமா?
271
00:21:15,021 --> 00:21:16,603
- இப்படி இருக்கும்.
- முட்டாள்!
272
00:21:16,604 --> 00:21:17,936
ஹேய், விளையாடாதீங்க.
273
00:21:17,937 --> 00:21:19,353
- இதை செய்யாதே.
- வாயை மூடு.
274
00:21:19,354 --> 00:21:21,561
பாரு, திட்டம் எளிமையானது.
275
00:21:21,562 --> 00:21:24,186
ஹனி டேவிட்டை நீண்ட நேரம்
ஈடுபடுத்த முடியாது.
276
00:21:24,187 --> 00:21:26,728
இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்க
நேரம் குறைவே,
277
00:21:26,729 --> 00:21:29,896
அது, லூடோ சொல்றபடி,
எப்படியும் இருக்கலாம். சரியா?
278
00:21:30,437 --> 00:21:32,561
ஆமாம். அதனால, உள்ளே போய்
வெளியே வரணும்.
279
00:21:32,562 --> 00:21:34,645
என்ன தெரியுமா? நாசமா போ!
280
00:21:34,646 --> 00:21:36,436
நீ போ. நீ நாசமா போ!
281
00:21:36,437 --> 00:21:37,687
ஆமாம், நான் போறேன்.
282
00:21:53,896 --> 00:21:55,354
உங்க கருணைக்கு நன்றி.
283
00:21:56,771 --> 00:21:57,771
பரவால்ல.
284
00:21:59,562 --> 00:22:00,562
எனக்கு பானம் தேவை.
285
00:22:04,062 --> 00:22:05,061
நெருப்பா இருந்தேனா?
286
00:22:05,062 --> 00:22:07,561
நெருப்பா? அது எரிமலை!
சிறப்பா செஞ்சே.
287
00:22:07,562 --> 00:22:11,186
நிஜ வாழ்க்கையில் நல்லா நடிக்கிறே.
கேமரா முன்னாடி என்னாச்சி?
288
00:22:11,187 --> 00:22:15,520
- ஒரு வார்த்தை சொல்லு, என்ன பண்றேன் பார்.
- உன்னை பாராட்டினேன்.
289
00:22:15,521 --> 00:22:17,811
ஆனால் உன் காதலன்
அதிகமா செய்தான்.
290
00:22:17,812 --> 00:22:19,353
அவன் போலி நடிகனா?
291
00:22:19,354 --> 00:22:22,228
பாவம் புவன். அவனுக்கு
10 மாசமா ரோலே கிடைக்கல.
292
00:22:22,229 --> 00:22:24,353
எல்லா நடிப்பையும்
இங்கேயே கொட்டிட்டான்.
293
00:22:24,354 --> 00:22:26,353
ஹனி, டேவிட் வருவான்னு
தோணுதா?
294
00:22:26,354 --> 00:22:29,186
வருவான். கவர்ச்சி பெண் சூத்திரம்
எப்பவும் கைவரும்.
295
00:22:29,187 --> 00:22:31,853
கவர்ச்சி பெண் மட்டுமில்லை,
கவர்ச்சியான அழும் பெண்.
296
00:22:31,854 --> 00:22:34,436
தொடர்புகள் தெளிவா இருக்கா?
எல்லாம் கேட்குதா?
297
00:22:34,437 --> 00:22:36,312
தெளிவா, உற்சாகமா.
298
00:22:37,021 --> 00:22:38,395
இது உயர் நுட்பம், லூடோ!
299
00:22:38,396 --> 00:22:41,021
யாரோ என் உயர் நுட்ப திறனை பாராட்டறாங்களே.
300
00:22:43,437 --> 00:22:45,895
- டேவிட் காப்பாற்ற வந்துட்டான்.
- சரி. புரியுது.
301
00:22:45,896 --> 00:22:47,687
பாய்ஸ், எச்சரிக்கை! போலாம்.
302
00:23:00,312 --> 00:23:02,686
பாரு, அழாதே.
303
00:23:02,687 --> 00:23:05,062
உனக்காக ரொம்ப வருந்தினேன்.
304
00:23:05,604 --> 00:23:07,646
அதனால, நீ நலமான்னு
பார்க்க வந்தேன்.
305
00:23:08,854 --> 00:23:10,521
- நான் நலம், சார்.
- டேவிட்.
306
00:23:11,896 --> 00:23:12,812
டேவிட் என அழை.
307
00:23:14,646 --> 00:23:15,521
நூரி.
308
00:23:16,687 --> 00:23:19,021
உனக்கு பானம் வாங்கறேன், நூரி.
309
00:23:24,146 --> 00:23:27,187
மணமாயிடுச்சு. பானம்தான்
வாங்கறேன், அவ்வளவுதான்.
310
00:23:35,854 --> 00:23:37,812
அப்ப, என்ன அருந்த விருப்பம்?
311
00:23:39,021 --> 00:23:41,604
- வோட்கா மார்டினி.
- சுவாரஸ்யமான தேர்வு.
312
00:23:43,937 --> 00:23:46,354
இவங்களுக்கு வோட்கா மார்டினி,
எனக்கு மால்ட்.
313
00:23:56,854 --> 00:23:58,103
சாக்கோ, அங்கே பார்.
314
00:23:58,104 --> 00:24:00,311
சாதனம் இல்லே டிஸ்க் தேடு.
315
00:24:00,312 --> 00:24:02,646
உன் புரிதலை தாண்டிய
தொழில்நுட்ப பொருள்.
316
00:24:13,646 --> 00:24:15,436
எதுவும் கிடைக்கலை. உனக்கு?
317
00:24:15,437 --> 00:24:17,186
- இல்லை.
- லூடோ எங்கே?
318
00:24:17,187 --> 00:24:18,562
பனி, சாக்கோ,
319
00:24:19,271 --> 00:24:20,437
உள்ளே லாக்கர் இருக்கு.
320
00:24:21,979 --> 00:24:24,311
என்னென்னா, தப்பா
நினைக்காதே,
321
00:24:24,312 --> 00:24:27,229
அந்த பையன் உன்
தகுதிக்கு ஏத்தவன் இல்லே.
322
00:24:27,854 --> 00:24:31,479
உன்னை போல நல்ல பெண்ணை
முட்டாள்தான் விட்டுப் போவான்.
323
00:24:31,896 --> 00:24:33,936
நான் நல்ல பெண் என எப்படி
தெரியும்?
324
00:24:33,937 --> 00:24:36,646
அட. உன்னை பாத்தாலே
தெரியுது.
325
00:24:37,562 --> 00:24:38,770
ஆனால் அந்த பையன்?
326
00:24:38,771 --> 00:24:41,604
அவன் உன்னோட சண்டையிட்ட போது
கோபம் வந்தது. நிஜமா.
327
00:24:42,146 --> 00:24:43,728
நான் என்ன செய்யலை அவனுக்கு?
328
00:24:43,729 --> 00:24:46,562
சொல்றேன்லே, உனக்கு அவன் தகுதி இல்லேனு.
தெளிவா தெரியுது.
329
00:24:47,479 --> 00:24:49,687
அவன் நண்பனோட ஒரு சின்ன உறவு,
அவ்வளவுதான்.
330
00:24:56,979 --> 00:24:58,146
புரியுது.
331
00:24:58,979 --> 00:25:00,896
எல்லாரும் தப்பு செய்வாங்க. பரவால.
332
00:25:01,479 --> 00:25:03,020
அவன் கசின் கூட.
333
00:25:03,021 --> 00:25:08,521
அதாவது, என்ன, இரண்டு...
நான்கு முறை. நான்கு முறை தான்.
334
00:25:11,771 --> 00:25:14,479
சரி, தொடர்பு தொடர்புதானே.
335
00:25:15,187 --> 00:25:18,020
எது முக்கியம்னா, யாரை நீ
காதலிக்கிறேன்னு.
336
00:25:18,021 --> 00:25:19,895
இது காதல் பற்றியல்ல, டேவிட்.
337
00:25:19,896 --> 00:25:21,687
- அப்புறம்?
- இது காதல் பற்றியல்ல.
338
00:25:22,896 --> 00:25:26,271
அதாவது, ஒரு பெண்ணுக்கு தேவைகள்
இருக்கு, இல்லே?
339
00:25:30,854 --> 00:25:33,146
எல்லாருக்கும் தேவைகள் இருக்கு,
நிச்சயமா.
340
00:25:34,187 --> 00:25:36,020
காதல் குறுகிய எண்ணமுடையது.
341
00:25:36,021 --> 00:25:39,604
முற்றிலும். அது 1980கள் எண்ணம்,
உண்மையில்.
342
00:25:40,604 --> 00:25:42,686
நாம 90களில் இருக்கோம், என்ன!
343
00:25:42,687 --> 00:25:44,686
இது நவீன உலகம், இல்லையா?
344
00:25:44,687 --> 00:25:46,562
இது நவீன உலகம்.
345
00:25:47,521 --> 00:25:48,646
ஆமாம்!
346
00:25:52,979 --> 00:25:55,186
- இது என்னது?
- மேம்பட்ட தொழில்நுட்பம்.
347
00:25:55,187 --> 00:25:56,687
வீடியோ கேம் உயர்நுட்பமா?
348
00:26:00,562 --> 00:26:02,687
மேலே பார்த்து கடவுளுக்கு
நன்றி சொல்...
349
00:26:04,562 --> 00:26:06,562
...நான் உங்க அணியிலிருக்கேன்னு.
350
00:26:15,562 --> 00:26:16,562
கிடைச்சுதா?
351
00:26:20,937 --> 00:26:22,104
டிஸ்க் அறைல இல்லே.
352
00:26:23,521 --> 00:26:25,021
என் மனைவியை நினைவூட்டறே.
353
00:26:26,104 --> 00:26:29,896
அவ போனதிலிருந்து, வாழ்க்கை
சோகமா ஆயிடுச்சு.
354
00:26:30,896 --> 00:26:34,021
நான் வெளியில் மகிழ்ச்சியா
தெரியலாம்,
355
00:26:35,521 --> 00:26:37,687
ஆனால், உண்மையில்...
356
00:26:39,896 --> 00:26:41,062
உள்ளே மென்மையாருக்கேன்.
357
00:26:41,812 --> 00:26:43,854
- தெரியுது.
- என்ன?
358
00:26:45,062 --> 00:26:48,104
உங்களுக்குள்ள இருக்கும் மென்மை.
359
00:26:53,146 --> 00:26:56,646
இந்த மென்மையை மறந்துடு.
நீ சொன்னது ரொம்ப சரி.
360
00:26:57,562 --> 00:27:00,061
என்ன தெரியுமா, நூரி?
மேலே என் அறைக்கு போவோம்,
361
00:27:00,062 --> 00:27:03,603
இன்னும் குடிப்போம்.
இந்த தருணத்தில் வாழ்வோம்.
362
00:27:03,604 --> 00:27:05,229
என்னென்னா, நான்
கிளம்பணும்.
363
00:27:06,771 --> 00:27:09,521
- இப்ப சோகமா இருந்தே.
- ஆமாம், ஆனா இப்ப அமோகம்.
364
00:27:10,104 --> 00:27:12,979
என் காதலனை மறந்துட்டேன்.
மிக்க நன்றி!
365
00:27:19,396 --> 00:27:21,146
தே.......!
366
00:27:24,937 --> 00:27:27,021
- நான் சூப்பர் ஹிட்டா இல்லையா?
- பிரமாதம்.
367
00:27:27,937 --> 00:27:29,354
வேண்டியதை திருடினியா?
368
00:27:31,312 --> 00:27:34,146
இல்லை. அவனிடம் இருக்கலாம்.
அவன் பாக்கெட்டில்.
369
00:27:35,479 --> 00:27:36,646
இப்ப என்ன செய்வே?
370
00:27:37,354 --> 00:27:39,854
நீ வீட்டுக்கு போ. நாங்க
பாத்துக்கறோம். சரியா?
371
00:27:40,562 --> 00:27:42,228
ப்ரோ, சாப்பிட்டேன், கிளம்பறேன்.
372
00:27:42,229 --> 00:27:43,853
- திட்டம் பி.
- திட்டம் பி.
373
00:27:43,854 --> 00:27:45,896
- மேலிருந்து நுழைவோம்.
- சரி.
374
00:27:47,104 --> 00:27:48,104
நான் கொண்டு வர்றேன்.
375
00:27:48,812 --> 00:27:50,936
- ஹனி, கிளம்பு.
- இன்னும் வாய்ப்பு இருக்கு.
376
00:27:50,937 --> 00:27:53,812
நான் திரும்ப போறேன்.
ஆனால் இரட்டிப்பு...
377
00:27:54,396 --> 00:27:55,604
மும்மடங்கு பணம்.
378
00:27:59,396 --> 00:28:00,729
உற்சாகமாருக்கா. போகட்டும்.
379
00:28:10,354 --> 00:28:11,854
முழுசா மறக்க முடியலை.
380
00:28:14,146 --> 00:28:16,229
- என்ன?
- என் காதலனை.
381
00:28:17,396 --> 00:28:20,479
இன்னும் இருக்கான் இங்கே.
கொஞ்சம்.
382
00:28:22,437 --> 00:28:26,312
வெளிய போனதுமே, உங்களோட
ஆறுதலா இருந்ததை உணர்ந்தேன்.
383
00:28:41,937 --> 00:28:43,478
பனி, இவன் செத்துட்டானா?
384
00:28:43,479 --> 00:28:47,187
இல்லை, டோஸ்தான்.
சில மணி நேரம் மயக்கமா இருப்பான்.
385
00:28:48,729 --> 00:28:50,646
எல்லாம் சுத்தம் பண்ணு,
டிஸ்கை எடு.
386
00:30:04,354 --> 00:30:07,061
சதுரமா ஏதோ கிடைச்சுது, பனி.
கருப்பா, மெல்லிசா.
387
00:30:07,062 --> 00:30:10,520
- ஏதோ எலக்ட்ரானிக்ஸ் போல.
- அதுதான். எடுத்துட்டு கிளம்பு.
388
00:30:10,521 --> 00:30:12,021
சரி, நான் கிளம்பறேன்.
389
00:30:18,562 --> 00:30:19,604
ஹேய்.
390
00:30:22,021 --> 00:30:24,021
- யாரிடம் பேசிட்டிருந்தே?
- சே!
391
00:30:25,146 --> 00:30:26,021
யாரிடமும் இல்லை.
392
00:30:28,354 --> 00:30:29,687
நாயே, பதிவு செய்தியா?
393
00:30:30,812 --> 00:30:31,646
நகரு!
394
00:30:32,687 --> 00:30:35,686
அதைப்பத்தி யோசிக்காதே.
நாம நெறிமுறை தவறக் கூடாது.
395
00:30:35,687 --> 00:30:37,520
- அவளை விட முடியாது.
- இல்லை, பனி.
396
00:30:37,521 --> 00:30:38,811
- நம்ம ஆள் இல்லை.
- ப்ரோ...
397
00:30:38,812 --> 00:30:40,354
அவளுக்கு இது என்னனு
தெரியாது.
398
00:30:44,437 --> 00:30:45,354
நீ யார்?
399
00:30:46,729 --> 00:30:48,396
நான் ஒரு நடிகை.
400
00:31:01,146 --> 00:31:02,770
லூடோ, நான் போகணும்!
401
00:31:02,771 --> 00:31:05,603
ப்ரோ, நம்ம எல்லாரையும்
வெளிப்படுத்துவே.
402
00:31:05,604 --> 00:31:06,853
சாக்கோ, ப்ளீஸ் சொல்லு.
403
00:31:06,854 --> 00:31:08,478
ப்ரோ, பாதுகாப்பு அதிகம்.
404
00:31:08,479 --> 00:31:10,186
நாம திரும்ப போக முடியாது.
405
00:31:10,187 --> 00:31:11,271
பாத்துக்கறேன்.
406
00:31:12,229 --> 00:31:13,937
- நமக்கு டிஸ்கும் தேவை.
- போகாதே.
407
00:31:20,646 --> 00:31:23,978
இந்த ஆடை அணிய 2000
ரூபாய் தந்தாங்க.
408
00:31:23,979 --> 00:31:25,311
நம்புங்க, சார்.
409
00:31:25,312 --> 00:31:28,270
தெரியாது, சார்.
திரைப்பட துறைல வேலை செய்யறேன்.
410
00:31:28,271 --> 00:31:29,354
யார் பணம் தந்தது?
411
00:31:30,146 --> 00:31:32,312
எனக்கு தெரியாது. ப்ளீஸ்,
போக விடுங்க.
412
00:31:33,021 --> 00:31:37,021
சார், ப்ளீஸ், முகத்தில் வேண்டாம்.
என் முகத்தில் வேண்டாம்.
413
00:31:42,396 --> 00:31:45,103
- யார்கிட்ட பேசிட்டு இருந்தே?
- தெரியாது, சார்.
414
00:31:45,104 --> 00:31:47,228
என் ஒருங்கிணைப்பாளரை
கேளுங்க.
415
00:31:47,229 --> 00:31:50,062
பையில் யூனியன் அட்டை இருக்கு.
ஒரு நிமிஷம், நான்...
416
00:31:54,104 --> 00:31:55,521
விஷ்வாக்கு வேலை செய்யறியா?
417
00:31:56,146 --> 00:31:57,062
விஷ்வா?
418
00:31:57,937 --> 00:31:59,437
விஷ்வாவை தெரியாது, சார்.
419
00:32:00,021 --> 00:32:01,979
சார், ப்ளீஸ் போக விடுங்க.
420
00:32:05,104 --> 00:32:07,979
நிஜமா போகணும்னா, இப்பவே பேசத் தொடங்கு.
421
00:32:09,729 --> 00:32:11,271
இது யார்? இவனைப் பிடிங்க!
422
00:33:15,187 --> 00:33:16,478
என்ன நடக்குது, பனி?
423
00:33:16,479 --> 00:33:17,812
நீ நலமா?
424
00:33:18,479 --> 00:33:19,479
ஆமா.
425
00:33:20,979 --> 00:33:21,812
போலாம்!
426
00:33:23,979 --> 00:33:25,353
ஆனால் என்ன நடக்குது?
427
00:33:25,354 --> 00:33:26,895
பிறகு விளக்கறேன். நகரு!
428
00:33:26,896 --> 00:33:28,937
இப்படி சண்டை போட எப்படி
தெரியும்?
429
00:33:49,521 --> 00:33:51,229
அனைத்து யூனிட்ஸும்,
போகலாம்!
430
00:33:53,021 --> 00:33:54,146
போகலாம், உடனே!
431
00:34:04,437 --> 00:34:06,104
ஏதாவது சொல்றியா, ப்ளீஸ்?
432
00:34:06,896 --> 00:34:08,021
- போட்டுக்கோ.
- பனி!
433
00:34:09,354 --> 00:34:11,021
லூடோ, டிஸ்க் கிடைச்சிருச்சு.
434
00:34:11,437 --> 00:34:13,770
போ, டெபாசிட் பண்ணு.
நகரு! நகரு!
435
00:34:13,771 --> 00:34:16,146
- சரி.
- பனி, என்ன நடக்குது? விஷ்வா யாரு?
436
00:34:17,271 --> 00:34:18,479
- யாரு?
- விஷ்வா.
437
00:34:18,771 --> 00:34:20,646
நீங்க விஷ்வா
ஆளுங்கன்னான் டேவிட்.
438
00:34:21,354 --> 00:34:22,687
எனக்கு விஷ்வாவை
தெரியாது.
439
00:34:23,229 --> 00:34:24,853
- வேறு ஏதாவது கேட்டானா?
- கேட்டானா?
440
00:34:24,854 --> 00:34:26,145
அடிச்சான்! பலமா!
441
00:34:26,146 --> 00:34:28,061
இருந்தும் யார் பேரும்
சொல்லலை
442
00:34:28,062 --> 00:34:30,271
- அதுக்கு நன்றி சொல்லணும்.
- நன்றி. உக்காரு.
443
00:34:34,479 --> 00:34:35,396
அவங்கதானோ. பார்.
444
00:34:35,854 --> 00:34:37,229
சே, போலாம்!
445
00:34:37,937 --> 00:34:38,854
அடங்..அவங்கதான்!
446
00:34:47,771 --> 00:34:49,312
யூனிட் ஃபீனிக்ஸ், ப்ராவோ எங்க?
447
00:34:50,729 --> 00:34:52,354
யூனிட் ப்ராவோ வருது, சார்.
448
00:34:59,562 --> 00:35:02,020
வேண்டாம்! ஸ்லைட் பண்ணாதே!
ஸ்லைட் பண்ணாதே!
449
00:35:02,021 --> 00:35:03,312
இல்லை, இல்லை, இல்லை!
450
00:35:04,312 --> 00:35:05,187
பைத்தியமா?
451
00:35:32,021 --> 00:35:33,021
ஜகன்!
452
00:35:34,062 --> 00:35:35,521
ராஹி, போ! ஜகனை சுட்டாங்க!
453
00:35:35,812 --> 00:35:36,646
சே!
454
00:35:37,854 --> 00:35:38,854
வேகமா ஓட்டு!
455
00:35:56,229 --> 00:35:57,062
சாக்கோ, வலது.
456
00:36:03,396 --> 00:36:04,396
ஹேய்!
457
00:36:05,521 --> 00:36:07,271
டேய், என்ன பாக்கிறே?
போ.
458
00:36:30,854 --> 00:36:31,811
சே!
459
00:36:31,812 --> 00:36:34,020
- சாக்கோ, நீ நலமா?
- நான் நலம்.
460
00:36:34,021 --> 00:36:35,896
முன்னால போ. சந்திப்பில் சேரு.
461
00:36:45,521 --> 00:36:46,521
அதோ, முன்னாடி.
462
00:36:58,854 --> 00:36:59,854
ஹனி!
463
00:37:19,187 --> 00:37:20,021
ஹனி?
464
00:37:23,771 --> 00:37:24,687
ஹனி?
465
00:37:25,937 --> 00:37:28,604
சே! எதிர்த்து போராடு.
466
00:38:22,062 --> 00:38:28,021
இயக்குனர்
467
00:38:36,896 --> 00:38:37,979
விஷ்வாவா?
468
00:38:41,854 --> 00:38:44,812
உறுதியா இருக்கேன்.
எல்லாருமே வல்லுநர்கள்.
469
00:38:45,896 --> 00:38:47,854
சாரி, டிஸ்கை பாதுகாக்க
முடியலை.
470
00:38:55,562 --> 00:38:57,896
எப்படி நீ டிஸ்கை தொலைக்கலாம், ஷான்?
471
00:38:59,854 --> 00:39:04,062
தெரியும்லே, விஷ்வா போன்றோரை நீக்கவே நாம
ப்ராஜெக்ட் தல்வார் தொடங்கினோம்.
472
00:39:04,687 --> 00:39:06,728
விஷ்வா அணி டிஸ்கை
திருடிடுச்சு.
473
00:39:06,729 --> 00:39:09,646
இதுல மோசமான விஷயம்
என்ன தெரியுமா?
474
00:39:10,604 --> 00:39:12,854
விஷ்வா யாருன்னே நமக்கு தெரியாது!
475
00:39:13,854 --> 00:39:15,771
அவன் புனைப்பெயர்தான்
தெரியும்.
476
00:39:22,312 --> 00:39:25,061
சார், இது எரிஞ்சு போச்சு.
போட்டுடவா?
477
00:39:25,062 --> 00:39:26,271
இல்லை, இல்லை, வை.
478
00:39:29,229 --> 00:39:31,103
ஆனா, சார், யார் இதை
சாப்பிடுவாங்க?
479
00:39:31,104 --> 00:39:32,854
இனிப்போடு பரிமாறுவோம்.
480
00:39:46,229 --> 00:39:47,562
பரவாயில்லை. பரவாயில்லை.
481
00:39:50,437 --> 00:39:52,562
கெட்ட செய்தியோடு
தொடங்கு.
482
00:39:55,646 --> 00:39:57,937
டேவிட் புனைப்பெயரை
சொன்னான். விஷ்வா.
483
00:39:58,646 --> 00:40:01,562
நாமதான்னு சந்தேகப்பட்டாங்க.
இது ஜூனியோட ஆபரேஷன்.
484
00:40:02,146 --> 00:40:03,604
அவங்க ஏஜென்ட்ஸ் இருந்தாங்க.
485
00:40:05,354 --> 00:40:09,146
நாம இனி தேவையில்லாத போது,
உலகிற்கே சுமையா ஆயிடறோம்.
486
00:40:10,062 --> 00:40:12,729
எனக்கு புரியலை, ஏன் செத்தவங்க
நினைவோட இருக்கோம்?
487
00:40:13,979 --> 00:40:15,146
நான் அவன பாத்துக்கறேன்.
488
00:40:16,354 --> 00:40:18,728
நீ ரோலோ பத்தி கவலை பட
வேண்டாம்.
489
00:40:18,729 --> 00:40:20,311
- இவன் என் கணவரோட...
- தெரியும்.
490
00:40:20,312 --> 00:40:21,771
இவன் ரின்ஸி சாரோட நாய்.
491
00:40:22,604 --> 00:40:25,436
நான் கொடுத்த ஒரு பொறுப்பை
உன்னால கவனிக்க முடியலை.
492
00:40:25,437 --> 00:40:27,687
விஷ்வாக்கு டேவிட் பற்றி
தெரியும்.
493
00:40:28,312 --> 00:40:29,562
இந்த பரிமாற்றம் பற்றி.
494
00:40:30,104 --> 00:40:32,437
- அப்படீன்னா...
- ப்ராஜெக்ட் தல்வார் இயங்குது.
495
00:40:37,396 --> 00:40:40,896
என் அனுமதி இல்லாம நீ உட்படுத்தின
சிவிலியன்?
496
00:40:43,604 --> 00:40:45,604
அவளுக்கு காயம், ஆனா
நல்லாயிடுவா.
497
00:40:50,312 --> 00:40:51,271
ஆனால் ஜகன்...
498
00:40:54,479 --> 00:40:56,104
இது நம்ம போர், மகனே.
499
00:40:58,187 --> 00:41:00,479
இதுக்காகவே வாழ்ந்து சாகறோம்.
தெரியும்லே!
500
00:41:01,271 --> 00:41:03,146
இது தேவையான தியாகம்.
501
00:41:08,729 --> 00:41:12,687
பூக்கரெஸ்ட்
502
00:42:05,937 --> 00:42:06,937
ஹனி!
503
00:42:40,896 --> 00:42:43,521
நினைவூட்டல்
போர்டலை சரி பார்
504
00:42:53,021 --> 00:42:55,020
{\an8}நேனிதால்
505
00:42:55,021 --> 00:42:57,686
{\an8}"நீர் நிரப்பும் சத்தம்
தசரத ராஜாக்கு கேட்டது.
506
00:42:57,687 --> 00:43:00,937
"தன் வில்லை எடுத்து, அம்பிட்டு,
வெளியிட்டார்.
507
00:43:01,812 --> 00:43:04,270
"ஒரு வலிமிக்க அலறல்
காற்றை கிழித்தது.
508
00:43:04,271 --> 00:43:08,687
"ஓ, இல்லை! அது விலங்கென ராஜா நினைத்தார்,
ஆனால் இல்லை, அப்படி இல்லை.
509
00:43:09,979 --> 00:43:12,562
"பாவம் ஷ்ரவனை
கொன்றார்.
510
00:43:15,812 --> 00:43:17,770
"பின், தசரதர் அவன்
பெற்றோரிடம் போனார்.
511
00:43:17,771 --> 00:43:20,436
"அவர்கள் மனமுடைந்தனர்.
மன்னிப்பு கேட்டார்.
512
00:43:20,437 --> 00:43:22,561
"ஆனால், இல்லை.
அவர்களுக்கு வலித்தது.
513
00:43:22,562 --> 00:43:24,436
"பிறகு தசரத ராஜாவை
சபித்தனர்.
514
00:43:24,437 --> 00:43:28,478
"நாங்கள் இறப்பது போல, நீயும் உன்
மகனை இழந்து இறப்பாய்."
515
00:43:28,479 --> 00:43:32,187
"அவர்கள் அதே நதியில்
மூழ்கினர்."
516
00:43:33,771 --> 00:43:38,061
வி அங்கிள், ஏன்
எப்பவும் சோக கதையே சொல்றீங்க?
517
00:43:38,062 --> 00:43:40,311
எல்லாரும் சாகறாங்க அல்லது
கொல்லப்படறாங்க.
518
00:43:40,312 --> 00:43:43,603
- நான் குழந்தைதான், தெரியுமா?
- கண்ணு, நீதான் புத்தகம் தந்தே.
519
00:43:43,604 --> 00:43:46,728
எப்படியும், உனக்கு இந்த கதைகள்
தெரியணும். ஏன்னு கேளு.
520
00:43:46,729 --> 00:43:47,895
ஏன்?
521
00:43:47,896 --> 00:43:50,561
ஏன்னா இந்த கதைகள் நமக்கு
நம் கலாச்சாரம் மற்றும்
522
00:43:50,562 --> 00:43:52,479
நம் வரலாற்றை கற்பிக்கிறது.
523
00:43:53,104 --> 00:43:56,436
அடுத்த முறை, வேடிக்கையான கதை
சொல்லுங்க, சரியா?
524
00:43:56,437 --> 00:43:59,353
அடுத்த முறை, அக்பர்-பீர்பல்
கதைகள் சொல்றேன்.
525
00:43:59,354 --> 00:44:01,229
அவை வேடிக்கையானவை, நம்பு.
526
00:44:02,729 --> 00:44:05,021
ஹனி எங்கே? இன்னும் வரலையே.
527
00:44:05,646 --> 00:44:06,729
நேரம் ஆயிடுச்சே.
528
00:44:07,271 --> 00:44:10,771
வருவாங்க! இம்மாதிரி சூழ்நிலைகளில்
நாம பொறுமையா இருக்கணும்.
529
00:44:11,896 --> 00:44:12,979
எந்த சூழ்நிலைகளில்?
530
00:45:23,812 --> 00:45:24,646
சே!
531
00:45:49,271 --> 00:45:50,271
போலாம்.
532
00:46:04,646 --> 00:46:05,561
சொல்லுங்க?
533
00:46:05,562 --> 00:46:08,437
சார், ஹனி அவங்க மகளை
அழைத்து வர அனுப்பினாங்க.
534
00:46:11,021 --> 00:46:12,146
ஹனியை தெரியுமா?
535
00:46:12,646 --> 00:46:13,604
ஆமாம், சார்.
536
00:46:14,896 --> 00:46:17,146
மக மாயாவ கூட்டிட்டு வர
ஹனி அனுப்பினாளா?
537
00:46:17,729 --> 00:46:19,021
ஆமாம். மாயா இருக்காளா?
538
00:46:21,771 --> 00:46:24,437
அவ பெயர் மாயா இல்லை. நீங்க யார்?
539
00:46:32,229 --> 00:46:35,479
{\an8}பூக்கரெஸ்ட்
540
00:46:45,687 --> 00:46:47,979
1 புதிய செய்தி
ப்ரேக்டான்சரிடமிருந்து
541
00:47:00,062 --> 00:47:01,229
அதிமேதாவி!
542
00:47:04,771 --> 00:47:06,729
என்ன பார்க்கறீங்க?
அவளை கண்டுபிடிங்க!
543
00:47:14,937 --> 00:47:19,561
ப்ரேக்டான்சர்: ஹனி உயிருடன்.
உனக்கு மகள் இருக்கா.
544
00:47:19,562 --> 00:47:23,604
அவங்களுக்கு ஆபத்து.
நேனிதாலில் எங்கோ.
545
00:47:30,312 --> 00:47:32,104
உதவு
546
00:47:37,521 --> 00:47:39,687
இல்லை, இல்லை, இல்லை,
இல்லை! சே!
547
00:49:33,854 --> 00:49:35,853
வசனங்கள் மொழிபெயர்ப்பு
ஹேமலதா ராமச்சந்திரன்
548
00:49:35,854 --> 00:49:37,937
படைப்பு மேற்பார்வையாளர்
நந்தினி ஸ்ரீதர்