1 00:02:09,170 --> 00:02:10,672 நான் எப்படி உணர்கிறேனா? 2 00:02:13,634 --> 00:02:15,469 பெரும்பாலும் கோபமாக. 3 00:02:18,055 --> 00:02:21,517 தெருவில் மிகவும் மெதுவாக நடப்பவர்கள் மீது எனக்குக் கோபம் வரும். 4 00:02:22,809 --> 00:02:25,938 சூப்பர் மார்க்கெட்டில் யாராவது ஒரு பொருளை எடுத்துவிட்டு 5 00:02:27,147 --> 00:02:28,857 அதை தவறான இடத்தில் வைத்தால் கோபம் வரும். 6 00:02:30,359 --> 00:02:33,820 இளைஞர்கள் தங்கள் ஃபோனிலேயே மூழ்கியிருப்பதால் அவர்கள் மீது கோபம் வரும். 7 00:02:34,655 --> 00:02:38,283 வயதாகிவிட்டது என்பதாலேயே முதியவர்கள் மீது கோபம் வரும். 8 00:02:38,951 --> 00:02:41,119 மூக்கு குத்தி இருப்பதை பார்த்தால் கோபம் வரும். 9 00:02:42,037 --> 00:02:45,457 வேடிக்கையான வாசகங்கள் கொண்ட கிளாஸைப் பார்த்தால். 10 00:02:45,457 --> 00:02:46,542 சிகிச்சைக்கும் டீக்குமான நேரம். 11 00:02:46,542 --> 00:02:50,671 வழுக்கை தலை ஆண்கள் மீது, கவுண்டருக்கு வருவதற்குள் என்ன ஆர்டர் 12 00:02:50,671 --> 00:02:52,506 செய்ய வேண்டும் என்றே தெரியாதவர்கள் மீது. 13 00:02:54,591 --> 00:02:59,805 வளரும்போது, ஒரு தொழில்முறை கூடைப்பந்து வீரராக விரும்புவதாக சொன்ன 14 00:02:59,805 --> 00:03:03,392 ஏதோ பரிதாபகரமான குழந்தை போல மக்கள் என்னைப் பார்க்கும்போது. 15 00:03:03,392 --> 00:03:06,103 அவர்கள் உயிருடன் சில வாரங்களே வாழ்வார்கள் என்பது தெரிந்தாலும். 16 00:03:06,728 --> 00:03:10,482 அதற்கு இப்படி தோன்றும், 17 00:03:11,191 --> 00:03:15,320 "நிஜமாகவா? குழந்தாய், உன்னால் முடியும். 18 00:03:16,321 --> 00:03:18,156 நீ ஒரு பறவை குஞ்சு போல. 19 00:03:18,156 --> 00:03:21,702 உன் சின்னஞ்சிறிய கைகளைப் பார். உன்னால் ஃபீடிங் பாட்டிலை கூட சரியாக பிடிக்க முடியவில்லை. 20 00:03:21,702 --> 00:03:25,789 நீ கூடைப்பந்து வீரராக ஏதாவது வாய்ப்பு இருப்பதாக நிஜமாகவே நினைக்கிறாயா? 21 00:03:25,789 --> 00:03:28,250 அந்த எதிர்பார்ப்புகளை யதார்த்தமாக வைத்துக்கொள்ள தொடங்கு, 22 00:03:28,250 --> 00:03:31,086 முட்டாள், குட்டி தேவதையே!" 23 00:03:36,466 --> 00:03:38,177 {\an8}நாள் 80 24 00:03:41,388 --> 00:03:43,557 இதைப் பற்றி டீடோவிடம் பேசினீர்களா? 25 00:03:46,018 --> 00:03:50,522 டீடோ எப்போதுமே நேர்மறையாக இருக்க பார்க்கிறார். 26 00:03:51,106 --> 00:03:53,609 அவர் உதவ முயற்சிக்கிறார் என்பது தெரியும், 27 00:03:54,318 --> 00:03:57,446 ஆனால் சில நேரங்களில் நான் நேர்மறை எண்ணத்தோடு இருக்க விரும்பவில்லை, தெரியுமா? 28 00:03:58,614 --> 00:04:01,491 மன அழுத்தத்துக்கான மருந்துகள் சாப்பிடுவதைப் பற்றி யோசித்தீர்களா? 29 00:04:01,491 --> 00:04:03,744 அவை நீங்கள் நன்றாக உணர உதவலாம். 30 00:04:03,744 --> 00:04:05,287 இதுதான் விஷயம். 31 00:04:06,205 --> 00:04:09,583 நான் நன்றாக உணர வேண்டும் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். 32 00:04:10,959 --> 00:04:12,711 என் மகளைக் காணவில்லை! 33 00:04:13,587 --> 00:04:16,005 நான் ஏன் அதைப் பற்றி நன்றாக உணர வேண்டும்? 34 00:04:16,005 --> 00:04:22,721 என் வயிற்றில் ஒரு மோசமான குத்தல் உணர்வு, 35 00:04:23,388 --> 00:04:25,891 அதுதான் அவளைக் கண்டுபிடிக்க எனக்கு உதவும். 36 00:04:27,226 --> 00:04:30,604 அவளைக் கண்டுபிடிப்பேன், இந்த பூமியின் ஒவ்வொரு அங்குலத்தையும் தேட வேண்டும் என்றாலும். 37 00:04:31,104 --> 00:04:32,606 நான் அவளைக் கண்டுபிடிப்பேன். 38 00:04:34,483 --> 00:04:38,570 சரி, நாம் பேசியதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். 39 00:04:40,113 --> 00:04:43,408 உங்களை அடுத்த வாரம் மீண்டும் சந்திக்கிறேன். 40 00:04:49,414 --> 00:04:51,834 - எந்த பிரச்சினையும் இல்லையே? - ஆம்... 41 00:04:53,001 --> 00:04:55,420 நான் இதை ரசித்துக்கொண்டிருந்தேன்... 42 00:04:57,047 --> 00:04:59,091 இதை என்னவென்று அழைப்பீர்கள்? 43 00:04:59,758 --> 00:05:01,885 - அது நாய். - சரி, நாய். 44 00:05:02,719 --> 00:05:04,263 அழகாக இருக்கிறது. 45 00:05:04,263 --> 00:05:07,558 - நன்றி. - வீட்டை புதுப்பிக்கிறீர்களா? 46 00:05:07,558 --> 00:05:09,476 அது போலத்தான். 47 00:05:10,519 --> 00:05:12,938 - அப்படியென்றால் சரி. அடுத்த வாரம் சந்திப்போம். - சரி. 48 00:05:20,779 --> 00:05:22,281 நாள் 80 49 00:05:24,867 --> 00:05:25,951 நாள் 0 50 00:05:25,951 --> 00:05:28,704 {\an8}- கோல்! அடி! - ஆம்! அப்படித்தான்! 51 00:05:29,872 --> 00:05:33,000 காணாமல் போன பெண்களின் அப்பாக்களுக்காக எப்போதும் வருத்தப்பட்டிருக்கிறேன். 52 00:05:33,000 --> 00:05:35,878 அப்படித்தான்! அருமை. 53 00:05:35,878 --> 00:05:38,797 அவர்கள் என்ன செய்தாலும், ஏதோ இரகசியம் இருப்பது போல, 54 00:05:38,797 --> 00:05:41,758 எப்பொழுதும் சந்தேகத்திற்குரியவர்களாகத் தெரிகிறார்கள். 55 00:05:41,758 --> 00:05:43,218 உன்னால் முடியும், பாஸ் செய்! பாஸ் செய்! 56 00:05:43,218 --> 00:05:45,304 எனவே, கார்லட்டாவிடம் பேசினாயா? 57 00:05:46,346 --> 00:05:47,723 மீன்பிடி பயணம் பற்றியா? 58 00:05:47,723 --> 00:05:49,808 என் சகோதரியின் காதலன் வால்சென் ஏரிக்கு அருகில்தான் இருந்தான். 59 00:05:49,808 --> 00:05:52,978 அவனுடைய கால் அளவுக்கு பெரிய ட்ரௌட் மீனை பிடித்ததாகச் சொன்னான்! 60 00:05:52,978 --> 00:05:56,315 என்னால் வர முடியுமா என்று தெரியவில்லை. இப்போது கையில் பணம் குறைவாக இருக்கிறது. 61 00:05:56,315 --> 00:05:59,109 - டோனி! அருமை! - அடச்சே. 62 00:05:59,109 --> 00:06:01,111 வருந்துகிறேன், நான் உணர்ச்சியற்றவனாக இருக்க விரும்பவில்லை. 63 00:06:01,111 --> 00:06:03,989 இந்த பணிநீக்கங்கள் மிகவும் மோசமானவை. 64 00:06:03,989 --> 00:06:06,575 இருபது ஆண்டுகள் வேலை செய்தும், நம்மை பொருட்படுத்தாமல் வேலையைவிட்டு நீக்கிவிடுவார்கள். 65 00:06:06,575 --> 00:06:08,202 ஹேய், பந்தை பாஸ் செய்! 66 00:06:08,202 --> 00:06:10,495 உனக்கு ஒன்றும் ஆகாது. ஏதாவது ஒரு வேலை கிடைக்கும். 67 00:06:10,495 --> 00:06:11,914 இது முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலை, நண்பா. 68 00:06:11,914 --> 00:06:13,916 உன்னையும் என்னையும் போன்றவர்கள், இனி அவர்களுக்கு தேவைப்படுவதில்லை. 69 00:06:17,419 --> 00:06:18,462 மிகவும் மோசம். 70 00:06:21,131 --> 00:06:23,383 கார்லட்டா அதை எப்படி எடுத்துக்கொண்டார்? 71 00:06:23,967 --> 00:06:26,428 ம், நல்ல விதமாக. 72 00:06:28,138 --> 00:06:29,973 நீ அவரிடம் சொல்லவில்லை, இல்லையா? 73 00:06:30,766 --> 00:06:32,726 சரியான நேரத்துக்காகக் காத்திருக்கிறேன்! 74 00:06:32,726 --> 00:06:34,895 இன்றிரவு, அவளிடம் சொல்லப் போகிறேன்! 75 00:06:36,480 --> 00:06:38,065 கார்லட்டா அழைக்கிறார் 76 00:06:38,065 --> 00:06:40,776 ஓ, இல்லை. அடச்சே. நான் போக வேண்டும். 77 00:06:40,776 --> 00:06:43,153 இதோ. ஆ! போக வேண்டும். 78 00:06:43,153 --> 00:06:44,488 யோ, டீடோ! 79 00:06:46,698 --> 00:06:50,452 ஹேய்! நீ ஏண்டி மொல்லரா என்ன? அணியோடு சேர்ந்து விளையாடமாட்டேன் என்கிறாய். 80 00:06:52,496 --> 00:06:53,580 அது அவர்களுடைய தவறில்லை. 81 00:06:53,580 --> 00:06:58,252 துக்கத்தில் இருக்கும் அம்மா எப்படி இருப்பார் என்று நம் எல்லோருக்கும் ஒரு யோசனை இருக்கும். 82 00:06:58,252 --> 00:07:01,296 அது நம் உணர்வில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. 83 00:07:01,296 --> 00:07:02,548 ஆனால் அப்பாக்கள்? 84 00:07:02,548 --> 00:07:06,760 அவர்களிடம் எப்போதும் ஏதோ இரகசியம் இருப்பது போல தெரிகிறார்கள். 85 00:07:08,095 --> 00:07:10,472 - உண்மை என்னவென்றால்... - அடச்சே. 86 00:07:10,472 --> 00:07:13,350 - ...அவர்களிடமும் இரகசியங்கள் இருக்கலாம். - அடக் கடவுளே. 87 00:07:13,350 --> 00:07:17,729 ஆனால் யாருக்கும் தெரியக்கூடாத ஒரு இரகசியம் நம் எல்லோரிடமும் இருக்கிறதுதானே? 88 00:07:17,729 --> 00:07:19,022 ச்சே. 89 00:07:23,110 --> 00:07:24,111 அடடா. 90 00:07:27,531 --> 00:07:29,533 ஹேய், அன்பே. என்னை மன்னித்துவிடு. 91 00:07:29,533 --> 00:07:31,326 சில நிமிட தூரத்தில் இருக்கிறேன். 92 00:07:33,495 --> 00:07:35,706 ஒரு டிராக்டருக்குப் பின்னால் மாட்டிக்கொண்டேன். 93 00:07:35,706 --> 00:07:37,541 வந்துவிடுவேன், சத்தியமாக. 94 00:07:38,584 --> 00:07:40,377 இல்லை, நான் எதுவும் குடிக்கவில்லை! 95 00:07:40,377 --> 00:07:42,838 இல்லை, கார்லட்டா, நான் குடித்திருந்தால் நிச்சயமாக வண்டி ஓட்ட மாட்டேன். 96 00:07:44,506 --> 00:07:46,341 தெரியும்... நீ என்ன நினைப்பாய் என்று தெரியும். 97 00:07:46,341 --> 00:07:48,510 நல்லது. ஒரு பீர் குடித்திருப்பேன். 98 00:07:48,510 --> 00:07:49,845 கார்லட்டா, ஹலோ? 99 00:07:52,472 --> 00:07:53,807 ஐயோ. ச்சே. 100 00:07:59,521 --> 00:08:00,772 அச்சச்சோ. 101 00:08:01,481 --> 00:08:02,608 இல்லை. 102 00:08:03,150 --> 00:08:04,484 இல்லை. 103 00:08:06,445 --> 00:08:07,946 ஓ, இல்லை. 104 00:08:09,156 --> 00:08:11,658 டீடோ, உனக்கு என்ன பிரச்சினை, முட்டாளே? 105 00:08:14,119 --> 00:08:15,621 நான் ஒரு முட்டாள். 106 00:08:27,341 --> 00:08:29,343 ஐயோ. கார்லட்டா என்னைக் கொல்லப் போகிறாள். 107 00:08:35,390 --> 00:08:40,479 எனவே முக்கியமான கேள்வி என்னவென்றால், அவர்களிடம் என்ன வகையான இரகசியங்கள் இருக்கின்றன? 108 00:08:40,479 --> 00:08:43,190 வருந்துகிறேன்! 109 00:08:43,857 --> 00:08:44,691 நாள் 0 110 00:08:47,194 --> 00:08:48,445 நாள் 80 111 00:08:48,445 --> 00:08:52,616 சாவியை கீழே போட்ட ஒரு அழகான வயதானவரைப் போல, பின்னங்கால்களில் 112 00:08:52,616 --> 00:08:56,828 {\an8}நடந்துபோகும் ஒரு எறும்புண்ணி வீடியோவைப் பார்த்தபோதுதான் முதன்முதலில் 113 00:08:56,828 --> 00:08:59,081 {\an8}சட்டவிரோத விலங்கு கடத்தல் வணிகத்தைப் பற்றி கேள்விப்பட்டேன். 114 00:09:00,290 --> 00:09:04,586 {\an8}எறும்புண்ணிகள்தான் உலகிலேயே சட்டவிரோதமாக அதிகம் கடத்தப்படும் பாலூட்டிகள், 115 00:09:04,586 --> 00:09:06,380 {\an8}அவை அழிந்து போகும் அபாயத்தில் இருக்கின்றன. 116 00:09:06,380 --> 00:09:08,048 அடக் கடவுளே, இல்லை! 117 00:09:08,048 --> 00:09:11,593 இந்த அழகான உயிரினங்ளைப் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன், 118 00:09:11,593 --> 00:09:15,848 அதற்குள் அவை எப்படி அழிவின் விளிம்பில் இருக்க முடியும்? 119 00:09:15,848 --> 00:09:19,476 {\an8}நான் கற்றுக்கொள்ளும் அதே நேரத்தில் மக்களுக்குக் கற்பிக்கவும் செய்வதுதான் 120 00:09:19,476 --> 00:09:22,813 என்னுடைய கடைமை என்று அப்போதுதான் எனக்குத் தெரிந்தது. 121 00:09:22,813 --> 00:09:24,857 லென்கா நெம்கோவா? 122 00:09:24,857 --> 00:09:26,900 மஞ்சள் நிற பீட்டில் காரின் உரிமையாளர் இவள்தான். 123 00:09:28,068 --> 00:09:30,070 "இன்வெஸ்டிகேட்டிவ் இன்ஃப்ளுயன்சரா"? 124 00:09:30,696 --> 00:09:32,865 இன்வெஸ்டிகேட்டிவ் இன்ஃப்ளுயன்சர் என்ன செய்வார்? 125 00:09:32,865 --> 00:09:35,868 நம்மைப் போலத்தான் என்று நினைக்கிறேன், ஆனால் அதிக லைக்ஸ்களுடன். 126 00:09:36,827 --> 00:09:38,620 அது வாண்டா கிளாட். 127 00:09:40,038 --> 00:09:41,206 - நிச்சயமாகவா? - ஆம். 128 00:09:41,206 --> 00:09:43,542 தற்செயலாக இருக்க முடியுமா? 129 00:09:45,544 --> 00:09:49,339 அது தற்செயலாக இருந்தாலும் கூட, அவள் அதே நேரத்தில் அதே இடத்தில் இருந்திருக்கிறாள். 130 00:09:49,339 --> 00:09:51,466 நமக்கு உதவக்கூடிய ஒன்றை அவள் பார்த்திருக்கலாம். 131 00:09:52,092 --> 00:09:53,969 அவளைக் கண்டுபிடிக்க வேண்டும். 132 00:09:57,431 --> 00:09:59,516 செக் குடியரசில் இருக்கும் நம் சக ஊழியர்களைத் தொடர்புகொள்கிறேன். 133 00:10:00,601 --> 00:10:02,728 தெரியாத ஒருவருக்கு எப்படி DM செய்வது? 134 00:10:09,610 --> 00:10:13,363 வருந்துகிறேன். வெண்டிங் கருவி பழுதாகிவிட்டது, காஃபெடீரியாவில் சாதாரண பால் தீர்ந்துவிட்டது. 135 00:10:13,363 --> 00:10:15,824 அது பட்டாணி பால். 136 00:10:15,824 --> 00:10:17,826 பட்டாணியிலிருந்து எப்படி பால் வரும்? 137 00:10:21,788 --> 00:10:23,332 வேன் பற்றிய செய்தி இருக்கிறதா? 138 00:10:23,332 --> 00:10:24,708 ஆம். 139 00:10:26,335 --> 00:10:27,544 விசாரணை பாதியில் நிற்கிறது. 140 00:10:27,544 --> 00:10:28,712 பாதியிலா? 141 00:10:28,712 --> 00:10:32,508 சந்தர்ஷெய்மில் பலர் கருப்பு நிற வேன்களை ஓட்டுகிறார்கள். 142 00:10:34,259 --> 00:10:35,677 சரி, மீதியை பிரித்து விசாரிப்போம். 143 00:10:38,972 --> 00:10:40,182 போகலாம். 144 00:10:48,148 --> 00:10:51,068 வாண்டா வீட்டுக்கு வா 145 00:10:51,068 --> 00:10:54,696 சரி, எனவே ஒன்பது வீடுகளில் பொருத்திவிட்டோம், ஆறு பக்குகள்தான் மீதமிருக்கின்றன. 146 00:10:54,696 --> 00:10:58,784 மீதமுள்ள 53 வீடுகளிலும் பொருத்த வேண்டும் என்றால், அதற்கு இன்னொரு 47 பக்குகள் வேண்டும், 147 00:10:58,784 --> 00:11:01,495 ஆனால் அவற்றில் சில வீடுகளில் பொருத்த பல பக்குகள் தேவை என்று நினைக்கிறேன், 148 00:11:01,495 --> 00:11:04,581 எனவே அது கிட்டத்தட்ட... 149 00:11:05,624 --> 00:11:07,376 60. 150 00:11:07,376 --> 00:11:11,713 பிறகு கடன், பில்கள், வழக்கமான செலவுகள், 151 00:11:11,713 --> 00:11:17,135 அதோடு அடுத்த மாதத்திற்கான சம்பளம் நமக்கு கிடைக்காது போன்றவற்றை வைத்து கணக்குப்போட்டால்... 152 00:11:17,135 --> 00:11:22,641 இதற்காக நமக்கு 62,477 யூரோக்கள், 66 செண்டுகள் செலவாகும். 153 00:11:25,352 --> 00:11:28,105 எனக்காக என் அப்பா விட்டுச்சென்ற பணத்தை பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன். 154 00:11:28,105 --> 00:11:30,524 பணம் அந்த வங்கி கணக்கில் சும்மாதான் இருக்கிறது. 155 00:11:32,067 --> 00:11:35,320 சரி, நிச்சயமாக ஆனால்... 156 00:11:42,160 --> 00:11:45,873 அது பிள்ளைகளின் கல்லூரி செலவுக்கானது என்று நினைத்தேன். 157 00:11:46,874 --> 00:11:49,877 வாண்டாவே இல்லாதபோது வாண்டாவின் கல்லூரி கட்டணத்தைச் சேமிப்பதில் 158 00:11:49,877 --> 00:11:51,670 எந்த அர்த்தமும் இல்லை. 159 00:11:54,256 --> 00:11:55,257 டீடோ? 160 00:11:58,802 --> 00:12:00,220 அவர் அதை விரும்புவார். 161 00:12:00,971 --> 00:12:02,848 நம் வேலை முடிந்ததும், 162 00:12:02,848 --> 00:12:04,933 ஓலேவால் கேமராக்களை மீண்டும் கள்ள சந்தையில் விற்க முடியும், 163 00:12:04,933 --> 00:12:06,810 அதிலிருந்து ஒரு தொகை திரும்ப கிடைக்கும். 164 00:12:07,519 --> 00:12:10,063 எது நடந்தாலும். 165 00:12:11,273 --> 00:12:12,608 அதைத்தான் பேசி முடிவு செய்தோம். 166 00:12:13,358 --> 00:12:14,610 - ஆம். - அப்படியா? 167 00:12:15,194 --> 00:12:16,904 நல்லது. அருமை. 168 00:12:18,030 --> 00:12:20,365 சரி, கூடுதல் பக்குகளை ஆர்டர் செய்ய ஓலேவிடம் சொல்கிறேன். 169 00:12:20,365 --> 00:12:22,409 ஓ, சரி, இன்னொரு விஷயம். 170 00:12:22,409 --> 00:12:25,913 எனவே இது திட்டத்தில் ஒரு சிறிய மாற்றம்தான், 171 00:12:25,913 --> 00:12:29,333 ஆனால் அடுத்து நாம் ரோத்களை பக் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். 172 00:12:30,876 --> 00:12:32,085 - ரோத்களையா? - ஆம். 173 00:12:32,085 --> 00:12:35,214 உன் சிகிச்சையாளரையும் அவளது கணவனையுமா? அவர்கள் மிகவும் சலிப்பானவர்கள். 174 00:12:35,839 --> 00:12:40,177 டீடோ. நேர்மையாகச் சொன்னால், இன்று காலை மிகவும் வினோதமாக நடந்துகொண்டாள். 175 00:12:40,802 --> 00:12:42,721 அவர்களுடைய பேஸ்மென்டில் ஏதோ நடக்கிறது. 176 00:12:43,639 --> 00:12:45,098 - சரி. கண்டிப்பாக, நீ சொன்னால் சரி. - அப்படியா? 177 00:12:45,098 --> 00:12:47,601 நல்லது, ஏற்கனவே அவளை அழைத்து, 178 00:12:47,601 --> 00:12:51,104 இன்று மதியம் நம் இருவருக்கும் ஒன்றாக அவசர அமர்வு தேவை என்று சொன்னேன். 179 00:12:52,523 --> 00:12:55,692 ஒன்றாக அமர்வா? ஜோடியாக சிகிச்சை பெறுவது போலவா? 180 00:12:55,692 --> 00:12:58,320 ஆம், ஆனால் அது வீட்டில் நுழைந்து பக்களை பொருத்துவதற்கான ஒரு சாக்குதான். 181 00:12:58,320 --> 00:13:00,781 - சரி. - மதியம் 3 மணிக்கு சந்திக்க வேண்டும். 182 00:13:02,157 --> 00:13:03,492 டீடோ? 183 00:13:03,492 --> 00:13:05,452 - எல்லாம் நலம்தானே? - ஆம். 184 00:13:05,452 --> 00:13:07,204 உன் கவனம் வேறெங்கோ இருப்பது போல தெரிகிறது. 185 00:13:07,204 --> 00:13:10,499 இல்லை. ஆம், ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. 186 00:13:11,166 --> 00:13:14,962 ஒரு விஷயத்தில் உதவ முடியுமா என்று கார்ல் என்னிடம் கேட்டான், ஆனால்... 187 00:13:14,962 --> 00:13:16,046 ஆம். 188 00:13:16,755 --> 00:13:18,757 எனவே மூன்று மணிக்கு ரோத்களின் வீட்டில் சந்திப்புதானே? 189 00:13:18,757 --> 00:13:20,259 - ஆம். - ஆம். 190 00:13:21,260 --> 00:13:22,427 - மூன்று மணிக்கு. - ஆம். 191 00:13:27,724 --> 00:13:29,017 நோவாக் 192 00:13:41,989 --> 00:13:43,490 - ஹலோ. - என்ன? 193 00:13:43,490 --> 00:13:45,784 ஒரு கருப்பு நிற வேனின் உரிமையாளரைத் தேடுகிறேன். 194 00:13:47,536 --> 00:13:49,079 மெர்சிடிஸ் வேன்? 195 00:13:50,622 --> 00:13:52,249 ஓ, என் பேரனிடம் ஒரு வேன் இருக்கிறது. 196 00:13:52,249 --> 00:13:53,625 அருமை, அது கருப்பு நிறமா? 197 00:13:53,625 --> 00:13:54,918 இல்லை, சிவப்பு. 198 00:13:56,086 --> 00:13:59,256 சரி, உங்கள் பேரன் எப்போதாவது கருப்பு நிற வேன் வைத்திருந்தாரா? 199 00:14:00,841 --> 00:14:04,428 உறுதியாக தெரியவில்லை, ஆனால் அவனுக்கு பெரிய கார்கள் என்றால் பிடிக்கும். 200 00:14:05,596 --> 00:14:08,849 வருந்துகிறேன், என் ஞாபக திறன் முன்பு போல இல்லை. 201 00:14:09,850 --> 00:14:11,518 உங்கள் பேரன் வீட்டில் இருக்கிறாரா? 202 00:14:11,518 --> 00:14:13,812 இல்லை, நான் அவனிடம் ஏதாவது தகவல் சொல்ல வேண்டுமா? 203 00:14:13,812 --> 00:14:15,564 அவரிடம் என்னை அழைக்கச் சொல்லுங்கள். 204 00:14:17,941 --> 00:14:20,694 சரி. மறக்காமல் இருக்க முயற்சிக்கிறேன். 205 00:14:20,694 --> 00:14:22,696 - குட் பை. - குட் பை. 206 00:14:27,117 --> 00:14:28,911 சிறப்பு டாஸ்க் ஃபோர்ஸ். ஆடம்பரமாக இருக்கிறது. 207 00:14:57,564 --> 00:14:58,565 டீடோ. 208 00:14:59,399 --> 00:15:00,400 ஹாய். 209 00:15:03,070 --> 00:15:04,071 உள்ளே வா. 210 00:15:07,324 --> 00:15:12,162 என் அன்பு மச்சானே. இந்த எதிர்பாரா சந்தோஷத்துக்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன்? 211 00:15:12,162 --> 00:15:18,460 ஓ, பக்கத்தில்தான் இருந்தேன். 212 00:15:18,460 --> 00:15:21,505 இன்னமும் உன்னுடைய அப்பாவின் வேனை வெளியே வைத்திருக்கிறாயா? 213 00:15:25,050 --> 00:15:27,553 ஆ, கடவுளே. நான் அதை தூக்கியெறிய வேண்டும். 214 00:15:27,553 --> 00:15:29,847 அதை தூக்கியெறிய தோன்றவில்லை, தெரியுமா? 215 00:15:30,889 --> 00:15:33,809 ஆனால் அது நிஜமாகவே என்னுடைய மெட்ரோசெக்ஸுவல், தொழில்முனைவோர் அழகியலை கெடுக்கிறது. 216 00:15:33,809 --> 00:15:35,060 சரி. 217 00:15:35,060 --> 00:15:37,604 ஆனால் நீ பழைய கார்களைப் பற்றி பேச இங்கே வரவில்லை என்று நினைக்கிறேன். 218 00:15:39,731 --> 00:15:42,776 நீ என்னைப் பற்றி போலீஸில் புகார் செய்ததிலிருந்து நான் உன்னைப் பார்க்கவில்லை. 219 00:15:44,152 --> 00:15:47,406 சரி, அதைப் பற்றி... 220 00:15:47,406 --> 00:15:50,784 எதைப் பற்றி? நான் சந்தேகத்துக்குரியவன் என்று அவர்களிடம் சொன்னதைப் பற்றியா? 221 00:15:53,161 --> 00:15:54,997 ஆம், நான் அப்படி சொல்லியிருக்கக்கூடாது. 222 00:15:54,997 --> 00:15:57,291 ருடிகர், நீ தெரிந்துகொள்வதற்காக சொல்கிறேன், நான் நினைக்கவில்லை நீ... 223 00:15:57,291 --> 00:15:58,959 வழக்கமாக பாலியல் தொல்லை கொடுப்பவன் என்றா? 224 00:15:58,959 --> 00:16:00,544 ஆம். 225 00:16:01,253 --> 00:16:03,589 எல்லை மீறி பேசிவிட்டேன், ருடிகர், 226 00:16:03,589 --> 00:16:06,341 நீ எதற்காக வருத்தப்படுகிறாய் என்று புரிகிறது, 227 00:16:06,341 --> 00:16:07,426 எனவே என்னை மன்னித்துவிடு. 228 00:16:08,510 --> 00:16:12,431 நீ இங்கே வந்து மன்னிப்பு கேட்பது பாராட்டுக்குரியது. 229 00:16:12,431 --> 00:16:14,641 - நேரடியாக. - ஆம். 230 00:16:14,641 --> 00:16:19,855 மன்னிப்பு கேட்க பல மாதங்கள் ஆனது என்றாலும். ஆனால் உன் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறேன். 231 00:16:19,855 --> 00:16:20,772 அற்புதம். 232 00:16:21,481 --> 00:16:24,193 அதாவது, நீ வினோதமானவன் என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். 233 00:16:25,319 --> 00:16:26,320 என்ன? 234 00:16:26,320 --> 00:16:29,990 உன் போனிடெயில், தோல் உடை, இந்த பொருட்கள் இருப்பதால். 235 00:16:29,990 --> 00:16:33,619 - அதாவது, இந்த இடத்தைப் பார். - அது கலை, டீடோ. 236 00:16:33,619 --> 00:16:34,995 எப்போதும் பெண்களைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பாய், 237 00:16:34,995 --> 00:16:36,788 ஆனால் நான் உன்னை உன் காதலியுடன் பார்த்ததில்லை. 238 00:16:36,788 --> 00:16:39,499 - அதில் என்ன பிரச்சினை? - டீடோ. 239 00:16:41,084 --> 00:16:43,545 சரி, ஆம், எப்படியோ... 240 00:16:45,506 --> 00:16:47,424 நான் மிகவும் வருந்துகிறேன். நிஜமாகவே. 241 00:16:47,424 --> 00:16:50,802 நன்றி. எனக்கு அது ரொம்ப முக்கியம். 242 00:16:51,386 --> 00:16:52,596 நிஜமாகவே. 243 00:16:52,596 --> 00:16:55,098 வா, கட்டிப்பிடித்து சமாதானமாகிவிடுவோம். 244 00:16:55,098 --> 00:16:57,392 - வா. - சரி. 245 00:17:01,021 --> 00:17:03,398 ஆம். சரி, அருமை. 246 00:17:04,148 --> 00:17:05,150 நல்லது. 247 00:17:07,194 --> 00:17:08,612 ஓ, இன்னொரு சின்ன விஷயம். 248 00:17:11,365 --> 00:17:12,950 எனக்குக் கொஞ்சம் பணம் கடனாக வேண்டும். 249 00:17:26,922 --> 00:17:32,636 25,000 யூரோக்களுக்கு டார்க் வெப்பில் ஒரு புலியை வாங்கலாம் என்பது தெரியுமா? 250 00:17:32,636 --> 00:17:35,973 அது பயன்படுத்திய மெர்சிடிஸ் எஸ்எல்கே-வைவிட மலிவானது. 251 00:17:38,392 --> 00:17:40,477 சந்தர்ஷெய்மில் நீ என்ன செய்துகொண்டிருந்தாய்? 252 00:17:41,270 --> 00:17:42,354 வனவிலங்கு கடத்தல் சம்பந்தமானதா? 253 00:17:48,235 --> 00:17:52,406 - 30,000? - ருடிகர், நான் பெரும் சிக்கலில் இருக்கிறேன். 254 00:17:53,490 --> 00:17:56,076 நிச்சயமாக, உன்னைப் பார்க்க வந்ததில் இருந்தே எவ்வளவு தேவையில் இருக்கிறேன் என தெரிந்திருக்கும். 255 00:17:56,577 --> 00:18:01,331 நான் மலம் நிறைந்த கடலில் ஒரு காகிதப் படகில் உடைந்த துடுப்பை வைத்துக்கொண்டு 256 00:18:01,331 --> 00:18:04,293 நச்சுத்தன்மை கொண்ட லைஃப் ஜாக்கெட்டுடன் பயணித்துக்கொண்டிருக்கிறேன்... 257 00:18:04,293 --> 00:18:06,086 சரி, எனக்குப் புரிகிறது, டீடோ. 258 00:18:06,086 --> 00:18:08,046 அந்த உருவகப்படுத்துவதை நிறுத்து. கேவலமாக இருக்கிறது. 259 00:18:08,046 --> 00:18:11,049 வட்டியோடு திருப்பித் தருகிறேன். சத்தியமாக. 260 00:18:11,049 --> 00:18:14,428 கார்லட்டாவுக்கு சொத்தாக வந்த பணம் என்ன ஆனது? அதைப் பயன்படுத்த முடியாதா? 261 00:18:18,891 --> 00:18:20,434 நான் சொதப்பிவிட்டேன். 262 00:18:21,143 --> 00:18:23,520 என் வேலை போய்விட்டது, எங்கள் சேமிப்பை நம்பி இருக்க வேண்டியிருந்தது. 263 00:18:23,520 --> 00:18:25,814 வேறு வேலை கிடைக்கும் என்று நினைத்தேன், தெரியுமா? 264 00:18:25,814 --> 00:18:28,066 அதை சரிகட்டும் வரை கூடுதல் ஷிப்ட்களில் வேலை செய்யலாம், ஆனால்... 265 00:18:28,066 --> 00:18:30,986 - அடக் கடவுளே, டீடோ. - நீதான் எனக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு. 266 00:18:30,986 --> 00:18:35,282 பார், உனக்கு உதவ நினைத்தாலும், என்னால் இப்போது முடியாது. என்னிடம் பணமாக அதிகம் இல்லை. 267 00:18:35,282 --> 00:18:36,909 சில விலையுயர்ந்த கொள்முதல்களை செய்திருக்கிறேன். 268 00:18:36,909 --> 00:18:38,118 என்ன மாதிரியான விலையுயர்ந்த கொள்முதல்கள்? 269 00:18:38,118 --> 00:18:39,119 பிளாக் சூக்குக்கு வரவேற்கிறேன் 270 00:18:39,119 --> 00:18:40,704 அது உன் பிரச்சினை இல்லை. 271 00:18:42,831 --> 00:18:44,333 நீ கார்லட்டாவிடம் பேச வேண்டும். 272 00:18:44,333 --> 00:18:46,502 கடவுளே, நீ அவளிடம் பொய் சொன்னது அவளுக்குத் தெரியும்போது. அடக் கடவுளே. 273 00:18:46,502 --> 00:18:50,047 ஆம், எனக்குத் தெரியும், ருடிகர். என்னை விட்டு போய்விடுவாள். 274 00:18:52,633 --> 00:18:57,554 என்னால் 10 அல்லது 15,000 ஏற்பாடு செய்ய முடியும். 275 00:18:57,554 --> 00:18:59,723 நன்றி, ருடிகர். அது எனக்கு பெரிய உதவியாக இருக்கும். 276 00:18:59,723 --> 00:19:01,016 மிக்க நன்றி. 277 00:19:01,016 --> 00:19:03,936 ஆனால் நீ கார்லட்டாவிடம் பேசுவதாக எனக்கு சத்தியம் செய். 278 00:19:04,686 --> 00:19:06,855 அடுத்த வாய்ப்பு கிடைக்கும்போது. 279 00:19:08,357 --> 00:19:09,358 சரி. 280 00:19:10,067 --> 00:19:11,068 நிச்சயமாக. 281 00:19:13,612 --> 00:19:16,114 டீடோ, உங்கள் மனைவியுடன் நீங்கள் பகிர்ந்துகொள்ள ஏதாவது இருக்கிறதா? 282 00:19:17,241 --> 00:19:19,284 இல்லை, அப்படி எதுவும் நினைவுக்கு வரவில்லை. 283 00:19:20,035 --> 00:19:23,372 கார்லட்டா, இன்று இந்த அமர்வு ஏன் உங்களுக்கு மிகவும் முக்கியமானது? 284 00:19:24,581 --> 00:19:26,667 சமீபகாலமாக கஷ்டமாக இருக்கிறது. 285 00:19:27,209 --> 00:19:28,293 எங்கள் இருவருக்கும். 286 00:19:37,636 --> 00:19:39,429 சில நேரங்களில் நான் கண்டுகொள்ளப்படாதது போல... 287 00:19:41,265 --> 00:19:42,099 தோன்றுகிறது. 288 00:19:43,851 --> 00:19:45,978 நிறைய பொறுப்பால் அடிக்கடி... 289 00:19:45,978 --> 00:19:48,814 அழுத்தம் ஏற்படுவது போல தோன்றுகிறது. 290 00:19:50,148 --> 00:19:51,567 எப்படி சொல்கிறீர்கள்? 291 00:19:54,361 --> 00:19:57,239 எனக்கு சில கோபம் சம்பந்தமான பிரச்சினைகள் இருப்பது தெரியும், 292 00:19:57,239 --> 00:20:01,118 அது ஓலேவுக்கும் டீடோவுக்கும் கடினமாக இருக்கலாம். 293 00:20:01,118 --> 00:20:03,078 ஆம், அது உண்மைதான். அது... 294 00:20:05,998 --> 00:20:09,626 அது வயிற்றில் நெருப்பு எரிவது போல இருக்கிறது, 295 00:20:09,626 --> 00:20:12,045 ஆனால் அந்த நெருப்புதான் எல்லாவற்றையும் முன்னோக்கி செயல்பட வைக்கிறது. 296 00:20:12,045 --> 00:20:15,090 நான் அந்த கோபத்தைப் போக்கிவிட்டால், பிறகு... 297 00:20:16,508 --> 00:20:18,010 எங்களையெல்லாம் யார் செயல்படவைப்பார்கள்? 298 00:20:19,803 --> 00:20:22,055 ஓஹோ. அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 299 00:20:23,807 --> 00:20:25,184 நான் நினைக்கிறேன்... 300 00:20:28,395 --> 00:20:31,815 கடந்த ஆண்டு எனக்கு குடலிறக்கம் இருந்தது, 301 00:20:31,815 --> 00:20:35,027 அது மிகவும் மோசமான நெஞ்செரிச்சலை ஏற்படுத்தியது, 302 00:20:35,027 --> 00:20:38,739 இது கேட்க அது போல தோன்றுகிறது. 303 00:20:41,074 --> 00:20:43,660 ஆனால் நான் பால் குடிப்பதை நிறுத்திவிட்டேன், அது நிஜமாகவே உதவியது. 304 00:20:46,538 --> 00:20:49,249 உங்கள் பேச்சுத்திறன் எந்த அளவுக்கு நன்றாக இருக்கும் என்று சொல்வீர்கள்? 305 00:20:49,249 --> 00:20:51,210 - படுமோசம். - அருமை. அற்புதம். 306 00:20:53,837 --> 00:20:55,881 பத்துக்கு ஏழு என்று சொல்வேன். 307 00:20:55,881 --> 00:20:59,051 முன்னேற்றத்திற்கான இடமும் இருக்கிறது. 308 00:21:02,679 --> 00:21:04,473 டீடோ, நீங்களும் உங்கள் மனைவியும் உடலுறவு கொள்கிறீர்களா? 309 00:21:07,309 --> 00:21:09,394 அதாவது நீங்கள்... 310 00:21:10,979 --> 00:21:12,606 நிஜமாகவே அதுதான் கேள்வியா? 311 00:21:12,606 --> 00:21:14,983 நான் நினைத்தேன் இது வெறும்... 312 00:21:16,777 --> 00:21:18,111 உணர்வுகள் தொடர்பானது என்று. 313 00:21:18,111 --> 00:21:21,198 திருமண வாழ்க்கையில் உடல் ரீதியான நெருக்கம் மிகவும் முக்கியமானது. 314 00:21:21,198 --> 00:21:24,201 அது நெருக்கத்தை வளர்த்து, வார்த்தைகளால் வெளிப்படுத்த போராடும் 315 00:21:24,201 --> 00:21:27,037 உணர்வுகளை வெளிப்படுத்த அனுமதிக்கிறது. 316 00:21:27,913 --> 00:21:29,998 நீங்கள் வழக்கமாக உடலுறவு கொள்கிறீர்களா? 317 00:21:33,919 --> 00:21:35,879 உங்கள் ஹீட்டர் வேலை செய்கிறதா? இது மிகவும்... 318 00:21:35,879 --> 00:21:39,341 வெறும் வாண்டா கிளாட்டின் பெற்றோர் என்பதற்கு பதிலாக மீண்டும் 319 00:21:39,341 --> 00:21:42,261 சாதாரண மனிதர்களைப் போல உணர அது உங்களுக்கு உதவலாம். 320 00:21:42,261 --> 00:21:44,054 இன்று அவ்வளவு வெப்பமான நாள் கூட இல்லை என்று நினைக்கிறேன். 321 00:21:44,054 --> 00:21:47,641 ஒரு உறவில் ஒருவரிடம் ஒருவர் முயற்சி செய்வது 322 00:21:47,641 --> 00:21:48,809 மிகவும் முக்கியம். 323 00:21:50,227 --> 00:21:51,270 ஆம். 324 00:21:55,732 --> 00:21:57,609 - என்ன? - நான் கழிவறையைப் பயன்படுத்தலாமா? 325 00:22:00,195 --> 00:22:01,405 ஆம், நிச்சயமாக. 326 00:22:01,405 --> 00:22:04,032 நிச்சயமாக, அது ஹாலை தாண்டி இருக்கிறது. நான் காட்டுகிறேன். 327 00:22:04,032 --> 00:22:04,992 சரி. 328 00:22:07,828 --> 00:22:09,913 - நீ இங்கே வை. நான் ஹாலைப் பார்த்துக்கொள்கிறேன். - சரி. 329 00:22:15,502 --> 00:22:17,921 - வலதுபுறத்தில் கடைசி கதவு. - சரி, நன்றி. 330 00:22:30,100 --> 00:22:31,602 ஒரு கிளாஸ் தண்ணீர் கிடைக்குமா? 331 00:22:32,477 --> 00:22:34,229 - நிச்சயமாக. - நன்றி. 332 00:22:49,328 --> 00:22:51,788 வா. 333 00:23:00,172 --> 00:23:02,424 இது... மிகவும் அழகாக இருக்கிறது. 334 00:23:02,424 --> 00:23:03,884 அதை என்னவென்று அழைப்பீர்கள்? 335 00:23:03,884 --> 00:23:05,344 - அது ஒரு நாய். - சரி. 336 00:23:20,234 --> 00:23:22,110 சரி. அது நன்றாக போனது. 337 00:23:22,110 --> 00:23:23,445 இன்னொன்று முடிந்தது. 338 00:23:24,321 --> 00:23:26,240 அங்கே நன்றாக சமாளித்தாய். 339 00:23:26,240 --> 00:23:29,826 எல்லா உணர்வுகளாலும் அவளை திசை திருப்புவது. அருமையான வேலை. 340 00:23:36,166 --> 00:23:37,167 நீ வருகிறாயா இல்லை... 341 00:23:38,293 --> 00:23:39,586 நான் நடந்தே வருகிறேன். 342 00:23:40,170 --> 00:23:42,923 வானிலை நன்றாக இருக்கிறது. கொஞ்சம் புத்துணர்ச்சியான காற்றை சுவாசிக்கலாம். 343 00:23:44,925 --> 00:23:46,260 சரி. சரி, அல்லது... 344 00:23:49,638 --> 00:23:51,598 - வீட்டில் சந்திப்போம், சரியா? - சரி. 345 00:24:09,616 --> 00:24:11,994 காணவில்லை! வாண்டா கிளாட் 346 00:24:25,007 --> 00:24:26,008 - யோ. - ஹேய். 347 00:24:26,008 --> 00:24:27,509 - வந்திருப்பது யாரென்று பாருங்கள். - என்ன விஷயம்? 348 00:24:28,760 --> 00:24:32,764 நம் ப்ராஜெக்டுக்கு நான் இன்னும் சில பொருட்களை ஆர்டர் செய்ய வேண்டும். 349 00:24:33,390 --> 00:24:34,975 நான் பிறகு வரட்டுமா? 350 00:24:36,101 --> 00:24:38,520 நீங்கள் ஒரு ப்ராஜெக்டை செய்கிறீர்களா? அழகு. 351 00:24:38,520 --> 00:24:39,605 வாயை மூடு, கெவின். 352 00:24:40,355 --> 00:24:43,275 ஒரு பிரசென்டேஷனுக்கு ஓலே உதவுகிறான். அவன் மிகவும் புத்திசாலி. 353 00:24:43,275 --> 00:24:44,568 கண்டிப்பாக. 354 00:24:45,319 --> 00:24:48,030 நீ வாண்டா கிளாட்டின் தம்பிதானே? 355 00:24:49,615 --> 00:24:52,075 நிஜமாகவே வருந்துகிறேன். அது பயங்கரமானதாக இருக்க வேண்டும். 356 00:24:52,075 --> 00:24:55,329 ஆம், அது மோசம். உன் அக்கா அழகாக இருந்தாள். 357 00:24:55,329 --> 00:24:56,830 - கடவுளே, கெவின். - நண்பா. 358 00:24:57,623 --> 00:24:58,790 - என்ன? அவள் அழகாக இருந்தாள். - ஆம். 359 00:24:58,790 --> 00:25:00,209 அப்படிச் சொல்லக்கூடாது. 360 00:25:03,337 --> 00:25:05,255 - நான் போக வேண்டும். - பை. 361 00:25:05,797 --> 00:25:07,216 என்னவொரு வினோதமானவன். 362 00:25:07,216 --> 00:25:10,511 - ஓலே கிளாட்டிடம் உனக்கு என்ன வேண்டும்? - நண்பா, அவன் தன் அக்காவை இழந்திருக்கிறான். 363 00:25:10,511 --> 00:25:12,179 அவனை உனக்கு எப்படித் தெரியும்? 364 00:25:27,277 --> 00:25:31,323 அடிக்கடி அழுத்தம் ஏற்படுவது போல தோன்றுகிறது. 365 00:25:31,323 --> 00:25:34,243 கடவுளே, நீ அவளிடம் பொய் சொன்னது அவளுக்குத் தெரியும்போது. அடக் கடவுளே. 366 00:25:34,743 --> 00:25:37,454 டீடோ, உங்கள் மனைவியுடன் நீங்கள் பகிர்ந்துகொள்ள ஏதாவது இருக்கிறதா? 367 00:25:40,040 --> 00:25:41,458 நான் சொதப்பிவிட்டேன். 368 00:25:41,458 --> 00:25:43,919 என்ன ஆனாலும். 369 00:25:43,919 --> 00:25:45,546 அதைத்தான் நாம் சொன்னோம். 370 00:25:45,546 --> 00:25:49,091 - என்னை விட்டு போய்விடுவாள். - டீடோ, இது சீரியஸானது. 371 00:25:49,091 --> 00:25:51,510 ஆனால் நீ கார்லட்டாவிடம் பேசுவதாக எனக்கு சத்தியம் செய். 372 00:25:51,510 --> 00:25:54,596 என்ன ஆனாலும். 373 00:25:57,140 --> 00:26:00,894 நாங்கள் எந்த காரையும் வாங்கிக்கொள்வோம்! உடனடியாக பணம் 374 00:26:13,991 --> 00:26:15,325 ருடிகர்? 375 00:26:21,164 --> 00:26:23,208 முன்பு கெவின் பேசியதற்கு மன்னித்துவிடு. 376 00:26:23,208 --> 00:26:25,335 அவன் ஒரு அறிவு கெட்டவன், ஆனாலும் வேடிக்கையாக இருப்பான். 377 00:26:26,295 --> 00:26:27,629 பரவாயில்லை. 378 00:26:27,629 --> 00:26:30,841 எனவே, எத்தனை ஆர்டர் செய்ய வேண்டும்? 379 00:26:31,592 --> 00:26:32,718 20? 380 00:26:32,718 --> 00:26:34,845 இருபதா? அவர் எத்தனை இடங்களை பக் செய்ய திட்டமிட்டிருக்கிறார்? 381 00:26:34,845 --> 00:26:35,762 யாருக்குத் தெரியும்? 382 00:26:35,762 --> 00:26:37,806 அதற்கு நிறைய பணம் தேவைப்படும். அது உனக்குத் தெரியும்தானே? 383 00:26:37,806 --> 00:26:41,018 - எனக்கு இன்னும் கமிஷன் கிடைக்குமா? - நிச்சயமாக. 384 00:26:43,562 --> 00:26:44,813 பன்னிரண்டாயிரம் யூரோக்கள். 385 00:26:45,772 --> 00:26:47,482 உன் அம்மா மிகவும் மோசமானவர். 386 00:26:49,026 --> 00:26:50,903 - அருமை. - சரி. 387 00:26:50,903 --> 00:26:53,071 600 யூரோக்கள் எண்ணிக்கை 20 388 00:26:53,530 --> 00:26:56,033 சரி. முடிந்தது. 389 00:27:08,795 --> 00:27:10,130 இதோ, அன்பே. 390 00:27:10,964 --> 00:27:12,216 நன்றி, அன்பே. 391 00:27:18,639 --> 00:27:22,267 நீயும் உன் கணவனும் உடலுறவு கொள்கிறீர்களா, அன்பே? 392 00:27:22,267 --> 00:27:25,604 அகமெம்னானின் மகன். 393 00:27:25,604 --> 00:27:26,605 ஒடிஸியஸ். 394 00:27:28,607 --> 00:27:30,484 இல்லை. ஐந்து எழுத்துகளுடன். 395 00:27:30,484 --> 00:27:33,153 தயவுசெய்து போகாதே, அனிடா. தயவுசெய்து இரு. 396 00:27:33,153 --> 00:27:36,114 வருந்துகிறேன், ஹரால்ட், ஆனால் அது முடிந்துவிட்டது. 397 00:27:37,783 --> 00:27:39,034 அனிடா. 398 00:27:39,034 --> 00:27:40,244 கார்லட்டா? 399 00:27:40,994 --> 00:27:42,788 - அப்படிச் சொல்லாதே. - கார்லட்டா! 400 00:27:42,788 --> 00:27:44,706 - நமக்கு பணம் தேவையில்லை. - ஓ, இங்கே இருக்கிறாய். 401 00:27:45,749 --> 00:27:47,084 சுவாரஸ்யமாக ஏதாவது? 402 00:27:47,084 --> 00:27:50,045 ஓ, அன்பே, உன் பிரகாசமான அழகுக்காக உன்னுடன் இருந்தேன் என்று 403 00:27:50,045 --> 00:27:53,465 - நினைக்கிறாயா? - அவள் வேறு வீட்டிற்குச் சென்று வசிக்க வேண்டும். 404 00:27:53,465 --> 00:27:55,050 - நான் வருந்துகிறேன். - யார்? 405 00:27:55,050 --> 00:27:58,470 - குட்பை. - திருமதி. ஹெஸ்ஸெல். நிஜ மனைவி. 406 00:27:58,470 --> 00:28:00,138 போலி மனைவி இப்போது அவனை விட்டுபோகிறாள். 407 00:28:00,138 --> 00:28:01,431 அனிடா. 408 00:28:01,431 --> 00:28:03,559 அதுதான் விதி, நண்பா. 409 00:28:03,559 --> 00:28:04,893 அனிடா! 410 00:28:05,644 --> 00:28:07,813 - அருமையான ஒன்றைப் பார்க்க வேண்டுமா? - அனிடா! 411 00:28:08,564 --> 00:28:10,607 மேலே வா. உனக்கு ஒன்றைக் காட்ட வேண்டும். 412 00:28:15,946 --> 00:28:16,947 ட-டா! 413 00:28:18,699 --> 00:28:20,617 அது உன் அப்பாவின் பழைய வேன். 414 00:28:20,617 --> 00:28:23,370 அது தெரிகிறது. அது இங்கே என்ன செய்கிறது? 415 00:28:23,912 --> 00:28:26,623 நான் காரில் போய்க்கொண்டிருந்தேன், ருடிகர் வீட்டை கடக்கும்போது, 416 00:28:26,623 --> 00:28:29,084 வேன் அங்கே சும்மா நிற்பதை பார்த்து, நான் நினைத்தேன்... 417 00:28:30,169 --> 00:28:31,378 என் சகோதரன் வீட்டுக்குப் போனாயா? 418 00:28:32,212 --> 00:28:34,464 ஆம், சுருக்கமாக, உனக்கே தெரியும்... 419 00:28:34,464 --> 00:28:36,425 எனவே, அவனிடம் பேசினாயா? 420 00:28:37,384 --> 00:28:38,385 ஆம். 421 00:28:38,969 --> 00:28:39,887 சரி. 422 00:28:39,887 --> 00:28:42,639 எனவே நீங்கள் சமாதானமாகிவிட்டீர்களா? 423 00:28:44,766 --> 00:28:45,893 ஆம். 424 00:28:49,062 --> 00:28:51,190 பார், எப்படியிருந்தாலும், நமக்கு ஒரு நல்ல காரணம் தேவை என்று சொன்னாய்தானே? 425 00:28:51,190 --> 00:28:52,316 மக்கள் நம்மை உள்ளே அனுமதிப்பதற்கு. 426 00:28:52,316 --> 00:28:54,109 எனவே இதோ. 427 00:28:55,110 --> 00:28:56,987 கிளாட் அண்ட் சன். 428 00:28:56,987 --> 00:29:00,032 நாம் ஒரு சின்ன குடும்பத்தால் நடத்தப்படும் மின்னணுவியல் சேவை நிறுவனம். 429 00:29:00,032 --> 00:29:03,202 நாம் வீடு வீடாகச் சென்று புகை கண்டறியும் கருவிகளை சோதனை செய்கிறோம். 430 00:29:03,202 --> 00:29:05,329 இலவசமாக. நகரின் சார்பாக. 431 00:29:07,039 --> 00:29:08,874 இது ஓடுகிறதா? 432 00:29:08,874 --> 00:29:11,210 ஆம், அருமையாக. கொஞ்சம் கழுவினால் போதும். 433 00:29:14,630 --> 00:29:16,256 ஒரு பிரச்சினையும் இல்லை. நான் அதை சரி செய்கிறேன். 434 00:29:17,341 --> 00:29:21,094 சரி. இது மோசமான யோசனை இல்லை. 435 00:29:21,094 --> 00:29:22,554 அதை பாராட்டாக எடுத்துக்கொள்கிறேன். 436 00:29:26,308 --> 00:29:29,144 டீடோ. நம் கார் எங்கே? 437 00:29:29,811 --> 00:29:31,021 ஓ, அதை விற்றுவிட்டேன். 438 00:29:31,605 --> 00:29:34,066 - என்ன செய்தாய்? - கார்லட்டா, நமக்கு இரண்டு கார்கள் தேவையில்லை. 439 00:29:34,066 --> 00:29:35,567 ஓ, சரி, நான் மறப்பதற்கு முன். 440 00:29:35,567 --> 00:29:37,486 அடுத்த வாரத்தை இதை வைத்து ஓட்டிவிடலாம். 441 00:29:37,486 --> 00:29:40,572 பிறகு மீதிப் பணத்தைத் தேவைப்படும்போது எடுத்து வருகிறேன். 442 00:29:42,824 --> 00:29:44,409 கார்லட்டா, அது நன்றாக போகும். 443 00:29:44,993 --> 00:29:47,663 ஓலே நமக்கு பக்குகளை வாங்கி வருவான், நான் நமக்கு சில சீருடைகளைப் ஏற்பாடு செய்கிறேன். 444 00:29:47,663 --> 00:29:49,873 பிறகு நாம் வீடு வீடாகப் போகலாம்... 445 00:29:50,457 --> 00:29:52,334 ஹலோ. நாங்கள் கிளாட் எலக்ட்ரிக் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். 446 00:29:52,334 --> 00:29:54,294 - நாங்கள் இங்கே வந்திருப்பது... - நகர சபை சார்பாக. 447 00:29:54,837 --> 00:29:56,213 ஜெர்மனியில் ஒவ்வொரு ஆண்டும்... 448 00:29:56,213 --> 00:29:58,298 - 400-க்கும் மேற்பட்டவர்கள்... - தீ விபத்தால் இறக்கிறார்களா? 449 00:29:58,298 --> 00:30:00,551 அவர்களில் தொண்ணூற்றைந்து சதவீதம் பேர் புகையை உள்ளிழுப்பதால். 450 00:30:00,551 --> 00:30:03,846 ஒரு செயலிழந்த பேட்டரியால் உங்கள் உயிர் பறிபோக அனுமதிக்காதீர்கள்! 451 00:30:19,528 --> 00:30:21,655 நன்கொடை பெட்டி 452 00:30:27,119 --> 00:30:28,036 பேஸ்மென்டிலிருந்து சந்தேகத்திற்குரிய சத்தங்கள்! + சிவப்பு விளக்கு 453 00:30:28,036 --> 00:30:29,955 போலீஸுக்கு எதுவும் தெரியவில்லை 454 00:30:29,955 --> 00:30:31,540 பெண்ணைக் காணவில்லை நுப்பல்வோக்கன் இரவு முதல் துக்கம் 455 00:30:39,673 --> 00:30:41,508 - என்ன? - வெளியே போகிறேன். 456 00:30:41,508 --> 00:30:44,178 நிஜமாகவா? மீண்டும் வெளியே போகிறாயா? 457 00:30:44,178 --> 00:30:45,929 அன்பே, நான் வேலை செய்ய வேண்டும். 458 00:30:45,929 --> 00:30:50,350 நாள் முழுக்க வெளியே இருந்தாய், லூகாஸ். 459 00:30:50,350 --> 00:30:51,977 அது லூகாஸ் நோவாக். 460 00:30:51,977 --> 00:30:53,562 அவன் சந்தர்ஷெய்ம் எஸ்வி-க்காக விளையாடுவான். 461 00:30:53,562 --> 00:30:55,564 உன் ஹார்மோன் பிரச்சினையை என்னிடம் காட்டாதே. 462 00:30:55,564 --> 00:30:56,648 ஹேய். 463 00:30:59,318 --> 00:31:00,611 நிஜமாகவா? லூகாஸ்? 464 00:31:01,320 --> 00:31:03,405 நான் உன்னைக் கவனித்துக்கொள்கிறேன், இல்லையா? 465 00:31:03,405 --> 00:31:05,199 உணவு, உடைகள், தொட்டில், நமக்கு வேண்டும் என்று நீ சொன்ன 466 00:31:05,199 --> 00:31:07,534 நவீன நடைவண்டி எல்லாவற்றுக்கும் நான்தான் பணம் கொடுக்கிறேன்! 467 00:31:07,534 --> 00:31:08,619 வேறு என்ன உனக்கு வேண்டும்? 468 00:31:08,619 --> 00:31:10,954 ஒருவேளை நான் என் காதலனை அவ்வப்போது பார்க்க நினைக்கலாம்? 469 00:31:10,954 --> 00:31:12,122 அல்லது கொஞ்சம் உதவி வேண்டும். 470 00:31:12,122 --> 00:31:15,250 உனக்கு உதவி தேவைப்பட்டால், உன் அம்மாவை அழை. எனக்கு இதெல்லாம் ரொம்ப சலித்துவிட்டது! 471 00:31:15,250 --> 00:31:18,086 - அவன் ஒரு கேவலமானவன். - ஆம். 472 00:31:18,086 --> 00:31:20,923 ஆனால், நேர்மையாகச் சொன்னால், சென்டர் பேக்கில் நன்றாக விளையாட அப்படிப்பட்டவன்தான் தேவை. 473 00:31:22,341 --> 00:31:26,011 பிறக்காத குழந்தையின் அப்பாவாக அவன் அப்படி பேசக் கூடாது என்றாலும். 474 00:31:26,011 --> 00:31:27,930 ஹெஸ்ஸெல் கிழவன் என்ன செய்கிறான்? 475 00:31:31,141 --> 00:31:32,809 அனிடா. 476 00:31:34,228 --> 00:31:36,647 அனிடா. 477 00:31:56,542 --> 00:31:58,126 கைகளைத் தூக்கு. இல்லையென்றால் சுட்டுவிடுவேன். 478 00:31:59,127 --> 00:32:00,504 கடவுளே, டீடோ. 479 00:32:00,504 --> 00:32:02,381 என்னை ஒன்றும் செய்யாதே தயவுசெய்து. 480 00:32:02,381 --> 00:32:04,508 அடச்சே. 481 00:32:05,133 --> 00:32:08,053 - அடக் கடவுளே. அங்கே என்ன நடக்கிறது? - நான் அதை உன்னிடம் கொடுத்தால்? 482 00:32:08,053 --> 00:32:10,973 - என்னை விட்டு விடுவாயா? - எந்த வாக்குறுதியும் கொடுக்க மாட்டேன்! போகலாம்! 483 00:32:10,973 --> 00:32:14,309 பார்த்தாயா? அந்த பேஸ்மென்டில் ஏதோ வினோதமாக நடக்கிறது என்று சொன்னேனே. 484 00:32:14,309 --> 00:32:15,853 போலீஸை அழைப்போமா? 485 00:32:15,853 --> 00:32:17,771 போலீஸுக்கு அநாமதேயமாக தகவல்களை கொடுத்துக்கொண்டே இருக்க முடியாது. 486 00:32:17,771 --> 00:32:19,439 ஒரு கட்டத்தில் சந்தேகப்படத் தொடங்குவார்கள். 487 00:32:19,439 --> 00:32:21,149 எனவே நாம் என்ன செய்வது? அவனிடம் துப்பாக்கி இருக்கிறது. 488 00:32:22,776 --> 00:32:25,070 நாம் அந்த பேஸ்மென்டுக்கு உள்ளே நடப்பதை பார்க்க வேண்டும். 489 00:32:30,200 --> 00:32:31,285 ஒரு யோசனை தோன்றுகிறது. 490 00:32:36,832 --> 00:32:37,833 சரி. 491 00:32:39,585 --> 00:32:42,087 டீடோ? எப்படிப் போகிறது? 492 00:32:42,087 --> 00:32:45,424 நன்றாக. எனக்கு ஒரு நிமிடம் கொடு. 493 00:32:45,424 --> 00:32:48,135 நான் இதை அதற்குள் விட்டு, பிறகு... இதோ. 494 00:32:49,761 --> 00:32:52,723 - நான் தெரிகிறேனா? - ஆம், உன் மூக்கின் முடிகளை வெட்ட வேண்டும். 495 00:32:52,723 --> 00:32:54,224 ஆம். மிகவும் வேடிக்கையானது. 496 00:32:57,102 --> 00:32:59,188 எது அவர்களுடைய முற்றம் என்று தெரியுமா? 497 00:32:59,730 --> 00:33:01,732 இல்லை, ஆனால் அது நிச்சயமாக அந்தப் பக்கம்தான் இருக்க வேண்டும். 498 00:33:03,775 --> 00:33:04,776 அதை இப்போது முயற்சி செய்கிறேன். 499 00:33:06,695 --> 00:33:07,696 சரி. 500 00:33:19,041 --> 00:33:20,834 ஓ. மேலே! 501 00:33:20,834 --> 00:33:22,586 மேலே! அது தவறான முற்றம். 502 00:33:22,586 --> 00:33:24,796 டிம்மி, உள்ளே வா. இரவு உணவுக்கான நேரம். 503 00:33:26,131 --> 00:33:27,049 மேலே! 504 00:33:34,681 --> 00:33:37,351 கார்லட்டா, என்ன நடக்கிறது? 505 00:33:39,728 --> 00:33:42,898 தெரியவில்லை. நாய் என்று நினைக்கிறேன்? 506 00:33:42,898 --> 00:33:45,150 நாயா? நான் இப்போது என்ன செய்வது? 507 00:33:45,150 --> 00:33:46,735 எனக்குத் தெரியாது! 508 00:33:48,362 --> 00:33:49,363 உட்கார். 509 00:33:51,365 --> 00:33:52,366 ஆஹா. 510 00:33:52,908 --> 00:33:55,118 அது வேலை செய்ததை என்னால் நம்ப முடியவில்லை. 511 00:33:55,118 --> 00:33:56,453 என்னாலும்தான். 512 00:33:56,453 --> 00:33:57,996 நல்ல பையன். இப்போது, அதை போடு. 513 00:34:00,165 --> 00:34:03,502 - அவ்வளவுதான். இப்போது, அதை இழு. - சரி. 514 00:34:03,502 --> 00:34:04,586 அடக் கடவுளே. 515 00:34:05,420 --> 00:34:07,840 சரி. நான் சுற்றுகிறேன். 516 00:34:07,840 --> 00:34:09,007 சுற்று. 517 00:34:09,007 --> 00:34:11,009 - இன்னும் கொஞ்சம் நெருக்கமாக போக முடியுமா? - முயற்சி செய்கிறேன். 518 00:34:18,183 --> 00:34:19,351 மன்னித்துவிடு. 519 00:34:19,851 --> 00:34:21,812 பரவாயில்லை. 520 00:34:28,025 --> 00:34:29,194 ப்யூ. சரி. 521 00:34:34,074 --> 00:34:37,327 அதுதான். பேஸ்மென்டின் ஜன்னல் தெரிகிறது. 522 00:34:37,327 --> 00:34:39,538 இன்னும் நெருக்கமாக போக வேண்டும். 523 00:34:39,538 --> 00:34:43,375 இது இன்னும் 15 அடி... 524 00:34:43,375 --> 00:34:44,458 இடதுபுறம். 525 00:34:45,627 --> 00:34:47,754 மற்றொரு இடது. இடதுபுறம் இருக்கும் இடது. 526 00:34:47,754 --> 00:34:50,382 அவ்வளவு தூரம்தான் போக முடிகிறது. நான் மீண்டும் வீச வேண்டும். 527 00:34:51,382 --> 00:34:52,467 அது நல்ல யோசனையா? 528 00:34:52,467 --> 00:34:54,928 கார்லட்டா, தொழில் வல்லுநர்களே நான் தூண்டில் போடுவதை பாராட்டியிருக்கிறார்கள். 529 00:34:54,928 --> 00:34:56,679 கடந்த கோடையில் நானும் கார்லும் ரைனுக்கு போனது உனக்கே தெரியும். 530 00:34:56,679 --> 00:34:58,432 ஆம். எனக்கு நினைவிருக்கிறது. 531 00:34:58,432 --> 00:34:59,808 பதினைந்து அடி என்றா சொன்னாய்? 532 00:35:00,475 --> 00:35:02,561 15 முதல் 20 அடி. அப்படித்தான் நினைக்கிறேன். 533 00:35:02,561 --> 00:35:04,396 - பிறகு 10 மணி கோணத்தில். - என்ன? 534 00:35:04,396 --> 00:35:06,148 10 மணி கோணத்தில். கடிகாரம் போல. 535 00:35:06,148 --> 00:35:09,151 எனவே, 12 என்பது முன்னால், பேஸ்மென்டின் ஜன்னல்தான் 10 மணி கோணத்தில் இருக்கும். 536 00:35:09,151 --> 00:35:11,153 வெறும் இடதுபுறம் என்றுதானே சொன்னாய்? 537 00:35:11,778 --> 00:35:12,779 இது படுமோசமான யோசனை. 538 00:35:12,779 --> 00:35:15,199 சரி, நான் அதைச் செய்கிறேன். 539 00:35:19,620 --> 00:35:20,746 ஓ. ஆஹா! 540 00:35:20,746 --> 00:35:24,208 - டீடோ. அது அற்புதமாக இருந்தது! - சரி. நன்றி. 541 00:35:24,208 --> 00:35:26,043 இரண்டு அடி மட்டுமே குறைவாக இருக்கிறது. 542 00:35:27,127 --> 00:35:28,670 அடக் கடவுளே! 543 00:35:28,670 --> 00:35:30,672 கடவுளே. ஏதோ நடக்கிறது. 544 00:35:30,672 --> 00:35:33,342 திருமதி. ரோத்தின் குரல் கேட்கிறது. அவள் பயத்தில் நடுங்குகிறாள். 545 00:35:33,342 --> 00:35:34,551 நான் மீண்டும் வீசுகிறேன். 546 00:35:36,220 --> 00:35:37,846 இப்போதே வா. 547 00:35:37,846 --> 00:35:39,515 தூரமாக போ, அழகானதே. 548 00:35:41,225 --> 00:35:42,226 சரி. 549 00:35:46,563 --> 00:35:47,481 ஆம்! 550 00:35:47,481 --> 00:35:48,982 நீ செய்துவிட்டாய். 551 00:35:50,150 --> 00:35:52,694 இப்போது அதை இறக்கு. கொஞ்சம் இறக்கு. 552 00:35:52,694 --> 00:35:53,779 இறக்கு. 553 00:35:54,446 --> 00:35:57,115 - இப்போது உன் உடைகளை கழற்று! - இல்லை! சரி. 554 00:35:59,076 --> 00:36:00,869 உன் கணவனால் இப்போது உன்னைக் காப்பாற்ற முடியாது. 555 00:36:02,996 --> 00:36:04,831 இப்போது நான் உன்னை என்ன செய்கிறேன் பார்! 556 00:36:04,831 --> 00:36:06,250 - திரும்பு! - சரி. 557 00:36:06,250 --> 00:36:09,419 கார்லட்டா. கார்லட்டா, ஏதாவது தெரிகிறதா? அங்கே என்ன நடக்கிறது? 558 00:36:10,128 --> 00:36:11,630 - அடக் கடவுளே. - ஆம்! 559 00:36:11,630 --> 00:36:13,715 அது... தவறாக நினைத்துவிட்டோம். 560 00:36:13,715 --> 00:36:15,676 இப்போது நீ அதை... 561 00:36:15,676 --> 00:36:17,261 - நிறுத்தாதே. - ...சுற்றலாம். 562 00:36:17,261 --> 00:36:18,929 - கெட்ட பெண். - தவறாக நினைத்துவிட்டோமா? 563 00:36:18,929 --> 00:36:21,849 - அதற்கு என்ன அர்த்தம்? - கடவுளே, அதை சுற்று! 564 00:36:29,481 --> 00:36:32,192 - அப்படியென்றால் அவர்கள்... - இதைப் பற்றி இனி பேச வேண்டாம். 565 00:36:51,086 --> 00:36:52,629 நீ இணைந்ததில் மகிழ்ச்சி உதவிக்கு நன்றி 566 00:36:52,629 --> 00:36:55,257 சகோ உன் அம்மா கவனிக்காதபடி உன் அப்பாவால் இனி வாய்வை கூட வெளியேற்ற முடியாது 567 00:36:56,758 --> 00:36:59,678 நீ இணைந்ததில் மகிழ்ச்சி - எங்களுக்கு உன் ஸ்னைப்பர் தேவை 568 00:36:59,678 --> 00:37:02,097 மன்னிக்கவும்! பிஸியாக இருக்கிறேன் 569 00:37:02,097 --> 00:37:04,850 எதில்? 570 00:37:04,850 --> 00:37:05,934 நான் அதைச் செய்கிறேன். 571 00:37:19,656 --> 00:37:21,074 ச்சே. 572 00:37:22,242 --> 00:37:23,535 அது நல்லதில்லை. 573 00:37:23,535 --> 00:37:24,828 மன்னித்துவிடுங்கள், நண்பர்களே. 574 00:37:24,828 --> 00:37:25,746 நான் போக வேண்டும்! 575 00:37:29,750 --> 00:37:30,834 அட. 576 00:37:35,172 --> 00:37:36,965 {\an8}நான் கிளம்பப் போகிறேன் முக்கிய எச்சரிக்கை! 577 00:37:41,470 --> 00:37:42,888 ஓலே வந்துகொண்டிருக்கிறான். 578 00:37:47,059 --> 00:37:48,769 நாம் அவர்களுடைய வீட்டு வாசலில் இருப்பதற்கு என்ன காரணம் சொல்வது? 579 00:37:48,769 --> 00:37:49,853 நாம் அதை யோசிப்போம். 580 00:37:53,565 --> 00:37:54,566 ஹலோ? 581 00:37:55,359 --> 00:37:56,902 உங்களை தொந்தரவு செய்ததற்கு மன்னியுங்கள். 582 00:37:58,237 --> 00:37:59,613 மிகவும் வலிக்கிறது! 583 00:37:59,613 --> 00:38:02,491 சரி. பதட்டமடையாதீர்கள்! நாங்கள் உள்ளே வருகிறோம். 584 00:38:02,491 --> 00:38:04,201 நாங்கள் உள்ளே வருகிறோம். எப்படி உள்ளே போவது? 585 00:38:04,201 --> 00:38:05,661 நான் பார்த்துக்கொள்கிறேன். 586 00:38:06,328 --> 00:38:07,496 நிஜமாகவா? 587 00:38:07,496 --> 00:38:09,665 நீ அதை திறப்பதற்குள், குழந்தை பள்ளிக்கு போய்விடும். 588 00:38:14,211 --> 00:38:15,671 கவலைப்படாதீர்கள்! நாங்கள் இருக்கிறோம்! 589 00:38:17,089 --> 00:38:18,090 சீக்கிரம், டீடோ. 590 00:38:19,258 --> 00:38:21,927 கவலைப்படாதீர்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நான் மருத்துவமனையில் வேலை செய்கிறேன்! 591 00:38:21,927 --> 00:38:23,595 நீ நிர்வாக உதவியாளர். 592 00:38:23,595 --> 00:38:26,640 குழந்தை வெளியே வருகிறது! 593 00:38:26,640 --> 00:38:28,100 ஒரு நிமிடம். 594 00:38:29,726 --> 00:38:31,061 சீக்கிரம். சீக்கிரம். டீடோ. 595 00:38:32,020 --> 00:38:33,605 என்னை கவனம் செலுத்தவிடு. 596 00:38:33,605 --> 00:38:35,941 திறந்துவிடு, செல்லம். நீ அந்த பிடிப்பை உணர வேண்டும். 597 00:38:35,941 --> 00:38:38,360 ஒன்றாகப் பிடி. 598 00:38:38,861 --> 00:38:40,195 இது ஒருபோதும் வேலை செய்யாது. 599 00:38:40,195 --> 00:38:42,614 அதை மென்மையாக தடவு. திற. 600 00:38:46,994 --> 00:38:49,162 குளியலறை ஜன்னல் திறந்திருந்தது. வாருங்கள். 601 00:38:51,707 --> 00:38:52,958 நான் அப்போது கிட்டத்தட்ட திறந்துவிட்டேன். 602 00:38:59,464 --> 00:39:01,466 செல்வி. பீட்ஸ், நாங்கள் உதவ வந்திருக்கிறோம். 603 00:39:02,259 --> 00:39:04,261 கொஞ்சம் வெந்நீர் கொண்டுவா. டீடோ, சில துண்டுகளை எடு. 604 00:39:04,261 --> 00:39:05,846 ரொம்ப வலிக்கிறது! 605 00:39:08,599 --> 00:39:11,435 செல்வி. பீட்ஸ். பின்னால் சாய்ந்துகொண்டு, ஆசுவாசப்படுத்திக்கொள்ளுங்கள். 606 00:39:11,435 --> 00:39:13,103 சௌகரியமாக இருங்கள். 607 00:39:15,105 --> 00:39:16,523 குழந்தை வருகிறதா? 608 00:39:17,024 --> 00:39:18,192 கிட்டத்தட்ட. 609 00:39:18,192 --> 00:39:21,695 - துண்டுகள்! - டீடோ. அவர் கையைப் பிடித்துக்கொள். 610 00:39:21,695 --> 00:39:22,905 சரி. 611 00:40:21,713 --> 00:40:24,633 என் சகோதரியிடம் பேசிவிட்டாயா? 612 00:40:40,315 --> 00:40:44,444 கண்களை மூடிக்கொண்டு உங்களுடைய ஆழமான இரகசியத்தை நினைத்துப் பாருங்கள். 613 00:40:45,445 --> 00:40:49,116 உங்களால் ஒருபோதும் யாரிடமும் சொல்ல முடியாத ஒன்றை. 614 00:40:49,116 --> 00:40:52,744 பிறருக்குத் தெரியவந்தால் உங்கள் வாழ்க்கையே 615 00:40:53,453 --> 00:40:55,163 மாறிவிடக்கூடிய ஒன்றை. 616 00:40:56,206 --> 00:40:57,499 நிரந்தரமாக. 617 00:41:10,596 --> 00:41:12,055 அது ஒரு சோகமான இரகசியமாக இருக்கலாம். 618 00:41:12,055 --> 00:41:16,935 அனிடா! 619 00:41:22,107 --> 00:41:23,942 அல்லது அது ஒரு கேவலமான இரகசியமாக இருக்கலாம். 620 00:41:39,708 --> 00:41:41,502 அல்லது மிகவும் கொடூரமான இரகசியமாக இருக்கலாம். 621 00:42:00,646 --> 00:42:02,272 ஹலோ, துப்பறிவாளர் ரவுஷ். 622 00:42:02,272 --> 00:42:05,609 ம், செக் எல்லையோர காவல்துறையிடம் நீங்கள் விசாரித்ததற்கு நன்றி. 623 00:42:06,193 --> 00:42:09,613 எங்கள் பதிவுகளைச் சரிபார்த்த பிறகு, செல்வி. நேம்கோவா சமீபத்தில் 624 00:42:09,613 --> 00:42:13,825 {\an8}ஒரு கார் விபத்தில் காலமானதை உங்களுக்குத் தெரிவிக்க வருந்துகிறோம். 625 00:42:14,993 --> 00:42:17,913 எனவே உங்கள் இரகசியத்தைப் பற்றி யோசித்து, பிறகு உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்: 626 00:42:17,913 --> 00:42:22,918 அந்த இரகசியத்தை மற்றவர்கள் தெரிந்துகொள்வதை தடுக்க நீங்கள் எந்த எல்லைக்குப் போவீர்கள்? 627 00:42:57,077 --> 00:42:59,371 ஸோல்டன் ஸ்பிராண்டெல்லியின் கதையை அடிப்படையாகக் கொண்டது 628 00:43:33,030 --> 00:43:35,032 வசனத் தமிழாக்கம் அருண்குமார்