1 00:00:15,516 --> 00:00:19,603 நீங்கள் இறப்பதற்கு முன்பு, உங்கள் மொத்த வாழ்க்கையும் உங்கள் கண் முன்னே வந்துபோகும் என்பார்கள். 2 00:00:21,063 --> 00:00:23,481 அது எப்படி இருக்கும் என்று அடிக்கடி வியந்திருக்கிறேன். 3 00:00:23,482 --> 00:00:26,443 அதாவது, ஹைலைட் ரீலை ஒன்றாக யார் இணைப்பார்கள்? 4 00:00:28,028 --> 00:00:29,363 என் மொத்த வாழ்க்கையுமா? 5 00:00:30,906 --> 00:00:33,491 நான் இறப்பதற்கு முன், எங்கள் ஐந்தாம் ஆண்டு பள்ளி நாடகத்தின்போது மேடையில் 6 00:00:33,492 --> 00:00:37,371 என் பேண்ட்டில் சிறுநீர் கழிப்பதை நான் பார்க்க வேண்டுமா? 7 00:00:38,455 --> 00:00:40,541 அதற்கு பதிலாக கடைசி பகுதிக்கு போகலாம் என்று நினைக்கிறேன். 8 00:01:25,294 --> 00:01:29,213 11 மணிநேரத்திற்கு முன்பு 9 00:01:29,214 --> 00:01:30,340 வாண்டா! 10 00:01:31,091 --> 00:01:32,885 இல்லை! 11 00:01:47,316 --> 00:01:48,317 என்னை மன்னித்துவிடு X 12 00:01:52,070 --> 00:01:54,573 இல்லை! 13 00:01:56,825 --> 00:01:58,117 அடச்சே! 14 00:01:58,118 --> 00:01:59,203 வாண்டா! 15 00:02:07,294 --> 00:02:08,460 இல்லை! 16 00:02:08,461 --> 00:02:10,129 அடக் கடவுளே. 17 00:02:10,130 --> 00:02:11,924 அடடா, இல்லை. 18 00:02:12,633 --> 00:02:13,884 சரி. 19 00:02:15,177 --> 00:02:17,179 என்ன? இல்லை! 20 00:02:17,888 --> 00:02:20,516 இல்லை! இல்லை! 21 00:02:27,731 --> 00:02:28,815 சரி. 22 00:02:30,108 --> 00:02:31,443 ஓய், அடக் கடவுளே. 23 00:03:32,754 --> 00:03:33,755 அடச்சே. 24 00:04:00,073 --> 00:04:02,325 {\an8}நல்ல நிலையில் பெறப்பட்டது அங்கீகரிக்கப்பட்ட கையெழுத்து(கள்) 25 00:04:02,326 --> 00:04:04,410 புலி எண். 71524247 26 00:04:04,411 --> 00:04:06,495 {\an8}டாக்ஹார்ன் இன்டர்நேஷனல் லிமிடெட் வனவிலங்கு உணவு 27 00:04:06,496 --> 00:04:08,624 தான்சானியா டோடோமா 28 00:04:11,502 --> 00:04:13,128 சியாங் மாய் லாம்ப்ஹன் 29 00:04:38,779 --> 00:04:41,030 நேரத்தை வீணடிக்காதே! 30 00:04:41,031 --> 00:04:42,907 உன் விஷயங்களை சமாளிக்க நான் போதுமான காபி குடிக்கவில்லை. 31 00:04:42,908 --> 00:04:45,117 அசட்டையாக இருப்பதை விட்டுவிடுங்கள், கிளம்பலாம். 32 00:04:45,118 --> 00:04:47,161 ஒன்றரை மணிநேரத்தில் வேலையை முடிக்க வேண்டும். 33 00:04:47,162 --> 00:04:49,163 இது மாய மந்திரம் இல்லை. வேலையை திறமையாக செய். 34 00:04:49,164 --> 00:04:50,874 இதை திரும்பச் சொல்லமாட்டேன். போகலாம். 35 00:05:03,387 --> 00:05:04,387 ஆபரேஷன் ஸ்பிரிங் கிளீனிங் 36 00:05:04,388 --> 00:05:06,722 சரி... எனவே வாண்டா விழா 12 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது. 37 00:05:06,723 --> 00:05:08,975 போக்குவரத்து நிலைமை மற்றும் பொதுவான தாமதங்களைப் பொறுத்து... 38 00:05:08,976 --> 00:05:14,313 மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு பதினொரு முப்பது நூறு மற்றும்... 39 00:05:14,314 --> 00:05:16,649 பொறு இல்லை... ஆயிரத்து நூற்று முப்பது மணிக்கு கிளம்புவார்கள் என்று வைத்துக்கொள்வோம்... 40 00:05:16,650 --> 00:05:18,276 - 11:30-க்கும் 11:45-க்கும் இடையே. - சரி. 41 00:05:18,277 --> 00:05:21,279 ருடிகர், நீயும் நானும் விழாவில் இருந்துகொண்டு, 42 00:05:21,280 --> 00:05:23,573 அண்டை வீட்டாரைக் கண்காணிப்போம், அதே நேரத்தில் டீடோவும் ஓலேவும்... 43 00:05:23,574 --> 00:05:24,699 டேக்அவே அணி. 44 00:05:24,700 --> 00:05:27,786 ...பக்குகளை அகற்றுவார்கள். 45 00:05:28,662 --> 00:05:31,039 அது என் பின்னல் ஊசிகளில் ஒன்றா? 46 00:05:32,207 --> 00:05:33,416 திட்டம் சரியாக நடக்க, 47 00:05:33,417 --> 00:05:36,335 நாம் பிரச்சினை இல்லாமல் செயல்பட வேண்டும். 48 00:05:36,336 --> 00:05:37,670 கேள்விகள் இருக்கின்றனவா? 49 00:05:37,671 --> 00:05:39,715 - என்ன? - நம்முடைய அணியின் பெயர் என்ன? 50 00:05:40,632 --> 00:05:42,175 கார்லட்டா மற்றும் ருடிகர். 51 00:05:42,176 --> 00:05:44,552 ஓலே, நீ இங்கிருந்து பக்குகளை கண்காணித்துக்கொண்டே, 52 00:05:44,553 --> 00:05:47,513 வீடுகள் காலியாக இருப்பதை உறுதிசெய்து, அடுத்து எந்த வீட்டில் நுழைய வேண்டும் என்று என்னிடம் சொல்வாய். 53 00:05:47,514 --> 00:05:49,140 இதைப் பயன்படுத்தி தொடர்பிலேயே இருப்போம். 54 00:05:49,141 --> 00:05:50,601 நாம் ஏன் நம் ஃபோன்களை பயன்படுத்தக்கூடாது? 55 00:05:51,935 --> 00:05:54,437 அம்மா என்னை அழைக்கும்போது இணைப்பு ஃப்ரீயாக இருக்க வேண்டும் என்பதால். 56 00:05:54,438 --> 00:05:55,981 தவிர, இது மிகவும் அருமையானது. 57 00:05:56,565 --> 00:05:58,191 இல்லை, நம்மிடம் வாக்கி-டாக்கிகள் இல்லை. 58 00:05:58,192 --> 00:06:01,903 நாம் ஒரு அணியாகச் செயல்பட்டால் இதைச் செய்யலாம். 59 00:06:01,904 --> 00:06:03,363 நாம் ஒரு அணி இல்லை. 60 00:06:05,616 --> 00:06:06,909 நாம் ஒரு குடும்பம். 61 00:06:11,538 --> 00:06:13,081 நீங்கள் முட்டாள்களாக இருக்கிறீர்கள். 62 00:06:14,416 --> 00:06:17,336 - ஆபரேஷன் ஸ்பிரிங் கிளீனிங். - ஹேய்! 63 00:06:27,721 --> 00:06:29,306 - வாழ்த்துகள். - உனக்கும்தான். 64 00:06:30,057 --> 00:06:32,308 நான்... உன்னை நேசிக்கிறேன். 65 00:06:32,309 --> 00:06:33,393 நானும்தான். 66 00:06:39,399 --> 00:06:41,109 நானும் உன்னை நேசிக்கிறேன், டீடோ. 67 00:06:43,111 --> 00:06:44,112 சரி. 68 00:06:44,780 --> 00:06:45,906 கிளாட் & சன் எலக்ட்ரிக்ஸ் 69 00:07:00,337 --> 00:07:01,964 பெயர் தெரியாத அழைப்பாளர் 70 00:07:03,757 --> 00:07:05,717 ஃபோனை எடுங்கள்! 71 00:07:28,156 --> 00:07:29,824 சந்தர்ஷெய்ம் காவல்துறை தலைமை ஆய்வாளர் 72 00:07:29,825 --> 00:07:31,410 மிஷெல் ரவுஷ் டாஸ்க் ஃபோர்ஸ் வாண்டா கிளாட் 73 00:07:42,921 --> 00:07:45,715 ராபர்ட் பௌஷர், ஏழாவது ஸ்டேஷன். என்ன உதவி வேண்டும்? 74 00:07:45,716 --> 00:07:50,178 ஹாய், வாண்டா கிளாட் டாஸ்க் ஃபோர்ஸைச் சேர்ந்த 75 00:07:50,179 --> 00:07:52,513 தலைமை ஆய்வாளர் ரவுஷிடம் பேச வேண்டும். 76 00:07:52,514 --> 00:07:54,349 சரி, கொஞ்சம் காத்திருங்கள். 77 00:07:55,684 --> 00:07:58,019 வாண்டா கிளாட் பற்றி ரவுஷுக்கு அழைப்பு வந்திருக்கிறது. 78 00:07:58,020 --> 00:07:59,104 அவர் இருக்கிறாரா? 79 00:08:00,564 --> 00:08:01,607 ஒரு நொடி. 80 00:08:08,739 --> 00:08:10,364 மன்னிக்கவும், பிஸியா? 81 00:08:10,365 --> 00:08:14,368 இந்த "கிங்" யாரென்று கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன். 82 00:08:14,369 --> 00:08:16,704 வாண்டா கிளாட் பற்றி உங்களுக்கு ஒரு அழைப்பு வந்திருக்கிறது. 83 00:08:16,705 --> 00:08:18,332 அதை நீயே கவனித்துக்கொள்கிறாயா? 84 00:08:19,208 --> 00:08:20,208 கண்டிப்பாக. 85 00:08:20,209 --> 00:08:21,293 நன்றி. 86 00:08:29,676 --> 00:08:30,761 நான் பார்த்துக்கொள்கிறேன். 87 00:08:33,304 --> 00:08:34,139 ஹலோ? 88 00:08:36,390 --> 00:08:37,225 செல்வி. ரவுஷ்? 89 00:08:37,226 --> 00:08:41,145 இல்லை, வருந்துகிறேன். துப்பறிவாளர் ரவுஷ் இப்போது பிஸியாக இருக்கிறார். 90 00:08:41,980 --> 00:08:44,483 நான் உங்களுக்கு உதவலாமா? நான் அவருடைய பார்ட்னர். 91 00:08:46,902 --> 00:08:48,070 ஹலோ? 92 00:08:49,738 --> 00:08:51,198 நான் வாண்டா கிளாட். 93 00:08:56,787 --> 00:08:59,998 வாண்டா திருவிழா 94 00:09:01,750 --> 00:09:02,751 நீ நலமா? 95 00:09:03,502 --> 00:09:04,795 அதைச் செய்வோம். 96 00:09:07,756 --> 00:09:09,715 மைக் செக். 97 00:09:09,716 --> 00:09:14,220 ஒன்று, இரண்டு, ஒன்று. 98 00:09:14,221 --> 00:09:16,389 - இதை நகர்த்த வேண்டும். - வாண்டா. 99 00:09:16,390 --> 00:09:19,559 பர்ஃபார்மான்ஸ்களுக்காக மேடை காலியாக இருக்க வேண்டும். 100 00:09:19,560 --> 00:09:21,477 பஃபே மேஜைகள் அங்கே இருக்கின்றன. 101 00:09:21,478 --> 00:09:24,313 மக்டலீனா, எல்லோருக்கும் போதுமான இடத்தை விடுகிறாயா? 102 00:09:24,314 --> 00:09:27,651 உன்னுடைய மிகப்பெரிய கீஷ்களை மேஜைகளில் பரப்பிவிடாதே. 103 00:09:28,235 --> 00:09:30,903 - அதோ நம் கெளரவ விருந்தினர்! ஹலோ. - கடரினா. 104 00:09:30,904 --> 00:09:34,824 இன்று உங்களுக்கு மிகவும் உணர்வுப்பூர்வமாகத்தான் இருக்கும், 105 00:09:34,825 --> 00:09:37,994 ஆனால் உங்களுக்காக நாங்கள் எல்லோரும் இருக்கிறோம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். 106 00:09:37,995 --> 00:09:40,330 - நன்றி. - ஓலேவும் டீடோவும் வந்திருக்கிறார்களா? 107 00:09:41,957 --> 00:09:43,250 கொஞ்ச நேரம் கழித்து இணைந்துகொள்வார்கள். 108 00:09:43,876 --> 00:09:48,088 இன்று காலை ஓலே கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், டீடோ அவனுடன் இருக்கிறார். 109 00:09:49,131 --> 00:09:51,549 ஓ, சரி, ஆனால் இது என் சகோதரர் ருடிகர். 110 00:09:51,550 --> 00:09:52,967 - உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. - என் பாக்கியம். 111 00:09:52,968 --> 00:09:54,927 அருமை, மேடை அருமையாக இருக்கிறது. 112 00:09:54,928 --> 00:09:57,054 நிகழ்ச்சி நிரல் பற்றி நான் பேச யாராவது இருக்கிறார்களா? 113 00:09:57,055 --> 00:09:59,224 நான் பாட விரும்பும் ஒரு சின்ன பாடல் இருக்கிறது. 114 00:10:00,809 --> 00:10:04,520 கடரினா, நாங்கள் உங்களுக்கு வேறு எதிலாவது உதவ வேண்டுமா? 115 00:10:04,521 --> 00:10:07,273 இல்லை, நீங்கள் போய் ஒரு பானம் குடியுங்கள், ஆசுவாசப்படுத்திக்கொள்ளுங்கள். 116 00:10:07,274 --> 00:10:09,025 எல்லாவற்றையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோம். 117 00:10:09,026 --> 00:10:11,111 நான் மக்டலீனாவை போய் விசாரிப்பு நல்லது. ஒரு நொடி. 118 00:10:12,154 --> 00:10:13,154 மக்டலீனா? உன்னிடம் கீஷ்களை 119 00:10:13,155 --> 00:10:15,908 - நடுவில் வைக்காதே என்று சொன்னேனே. - வாண்டா. கிளாட். 120 00:10:16,533 --> 00:10:19,244 வாண்டா கிளாட். 121 00:10:28,962 --> 00:10:31,923 ஈகிள் ஸ்பேரோவை அழைக்கிறேன். பேசுவது கேட்கிறதா? ஓவர். 122 00:10:31,924 --> 00:10:33,966 அப்பா, எத்தனை முறை கேட்பீர்கள்? 123 00:10:33,967 --> 00:10:36,553 {\an8}நீங்களும் நானும் மட்டும்தான். நமக்கு இரகசிய பெயர்கள் தேவையில்லை. 124 00:10:37,387 --> 00:10:39,514 {\an8}தயவுசெய்து "ஓவர்" என்று சொல்கிறாயா? ஓவர். 125 00:10:39,515 --> 00:10:40,599 என்ன? 126 00:10:41,433 --> 00:10:43,434 நீ பேசி முடிந்ததும், "ஓவர்" என்று சொல்ல வேண்டும், 127 00:10:43,435 --> 00:10:45,604 அப்போதுதான் நீ பேசி முடித்துவிட்டாய் என்று தெரியும். ஓவர். 128 00:10:46,688 --> 00:10:49,900 நான் பேசி முடித்தால் மட்டும் போதாதா? 129 00:10:55,030 --> 00:10:56,197 ஹேய். என்ன? 130 00:10:56,198 --> 00:10:57,281 ஹாய். 131 00:10:57,282 --> 00:10:59,993 விருந்தினர்கள் வரத் தொடங்கிவிட்டார்கள். வேலை எப்படி போகிறது? 132 00:11:00,577 --> 00:11:02,161 இதுவரை, மிகவும் நன்றாக. இரண்டை அகற்றிவிட்டேன். 133 00:11:02,162 --> 00:11:04,790 ஏழாம் நம்பர் வீட்டுக்கு வெளியே இருக்கிறேன். 134 00:11:05,290 --> 00:11:07,167 - சரி. ஹாய். - நீ நலமா? 135 00:11:09,169 --> 00:11:10,170 ஆம். 136 00:11:10,754 --> 00:11:12,797 இந்த மொத்த விஷயமும் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி 137 00:11:12,798 --> 00:11:15,843 யோசிக்க நான் நேரம் எடுத்துக்கொண்டதாக எனக்குத் தோன்றவில்லை. 138 00:11:17,886 --> 00:11:19,304 அதிகப்படியாக இருக்கிறது. 139 00:11:20,430 --> 00:11:22,182 எனக்குப் புரிகிறது. 140 00:11:23,058 --> 00:11:24,225 அன்புள்ள வாண்டா, நாங்கள் உனக்காக காத்திருக்கிறோம்! 141 00:11:24,226 --> 00:11:25,476 தினமும் உன்னைப் பற்றி நினைக்கிறோம். 142 00:11:25,477 --> 00:11:27,604 - நீ அதை தனியாக அனுபவிப்பதற்கு வருந்துகிறேன். - ஆம். 143 00:11:30,649 --> 00:11:32,441 இது வழியனுப்புவது போல தோன்றுகிறது. 144 00:11:32,442 --> 00:11:35,695 அன்பே, நீ அப்படி யோசிக்கக் கூடாது. நாம் பின்வாங்கப் போவதில்லை. 145 00:11:35,696 --> 00:11:37,780 ஆனால் இது போன்ற இன்னொரு வாய்ப்பு நமக்கு கிடைக்காமல் போகலாம். 146 00:11:37,781 --> 00:11:39,615 ஆம். ஆம், நீ சொல்வது சரிதான். 147 00:11:39,616 --> 00:11:40,701 முட்டாள் போல பேசுகிறேன். 148 00:11:41,952 --> 00:11:44,037 நீ என்னோடு இங்கே இருந்திருக்கலாம். 149 00:11:45,372 --> 00:11:46,914 முல்லட்களின் வீட்டில் நடமாட்டம் தெரிகிறது. 150 00:11:46,915 --> 00:11:49,125 திரும்பச் சொல்கிறேன், முல்லட்களின் வீட்டில் நடமாட்டம் தெரிகிறது. 151 00:11:49,126 --> 00:11:50,293 கிளம்புங்கள். 152 00:11:50,294 --> 00:11:52,587 அன்பே, நான் போக வேண்டும். அதை உன்னால் செய்ய முடியும். சரியா? 153 00:11:52,588 --> 00:11:54,881 - ஆம். எனக்கு ஒன்றுமில்லை. - ஓவர். 154 00:11:54,882 --> 00:11:56,383 சரி, வாழ்த்துகள்... 155 00:12:05,142 --> 00:12:06,560 {\an8}இப்போதுதான் வந்தோம், நாம்... 156 00:12:17,946 --> 00:12:19,031 வரலாம். 157 00:12:21,575 --> 00:12:23,285 வரலாம். 158 00:12:37,883 --> 00:12:39,176 நிறுத்து. 159 00:12:47,893 --> 00:12:49,435 இந்த பெட்டிகளை நாங்கள் இறக்கிவைக்க வேண்டுமா, முதலாளி? 160 00:12:49,436 --> 00:12:50,979 ஆம், இறக்கி வையுங்கள். 161 00:12:51,522 --> 00:12:53,273 சரி. இறக்குங்கள்! 162 00:12:55,901 --> 00:12:59,154 ஹாய், நான் கிறிஸ். பீப் ஒலிக்குப் பிறகு செய்தியை பதிவிடவும். 163 00:12:59,988 --> 00:13:03,407 ஹேய், கிறிஸ். நீ என்னிடம் பேச வேண்டும். 164 00:13:03,408 --> 00:13:05,035 நான் பயந்துகொண்டிருக்கிறேன். 165 00:13:05,536 --> 00:13:07,954 எனக்கு வேலை கொடுப்பவர்களைப் பற்றி உனக்குப் புரியவில்லை. 166 00:13:07,955 --> 00:13:09,873 அவள் உயிருடன் இருப்பது அவர்களுக்குத் தெரிந்தால்... 167 00:13:22,511 --> 00:13:23,511 ஹலோ? 168 00:13:23,512 --> 00:13:24,762 ஹேய், நான் லூகாஸ். 169 00:13:24,763 --> 00:13:26,430 கேளுங்கள், ஒரு விஷயத்தைப் பற்றி பேச வேண்டும். 170 00:13:26,431 --> 00:13:28,391 ஆம், நானும் உன்னிடம் பேச வேண்டும். 171 00:13:28,392 --> 00:13:31,520 ஆனால் நாம் ஃபோனில் பேச முடியாது. உன்னை உன் வீட்டில் சந்திக்கிறேன். 172 00:13:55,252 --> 00:13:56,086 வாண்டா கிளாட்? 173 00:13:57,254 --> 00:13:58,713 யார் நீங்கள்? 174 00:13:58,714 --> 00:14:00,382 காவல் ஆய்வாளர் ஷெல்லன்பெர்க். 175 00:14:01,300 --> 00:14:02,426 உங்கள் பேட்ஜை பார்க்கலாமா? 176 00:14:03,302 --> 00:14:04,386 கண்டிப்பாக. 177 00:14:10,726 --> 00:14:11,560 சரி. 178 00:14:17,274 --> 00:14:19,817 சரி, நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும், சரியா? 179 00:14:19,818 --> 00:14:22,069 என்னை சிலர் தேடுகிறார்கள், மிகவும் ஆபத்தானவர்கள். 180 00:14:22,070 --> 00:14:23,864 கிங் எனப்படும் ஒருவனைப் பற்றிய தகவல் என்னிடம் இருக்கிறது. 181 00:14:24,865 --> 00:14:25,865 - கிங்கா? - ஆம். 182 00:14:25,866 --> 00:14:29,327 ஆம், அவன் இரகசிய வனவிலங்கு கடத்தல் கும்பலையோ எதையோ நடத்துகிறான் என்று நினைக்கிறேன். 183 00:14:29,328 --> 00:14:32,038 எப்படியோ, லென்கா நெம்கோவா என்ற ஒரு பத்திரிகையாளர் இருந்தார், 184 00:14:32,039 --> 00:14:34,665 அவர் தன் சேனலில் அவனை அம்பலப்படுத்த இருந்தார், 185 00:14:34,666 --> 00:14:38,212 அதனால் லூகாஸ் நோவாக் என்ற ஒருவனால் கொல்லப்பட்டார். 186 00:14:40,088 --> 00:14:41,464 நீங்கள் இதை எழுதிக்கொள்ள வேண்டுமா? 187 00:14:41,465 --> 00:14:43,174 ஞாபகம் வைத்துக்கொள்வேன். தொடர்ந்து சொல். 188 00:14:43,175 --> 00:14:46,135 சரி, ப்ரயர் என்ற பெண்ணுக்காக லூகாஸ் வேலை செய்கிறான். 189 00:14:46,136 --> 00:14:47,970 அவள் கபிடனை நடத்துகிறாள். 190 00:14:47,971 --> 00:14:50,431 எப்படியோ, நான் கொலையைப் பார்த்தேன். 191 00:14:50,432 --> 00:14:52,225 அதனால், அவர்கள் என்னையும் கொல்லப் பார்க்கிறார்கள். 192 00:14:52,226 --> 00:14:56,312 ஆனால் அதைச் செய்ய வேண்டியவன் மிகவும் கனிவானவனாக மாறிவிட்டான். 193 00:14:56,313 --> 00:14:58,524 அவன் என்னை அவனுடைய பாட்டியின் பேஸ்மென்டில் ஒளித்துவைத்திருந்தான். 194 00:14:59,358 --> 00:15:03,737 எனவே அவன்... அவன் பிரச்சினையில் சிக்குவதை நான் விரும்பவில்லை. 195 00:15:04,655 --> 00:15:06,989 ஆனால் இப்போது, அவன் ஆபத்தில் இருக்கிறான், நான் ஆபத்தில் இருக்கிறேன், 196 00:15:06,990 --> 00:15:08,241 அதோடு என் குடும்பமும் ஆபத்தில் இருக்கிறது. 197 00:15:08,242 --> 00:15:11,537 - எனவே கிங்கை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும். - ஆஹா. 198 00:15:12,287 --> 00:15:14,498 நீ நிஜமாகவே நிறைய கண்டுபிடித்திருக்கிறாய்தானே? 199 00:15:17,292 --> 00:15:20,546 ஆம். எனவே, திட்டம் என்ன? 200 00:15:22,506 --> 00:15:24,258 முதலில் உன்னை பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டுபோக வேண்டும். 201 00:15:25,467 --> 00:15:27,928 பிறகு என் மேலதிகாரியை அழைக்கிறேன். என்ன செய்வது என்று அவருக்குத் தெரியும். 202 00:15:30,013 --> 00:15:32,473 - எல்லா பிரச்சினையும் தீர்ந்துவிடும். - சரி. 203 00:15:32,474 --> 00:15:34,017 - ஆம். - எல்லா பிரச்சினையும் தீர்ந்துவிடும். 204 00:15:49,867 --> 00:15:51,742 சரி, இன்னொன்றை அகற்றிவிட்டேன். அடுத்த ஒன்றுக்குப் போகிறேன். ஓவர். 205 00:15:51,743 --> 00:15:52,660 சிக்னல் இல்லை 206 00:15:52,661 --> 00:15:53,745 சரி, புரிந்தது. 207 00:15:57,875 --> 00:15:59,167 உனக்குப் புரியாது. 208 00:15:59,168 --> 00:16:01,294 பார், இதைப் பற்றி வேறொரு நாள் சொல்கிறேன், ஆனால் இப்போது முடியாது. 209 00:16:01,295 --> 00:16:03,921 எனக்குக் கவலையில்லை. நான் கிளம்புகிறேன். 210 00:16:03,922 --> 00:16:06,757 - இந்த பிரச்சினைகளால் சோர்ந்துவிட்டேன். - சாரா, எங்கே போகிறாய்? 211 00:16:06,758 --> 00:16:10,720 நீ இப்போது அதை நிஜமாகவே செய்கிறாயா? முதலில் அதைப் பற்றி பேசுவோம். 212 00:16:10,721 --> 00:16:13,015 நான் பேசியது போதும். 213 00:16:13,640 --> 00:16:16,058 நான் என்ன மாதிரியான அழுத்தத்தில் இருக்கிறேன் என்பது உனக்குப் புரியவில்லை. 214 00:16:16,059 --> 00:16:19,645 அழுத்தமா? எதனால்? சாக்கர் ஆடுவதாலா? கேங்க்ஸ்டராக இருப்பதினாலா? 215 00:16:19,646 --> 00:16:21,356 பெரியவன் போல நடந்துகொள். 216 00:16:21,857 --> 00:16:24,108 சாரா. சாரா! 217 00:16:24,109 --> 00:16:25,194 அடச்சே. 218 00:16:26,069 --> 00:16:27,904 - அனுபவி, முட்டாளே! - நல்லது, போ. 219 00:16:27,905 --> 00:16:29,406 கிளம்பு! 220 00:17:20,415 --> 00:17:21,415 நீங்கள் நலமா? 221 00:17:22,917 --> 00:17:23,919 நன்றாக இருக்கிறேன். 222 00:17:25,170 --> 00:17:27,172 அவை மிகவும் விலையுயர்ந்தவை. 223 00:17:27,881 --> 00:17:30,801 நான் வருந்துகிறேன். என் கணவர் கொஞ்சம் பெரிதுபடுத்தலாம். 224 00:17:32,344 --> 00:17:34,096 அது மிகவும் அழகாக இருக்கிறது. 225 00:17:51,530 --> 00:17:56,034 இடைநிலை நவீன வகுப்பு, ஸ்பார்க்கிள்ஸ், நன்றி! 226 00:17:58,203 --> 00:18:00,372 போகலாம். சீக்கிரம். 227 00:18:00,998 --> 00:18:02,040 யுனாஸ்! 228 00:18:03,417 --> 00:18:06,670 - நம்ப முடியாதது! - இப்போது என் அருமையான மனைவியை மேடைக்கு 229 00:18:08,046 --> 00:18:09,798 அழைக்க விரும்புகிறேன். 230 00:18:17,514 --> 00:18:18,348 நன்றி. 231 00:18:31,945 --> 00:18:33,030 நன்றி. 232 00:18:33,864 --> 00:18:37,951 முதலில், இந்த மிக முக்கியமான விஷயத்தை ஆதரிக்க 233 00:18:38,702 --> 00:18:43,080 நீங்கள் எல்லோரும் இன்று வந்ததற்கு நாங்கள் எல்லோரும் 234 00:18:43,081 --> 00:18:46,877 எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். 235 00:18:47,669 --> 00:18:52,382 கொஞ்ச நேரத்தில், எனக்குத் தெரிந்த துணிச்சலான பெண் ஒருவரிடம் மைக்கை ஒப்படைப்பேன். 236 00:18:53,050 --> 00:18:55,636 ஆனால் முதலில் நான் கொஞ்சம் பேச விரும்புகிறேன். 237 00:18:59,473 --> 00:19:02,267 கிளாட் குடும்பத்திற்கு என்ன நடந்ததோ 238 00:19:02,935 --> 00:19:05,853 அது இந்த ஊர் மக்களின் மனதை உலுக்கிவிட்டது. 239 00:19:05,854 --> 00:19:08,481 இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவான என்னையே, 240 00:19:08,482 --> 00:19:13,277 வாண்டா போன்ற ஒரு இளம் பெண் ஒரு தடயமும் இல்லாமல் காணாமல் போகலாம் என்பது 241 00:19:13,278 --> 00:19:16,156 மிகவும் தொந்தரவு செய்துவிட்டது. 242 00:19:16,657 --> 00:19:19,075 குறிப்பாக எனக்கு கவலையை ஏற்படுத்தியது என்னவென்றால், 243 00:19:19,076 --> 00:19:24,914 இதற்கு பொறுப்பானவர்கள் இந்த குடும்பத்தையும், நம் சமூகத்தையும் எப்படி ஏமாற்றினார்கள் என்பதுதான். 244 00:19:24,915 --> 00:19:27,458 அதனால்தான் நான் இந்த முடிவை எடுத்தேன், 245 00:19:27,459 --> 00:19:29,460 வாண்டாவின் நினைவாக, 246 00:19:29,461 --> 00:19:35,300 வரவிருக்கும் தேர்தலில் சந்தர்ஷெய்ம் மேயர் பதவிக்கு போட்டியிடப் போகிறேன். 247 00:19:36,051 --> 00:19:37,052 சபாஷ்! 248 00:19:40,222 --> 00:19:42,765 - இந்த சமூகம் ஒரு காலத்தில் இருந்த நிலைக்கே... - அது உனக்குத் தெரியுமா? 249 00:19:42,766 --> 00:19:45,184 - ...இந்த ஊரை மாற்றுவதாக உறுதியளிக்கிறேன். - இல்லை. 250 00:19:45,185 --> 00:19:49,021 நீங்கள் உங்கள் அண்டை வீட்டாரை நம்பக்கூடிய ஒரு சமூகம், 251 00:19:49,022 --> 00:19:51,066 அதில் மக்கள் ஒருவரையொருவர் கவனித்துக்கொள்வார்கள். 252 00:19:51,567 --> 00:19:56,654 நம் குழந்தைகள் தெருக்களில் பாதுகாப்பாக விளையாடக்கூடிய ஒரு சமூகம், 253 00:19:56,655 --> 00:19:59,031 அதில் குடும்பங்களுக்கு குற்றம் மற்றும் நிச்சயமற்ற தன்மையால் 254 00:19:59,032 --> 00:20:02,660 பிளவுபடுவோமோ என்று பயப்பட வேண்டியிருக்காது. 255 00:20:02,661 --> 00:20:05,788 அப்படிப்பட்ட சந்தர்ஷெய்மில்தான் நான் வாழ விரும்புகிறேன். 256 00:20:05,789 --> 00:20:09,084 நாம் எல்லோரும் நினைத்து பெருமைப்படக்கூடிய ஒரு சந்தர்ஷெய்ம். 257 00:20:15,257 --> 00:20:16,633 மிக்க நன்றி. 258 00:20:17,217 --> 00:20:20,344 ஆனால், இன்றைய நாள் என்னைப் பற்றியது இல்லை. 259 00:20:20,345 --> 00:20:25,141 நாம் எல்லோரும் எதற்காக இங்கே இருக்கிறோம் என்பதை நினைவூட்டுவதற்காக, 260 00:20:25,142 --> 00:20:27,268 நான் அன்பான தோழி என்று அழைப்பதில் 261 00:20:27,269 --> 00:20:31,940 பெருமைகொள்ளும் ஒரு பெண்ணை தயவுசெய்து மேடைக்கு வரவேற்கிறேன்: கார்லட்டா கிளாட். 262 00:20:43,118 --> 00:20:44,119 சரி. 263 00:20:47,873 --> 00:20:48,874 ஹலோ. 264 00:20:52,169 --> 00:20:53,504 இங்கு வந்ததற்கு எல்லோருக்கும் நன்றி. 265 00:20:54,379 --> 00:20:59,634 அதோடு மிக்க நன்றி... கடரினா... யுனாஸ், 266 00:20:59,635 --> 00:21:02,679 அலெக்ஸ், லூஸி... 267 00:21:03,514 --> 00:21:05,349 இதையெல்லாம் ஏற்பாடு செய்ததற்கு. 268 00:21:06,725 --> 00:21:09,186 இது நிஜமாகவே மிகவும் உணர்வுப்பூர்வமானது. 269 00:21:12,606 --> 00:21:15,234 என்னை டிவியில் பார்த்த எல்லோருக்கும் தெரியும் 270 00:21:16,068 --> 00:21:18,487 எனக்கு மக்கள் முன்பு நன்றாக பேசத் தெரியாது என்று. 271 00:21:19,738 --> 00:21:22,699 அதனால் ஒன்றை எழுதிக் கொண்டுவந்திருக்கிறேன். 272 00:21:26,036 --> 00:21:27,037 "வாண்டா. 273 00:21:30,249 --> 00:21:32,793 இன்று நள்ளிரவோடு, என் மகள் வாண்டா... 274 00:21:34,211 --> 00:21:36,213 காணாமல் போய் 100 நாட்கள் ஆகியிருக்கும். 275 00:21:37,756 --> 00:21:41,426 இதற்குப் பிறகு, அவளை மீண்டும் உயிருடன் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் 276 00:21:42,177 --> 00:21:43,887 10% க்கும் குறைவு என்று சொல்லப்படுகிறது." 277 00:21:48,392 --> 00:21:49,934 அதுதான் பாதுகாப்பான இடமா? 278 00:21:49,935 --> 00:21:51,019 ஆம். 279 00:21:59,862 --> 00:22:00,863 வா. 280 00:22:08,370 --> 00:22:10,205 - எனக்கு வலிக்கிறது. - வா. 281 00:22:16,086 --> 00:22:18,338 - ஷெல்லன்பெர்க் வந்திருக்கிறேன். - ச்சே. 282 00:22:22,676 --> 00:22:23,677 திற! 283 00:22:38,483 --> 00:22:40,652 வாண்டா கிளாட்... உயிருடன் இருக்கிறாள். 284 00:22:42,571 --> 00:22:46,032 - இல்லை! உதவி! - உள்ளே போ. 285 00:22:46,033 --> 00:22:48,952 வேண்டாம்! என்னை விடுங்கள்! 286 00:22:51,622 --> 00:22:55,249 சரி, ஈகிள் வீடு எண் 35-க்கு போகிறேன். ஓவர். 287 00:22:55,250 --> 00:22:58,629 வீடு எண் 35... 288 00:22:59,338 --> 00:23:02,341 நீ பேசியது கேட்கவில்லை. அதை மீண்டும் சொல்கிறாயா? ஓவர். 289 00:23:06,261 --> 00:23:07,595 வாயை மூடு. அமைதியாக இரு! 290 00:23:07,596 --> 00:23:08,639 வாண்டா? 291 00:23:09,306 --> 00:23:11,390 ஸ்பேரோ, கேட்கிறதா? ஓவர். 292 00:23:11,391 --> 00:23:13,894 அவள் உயிருடன் இருக்கிறாள்! அப்பா, வாண்டா உயிருடன் இருக்கிறாள்! 293 00:23:15,229 --> 00:23:17,355 வாண்டா? ஓலே, 100% உறுதியாக அது அவள்தானா? 294 00:23:17,356 --> 00:23:19,565 இப்போது அவளைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்! லூகாஸ் நோவாக் வீட்டில் இருக்கிறாள்! 295 00:23:19,566 --> 00:23:20,900 லூகாஸ் நோவாக்? ஆனால்... 296 00:23:20,901 --> 00:23:23,569 அவள் பிரச்சினையில் இருக்கிறாள், அப்பா! வினோதமாக ஏதோ நடக்கிறது. 297 00:23:23,570 --> 00:23:25,196 அந்த போலீஸ்காரனும் அங்கே இருக்கிறான். 298 00:23:25,197 --> 00:23:26,781 பொறு... என்ன போலீஸ்? 299 00:23:26,782 --> 00:23:28,491 எப்பொழுதும் ரவுஷோடு இருப்பவன். 300 00:23:28,492 --> 00:23:31,286 அவன் பெயர் என்ன? ஷெல்ல-ஏதோ? 301 00:23:32,079 --> 00:23:34,121 - ஷெல்லன்பெர்க்? - ஷெல்லன்பெர்க், ஆம், அதேதான்! 302 00:23:34,122 --> 00:23:36,207 சரி, ஓலே, உடனே அங்கே வருகிறேன். வழியில் உன்னை ஏற்றிக்கொள்கிறேன். 303 00:23:36,208 --> 00:23:37,501 சீக்கிரம்! 304 00:23:38,794 --> 00:23:41,588 வாண்டா. நீ உயிருடன் இருக்கிறாய். கடவுளே. 305 00:23:46,593 --> 00:23:49,012 அதை வெளியே கொண்டு வா! அதை அங்கே வை. 306 00:23:50,597 --> 00:23:51,890 கவனமாக. 307 00:23:53,725 --> 00:23:55,936 அந்தப் பெட்டி அதற்கு அடுத்ததாக, சரியா? 308 00:24:05,571 --> 00:24:06,905 தாமதமாகிவிட்டது. நீ எங்கே இருக்கிறாய்? 309 00:24:08,740 --> 00:24:09,741 என்ன? 310 00:24:10,951 --> 00:24:11,910 வாண்டா கிளாட்டா? 311 00:24:13,745 --> 00:24:14,871 அடச்சே. 312 00:24:14,872 --> 00:24:19,710 "என் மகளை இழந்ததுதான் எனக்கு நடந்த மிக மோசமான விஷயம். 313 00:24:20,711 --> 00:24:23,172 நான் இன்னும் தினமும் காலையில் எழுந்து, 314 00:24:23,839 --> 00:24:27,509 அவள் காலை உணவைத் தேடி சமையலறைக்குள் வருவாள் என்று எதிர்பார்க்கிறேன்." 315 00:24:38,270 --> 00:24:39,897 பாருங்கள், நேர்மையாக சொல்ல வேண்டும். 316 00:24:40,731 --> 00:24:44,859 கடரினாவும் யுனாஸும் முதன்முதலில் வாண்டா விழாவுக்கான யோசனையோடு எங்களிடம் வந்தபோது, 317 00:24:44,860 --> 00:24:48,071 இது ஒரு மோசமான யோசனை என்று நினைத்தேன். 318 00:24:48,697 --> 00:24:52,909 இது விரும்பத்தகாததாகவும், செயற்கையாகவும், 319 00:24:52,910 --> 00:24:58,498 இதற்கு சம்மதித்ததற்காக வாண்டா என் மீது மிகவும் கோபப்படும் விதத்தில் இருக்கும் என்று நினைத்தேன். 320 00:25:00,751 --> 00:25:07,132 ஆனால் இப்போது, முக்கிய விஷயத்தை தவறவிட்டுவிட்டேன் என்பதை உணர்கிறேன். 321 00:25:08,300 --> 00:25:12,179 இது என்னைப் பற்றியது இல்லை. இது உங்களைப் பற்றியது. சந்தர்ஷெய்மைப் பற்றியது. 322 00:25:14,556 --> 00:25:20,019 நாம் நம் வாழ்நாள் முழுவதும் நம்முடைய சொந்த சின்ன உலகங்களில் சிக்கிக்கொண்டிருக்கிறோம். 323 00:25:20,020 --> 00:25:26,235 நான்... இதற்கெல்லாம் முன்பு, என் தெருவில் வசிப்பவர்களை கூட எனக்கு அவ்வளவாகத் தெரியாது. 324 00:25:26,777 --> 00:25:29,655 நான் இங்கே வாழ்ந்த மொத்த காலத்தையும்விட 325 00:25:30,155 --> 00:25:35,619 கடந்த மூன்று மாதங்களில் இந்த ஊரைப் பற்றி அதிகம் தெரிந்துகொண்டேன். 326 00:25:37,371 --> 00:25:41,041 இப்போது உங்கள் எல்லோரையும் பாருங்கள். நீங்கள் எல்லோரும் இங்கே இருக்கிறீர்கள். 327 00:25:42,042 --> 00:25:44,211 வாண்டாவின் தலைவிதி உங்களுக்கு முக்கியமானது என்பதால். 328 00:25:46,338 --> 00:25:47,339 அது... 329 00:25:48,423 --> 00:25:50,008 எனக்கு நம்பிக்கையை கொடுக்கிறது. 330 00:25:50,801 --> 00:25:55,055 இது போல ஏதாவது நடக்கும்போது, நீங்கள் தனிமையை உணர்வீர்கள்... 331 00:25:57,140 --> 00:25:59,017 ஆனால் நான் தனியாக இல்லை என்பதை உணர்கிறேன். 332 00:25:59,977 --> 00:26:02,478 நான் சமூகத்தின் ஒரு அங்கம். 333 00:26:02,479 --> 00:26:07,484 நாம் எல்லோரும் வித்தியாசமாக இருக்கலாம்... நம் எல்லோருக்கும் சொந்த பிரச்சினைகள் இருக்கின்றன... 334 00:26:08,819 --> 00:26:10,362 நம்முடைய சொந்த வினோத வழக்கங்களும், இரகசியங்களும். 335 00:26:11,822 --> 00:26:14,700 ஆனால் நாமும் ஒருவருக்கொருவர் இருக்கிறோம். 336 00:26:16,076 --> 00:26:17,077 ஒருவேளை நாம்... 337 00:26:20,122 --> 00:26:21,456 மன்னித்துவிடுங்கள். 338 00:26:22,833 --> 00:26:24,293 டீடோ 339 00:26:25,335 --> 00:26:26,336 சரி. 340 00:26:26,920 --> 00:26:30,507 நாம் எல்லோரும் ஒருவருக்காக ஒருவர் இங்கே வர முடிந்தால்... 341 00:26:32,801 --> 00:26:33,802 மன்னித்துவிடுங்கள். 342 00:26:38,724 --> 00:26:42,603 நாம் எல்லோரும் ஒருவருக்காக ஒருவர் இங்கே வர முடிந்தால், பிறகு... 343 00:26:47,566 --> 00:26:50,110 வாண்டா உயிரோடு இருக்கிறாள் 344 00:26:54,239 --> 00:26:55,240 இப்போது... 345 00:26:57,576 --> 00:27:00,745 வாண்டாவுக்கான புகழுரைக்காக: என் சகோதரர் ருடிகர். 346 00:27:00,746 --> 00:27:02,413 ருடிகர், இங்கே வா! 347 00:27:02,414 --> 00:27:03,832 ருடிகரை கைதட்டலோடு வரவேற்போம். 348 00:27:04,583 --> 00:27:05,709 கைதட்டுங்கள். 349 00:27:12,132 --> 00:27:15,469 ஆபரேஷன் ஸ்பிரிங் கிளீனிங், அவரசநிலை. 350 00:27:17,012 --> 00:27:19,181 சரி, என் சகோதரி கார்லட்டாவுக்கு ஒரு பெரிய கைத்தட்டல்! 351 00:27:19,681 --> 00:27:21,099 அருமையாக பேசினாய், கார்லட்டா! 352 00:27:25,062 --> 00:27:26,897 கொஞ்சம் சமாளியுங்கள், என் கிடாரை எடுத்து வருகிறேன். 353 00:27:29,024 --> 00:27:30,943 சபாஷ்! 354 00:27:33,695 --> 00:27:35,072 சந்தர்ஷெய்ம் மக்களே, நன்றாக இருக்கிறீர்களா? 355 00:28:10,232 --> 00:28:12,233 கடவுளே. வாண்டா கிளாட்டா? 356 00:28:12,234 --> 00:28:14,319 - வாண்டா கிளாட், ஆம். - அடச்சே. 357 00:28:15,153 --> 00:28:17,071 அவளைக் கொண்டுவா. உன்னிடம் முகவரி இருக்கிறதா? 358 00:28:17,072 --> 00:28:19,366 - இல்லை, எங்கே? - லாண்டர் வெக். 359 00:28:20,284 --> 00:28:22,577 லாண்டர் வெக். உங்களுக்குத் தெரியுமா? 360 00:28:22,578 --> 00:28:24,329 லாண்டர் வெக். சரி. வருகிறோம். 361 00:28:26,498 --> 00:28:28,375 அடக் கொடுமையே. 362 00:28:30,294 --> 00:28:32,254 அது வாண்டாவா? ஷெல்லன்பெர்கா? 363 00:28:36,592 --> 00:28:38,259 அப்பா! என்ன செய்கிறீர்கள்? 364 00:28:38,260 --> 00:28:39,886 என்ன? அதில் போலீஸும் ஈடுபட்டிருக்கிறது என்றாய்! 365 00:28:39,887 --> 00:28:41,513 அவர்களில் "ஒருவர்" என்றேன். 366 00:28:43,599 --> 00:28:46,143 அதாவது, நியாயமாகச் சொல்வதென்றால், இவள் அதில் ஈடுபட்டிருக்கிறாளா என்று தெரியாது. 367 00:28:47,144 --> 00:28:48,729 வாண்டா எங்கே? 368 00:28:49,646 --> 00:28:51,064 அவள் அங்கே இருந்தாள்! 369 00:28:52,649 --> 00:28:54,734 அவர்கள் அவளை இந்த இடத்திற்கு கூட்டிப்போவதாகச் சொன்னதைக் கேட்டேன். 370 00:28:54,735 --> 00:28:56,945 லாண்டர் வெக். சரி, போகலாம். வாருங்கள். 371 00:28:58,322 --> 00:28:59,907 பொறுங்கள்! இவரை என்ன செய்வது? 372 00:29:00,782 --> 00:29:03,409 தெரியவில்லை. அதைப் பற்றி யோசிப்போம். இப்போதே, உன் அக்காவை காப்பாற்ற வேண்டும். 373 00:29:03,410 --> 00:29:04,786 வா! சீக்கிரம்! 374 00:29:05,621 --> 00:29:07,538 - கார்லட்டா? - டீடோ, என்ன நடக்கிறது? 375 00:29:07,539 --> 00:29:09,207 அவள் உயிரோடு இருக்கிறாள், கார்லட்டா, உயிரோடு இருக்கிறாள்! 376 00:29:09,208 --> 00:29:11,584 லூகாஸ் நோவாக் அவளைப் பிடித்து வைத்திருக்கிறான். ஷெல்லன்பெர்கும்! 377 00:29:11,585 --> 00:29:12,668 ஷெல்லன்பெர்கா? 378 00:29:12,669 --> 00:29:14,587 வழியில் உன்னைக் கூட்டிக்கொள்கிறோம்! 379 00:29:14,588 --> 00:29:16,130 டீடோ, உறுதியாகச் சொல்கிறாயா... 380 00:29:16,131 --> 00:29:18,716 அவள்தான்! கார்லட்டா, அவள்தான். 381 00:29:18,717 --> 00:29:21,094 நாம் சாதித்துவிட்டோம். அவள் உயிருடன் இருக்கிறாள். 382 00:29:21,762 --> 00:29:22,971 உன்னை மிகவும் நேசிக்கிறேன். 383 00:29:23,472 --> 00:29:25,766 வெளியே தயாராக இரு, சரியா? சீக்கிரம் சந்திப்போம். 384 00:29:26,725 --> 00:29:29,060 சரி. ஸ்டார்ட் ஆகிவிடு. 385 00:29:29,061 --> 00:29:30,395 ஸ்டார்ட் ஆகிவிடு. 386 00:29:47,162 --> 00:29:49,080 உன் உறவினர் அவளை தீர்த்துவிட்டான் என்று நினைத்தேன். 387 00:29:49,081 --> 00:29:50,456 ஆம், அப்படித்தான் அவன் சொன்னான், 388 00:29:50,457 --> 00:29:53,043 ஆனால் அவன் அவளை என் பாட்டியின் பேஸ்மென்டில் ஒளித்துவைத்திருந்தான். 389 00:29:53,627 --> 00:29:55,336 அந்த முட்டாளுக்கு காதலி இல்லை என்பது எனக்குத் தெரியும். 390 00:29:55,337 --> 00:29:57,463 - இதைப் பற்றி உனக்குத் தெரியுமா? - எனக்கு ஏன் அதைப் பற்றி தெரிய வேண்டும்? 391 00:29:57,464 --> 00:29:59,508 ஏனென்றால் அது போன்ற விஷயங்களைத் தெரிந்துகொள்வதுதான் உன் வேலை! 392 00:30:01,176 --> 00:30:02,009 கிங் 393 00:30:02,010 --> 00:30:03,095 ச்சே. 394 00:30:04,721 --> 00:30:06,597 - அதை எடு. பேசு. - நான் என்ன சொல்வது? 395 00:30:06,598 --> 00:30:07,933 அது உன் பிரச்சினை. 396 00:30:08,809 --> 00:30:10,811 - நீங்கள் பேச வேண்டும். - யாரும் உன்னிடம் கேட்கவில்லை. 397 00:30:13,856 --> 00:30:15,232 எனக்கு இது நிஜமாகவே தேவையில்லை. 398 00:30:19,361 --> 00:30:20,529 ஹாய், முதலாளி. 399 00:30:21,405 --> 00:30:23,532 ஆம், உறுதியாக. நாளை முடிந்த அளவுக்கு சீக்கிரமாக. 400 00:30:24,533 --> 00:30:25,993 எல்லையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கலாம். 401 00:30:27,578 --> 00:30:28,704 ஆம். 402 00:30:30,038 --> 00:30:31,122 அதேதான், ஆம். 403 00:30:31,123 --> 00:30:33,165 இல்லை, அருமை. நாங்கள் அதைச் செய்துவிடுகிறோம். 404 00:30:33,166 --> 00:30:35,042 ஆம், இங்கே ஒரு சின்ன பிரச்சினை, 405 00:30:35,043 --> 00:30:37,171 ஆனால் நாங்கள் அதை சமாளிக்கிறோம். ஆம். 406 00:30:40,716 --> 00:30:43,760 வாண்டா கிளாட்டா? கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆம், நாங்கள் அதை கவனித்துக்கொள்கிறோம். 407 00:30:45,596 --> 00:30:47,305 இல்லை. அவள்... அவள் இங்கேதான் இருக்கிறாள், ஆம். 408 00:30:47,306 --> 00:30:49,766 அவள் ஷெல்லன்பெர்கின் காரில் அடைத்துவைக்கப்பட்டிருக்கிறாள்... 409 00:30:52,769 --> 00:30:53,770 வாண்டா எங்கே? 410 00:30:55,314 --> 00:30:56,315 அடச்சே! 411 00:31:02,988 --> 00:31:04,280 என்ன நடக்கிறது? 412 00:31:04,281 --> 00:31:06,490 அந்த வீடு... கிங்குக்குச் சொந்தமானது! 413 00:31:06,491 --> 00:31:08,034 - கிங்கா? - ஆம். 414 00:31:08,035 --> 00:31:10,203 போலீஸும் அதில் ஈடுபட்டிருப்பது தெரியுமா? 415 00:31:10,204 --> 00:31:11,288 தெரியாது! 416 00:31:14,750 --> 00:31:15,834 வா! ஏறு! 417 00:31:17,294 --> 00:31:18,794 போ! 418 00:31:18,795 --> 00:31:21,130 பொறு! ஓலேவை என்ன செய்வது? 419 00:31:21,131 --> 00:31:22,465 என்னை என்ன செய்வதா? 420 00:31:22,466 --> 00:31:24,342 என்னால் என்னுடைய இரண்டு பிள்ளைகளைப் பற்றியும் கவலைப்பட முடியாது. 421 00:31:24,343 --> 00:31:27,178 - அம்மா, நான் குழந்தை இல்லை. - எனக்கு நீ அப்படித்தான். 422 00:31:27,179 --> 00:31:28,888 மன்னித்துவிடு, செல்லம், ஆனால் என்னால் ரிஸ்க் எடுக்க முடியாது. 423 00:31:28,889 --> 00:31:31,015 - நீ இங்கே காத்திருக்க வேண்டும். - அம்மா! 424 00:31:31,016 --> 00:31:33,267 - அப்பா? - மன்னித்துவிடு, உன் அம்மா சொல்வது சரிதான். 425 00:31:33,268 --> 00:31:35,103 உனக்கு தகவல் தெரிவித்துக்கொண்டே இருப்போம், சரியா? 426 00:31:38,315 --> 00:31:39,815 உன்னை நேசிக்கிறேன். இங்கே வா. 427 00:31:39,816 --> 00:31:41,360 - நானும்தான். - சரி, நேரமாகிவிட்டது. 428 00:31:42,110 --> 00:31:43,445 போகலாம். 429 00:31:44,613 --> 00:31:45,614 கவன... 430 00:31:46,406 --> 00:31:47,407 கவனமாக இருங்கள். 431 00:32:01,421 --> 00:32:02,422 இப்போது என்ன செய்வது? 432 00:32:07,010 --> 00:32:08,178 ஒருவேளை நாம் பிரிந்து போகலாம். 433 00:32:08,929 --> 00:32:12,140 அதாவது, அவரவர் பிரச்சினையை அவரவர்தான் சமாளிக்க வேண்டும், இல்லையா? 434 00:32:13,100 --> 00:32:15,768 நிஜமாகவா? இப்போது அதைப் பற்றி பேச வேண்டுமா? 435 00:32:15,769 --> 00:32:17,604 ஆம். ஆம், நிஜமாகத்தான். 436 00:32:25,320 --> 00:32:27,864 "என்னை மன்னித்துவிடு"? அவ்வளவுதானா? 437 00:32:27,865 --> 00:32:30,032 எல்லாவற்றிற்கும் பிறகா? 438 00:32:30,033 --> 00:32:32,827 என்ன செய்வேன் என்று எதிர்பார்த்தாய்? "தப்பிக்கப்போகிறேன்" என்று பார்ட்டி வைப்பேன் என்றா? 439 00:32:32,828 --> 00:32:35,080 நம்முடைய எல்லா நல்ல நிகழ்வுகளையும் மாண்டேஜ் வீடியோவாக போட்டுக்காட்டவா? 440 00:32:35,914 --> 00:32:39,001 - நீ என்னை ஏமாற்றிவிட்டாய். - நீ என்னைக் கடத்தினாய். 441 00:32:41,753 --> 00:32:44,380 அப்படியென்றால், அதெல்லாம் வெறும் நடிப்பா? 442 00:32:44,381 --> 00:32:46,675 இல்லை, நிச்சயமாக இல்லை. 443 00:32:51,763 --> 00:32:52,890 நீ என்னை மயக்கியிருக்கிறாய். 444 00:32:53,765 --> 00:32:54,850 ஆம். 445 00:32:56,268 --> 00:32:57,268 அட. 446 00:32:57,269 --> 00:32:59,771 "அட" என்றால்? அது எனக்கு முக்கிய விஷயம். 447 00:33:00,522 --> 00:33:01,982 நீ சரியாக என்ன சொல்ல வருகிறாய்? 448 00:33:03,650 --> 00:33:04,651 சும்மா சொல்கிறேன். 449 00:33:07,613 --> 00:33:08,614 ஹேய். 450 00:33:10,240 --> 00:33:12,451 இந்தக் காதலர்கள் சண்டையில் குறுக்கிடுவதற்கு வருந்துகிறேன். 451 00:33:26,048 --> 00:33:27,049 அச்சோ. 452 00:33:31,720 --> 00:33:32,721 அச்சோ. 453 00:33:46,985 --> 00:33:51,365 நீங்கள் பெரும் பிரச்சினையில் சிக்கிவிட்டீர்கள். 454 00:33:54,409 --> 00:33:55,576 வாண்டா கிளாட். 455 00:33:55,577 --> 00:33:59,498 நீ என்ன பிரச்சினையை ஏற்படுத்திவிட்டாய் தெரியுமா? 456 00:34:00,123 --> 00:34:01,124 எழுந்திருங்கள். 457 00:34:03,460 --> 00:34:06,671 - தயவுசெய்து, அது அவசியமில்லை... - வாயை மூடு! 458 00:34:06,672 --> 00:34:09,299 சரி. இதை முடிப்போம். 459 00:34:10,926 --> 00:34:12,261 வாண்டா, என்னை மன்னித்துவிடு. 460 00:34:14,763 --> 00:34:15,764 அடக் கடவுளே. 461 00:34:16,306 --> 00:34:17,683 அது என்ன? 462 00:34:18,976 --> 00:34:20,767 நிஜமாகத்தான் சொல்கிறேன்! 463 00:34:20,768 --> 00:34:23,438 நான் ஏமாறும் அளவுக்கு முட்டாள் என்று நீ நினைக்காதே... 464 00:34:30,487 --> 00:34:32,447 இல்லை, நீ விளையாடுகிறாய்... 465 00:34:43,792 --> 00:34:46,961 எல்லோரும் டீடோ கிளாட்டைப் பின்தொடருங்கள், 466 00:34:46,962 --> 00:34:48,212 அவர் வேனில் பயணம் செய்கிறார். 467 00:34:48,213 --> 00:34:50,548 காணாமல் போன நபர், வாண்டா கிளாட்டும் சம்பவ இடத்தில் இருக்கிறாள். 468 00:34:50,549 --> 00:34:52,134 உதவிப்படையை அவசரமாக கோருகிறேன். 469 00:35:17,951 --> 00:35:19,243 நன்றி, யுனாஸ். 470 00:35:19,244 --> 00:35:20,620 கடவுளே. 471 00:35:20,621 --> 00:35:22,873 இந்தப் பாட்டு என் மருமகள் வாண்டாவுக்காக. 472 00:35:36,720 --> 00:35:38,597 உனக்காக நான் பாடுகிறேன் 473 00:35:39,765 --> 00:35:41,850 உனக்காக நான் கத்துகிறேன் 474 00:35:42,851 --> 00:35:47,981 உனக்காக நான் கொதிக்கிறேன், உனக்காக நான் உருகுகிறேன் 475 00:35:49,066 --> 00:35:50,817 என்னை நானே மறக்கிறேன் 476 00:35:52,236 --> 00:35:53,946 என்னை நானே நினைவுகூருகிறேன் 477 00:35:55,239 --> 00:35:56,532 உனக்காக 478 00:35:57,491 --> 00:35:59,825 எப்போதும் உனக்காக 479 00:35:59,826 --> 00:36:00,952 எந்த பிரச்சினையும் இல்லையே? 480 00:36:00,953 --> 00:36:02,788 என்றென்றும் உனக்காக 481 00:36:08,085 --> 00:36:09,753 உனக்காக சிரிக்கிறேன் 482 00:36:11,463 --> 00:36:13,298 உனக்காக அழுகிறேன் 483 00:36:14,424 --> 00:36:19,388 நான் மழையாகிறேன், உனக்காக பிரகாசிக்கிறேன் 484 00:36:22,349 --> 00:36:25,477 உனக்காக எல்லாவற்றையும் செய்கிறேன் 485 00:36:27,062 --> 00:36:28,313 உனக்காக 486 00:36:29,439 --> 00:36:31,149 எப்போதும் உனக்காக 487 00:36:32,401 --> 00:36:34,236 என்றென்றும் உனக்காக 488 00:36:39,700 --> 00:36:40,826 உனக்காக 489 00:36:41,952 --> 00:36:43,745 எப்போதும் உனக்காக 490 00:36:45,956 --> 00:36:47,791 நீ என்ன சொன்னாலும் பரவாயில்லை 491 00:36:48,834 --> 00:36:50,794 நீ எங்கே இருந்தாலும் பரவாயில்லை 492 00:36:52,713 --> 00:36:55,339 உனக்காக நான் அடிக்கடி பொய் சொல்லியிருக்கிறேன் 493 00:36:55,340 --> 00:36:58,467 நான் வானவில்லை வளைத்திருக்கிறேன் 494 00:36:58,468 --> 00:36:59,803 உனக்காக 495 00:37:00,929 --> 00:37:02,848 {\an8}எப்போதும் உனக்காக 496 00:37:03,724 --> 00:37:05,517 என்றென்றும் உனக்காக 497 00:37:08,228 --> 00:37:09,730 நீ எங்கே இருந்தாலும் 498 00:37:40,010 --> 00:37:41,970 ஏன் உங்களுக்கு இத்தனை நாட்கள் ஆனது? 499 00:38:06,495 --> 00:38:07,912 எனவே இதோ இருக்கிறோம். 500 00:38:07,913 --> 00:38:09,289 நாங்கள் கிளாட்கள். 501 00:38:09,873 --> 00:38:12,458 நாங்கள் சாதாரணமாக இருந்தோம், அது என்னவாக இருந்தாலும். 502 00:38:12,459 --> 00:38:13,543 நாங்களும் உங்களைப் போலத்தான் இருந்தோம். 503 00:38:13,544 --> 00:38:16,629 நாங்கள் வரிகளை செலுத்தினோம், நடுத்தர விலை காரை ஓட்டினோம், 504 00:38:16,630 --> 00:38:18,966 ஞாயிற்றுக்கிழமை காபியையும் கேக்கையும் விரும்பினோம். 505 00:38:19,800 --> 00:38:21,009 பிறகு விஷயங்கள் 506 00:38:21,635 --> 00:38:22,803 மாறின... 507 00:38:23,971 --> 00:38:25,347 சிக்கலாக. 508 00:38:27,724 --> 00:38:29,851 நீ தெரிந்துகொள்ள வேண்டும், டீடோ, இது தனிப்பட்ட பகை இல்லை. 509 00:38:29,852 --> 00:38:31,395 நீ எப்போதும் மதிப்புமிக்க வாடிக்கையாளராக இருந்திருக்கிறாய். 510 00:38:36,567 --> 00:38:37,901 இவர்களைப் பார்த்துக்கொள். 511 00:38:38,735 --> 00:38:41,863 நான் கிங்கை அழைத்து இந்த முழு குழப்பத்தை பற்றியும் அவளிடம் சொல்கிறேன். 512 00:38:41,864 --> 00:38:43,448 அவள் கோபப்படுவாள். 513 00:38:45,659 --> 00:38:47,368 ஹேய், முதலாளி, மீண்டும் நான்தான். 514 00:38:47,369 --> 00:38:51,664 - ஆம். ம், நிலவரத்தை சொல்ல நினைத்தேன். - கிங் ஒரு பெண்ணா? 515 00:38:51,665 --> 00:38:53,374 - நாங்கள் கையாளுகிறோம்... - என்ன? யார்? 516 00:38:53,375 --> 00:38:54,834 ஒரு பெண்ணை உன்னால் 517 00:38:54,835 --> 00:38:57,421 நெருங்கவே முடியாது என்பது எனக்குத் தெரிந்திருக்க வேண்டும், கோழை! 518 00:39:01,091 --> 00:39:02,634 நீதான் அந்த அடங்காப்பிடாரியா, ம்? 519 00:39:03,927 --> 00:39:05,887 ஒருவேளை உன்னை என் பேஸ்மென்டுக்கு கூட்டிப் போகட்டுமா? 520 00:39:05,888 --> 00:39:07,471 அவளை விடு! 521 00:39:07,472 --> 00:39:09,349 ஹேய். பொறாமைப்படாதே. 522 00:39:10,225 --> 00:39:11,518 நீயும் வரலாம். 523 00:39:12,019 --> 00:39:13,437 ஒரே கல்லில் இரண்டு மாங்காய். 524 00:39:17,107 --> 00:39:18,525 பொறுமையாக இரு, அப்பா. 525 00:39:22,362 --> 00:39:23,863 - லூகாஸ்? - ஆம், என்ன? 526 00:39:23,864 --> 00:39:26,324 நான் கொஞ்ச நேரம் வெளியே போக வேண்டும். முதலாளி கூப்பிடுகிறாள். 527 00:39:26,325 --> 00:39:27,450 சரி, கிளம்புங்கள். 528 00:39:27,451 --> 00:39:29,660 இங்கே நம் சின்ன பிரச்சினையை சமாளிக்க முடியுமா? 529 00:39:29,661 --> 00:39:30,578 நிச்சயமாக. 530 00:39:30,579 --> 00:39:33,414 - இதை நீ கட்டுக்குள் வைத்திருக்கிறாயா? - நிச்சயமாக, எளிதானது. 531 00:39:33,415 --> 00:39:36,168 - சீக்கிரம் வந்துவிடுகிறேன். - சரி, பிறகு சந்திப்போம். 532 00:39:43,842 --> 00:39:46,260 அவரால் எப்போதிலிருந்து பூட்டுகளை திறக்க முடிகிறது? 533 00:39:46,261 --> 00:39:47,596 அவரால் முடியாது. 534 00:40:06,990 --> 00:40:08,242 நான் உன்னை நேசிக்கிறேன். 535 00:41:24,693 --> 00:41:28,363 போலீஸ்! துப்பாக்கியை கீழே போடு! எல்லோரும் கீழே படுங்கள்! கீழே படுங்கள். 536 00:42:06,151 --> 00:42:08,737 போலீஸ் 537 00:42:10,155 --> 00:42:13,491 இந்தக் குழப்பத்தைச் சமாளிக்க விலங்குகள் நலத்துறையை அழை. 538 00:42:13,492 --> 00:42:14,951 செல்வி. ரவுஷ். 539 00:42:14,952 --> 00:42:16,827 ஷெல்லன்பெர்கை காட்டில் கண்டுபிடித்தோம். அவர் இறந்துவிட்டார். 540 00:42:16,828 --> 00:42:17,912 என்ன நடந்தது? 541 00:42:17,913 --> 00:42:22,209 சொல்வது கடினம். மோசமான நிலையில் இருந்தார், ஏதோ மிருகத்தால் தாக்கப்பட்டது போல தெரிகிறது. 542 00:42:23,043 --> 00:42:24,585 நீங்கள் ஒருவேளை அது நுப்பல்... 543 00:42:24,586 --> 00:42:28,172 அதைச் சொல்லாதே. ப்ரயர் என்ன ஆனாள்? அவளைக் கண்டுபிடித்தீர்களா? 544 00:42:28,173 --> 00:42:30,717 இன்னும் இல்லை, ஆனால் எல்லா இடங்களிலும் தேடுகிறோம். 545 00:42:31,969 --> 00:42:35,597 திரு. நோவாக். உங்களை காவல் நிலையத்துக்கு கூட்டிப்போக வேண்டும் என்று நினைக்கிறேன். 546 00:42:37,391 --> 00:42:38,392 வாருங்கள். 547 00:42:40,644 --> 00:42:42,312 அங்கே கூட்டிப் போவோம். 548 00:42:44,189 --> 00:42:45,773 நில்லுங்கள்! கூடாது! 549 00:42:45,774 --> 00:42:47,609 இல்லை, பரவாயில்லை. 550 00:43:04,835 --> 00:43:05,836 அவன் யார்? 551 00:43:06,461 --> 00:43:07,462 அவன்... 552 00:43:08,255 --> 00:43:10,631 அவன் கிறிஸ், என்... 553 00:43:10,632 --> 00:43:12,176 எனக்கு உதவினான். 554 00:43:13,343 --> 00:43:14,385 ஆம். 555 00:43:14,386 --> 00:43:16,971 துப்பறிவாளர் ரவுஷ். முன்பு நடந்ததற்கு மிகவும் வருந்துகிறேன். 556 00:43:16,972 --> 00:43:18,764 நீங்களும் ஈடுபட்டீர்களா என்று தெரியவில்லை... 557 00:43:18,765 --> 00:43:19,892 என் ஃபோன். 558 00:43:20,392 --> 00:43:22,603 அதை எடுத்ததற்கு வருந்துகிறேன். 559 00:43:23,812 --> 00:43:24,729 இதோ. 560 00:43:24,730 --> 00:43:27,274 நல்லவேளை எடுத்தீர்கள். இல்லையென்றால் உங்களைக் கண்டுபிடித்திருக்க மாட்டேன். 561 00:43:28,066 --> 00:43:29,400 சரி. 562 00:43:29,401 --> 00:43:31,028 சரி, நன்றி. 563 00:43:31,528 --> 00:43:32,529 டீடோ. 564 00:43:35,282 --> 00:43:38,702 உங்கள் பேஸ்மென்டில் நான் பார்த்ததற்குப் பிறகு, இது முடிந்துவிட்டது என்று நீங்கள் நினைத்தால்... 565 00:43:39,203 --> 00:43:41,246 நாம் பேசுவதற்கு நிறைய இருக்கிறது, நண்பரே. 566 00:43:41,955 --> 00:43:42,956 சரி. 567 00:43:44,958 --> 00:43:47,543 வாண்டா, உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி. 568 00:43:47,544 --> 00:43:49,837 - நான் தலைமை ஆய்வாளர் ரவுஷ். - சரி. 569 00:43:49,838 --> 00:43:52,716 நீ என்னோடு காவல் நிலையத்திற்கு வர வேண்டும். 570 00:43:53,342 --> 00:43:54,842 கவலைப்படாதே. நாங்களும் வருகிறோம். 571 00:43:54,843 --> 00:43:57,012 உன்னை அவ்வளவு சீக்கிரம் என் பார்வையிலிருந்து நகர விடமாட்டேன். 572 00:44:00,307 --> 00:44:01,308 என் ஃபோன்தான். 573 00:44:02,059 --> 00:44:03,601 யார் என்று பாருங்கள். 574 00:44:03,602 --> 00:44:04,685 ஓலே 575 00:44:04,686 --> 00:44:07,271 - ஹேய், பெரிய மனுஷா! - ஓலே, செல்லம்! 576 00:44:07,272 --> 00:44:09,732 அம்மா? என்ன நடக்கிறது? 577 00:44:09,733 --> 00:44:12,109 அவளைக் கண்டுபிடித்தீர்களா? எல்லாம் நலமா? 578 00:44:12,110 --> 00:44:17,282 நன்றாக இருக்கிறோம். உன்னோடு பேச விரும்பும் ஒருவர் இங்கே இருக்கிறார். 579 00:44:18,075 --> 00:44:19,493 அடேய், முட்டாள். 580 00:44:19,993 --> 00:44:22,079 வாண்டா? நீ நலமா? 581 00:44:22,746 --> 00:44:25,873 - ஆம், நிச்சயமாக. நீ என்ன எதிர்பார்த்தாய்? - உங்களுக்கு என்ன நடக்கிறது? 582 00:44:25,874 --> 00:44:28,251 அது சிக்கலானது. 583 00:44:28,252 --> 00:44:30,962 உன்னைப் பார்க்கும்போது எல்லாவற்றையும் விளக்குகிறேன், சரியா? 584 00:44:30,963 --> 00:44:32,338 சத்தியமாக. 585 00:44:32,339 --> 00:44:36,051 ஆனால் இன்னும் கொஞ்ச நேரம் காத்திருப்பாயா? 586 00:44:36,802 --> 00:44:40,304 ஆம், நிச்சயமாக. நான் இன்றிரவு இங்கே தங்கலாம் என்று அலெக்ஸின் அம்மா சொல்கிறார். 587 00:44:40,305 --> 00:44:42,515 கவலைப்படாதீர்கள். 588 00:44:42,516 --> 00:44:44,601 உங்களுக்கு வேண்டிய வரை ஓலே எங்களோடு தங்கலாம். 589 00:44:45,435 --> 00:44:46,812 அவன் எங்களோடு பத்திரமாக இருப்பான். 590 00:44:48,313 --> 00:44:50,399 - அருமை, நன்றி. - ரொம்ப நன்றி! 591 00:45:15,674 --> 00:45:18,010 ஸோல்டன் ஸ்பிராண்டெல்லியின் கதையை அடிப்படையாகக் கொண்டது 592 00:45:52,794 --> 00:45:54,796 வசனத் தமிழாக்கம் அருண்குமார்