1 00:00:22,649 --> 00:00:24,401 பேக்ஸ்டன் அருங்காட்சியகம் 2 00:01:36,598 --> 00:01:39,476 ஓல்மெக் குட்டிகள் 3 00:01:43,188 --> 00:01:46,650 அகழ்வாராய்ச்சியில், எதையும் தொந்தரவு செய்யாமல் இருப்பது மிகவும் முக்கியம். 4 00:01:46,733 --> 00:01:49,569 அது துடைப்பதையும் தேய்ப்பதையும் உள்ளடக்கிய நுட்பமான நடனம் போன்றது. 5 00:01:50,153 --> 00:01:52,239 அதை அவன் வாயிலிருந்து எடுக்க முடியுமா? 6 00:01:53,531 --> 00:01:56,034 இவன் நன்றாக இருக்கிறான். இவனுக்கு பற்கள்தான் முளைக்கின்றன. 7 00:01:56,534 --> 00:01:59,496 கூடவே, கொஞ்சம் மண் இவனுக்கு நல்லதுதான். மண் நம் நண்பன். 8 00:01:59,579 --> 00:02:01,706 ஆம், இது பூக்களை வளரச் செய்கிறது, இல்லையா? 9 00:02:02,916 --> 00:02:04,000 வ்வோ. 10 00:02:04,584 --> 00:02:07,712 இல்லை, ஒன்றுமில்லை. ஒன்றுமில்லை. செல்லம். 11 00:02:07,796 --> 00:02:09,463 சரி, இப்போது வா. 12 00:02:12,676 --> 00:02:13,760 உன்னிடம் ஒரு திறமை இருக்கிறது. 13 00:02:13,843 --> 00:02:16,179 உன் அரவணைப்பு ஒருபோதும் தோற்றதில்லை. 14 00:02:16,721 --> 00:02:19,516 இவை அகழ்வாராய்ச்சி காணொளிகளா அல்லது குடும்ப நினைவுகளா? 15 00:02:19,599 --> 00:02:22,894 அலெக்ஸ் நிறைய காணொளிகளை படம் பிடித்திருக்கிறார், எல்லாவற்றையும் படம்பிடிப்பது பிடிக்கும். 16 00:02:22,978 --> 00:02:24,187 அவர் அதில் கைதேர்ந்தவர். 17 00:02:24,271 --> 00:02:26,690 அவற்றையெல்லாம் கண்காணிப்பதில்தான் அவர் திறமையற்றவர். 18 00:02:27,899 --> 00:02:29,150 இவை என்ன? 19 00:02:30,860 --> 00:02:33,822 "எப்படி ஷேவ் செய்வது." "மாற்று டயரை எப்படி மாற்றுவது." 20 00:02:34,322 --> 00:02:35,574 இவை என்ன? 21 00:02:36,575 --> 00:02:39,244 உங்களைவிட்டு முன்கூட்டியே பிரிய வேண்டிய கட்டாயம் ஏற்படலாம், அதோடு உனக்கு ஒரு அப்பாவின் 22 00:02:39,327 --> 00:02:41,913 புத்திமதி தேவை என்பதும் அலெக்ஸுக்குத் தெரிந்திருந்தது. 23 00:02:45,834 --> 00:02:47,544 அது அழுகுரலா? 24 00:02:48,295 --> 00:02:49,963 இன்னொரு காணொளியை ப்ளே செய்தாயா? 25 00:02:50,046 --> 00:02:53,258 இல்லை, சத்தம் வேறு எங்கிருந்தோ வருவது போல தெரிகிறது. 26 00:03:06,146 --> 00:03:08,607 இந்தப் பக்கம், மீசோஅமெரிக்கன் அறையில். 27 00:03:15,864 --> 00:03:18,366 என்ன அழுகிறதோ அது கண்டிப்பாக இந்த அறையில்தான் இருக்க வேண்டும். 28 00:03:20,911 --> 00:03:22,454 விளக்குகளை ஆன் செய். 29 00:03:26,291 --> 00:03:28,501 இந்தப் பகுதியில் உள்ள விளக்குகள் சில சமயங்களில் சரியாக எரியாது. 30 00:03:28,585 --> 00:03:31,129 லேரி, அடுத்த அறையில் வயர் இணைப்பை சரிபார்க்கிறாயா? 31 00:03:31,213 --> 00:03:32,797 சரி, கேப்டன். 32 00:03:34,633 --> 00:03:36,593 போ. நான் இங்கேயே இருக்கிறேன். 33 00:03:44,768 --> 00:03:46,978 குறுகிய இடத்தில் இருப்பது எனக்கு சிரமம். 34 00:03:49,272 --> 00:03:52,817 ஹேய், அது நீண்ட கால மாயன் நாட்காட்டியா? 35 00:03:53,443 --> 00:03:55,904 ஆஹா. எனக்கு எப்போதும்... 36 00:03:57,364 --> 00:03:58,448 முட்டாள் முள்ளே. 37 00:03:59,282 --> 00:04:02,953 வாய்ப்பே இல்லை. என்னால் முடியாது. விளக்குகள் எரிவதற்கு காத்திருக்கிறேன். 38 00:04:04,162 --> 00:04:05,413 வயர்கள் நன்றாக இருக்கின்றன. 39 00:04:05,497 --> 00:04:08,416 விளக்குகள் மிகவும் பழமையானவை. அதை மீண்டும் மீண்டும் ஆன் செய். 40 00:04:11,086 --> 00:04:14,130 கவலைப்படாதே, குழந்தாய். அழுபவனை நான் கண்டுபிடிக்கிறேன். 41 00:04:21,137 --> 00:04:22,556 கண்டுபிடித்துவிட்டேன். 42 00:04:27,435 --> 00:04:28,562 ஹேய், ஆம். 43 00:04:28,645 --> 00:04:31,523 கலைப்பொருள் உயிர் பெறும் விஷயங்கள் எனக்கு இன்னும் பழக்கமாகவில்லை. 44 00:04:31,606 --> 00:04:33,942 சரி, ஆனால் அவை எல்லாமே இவ்வளவு எரிச்சலூட்டுபவை அல்ல. 45 00:04:34,025 --> 00:04:35,860 இதை எப்படி நிறுத்துவது? 46 00:04:35,944 --> 00:04:39,406 என்னைப் பார்க்காதே. குழந்தைகளை கவனித்துக்கொள்வதில் எனக்கு அனுபவம் இல்லை. 47 00:04:48,665 --> 00:04:49,666 ஹேய், அங்கிருப்பவனே. 48 00:04:50,250 --> 00:04:51,585 ஒன்றுமில்லை, குட்டி பையா. 49 00:04:56,673 --> 00:04:58,758 சரி. இது நமக்கு அனுபவமில்லாத விஷயம். 50 00:05:05,390 --> 00:05:07,517 உனக்கு எதில் உதவி வேண்டும்? 51 00:05:16,568 --> 00:05:18,194 நான் மிகவும் களைத்துவிட்டேன். 52 00:05:18,278 --> 00:05:19,529 ஒப்புக்கொள்கிறேன். 53 00:05:26,453 --> 00:05:29,831 கவலைப்படாதீர்கள். எனக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. 54 00:05:29,915 --> 00:05:31,499 ஸ்கை வேண்டர்ஹூவனின், 55 00:05:31,583 --> 00:05:36,046 சோதிக்கப்பட்டு நிரூபணம் செய்யப்பட்ட டிஎச்சி முறைக்கு இது ஒரு சரியான வாய்ப்பாக இருக்கும். 56 00:05:38,340 --> 00:05:40,383 முதலில், டி, டயபர். 57 00:05:40,467 --> 00:05:43,470 அழுவதற்கான முக்கிய காரணம் பொதுவாக மலம் கழித்ததால் இருக்கலாம். 58 00:05:45,722 --> 00:05:48,808 சரி, வெளிப்படையாக, டயபர் இல்லை. 59 00:05:48,892 --> 00:05:50,352 இப்போது எச், பசி. 60 00:05:50,435 --> 00:05:52,437 பசியுள்ள குழந்தை வினோதமாக நடந்துகொள்ளும். 61 00:05:52,520 --> 00:05:54,314 யாரிடமாவது உணவு இருக்கிறதா? 62 00:05:59,236 --> 00:06:02,572 நீ அங்கே மிட்டாய் வைத்திருந்தாயா? 63 00:06:02,656 --> 00:06:04,157 நீங்கள் சாப்பிடுவீர்களா? 64 00:06:04,241 --> 00:06:07,661 இல்லை. ஆனால் ஒரு நல்ல மாலுமி எதற்கும் தயாராக இருப்பான். 65 00:06:10,622 --> 00:06:12,290 அது நன்றியில்லாத செயல். 66 00:06:13,208 --> 00:06:15,961 பரவாயில்லை. இன்னும் சி இருக்கிறது, அரவணைப்பு. 67 00:06:16,044 --> 00:06:19,297 ஸ்கையின் பிரபலமான அரவணைப்பு ஒருபோதும் தோற்றதில்லை. 68 00:06:19,381 --> 00:06:21,800 சரி. அழாதே. 69 00:06:29,057 --> 00:06:31,643 இது வேலை செய்யவில்லை. அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்? 70 00:06:32,477 --> 00:06:33,687 அடுத்து ஒன்றுமில்லை. 71 00:06:33,770 --> 00:06:35,522 டிஎச்சி எப்போதும் வேலை செய்தது. 72 00:06:38,900 --> 00:06:40,860 ஓ, இல்லை. இது இன்னொன்றை எழுப்பிவிட்டது. 73 00:06:41,444 --> 00:06:42,445 அது பரவாயில்லை. 74 00:06:48,451 --> 00:06:49,619 இருவரும் மூன்றாவது குழந்தையை எடுங்கள். 75 00:06:49,703 --> 00:06:51,288 -ஆனால் எங்களுக்குத் தெரியாது... -அட. 76 00:06:51,371 --> 00:06:54,124 இந்த மோசமான செயலை நிறுத்த எதுவும் செய்யலாம். 77 00:06:59,713 --> 00:07:02,591 எல்லோரும் அழுவதால், நிலைமை இனிமேலும் மோசமாகாது. 78 00:07:05,969 --> 00:07:07,095 அது மிகவும் சத்தமாக இருக்கிறது. 79 00:07:07,178 --> 00:07:08,722 இங்கே என்ன நடக்கிறது? 80 00:07:09,723 --> 00:07:13,643 குழந்தை சிலையா? இது அழகாக இருக்கிறது. 81 00:07:17,272 --> 00:07:18,565 குழந்தையே, தூங்கு. 82 00:07:18,648 --> 00:07:20,025 தூங்கு, சின்ன கண்ணே. 83 00:07:20,108 --> 00:07:21,401 நீ மிகவும் அழகாக இருக்கிறாய். 84 00:07:21,484 --> 00:07:23,862 நீ தூங்க வேண்டும். 85 00:07:29,367 --> 00:07:30,368 என்ன? 86 00:07:32,120 --> 00:07:34,122 எனக்கு பிறவியிலேயே வளர்க்கும் திறமை இருப்பதாக நினைக்கிறேன். 87 00:07:34,205 --> 00:07:37,918 இல்லையா, செல்லமே? நன்றாக வளர்ப்பவள். 88 00:07:38,001 --> 00:07:39,669 உங்களைப் போன்ற பெற்றோர்கள் எப்படி அதைச் செய்கிறீர்கள்? 89 00:07:39,753 --> 00:07:41,046 அந்த அழுகையை நிறுத்த. 90 00:07:41,129 --> 00:07:42,839 என்னால் செயல்படக் கூட முடியவில்லை. 91 00:07:42,923 --> 00:07:47,135 நேர்மையாக சொன்னால், நீ நேசிக்கும் ஒருவருக்கு நீ தேவையென்றால், நீ அதைக் கண்டுபிடிப்பாய். 92 00:07:47,219 --> 00:07:49,554 நல்ல விஷயம் என்னவென்றால் தாலாட்டு பாடுவதில் நான் திறமையானவள். 93 00:07:49,638 --> 00:07:51,431 நன்றாக வேலை செய்தது. 94 00:07:51,514 --> 00:07:56,019 சரி, நியாயம் பெற வேண்டிய அடுத்த கலைப்பொருள் இவைதான் என்பது தெளிவாக தெரிகிறது. 95 00:07:56,686 --> 00:07:58,813 எவ்வளவு சீக்கிரம் அவற்றை திருப்பிக் கொடுக்கிறோமோ, அவ்வளவு நல்லது. 96 00:07:58,897 --> 00:07:59,981 நமக்கு என்ன தெரியும்? 97 00:08:00,065 --> 00:08:02,234 நாங்கள் அவற்றை மீசோஅமெரிக்கன் அறையில் கண்டுபிடித்தோம், 98 00:08:02,317 --> 00:08:05,320 -இவை தென் மெக்சிகோவைச் சேர்ந்தவையாக இருக்கலாம். -உண்மைதான். 99 00:08:05,403 --> 00:08:07,155 ஓல்மெக் நாகரிகத்தினர்தான் இப்படி 100 00:08:07,239 --> 00:08:09,741 குழந்தை உருவங்களை செதுக்கியிருக்கிறார்கள் என்று நம்புகிறேன். 101 00:08:09,824 --> 00:08:11,618 ஓல்மெக் நாகரிகத்தினரா? என்ன அது? 102 00:08:11,701 --> 00:08:15,830 ஆஸ்டெக்குகளுக்கு முந்தைய மிகப் பழமையான நாகரீகம். 103 00:08:15,914 --> 00:08:19,167 வெளிப்படையாக, அவர்களின் கலாச்சாரத்தைப் பற்றிய விஷயங்களே முழுமையான மர்மம்தான். 104 00:08:19,251 --> 00:08:20,293 ஹேய், அவற்றை கண்டுபிடித்துவிட்டேன். 105 00:08:20,377 --> 00:08:21,211 ஓல்மெக் தலைகள் 106 00:08:21,294 --> 00:08:23,129 பூம்! மர்மம் தீர்க்கப்பட்டது. 107 00:08:23,672 --> 00:08:27,592 மோசமான செய்தி. அது அவ்வளவு எளிதாக இருக்கும் என்று நினைக்கவில்லை. 108 00:08:27,676 --> 00:08:29,970 எதுவும் எப்போதும் எளிதில்லை. 109 00:08:30,053 --> 00:08:32,889 கோர்னீலியஸின் நாளேடுகளில் சொல்லப்பட்டிருப்பதுபடி, 110 00:08:32,972 --> 00:08:35,933 அவர் அவற்றை ஒரு சட்டவிரோத கள்ளச்சந்தை வியாபாரியிடமிருந்து வாங்கியிருக்கிறார். 111 00:08:36,476 --> 00:08:37,394 அருமை. 112 00:08:37,476 --> 00:08:41,565 எனவே அவை எந்தக் கோவிலில் இருந்து அல்லது எந்தப் பகுதியில் இருந்து எடுக்கப்பட்டன என்றே தெரியாது. 113 00:08:41,648 --> 00:08:44,150 அப்படியென்றால் நாம் அவற்றைத் திருப்பித் தர முடியாது என்று அர்த்தமா? 114 00:08:44,234 --> 00:08:46,069 அப்படியில்லை. 115 00:08:46,152 --> 00:08:49,489 அருங்காட்சியகத்தில் இருக்கும் என் பழைய வழிகாட்டியால் உதவ முடியலாம். 116 00:08:49,573 --> 00:08:52,492 ஒரு பொருளின் மூலத்தைக் கண்டறிவதில் அவர் திறமைசாலி. 117 00:08:52,576 --> 00:08:54,369 அது மிகவும் உதவியாக இருக்கும். 118 00:08:54,452 --> 00:08:56,913 நான் கொஞ்ச நேரம் போய்விட்டு வரும் வரை எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ள முடியுமா? 119 00:08:56,997 --> 00:09:00,375 அப்படித்தான் நினைக்கிறேன். நாங்கள் அதற்கு ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டும். 120 00:09:04,462 --> 00:09:06,798 இந்த குழந்தை கண்காணிப்பு கருவிகள் உதவும். 121 00:09:06,882 --> 00:09:09,050 இவை உங்கள் அப்பாவுக்கு எனக்கும் நன்றாக உதவின. 122 00:09:13,930 --> 00:09:16,892 சமீப காலமாக அதை ஏன் எப்போதும் உன்னுடன் வைத்திருக்கிறாய்? 123 00:09:16,975 --> 00:09:20,854 இவளை "அது" என்று சொல்லாதே. இவள் பெயர் லிண்டா. 124 00:09:20,937 --> 00:09:22,606 இது இவளுடைய சட்டை உரியும் வாரம், 125 00:09:22,689 --> 00:09:25,650 இந்த பாதிக்கப்படக்கூடிய நேரத்தில் இவளை தனியாக விட முடியாது. 126 00:09:25,734 --> 00:09:26,860 என்னவோ. 127 00:09:26,943 --> 00:09:28,653 இதோ, நான் முதலில் பார்த்துக்கொள்கிறேன். 128 00:09:28,737 --> 00:09:30,864 ஆனால் எனக்கு உன் உதவி தேவைப்பட்டால், உன்னை அழைக்கிறேன். 129 00:09:30,947 --> 00:09:32,032 தயாராக இரு. 130 00:09:32,824 --> 00:09:34,326 நீ சொன்னது கேட்டது, நண்பா. 131 00:09:44,711 --> 00:09:46,963 பேக்ஸ்டன் அருங்காட்சியகத்திற்கு வரவேற்கிறோம். 132 00:09:47,047 --> 00:09:49,257 டைனோ பிரிவில் உள்ள என் நண்பர்களைப் பார்க்க வாருங்கள். 133 00:09:51,259 --> 00:09:52,886 நீ என்னை அழைத்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது, ஸ்கை. 134 00:09:52,969 --> 00:09:54,054 ஹேய். 135 00:09:54,804 --> 00:09:56,640 நீண்ட காலமாகிவிட்டது. 136 00:09:56,723 --> 00:09:59,392 என்னை சந்திப்பதற்கு மிக்க நன்றி, இயக்குனர் ஸ்னிட்கர். 137 00:09:59,476 --> 00:10:00,518 பரவாயில்லை. 138 00:10:00,602 --> 00:10:04,648 இப்போது நான் இயக்குனராக இருக்கலாம், ஆனால் நான் இன்னும் பழைய தோழி ஜார்ஜியாதான். 139 00:10:05,357 --> 00:10:07,317 உன் கணவர் எப்படி இருக்கிறார்? 140 00:10:07,400 --> 00:10:10,070 அலெக்ஸ். எப்போதும் போல் துடிப்போடு இருக்கிறார். 141 00:10:10,779 --> 00:10:13,240 அது ஒரு அழகான சிலை. 142 00:10:13,323 --> 00:10:15,742 மெஸடோனியன், நான் தவறாக நினைக்கவில்லை என்றால். 143 00:10:16,368 --> 00:10:17,535 நிச்சயமாக அதுதான். 144 00:10:18,036 --> 00:10:21,331 அந்த விசித்திரமான மாளிகையில் உன்னிடமும் சில இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். 145 00:10:21,414 --> 00:10:25,085 இருக்கலாம். அந்த வீடு ஆச்சரியங்கள் நிறைந்தது. 146 00:10:26,294 --> 00:10:27,963 எனவே, ஒரு கலைப்பொருளைப் பற்றி 147 00:10:28,046 --> 00:10:31,383 என்னிடம் கேட்க ஒரு கேள்வி இருப்பதாக நீ தொலைபேசியில் குறிப்பிட்டாய். 148 00:10:31,466 --> 00:10:32,759 ஆம், அது சரிதான். 149 00:10:32,842 --> 00:10:36,972 முறையான தொல்பொருள் ஆராய்ச்சியாளரால் அகழ்வாராய்ச்சி செய்து எடுக்கப்பட்டதை விட வாங்கப்பட்ட 150 00:10:37,055 --> 00:10:40,850 ஓல்மெக் உருவங்களின் பிறப்பிடத்தைக் கண்டுபிடிப்பது பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? 151 00:10:40,934 --> 00:10:42,561 அது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. 152 00:10:42,644 --> 00:10:47,816 உனக்கே தெரியும், அந்த நாகரிகம் கிட்டத்தட்ட 2,500 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்தது. 153 00:10:47,899 --> 00:10:51,903 அதற்கு பிறகு அவர்களின் பெரும்பாலான கோவில்கள் கல்லறை கொள்ளையர்களால் சூறையாடப்பட்டன. 154 00:10:51,987 --> 00:10:53,154 நிச்சயமாக. 155 00:10:53,238 --> 00:10:56,741 ஆனால் வாங்கிய இரசீதோ எதுவோ உன்னிடம் இல்லையா? 156 00:10:56,825 --> 00:10:57,659 கண்காட்சி மூடப்பட்டது 157 00:10:57,742 --> 00:10:58,660 துரதிர்ஷ்டவசமாக, இல்லை. 158 00:10:58,743 --> 00:11:01,746 புதிய கண்காட்சியின் காரணமாக கேட்கிறாய் என்று நினைக்கிறேன். 159 00:11:01,830 --> 00:11:03,623 புதிய கண்காட்சியா? 160 00:11:03,707 --> 00:11:07,002 ஆம், ஓல்மெக் கலைப்பொருட்களின் நகரும் கண்காட்சி. 161 00:11:07,085 --> 00:11:09,546 அவர்கள் எங்களைத் தேர்ந்தெடுத்தது எங்கள் அதிர்ஷ்டம். 162 00:11:09,629 --> 00:11:12,340 பல அருங்காட்சியகங்கள் கௌரவத்துக்காகப் போட்டியிட்டன. 163 00:11:12,424 --> 00:11:14,551 இந்த பொருட்கள் இப்போதுதான் வந்ததா? 164 00:11:14,634 --> 00:11:17,596 ஆம், மூன்று நாட்களில் திறக்கிறோம். 165 00:11:17,679 --> 00:11:20,307 நான் உனக்கு திரைக்குப் பின்னால் சுற்றிக் காட்டுகிறேன். 166 00:11:30,066 --> 00:11:33,945 இந்த தொகுதி தீர்ந்துவிட்டால் நம்மிடம் சில கூடுதல் பேட்டரிகள் இருக்க வேண்டும். 167 00:11:34,029 --> 00:11:36,907 மிகவும் நல்லது. அலெக்ஸின் ஆய்வு செய்யும் அறையிலிருந்து சிலவற்றை எடுத்துவா. 168 00:11:36,990 --> 00:11:39,034 நீ அதைச் செய்ய வேண்டும். உனக்கு கைகள் இருக்கின்றன. 169 00:11:40,410 --> 00:11:41,578 உன்னால் செய்ய முடியும். 170 00:11:41,661 --> 00:11:45,040 ஏதாவது செய்ய மிகவும் சோம்பேறித்தனமாக இருக்கும்போது மட்டுமே கைகளைப் பற்றி பேசுகிறாய். 171 00:11:45,123 --> 00:11:47,208 தயவுசெய்து மெதுவாக பேசுகிறீர்களா? 172 00:11:49,377 --> 00:11:50,587 சரி! 173 00:11:50,670 --> 00:11:52,005 நானே செய்கிறேன். 174 00:11:59,721 --> 00:12:01,139 நான் மிகவும் வருந்துகிறேன். 175 00:12:01,223 --> 00:12:02,974 அவசர தேவை. 176 00:12:03,934 --> 00:12:05,101 அவசர தேவை. 177 00:12:06,603 --> 00:12:08,563 தாத்தா, நீங்களா? 178 00:12:09,731 --> 00:12:10,815 ஓ, இல்லை. 179 00:12:10,899 --> 00:12:13,693 தாத்தா ஒரு ஜாம்பி! 180 00:12:21,826 --> 00:12:23,828 ஓ, இல்லை. நான் இதை உடைத்துவிட்டேன் என்று நினைக்கிறேன். 181 00:12:34,714 --> 00:12:36,216 இது நல்லது இல்லை. 182 00:12:49,437 --> 00:12:54,192 இந்தச் செய்திகளுக்குப் பிறகு ஜாம்பி தாத்தாவுக்கு திரும்புவோம். 183 00:12:59,322 --> 00:13:01,408 அடடா. ரஸ்ஸுக்கு என் உதவி தேவை. 184 00:13:01,491 --> 00:13:03,034 அச்சச்சோ, மன்னித்துவிடு. 185 00:13:04,536 --> 00:13:08,582 சேகரிப்பு உருமாறும் சிலைகளில் கவனம் செலுத்துகிறது, 186 00:13:08,665 --> 00:13:11,251 அது போன்ற புனிதமான பொருட்களை ஜாகுவார்கள், வெளவால்கள் 187 00:13:11,334 --> 00:13:16,631 அல்லது ஊர்வன போன்ற விலங்குகளாக மாறலாம் என்று ஓல்மெக் நம்பிய காரணத்தால். 188 00:13:23,972 --> 00:13:27,267 எனவே, இந்த கலைப்பொருள் இப்போதுதான் வந்ததா? 189 00:13:27,350 --> 00:13:29,019 இரண்டு இரவுகளுக்கு முன்பு. 190 00:13:46,745 --> 00:13:47,746 பின்னால் போ! 191 00:13:58,840 --> 00:13:59,758 தப்பித்துவிட்டேன். 192 00:14:30,163 --> 00:14:32,666 குழந்தைகளுக்கு என்ன ஆனது? 193 00:14:33,500 --> 00:14:35,252 பேண், ஓடு! 194 00:14:47,389 --> 00:14:48,473 ம்? 195 00:14:55,146 --> 00:14:58,108 பேண், முன்பு நீ இவற்றை அமைதிப்படுத்தவில்லை. 196 00:14:58,191 --> 00:14:59,234 லிண்டாதான் செய்தது! 197 00:14:59,317 --> 00:15:01,736 அவள் பல்லி என்பதாலா? 198 00:15:01,820 --> 00:15:06,199 இல்லை, ஏனென்றால் அது அவற்றின் அம்மாவை நினைவூட்டுகிறது. 199 00:15:09,160 --> 00:15:12,163 அந்த குடும்பத்தை ஒன்று சேர்ப்போம். 200 00:15:21,756 --> 00:15:24,342 சரி, எல்லோரும் இயல்பாக இருங்கள். 201 00:15:24,426 --> 00:15:25,969 நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு 202 00:15:26,052 --> 00:15:29,055 ஒரு சிலை குடும்பத்தை மீண்டும் ஒன்று சேர்க்கும் ஒரு எளிய தலைகீழ் திருட்டுதான். 203 00:15:29,139 --> 00:15:30,181 முற்றிலும் இயல்பாக. 204 00:15:30,265 --> 00:15:33,476 இந்த குழந்தைகளை கொஞ்ச நேரம் கவனித்துக்கொண்ட பிறகு, 205 00:15:33,560 --> 00:15:35,145 நான் குழந்தையாக இருந்தபோது உங்களை சிரமப்படவைத்த 206 00:15:35,228 --> 00:15:37,731 எல்லாவற்றுக்காகவும் நான் முழுமையாக மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். 207 00:15:37,814 --> 00:15:41,151 ஆம், அது நான் நினைத்ததைவிட பெரிய வேலையாகவும், பெரும் அழுத்தமாகவும் இருந்தது. 208 00:15:41,234 --> 00:15:43,028 அது பெரிய வேலைதான். 209 00:15:43,111 --> 00:15:44,988 ஆனால் அந்த ஒவ்வொரு நொடியும் மதிப்பானது. 210 00:15:52,329 --> 00:15:54,623 அவர்களின் மதிய உணவு இடைவேளை எந்த நிமிடமும் தொடங்கலாம். 211 00:15:58,084 --> 00:16:00,462 சரி, உள்ளே நுழைந்து இந்த குழந்தைகளை அவற்றின் 212 00:16:00,545 --> 00:16:03,215 அம்மாவிடம் திருப்பிக் கொடுக்க அது நமக்கு நிறைய நேரம் கொடுக்கும். 213 00:16:03,298 --> 00:16:04,966 பாதுகாவலரை என்ன செய்வது? 214 00:16:05,050 --> 00:16:07,010 நீங்கள் அதை என்னிடம் விட்டுவிடுங்கள். 215 00:16:07,093 --> 00:16:08,845 லிண்டா, குழந்தைகளை சத்தம் போடாமல் வைத்திரு. 216 00:16:10,222 --> 00:16:12,057 தயவுசெய்து, சார், உங்கள் உதவி தேவை. 217 00:16:12,140 --> 00:16:14,601 எகிப்திய கண்காட்சியில் ஒரு குழந்தை பிரச்சினையை ஏற்படுத்துகிறது. 218 00:16:14,684 --> 00:16:16,394 அவன் ஒரு மம்மியை அவிழ்க்க முயற்சிக்கிறான்! 219 00:16:16,478 --> 00:16:19,522 கவலைப்படாதீர்கள், மேடம், நான் இதற்குத்தான் பயிற்சி எடுத்தேன். 220 00:16:32,744 --> 00:16:35,330 டைனோசர் கண்காட்சியைப் பார்க்க வாருங்கள்! 221 00:16:35,413 --> 00:16:37,666 இது கர்ஜிப்பதற்கான நல்ல நேரம்! 222 00:16:40,377 --> 00:16:42,212 ஓடாதே, லிண்டா! 223 00:16:43,922 --> 00:16:44,756 ஓ, இல்லை! 224 00:16:45,549 --> 00:16:47,801 ஒன்றுமில்லை, லிண்டா உடனே வந்துவிடும். 225 00:16:48,552 --> 00:16:50,262 பேண், உதவி! 226 00:16:55,475 --> 00:16:58,311 ஓ, இல்லை! இவை பல்லியாகப் போகின்றன! 227 00:16:58,395 --> 00:17:00,939 தயவுசெய்து அந்தக் குழந்தைகளை அமைதிப்படுத்த முடியுமா? 228 00:17:01,022 --> 00:17:03,316 எங்களில் சிலர் அருங்காட்சியகத்தை இரசிக்க முயற்சிக்கிறோம். 229 00:17:03,400 --> 00:17:05,485 நாங்கள் மிகவும் வருந்துகிறோம். நாங்கள் முயற்சிக்கிறோம்... 230 00:17:05,569 --> 00:17:08,280 ஹேய், எங்கள் குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் திறன்களை மதிப்பிட உங்களுக்கு என்ன தைரியம்! 231 00:17:08,362 --> 00:17:10,739 உங்களுக்கு எதுவும் தெரியாது! 232 00:17:14,535 --> 00:17:15,536 அவை தப்பிக்கின்றன! 233 00:17:16,912 --> 00:17:20,125 ஏன் இன்னும் இங்கே இருக்கிறீர்கள்? நீங்கள் இப்போது உள்ளே இருந்திருக்க வேண்டும். 234 00:17:20,208 --> 00:17:21,877 இரண்டு குழந்தைகள் காற்றோட்ட குழாய்க்குள் போய்விட்டன, 235 00:17:21,959 --> 00:17:24,254 பேச நேரமில்லை! அம்மா, இதை வைத்திருங்கள். 236 00:17:24,337 --> 00:17:25,421 ரஸ், நீ என்னுடன் வா. 237 00:17:27,257 --> 00:17:28,257 அதைச் செய்யாதே. 238 00:17:28,341 --> 00:17:31,261 காற்றோட்ட குழாய்கள் பாதுகாப்பான தாழ்வாரங்கள் இல்லை. 239 00:17:33,680 --> 00:17:36,266 கடவுளே. இன்னும் நிறைய குறுகிய இடங்களா? 240 00:17:37,684 --> 00:17:38,810 உன்னால் இது முடியும். 241 00:17:43,899 --> 00:17:45,734 கடவுளே! பல்லி! 242 00:17:46,443 --> 00:17:47,444 லிண்டா! 243 00:17:59,915 --> 00:18:01,124 எந்த வழியாக? 244 00:18:02,208 --> 00:18:03,209 அங்கே! 245 00:18:04,836 --> 00:18:07,589 -அங்கேயும்! -நாம் பிரிந்து செல்ல வேண்டும். 246 00:18:07,672 --> 00:18:09,341 அது ஒரு மோசமான யோசனை. 247 00:18:09,424 --> 00:18:12,761 பிரிவது ஒருபோதும் சரியாக முடியாது. நாம்... 248 00:18:15,347 --> 00:18:17,140 நான் ஏன் பேசிக்கொண்டு சிரமப்படுகிறேன்? 249 00:18:25,315 --> 00:18:29,486 ஹேய், பல்லி குழந்தையே, இங்கே திரும்பி வா! 250 00:18:34,157 --> 00:18:35,408 தயவுசெய்து? 251 00:18:38,954 --> 00:18:41,289 இல்லை. 252 00:18:56,846 --> 00:18:58,557 நீ வேகமாக ஓடுகிறாய், லிண்டா. 253 00:18:58,640 --> 00:19:00,350 ஆனால் என் அளவுக்கு வேகமாக இல்லை. 254 00:19:03,520 --> 00:19:05,438 ம். ஓ, இல்லை, போகாதீர்கள். 255 00:19:17,659 --> 00:19:19,077 உன்னால் முடியும். 256 00:19:30,547 --> 00:19:31,631 ப்யூ. 257 00:19:39,055 --> 00:19:40,974 நான் இதை வெறுக்கிறேன். 258 00:19:42,934 --> 00:19:45,395 நீ எங்கே இருக்கிறாய்? 259 00:19:50,317 --> 00:19:52,277 நான் இதைச் செய்கிறேன் என்று நம்ப முடியவில்லை. 260 00:19:59,868 --> 00:20:01,077 நான் அதை இழந்துவிட்டேன். 261 00:20:02,162 --> 00:20:03,830 ஓ, இல்லை, நான் அதை இழந்துவிட்டேன்! 262 00:20:20,972 --> 00:20:26,311 நீ சத்தமில்லாமல் ஓடலாம், ஆனால் அதிர்வுகளை நிறுத்த முடியாது. 263 00:20:26,895 --> 00:20:28,480 பக்கத்தில்தான் இருக்கிறாய். 264 00:20:44,037 --> 00:20:44,871 ம்? 265 00:20:50,460 --> 00:20:52,295 மன்னித்துவிடு, இது உன் நலனுக்காகத்தான்! 266 00:20:54,839 --> 00:20:56,341 ரஸ், நான் வருகிறேன்! 267 00:20:58,218 --> 00:20:59,052 பிடித்துவிட்டேன்! 268 00:21:01,638 --> 00:21:03,139 துள்ளுவதை நிறுத்து! 269 00:21:10,564 --> 00:21:11,856 பிடித்துக்கொள்! 270 00:21:21,741 --> 00:21:23,034 நாம் உயிருடன் இருக்கிறோம்! 271 00:21:23,618 --> 00:21:26,413 -குழந்தைகளே! உங்களுக்கு ஒன்றுமில்லையே? -ஆம். 272 00:21:26,496 --> 00:21:27,706 எங்கள் நால்வருக்கும் ஒன்றுமில்லை. 273 00:21:32,210 --> 00:21:33,044 ம்? 274 00:21:43,722 --> 00:21:45,849 அது ஒரு அழகான காட்சி. 275 00:21:45,932 --> 00:21:48,476 நியாயம் செய்வது என்பது எப்பொழுதும் அது எங்கிருந்து 276 00:21:48,560 --> 00:21:51,938 வந்ததோ அந்த இடத்துக்கு மீண்டும் கொண்டு சேர்ப்பது என்று அர்த்தமில்லை என்று நினைக்கிறேன். 277 00:21:52,022 --> 00:21:56,234 ஆம், ஒவ்வொரு கலைப்பொருளுக்கும் நம்மிடமிருந்து வித்தியாசமான ஒன்று தேவைப்படுகிறது. 278 00:21:56,318 --> 00:21:58,069 ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையான புதிர். 279 00:21:58,153 --> 00:22:01,865 அதிர்ஷ்டவசமாக, குழந்தைகளாகிய நீங்கள் தீர்வுகளை கண்டுபிடிப்பதில் மிகவும் திறமைசாலிகள். 280 00:22:10,165 --> 00:22:13,627 அந்த குழந்தைகளை நான் கவனித்துக்கொண்டேன். இது எளிது அல்ல, ஆனால் அவர்களுக்கு நான் தேவைப்பட்டேன். 281 00:22:13,710 --> 00:22:14,878 எனவே, நான் அதைக் கண்டுபிடித்தேன். 282 00:22:15,587 --> 00:22:18,423 ஆம், நம் பிள்ளைகள் அருமையானவர்கள், அலெக்ஸ். 283 00:22:18,506 --> 00:22:20,175 நீங்கள் பெருமைப்பட்டிருப்பீர்கள். 284 00:22:22,552 --> 00:22:23,595 ஒரு நொடி பொறுங்கள். 285 00:22:23,678 --> 00:22:25,347 அது வேலை செய்யலாம்! 286 00:22:27,182 --> 00:22:28,975 அப்பாவை தொடர்புகொள்ள எனக்கு ஒரு வழி கிடைத்துவிட்டது! 287 00:23:02,342 --> 00:23:04,344 வசனத் தமிழாக்கம் அருண்குமார்