1 00:01:09,404 --> 00:01:12,324 ஜப்பானிய ஓவியம் 2 00:01:13,408 --> 00:01:15,994 நீங்கள் இருவரும் கட்டுப்படுத்தப்பட்ட பிரிவின் இந்த பகுதியை ஒழுங்குபடுத்த 3 00:01:16,077 --> 00:01:17,412 முயற்சித்ததாக சொன்னீர்கள். 4 00:01:17,495 --> 00:01:18,788 இது அலங்கோலமாக இருக்கிறது. 5 00:01:18,872 --> 00:01:20,624 நாங்கள் முயற்சி செய்தோம். 6 00:01:20,707 --> 00:01:22,751 நாங்கள் தோற்றுவிட்டோம் என்பதை மட்டும் சொல்லவில்லை. 7 00:01:22,834 --> 00:01:24,461 நாம் தோற்கவில்லை. 8 00:01:24,544 --> 00:01:28,715 உன்னுடன் வேலை செய்வது சாத்தியமற்றது என்று நிரூபணமானதால் அந்த வேலையை விட்டுவிட்டேன். 9 00:01:28,798 --> 00:01:31,968 ஹேய்! என் நல்ல யோசனைகளை நிராகரித்தது நீதான். 10 00:01:32,052 --> 00:01:34,888 என் மதிப்பிற்குரிய சக ஊழியர், கடற்கொள்ளையர் ஆயுதங்களுக்காக பிரத்தியேகமாக 11 00:01:34,971 --> 00:01:37,641 ஒரு பகுதியை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். 12 00:01:38,850 --> 00:01:42,103 என்ன? ஒரு உண்மையான கடற்கொள்ளையனால் எந்த ஆயுதத்தையும் பயன்படுத்த முடியும். 13 00:01:42,187 --> 00:01:44,231 அதிர்ஷ்டவசமாக, மூன்று முறை 14 00:01:44,314 --> 00:01:46,650 "ஆண்டின் சிறந்த வரலாற்றுக் காப்பாளர்" விருது வென்றவரை எனக்குத் தெரியும், 15 00:01:46,733 --> 00:01:49,402 அவரால் இந்த கலைப்பொருட்களை சரியாக அட்டவணைப்படுத்த உதவ முடியும். 16 00:01:50,028 --> 00:01:52,697 அது நான்தான். மூன்று முறை வென்று இருக்கிறேன். என்றைக்காவது சொல்லியிருக்கிறேனா? 17 00:01:52,781 --> 00:01:54,407 எப்போதும் சொல்வீர்கள். 18 00:01:54,491 --> 00:01:57,535 இது நிறைய வேலை எடுக்கும், ஆனால் உன் அப்பா சொன்னதைக் கேட்டாயே. 19 00:01:57,619 --> 00:02:01,748 அவர் எங்கு சிக்கியிருந்தாலும் ஒவ்வொரு நொடியும் அவர் மேலும் மேலும் ஆபத்தில் இருக்கிறார். 20 00:02:04,042 --> 00:02:07,045 அம்மா சொல்வது சரிதான். நம்மிடம் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டு, இந்த கலைப்பொருட்கள் எப்படி 21 00:02:07,128 --> 00:02:09,756 இணைக்கப்பட்டிருக்கின்றன என்பதைக் கண்டுபிடித்து, அவற்றின் சாபத்தைப் போக்க வேண்டும். 22 00:02:09,838 --> 00:02:11,091 திட்டம் என்ன? 23 00:02:11,174 --> 00:02:13,468 பேண்டோரா, நீ ஓவிய அறைக்குப் போய், 24 00:02:13,552 --> 00:02:15,387 அங்கே இருக்கும் எல்லாவற்றையும் குறிப்பெடு. 25 00:02:15,470 --> 00:02:17,430 நூற்றாண்டுகள் வாரியாக உன் பட்டியலை வரிசைபடுத்த முயற்சி செய். 26 00:02:17,514 --> 00:02:18,598 பிறகு கண்டம் வாரியாக. 27 00:02:18,682 --> 00:02:19,808 பிறகு நாடு வாரியாக. 28 00:02:20,392 --> 00:02:22,852 அதை கேட்கவே சலிப்பாக இருக்கிறது. 29 00:02:22,936 --> 00:02:25,397 நான் இந்த அறையை ஒழுங்குபடுத்தும்போது ரஸ்ஸால் அந்த வேலையை செய்ய முடியாதா? 30 00:02:25,480 --> 00:02:29,359 ஆயுதங்கள் நிரம்பிய ஒரு அறையில் நான் உன்னைத் தனியாக விடுவதற்கு வாய்ப்பே இல்லை. 31 00:02:30,694 --> 00:02:34,948 கலைப்பொருட்களின் சாபத்தை நீக்கும் முன்பு அது பற்றி நம்மால் முடிந்தவரை தெரிந்துகொள்ள வேண்டும். 32 00:02:35,031 --> 00:02:37,659 மந்திரக் கிண்ணம் விஷயத்தில் நடந்தது மீண்டும் நடக்கக் கூடாது. 33 00:02:37,742 --> 00:02:39,786 நமக்கு நிச்சயமாக நடக்கக் கூடாது. 34 00:02:39,869 --> 00:02:43,039 ரஸ், அப்பாவின் படிப்பறைக்குச் சென்று அவரது காணொளிகளைப் பார். 35 00:02:43,123 --> 00:02:45,792 குறிப்பேட்டில் விடுபட்ட தகவல்களை நிரப்பும்படியாக ஏதாவது கிடைக்கிறதா என்று பார். 36 00:02:45,875 --> 00:02:48,461 அருமை. காணொளிகள் எனக்குப் பிடிக்கும். 37 00:02:48,545 --> 00:02:49,713 அது நியாயமே இல்லை. 38 00:02:49,796 --> 00:02:52,090 ரஸ்ஸுக்கு மட்டும் ஏன் முக்கியமான வேலைகளை கொடுக்கிறீர்கள்? 39 00:02:52,173 --> 00:02:53,758 அட, பேண். அது உண்மையில்லை. 40 00:02:53,842 --> 00:02:56,428 அப்பா கல்லாக மாறியது முதல், நீதான் அவருடைய குறிப்புகளைப் படிக்கிறாய், 41 00:02:56,511 --> 00:02:59,806 அவருடைய பதிவுகளைக் கேட்கிறாய், அவருடைய எல்லா காணொளிகளையும் பார்க்கிறாய். 42 00:02:59,890 --> 00:03:01,391 அப்பாவின் உடைமைகளையும் நினைவுகளையும் நீதான் பயன்படுத்துகிறாய். 43 00:03:01,474 --> 00:03:02,976 நானில்லை. 44 00:03:03,059 --> 00:03:06,104 ஆனால் அவருடைய பொருட்கள் என்று வரும்போது, அப்பாவுக்கும் எனக்கும் ஒரு இணைப்பு உண்டு. 45 00:03:06,187 --> 00:03:08,648 வரலாற்று ஆராய்ச்சியில் உங்கள் இருவருக்கும் சரியாக ஒத்துப்போகாது என்பதை 46 00:03:08,732 --> 00:03:10,066 முதலில் ஒப்புக்கொண்டது நீதான். 47 00:03:10,150 --> 00:03:11,151 அது எங்களுக்குப் பிடித்தது. 48 00:03:11,234 --> 00:03:13,987 விளையாடுவதுதான் எங்களுக்குப் பிடித்தது. 49 00:03:14,070 --> 00:03:15,530 அதற்காக நான் தண்டிக்கப்படுகிறேன். 50 00:03:15,614 --> 00:03:17,240 யாரும் தண்டிக்கப்படவில்லை. 51 00:03:17,324 --> 00:03:19,451 நாம் செய்யும் எல்லாமே முக்கியமானவைதான். 52 00:03:19,534 --> 00:03:21,328 -உங்கள் அப்பா இங்கே இருந்திருந்தால்... -அவர்தான் இல்லையே. 53 00:03:21,411 --> 00:03:23,872 நான் ரஸ் போல அப்பாவுக்குப் பிடித்தவள் அல்ல, எனவே அவன் செய்ய விரும்பாத சலிப்பான 54 00:03:23,955 --> 00:03:25,749 விஷயங்கள் எல்லாவற்றையும் நான் செய்துகொண்டிருக்கிறேன். 55 00:03:25,832 --> 00:03:26,958 நான் அப்படிச் சொல்லவில்லை. 56 00:03:27,042 --> 00:03:28,168 எனக்குக் கவலையில்லை. 57 00:03:28,251 --> 00:03:30,003 எப்படியோ நானே விளையாட்டு பிள்ளையாக இருப்பேன். 58 00:03:44,935 --> 00:03:46,853 இங்கே எவ்வளவு குப்பை இருக்கிறது என்று பார்க்கிறேன். 59 00:03:49,022 --> 00:03:51,358 கேவலமான ஓவியம். 60 00:03:54,819 --> 00:03:56,821 மிகவும் கேவலமான குழந்தை. 61 00:04:00,075 --> 00:04:01,785 ஆடம்பரமான பெயிண்ட் பிரஷ். 62 00:04:04,537 --> 00:04:05,914 யாராவது இருக்கிறீர்களா? 63 00:04:08,750 --> 00:04:10,418 இது மிகவும் பயமுறுத்துவதாக இருக்கிறது. 64 00:04:10,502 --> 00:04:11,628 அருமை. 65 00:04:12,295 --> 00:04:16,466 "ஜப்பானிய ஓவியர் ஹிசாவின் கடைசி படைப்பாக அறியப்பட்ட இந்த ஓவியம், 66 00:04:16,550 --> 00:04:18,759 நோபெரா-பூ எனப்படும் முகமற்ற ஆவிகளால் காட்டில் பிரிக்கப்பட்ட 67 00:04:18,843 --> 00:04:22,722 இரண்டு நபர்களை சித்தரிக்கிறது." 68 00:04:23,431 --> 00:04:24,766 முகமற்ற ஆவிகளா? 69 00:04:25,600 --> 00:04:27,018 பயமுறுத்துகிறது. 70 00:04:29,479 --> 00:04:31,982 இப்போது அது நகர்ந்ததா? 71 00:04:36,319 --> 00:04:37,279 என்னை விடு! 72 00:04:37,362 --> 00:04:39,447 உதவி! அம்மா! ரஸ்! உதவி! 73 00:04:52,794 --> 00:04:57,215 டார்ட்ஸ் எனப்படும் விளையாட்டு 700 ஆண்டுகளாக ஆங்கிலேயரின் பொழுதுபோக்காக இருந்து வருகிறது, 74 00:04:57,299 --> 00:05:00,927 பொதுமக்கள் முதல் எட்டாம் ஹென்றி அரசர் வரை எல்லோரையும் மகிழ்விக்கிறது. 75 00:05:01,011 --> 00:05:04,598 உண்மையில், இந்த டார்ட் தொகுப்பு அரச குடும்பத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். 76 00:05:05,473 --> 00:05:07,225 என்னிடம் இன்னமும் திறமை இருக்கிறதா என்று பார்ப்போம். 77 00:05:09,603 --> 00:05:12,898 சரியாக எறிந்துவிட்டேன். ஆம். குழந்தைகளிடம் காண்பிக்க வேண்டும்... 78 00:05:15,734 --> 00:05:16,735 சரியாக எறிந்துவிட்டேன். ஆம். 79 00:05:16,818 --> 00:05:19,112 -என் திறமைகளை குழந்தைகளிடம்... -அருமை. 80 00:05:19,195 --> 00:05:20,488 மோசமில்லை, அப்பா. 81 00:05:20,572 --> 00:05:22,782 இங்கிருந்தே என்னால் ஸ்டான்லியை குறிவைத்து அடிக்க முடியும். 82 00:05:34,878 --> 00:05:36,630 அது என்ன? 83 00:05:36,713 --> 00:05:38,465 ஹேய், நீ. உனக்கு என்ன வேண்டும்? 84 00:05:44,221 --> 00:05:46,681 அது என்ன செய்தாலும், எனக்குப் பிடிக்கவில்லை. 85 00:05:46,765 --> 00:05:48,683 நீங்கள் போய் அம்மாவை அழைத்து வாருங்கள். நான் பேண்டோராவைத் தேடுகிறேன். 86 00:05:52,312 --> 00:05:56,399 பேண்? பேண், இங்கே இருக்கிறாயா? 87 00:05:56,483 --> 00:05:57,442 பேண்? 88 00:05:57,525 --> 00:06:01,154 அவள் நிஜமாகவே தன் அறையில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறாள் என்று நம்புகிறேன். 89 00:06:09,663 --> 00:06:10,914 ஓ, இல்லை. 90 00:06:10,997 --> 00:06:12,874 ஓ, இல்லை. 91 00:06:17,045 --> 00:06:18,380 என்ன... 92 00:06:20,298 --> 00:06:22,259 நான் எங்கே இருக்கிறேன்? 93 00:06:24,761 --> 00:06:28,557 எல்லாமே வரையப்பட்டது போல தெரிகிறது. 94 00:06:28,640 --> 00:06:29,641 பேண்... 95 00:06:29,724 --> 00:06:33,603 உள்ளே இருப்பது நீதானா என்று தெரியவில்லை, ஆனால் உன்னால் கேட்க முடிந்தால், அமைதியாக இரு. 96 00:06:33,687 --> 00:06:35,188 நாங்கள் உன்னை வெளியே கொண்டு வருவோம். 97 00:06:35,272 --> 00:06:36,606 ரஸ்? ரஸ்! 98 00:06:36,690 --> 00:06:39,192 நான் ஓவியத்தின் உள்ளே இருக்கிறேன் என்று நினைக்கிறேன். 99 00:06:39,276 --> 00:06:40,652 நான் சொல்வது கேட்கிறதா? 100 00:06:40,735 --> 00:06:41,570 ரஸ்? 101 00:06:46,616 --> 00:06:49,661 ஹேய்! நீ யாராக இருந்தாலும், பதுங்கி வருவதை விட்டுவிட்டு வெளியே போய்விடு. 102 00:06:51,830 --> 00:06:53,832 எதைப் பார்க்கிறாய், காகமே? 103 00:06:59,754 --> 00:07:02,591 இது பரவாயில்லை. யாரும் பயப்படவில்லை. 104 00:07:11,641 --> 00:07:13,560 சரி, நான் பயந்துவிட்டேன். 105 00:07:44,007 --> 00:07:45,717 போய்விடு! என்னை விடு! 106 00:07:53,099 --> 00:07:57,187 மன்னித்துவிடுங்கள், நீங்கள் நோபெரா-பூ ஆவிகளில் ஒன்று என்று நினைத்துவிட்டேன். 107 00:08:04,444 --> 00:08:06,154 வ்வோ. மெதுவாக பேசுங்கள். 108 00:08:06,238 --> 00:08:07,864 இது அதிகம் உதவுகிறது என்று இல்லை. 109 00:08:08,698 --> 00:08:11,868 நீங்களும் இங்கே நோபெரா-பூ ஆவியிடமிருந்து மறைந்திருக்கிறீர்களா? 110 00:08:13,745 --> 00:08:15,455 நல்லது, ஒருவரையொருவர் புரிந்துகொள்ள தொடங்குகிறோம். 111 00:08:18,375 --> 00:08:20,210 அவை ஏன் உள்ளே வருவதில்லை? 112 00:08:24,130 --> 00:08:26,132 எனவே அது நம்மைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறதா? 113 00:08:26,675 --> 00:08:31,888 புரிந்தது. அது இங்கேயே இருப்பதை உறுதிசெய்வோம்... எனக்கு உங்கள் பெயர் தெரியாது. 114 00:08:31,972 --> 00:08:33,597 அடடா, எப்படி புரியவைப்பது? 115 00:08:35,100 --> 00:08:37,811 பேண்டோரா. பேண்டோரா. 116 00:08:38,477 --> 00:08:39,604 ஹிசா. 117 00:08:39,688 --> 00:08:41,398 பேண்டோரா பேண்டோரா. 118 00:08:41,481 --> 00:08:44,359 இல்லை, ஒன்றுதான்... பரவாயில்லை. ஓரளவுக்கு அதுபோலத்தான் இருக்கிறது. 119 00:08:45,026 --> 00:08:46,319 உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி, ஹிசா. 120 00:08:46,820 --> 00:08:48,863 பொறுங்கள், ஹிசா? 121 00:08:48,947 --> 00:08:51,366 நீங்கள்தான் ஓவியத்தில் இருக்கும் பெண்மணியா? 122 00:08:51,449 --> 00:08:52,659 அதை வரைந்ததும் நீங்கள்தான். 123 00:08:52,742 --> 00:08:54,619 ஆனால் நீங்கள் எப்படி இங்கே மாட்டிக்கொண்டீர்கள்? 124 00:08:54,703 --> 00:08:55,704 பாருங்கள், அம்மா? 125 00:08:55,787 --> 00:08:57,122 இந்த பெயிண்ட் புதிதாக இருக்கிறது. 126 00:08:57,205 --> 00:08:59,666 அம்மா! ரஸ்! நான் சொல்வது கேட்கிறதா? 127 00:08:59,749 --> 00:09:02,878 பேண் ஒரு ஓவியத்தை "மேம்படுத்த" முயற்சிப்பாள் என்று எனக்குத் தோன்றவில்லை, 128 00:09:03,753 --> 00:09:05,797 அதுதான் அவளை அங்கே வைத்துவிட்டு 129 00:09:05,881 --> 00:09:07,507 அவள் இடத்தில் அது இங்கே வந்துவிட்டது என்று நினைக்கிறேன். 130 00:09:08,049 --> 00:09:09,634 நிஜமாகத்தான் சொல்கிறாயா? 131 00:09:09,718 --> 00:09:11,678 என் செல்லம் ஓவியத்தில் மாட்டிக்கொண்டிருக்கிறாளா? 132 00:09:11,761 --> 00:09:13,555 இந்தக் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பரிமாணங்களுக்கு 133 00:09:13,638 --> 00:09:15,724 இடையில் உள்ள வெற்றிடங்களில் மாட்டிக்கொள்ளும் ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. 134 00:09:16,224 --> 00:09:19,769 நாம் அவளை வெளியே கொண்டுவந்து அதை மீண்டும் உள்ளே தள்ள வேண்டும். 135 00:09:19,853 --> 00:09:22,522 இது நோபெரா-பூ என்ற முகமற்ற ஆவி. 136 00:09:22,606 --> 00:09:25,108 அவை ஜப்பானிய நாட்டுப்புறக் கதைகளில் அதிகம் குறிப்பிடப்படுபவை. 137 00:09:26,318 --> 00:09:27,736 இது ஹிசா. 138 00:09:27,819 --> 00:09:33,116 செங்கோகு காலத்து கலைஞர் ஒருவர் வரைந்த ஓவியத்தின் அசல் நம்மிடம் இருப்பது எனக்குத் தெரியாது. 139 00:09:35,201 --> 00:09:37,078 எனக்குப் புரிகிறது. 140 00:09:37,162 --> 00:09:40,332 நான் ஒரு கலாச்சாரமற்ற மாலுமி என்று நீங்கள் நினைக்கிறீர்கள், இல்லையா? 141 00:09:40,415 --> 00:09:44,419 சரி, நான் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன், நுண்கலை மீது எனக்கு ஆழமான ஈடுபாடு இருக்கிறது. 142 00:09:44,502 --> 00:09:47,505 அதோடு, அந்த காலத்தில் இவற்றில் சிலவற்றை நான் திருடியிருக்கிறேன். 143 00:09:47,589 --> 00:09:49,633 அதோ இருக்கிறது. 144 00:09:49,716 --> 00:09:53,094 உங்கள் தாத்தா அப்பல்லோ, ஹிசாவின் கலையைப் பற்றி அடிக்கடி விவாதிப்பதைக் கேட்டிருக்கிறேன். 145 00:09:53,178 --> 00:09:56,389 வெளிப்படையாக, அவரது படைப்புகள் உலகில் மிகவும் அரிதானவை. 146 00:09:56,473 --> 00:09:59,184 எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் மிகவும் இளமையாக இருந்தபோதே காணாமல் போய்விட்டார். 147 00:09:59,267 --> 00:10:00,310 அதுதான் என் குடும்பம். 148 00:10:00,393 --> 00:10:02,479 அவர்கள் உங்களைப் பற்றி பேசுகிறார்கள் என்று நினைக்கிறேன். 149 00:10:02,562 --> 00:10:04,189 அவருக்கு என்ன ஆனது? 150 00:10:04,272 --> 00:10:05,732 உறுதியாக யாருக்கும் தெரியாது. 151 00:10:05,815 --> 00:10:09,277 அவர் போன்றவரைப் பற்றிய கதைகள் 500 ஆண்டுகளில் மிகவும் பெரிதுப்படுத்தப்பட்டன. 152 00:10:09,361 --> 00:10:11,404 ஆனால் அப்பல்லோ நினைவுகூர்ந்தது வரை, 153 00:10:11,488 --> 00:10:15,200 ஹிசா தனது வியக்கத்தக்க திறமைக்காக உலகம் முழுவதும் அறியப்பட்டார். 154 00:10:15,283 --> 00:10:19,162 அவரது திறமைகளுக்கு போட்டியாக இருந்த ஒரே நபர் அவரது இரட்டை சகோதரி, யூகாதான். 155 00:10:19,246 --> 00:10:20,664 அவர் மிகவும் திறமைசாலி. 156 00:10:20,747 --> 00:10:22,123 அவருடைய பொருட்களையும் நிறைய திருடியிருக்கிறேன். 157 00:10:22,207 --> 00:10:24,251 அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து திறமைகளை மேம்படுத்திக்கொண்டு, 158 00:10:24,334 --> 00:10:26,086 எப்போதும் தங்களுக்கு தாங்களே சவாலாக இருந்தார்கள். 159 00:10:26,169 --> 00:10:29,923 ஆனால் அவர்கள் வளர வளர நட்புரீதியான போட்டி கசப்பான போட்டியாக மாறியது. 160 00:10:30,966 --> 00:10:36,054 ஒரு நாள், ஷோகன் நாட்டின் சிறந்த கலைஞரைக் கண்டுபிடிக்க ஒரு போட்டியை அறிவித்தார். 161 00:10:36,137 --> 00:10:39,099 ஹிசா அவருடைய மிகவும் வியக்கத்தக்க உருவப்படத்தை வரைந்தார், 162 00:10:39,182 --> 00:10:42,269 யூகா தனது வேலையை ஒருபோதும் ஒப்பிட முடியாததாகிவிடுமோ என்று பயந்தார். 163 00:10:43,687 --> 00:10:47,649 எனவே, நள்ளிரவில், ஹிசாவின் உருவப்படத்தை யூகா அழித்தார். 164 00:10:47,732 --> 00:10:50,610 அப்படித்தான், ஹிசாவுக்கு பதிலாக அவரை ஷோகன் தேர்ந்தெடுப்பார், 165 00:10:50,694 --> 00:10:52,320 அப்படித்தான் நடந்தது. 166 00:10:53,071 --> 00:10:58,535 பொறாமையோடு ஆத்திரமடைந்த ஹிசாவுக்கு ஒரு மந்திர பிரஷ்ஷைப் பயன்படுத்தி, யூகாவை சிக்க வைக்கும் 167 00:10:58,618 --> 00:11:02,914 சிறையை உருவாக்க முடியும் என்று ஒரு தீய சக்தி அல்லது ஆவி ஆசைகாட்டியது. 168 00:11:03,498 --> 00:11:07,878 அவரது சகோதரி இல்லையென்றால், ஹிசா ஷோகனின் விருப்பத்துக்குரியவராக மாறுவார். 169 00:11:08,378 --> 00:11:11,089 யூகா திரும்பி வந்து ஷோகனின் விருப்பத்துக்குரியவராக மாற மாட்டார் என்பதை 170 00:11:11,172 --> 00:11:13,216 உறுதிப்படுத்த ஹிசா விரும்பினார். 171 00:11:13,300 --> 00:11:16,261 எனவே யூகாவை உள்ளேயே வைத்திருக்கும் நோபெரா-பூவின் ஆவிகளால் 172 00:11:16,344 --> 00:11:18,597 ஓவியத்தை நிரப்பினார். 173 00:11:18,680 --> 00:11:22,475 ஹிசா விரைவில் தான் செய்ததற்கு வருந்தி, யூகாவை விடுவிக்க முயற்சித்தார், 174 00:11:22,559 --> 00:11:25,353 ஆனால் தீய சக்தி ஹிசாவுக்கு துரோகம் செய்தது. 175 00:11:27,814 --> 00:11:31,359 தங்கள் சொந்த பொறாமையால் சிறைபடுத்தப்பட்டு இப்போது சகோதரிகள் இருவரும் 176 00:11:31,443 --> 00:11:33,737 நோபெரா-பூவால் வேட்டையாடப்படுகிறார்கள். 177 00:11:39,117 --> 00:11:40,869 அது என்ன விரும்புகிறது என்று நமக்குத் தெரிந்திருக்கலாம். 178 00:11:40,952 --> 00:11:43,038 அதை துரத்தியடிப்பதற்கு அதுவே திறவுகோலாக இருக்கலாம். 179 00:11:43,121 --> 00:11:44,331 நல்ல யோசனை, ரஸ். 180 00:11:44,414 --> 00:11:47,626 நாம் முதலில் அதைக் கண்டுபிடித்தால் நம் கை ஓங்கியிருக்கலாம். 181 00:11:50,921 --> 00:11:54,132 "தட்டையான பெயிண்ட் பிரஷ், செங்கோகு காலத்தின் நடுப்பகுதி." 182 00:11:55,550 --> 00:11:58,345 கண்ணாடி சட்டத்தில் ஓவியத்தைச் சுற்றி இருக்கும் முள் கொடியைப் பாருங்கள். 183 00:11:58,428 --> 00:12:00,472 இவற்றில் சில முட்கள் சிவப்பு நிறத்தில் இருக்கின்றன. 184 00:12:01,014 --> 00:12:02,182 அது விசித்திரமானது. 185 00:12:02,265 --> 00:12:06,186 பார், சிவப்பு முள் கொண்ட கொடி மட்டும்தான் காட்சிப் பெட்டி வழியாக நுழைந்திருக்கிறது. 186 00:12:06,269 --> 00:12:08,772 எனவே நாம் கொடியைப் பின்தொடர்ந்தால்... 187 00:12:08,855 --> 00:12:10,774 நாம் பெயிண்ட் பிரஷை கண்டுபிடிப்போம். 188 00:12:15,320 --> 00:12:17,822 அம்மா! ஸ்டான்லி! கிடைத்துவிட்டது. 189 00:12:17,906 --> 00:12:19,407 அருமையான வேலை செய்தாய், ரஸ். 190 00:12:19,491 --> 00:12:22,827 இந்த அறையிலிருந்து அதை அகற்றி விடுவோம், அதன் மூலம் நம்முடைய அடுத்த நடவடிக்கையை திட்டமிடலாம். 191 00:12:30,293 --> 00:12:32,379 ரஸ், அதை எடுத்துக்கொண்டு இங்கிருந்து போ. 192 00:12:37,717 --> 00:12:40,470 -ரஸ்! -அவனை போக விடு, தீய சக்தியே. 193 00:12:40,554 --> 00:12:42,138 லேரி, நாம் அவசரப்பட வேண்டாம். 194 00:12:47,185 --> 00:12:48,478 லேரி, இல்லை! 195 00:12:56,319 --> 00:12:58,405 ரஸ், அது உன்னைக் காயப்படுத்தியதா? 196 00:12:58,488 --> 00:12:59,489 நான் நன்றாக இருக்கிறேன். 197 00:12:59,573 --> 00:13:01,825 அவற்றுக்கு ஏன் பெயிண்ட் பிரஷ் வேண்டும் என்பது இப்போது நமக்குத் தெரிந்துவிட்டது. 198 00:13:01,908 --> 00:13:05,245 அவற்றை தடுத்து, நம்மைக் காப்பாற்றுவது ஒன்றே ஒன்று அதுதான். 199 00:13:05,328 --> 00:13:06,913 ஆனால் லேரி எங்கே போனது? 200 00:13:20,969 --> 00:13:24,764 நான் ஒரு ஆக்டோபஸுடன் எட்டு சுற்றுகள் மல்யுத்தம் செய்தது போல இருக்கிறது. 201 00:13:28,602 --> 00:13:31,354 யூகா. நீங்கள் யூகா. 202 00:13:31,438 --> 00:13:33,565 நான் உங்கள் ஓவியங்களின் மிகப்பெரிய ரசிகன். 203 00:13:33,648 --> 00:13:36,359 அவர்கள் கள்ளச்சந்தையில் ஏராளமான பணத்துக்கு வாங்குவது வழக்கம், 204 00:13:36,443 --> 00:13:38,737 ஆனால் நான் எப்பொழுதும் எனக்காக சிலவற்றை வைத்துக்கொண்டேன். 205 00:13:42,782 --> 00:13:45,076 இல்லை. பொறுங்கள். நான் உங்களை காயப்படுத்த மாட்டேன். 206 00:13:45,160 --> 00:13:46,745 நான் ஒரு நல்ல பையன், பார்த்தீர்களா? 207 00:13:48,288 --> 00:13:50,332 என்ன? என் முகத்தில் ஏதாவது இருக்கிறதா? 208 00:14:14,648 --> 00:14:16,274 அவை இப்போது எங்கே போகின்றன? 209 00:14:18,318 --> 00:14:19,653 யூகா. 210 00:14:20,237 --> 00:14:22,656 இது அவருடையது என்றால், அவர் பிரச்சினையில் இருக்கிறார். 211 00:14:29,537 --> 00:14:32,791 நாம் பெயிண்ட் பிரஷைப் பயன்படுத்தலாம் என்பதை தெரிந்துகொண்டது நம்பிக்கையளிக்கும் அதே வேளையில், 212 00:14:32,874 --> 00:14:35,919 நோபெரா-பூவை கொல்ல பிரஷில் போதுமான பெயிண்ட் இல்லை. 213 00:14:36,002 --> 00:14:39,297 நல்ல கருத்து. பெரிய சேதத்தை ஏற்படுத்த நமக்கு அதிக பெயிண்ட் தேவை. 214 00:14:39,381 --> 00:14:40,715 நிறைய. 215 00:14:53,103 --> 00:14:54,354 உலர்ந்துவிட்டது. 216 00:14:54,437 --> 00:14:55,564 கொஞ்சம் தண்ணீர் வேண்டும். 217 00:14:55,647 --> 00:14:57,023 கிடைத்தது என்று வைத்துக்கொள்ளுங்கள். 218 00:14:59,192 --> 00:15:02,237 மறைந்திரு, அந்த பிரஷை தொலைத்துவிடாதே. 219 00:15:02,320 --> 00:15:04,823 அவை அதை ஓவியத்திற்குள் இழுத்துவிட்டால், கதை முடிந்தது. 220 00:15:04,906 --> 00:15:06,491 அதோடு உன் சகோதரியின் கதையும்தான். 221 00:15:08,368 --> 00:15:11,496 ஹிசா, நீங்கள் கவலைப்படுவது தெரிகிறது, நாம் யூகாவுக்கு உதவப் போகிறோம், 222 00:15:11,580 --> 00:15:13,873 ஆனால் இந்த சாபத்தை எப்படி முடிவுக்கு கொண்டுவருவது என்று கண்டுபிடிக்க வேண்டும். 223 00:15:14,749 --> 00:15:18,128 இந்த ஒருமுறை, ரஸ் இந்த மர்மங்களைத் தீர்க்கும் விதத்தை நினைத்து நான் பொறாமைப்படுகிறேன். 224 00:15:19,421 --> 00:15:20,338 அதுதான். 225 00:15:20,422 --> 00:15:23,049 இது உங்கள் பொறாமையின் சிறை என்று ஸ்டான்லி சொன்னது. 226 00:15:23,133 --> 00:15:25,969 எனவே நாம் செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் சகோதரி உடனான உங்கள் உறவை 227 00:15:26,052 --> 00:15:28,179 சரிசெய்தால், விடுபட்டுவிடுவீர்கள். 228 00:15:29,848 --> 00:15:31,266 எவ்வளவு சோகமாக இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. 229 00:15:31,766 --> 00:15:33,393 நிச்சயமாக நீங்கள் அவரை மிகவும் மிஸ் செய்கிறீர்கள். 230 00:15:33,476 --> 00:15:35,729 உங்கள் மன்னிப்பை அவர் ஏற்க மாட்டார் என்று பயப்படுகிறீர்களா? 231 00:15:46,531 --> 00:15:48,575 என்னை நம்புங்கள், எனக்குப் புரிகிறது. 232 00:15:48,658 --> 00:15:50,285 நான் என் அண்ணனைப் பார்த்து பொறாமைப்படுவேன். 233 00:15:50,368 --> 00:15:54,623 அவன் மிகவும் புத்திசாலி, ஒருபோதும் சிக்கலில் சிக்க மாட்டான், அது என்னை மிகவும் கோபப்படுத்தும். 234 00:15:54,706 --> 00:15:56,958 சில சமயங்களில் அவனுடன் பேசக்கூட மனம் வராது. 235 00:15:57,667 --> 00:15:59,711 500 ஆண்டுகளுக்கு அல்ல. ஒருவேளை, ஒரு வாரம் இருக்கலாம், 236 00:15:59,794 --> 00:16:04,174 ஆனால் பிறகு நிஜமாகவே அவனை மிஸ் செய்ய தொடங்குவேன், பிறகு சமாதானமாகிவிடுவோம். 237 00:16:04,841 --> 00:16:08,053 நீங்கள் இருவரும் சண்டையை முடித்துக்கொள்வதை நிச்சயமாக யூகா விரும்புவார். 238 00:16:08,136 --> 00:16:09,137 என்ன சொல்கிறீர்கள்? 239 00:16:14,100 --> 00:16:16,978 சரி, ஹிசா, யூகாவை கண்டுபிடித்து மன்னிப்பு கேளுங்கள். 240 00:16:17,062 --> 00:16:20,190 நோபெரா-பூவிடம் இருந்து நான் உங்களை பாதுகாப்பேன். உங்களால் இதைச் செய்ய முடியும். 241 00:16:29,783 --> 00:16:31,785 ஹேய், முட்டாள் நோபெரா-பூக்களே! 242 00:16:31,868 --> 00:16:34,788 இங்கே பாருங்கள்! முடிந்தால் என்னைப் பிடியுங்கள். 243 00:16:38,667 --> 00:16:40,377 யூகா! 244 00:16:40,961 --> 00:16:42,629 யூகா! 245 00:16:44,297 --> 00:16:45,757 அது உங்கள் சகோதரி, தோழி. 246 00:16:46,341 --> 00:16:48,051 உங்களுக்காக நான் அவற்றை திசைதிருப்புகிறேன். 247 00:16:49,886 --> 00:16:51,513 இங்கே பாருங்கள், முட்டாள்களே. 248 00:16:51,596 --> 00:16:56,685 முகம் இல்லாத ஒருவர் இவ்வளவு அசிங்கமாக இருப்பார் என்று நான் நினைத்ததே இல்லை. 249 00:16:56,768 --> 00:16:57,978 யூகா! 250 00:16:58,562 --> 00:16:59,771 ஹிசா! 251 00:17:29,301 --> 00:17:30,760 ஐயோ! 252 00:17:58,955 --> 00:18:01,541 நீங்கள் இதில் மிகவும் மோசமாக இருக்கிறீர்கள். 253 00:18:01,625 --> 00:18:04,377 உங்களால் 500 ஆண்டுகளில் இரண்டு பேரைக் கூட பிடிக்க முடியவில்லை. 254 00:18:04,461 --> 00:18:06,379 நான் நன்றாக இருப்பேன். 255 00:18:06,463 --> 00:18:08,006 லேரியா? 256 00:18:08,089 --> 00:18:09,341 பேண்டோரா! 257 00:18:09,424 --> 00:18:13,178 உன்னைக் கண்டுபிடித்ததில் மகிழ்ச்சி, குழந்தை. நான் உன்னைக் காப்பாற்ற வந்திருக்கிறேன். 258 00:18:15,555 --> 00:18:18,016 சரி. நான் தற்செயலாக மாட்டிக்கொண்டேன். 259 00:18:18,099 --> 00:18:19,684 உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி, நண்பா. 260 00:18:38,370 --> 00:18:40,121 ரஸ், எங்களிடம் கொஞ்சம் பெயிண்ட் இருக்கிறது. 261 00:18:40,205 --> 00:18:41,498 நீ இங்கே வர வேண்டும். 262 00:18:56,972 --> 00:18:58,139 அம்மா, பிடியுங்கள்! 263 00:19:08,858 --> 00:19:11,111 பிடித்துவிட்டேன். அற்புதமாக வீசினாய். 264 00:19:12,445 --> 00:19:13,530 நன்றி, அப்பா. 265 00:19:14,364 --> 00:19:16,950 உனக்கு இது வேண்டுமா, இல்லையா? வந்து வாங்கிக்கொள். 266 00:19:33,508 --> 00:19:36,303 -நாம் என்ன செய்யப் போகிறோம்? -தெரியவில்லை. நாம் சிக்கிக்கொண்டோம். 267 00:19:41,141 --> 00:19:42,475 இல்லை! 268 00:20:19,387 --> 00:20:20,847 அவற்றுக்கு இது தேவைதான். 269 00:20:20,931 --> 00:20:23,767 யாரும் லேரியுடன் மோதிவிட்டு, அந்த கதையைச் சொல்ல உயிரோடு இருந்ததில்லை. 270 00:20:37,322 --> 00:20:39,658 பேண்டோரா! லேரி! நீங்கள் தப்பித்துவிட்டீர்கள். 271 00:20:39,741 --> 00:20:41,243 ஓ, நன்றி கடவுளே. 272 00:20:41,326 --> 00:20:44,412 -ரஸ், உன் மீது கோபப்பட்டதற்கு வருந்துகிறேன். -அச்சச்சோ. 273 00:20:44,496 --> 00:20:46,081 என் விலா எலும்பை உடைத்துவிட்டாய் என்று நினைக்கிறேன். 274 00:20:46,665 --> 00:20:49,459 அவர் இப்போது இங்கே இல்லை என்றாலும், நீ இன்னும் அப்பாவுடன் நெருக்கமாக 275 00:20:50,210 --> 00:20:52,045 இருப்பது போல தெரிவதால் பொறாமைப்பட்டேன். 276 00:20:52,128 --> 00:20:55,173 நீ அவருடன் அதிக காலம் இருந்தாய், அவருடனான அதிக நினைவுகளையும் கொண்டிருக்கிறாய். 277 00:20:55,799 --> 00:20:58,218 நான் எப்போதும் அதை எட்டிப்பிடிக்க முயற்சிப்பது போல தோன்றுகிறது. 278 00:20:58,301 --> 00:20:59,427 பரவாயில்லை, பேண். 279 00:21:00,053 --> 00:21:02,764 நீ அப்பாவுடன் விளையாடுவது எல்லாவற்றையும் பார்த்து நான் பொறாமைப்படுவேன். 280 00:21:02,847 --> 00:21:05,433 நானும் அவரும் அப்படி விளையாட்டுதனத்தோடு இருக்க ஆசைபட்டிருக்கிறேன். 281 00:21:05,517 --> 00:21:10,146 ஆனால் இப்போது, நாம் செய்யும் எல்லாம், சலிப்பான விஷயங்கள் கூட, 282 00:21:10,772 --> 00:21:12,399 அவரை மீண்டும் இங்கு கொண்டு வர உதவும். 283 00:21:14,025 --> 00:21:15,694 நீ திரும்பி வந்ததில் மகிழ்ச்சி. 284 00:21:16,319 --> 00:21:18,989 நான் நினைத்தது தவறு. இது சலிப்பாக இல்லை. 285 00:21:19,072 --> 00:21:21,866 அங்கே ஒரு முழு உலகமே இருக்கிறது. ஹிசாவும் யூகாவும்... 286 00:21:22,617 --> 00:21:25,078 பொறுங்கள், ஹிசாவும் யூகாவும் எங்கே? 287 00:21:35,005 --> 00:21:38,592 நன்றி, பேண்டோரா பேண்டோரா. 288 00:21:38,675 --> 00:21:40,468 உதவியதில் மகிழ்ச்சியடைந்தேன், ஹிசா. 289 00:21:40,552 --> 00:21:42,053 இதோ, இதை வாங்கிக்கொள்ளுங்கள். 290 00:21:44,347 --> 00:21:46,016 மகிழ்ச்சி, யூகா. 291 00:21:51,980 --> 00:21:54,900 சரி, நாம் அட்டவணைப்படுத்துவதற்கு திரும்ப வேண்டும். 292 00:21:54,983 --> 00:21:59,112 நாம் செய்யலாம், அல்லது நீ அப்பாவின் அலுவலகத்திற்கு வந்து, 293 00:21:59,195 --> 00:22:01,114 என்னுடன் அவரது ஆராய்ச்சி காணொளிகளைப் பார்க்கலாம். 294 00:22:01,197 --> 00:22:04,200 நீ இங்கே இருந்து வேலை செய்ய விரும்பவில்லை என்றால் தவிர. 295 00:22:04,284 --> 00:22:06,202 வாய்ப்பே இல்லை. போகலாம். 296 00:23:02,342 --> 00:23:04,344 வசனத் தமிழாக்கம் அருண்குமார்