1 00:01:19,331 --> 00:01:22,250 செல்டிக் மேலங்கி 2 00:01:22,834 --> 00:01:26,296 "உங்களை மிஸ் செய்கிறேன். நான் ஸ்டான்லியை கொடூரமான ஒன்றிடமிருந்து காப்பாற்றி"... 3 00:01:26,880 --> 00:01:30,967 "கொடூரமானது" என்று சொல்வதற்கு பதிலாக "பயமுறுத்துவது" என்று சொல்ல வேண்டுமா? 4 00:01:31,051 --> 00:01:33,094 நீ இதை மிகைப்படுத்தி யோசிக்கிறாய். 5 00:01:33,178 --> 00:01:36,389 கடந்த மாதம் மந்திரக் கிண்ணம் கொஞ்ச நேரத்திற்கு மட்டுமே அப்பாவுடன் தொடர்பை ஏற்படுத்தியது. 6 00:01:36,473 --> 00:01:39,434 நம்மிடம் சொல்வதற்கு நிறைய இருந்தது. செயல்திறனுடன் இருப்பது முக்கியம். 7 00:01:39,517 --> 00:01:42,312 செயல்திறனுடன் இருப்பது முக்கியம். 8 00:01:45,565 --> 00:01:47,567 அம்மா, உங்கள் அட்டை எங்கே? 9 00:01:48,485 --> 00:01:50,904 நான் நன்றாக இருக்கிறேன், செல்லம். மனதிலிருப்பதை பேசுவேன். 10 00:01:50,987 --> 00:01:52,614 அருமை. எல்லோரும் தயாரா? 11 00:01:52,697 --> 00:01:53,907 நிச்சயமாக நான் தயார். 12 00:01:53,990 --> 00:01:57,452 கடந்தமுறை பெற்ற அனுபவத்திற்குப் பிறகு ஸ்டான்லி கிண்ணத்தின் அருகே போக பயப்படுகிறான். 13 00:01:57,535 --> 00:01:58,828 நான் பயப்படவில்லை. 14 00:01:58,912 --> 00:02:00,997 யாராவது வருகிறார்களா என்று பார்க்கிறேன். 15 00:02:03,291 --> 00:02:05,919 முதலில், அப்பாவின் தனிப்பட்ட பொருள். 16 00:02:06,836 --> 00:02:10,173 இதை உன் அப்பாவின் 30-வது பிறந்தநாளுக்குக் கொடுத்தேன். 17 00:02:10,257 --> 00:02:13,552 குழந்தை பருவத்தில் அவருக்குப் பிடித்த பொம்மை இதுதான், ஆனால் அவர் அதை தொலைத்துவிட்டார். 18 00:02:13,635 --> 00:02:16,638 நான் இதை ஒரு ஆன்லைன் ஏலத்தில் வென்றேன். 19 00:02:17,389 --> 00:02:18,932 குட்பை, பிரம்மிட் பீட்டர். 20 00:02:21,685 --> 00:02:23,812 இப்போது உங்கள் காணிக்கை, அம்மா. 21 00:02:23,895 --> 00:02:27,983 இந்த பெயர் பட்டை என் முதல் முக்கியமான அருங்காட்சியக வேலையில் கொடுத்தது. 22 00:02:31,403 --> 00:02:32,612 குழந்தைகளே. 23 00:02:32,696 --> 00:02:33,863 அப்பா! 24 00:02:33,947 --> 00:02:34,948 குழந்தைகளே, நீங்கள்தானா? 25 00:02:35,031 --> 00:02:37,701 "உங்களை மிஸ் செய்கிறேன். ஸ்டான்லியை ஒரு பயமுறுத்தும் தூதுவரிடமிருந்து காப்பாற்றினேன்." 26 00:02:37,784 --> 00:02:39,703 -அலெக்ஸ், உங்களுக்கு ஒன்றுமில்லையே? -நான் ஒரு ஓவியத்தில் மாட்டிக்கொண்டேன். 27 00:02:39,786 --> 00:02:41,997 -"நிறைய கலைப்பொருட்களை திருப்பிக் கொடுத்தோம்"... -முள் கொடி சிவப்பாக மாறுகிறது. 28 00:02:42,080 --> 00:02:44,124 பேண், கத்துவதை நிறுத்து! அப்பா, பேசுங்கள். 29 00:02:44,207 --> 00:02:46,209 என்னால் முடியாது. விரைவாக போக வேண்டும். 30 00:02:46,293 --> 00:02:48,044 அவை என்னைக் கண்டுபிடிக்க விரும்பவில்லை. 31 00:02:48,128 --> 00:02:50,505 -"அவை" என்றால் யார்? -அவற்றை அடித்து வீழ்த்துங்கள். 32 00:02:50,589 --> 00:02:53,758 அலெக்ஸ், எந்த கலைப்பொருளை திரும்பிக் கொடுக்க வேண்டும் என முள் கொடி சுட்டிக்காட்டுகிறது. 33 00:02:53,842 --> 00:02:57,262 நீங்கள் செய்வது வேலை செய்கிறது என்று நினைக்கிறேன். என்னால் உணர முடிகிறது. 34 00:02:57,345 --> 00:02:59,556 முள் கொடி சொல்வதை தொடர்ந்து கேளுங்கள். 35 00:03:01,308 --> 00:03:03,143 உங்களை மிஸ் செய்கிறேன், அலெக்ஸ். 36 00:03:05,896 --> 00:03:07,314 உங்கள் அப்பா சொன்னதைக் கேட்டீர்கள். 37 00:03:07,397 --> 00:03:09,900 அடுத்த கலைப்பொருளுக்கு நாம் முள் கொடியை பின்தொடர வேண்டும். 38 00:03:09,983 --> 00:03:12,944 சரி, ஹிசா ஓவியத்தைச் சுற்றிலும் சிவப்பு முட்கள் இருந்தன. 39 00:03:13,028 --> 00:03:14,654 பெயிண்ட் பிரஷை சுற்றிலும்தான். 40 00:03:14,738 --> 00:03:19,284 ஆனால் அதன் சாபத்தைப் போக்கிய பிறகு, முட்கள் திரும்ப பச்சையாக மாறிவிட்டன. 41 00:03:19,367 --> 00:03:23,663 சிவப்பு முட்கள் சுற்றியிருக்கும் கலைப்பொருள்தான் அடுத்து நாம் திருப்பிக் கொடுக்க வேண்டியவை. 42 00:03:23,747 --> 00:03:27,000 இப்போது என்னுடைய கருத்தும் அதேதான். 43 00:03:27,083 --> 00:03:29,586 சிவப்பு முட்களைத் தேடுவோம். 44 00:04:07,791 --> 00:04:10,377 சிவப்பு முட்கள். சிவப்பு முட்களைப் பார்த்துவிட்டேன். 45 00:04:13,547 --> 00:04:17,800 சத்தியமாக சிவப்பு முட்களைத்தான் தேடினேன், ஆனால் இது என் கண்ணில்பட்டது. 46 00:04:18,384 --> 00:04:20,428 ஒரு கடல் கொள்ளையன் ஆபரணங்கள் அணிய வேண்டும். 47 00:04:25,350 --> 00:04:26,768 முள் கொடி நம்மை மேலங்கியிடம் கூட்டி வந்திருக்கிறது, 48 00:04:26,851 --> 00:04:29,604 எனவே நாம் திருப்பிக் கொடுக்க வேண்டிய அடுத்த சபிக்கப்பட்ட பொருள் இதுவாகத்தான் இருக்க வேண்டும். 49 00:04:29,688 --> 00:04:31,690 கேள்வி என்னவென்றால் எப்படி? 50 00:04:31,773 --> 00:04:34,150 இதை அணிந்து பார்க்கிறேன். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். 51 00:04:34,901 --> 00:04:38,154 கேட்க நன்றாக இருக்கிறது, பேண், இது மிகவும் ஆபத்தானது. 52 00:04:38,238 --> 00:04:39,864 நான் இருக்குமிடத்தில் ஆபத்து இருக்கும். 53 00:04:39,948 --> 00:04:41,825 ஸ்டான்லி, மேலங்கியை எனக்கு மாட்டு. 54 00:04:56,381 --> 00:04:57,382 லேரி? 55 00:04:57,465 --> 00:05:01,803 புயலின் மையத்தில் வினோதமான உயிரினங்களைப் பார்த்தேன். 56 00:05:01,887 --> 00:05:03,138 அது... 57 00:05:04,222 --> 00:05:06,391 சிலிர்ப்பாக இருந்தது. 58 00:05:07,267 --> 00:05:09,477 இதற்கு என்ன அர்த்தம் என்று நினைக்கிறீர்கள்? 59 00:05:10,854 --> 00:05:14,149 நான் பட்டப்படிப்பு பள்ளியில் பழங்கால ஜவுளிகள் பற்றி வகுப்பு எடுத்தேன். 60 00:05:14,232 --> 00:05:15,984 இது கெல்டிக் வடிவமைப்பு. 61 00:05:16,067 --> 00:05:18,653 எனவே கெல்டிக் பொருட்கள் எங்கிருந்து வந்திருந்தாலும் நாம் அதைத் திருப்பித் தர வேண்டும். 62 00:05:18,737 --> 00:05:21,448 அது வடக்கு ஐரோப்பாவில் எங்கிருந்து வேண்டுமானாலும் வந்திருக்கலாம். 63 00:05:22,032 --> 00:05:23,241 கொஞ்சம் பொறுங்கள். 64 00:05:23,325 --> 00:05:25,952 நானும் லேரியும் அட்டவணைப்படுத்தும்போது இதைப் பார்த்ததாக ஞாபகம். 65 00:05:26,036 --> 00:05:27,746 ஸ்காட்லாந்து இங்கிலாந்து 66 00:05:28,705 --> 00:05:32,584 -வரைபடத்தில் அந்த தீவையே எனக்குத் தெரியவில்லை. -நம்மிடம் உள்ள சிறந்த தடயம் இதுதான். 67 00:05:32,667 --> 00:05:36,004 மார்ஜி ஸ்காட்லாந்திற்குச் செல்வதற்கான மனநிலையில் இருக்கிறாரா என்று பார்க்க அவரை அழைக்கிறேன். 68 00:05:43,637 --> 00:05:46,014 அலெக்ஸ் இன்னமும் வேலையில்தான் மூழ்கி இருக்கிறாரா? 69 00:05:46,765 --> 00:05:50,727 ஆம். சில நேரங்களில் அவர் தன்னையே மறந்துவிடுகிறார். 70 00:05:50,810 --> 00:05:52,729 அது கஷ்டமாக இருக்க வேண்டும். 71 00:05:52,812 --> 00:05:54,439 குழந்தைகளுக்கு அது மிகவும் கடினமாக இருந்தது. 72 00:05:54,522 --> 00:05:57,484 சமீபகாலமாக அவருடன் நீண்ட நேரத்தை செலவழிக்க முடியவில்லை. 73 00:05:57,567 --> 00:05:59,402 உனக்கு கடினமாக இருக்கும் என்றேன். 74 00:05:59,486 --> 00:06:00,779 நான் நன்றாக இருக்கிறேன். 75 00:06:00,862 --> 00:06:04,115 நிஜமாகவா? நீ கவலையில் இருப்பது போல தெரிகிறது. 76 00:06:04,699 --> 00:06:07,118 அது வெறும் குடும்ப பிரச்சினைதான். 77 00:06:08,203 --> 00:06:11,289 இந்த விஷயத்தைப் பற்றி பேச நீ தயாராக இருக்கும்போது, கேட்க நான் இருக்கிறேன் 78 00:06:11,373 --> 00:06:12,749 என்பதை தெரிந்துகொள். 79 00:06:12,832 --> 00:06:14,167 எந்த முன்முடிவும் எடுக்காமல் கேட்பேன். 80 00:06:16,169 --> 00:06:17,671 ஹேய், நான் தீவைப் பார்க்கிறேன். 81 00:06:22,259 --> 00:06:24,010 என்ன அது? 82 00:06:26,763 --> 00:06:27,973 வெறும் அதிர்வுதான். 83 00:06:28,056 --> 00:06:29,599 ஒன்றும் பிரச்சினை இல்லையே? 84 00:06:29,683 --> 00:06:30,809 ஓ, இல்லை. 85 00:06:30,892 --> 00:06:35,480 ஒரு முறை நானும் ரூஃபஸும் ஒரு துருவ சுழலில் அவசரமாக தரையிறங்கினோம். 86 00:06:35,564 --> 00:06:37,524 எங்களால் கொஞ்சம் மூடுபனியை சமாளிக்க முடியும். 87 00:06:38,108 --> 00:06:40,569 இதை என்னால் சமாளிக்க முடியுமா என்று தெரியவில்லை. 88 00:07:06,344 --> 00:07:08,597 அது மோசமான சத்தமாக இருந்தது. மோசமானது நடந்ததா? 89 00:07:08,680 --> 00:07:11,099 ஆம், அது மோசம்தான். 90 00:07:18,523 --> 00:07:20,525 எங்களில் ஒருவர் உங்களுக்கு உதவ இங்கேயே இருக்கிறோம். 91 00:07:20,609 --> 00:07:24,070 வேண்டாம், உங்கள் வேலையைப் பாருங்கள். நான் ரூஃபஸைப் பார்த்துக்கொள்கிறேன். 92 00:07:24,154 --> 00:07:27,991 நாங்கள் ஒரு நல்ல அணி. சரிதானே, பழைய நண்பா? 93 00:07:31,620 --> 00:07:34,247 மேலங்கியின் சாபம் இந்த கப்பல் விபத்துகளுடன் தொடர்புடையது என்று நினைக்கிறீர்களா? 94 00:07:34,331 --> 00:07:38,460 இருக்கலாம். இங்கே நாம் பேச யாராவது இருக்கிறார்களா என்று வியக்கிறேன். 95 00:07:44,216 --> 00:07:47,510 நமக்கு முன்னால் சில அங்குலங்களுக்கு மேல் என்னால் பார்க்க முடியவில்லை. 96 00:07:50,847 --> 00:07:51,890 ஹேய், குடும்பமே! 97 00:07:51,973 --> 00:07:53,475 இதைப் பாருங்கள்! 98 00:07:54,142 --> 00:07:55,310 நிஜமாகவா? 99 00:07:55,393 --> 00:07:59,564 அப்பா கல்லாக மாறியிருக்கிறார், நீ குச்சிகளை சேகரிக்கிறாயா? 100 00:08:00,565 --> 00:08:03,902 இல்லை. நாம் இவற்றை பயன்படுத்தி மூடுபனியில் வழியைக் கண்டுபிடிப்போம். 101 00:08:04,402 --> 00:08:07,197 உண்மையில், அது நல்ல யோசனை. 102 00:08:09,616 --> 00:08:11,993 நாம் எப்படி மேலங்கியின் சாபத்தைப் போக்கப் போகிறோம்? 103 00:08:12,077 --> 00:08:14,037 இந்த தீவு காலியாக இருக்கிறது. 104 00:08:14,120 --> 00:08:15,580 வேறு என்ன எதிர்பார்க்கிறாய்? 105 00:08:15,664 --> 00:08:18,416 "உங்கள் சபிக்கப்பட்ட மேலங்கியை இங்கே திரும்ப வையுங்கள்" என்ற அறிவிப்பு பலகை. 106 00:08:18,500 --> 00:08:19,751 ரஸ்? 107 00:08:19,834 --> 00:08:21,670 எனக்கு ஒன்றுமில்லை. தடுக்கிவிட்டது. 108 00:08:26,049 --> 00:08:28,969 இது அணில் தொல்லையில் இருக்கும் நம் முற்றம் போல இருக்கிறது. 109 00:08:30,220 --> 00:08:32,097 இந்த எலும்புகள் புதிதாக இருக்கின்றன. 110 00:08:32,179 --> 00:08:35,600 யாரோ அல்லது எதுவோ சமீபத்தில் மீனை சாப்பிட்டிருக்கிறது. 111 00:08:35,683 --> 00:08:38,270 "எதுவோ" என்று என்ன சொல்கிறீர்கள்? 112 00:08:38,352 --> 00:08:40,480 அந்த நபருக்குத் தெரியும் என்று நம்புகிறேன். 113 00:08:42,190 --> 00:08:43,024 ஹலோ? 114 00:08:45,318 --> 00:08:47,737 ஹலோ? எங்களுக்கு உதவ முடியுமா? 115 00:08:53,243 --> 00:08:56,413 ஸ்கை கேட்டுக்கொண்டபடி, கிழக்கு அறைகளில் உள்ள சிவப்பு முட்களை வரைபடமாக்கி இருக்கிறேன். 116 00:08:57,455 --> 00:08:58,665 மேற்குப் பக்கம் எப்படி? 117 00:09:00,208 --> 00:09:01,376 நல்ல முன்னேற்றம் இருக்கிறது. 118 00:09:02,002 --> 00:09:04,546 ஓ, லேரி, இது கலைத்திறன்மிக்கது. 119 00:09:04,629 --> 00:09:05,797 எனக்கு எதுவும் தெரியாது. 120 00:09:06,381 --> 00:09:08,508 வழக்கமான புதையல் வரைபட வடிவம். 121 00:09:08,592 --> 00:09:11,887 ஹிசாவின் ஓவியத்தில் இருந்தது என்னுடைய கலையின் மீதான காதலை நினைவுபடுத்தியது. 122 00:09:11,970 --> 00:09:16,808 நான் நீண்ட காலமாக எனது ஆக்கப்பூர்வ பக்கத்தை ஆராயவில்லை. இது புத்துணர்ச்சி அளிக்கிறது. 123 00:09:17,392 --> 00:09:20,645 உன் வரைபடத்தைக் கொடு, ஸ்டான். ஒன்று சேர்த்து இன்றைய வேலையை முடிப்போம். 124 00:09:21,313 --> 00:09:23,356 இது ஒரு நடந்துகொண்டிருக்கும் வேலை. 125 00:09:28,528 --> 00:09:30,530 இருந்தாலும் இது வரைபடம்தான். 126 00:09:30,614 --> 00:09:32,032 திட்டத்தில் மாற்றம். 127 00:09:32,741 --> 00:09:34,910 நாம் ஒன்றாக கிழக்கு அறைகளை ஆய்வு செய்வோம். 128 00:09:34,993 --> 00:09:38,288 சிவப்பு முட்களை வரைபடத்தில் நான் அடையாளம் காட்டுகிறேன், நீ அவற்றை வரை. 129 00:09:39,205 --> 00:09:41,958 இங்கே எல்லாவற்றையும் நான்தான் செய்ய வேண்டும். 130 00:09:46,504 --> 00:09:48,590 நம் மர்மமான தோழி எங்கே சென்றாள்? 131 00:09:51,218 --> 00:09:53,637 நாம் அங்கே தேட தொடங்கலாம் என்று சொல்கிறேன். 132 00:10:06,566 --> 00:10:09,736 ஹாய், நாங்கள் உன்னை பயமுறுத்த நினைக்கவில்லை. நான் ஸ்கை வேண்டர்ஹூவன். 133 00:10:09,819 --> 00:10:11,112 நான் விரும்பினேன்... 134 00:10:13,406 --> 00:10:14,950 சரி, அது முரட்டுத்தனமாக இருந்தது. 135 00:10:16,409 --> 00:10:17,953 அவள் பயந்திருப்பது போல தெரிகிறது. 136 00:10:18,036 --> 00:10:20,413 நான் அவளிடம் தனியாக பேச முயற்சிப்பது எப்படி? 137 00:10:20,497 --> 00:10:21,748 தனியாக. 138 00:10:21,831 --> 00:10:23,541 அந்த வழியில் அச்சுறுத்தல் குறைவாக இருக்கும். 139 00:10:23,625 --> 00:10:27,837 நீங்கள் மார்ஜிக்கு விமானத்தில் உதவச் செல்லுங்கள், நான் உங்களை மீண்டும் அங்கே சந்திக்கிறேன். சரியா? 140 00:10:35,095 --> 00:10:37,430 தயவுசெய்து, உன்னைக் காயப்படுத்த விரும்பவில்லை. 141 00:10:37,514 --> 00:10:39,474 அம்மாவை உளவு பார்ப்பது எனக்குப் பிடிக்கவில்லை. 142 00:10:39,558 --> 00:10:43,103 நாம் அவரை இங்கே தனியாக விட முடியாது, ரஸ். அந்த பெண் பயமுறுத்துகிறாள். 143 00:10:43,186 --> 00:10:44,813 அம்மாவுக்கு நம் உதவி தேவைப்பட்டால்? 144 00:10:45,939 --> 00:10:49,568 இந்தத் தீவுக்கு சொந்தமான ஒன்றைத் திருப்பித் தர விரும்புகிறோம், 145 00:10:49,651 --> 00:10:51,319 ஆனால் அதை எப்படி செய்வது என்று தெரியவில்லை. 146 00:10:51,403 --> 00:10:53,405 அதுதான் நாங்கள் இங்கே வந்ததற்கு ஒரே காரணம். 147 00:10:53,488 --> 00:10:56,032 நீ சில கேள்விகளுக்கு பதில் சொன்னால், நாங்கள் உன்னைத் தொந்தரவு செய்வதை விட்டுவிட்டு, 148 00:10:56,116 --> 00:10:57,784 நீ மீண்டும் தோண்டுவதற்கு... 149 00:10:58,368 --> 00:10:59,327 விட்டுவிடுவோம். 150 00:10:59,411 --> 00:11:01,162 நீ ஒரு தோட்டக்காரியா? 151 00:11:01,246 --> 00:11:03,915 என்னிடம்... என்னிடம் ஒரு மூலிகை தோட்டம் இருந்தது. 152 00:11:03,999 --> 00:11:06,334 நான் அந்த எண்ணங்களில் மூழ்கியிருந்தேன். 153 00:11:06,418 --> 00:11:08,962 உண்மை என்னவென்றால், என் கணவர் கல்லாக மாறிவிட்டார். 154 00:11:09,045 --> 00:11:13,592 அதில் மோசமான விஷயம், அது நடக்கும் என்று தெரிந்தும், அவர் என்னிடம் ஒருபோதும் சொல்லவில்லை. 155 00:11:13,675 --> 00:11:18,054 இப்போது, சாத்தியமற்றது போல தோன்றும் இந்த விஷயங்களை செய்ய என் பிள்ளைகளை வழிநடத்துகிறேன், 156 00:11:18,138 --> 00:11:21,099 ஆனால் சில நேரங்களில், நான் அவர்களைப் போலவே பயப்படுகிறேன். 157 00:11:22,684 --> 00:11:26,563 நாங்கள் அலெக்ஸுடன் மாதத்திற்கு ஒருமுறை கொஞ்சம் பேசுவோம், 158 00:11:26,646 --> 00:11:29,566 ஆனால் பிள்ளைகள்தான் பெரும்பாலும் பேசுவார்கள். 159 00:11:29,649 --> 00:11:31,610 என்னால் ஹலோ மட்டும்தான் சொல்ல முடியும். 160 00:11:31,693 --> 00:11:34,696 அவர்கள் தங்கள் அப்பாவை மிஸ் செய்வது தெரிகிறது, ஆனால் நான் என் கணவரை மிஸ் செய்கிறேன். 161 00:11:35,488 --> 00:11:37,490 அம்மாவுக்கு கொஞ்சம் நேரம் தேவை, பேண்டோரா. 162 00:11:38,158 --> 00:11:39,826 மீண்டும் கடற்கரைக்குச் செல்வோம். 163 00:11:41,661 --> 00:11:44,956 எல்லாவற்றையும்விட என் குடும்பம்தான் எனக்கு மிகவும் பிடித்தது. 164 00:11:45,040 --> 00:11:49,461 ஆனால் என் சொந்த உணர்வுகளுக்கு அதில் இடமில்லை. 165 00:11:56,343 --> 00:11:58,428 இதோ இருக்கிறாய். தொந்தரவுக்கு வருந்துகிறேன். 166 00:11:58,511 --> 00:12:00,722 இந்த கலைப்பொருள் பற்றித்தான் உன்னிடம் கேட்க நினைத்தேன். 167 00:12:06,102 --> 00:12:08,355 பொறு. என்ன நடந்தது? 168 00:12:19,407 --> 00:12:20,825 திரும்பி வா. 169 00:12:29,960 --> 00:12:31,962 உதவி! ஹலோ! 170 00:12:32,045 --> 00:12:33,255 பிள்ளைகளே? 171 00:12:33,338 --> 00:12:34,881 யாராவது இருக்கிறீர்களா? 172 00:12:34,965 --> 00:12:36,466 ஹலோ! 173 00:12:39,135 --> 00:12:41,304 அம்மா வருத்தமாக இருப்பது நம் தவறால்தான். 174 00:12:41,388 --> 00:12:42,472 எனக்குத் தெரியும். 175 00:12:42,556 --> 00:12:48,311 சில சமயங்களில் நம் அம்மாவாக இருப்பதைவிட அதிக பொறுப்பு அவருக்கு இருப்பதை மறந்துவிடுகிறேன். 176 00:12:49,020 --> 00:12:51,648 பேண்? அந்த தோற்றம் எனக்குப் பிடிக்கவில்லை. 177 00:12:51,731 --> 00:12:53,108 என்ன... 178 00:12:57,862 --> 00:13:00,949 நான் இதுவரை பார்க்காத மோசமான வானிலை இதுதான். 179 00:13:01,032 --> 00:13:02,033 விளையாடவில்லை. 180 00:13:02,117 --> 00:13:05,287 யாரோ குலுக்கிக்கொண்டே இருக்கும் ஒரு ஸ்னோகுளோபுக்குள் நாம் இருப்பது போல இருக்கிறது. 181 00:13:05,370 --> 00:13:06,997 அம்மாவுக்காக திரும்பிப் போகலாமா? 182 00:13:07,080 --> 00:13:09,291 எங்கே இருக்கிறோம் என்று கூட தெரியவில்லை. 183 00:13:09,374 --> 00:13:11,126 எப்படி திரும்புவது என்பதற்கு வாய்ப்பில்லை. 184 00:13:13,211 --> 00:13:16,548 நாம் மணலில் இருக்கிறோம். அதாவது நாம் மார்ஜிக்கு நெருக்கமாக இருக்க வேண்டும். வா. 185 00:13:17,632 --> 00:13:20,051 -மார்ஜி! -மார்ஜி! 186 00:13:20,135 --> 00:13:21,970 -மார்ஜி! -மார்ஜி! 187 00:13:39,487 --> 00:13:41,323 மார்ஜியை தொடர்ந்து தேடுவோம். 188 00:13:41,406 --> 00:13:44,701 இருண்ட கடலோரக் குகைகளைக் காட்டும் ஏராளமான திரைப்படங்களை நீ என்னைப் பார்க்கவைத்தாய். 189 00:13:44,784 --> 00:13:46,411 அவற்றில் எதுவுமே மகிழ்ச்சியாக முடியவில்லை. 190 00:13:47,746 --> 00:13:49,372 ரஸ், இன்னொரு உடைந்த கப்பல். 191 00:13:50,582 --> 00:13:51,583 ஆஹா. 192 00:13:51,666 --> 00:13:55,378 இந்த தீவில் விபத்தாகி உடைந்த கப்பல்கள் ஏராளமாக இருக்கின்றன. 193 00:13:55,462 --> 00:13:57,339 எனக்குத் தெரியும். இது மிகவும் அருமையாக இருக்கிறது. 194 00:13:58,548 --> 00:14:00,842 சில நேரங்களில் நாம் ஒரே பெற்றோருக்கு பிறந்தவர்கள் என்பதை நம்ப முடியவில்லை. 195 00:14:06,848 --> 00:14:08,099 இது மிகவும் அசிங்கமாக இருக்கிறது. 196 00:14:12,312 --> 00:14:13,855 ஹேய், பேண், பார். 197 00:14:16,816 --> 00:14:21,154 "டிமிட்ரீஸ் ரிவென்ஜ் கப்பலின் கேப்டன், ரோனன் செயின்ட் கிளேரின் பதிவு." 198 00:14:21,238 --> 00:14:23,782 வாய்ப்பே இல்லை! ஒரு கேப்டனின் பதிவு! 199 00:14:23,865 --> 00:14:25,075 "நாள் 15. 200 00:14:25,158 --> 00:14:28,745 சூலா தீவை நெருங்கும் எந்த கப்பலையும் கடும் புயல்கள் மூழ்கடிப்பது பற்றிய கதைகள் பொய்யாகவும், 201 00:14:28,828 --> 00:14:29,996 நான் வெற்றிபெறும் இடத்தில் 202 00:14:30,080 --> 00:14:33,250 தோல்வியடைந்த பலவீனமானவர்களால் பரப்பப்படும் வதந்திகளாகவும் இருக்க வேண்டும். 203 00:14:33,333 --> 00:14:36,711 டிமிட்ரீஸ் ரிவென்ஜ் தீவிலிருந்து ஒரு நாள் பயண தூரத்தில் இருக்கிறது, 204 00:14:36,795 --> 00:14:38,922 கடல் கண்ணாடி போல தெளிவாக இருக்கிறது. 205 00:14:39,005 --> 00:14:42,592 விரைவில் என் குழுவினர் சூலாவின் வளமான கரையோரங்களில் மீன்பிடிப்பார்கள், 206 00:14:42,676 --> 00:14:45,595 கதை சொல்ல உயிரோடு இல்லாதவர்களின் கப்பல்களை சூறையாடுவார்கள்." 207 00:14:45,679 --> 00:14:47,973 தெளிவாக அது நடக்கவில்லை. 208 00:14:48,932 --> 00:14:52,394 அவ்வளவுதான் எழுதியிருக்கிறார். சபிக்கப்பட்ட மேலங்கி பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. 209 00:15:03,613 --> 00:15:05,323 என்ன கொடுமை அது? 210 00:15:12,414 --> 00:15:15,083 சரி, இது எனக்கே புதிய விஷயம். 211 00:15:24,926 --> 00:15:27,095 ரஸ், உனக்கு அது கேட்கிறதா? 212 00:15:28,013 --> 00:15:29,264 ஐயோ. 213 00:15:29,764 --> 00:15:32,183 நீர்மட்டம் உயர்கிறது. நாம் இங்கிருந்து வெளியேற வேண்டும். 214 00:15:33,560 --> 00:15:34,561 சரி, இப்போது. 215 00:15:37,606 --> 00:15:38,940 இது உயர்கிறது. 216 00:15:46,656 --> 00:15:47,866 ஓடு! 217 00:15:51,453 --> 00:15:53,079 ரஸ், நீ என்ன செய்கிறாய்? 218 00:15:53,163 --> 00:15:56,374 பாட்டிலில் ஒரு செய்தி இருக்கிறது. அது முக்கியமானதாக இருக்கலாம். 219 00:15:56,958 --> 00:16:00,462 நான் இதை உன்னிடம் சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை, ஆனால் கவனமாக இரு. 220 00:16:01,546 --> 00:16:03,465 என்னை நம்பு, நான் முயற்சிக்கிறேன். 221 00:16:14,684 --> 00:16:17,145 ஆம்! ஹோரஸ் வென்றுவிட்டான்! 222 00:16:19,105 --> 00:16:22,651 "இங்கே பயணம் செய்பவர்களே, தீவில் சிக்கியிருக்கும் செல்கியிடம் எச்சரிக்கையாக இருங்கள். 223 00:16:22,734 --> 00:16:25,070 அவள் மீன்களை ஈர்க்கிறாள், ஆனால் அது ஒரு சூழ்ச்சி. 224 00:16:25,612 --> 00:16:28,865 அவள் புயல்களை அழைக்கிறாள். அவள் உங்களை அழித்துவிடுவாள். 225 00:16:28,949 --> 00:16:32,827 இங்கே மீன் பிடிக்காதீர்கள். உங்களை காப்பாற்றிக்கொள்ளுங்கள். நாங்கள் தவறிவிட்டோம். 226 00:16:32,911 --> 00:16:37,040 டிமிட்ரீஸ் ரிவென்ஜ் கப்பலின் கேப்டன், ரோனன் செயின்ட் கிளேர் மற்றும் குழுவினர்." 227 00:16:37,916 --> 00:16:40,210 ஒரு செல்கி! நிச்சயமாக! 228 00:16:40,293 --> 00:16:41,419 செல்கி என்றால் என்ன? 229 00:16:41,503 --> 00:16:44,422 தண்ணீரில் நீர்நாயாகவும், நிலத்தில் மனிதராகவும் இருக்கக் கூடிய பழங்கால 230 00:16:44,506 --> 00:16:46,132 புராண கதைகளில் குறிப்பிடப்பட்ட உயிரினம். 231 00:16:46,216 --> 00:16:49,344 இந்தத் தீவில் நம்மையும் மார்ஜியையும் தவிர ஒரே ஒரு மனிதர் மட்டுமே இருக்கிறார். 232 00:16:49,427 --> 00:16:52,347 அந்த மரக்குடிலில் இருந்த பெண். அவள் செல்கியாக இருக்க வேண்டும். 233 00:16:52,931 --> 00:16:54,599 அம்மாவை அவளுடன் தனியாக விட்டுவிட்டு வந்தோம். 234 00:16:59,688 --> 00:17:01,690 அம்மா! 235 00:17:02,941 --> 00:17:04,776 அம்மா, இங்கே இருக்கிறீர்களா? 236 00:17:06,444 --> 00:17:08,154 இங்கே துர்நாற்றம் வீசுகிறது. 237 00:17:09,863 --> 00:17:11,658 இப்போது மீன் எலும்புகள் இருப்பதன் காரணம் புரிகிறது. 238 00:17:11,741 --> 00:17:13,827 அவள் பாதி நீர்நாய். அதைத்தான் அவள் சாப்பிடுகிறாள். 239 00:17:15,870 --> 00:17:17,789 நாங்கள் எங்கள் அம்மாவைத் தேடுகிறோம். 240 00:17:19,583 --> 00:17:21,293 மன்னிக்கவும், அத்துமீறி உள்ளே நுழைந்தோம், ஆனால்... 241 00:17:29,009 --> 00:17:31,011 அது ஏன் அப்படிச் செய்கிறது? 242 00:17:32,512 --> 00:17:34,389 இந்த குச்சிகள் ஈட்டிகளாகப் பயன்படுத்தப்பட்டவை. 243 00:17:34,472 --> 00:17:37,726 அதை காயப்படுத்த நாம் இங்கே வந்திருக்கிறோம் என்று நினைக்கிறது, பேண். அதனால்தான் அது பயப்படுகிறது. 244 00:17:37,809 --> 00:17:40,061 நாம் நிஜமாகவே அம்மாவைக் கண்டுபிடிக்க வேண்டும். 245 00:17:40,145 --> 00:17:41,897 -அம்மா! -அம்மா! 246 00:17:53,158 --> 00:17:54,367 ரூஃபஸ்! 247 00:17:55,243 --> 00:17:56,953 அம்மா! 248 00:17:57,037 --> 00:17:58,038 அம்மா! 249 00:17:58,121 --> 00:17:59,748 ரஸ்! பேண்டோரா! 250 00:18:03,960 --> 00:18:06,463 ரஸ், பார்! நான் அம்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன்! 251 00:18:06,546 --> 00:18:08,381 பேண்டோரா, இருவரும் பாதுகாப்பாக இருக்கிறீர்களா? 252 00:18:08,465 --> 00:18:09,966 ஆம், நாங்கள் நலமாக இருக்கிறோம். 253 00:18:10,050 --> 00:18:12,093 அம்மா! பொறுங்கள். உங்களை வெளியே கொண்டுவருவோம். 254 00:18:12,177 --> 00:18:14,804 மேலங்கியின் மறுமுனையைப் பிடித்துக்கொள், அதன் மூலம் நான் மேலே ஏற முடியும். 255 00:18:21,603 --> 00:18:25,190 அம்மா, அந்த குடிசையில் இருந்த பெண் ஒரு செல்கி என்று கண்டுபிடித்தோம். 256 00:18:25,273 --> 00:18:27,984 என்ன? அவை உண்மையானவை என்று எனக்குத் தெரியாது. 257 00:18:28,068 --> 00:18:32,447 பாருங்கள். கப்பல் விபத்துக்குள்ளானதில் ஒரு கேப்டனின் பதிவும், பாட்டிலில் ஒரு செய்தியையும் பார்த்தோம். 258 00:18:32,530 --> 00:18:35,367 படிப்பது சலிப்பானது என்று ஒவ்வொரு முறை சொன்னதையும் திரும்பப் பெறுகிறேன். 259 00:18:35,450 --> 00:18:36,952 இது நம்ப முடியாதது. 260 00:18:37,035 --> 00:18:40,080 எனவே அந்த செல்கிதான் புயல்களையும் கப்பல் விபத்துக்களையும் ஏற்படுத்துகிறது. 261 00:18:40,163 --> 00:18:41,748 அது எப்படி அதை செய்கிறது? 262 00:18:41,831 --> 00:18:46,461 புராண கதையின்படி, செல்கி நிலத்திற்கு வரும்போது, அது மனிதராக மாறுவதற்கு தன் தோலை உரிக்கிறது. 263 00:18:47,045 --> 00:18:50,382 நீர்நாய் வடிவத்திற்குத் திரும்புவதற்கு அதன் தோலை மீண்டும் அணிந்துகொள்ள வேண்டும். 264 00:18:50,966 --> 00:18:53,593 கடலுடனான செல்கியின் தொடர்பு காரணமாக, 265 00:18:53,677 --> 00:18:57,097 அதன் தோலை இழந்த துக்கம் கடுமையான புயல்களை ஏற்படுத்துகிறது. 266 00:18:57,180 --> 00:19:00,517 அப்படியென்றால் அந்த மேலங்கி செல்கியின் நீர்நாயின் தோலா? 267 00:19:00,600 --> 00:19:03,228 அதனால்தான் லேரி அதை அணிந்தபோது புயல் வீசுவதை உணர்ந்தது. 268 00:19:03,311 --> 00:19:06,898 அதை யாரோ புதைத்துவிட்டார்கள் என்று அது நினைக்க வேண்டும், அதற்காக அது தோண்டிக்கொண்டிருக்கிறது. 269 00:19:06,982 --> 00:19:08,316 இப்போது எல்லாம் புரிகிறது. 270 00:19:08,400 --> 00:19:11,403 யாரோ செல்கியின் மேலங்கியை எடுத்துக்கொண்டு, அதை தீவில் சிக்கவைத்து, 271 00:19:11,486 --> 00:19:14,239 அதன் மூலம் மக்கள் பிடிப்பதற்காக அது மீன்களை ஈர்த்துக்கொண்டே இருக்கவைத்திருக்கிறார்கள். 272 00:19:15,031 --> 00:19:16,116 பாவம். 273 00:19:16,199 --> 00:19:18,159 அதை மீண்டும் கடலுக்கு செல்லவைப்போம். 274 00:19:33,425 --> 00:19:35,260 இது உன்னுடையது, சரிதானே 275 00:19:37,262 --> 00:19:39,139 நாங்கள் எதையும் எடுக்க விரும்பவில்லை. 276 00:19:39,222 --> 00:19:41,141 இதைத் திருப்பிக் கொடுக்கத்தான் இங்கே வந்தோம். 277 00:19:44,728 --> 00:19:46,688 இருக்கட்டுமா? 278 00:19:56,948 --> 00:19:58,116 அருமை! 279 00:20:10,670 --> 00:20:12,005 ஓ, இல்லை, மார்ஜி! 280 00:20:12,631 --> 00:20:15,050 ஓ, ரூஃபஸ்! 281 00:20:45,789 --> 00:20:47,540 நம்ப முடியாதது. 282 00:20:47,624 --> 00:20:50,126 என்ன அற்புதமான உயிரினங்கள். 283 00:20:52,712 --> 00:20:53,922 கிளம்பத் தயாரா? 284 00:21:09,187 --> 00:21:11,273 அங்கே உனக்கு என்ன நடந்தது? 285 00:21:11,356 --> 00:21:12,607 ஒரு பள்ளத்தில் விழுந்து மாட்டிக்கொண்டேன். 286 00:21:12,691 --> 00:21:13,692 மாட்டிக்கொண்டாயா? 287 00:21:13,775 --> 00:21:16,778 உங்கள் அம்மா பள்ளத்தில் இருக்கும்போது இருவரும் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? 288 00:21:18,280 --> 00:21:21,408 அவருடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்காததை நினைத்து குற்ற உணர்வில் இருந்தோம். 289 00:21:22,826 --> 00:21:26,037 ஆம், உங்களை அப்பாவிடம் பேச விடாததற்கு வருந்துகிறோம். 290 00:21:26,121 --> 00:21:28,039 அவர் பிஸியாக இருப்பது உங்களுக்கும்... 291 00:21:29,332 --> 00:21:32,085 எளிதாக இருக்கவில்லை என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். 292 00:21:32,168 --> 00:21:34,963 நீங்கள் விரக்தியடையும்போது எங்களிடம் சொல்லுங்கள். எங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியும். 293 00:21:35,046 --> 00:21:37,841 ஆம், நீங்கள் எப்போதும் எங்களுக்காக வலிமையோடு இருந்திருக்கிறீர்கள், அம்மா. 294 00:21:37,924 --> 00:21:39,759 நாங்களும் உங்களுக்காக வலிமையோடு இருக்க முடியும். 295 00:21:40,468 --> 00:21:41,636 நன்றி, என் செல்லங்களே. 296 00:21:41,720 --> 00:21:44,514 சில சமயங்களில் உங்கள் அம்மா என்ற உறவில் மூழ்கி 297 00:21:44,598 --> 00:21:47,267 நீங்கள் இருவரும் எவ்வளவு தைரியமும் முதிர்ச்சியும் பெற்றிருக்கிறீர்கள் என்பதை மறந்துவிடுகிறேன். 298 00:21:51,354 --> 00:21:56,735 நான் குடும்ப விவகாரத்தில் மூக்கை நுழைக்க விரும்பவில்லை, ஆனால், ஸ்கை, கேள்விகள் இருக்கின்றன. 299 00:22:00,572 --> 00:22:02,782 வழி முடிந்தது. இதுதான் கடைசியா? 300 00:22:02,866 --> 00:22:05,994 மற்ற எல்லா சிவப்பு முட்களையும் வரைபடமாக்கிவிட்டோம். அதில் உறுதியாக இருக்கிறேன். 301 00:22:06,077 --> 00:22:07,746 நாம் முடித்துவிட்டோம் என்று நினைக்கிறாயா? 302 00:22:08,747 --> 00:22:10,707 இது மிகவும் குறிப்பிடத்தக்கது, நிஜமாகவே. 303 00:22:10,790 --> 00:22:13,418 இந்த வடிவம் ஒரு பூ போல இருக்கிறது. 304 00:22:14,461 --> 00:22:17,339 எனக்கு ஒரு பெரிய கணவாய் மீன் போல தெரிகிறது. 305 00:22:17,422 --> 00:22:19,424 அதற்கு என்ன அர்த்தம் என்று நினைக்கிறாய்? 306 00:22:20,008 --> 00:22:21,301 இது எனக்கு தெளிவாக புரியவில்லை. 307 00:22:21,384 --> 00:22:24,512 அவர்கள் திரும்பி வந்ததும் நாம் இதை குடும்பத்தினரின் கவனத்திற்குக் கொண்டு போக வேண்டும். 308 00:22:24,596 --> 00:22:27,098 இப்போது, நாம் கொஞ்சம் பந்து விளையாடி ஆசுவாசப்படுத்திக்கொள்வோமா? 309 00:22:27,182 --> 00:22:29,059 நான் பந்தாக இருந்தால் மட்டுமே. 310 00:23:02,342 --> 00:23:04,344 வசனத் தமிழாக்கம் அருண்குமார்