1 00:01:18,558 --> 00:01:21,394 ராஜஸ்தானின் பொம்மை 2 00:01:27,108 --> 00:01:29,110 அப்பா, என்ன செய்திருக்கிறேன் பாருங்கள். 3 00:01:29,110 --> 00:01:33,656 இது கலைப்பொருளைக் கையாளும் ரோபோ அல்லது சுருக்கமாக ரா என்று அழைக்கிறேன். 4 00:01:35,450 --> 00:01:38,661 சபிக்கப்பட்ட கலைப்பொருட்களைத் தொடாமல் ரா மூலம் நாம் நகர்த்தலாம். 5 00:01:38,661 --> 00:01:40,955 இன்னொன்றை தற்செயலாக ஆக்டிவேட் செய்ய விரும்பவில்லை, 6 00:01:40,955 --> 00:01:43,082 குறிப்பாக தாயக் கட்டை பயங்கர நிகழ்வுக்குப் பிறகு. 7 00:01:43,082 --> 00:01:45,710 புத்திசாலி. நான் இதைப் பயன்படுத்துகிறேன். 8 00:01:47,503 --> 00:01:48,796 அதுவும் வேலை செய்கிறது. 9 00:01:49,672 --> 00:01:50,965 அப்பா! வந்து பாருங்கள். 10 00:01:55,887 --> 00:01:57,055 நீங்கள் நலமா? 11 00:01:57,055 --> 00:01:58,556 நன்றாக இருக்கிறேன். 12 00:01:59,599 --> 00:02:01,434 இல்லை, பழைய அலெக்ஸ் அப்படி சொல்லியிருப்பார். 13 00:02:02,185 --> 00:02:03,519 நான் கவலையோடு இருக்கிறேன். 14 00:02:03,519 --> 00:02:04,771 முதலில் மயக்கம் வந்தது. 15 00:02:04,771 --> 00:02:06,898 இப்போது முள் கொடி உடனான என்னுடைய தொடர்பு பலவீனமடைகிறது. 16 00:02:06,898 --> 00:02:09,691 முள் கொடி உடனான உங்களுடைய தொடர்பு பலவீனமடைகிறது என்றா சொன்னீர்கள்? 17 00:02:09,691 --> 00:02:12,403 ஆம். இஸ்தான்புல்லிலிருந்து வந்தது முதல். 18 00:02:12,403 --> 00:02:14,822 நான் உங்களிடம் ஒன்று காட்ட வேண்டும். 19 00:02:16,282 --> 00:02:19,160 இது கடிக்கப்பட்டது போல தெரிகிறது. 20 00:02:19,160 --> 00:02:21,538 அதுவே என்னுடைய முடிவும் கூட. 21 00:02:21,538 --> 00:02:24,290 இந்த முள் கொடியை ஏதாவது கடித்து துண்டாக்கி இருந்தால், 22 00:02:24,958 --> 00:02:26,668 அதற்கு வலுவான பற்கள் இருக்க வேண்டும். 23 00:02:26,668 --> 00:02:29,796 கடினமான மரத்தால் ஆன பற்களை கொண்ட ஒரு கடற்கொள்ளையனை எனக்குத் தெரியும். 24 00:02:29,796 --> 00:02:31,548 ராடி ஸ்டிராங்டூத். 25 00:02:31,548 --> 00:02:33,675 அவன் ஒரு பீரங்கியை கடிப்பதைப் பார்த்தேன். 26 00:02:33,675 --> 00:02:34,842 நல்லவன். 27 00:02:44,269 --> 00:02:45,895 அது என்னிடம் ஏதோ சொல்ல முயற்சிக்கிறது, 28 00:02:45,895 --> 00:02:49,607 ஆனால் இணைப்பு பலவீனமாக இருப்பதால், அதை முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை. 29 00:02:49,607 --> 00:02:51,651 நாசவேலை போல தெரிகிறது. 30 00:02:52,360 --> 00:02:54,946 எல்லாமே உங்களுக்கு நாசவேலை போலத்தான் தெரியும். 31 00:02:54,946 --> 00:02:56,281 இருந்தாலும், 32 00:02:56,281 --> 00:02:58,032 இந்த பிரச்சினையில், நான் அதை ஒப்புக்கொள்கிறேன். 33 00:02:58,032 --> 00:03:00,743 ஆனால் யார் இதைச் செய்வார்கள்? ஏன் செய்தார்கள்? 34 00:03:00,743 --> 00:03:04,873 தடைசெய்யப்பட்ட பிரிவின் மர்மம் பெரிதாகிக்கொண்டே போகிறது. 35 00:03:04,873 --> 00:03:07,625 ரஸ், கோர்னீலியஸின் கையேட்டைப் பார்ப்போம். 36 00:03:07,625 --> 00:03:08,710 லேரி, ஸ்டான்லி, 37 00:03:08,710 --> 00:03:11,045 முள் கொடியில் வேறு எங்காவது கடிக்கப்பட்டிருக்கிறதா என்று பாருங்கள். 38 00:03:11,045 --> 00:03:13,131 அதை ஆராய்ந்து முழுமையாக புரிந்துகொள்ள வேண்டும். 39 00:03:15,592 --> 00:03:18,177 கோர்னீலியஸ் கொள்ளையடித்த பொருட்கள் பற்றி நான் எல்லா ஆராய்ச்சிகளையும் செய்தாலும், 40 00:03:18,177 --> 00:03:20,847 முள் கொடியை பார்க்க வேண்டும் என்று நான் நினைத்ததே இல்லை. 41 00:03:20,847 --> 00:03:23,016 அது நமக்கு உதவி வருகிறது. 42 00:03:23,016 --> 00:03:25,560 இனி அப்படி நடக்கக் கூடாது என்று யாராவது விரும்பினால்? 43 00:03:25,560 --> 00:03:28,438 ஒருவேளை யாரோ நாம் ஒரு சாபத்தை நீக்கக் கூடாது என்று நினைத்திருக்கலாம். 44 00:03:30,899 --> 00:03:32,483 நான் லேரியையும் ஸ்டான்லியையும் போய் பார்க்கிறேன். 45 00:03:48,416 --> 00:03:49,417 ரா? 46 00:04:07,477 --> 00:04:08,895 ரிமோட் எங்கே? 47 00:04:12,774 --> 00:04:15,151 அப்பா! லேரி? 48 00:04:15,151 --> 00:04:16,944 ஸ்டான்லி? யாராவது இருக்கிறீர்களா? 49 00:04:18,987 --> 00:04:20,532 ஹேய்! நிறுத்து. 50 00:04:28,581 --> 00:04:30,375 ரஸ், நீ நலமா? 51 00:04:31,501 --> 00:04:33,461 நீ ஏன் எதுவும் பேசாமல் இருக்கிறாய்? 52 00:04:37,674 --> 00:04:38,967 அவனால் பேச முடியவில்லை போல. 53 00:04:43,596 --> 00:04:45,682 ஹேய், என் மகனை விட்டுப் போ. 54 00:04:53,648 --> 00:04:55,108 ஒரு நிமிடம்தான் நான் போயிருப்பேன். 55 00:04:55,692 --> 00:04:56,818 இது எப்படி நடந்தது? 56 00:04:56,818 --> 00:05:00,029 ஹோரஸ் ஒரு சபிக்கப்பட்ட பொம்மையை தொட்டது போல தெரிகிறது. 57 00:05:00,029 --> 00:05:02,240 இப்போது அவன் பொம்மையின் கைப்பாவை ஆகிவிட்டான். 58 00:05:04,492 --> 00:05:07,120 - அலெக்ஸ், கவனம்! - அடக்... 59 00:05:13,585 --> 00:05:15,336 பாபிலோனின் தொலைந்த பேரரசு 60 00:05:15,336 --> 00:05:17,797 என்ன விஷயம், முக்கியமான பொறுப்பாளர் வேண்டர்ஹூவன்? 61 00:05:17,797 --> 00:05:19,090 இன்று என் வேலை முடிந்துவிட்டது. 62 00:05:19,090 --> 00:05:23,511 {\an8}"முக்கியமான பொறுப்பாளர் வேண்டர்ஹூவன்," ம்? எனக்குப் பிடித்திருக்கிறது. 63 00:05:23,511 --> 00:05:26,389 {\an8}நான் அதை என் விசிட்டிங் கார்டில் அச்சடிக்கப் போகிறேன் என்று நினைக்கிறேன். 64 00:05:27,640 --> 00:05:29,726 {\an8}எனக்கு பிடித்த இளம் வழிகாட்டி எப்படி இருக்கிறாள்? 65 00:05:29,726 --> 00:05:32,729 {\an8}அருமையாக. நாள் முழுவதையும் சேமிப்பு கிடங்கில் கழித்தேன். 66 00:05:32,729 --> 00:05:35,773 {\an8}அது அடிப்படையில் சபிக்கப்பட்ட பொருட்கள் இல்லாத தடைசெய்யப்பட்ட பிரிவு. 67 00:05:35,773 --> 00:05:38,651 {\an8}அங்கே மிகவும் அருமையான, பயமுறுத்தும் பொருட்கள் இருந்தன. 68 00:05:38,651 --> 00:05:42,071 இந்த கோலை அங்கே எடுத்துக்கொண்டு போக நீ எனக்கு உதவலாம். 69 00:05:42,071 --> 00:05:43,990 {\an8}கண்காட்சியில் இதை வைக்க இடமில்லை. 70 00:05:49,162 --> 00:05:50,538 மதிய வணக்கம், பேண்டோரா. 71 00:05:50,538 --> 00:05:52,081 ஸ்கை, நான் உன்னிடம் பேசலாமா? 72 00:05:57,462 --> 00:06:00,590 அருங்காட்சியகத்தில் யாரோ அத்துமீறி நுழைந்தது உனக்கே தெரியும். 73 00:06:00,590 --> 00:06:03,176 ஆம். மிகவும் மோசமானது. 74 00:06:03,176 --> 00:06:05,303 ஏதாவது திருடப்பட்டதா என்ற தகவல் கிடைத்ததா? 75 00:06:05,303 --> 00:06:07,555 உண்மையை தெரிந்துகொள்ள இன்னும் விசாரிக்கிறோம். 76 00:06:07,555 --> 00:06:10,308 அந்த நேரத்தில் எல்லோரும் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்று தெரிய வேண்டும். 77 00:06:10,308 --> 00:06:13,519 முடிந்தவரை துல்லியமாக நீ எங்கே இருந்தாய் என்று சொல்ல வேண்டும். 78 00:06:13,519 --> 00:06:15,480 என்னைச் சந்தேகப்படுகிறார்களா? 79 00:06:15,480 --> 00:06:17,232 சாத்தியக்கூறு இருக்கும் எல்லாவற்றையும் ஆராய்ந்து வருகிறோம். 80 00:06:17,232 --> 00:06:18,983 நான் மிகவும் வருந்துகிறேன். 81 00:06:18,983 --> 00:06:22,028 ஹேய், அலெக்ஸ். என்னால் இப்போது பேச முடியாது. 82 00:06:22,028 --> 00:06:23,112 என்ன? 83 00:06:26,991 --> 00:06:28,952 ரஸ். ஓ, இல்லை. 84 00:06:36,125 --> 00:06:38,461 எல்லாவாற்றையும் முயற்சித்துவிட்டோம். அவனைப் பிடித்திருக்கும் பொம்மையை நெருங்க முடியவில்லை. 85 00:06:38,461 --> 00:06:40,672 ஹேய், பொம்மையே, என் அண்ணனை விடு! 86 00:06:42,090 --> 00:06:43,633 உன்னைக் காயப்படுத்த மாட்டேன், பொம்மையே. 87 00:06:50,348 --> 00:06:51,182 ஜெய்ப்பூர், இந்தியா. 88 00:06:51,182 --> 00:06:54,185 கலைப்பொருளை எங்கே ஒப்படைக்க வேண்டும் என்று அவன் சொல்கிறான் போல. 89 00:06:54,852 --> 00:06:57,313 இந்தியா சிலருக்கு கடினமான பயணமாக இருக்கும், 90 00:06:57,313 --> 00:07:00,567 ஆனால் நானும் ரூஃபஸும் உங்களை சீக்கிரம் கொண்டு சேர்த்துவிடுவோம். 91 00:07:00,567 --> 00:07:02,569 அது நீங்கள் கைதேர்ந்தவர் என்பதால். 92 00:07:02,569 --> 00:07:04,571 கலைப்பொருளைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? 93 00:07:04,571 --> 00:07:07,991 இது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பொம்மலாட்ட கலைஞரால் உருவாக்கப்பட்டது. 94 00:07:07,991 --> 00:07:11,870 அவர் இறந்தபோது, அவரது திறமைகள் இந்த பொம்மையிலேயே தங்கிவிட்டன. 95 00:07:11,870 --> 00:07:15,456 ஒரேநேரத்தில் பொம்மையாகவும் பொம்மலாட்டக்காரராகவுமா? 96 00:07:16,040 --> 00:07:17,584 மிகவும் வியப்பாக இருக்கிறது. 97 00:07:23,006 --> 00:07:24,799 "கஹானி பொம்மலாட்ட தியேட்டர்." 98 00:07:24,799 --> 00:07:27,051 பொம்மை, ரஸ்ஸை அழைத்து வர விரும்பிய இடம் இதுவாகத்தான் இருக்க வேண்டும். 99 00:07:30,388 --> 00:07:33,266 உனக்கு வேண்டியது கிடைத்துவிட்டது, பொம்மையே. இப்போது என் அண்ணனை விடுதலை செய். 100 00:07:41,441 --> 00:07:43,318 இந்த இடம் கைவிடப்பட்டதாக இருந்தால்? 101 00:07:43,318 --> 00:07:44,861 ரஸ் நிரந்தரமாக பொம்மையாக இருந்துவிடுவானா? 102 00:07:46,779 --> 00:07:48,198 கண்டிப்பாக இல்லை. 103 00:07:49,115 --> 00:07:50,617 அவனை பயமுறுத்தாதே. 104 00:07:56,915 --> 00:07:59,167 என்னால் எதையும் பார்க்க முடியவில்லை. இருட்டாக இருக்கிறது. 105 00:08:03,004 --> 00:08:05,465 அடடா. ரஸ் எங்கே? 106 00:08:29,906 --> 00:08:30,782 அம்மா, கவனம்! 107 00:08:31,824 --> 00:08:33,117 என்ன அது? 108 00:08:37,288 --> 00:08:39,248 நிறைய பயன்படுத்தப்படாத டிக்கெட்டுகள். 109 00:08:39,998 --> 00:08:41,834 அதனால்தான் இதை மூடிவிட்டார்கள் என்று நினைக்கிறேன், ம்? 110 00:09:04,858 --> 00:09:05,692 ரஸ்! 111 00:09:10,405 --> 00:09:11,948 - அலெக்ஸ்! - அப்பா! 112 00:09:14,576 --> 00:09:17,328 அது மிகவும் நன்றாக இருந்தது. இன்னும் கொஞ்சம்! 113 00:09:21,875 --> 00:09:23,042 ஐயோ. நீ எங்கிருந்து வந்தாய்? 114 00:09:27,171 --> 00:09:28,673 இது எங்களுடைய தியேட்டர். 115 00:09:28,673 --> 00:09:30,508 பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பொம்மலாட்ட நிகழ்ச்சி 116 00:09:30,508 --> 00:09:33,803 நடத்தும் உங்களைப் பார்த்து நான்தான் அந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும். 117 00:09:33,803 --> 00:09:36,222 நல்ல பொம்மலாட்ட நிகழ்ச்சி. 118 00:09:36,222 --> 00:09:37,724 நான் மிகவும் வருந்துகிறேன். 119 00:09:37,724 --> 00:09:39,350 நாங்கள் பாதிப்பு ஏற்படுத்த நினைக்கவில்லை. 120 00:09:39,350 --> 00:09:40,685 நாங்கள் வேண்டர்ஹூவன்கள். 121 00:09:40,685 --> 00:09:44,731 நாங்கள் இங்கே இருக்கக் காரணம்... சரி, அது ஒரு பெரிய கதை. 122 00:09:44,731 --> 00:09:47,901 அருமை. நான் போலீஸை அழைத்து புகாரளிக்கும்போது நீங்கள் ஏன் 123 00:09:47,901 --> 00:09:50,904 - என்னிடம் சொல்லக் கூடாது? - அம்மா, வேண்டாம்! நிகழ்ச்சி பிடித்திருக்கிறது. 124 00:09:50,904 --> 00:09:53,364 இந்த பொம்மலாட்டக்காரர் மிகவும் திறமையானவர். பார்த்தீர்களா? 125 00:09:59,245 --> 00:10:00,830 அந்த பொம்மை எங்கே கிடைத்தது? 126 00:10:00,830 --> 00:10:03,208 அது என் முன்னோர்களின் சேகரிப்பில் இருந்தது. 127 00:10:03,208 --> 00:10:04,375 அதை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா? 128 00:10:04,375 --> 00:10:07,712 ஆம். அது என் முன்னோர்களின் சேகரிப்பில் இருந்தது. 129 00:10:07,712 --> 00:10:09,255 தயவுசெய்து அந்த பொம்மையை கொடுத்துவிடு. 130 00:10:13,301 --> 00:10:15,678 அம்மா, நிகழ்ச்சியைக் கெடுப்பதை நிறுத்துங்கள். 131 00:10:15,678 --> 00:10:17,931 முஸ்கான், ஒரு நிமிடம் பொறு. 132 00:10:18,556 --> 00:10:19,974 இங்கே என்ன நடக்கிறது? 133 00:10:19,974 --> 00:10:22,769 சந்தேகத்திற்கிடமான வகையில் நீண்ட காலத்திற்கு முன்பு பெறப்பட்ட 134 00:10:22,769 --> 00:10:27,273 சில கலைப்பொருட்கள் எங்கள் குடும்ப வீட்டில் இருப்பதை சமீபத்தில் கண்டுபிடித்தோம். 135 00:10:27,273 --> 00:10:28,900 நாங்கள் அவற்றை திருப்பி கொடுக்கிறோம். 136 00:10:28,900 --> 00:10:31,528 எங்கள் பொம்மையைத் திருப்பித் தர பூட்டை உடைத்து உள்ளே நுழைந்திருக்கிறீர்கள், 137 00:10:31,528 --> 00:10:33,488 ஆனால் உங்கள் மகன் அதை என்னிடம் கொடுக்க மாட்டானா? 138 00:10:33,488 --> 00:10:34,739 அவனால் முடியவில்லை. 139 00:10:35,573 --> 00:10:36,574 அது சபிக்கப்பட்டது. 140 00:10:36,574 --> 00:10:38,535 சபிக்கப்பட்டதா? உங்களுக்குப் பைத்தியமா? 141 00:10:38,535 --> 00:10:39,911 நாங்கள் பைத்தியமாக இருந்திருக்கலாம். 142 00:10:41,788 --> 00:10:43,248 நாங்கள் சொல்வதை நம்புவது எவ்வளவு 143 00:10:43,248 --> 00:10:45,291 கடினம் என்று எனக்குப் புரிகிறது, ஆனால் நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். 144 00:10:46,751 --> 00:10:48,127 என்னை நம்புங்கள். 145 00:10:48,127 --> 00:10:51,881 அந்த பொம்மையை கொடுத்துவிட்டு என் தியேட்டரை விட்டு வெளியேறுங்கள். தயவுசெய்து. 146 00:11:03,434 --> 00:11:05,228 இப்போது எங்களை நம்புகிறீர்களா? 147 00:11:07,814 --> 00:11:11,109 அந்தக் காட்சி ஒருபோதும் சலிப்பை தருவதில்லை. 148 00:11:11,109 --> 00:11:15,947 சூரிய உதயம், பச்சை புல், மோசமானவன் போல தெரியும் ஒருவன். 149 00:11:21,786 --> 00:11:23,288 ஒரு நொடி பொறு. 150 00:11:27,542 --> 00:11:30,587 முட்டாள்களே, கேளுங்கள். நமக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. 151 00:11:31,087 --> 00:11:32,380 ஒரு இக்கட்டான சூழ்நிலை. 152 00:11:32,380 --> 00:11:36,926 நான் வெளியில் ஒரு உளவாளியைப் பார்த்தேன், அவன் நம் வீட்டை உளவு பார்த்தான். 153 00:11:37,719 --> 00:11:40,847 ஒருவேளை அவன் இங்கு நடக்கும் விசித்திரமான நிகழ்வுகளுடன் தொடர்புடையவனாக இருக்கலாம். 154 00:11:46,811 --> 00:11:48,897 ஏதோவொன்று முள் கொடியை மெல்லுகிறது. 155 00:11:48,897 --> 00:11:50,356 இதோ வருகிறேன்! 156 00:11:52,567 --> 00:11:53,776 அது எங்கே போனது? 157 00:11:54,611 --> 00:11:57,822 வெளியில் இருந்தும் உள்ளே இருந்தும் நாம் தாக்குதலுக்கு உள்ளாகிறோம் என்று தோன்றுகிறது. 158 00:11:57,822 --> 00:11:58,823 ஆனால் பயப்படாதீர்கள். 159 00:11:58,823 --> 00:12:01,701 நாம் மூவரும் ரோந்து போவதால், நாம் அதைக் கண்டுபிடித்துவிடுவோம். 160 00:12:03,828 --> 00:12:07,081 அது ரஸ்ஸை கட்டாயப்படுத்தி இங்கே வரச் செய்தது, அப்போதுதான் எங்களை பார்த்தீர்கள். 161 00:12:07,790 --> 00:12:09,959 ஆனால் சாபத்தை நீக்கும் சாதனை வரலாறு எங்களுக்கு இருக்கிறது. 162 00:12:09,959 --> 00:12:11,461 நாங்கள் இதை சரிசெய்வோம். 163 00:12:11,461 --> 00:12:13,379 இந்த பொம்மையைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? 164 00:12:13,379 --> 00:12:16,466 நான் இந்த பொம்மையைப் பற்றிய கதைகளைக் கேட்டு வளர்ந்தேன். 165 00:12:16,466 --> 00:12:19,302 இது என்னுடைய மூதாதையர், மல ராம் பட் என்பவரால் செய்யப்பட்டது. 166 00:12:19,302 --> 00:12:21,846 அவர் ஒரு பொம்மலாட்டக்காரர், மந்திரவாதி இல்லை. 167 00:12:21,846 --> 00:12:25,016 "மல ராம் அவரது காலத்தின் மிகப்பெரிய பொம்மலாட்டக்காரர்களில் ஒருவர். 168 00:12:25,016 --> 00:12:28,519 தன் இளமை பருவத்தில், அவர் ராஜாக்கள், ராணிகளுக்காக நிகழ்ச்சி நடத்த உலகம் முழுவதும் பயணம் செய்தார். 169 00:12:28,519 --> 00:12:31,397 மல ராமுக்கு வயதாகிவிட்டதால், அவர் தன்னுடைய கிராமத்தில் குடியேறினார், 170 00:12:31,397 --> 00:12:33,650 அவருடைய திறமைகளை இளைய தலைமுறையினருக்கு கடத்த 171 00:12:33,650 --> 00:12:36,194 அங்கு அவர் கஹானி பொம்மலாட்ட தியேட்டரை தொடங்கினார். 172 00:12:36,194 --> 00:12:39,906 அன்றிலிருந்து தியேட்டர் எங்கள் குடும்பத்தால் நடத்தப்பட்டு வருகிறது, எப்போதும் நடத்தப்படும்." 173 00:12:40,573 --> 00:12:42,867 அந்த கடைசி பகுதி இனி நிஜம் இல்லை. 174 00:12:42,867 --> 00:12:46,788 நான் இந்த தியேட்டரை நடத்த முயற்சித்தேன், ஆனால் வியாபாரம் கடினமாக இருந்தது. 175 00:12:47,622 --> 00:12:49,207 கடந்த மாதம் இதை மூடிவிட்டேன். 176 00:12:49,791 --> 00:12:51,417 முஸ்கானுக்கு இதை மூடியது பிடிக்கவில்லை. 177 00:12:52,001 --> 00:12:54,754 ராஜா பொம்மை மல ராம்ஜிக்கு மிகவும் பிடித்தது, 178 00:12:54,754 --> 00:12:57,674 என் முன்னோர்களில் ஒருவர் அதை விற்கும் வரை. 179 00:12:58,508 --> 00:13:00,218 பொம்மை ஏன் விற்கப்பட்டது என்று வியப்பாக இருக்கிறது. 180 00:13:00,218 --> 00:13:01,719 எனக்குத் தெரியாது. 181 00:13:01,719 --> 00:13:05,640 கீழே உள்ள சேமிப்பு அறையில் உங்களுக்கு கூடுதல் தகவல்கள் கிடைக்கலாம். 182 00:13:05,640 --> 00:13:08,059 அங்கேதான் எங்கள் குடும்ப கடிதப் பரிமாற்றங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. 183 00:13:08,059 --> 00:13:10,436 நினைவிருக்கட்டும், அது ஒழுங்கமைக்கப்பட்டிருக்காது. 184 00:13:10,436 --> 00:13:14,607 அதிர்ஷ்டவசமாக, ஒழுங்கமைக்கப்படாத அறைகளை வரிசைப்படுத்துவதில் எங்களுக்கு அனுபவம் உண்டு. 185 00:13:14,607 --> 00:13:16,609 எங்களுக்கு வழியை மட்டும் காட்டுங்கள். 186 00:13:16,609 --> 00:13:18,236 ஹாலின் அந்த பக்கம் இருக்கும் கதவு வழியாக. 187 00:13:44,554 --> 00:13:45,847 பேண்டோரா, உனக்கு ஒன்றுமில்லையே? 188 00:13:46,347 --> 00:13:47,181 ஆம். 189 00:13:50,685 --> 00:13:52,270 நான் கடிதங்களைக் கண்டுபிடித்துவிட்டேன். 190 00:13:52,270 --> 00:13:55,231 இவை எல்லாம்... இது ஹிந்தியா? 191 00:13:56,649 --> 00:13:57,650 ஆம், அதுதான். 192 00:13:57,650 --> 00:14:00,486 தீபிகா மொழிபெயர்ப்பதற்காக இவற்றை மேலே கொண்டு போக வேண்டும். 193 00:14:00,486 --> 00:14:02,113 இவை எல்லாவற்றையும் கொண்டு போக முடியாது. 194 00:14:02,113 --> 00:14:03,573 நாம் எதை தேடுகிறோம்? 195 00:14:03,573 --> 00:14:05,283 உறுதியாகத் தெரியவில்லை. 196 00:14:05,283 --> 00:14:06,701 இவற்றை பார்ப்போம். 197 00:14:06,701 --> 00:14:08,411 ஒருவேளை பார்க்கும்போது நமக்குத் தெரியலாம். 198 00:14:19,255 --> 00:14:21,090 முஸ்கான், நீ சோர்வாக இருக்கிறாய். 199 00:14:21,090 --> 00:14:22,675 நீ ஏன் கொஞ்ச நேரம் படுக்கக் கூடாது? 200 00:14:22,675 --> 00:14:25,428 இல்லை, நான் தூங்க விரும்பவில்லை. நிகழ்ச்சியைப் பார்க்க விரும்புகிறேன். 201 00:14:25,428 --> 00:14:27,347 நீ திரும்பி வரும்போது நிகழ்ச்சி நடக்கும். 202 00:14:27,347 --> 00:14:29,599 ஆனால் எனக்குத் தூக்கம் வரவில்லை. 203 00:14:29,599 --> 00:14:32,769 அபத்தம். உன் கண்கள் சொருகுவதை என்னால் பார்க்க முடிகிறது. 204 00:14:32,769 --> 00:14:34,687 நீ உடனே படுக்கைக்குப் போக வேண்டும். 205 00:14:42,111 --> 00:14:44,572 பொம்மை தன்னுடைய பார்வையாளர்களை போகாமல் வைத்திருக்க ஆசைப்படுவதாக தெரிகிறது. 206 00:14:44,572 --> 00:14:46,866 அது முஸ்கான் மீது முழு கவனம் செலுத்துகிறது. 207 00:14:48,201 --> 00:14:49,911 ரஸ், எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. 208 00:15:03,007 --> 00:15:04,467 ஹேய், நான் ஒன்றைக் கண்டுபிடித்தேன். 209 00:15:04,467 --> 00:15:06,386 இது கோர்னீலியஸின் கையெழுத்து. 210 00:15:06,386 --> 00:15:08,221 அவருடைய கையேடுகளில் பார்த்திருக்கிறேன். 211 00:15:09,556 --> 00:15:10,473 அப்பா? 212 00:15:14,269 --> 00:15:15,144 அப்பா? 213 00:15:26,865 --> 00:15:27,991 எவ்வளவு உற்சாகமானது. 214 00:15:27,991 --> 00:15:31,244 நான் இப்போது குட்டி தூக்கம் போட முடியாது, இவை எல்லாம் நடக்கும்போது. 215 00:15:52,056 --> 00:15:53,266 ஹலோ? 216 00:15:56,060 --> 00:15:57,353 இசை மிகவும் சத்தமாக இருக்கிறது. 217 00:15:57,353 --> 00:15:58,688 அவர்களுக்கு என் குரல் கேட்காது. 218 00:16:01,441 --> 00:16:02,775 ஒருவேளை அவர்களுக்கு இது கேட்கலாம். 219 00:16:09,073 --> 00:16:10,116 அது என்ன சத்தம்? 220 00:16:11,117 --> 00:16:12,285 மத்தளம். 221 00:16:12,285 --> 00:16:13,578 சேமிப்பு அறையில் இருந்து. 222 00:16:13,578 --> 00:16:15,747 பேண்டோரா, அலெக்ஸ். 223 00:16:18,833 --> 00:16:20,001 கதவைப் பூட்டியது யார்? 224 00:16:20,001 --> 00:16:21,169 அப்பா எங்கே? 225 00:16:21,169 --> 00:16:22,420 அவர் உன்னோடு இல்லையா? 226 00:16:23,004 --> 00:16:26,758 நான் தூங்கிக்கொண்டிருந்தபோது காலடிச் சத்தம் கேட்டு இவரைப் பார்த்தேன். 227 00:16:27,258 --> 00:16:28,801 இவரை திரும்ப அழைத்து வரட்டுமா? 228 00:16:29,636 --> 00:16:31,846 சரி. மறுபடி அழைக்கும் வரை காத்திருப்பேன். 229 00:16:33,556 --> 00:16:35,350 அப்பா மார்ஜியுடன் விமானத்தில் இருக்கிறார். 230 00:16:35,350 --> 00:16:38,561 - என்ன? எப்படி? - எனக்குத் தெரியாது. 231 00:16:38,561 --> 00:16:42,732 நினைவுதப்புவது பெரும் பிரச்சினையாகி வருகிறது, ஆனால் ஒரு நேரத்தில் ஒரு பிரச்சினையை சமாளிப்போம். 232 00:16:48,446 --> 00:16:50,740 தீபிகா, இதை சேமிப்பு அறையில் கண்டுபிடித்தேன். 233 00:16:50,740 --> 00:16:52,283 இதை உங்களால் மொழிபெயர்க்க முடியுமா? 234 00:16:53,201 --> 00:16:55,745 இது 1901-இல் எழுதப்பட்டது. 235 00:16:55,745 --> 00:17:01,209 அதில், "என் அப்பாவுக்கு, உங்களை நேரில் சந்திக்க முடியாததால் எழுதுகிறேன். 236 00:17:01,209 --> 00:17:04,337 நீங்களும் அம்மாவும் எனக்காக செய்த எல்லாவற்றையும் நான் பாராட்டுகிறேன். 237 00:17:04,337 --> 00:17:08,340 மல ராம்ஜி இந்தப் பொம்மையை அவருடைய திறமையால் ஆசீர்வதித்தது எனக்குத் தெரியும். 238 00:17:08,340 --> 00:17:11,844 நான் அதன் கயிறுகளை பிடித்தபோது அதை உணர்ந்தேன். 239 00:17:11,844 --> 00:17:15,932 ஆனால் எனக்கு பொம்மலாட்டக்காரனாக இருக்கவோ தியேட்டரை நடத்தவோ பிடிக்கவில்லை. 240 00:17:15,932 --> 00:17:18,685 நான் ராஜா பொம்மையை கலையில் ஆர்வம் கொண்ட 241 00:17:18,685 --> 00:17:22,355 அமெரிக்கரான, வேண்டர்ஹூவனுக்கு விற்றேன். 242 00:17:22,355 --> 00:17:24,148 விற்பனைக்கான இரசீதை இதோடு இணைத்திருக்கிறேன். 243 00:17:24,148 --> 00:17:27,318 ரயில் டிக்கெட்டுக்கு பணம் செலுத்த நான் அவருடைய பணத்தைப் பயன்படுத்துகிறேன். 244 00:17:27,318 --> 00:17:29,112 நான் குடியேறியவுடன் எழுதுகிறேன். 245 00:17:29,112 --> 00:17:32,156 ஒரு நாள் நீங்கள் என்னை மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன். 246 00:17:32,156 --> 00:17:35,618 அதுவரை உங்கள் மகன், விராஜ்" என்று எழுதியிருக்கிறது. 247 00:17:35,618 --> 00:17:37,161 விராஜ் யார்? 248 00:17:37,161 --> 00:17:40,206 என் கொள்ளுத் தாத்தா. 249 00:17:40,206 --> 00:17:44,878 அவர்தான் உங்கள் மூதாதையருக்கு பொம்மையை விற்றவர் என்பது எனக்குத் தெரியாது. 250 00:17:44,878 --> 00:17:46,713 அது சாபத்தை விளக்கலாம். 251 00:17:46,713 --> 00:17:50,216 ராஜா பொம்மை மீண்டும் நிகழ்ச்சி நடத்த அதை இங்கே கொண்டுவர செய்திருக்கிறது. 252 00:17:50,800 --> 00:17:52,802 விராஜ் நிராகரித்த பாரம்பரியத்தைத் தொடர. 253 00:17:52,802 --> 00:17:56,180 இந்த சாபத்தைப் போக்க தியேட்டரை நடத்துவதுதான் ஒரே வழி என்று நினைக்கிறேன். 254 00:17:56,180 --> 00:17:58,141 அதைத்தான் மல ராம்ஜி விரும்பினார். 255 00:17:58,766 --> 00:18:01,477 என் சுயநலத்துக்காக கடமையை புறக்கணித்தேன். 256 00:18:01,477 --> 00:18:02,937 சரி, மல ராம்ஜி. 257 00:18:02,937 --> 00:18:04,522 நான் தியேட்டரை நடத்துகிறேன். 258 00:18:04,522 --> 00:18:06,232 இப்போது பையனை விடுங்கள். 259 00:18:09,110 --> 00:18:10,028 அம்மா! 260 00:18:10,028 --> 00:18:11,863 எனக்கு ஒன்றுமில்லை, முஸ்கான். 261 00:18:11,863 --> 00:18:12,947 இது வெறும் நிகழ்ச்சிதான். 262 00:18:16,826 --> 00:18:18,494 எனக்குப் புரியவில்லை. 263 00:18:18,494 --> 00:18:20,955 நான் தியேட்டரை நடத்துகிறேன் என்றேன். 264 00:18:20,955 --> 00:18:23,541 பொம்மையை திருப்திப்படுத்த ஒரு வழி இருக்க வேண்டும். 265 00:18:23,541 --> 00:18:25,835 மல ராம்ஜி பற்றி உங்களுக்கு வேறு என்ன தெரியும்? 266 00:18:25,835 --> 00:18:29,547 அவர் கலையை விரும்பும் ஒரு சிறந்த பொம்மலாட்டக்காரர் என்றுதான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன் 267 00:18:29,547 --> 00:18:31,549 அவர் சாபம் கொடுப்பவர் மாதிரி தெரியவில்லை. 268 00:18:31,549 --> 00:18:33,301 அதனால்தான் இவற்றில் எந்த அர்த்தமும் இல்லை. 269 00:18:33,301 --> 00:18:34,469 பொறுங்கள். 270 00:18:34,469 --> 00:18:37,430 மல ராம்ஜி தன்னுடைய திறமைகளால் பொம்மையை ஆசீர்வதித்ததாக இதில் இருக்கிறது. 271 00:18:37,430 --> 00:18:39,682 அதை விராஜ் கயிறுகளில் உணர்ந்தார். 272 00:18:39,682 --> 00:18:43,770 ஆனால் அவர் பொம்மையை கோர்னீலியஸுக்கு விற்று ஆசீர்வாதத்தை நிராகரித்தார். 273 00:18:43,770 --> 00:18:47,857 பிறகு யாரும் அதைப் பயன்படுத்தாமல் பல ஆண்டுகளாக அது தடைசெய்யப்பட்ட பிரிவில் கிடந்தது. 274 00:18:47,857 --> 00:18:50,985 மல ராம்ஜியின் பொம்மலாட்டம் மீதான காதல் எங்கும் போகவில்லை. 275 00:18:50,985 --> 00:18:53,905 அந்த ஆசீர்வாதம் அப்படித்தான் சாபமாக மாறியிருக்க வேண்டும். 276 00:18:54,822 --> 00:18:55,990 எனக்குப் புரியவில்லை. 277 00:18:55,990 --> 00:18:59,661 மல ராம்ஜி பொம்மலாட்டம் மீதான தனது காதலை தனது குடும்பத்திற்கு கடத்த விரும்பினார். 278 00:18:59,661 --> 00:19:03,248 நான் அதை ஏற்க முயற்சிக்கிறேன், ஆனால் பொம்மை என் பேச்சைக் கேட்கவில்லை. 279 00:19:03,248 --> 00:19:04,832 அப்போது நாம் அதைக் கேட்க வைப்போம். 280 00:19:04,832 --> 00:19:06,918 பொம்மையே, இது இப்போது முடிகிறது. 281 00:19:11,256 --> 00:19:12,799 விடாதீர்கள், அம்மா! விடாதீர்கள்! 282 00:19:12,799 --> 00:19:14,926 இது தொலைக்காட்சியைவிட நன்றாக இருக்கிறது. 283 00:19:22,475 --> 00:19:24,018 ஹேய், கவனமாக. 284 00:19:33,820 --> 00:19:35,655 அது நன்றாக இல்லை. 285 00:19:38,241 --> 00:19:40,410 வேண்டாம். முஸ்கான், பக்கத்தில் போகாதே. 286 00:19:40,410 --> 00:19:42,287 அம்மா, ஏன் இவ்வளவு கவலைப்படுகிறீர்கள்? 287 00:19:42,287 --> 00:19:44,038 இது வெறும் நிகழ்ச்சிதான். 288 00:19:45,415 --> 00:19:47,959 இது மிகவும் அருமையான நிகழ்ச்சியாக இருந்தது. 289 00:19:49,127 --> 00:19:53,506 அம்மா, உங்களுக்கு பொம்மலாட்டக்காரராக ஆக விருப்பமில்லை, ஆனால் நான் விரும்புகிறேன். 290 00:20:02,974 --> 00:20:03,975 நான் விடுதலையாகிவிட்டேன். 291 00:20:03,975 --> 00:20:05,727 என்னால் மீண்டும் பேச முடிகிறது. 292 00:20:06,311 --> 00:20:08,938 ச்சே. அந்த அமைதியை ரசித்துக்கொண்டிருந்தேன். 293 00:20:09,606 --> 00:20:10,899 சும்மா விளையாடினேன். 294 00:20:11,441 --> 00:20:12,984 மீண்டும் வரவேற்கிறேன், ஹோரஸ். 295 00:20:15,987 --> 00:20:17,614 அது அவளைக் கட்டுப்படுத்தவில்லை. 296 00:20:18,281 --> 00:20:19,199 எப்படி? 297 00:20:19,199 --> 00:20:21,576 முஸ்கான் சாபத்தை நீக்கிவிட்டாள் என்று நினைக்கிறேன். 298 00:20:21,576 --> 00:20:24,412 ஏனென்றால் அவள் பொம்மலாட்டத்தை ரசிக்கிறாள். 299 00:20:24,412 --> 00:20:26,664 அவள் பாரம்பரியத்தைத் தொடர விரும்புகிறாள். 300 00:20:27,290 --> 00:20:29,209 அது ஒருபோதும் தியேட்டரைப் பற்றியது இல்லை. 301 00:20:29,792 --> 00:20:33,880 மல ராம்ஜி யாரையும் அவர் வழியை பின்பற்றும்படி கட்டாயப்படுத்த விரும்பவில்லை. 302 00:20:33,880 --> 00:20:37,800 அவர் கட்டாயப்படுத்தவில்லை, ஆனால் நான் நிச்சயமாக கட்டாயப்படுத்தப்பட்டேன். 303 00:20:37,800 --> 00:20:41,221 அம்மா, நாம் குடிபெயரும்போது இந்த பொம்மையை நம்முடன் நகரத்துக்குக் கொண்டு போகலாமா? 304 00:20:41,221 --> 00:20:43,806 நான் மல ராம்ஜியைப் போல ஒரு பொம்மலாட்டக்காரராக ஆக விரும்புகிறேன். 305 00:20:45,266 --> 00:20:46,684 நிச்சயமாக, மகளே. 306 00:20:46,684 --> 00:20:49,896 ஆனால் இப்போது, இது தூங்குவதற்கான நேரம் என்று நினைக்கிறேன். 307 00:20:52,232 --> 00:20:54,275 இதை இங்கே கொண்டு வந்ததற்கு நன்றி. 308 00:20:54,275 --> 00:20:56,027 இது மிகவும் சிரமத்தை ஏற்படுத்தியதற்கு வருந்துகிறேன். 309 00:20:56,027 --> 00:20:57,737 அது உங்கள் தவறு இல்லை. 310 00:20:57,737 --> 00:20:59,364 குடும்ப விஷயங்கள் கடினமாக இருக்கலாம். 311 00:20:59,364 --> 00:21:00,448 உண்மை. 312 00:21:00,949 --> 00:21:04,744 சமரசம் செய்ய நம் எல்லோருக்கும் குடும்ப மரபுகள் இருக்கின்றன என்று நினைக்கிறேன். 313 00:21:04,744 --> 00:21:06,996 அதோடு புதியவற்றை உருவாக்கவும். 314 00:21:06,996 --> 00:21:09,207 ஆம், உண்மைதான். 315 00:21:17,882 --> 00:21:20,635 எனக்கு என்ன நடக்கிறது என்பதை நான் கண்டுபிடிக்கப் போகிறேன். 316 00:21:20,635 --> 00:21:23,221 கடிக்கப்பட்ட முள் கொடி நினைவு தப்புவதற்கு காரணமாக இருந்தால் அல்லது... 317 00:21:24,055 --> 00:21:26,349 அதைக் கண்டுபிடிக்கும் வரை ஓய மாட்டேன். 318 00:21:27,267 --> 00:21:29,561 என்னை மன்னித்துவிடு. இது தொடர்ந்து நடப்பதை என்னால் நம்ப முடியவில்லை. 319 00:21:29,561 --> 00:21:31,396 எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. 320 00:21:32,480 --> 00:21:34,232 எனக்குத் தெரியும், அலெக்ஸ். 321 00:21:34,232 --> 00:21:36,192 நாங்கள் எல்லோரும் உங்களைப் பற்றி கவலைப்படுகிறோம். 322 00:21:38,069 --> 00:21:39,112 நானும்தான். 323 00:21:53,585 --> 00:21:55,253 கண்காணிக்க வேண்டும். 324 00:21:57,630 --> 00:21:59,924 என் கண்களுக்கு ஓய்வு தேவை. 325 00:23:02,320 --> 00:23:04,322 வசனத் தமிழாக்கம் அருண்குமார்