1 00:00:21,459 --> 00:00:22,961 இதைத்தான் நீ தேடுகிறாயா? 2 00:00:22,961 --> 00:00:24,087 அதேதான். 3 00:00:28,049 --> 00:00:30,718 கண்டிப்பாக, ஜார்ஜியா. உடனடியாக ஏதாவது செய்கிறேன். 4 00:00:33,638 --> 00:00:36,307 உன்னால் முடியும், அலெக்ஸ். நீ புத்திசாலி. உன்னால் இதைக் கண்டுபிடிக்க முடியும். 5 00:01:17,390 --> 00:01:20,351 இன்யூட் கண்ணாடியும் பெருவின் சுரைக்காயும் 6 00:01:28,818 --> 00:01:31,446 இந்த கோடையில் சிவப்பு முட்களைப் பற்றிய எங்களுடைய கவனமான ஆய்விற்குப் பிறகு, 7 00:01:31,446 --> 00:01:34,282 நாங்கள் முட்கொடியில் நிபுணத்துவம் பெற்றுவிட்டோம் என்று கருதுகிறேன். 8 00:01:34,282 --> 00:01:37,368 நீங்கள் இந்தியாவில் இருந்தபோது, அதைப் பற்றிய புதிய ஆய்வை முடித்தோம். 9 00:01:38,411 --> 00:01:42,707 முள் கொடியில் முப்பத்து ஏழு இடங்கள் மெல்லப்பட்டு, கடித்துக் குதறப்பட்டிருக்கின்றன. 10 00:01:42,707 --> 00:01:46,044 முப்பத்து ஏழா? ஆஹா. அது அதிகம். 11 00:01:46,044 --> 00:01:48,171 ஆம். சாம்பர்ஸ் பிஸியாக இருக்கின்றன. 12 00:01:48,171 --> 00:01:50,131 சாம்பர்ஸ். நல்ல பெயர். 13 00:01:50,131 --> 00:01:51,591 நன்றி. அது எனக்கிருக்கும் திறமை. 14 00:01:52,091 --> 00:01:55,720 சாம்பர்ஸ் கடிப்பதற்கு ஒரு வடிவம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். 15 00:01:55,720 --> 00:01:57,889 அதை உனக்கு முன்பே யோசித்துவிட்டேன், நண்பா. 16 00:02:00,058 --> 00:02:01,976 அதில் எந்த வடிவத்தையும் நான் பார்க்கவில்லை. 17 00:02:03,061 --> 00:02:06,231 உண்மைதான். ஆனால் சாம்பர்ஸ் எங்கிருந்தது என்பதை நாம் புரிந்துகொண்டால், 18 00:02:06,231 --> 00:02:07,982 அது எங்கே போகிறது என்று அனுமானிக்க முடியும். 19 00:02:07,982 --> 00:02:12,445 நானும் அதைத்தான் நினைத்தேன். அதனால் அது என் திட்டம். 20 00:02:12,445 --> 00:02:14,906 லேரி, இல்லை. வேண்டாம் என்று நாம் முடிவு... 21 00:02:17,033 --> 00:02:20,328 இன்யூட் வேடனின் கண்ணாடி. 22 00:02:20,328 --> 00:02:22,580 என் புதிய ஷூக்களுக்கு இது பொருத்தமாக இருக்கும். 23 00:02:22,580 --> 00:02:24,123 இதுவும் சபிக்கப்பட்டதுதானே? 24 00:02:24,123 --> 00:02:27,293 ஓ, ஆம். ஒரு இன்யூட் வேடன் அவன் கண்காணிக்கும் விலங்குகளைப் பிடிப்பதற்கான 25 00:02:27,293 --> 00:02:30,129 ஒரு வழியாக இந்த கண்ணாடியை வடிவமைத்தான். 26 00:02:30,129 --> 00:02:33,633 ஆம். அதை அணிந்துகொண்டு, நீங்கள் பிடிக்க விரும்புவதை சொல்ல வேண்டும். 27 00:02:33,633 --> 00:02:36,678 கடந்த வாரத்தில் ஒரு இடத்தில் சுற்றித் திரிந்த 28 00:02:36,678 --> 00:02:39,180 எந்த உயிருள்ள ஆத்மாவின் தடத்தையும் இந்தக் கண்ணாடி காட்டும். 29 00:02:39,180 --> 00:02:42,308 உங்கள் இரையின் தடம் எது என்று கண்டுபிடியுங்கள். அதைப் பின்தொடர வேண்டும். 30 00:02:42,976 --> 00:02:44,602 தற்காலிக சிறையில் சாம்பர்ஸ். 31 00:02:44,602 --> 00:02:47,313 அணிந்திருப்பவர் தங்கள் இரையை பிடித்த பிறகு மட்டுமே 32 00:02:47,313 --> 00:02:49,983 கண்ணாடியை கழற்ற முடியும் என்று கோர்னீலியஸின் கையேட்டில் இருக்கிறது. 33 00:02:49,983 --> 00:02:54,696 பொறுங்கள், யாரை தேடுகிறோமோ அவரை கண்டுபிடிப்பதுதான் சாபமா? அது மோசமில்லை. 34 00:02:54,696 --> 00:02:58,116 இல்லை, சாபம் என்னவென்றால், நீ நீண்ட நேரம் கண்ணாடியை அணிந்தால், 35 00:02:58,116 --> 00:03:01,744 தர்க்கரீதியாக சிந்திக்கும் திறனை முழுவதும் இழந்து, நீ மிகவும் பொறுப்பற்றவனாக மாறிவிடுவாய். 36 00:03:01,744 --> 00:03:04,414 அது இடைவிடாமல் ஒற்றை எண்ணத்தில் நாட்டம் கொண்ட ஒருவரை பைத்தியமாக்கிவிடும். 37 00:03:05,498 --> 00:03:06,749 ஆம், அது கொஞ்சம் மோசம்தான். 38 00:03:06,749 --> 00:03:11,004 அதேதான். அதனால்தான் கண்ணாடியை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும், 39 00:03:11,004 --> 00:03:13,172 மிகவும் விரக்தியில் இருக்கும் தருணத்தில். 40 00:03:13,172 --> 00:03:15,592 இப்போதிருக்கும் சூழ்நிலைப் போல. 41 00:03:15,592 --> 00:03:19,804 சபிக்கப்பட்ட கலைப்பொருளை வேண்டுமென்றே வேலை செய்யவைத்து பயன்படுத்த பரிந்துரைக்கிறாயா? 42 00:03:19,804 --> 00:03:22,682 நீங்கள் அதை அப்படிச் சொன்னால்... 43 00:03:22,682 --> 00:03:25,643 லேரி, நான் ஸ்கை சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன். அது மிகவும் ஆபத்தானது. 44 00:03:29,939 --> 00:03:31,691 அவர்கள் எந்த விஷயத்திலும் என்னை நம்புவதில்லை. 45 00:03:34,903 --> 00:03:38,239 பிறகு அருங்காட்சியகத்தில் நான் மயங்கிவிட்டேன். இஸ்தான்புல். 46 00:03:40,116 --> 00:03:41,743 அது ஒரு நீண்ட மயக்கம். 47 00:03:48,374 --> 00:03:49,626 அப்பா. 48 00:03:49,626 --> 00:03:50,793 ரஸ்? 49 00:03:52,503 --> 00:03:55,173 அப்பா, எனக்கு உங்கள் மீதிருக்கும் நம்பிக்கை போய்விட்டது. 50 00:04:02,388 --> 00:04:03,765 ஹேங்க், ரஸ் இங்கே வந்தானா? 51 00:04:06,017 --> 00:04:07,310 நிஜமாகவே கேட்டது போல இருந்தது... 52 00:04:07,310 --> 00:04:11,439 - அப்பா உங்கள் பொய்கள் என்னைப் புண்படுத்துகிறது. - பேண்டோரா? 53 00:04:11,439 --> 00:04:12,941 உனக்கு நிச்சயமாக கேட்டதுதானே? 54 00:04:15,276 --> 00:04:16,778 எனக்குப் புரியவில்லை. ஒருவேளை... 55 00:04:16,778 --> 00:04:19,447 அலெக்ஸ், வேண்டர்ஹூவன்கள் சபிக்கப்பட்டார்கள் என்று தெரிந்திருந்தால், 56 00:04:19,447 --> 00:04:21,199 உங்களை திருமணம் செய்திருக்க மாட்டேன். 57 00:04:21,199 --> 00:04:22,617 ஸ்கை, இல்லை. 58 00:04:22,617 --> 00:04:25,370 அலெக்ஸ், ஒன்றும் பிரச்சினையில்லையே? 59 00:04:29,791 --> 00:04:31,125 பிள்ளைகள் எங்கே? 60 00:04:31,125 --> 00:04:32,710 மாடியில் இருக்கிறார்கள். ஏன்? 61 00:04:32,710 --> 00:04:34,754 தடைசெய்யப்பட்ட பிரிவில் அவர்களின் குரலைக் கேட்டேன். 62 00:04:34,754 --> 00:04:37,465 அது வினோதம். அவர்கள் என்ன சொன்னார்கள்? 63 00:04:37,465 --> 00:04:42,595 என் மீதிருக்கும் நம்பிக்கை போய்விட்டதாக ரஸ் சொன்னான். என் பொய்கள் புண்படுத்தியதாக பேண்டோரா சொன்னாள். 64 00:04:42,595 --> 00:04:46,683 ஓ, அலெக்ஸ், இருவரும் அப்படிச் சொல்லியிருப்பார்கள் என்று என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை. 65 00:04:47,350 --> 00:04:48,685 எனக்கு உன் குரலும் கேட்டது. 66 00:04:48,685 --> 00:04:50,186 நான் என்ன சொன்னேன்? 67 00:04:50,186 --> 00:04:53,481 என் குடும்ப சாபம் தெரிந்திருந்தால், என்னை திருமணம் செய்திருக்க மாட்டாய் என்றாய். 68 00:04:53,481 --> 00:04:57,402 அது நூறு சதவிகிதம் பொய். சத்தியமாக. 69 00:04:57,402 --> 00:05:00,822 இந்தக் குரல்கள் எப்படியோ உங்கள் மயக்கத்துடனோ கடிக்கப்பட்ட முள் கொடியுடனோ 70 00:05:00,822 --> 00:05:02,198 தொடர்புடையவையோ என்று வியக்கிறேன். 71 00:05:02,198 --> 00:05:03,950 ஆனால் அது நிஜமாக கேட்டது. 72 00:05:04,450 --> 00:05:08,204 அல்லது ஒரு புதிய கலைப்பொருள் உயிர் பெற்றிருக்கலாம். அதுவாக இருக்கலாம். 73 00:05:08,204 --> 00:05:09,539 எனக்குத் தெரியவில்லை. 74 00:05:10,248 --> 00:05:12,876 என் மனதையே என்னால் நம்ப முடியாத ஒரு விசித்திரமான உணர்வு. 75 00:05:12,876 --> 00:05:16,921 கொஞ்சம் நேரம் என்னோடு உட்காருங்கள். வேறு ஏதாவது கேட்டால் என்னிடம் சொல்லுங்கள், சரியா? 76 00:05:27,891 --> 00:05:28,975 யார் அங்கே? 77 00:05:32,312 --> 00:05:34,105 லேரி, அறிவில்லாத முட்டாளே. 78 00:05:34,105 --> 00:05:36,191 உன் தோல்விகளில் இருந்து நீ ஏன் பாடம் கற்கவில்லை? 79 00:05:36,191 --> 00:05:37,775 நீ என்ன சொன்னாய்? 80 00:05:41,613 --> 00:05:44,240 கேலி செய்து என்னை சங்கடப்படுத்துகிறாயா? 81 00:05:44,240 --> 00:05:47,493 வருந்துகிறேன். நீ என்ன சொல்கிறாய் என்று எனக்குத் தெளிவாக தெரியவில்லை, நண்பா. 82 00:05:47,493 --> 00:05:48,995 தெளிவாக இல்லையா? 83 00:05:53,750 --> 00:05:57,253 ஸ்கை, உன்னிடம் இனி ஒருபோதும் பொய் சொல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்தேன். 84 00:05:57,253 --> 00:05:59,005 நீ ஏன் என்னை நம்பவில்லை? 85 00:05:59,005 --> 00:06:01,341 - ஆனால் நான் உங்களை நம்புகிறேன். - என்ன? 86 00:06:01,341 --> 00:06:03,551 நீங்கள் என்னிடம் பேசினீர்களா? 87 00:06:03,551 --> 00:06:06,888 நானில்லை... பொறு, இதுதான் எனக்கு நடந்தது. உனக்கு என்ன கேட்டது? 88 00:06:06,888 --> 00:06:10,350 நான் உங்களை நம்பவில்லை என்றீர்கள், ஆனால் நான் உங்களை நம்புகிறேன். நிச்சயமாக நம்புகிறேன். 89 00:06:10,350 --> 00:06:12,268 நீங்கள் மீண்டும் என்னிடம் பொய் சொல்லும் வரை. 90 00:06:13,269 --> 00:06:14,604 நாம் பிள்ளைகளை சென்று பார்க்க வேண்டும். 91 00:06:14,604 --> 00:06:16,898 நீ போய் பார். நான் தடைசெய்யப்பட்ட பிரிவுக்குப் போகிறேன். 92 00:06:16,898 --> 00:06:19,609 உனக்கும் குரல்கள் கேட்கிறது என்றால், அது சாபமாகத்தான் இருக்க வேண்டும். 93 00:06:24,239 --> 00:06:27,909 அம்மா, நீங்கள் மீண்டும் வேலைக்குத் திரும்பாமல் இருந்திருக்கலாம். 94 00:06:27,909 --> 00:06:30,495 தாயக் கட்டை பிரச்சினையிலிருந்து எங்களை காப்பாற்ற நீங்கள் இங்கே இல்லை. 95 00:06:30,495 --> 00:06:32,497 பேண்டோரா, நான் வேண்டுமென்றே... 96 00:06:32,497 --> 00:06:36,876 அல்லது பொம்மையிடமிருந்து. எங்களை ஏமாற்றுகிறீர்கள், அம்மா. அந்த வேலை அவ்வளவு முக்கியமா? 97 00:06:36,876 --> 00:06:38,211 ரஸ்... 98 00:06:38,211 --> 00:06:41,130 பொறு, அது உண்மையில்லை. சரியா? 99 00:06:46,386 --> 00:06:49,305 பேண்டோரா, நீ அருங்காட்சியகத்தில் இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. 100 00:06:49,806 --> 00:06:51,099 நீ எரிச்சலூட்டுகிறாய். 101 00:06:51,099 --> 00:06:52,183 அம்மா? 102 00:06:55,144 --> 00:06:56,437 பேண்டோரா, உன் அண்ணன் எங்கே? 103 00:06:56,437 --> 00:06:58,857 நான் மிகவும் எரிச்சலூட்டினால், நீங்களே அவனைத் தேடுங்கள். 104 00:06:58,857 --> 00:07:00,358 இல்லை. பேண்டோரா, பொறு. 105 00:07:01,860 --> 00:07:04,487 நீ ரஸ் போல புத்திசாலியாக மாட்டாய். 106 00:07:04,487 --> 00:07:06,239 நானும் ரஸ்ஸைப் போல புத்திசாலிதான். 107 00:07:06,239 --> 00:07:07,574 நிச்சயமாக நீ புத்திசாலிதான். 108 00:07:07,574 --> 00:07:09,450 பிறகு ஏன் நான் புத்திசாலி இல்லை என்றீர்கள்? 109 00:07:09,450 --> 00:07:11,035 நான் எதுவும் சொல்லவில்லை. 110 00:07:11,536 --> 00:07:13,329 உனக்கும் குரல்கள் கேட்டிருக்க வேண்டும். 111 00:07:19,669 --> 00:07:23,798 பேண்டோரா, உன்னைவிட என் மற்ற நண்பர்களுடன் நான் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன். 112 00:07:23,798 --> 00:07:24,883 டெவி? 113 00:07:24,883 --> 00:07:28,553 பேண்டோரா, இனி ஒருபோதும் நம் நட்பு முன்பு போல இருக்கப் போவதில்லை. 114 00:07:28,553 --> 00:07:30,305 நான் உன் பேச்சைக் கேட்க மாட்டேன். 115 00:07:30,305 --> 00:07:32,557 பேண்டோரா, நீ ஒரு ஏமாற்றம். 116 00:07:35,310 --> 00:07:37,854 பேண்டோரா, நீ எரிச்சலூட்டுகிறாய். 117 00:07:38,354 --> 00:07:40,523 நீ என்னை புறக்கணிக்க முடியாது, பேண்டோரா! 118 00:07:44,652 --> 00:07:48,781 ஸ்கை, வெற்றிடத்திலிருந்து என்னை மீட்க உனக்கு அதிக நேரம் பிடித்தது. 119 00:07:53,453 --> 00:07:55,830 ரஸ், நீ எப்படி உன் அப்பாவை சந்தேகப்படலாம்? 120 00:07:56,414 --> 00:07:58,291 நான் இயல்பாகவே ஆர்வமுள்ளவன். 121 00:07:58,875 --> 00:08:00,543 உனக்கும் குரல்கள் கேட்கின்றனவா? 122 00:08:00,543 --> 00:08:04,088 - ரஸ், நீ நிறைய கேள்விகளைக் கேட்கிறாய். - அவை சொல்வதைக் கேட்காமல் இருக்க முயற்சி செய். 123 00:08:04,714 --> 00:08:06,758 எப்படி? கேட்பதை என்னால் நிறுத்த முடியவில்லை. 124 00:08:11,387 --> 00:08:12,472 பேண்டோரா எங்கே? 125 00:08:12,472 --> 00:08:13,973 அவள் இங்கே வந்திருப்பாள் என்று நினைத்தேன். 126 00:08:13,973 --> 00:08:16,184 அம்மா, நான் உங்களிடம் பேச விரும்பவில்லை. 127 00:08:16,184 --> 00:08:18,353 பேண்டோரா, அது புண்படுத்துகிறது. 128 00:08:18,353 --> 00:08:22,190 அவள் இங்கே இல்லை. நினைவிருக்கட்டும், குரல்களைக் கேட்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள். 129 00:08:22,190 --> 00:08:25,109 என்னால் எது உண்மை, எது பொய் என்று சொல்ல முடியவில்லை. 130 00:08:25,777 --> 00:08:28,196 நான் அவளைக் கண்டுபிடிப்பேன். அவள் ஒளிந்துகொள்ளும் இடங்கள் எல்லாம் எனக்குத் தெரியும். 131 00:08:28,696 --> 00:08:31,699 அப்பா, நீங்கள் நினைப்பது போல என்னை உங்களுக்குத் தெரியாது. 132 00:08:32,282 --> 00:08:33,700 பேண். அட, செல்லம். 133 00:08:34,327 --> 00:08:35,995 அவள் இங்கே இல்லை, அலெக்ஸ். 134 00:08:35,995 --> 00:08:37,872 இந்தக் குரல்கள் எங்கிருந்து வருகின்றன? 135 00:08:38,705 --> 00:08:41,376 அவை அந்த திசையில் சத்தமாக கேட்பது போல தெரிகிறது. 136 00:08:54,597 --> 00:08:58,351 ஸ்டான்லி, உனக்கு என் அளவுக்கு தைரியம் இல்லை. 137 00:08:58,851 --> 00:08:59,852 நான் தைரியசாலி. 138 00:09:07,610 --> 00:09:09,571 நான் எவ்வளவு தைரியமானவன் என்று காட்டுகிறேன். 139 00:09:10,655 --> 00:09:12,824 ஊடுருவியவன்! 140 00:09:15,285 --> 00:09:16,452 என்ன... 141 00:09:16,452 --> 00:09:21,291 இந்த சுரைக்காய் தென் அமெரிக்கப் பிரிவைச் சேர்ந்தது. அது ஏன் இங்கே இருக்கிறது? 142 00:09:24,294 --> 00:09:27,922 அது ஒரு ஏர்வென்ட். இது வீட்டின் பிரதான காற்று அமைப்புடன் இணைக்கப்பட்டிருக்கிறது. 143 00:09:27,922 --> 00:09:32,218 சுரைக்காயை இங்கே வைத்தவன், அந்த கிசுகிசுப்பு பிரையர்ஸ்டோன் முழுவதும் நம் காதுகள் வரை 144 00:09:32,218 --> 00:09:34,137 பயணிக்க விரும்பியிருக்கிறான். 145 00:09:34,137 --> 00:09:36,222 சுரைக்காயை இங்கிருந்து கொண்டு போவோம். 146 00:09:36,222 --> 00:09:38,182 அதிர்ஷ்டவசமாக, நான் ராவுக்கு ஒரு புதிய ரிமோட்டை செய்தேன். 147 00:09:57,160 --> 00:09:58,912 ஐயோ. என்ன நடக்கிறது? 148 00:09:59,746 --> 00:10:01,789 பேண்டோரா, எங்களுக்கு நீ தேவையில்லை. 149 00:10:02,415 --> 00:10:05,335 நான் என் அதிமேதாவி மூளையை வைத்து எப்போதும் பிரச்சினையில் இருந்து தப்பிக்க வைக்கிறேன். 150 00:10:05,335 --> 00:10:08,171 அப்படியா, என்னாலும் அதைச் செய்ய முடியும். 151 00:10:18,223 --> 00:10:20,225 அவன் நம்மை உளவு பார்த்தானா? 152 00:10:20,225 --> 00:10:23,311 இந்த கலைப்பொருளைப் பற்றிய கோர்னீலியஸின் கையேட்டு பதிவுகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும். 153 00:10:23,811 --> 00:10:25,438 அப்பா, நான் உங்களுக்கு உதவுகிறேன். 154 00:10:25,438 --> 00:10:29,526 நன்றி, செல்லம். நம்மைப் பார், ஆராய்ச்சிக் குழு, மீண்டும் ஒன்றாக. 155 00:10:30,693 --> 00:10:32,946 அப்பா, நான் உங்களுடன் நெருக்கமாக உணரவில்லை. 156 00:10:38,076 --> 00:10:39,494 நான் வெளியே ஒரு உளவாளியைப் பார்த்தேன். 157 00:10:39,494 --> 00:10:41,704 அவன் நான் பார்த்த அதே ஆளாக இருக்க வேண்டும். 158 00:10:41,704 --> 00:10:43,122 நான் முன்பே சொன்னது போல, 159 00:10:43,122 --> 00:10:45,833 அந்த மனிதனுக்கும் இங்கு நடப்பதற்கும் சம்பந்தம் இருக்குமோ என்று தோன்றுகிறது. 160 00:10:45,833 --> 00:10:47,502 அதாவது, அது தற்செயலாக இருக்க முடியாது. 161 00:10:47,502 --> 00:10:51,339 ஸ்டான்லி, நீ கட்டுப்படுத்தப்பட்ட பிரிவைப் பாதுகாக்கத் தவறிவிட்டாய். 162 00:10:51,339 --> 00:10:53,550 எனக்குத் தெரியும். நான் இன்னும் கடினமாக முயற்சிப்பேன். 163 00:10:53,550 --> 00:10:57,095 நான் ஒன்றும் சொல்லவில்லை. அதிலிருந்து வெளியே வா. அவை உண்மையானவை அல்ல. 164 00:10:57,095 --> 00:11:00,098 அவன் கருப்பு உடையில், தொலைநோக்கியுடன் நம் ஜன்னலைப் பார்த்துக்கொண்டிருந்தான். 165 00:11:00,098 --> 00:11:02,058 நீ அவனை நன்றாகப் பார்த்தாயா? 166 00:11:02,058 --> 00:11:04,978 ஓரளவுக்கு. அவன் நடைபாதைக்கு பக்கத்தில் இருந்த புதர்களில் இருந்தான். 167 00:11:05,562 --> 00:11:07,105 அங்கேதான் நானும் அவனைப் பார்த்தேன். 168 00:11:07,939 --> 00:11:12,902 அம்மா, இந்த ஆண்டு மனதை தொந்தரவு செய்யும் பல விஷயங்களைப் பார்த்துவிட்டேன். ஏராளமாக. 169 00:11:13,611 --> 00:11:15,321 நான் உன்னை இன்னும் நன்றாகப் பாதுகாக்க வேண்டும். 170 00:11:21,494 --> 00:11:23,788 "பெருவின் சுரைக்காய்." அது... என்ன? 171 00:11:23,788 --> 00:11:25,874 பக்கம் கிழிக்கப்பட்டிருக்கிறது. 172 00:11:25,874 --> 00:11:27,834 யாரோ உள்ளே நுழைந்திருக்கிறார்கள், 173 00:11:27,834 --> 00:11:30,753 இந்த சாபத்தை எப்படி போக்குவது என்று நாம் தெரிந்துகொள்வதை அவர்கள் விரும்பவில்லை. 174 00:11:30,753 --> 00:11:33,798 அவன் வயதானவன். 40 வயது இருக்கும். 175 00:11:33,798 --> 00:11:37,343 நாற்பது அதிக வயதில்லை. ஆனால் விஷயம் இல்லை. 176 00:11:37,343 --> 00:11:39,929 விஷயம் என்னவென்றால், அவன்தான் அத்துமீறி நுழைந்தவனாக இருக்க வேண்டும். 177 00:11:41,014 --> 00:11:43,516 அவன்தான் ராவின் ரிமோட்டை எடுத்துக்கொண்டு, பொம்மையை வைத்து 178 00:11:43,516 --> 00:11:46,811 ரஸ்ஸைத் தாக்கி, கோர்னீலியஸின் கையேட்டை கிழித்திருப்பான் என்று பந்தயம் கட்டுகிறேன். 179 00:11:46,811 --> 00:11:48,646 அவர் ஒரு சூப்பர்வில்லன் போல. 180 00:11:48,646 --> 00:11:50,690 ஆனால் அதைச் செய்ய வேண்டும் என்று அவனுக்கு எப்படி தெரிந்தது? 181 00:11:50,690 --> 00:11:54,652 ரஸ் சொல்வது சரிதான். அது வீட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். 182 00:11:54,652 --> 00:11:57,739 சூப்பர்வில்லன்கள் எல்லாம் தெரிந்தவர்கள். நிச்சயமாக. 183 00:11:57,739 --> 00:11:58,948 நான் சொல்வதை ஆதரியுங்கள், அம்மா. 184 00:11:58,948 --> 00:12:00,033 அம்மா? 185 00:12:01,993 --> 00:12:04,829 அம்மா, யாரோ நம்மை கண்காணிக்கிறார்கள். 186 00:12:05,330 --> 00:12:08,124 நம் குடும்பம் ஆபத்தில் இருக்கிறது, மீண்டும்! 187 00:12:08,124 --> 00:12:11,294 ஸ்கை, எங்களைக் காப்பாற்றுவது உன் கையில்தான் இருக்கிறது. 188 00:12:19,844 --> 00:12:21,679 என் குடும்பத்துடன் யாரும் மோதக் கூடாது. 189 00:12:24,182 --> 00:12:28,186 ஹேய், கண்ணாடியே. என் வீட்டிற்குள் ஊடுருவியவனைப் பிடிக்க நினைக்கிறேன். 190 00:12:28,186 --> 00:12:29,771 இங்கே யார் வந்திருக்கிறார்கள் என்று காட்டு. 191 00:12:46,454 --> 00:12:47,747 ஸ்கை? 192 00:12:47,747 --> 00:12:50,959 வரையத் தொடங்கு, லேரி. நாம் ஊடுருவும் நபரை கண்டுபிடிக்க வேண்டும். 193 00:12:57,590 --> 00:12:59,300 மாடிக்குச் சென்று பார்த்தேன். அம்மா இல்லை. 194 00:12:59,300 --> 00:13:01,970 நான் மிகவும் எரிச்சலூட்டுவதால் அவர் ஒளிந்துகொண்டிருக்கலாம். 195 00:13:01,970 --> 00:13:03,346 அவரும் ரஸ்ஸும் அப்படி நினைக்கிறார்கள். 196 00:13:03,346 --> 00:13:05,682 அது வெறும் சுரைக்காயின் கிசுகிசுப்புகள். 197 00:13:05,682 --> 00:13:09,769 கிசுகிசுப்புக்கு அதைச் சொல்ல எப்படித் தெரிந்தது? அது தானாக ஒன்றை சொல்லியிருக்க முடியாது. 198 00:13:09,769 --> 00:13:12,564 வேண்டர்ஹூவன்களே, நமக்கு ஒரு பிரச்சினை. 199 00:13:12,564 --> 00:13:14,691 ஆனால் நாம் ஏற்கனவே ஒரு பிரச்சினையில் இருக்கிறோம். 200 00:13:14,691 --> 00:13:18,528 சரி. ஆனால் இது புதிய ஒன்று. என்னோடு வாருங்கள். 201 00:13:28,997 --> 00:13:29,998 அம்மா. 202 00:13:29,998 --> 00:13:34,460 பேண்டோரா சிவப்பு. ரஸ் ஊதா. அலெக்ஸ் ஆரஞ்சு. 203 00:13:36,921 --> 00:13:38,673 ஸ்கை, அதை ஏன் அணிந்தாய்? 204 00:13:38,673 --> 00:13:41,968 அவர் கடமையைச் செய்ய அதை அணிந்தார். நான் அவரை குறை சொல்ல மாட்டேன். 205 00:13:41,968 --> 00:13:45,680 குடும்பத்தினரே, சுரைக்காயின் சாபத்தைப் போக்குங்கள். ஊடுருவியவனை நான் கண்டுபிடிக்கிறேன். 206 00:13:45,680 --> 00:13:48,683 லேரி, வா. இன்னும் நீல நிற கோடு யாருடையது என்று கண்டுபிடிக்க வேண்டும். 207 00:13:50,018 --> 00:13:54,689 நமக்கு கஷ்ட காலங்கள் வந்திருக்கின்றன, ஆனால் ஒரே நேரத்தில் இரண்டை நீக்க வேண்டியிருந்ததில்லை. 208 00:13:54,689 --> 00:13:59,027 அம்மா சொன்னதைக் கேட்டாய். அவர் அதைப் பார்த்துக்கொள்வார். சாபத்தைப் போக்குவது நம் வேலை. 209 00:13:59,027 --> 00:14:00,737 சரி, அதைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? 210 00:14:00,737 --> 00:14:04,324 கிசுகிசுப்பு நம் அன்புக்குரியவர்கள் புண்படுத்தும் விஷயங்களைச் சொல்வதைக் கேட்க வைக்கின்றன. 211 00:14:04,324 --> 00:14:07,035 உண்மையில்லாத விஷயங்களை என்று நம்புகிறேன். 212 00:14:07,827 --> 00:14:09,913 அவற்றில் சில உண்மையானவையாக இருக்கலாம். 213 00:14:10,496 --> 00:14:12,165 நாம் அவற்றை புறக்கணிக்க முயன்றால் என்ன? 214 00:14:12,165 --> 00:14:15,501 நான் அதை முயற்சித்தேன். பயமாக இருந்தது. 215 00:14:16,169 --> 00:14:18,171 இன்னும் இரண்டு கோடுகள் இருக்கின்றன. 216 00:14:18,671 --> 00:14:22,342 கருப்பு கோடு யாருடையது என்று சொல்ல முடியவில்லை. கோடு உடைந்திருக்கிறது. 217 00:14:23,426 --> 00:14:24,844 இதோ மீண்டும் நீலக் கோடு. 218 00:14:29,390 --> 00:14:31,559 கம்பிகளுக்கு பின்னால் ஏதோ இருக்கிறது. 219 00:14:38,358 --> 00:14:40,109 நீல நிற கோடு வௌவாலா? 220 00:14:41,319 --> 00:14:44,739 இல்லை. அது நம் ஊடுருவல்காரன் இல்லை. வௌவால் பச்சை கோடு. 221 00:15:04,968 --> 00:15:05,969 ஸ்கை! 222 00:15:08,513 --> 00:15:10,306 என்ன ஆனது? எல்லோரும் நலம்தானே? 223 00:15:10,306 --> 00:15:13,142 முள் கொடி மீது ஏறும்போது ஸ்கை சில பெட்டிகளை தள்ளிவிட்டுவிட்டார், 224 00:15:13,142 --> 00:15:14,727 ஆனால் அவர் கவனித்ததாக நான் நினைக்கவில்லை. 225 00:15:19,023 --> 00:15:20,024 அப்படித்தான் தெரிகிறது. 226 00:15:20,692 --> 00:15:25,321 அப்பா, உங்களால், நாங்கள் இனி ஒருபோதும் நன்றாக இருக்கப் போவதில்லை. 227 00:15:26,906 --> 00:15:30,869 நீல நிற கோடானது கடிக்கப்பட்ட முள் கொடி மீது இருக்கிறது. இது சாம்பர்ஸ். 228 00:15:30,869 --> 00:15:33,246 அது குழாய் வழியாக அலெக்ஸின் அலுவலகத்திற்கு உள்ளே வந்திருக்கிறது. 229 00:15:33,246 --> 00:15:34,956 அது எப்படி இங்கே வந்தது? 230 00:15:36,124 --> 00:15:37,542 அதைத்தான் நான் கண்டுபிடிக்கப் போகிறேன். 231 00:15:41,629 --> 00:15:45,091 கருப்பு கோடு யாருடையது? அந்த கோடு ஏன் விட்டுவிட்டு இருக்கிறது? 232 00:15:45,675 --> 00:15:47,176 தெரியவில்லை. 233 00:15:53,683 --> 00:15:56,769 அவர் நீண்ட நேரமாக கண்ணாடியை அணிந்திருக்கிறார். அவர் கட்டுப்பாட்டை இழக்கிறார். 234 00:15:56,769 --> 00:15:58,688 அவர் தன்னைத் தானே காயப்படுத்திக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 235 00:15:58,688 --> 00:15:59,939 அல்லது வேறு யாரையாவது. 236 00:16:00,523 --> 00:16:03,193 புரிந்தது. அம்மாவுக்கு உதவி செய்து, இந்த சுரைக்காயின் சாபத்தைப் போக்க வேண்டும். 237 00:16:03,193 --> 00:16:05,445 வேண்டர்ஹூவன் வீட்டில் ஒரு இயல்பான நாள். 238 00:16:26,591 --> 00:16:28,009 அவை வெளியிலிருந்து வந்திருக்கின்றன. 239 00:16:37,101 --> 00:16:40,021 ஆஹா. அந்த புதர்கள் நிஜமாகவே அம்மாவை கோபப்படுத்தியிருக்க வேண்டும். 240 00:16:40,522 --> 00:16:41,814 இது ஒரு மோசமான யோசனை. 241 00:16:44,776 --> 00:16:47,904 கருப்பு கோடு, சாம்பர்ஸை இங்கே விட்டிருக்க வேண்டும். 242 00:16:47,904 --> 00:16:51,115 இந்த குழாய் தடைசெய்யப்பட்ட பிரிவுக்குப் போகிறது. 243 00:16:54,619 --> 00:16:57,580 கருப்பு நிற கோடுதான் நான் ஜன்னல் வழியாக பார்த்தவனாக இருக்க வேண்டும். 244 00:16:57,580 --> 00:16:59,582 பாருங்கள், அவன் நம் முற்றம் முழுவதும் சுற்றியிருக்கிறான். 245 00:16:59,582 --> 00:17:01,751 கருப்பு கோடுதான் நீ பார்த்தவன் என்றால், 246 00:17:01,751 --> 00:17:05,338 அவன் பாதை ஏன் நம் வீட்டின் முடிவில் நிற்கிறது? அவன் எப்படி வந்து போகிறான்? 247 00:17:05,838 --> 00:17:10,552 ரஸ், நீ புத்திசாலி என்று நினைக்கிறாய். நீ வேறு யார் சொல்வதையும் கேட்பதில்லை. 248 00:17:11,135 --> 00:17:12,262 நானும் கேட்கிறேன். 249 00:17:13,805 --> 00:17:15,848 அ... மன்னித்துவிடு. நீ என்ன சொல்லிக்கொண்டிருந்தாய்? 250 00:17:15,848 --> 00:17:19,686 ஒருவேளை அவன் இன்னும் இங்கே இருக்கலாம். அதனால்தான் அவன் வந்து போவது நமக்குத் தெரியவில்லை. 251 00:17:19,686 --> 00:17:21,145 அது எப்படி சாத்தியம்? 252 00:17:22,647 --> 00:17:23,648 ஸ்கை! 253 00:17:37,120 --> 00:17:38,580 கருப்பு கோடு இங்கே வந்தது. 254 00:17:39,414 --> 00:17:42,083 இவைதான் எங்கள் விளையாட்டுகளில் காணாமல் போன டைஸ்கள். 255 00:17:42,083 --> 00:17:44,127 அதோடு ராவின் அசல் ரிமோட் கண்ட்ரோல். 256 00:17:46,754 --> 00:17:49,507 பெருவின் சுரைக்காய் பற்றிய கையேட்டின் பக்கங்கள். 257 00:17:49,507 --> 00:17:52,635 அம்மா, நீங்கள் கருப்பு கோட்டின் ரகசிய மறைவிடத்தைக் கண்டுபிடித்துவிட்டீர்கள். 258 00:18:04,314 --> 00:18:05,607 பிடித்துவிட்டேன்! 259 00:18:10,320 --> 00:18:11,654 நான் ஊடுருவியவதைப் பிடித்துவிட்டேன். 260 00:18:14,449 --> 00:18:17,327 முள் கொடியை கடிக்கும் உயிரினம். நீங்கள் பிடித்துவிட்டீர்கள். 261 00:18:17,327 --> 00:18:19,704 ஆஹா. எனவே அதுதான் சாம்பர்ஸ். 262 00:18:19,704 --> 00:18:21,789 சாம்பர்ஸ்தான் நீல நிற கோடு. 263 00:18:23,249 --> 00:18:27,545 கருப்பு கோடுக்காரன் இன்னும் கிடைக்கவில்லை. மீண்டும் கண்ணாடியைப் பயன்படுத்த வேண்டும். 264 00:18:27,545 --> 00:18:30,298 நம்மால் முடியாது. அதை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும், நினைவிருக்கிறதா? 265 00:18:33,801 --> 00:18:38,264 லேரி, நீ இதை பயன்படுத்த முடியாததற்கு வருந்துகிறேன். நீ விரும்பியது எனக்குத் தெரியும். 266 00:18:38,890 --> 00:18:42,977 சரி. பரவாயில்லை, ஸ்கை. ஊடுருவியதை பிடித்துவிட்டீர்கள். 267 00:18:43,603 --> 00:18:46,606 கடைசியாக அந்த சாபத்தை எப்படி போக்குவது என்பது பற்றிய தகவல் நமக்கு கிடைத்துவிட்டது. 268 00:18:52,403 --> 00:18:55,281 "பெருவியன் சுரைக்காய் ஒரு பழங்கால கைவினைஞரால் வடிவமைக்கப்பட்டு, 269 00:18:55,281 --> 00:18:57,534 ஒரு போட்டி ராஜ்ஜியத்திற்கு பரிசாக வழங்கப்பட்டது. 270 00:18:58,117 --> 00:18:59,869 ஆனால் அந்த பரிசு சபிக்கப்பட்டது. 271 00:18:59,869 --> 00:19:03,289 அது மக்கள் தங்கள் ஆழ்ந்த பாதுகாப்பின்மை பற்றி தங்கள் அன்புக்குரியவர் கிசுகிசுப்பதாக 272 00:19:03,289 --> 00:19:06,209 கேட்க வைத்து, அவர்களுக்கு மத்தியில் அவநம்பிக்கையை விதைத்தது. 273 00:19:06,709 --> 00:19:10,046 அது ராஜ்ஜியத்தை பலவீனப்படுத்தியது, அதன் போட்டியாளர் அதைக் கைப்பற்ற வைத்தது." 274 00:19:10,672 --> 00:19:11,881 பிரமாதம். 275 00:19:11,881 --> 00:19:14,884 ஆக்கிரமிப்பு செய்த ராஜ்ஜியம் இந்த சுரைக்காயை ட்ரோஜன் ஹார்ஸாக பயன்படுத்தி, 276 00:19:14,884 --> 00:19:16,761 பிரிவினையை ஏற்படுத்தி, ஆக்கிரமித்திருக்கிறது. 277 00:19:16,761 --> 00:19:20,974 அந்தக் குரல்கள் உண்மையானவை இல்லை என்று எனக்குத் தெரியும். இருந்தாலும், புறக்கணிப்பது கடினம். 278 00:19:21,558 --> 00:19:25,979 அலெக்ஸ், உங்களுக்குள் இருக்கும் ஏதோ மோசமடைகிறது, அது உங்களுக்கும் தெரியும். 279 00:19:25,979 --> 00:19:28,022 நீங்கள் எங்கள் எல்லோரையும் ஆபத்தில் தள்ளுகிறீர்கள். 280 00:19:28,022 --> 00:19:31,901 ஹேய், போதும்! என் குடும்பத்தை பாதிக்கும் எதையும் நான் செய்ய மாட்டேன்! 281 00:19:31,901 --> 00:19:34,237 சமீபகாலமாக என் மூளை மிகவும் நம்பகமானதாக இல்லை, 282 00:19:34,237 --> 00:19:36,364 ஆனால் என் இதயத்தில் என்ன இருக்கிறது என்று சுரைக்காய்க்கு தெரியாது. 283 00:19:36,364 --> 00:19:41,411 நான் உங்கள் எல்லோரையும் நேசிக்கிறேன். நான் 100 சதவிகிதம் நிஜம் என உறுதியாக நம்பும் ஒரு உணர்வு. 284 00:19:41,911 --> 00:19:43,454 நாங்களும் உங்களை நேசிக்கிறோம். 285 00:19:43,454 --> 00:19:47,083 நான் சில நேரங்களில் என் மனதில் தோன்றும் சந்தேகக் குரல்களுக்கு அவற்றின் தகுதிக்கு மீறிய 286 00:19:47,083 --> 00:19:48,251 சக்தியைக் கொடுத்துவிடுகிறேன். 287 00:19:48,251 --> 00:19:49,627 சாபம் இல்லாமல் கூட. 288 00:19:49,627 --> 00:19:51,754 ஆம், அவை வெறும் எண்ணங்கள்தானே? 289 00:19:51,754 --> 00:19:54,173 நாம் அவற்றை தீவிரமாக எடுத்துக்கொண்டால், சாபம் வென்றுவிடும். 290 00:19:54,173 --> 00:19:56,009 எனவே, இது எப்படி உள்ளது? 291 00:19:56,009 --> 00:19:59,095 உங்களை நேசிக்கிறேன் விசித்திரமானவர்களே. என்றென்றும். 292 00:19:59,762 --> 00:20:01,347 கேட்டதா, எங்கள் காதுகளில் நுழைந்தவையே. 293 00:20:01,347 --> 00:20:06,436 நான் உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவன் இல்லை, ஆனால் இங்குள்ள எல்லோரையும் நேசிக்கிறேன். 294 00:20:09,814 --> 00:20:11,482 கிசுகிசுப்பு குறைக்கிறது. 295 00:20:15,320 --> 00:20:18,740 ஒருவேளை அப்படித்தான் சாபத்தை நீக்க வேண்டுமோ. சந்தேகங்களை உண்மையால் வென்று. 296 00:20:19,574 --> 00:20:22,577 ஆம். எப்படி என்று எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. 297 00:20:22,577 --> 00:20:24,287 உங்கள் உண்மையான உணர்வுகளை எழுதுங்கள், 298 00:20:24,287 --> 00:20:27,207 கிசுகிசுப்பை அமைதிப்படுத்த அந்த உண்மையைப் பயன்படுத்துவோம். 299 00:20:31,461 --> 00:20:32,962 நான் என் வழியில் புத்திசாலி. 300 00:20:32,962 --> 00:20:34,923 அப்பாவுக்கு ஏதோ நடக்கிறது. 301 00:20:34,923 --> 00:20:38,593 நான் அதை உணர்கிறேன், ஆனால் அப்பா எங்களை நேசிக்கிறார் என்றும் நான் நம்புகிறேன். 302 00:20:38,593 --> 00:20:41,763 எனவே நான் ஒரு முறை என் மனது சொல்வதைக் கேட்பேன். சந்தேகங்கள் இருந்தாலும் அவரை நம்புகிறேன். 303 00:20:41,763 --> 00:20:45,934 எனக்கு என் வேலையை பிடிக்கும். அதோடு என் குடும்பத்தையும் முழு மனதுடன் நேசிப்பதோடு, 304 00:20:45,934 --> 00:20:48,728 அவர்களை பாதுகாக்க என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்வேன். 305 00:20:48,728 --> 00:20:49,979 நான் தவறு செய்திருக்கிறேன், 306 00:20:49,979 --> 00:20:54,484 ஆனால் என் குடும்பத்துக்கு சரியானதை செய்யவும், என் முன்னோர்களின் தவறுகளை திருத்தவும் விரும்புகிறேன். 307 00:20:54,484 --> 00:20:56,069 இந்த குடும்பம் சரியாக இருக்கிறது. 308 00:20:56,069 --> 00:20:58,071 ஒரு குடும்பம் இருப்பது நன்றாக இருக்கிறது. 309 00:21:10,542 --> 00:21:11,709 நல்லவேளை. அது வேலை செய்தது. 310 00:21:11,709 --> 00:21:13,836 நீ என்ன எழுதினாய்? என்னைப் பற்றியா? 311 00:21:13,836 --> 00:21:15,588 உனக்கு ஒருபோதும் தெரியாது. 312 00:21:16,631 --> 00:21:18,258 நீ மிகவும் எரிச்சலூட்டுகிறாய். 313 00:21:25,557 --> 00:21:28,601 சரி, எல்லாம் தயாராகிவிட்டது. நான் காலையில் கிளம்புகிறேன். 314 00:21:28,601 --> 00:21:31,437 லீமாவில் உள்ள அருங்காட்சியகத்தில் சுரைக்காயை திருப்பித் தர எனக்கு அப்பாயின்மென்ட் இருக்கிறது. 315 00:21:31,437 --> 00:21:34,440 கண்ணாடியைப் பற்றி உன் அலாஸ்கா நண்பருடன் பேசினேன். 316 00:21:34,440 --> 00:21:36,401 நாங்கள் உங்களுடன் வர முடிந்திருக்கலாம். 317 00:21:36,401 --> 00:21:39,487 நான் தொடர்ந்து தொடர்பில் இருப்பேன். அதோடு மார்ஜி என்னுடன் இருப்பார். 318 00:21:39,487 --> 00:21:42,740 நான் நினைவிழந்தாலும், என் பாதுகாப்பை அவர் உறுதிசெய்வார். நான் பேக் செய்கிறேன். 319 00:23:02,320 --> 00:23:04,322 வசனத் தமிழாக்கம் அருண்குமார்