1 00:00:22,544 --> 00:00:27,507 டாக்டர் டெர்ரிஃபிகோவின் மருத்துவ நிகழ்ச்சி 2 00:00:33,012 --> 00:00:34,055 யார் அங்கே? 3 00:00:34,055 --> 00:00:35,515 டயானா கேமரூன். 4 00:00:35,515 --> 00:00:38,434 இந்த டாக்டர் டெர்ரிஃபிகோவின் வலிமைக்கான டானிக் சரியாக வேலை செய்யவில்லை. 5 00:00:38,434 --> 00:00:39,727 என்னுடைய லாக்கெட் திரும்ப வேண்டும். 6 00:00:39,727 --> 00:00:41,563 போய்விடு, குறும்புக்காரியே. 7 00:00:41,563 --> 00:00:42,647 பணம் திரும்பக் கிடைக்காது. 8 00:00:42,647 --> 00:00:44,065 தயவுசெய்து, சார். 9 00:00:44,065 --> 00:00:47,193 என் அம்மா அப்பா நினைவாக என்னிடம் மிஞ்சியிருக்கும் ஒரே பொருள் அந்த லாக்கெட்தான். 10 00:00:47,193 --> 00:00:50,530 எட்டு வருடங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்தேன், மருத்துவமனைக்கு சென்று வந்துகொண்டு, 11 00:00:50,530 --> 00:00:52,866 அதே நேரத்தில் பெரிய, ஆரோக்கியமான குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டார்கள். 12 00:00:52,866 --> 00:00:54,576 யாருக்கும் பலவீனமான குழந்தையைப் பிடிக்கவில்லை. 13 00:00:54,576 --> 00:00:58,204 இந்த டானிக் என்னை கடினமாகவும் பலமாகவும் மாற்றும் என்று உறுதியளித்தீர்கள். 14 00:00:58,204 --> 00:01:01,583 ஒரு பொய்யான விஷயத்திற்காக என்னிடம் இருந்த விலைமதிப்பில்லாத ஒன்றைக் கொடுத்தேன். 15 00:01:01,583 --> 00:01:05,420 நீ போகவில்லை என்றால், நானே உன்னை ஆதரவற்றோர் இல்லத்துக்கு இழுத்துப் போவேன். 16 00:01:05,420 --> 00:01:07,964 - இப்போதே போய்விடு! - போலி அறிஞனே! 17 00:01:07,964 --> 00:01:13,303 இன்று நீ என்னை சிறுமைப்படுத்தியது போல ஒரு நாள் நீ சிறியவனாகவும் முட்டாளாகவும் சிறுமைப்படுவாய்! 18 00:01:18,725 --> 00:01:19,934 அது எங்கே போனது? 19 00:01:19,934 --> 00:01:21,603 நான் என்ன செய்துவிட்டேன்? 20 00:01:21,603 --> 00:01:23,605 எனக்கு என் லாக்கெட் திரும்ப வேண்டும். 21 00:01:38,369 --> 00:01:39,746 என்ன கொடுமை இது? 22 00:02:07,941 --> 00:02:10,860 டாக்டர் டெர்ரிஃபிகோவின் வலிமைக்கான டானிக் 23 00:02:12,612 --> 00:02:14,989 இந்த டேப்லெட்கள் காணாமல் போனதில் அப்பாவுக்குத் தொடர்பிருப்பதாக நினைக்கிறேன். 24 00:02:14,989 --> 00:02:19,619 என்ன? அப்பாவின் இயல்பில் கொஞ்சம் மாற்றம் இருக்கிறது, ஆனால் அவர் பொருட்களை திருட மாட்டார். 25 00:02:19,619 --> 00:02:21,663 அப்பா இஸ்தான்புல் போக விரும்பினார். 26 00:02:21,663 --> 00:02:25,124 "தொல் எழுத்து டேப்லெட், பாபிலோன்." அப்பா மயங்கியபோது இஸ்தான்புல்லில் உள்ள 27 00:02:25,124 --> 00:02:28,211 ஒரு தனியார் சேகரிப்பிலிருந்து அது காணாமல் போனதாக இங்கே போட்டிருக்கிறது. 28 00:02:28,211 --> 00:02:29,921 அது ஒரு தற்செயல் நிகழ்வாக இருக்கலாம். 29 00:02:29,921 --> 00:02:30,922 இன்னும் நிறைய இருக்கின்றன. 30 00:02:30,922 --> 00:02:32,757 {\an8}அப்பா இந்தியாவில் மயங்கினார். 31 00:02:32,757 --> 00:02:35,885 {\an8}"ராஜஸ்தானி அருங்காட்சியகத்தில் இருந்து பாபிலோனிய டேப்லெட் திருடப்பட்டது." 32 00:02:35,885 --> 00:02:38,263 அதோடு இதில், நாம் நியூ மெக்சிகோவில் இருந்தபோது 33 00:02:38,263 --> 00:02:41,266 ஒரு டேப்லெட் திருடப்பட்டதாக உள்ளூர் ஏல நிறுவன புகாரளித்திருக்கிறது. 34 00:02:41,266 --> 00:02:42,642 அப்பா அங்கிருந்தார். 35 00:02:43,226 --> 00:02:46,145 நாம் நியூ மெக்சிகோவில் இருந்த நேரம், அப்பா எதையும் திருடியிருக்க முடியாது. 36 00:02:46,145 --> 00:02:47,313 அவர் மயக்க நிலையில் இருந்தார். 37 00:02:47,313 --> 00:02:50,942 அது உண்மையாக இருக்கக் கூடாது, ஆனால் நான் உண்மைகளை முன்வைக்கிறேன். 38 00:02:50,942 --> 00:02:54,195 அப்பாவின் மயக்கங்களும் திருட்டுகளும் சரியாக ஒத்துப் போகின்றன. 39 00:02:54,195 --> 00:02:58,032 கருப்பு கோடுக்காரன் பற்றி என்ன நினைக்கிறாய்? அவன் நம்மை உளவு பார்த்தான். அப்பாவைத் தாக்கினான். 40 00:02:58,032 --> 00:03:01,369 அவன் துருக்கிக்கும் இந்தியாவுக்கும் நம்மைப் பின்தொடர்ந்து வந்து டேப்லெட்களை திருடியிருக்கலாம். 41 00:03:01,369 --> 00:03:04,289 உன்னுடைய உண்மை விளக்கப்படம் அதைப் பற்றி என்ன சொல்கிறது? 42 00:03:04,289 --> 00:03:08,209 எனக்குத் தெரியவில்லை, ஆனால்... ஹேய், யாராவது என் மீது ஸ்ப்ரே செய்தார்களா? 43 00:03:09,419 --> 00:03:10,837 நான் வினோதமாக உணர்கிறேன். 44 00:03:10,837 --> 00:03:13,506 - அது நான்... - ரஸ்? 45 00:03:13,506 --> 00:03:15,425 நீ எங்கே போனாய்? 46 00:03:16,718 --> 00:03:18,177 இப்போது நான் வினோதமாக உணர்கிறேன். 47 00:03:21,055 --> 00:03:23,016 எப்படி? என்ன? 48 00:03:29,189 --> 00:03:30,273 {\an8}பேண்டோரா! 49 00:03:30,273 --> 00:03:31,316 ரஸ்? 50 00:03:32,483 --> 00:03:34,527 பேண்டோரா, இங்கே கீழே! 51 00:03:34,527 --> 00:03:36,029 என்ன நடந்தது? 52 00:03:36,613 --> 00:03:40,033 எப்படி என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நாம் சின்னதாகிவிட்டோம். 53 00:03:40,033 --> 00:03:41,492 என்ன விளையாடுகிறாயா? 54 00:03:41,492 --> 00:03:42,785 வா. அது... 55 00:03:50,418 --> 00:03:54,172 அப்பா! இங்கே, உதவி! நாங்கள் சின்னதாகிவிட்டோம். 56 00:03:55,173 --> 00:03:56,925 இங்கே, உதவி! 57 00:03:57,675 --> 00:03:58,718 உதவி! 58 00:04:04,891 --> 00:04:07,268 யே! நாம் காப்பாற்றப்பட்டோம். 59 00:04:08,561 --> 00:04:11,981 - உள்ளே இருங்கள். - அப்பா, என்ன செய்கிறீர்கள்? 60 00:04:16,694 --> 00:04:17,778 அருமையாக வேலை செய்தது. 61 00:04:17,778 --> 00:04:19,197 {\an8}டாக்டர் டெர்ரிஃபிகோவின் வலிமைக்கான டானிக் 62 00:04:19,781 --> 00:04:22,325 அப்பா, எங்களை வெளியே எடுங்கள்! இது வேடிக்கையாக இல்லை! 63 00:04:22,325 --> 00:04:24,953 இரண்டு தொல்லைகள் தீர்ந்தன. 64 00:04:26,454 --> 00:04:27,705 இது ஒன்றும் ஜோக் இல்லை. 65 00:04:29,374 --> 00:04:31,543 ஸ்கை, அன்பே, நீ திரும்ப அழைத்ததில் மகிழ்ச்சி. 66 00:04:31,543 --> 00:04:33,378 அது அம்மா. ஒருவேளை அவருக்கு நம் குரல் கேட்கலாம். 67 00:04:34,504 --> 00:04:35,505 வா! 68 00:04:36,297 --> 00:04:38,633 நான் அருங்காட்சியகத்திற்கு வர விரும்பினேன். 69 00:04:38,633 --> 00:04:40,760 குறிப்பாக ஒன்றுமில்லை. ஹாய் சொல்லலாம் என்று. 70 00:04:42,262 --> 00:04:44,931 பேண்டோரா டெவியின் வீட்டிற்குப் போயிருக்கிறாள், ரஸ் வீட்டுப்பாடம் செய்கிறான். 71 00:04:44,931 --> 00:04:47,892 ஆம். அருமை. சீக்கிரம் சந்திக்கிறேன். 72 00:04:51,271 --> 00:04:53,481 அப்பா அம்மாவிடம் பொய் சொல்கிறார். 73 00:04:53,982 --> 00:04:56,192 அம்மாவையும் அவர் சின்னதாக்கும் எண்ணத்தில் இருந்தால்? 74 00:04:56,192 --> 00:04:57,694 நாம் அவரை எச்சரிக்க வேண்டும். 75 00:04:57,694 --> 00:05:00,446 இது குழப்பத்திற்கு அப்பாற்பட்டது. இது எரிச்சலூட்டுகிறது. 76 00:05:05,368 --> 00:05:06,369 இது லின்டா. 77 00:05:06,369 --> 00:05:07,453 ஹாய்! 78 00:05:08,037 --> 00:05:09,747 லின்டா, நான்தான், பேண்டோரா. 79 00:05:14,419 --> 00:05:15,587 கவனம்! 80 00:05:16,170 --> 00:05:17,839 அதற்கு என்னை அடையாளம் தெரியவில்லை போல. 81 00:05:17,839 --> 00:05:19,757 நிச்சயமாக தெரியவில்லை, பேண். 82 00:05:19,757 --> 00:05:21,426 சீக்கிரம்! டியூப்பிற்குள் போ. 83 00:05:22,969 --> 00:05:25,889 லின்டாவுக்கு மிகவும் பசித்தால் மட்டுமே இவ்வளவு துடிப்பாக இருக்கும். 84 00:05:26,472 --> 00:05:28,516 நம்மைத் தவிர வேறு உணவை அதற்குக் கொடுப்போம். 85 00:05:29,350 --> 00:05:31,144 நான் தொட்டியில் ஈக்களை மட்டுமே போடுவேன். 86 00:05:32,103 --> 00:05:34,272 அது புதிதாக ஒன்றை விரும்புவது வெளிப்படையாகத் தெரிகிறது. 87 00:05:39,027 --> 00:05:41,654 நான், "ஓடு" என்று சொன்னவுடன், நீ அந்தப் பக்கம் ஓடு. நான் இந்தப் பக்கம் ஓடுகிறேன். 88 00:05:41,654 --> 00:05:43,156 நீர்வீழ்ச்சிக்குப் பின்னால் என்னைப் பார், சரியா? 89 00:05:44,157 --> 00:05:47,118 - இல்லை. சரியில்லை. - இப்போதே! ஓடு! 90 00:05:57,795 --> 00:05:58,880 நீ அங்கே செய்ததைப் பார்த்தேன். 91 00:05:58,880 --> 00:06:02,467 தாடி வைத்த டிராகனின் பயங்கரமான ஆழமான உணர்வை சாதகமாக்கிக்கொண்டது. அருமை! 92 00:06:03,051 --> 00:06:04,886 ஆம், வெளிப்படையாக நான் அதைத்தான் செய்தேன். 93 00:06:05,803 --> 00:06:08,348 அதோடு, எனக்கு லின்டாவைத் தெரியும். எப்போதும் அந்த திருப்பத்தைத் தவறவிடும். 94 00:06:09,599 --> 00:06:11,351 எனக்கு அப்பாவையும் நன்றாகத் தெரியும் என்று நினைத்தேன். 95 00:06:11,351 --> 00:06:13,603 இதற்கு சரியான விளக்கம் இருக்க வேண்டும். 96 00:06:13,603 --> 00:06:18,107 "இதற்கு" விளக்கம் என்று நம்மைச் சின்னதாக்கி, பல்லிக்கு உணவாக போட்டதை சொல்கிறாயா? 97 00:06:25,114 --> 00:06:27,992 திடீரென அதன் ஆழமான உணர்வு நன்றாக செயல்படுகிறது. 98 00:06:28,743 --> 00:06:30,036 அந்த தளத்திற்குப் போகலாம். 99 00:06:30,036 --> 00:06:31,371 லின்டாவால் நுழைய முடியாது. 100 00:06:37,418 --> 00:06:40,171 லேரி, அலெக்ஸ் வெளியேறியதைப் பார்த்தாயா? 101 00:06:40,171 --> 00:06:41,506 அவர் படிக்கும் அறையில் இல்லை. 102 00:06:41,506 --> 00:06:43,049 இல்லை. ஆனால் இங்கே பார். 103 00:06:43,049 --> 00:06:46,302 இதைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தேன். இது புதிது. 104 00:06:46,302 --> 00:06:48,846 ஏதோவொன்று இன்னும் இந்த முள் கொடியை கடித்துக்கொண்டிருக்கிறது. 105 00:06:48,846 --> 00:06:50,557 நாம் சாம்பர்ஸைப் பிடித்துவிட்டோமே. 106 00:06:50,557 --> 00:06:52,267 கூடுதலாக ஒரு குற்றவாளி இருக்க வேண்டும். 107 00:06:52,267 --> 00:06:55,645 முள் கொடி தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது, ஆனால் ஏன்? 108 00:06:55,645 --> 00:06:57,689 கலைப்பொருட்கள் உயிர் பெறுகின்றன. 109 00:06:57,689 --> 00:06:59,566 அலெக்ஸ் தன் இணைப்பை இழக்கிறார். 110 00:06:59,566 --> 00:07:01,276 சேதமான முள் கொடி. 111 00:07:01,276 --> 00:07:02,569 இது எல்லாமே தொடர்புடையதாக இருக்க வேண்டும். 112 00:07:02,569 --> 00:07:06,239 நாம் நினைத்ததைவிட பெரிய பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம். 113 00:07:17,542 --> 00:07:19,794 அலெக்ஸ், எவ்வளவு நேரமாக இங்கே இருக்கிறீர்கள்? 114 00:07:20,461 --> 00:07:22,005 சார்கானின் சிம்மாசனம் எங்கே இருக்கிறது? 115 00:07:22,005 --> 00:07:25,133 அது வந்துவிட்டது. இன்றைக்குள் சரியான இடத்தில் வைக்கப்படும். 116 00:07:25,133 --> 00:07:27,844 அது நிஜமாகவே இங்கே இருக்கப் போவதை என்னால் நம்ப முடியவில்லை. 117 00:07:27,844 --> 00:07:29,512 என் அடுத்த சந்திப்புக்கு கொஞ்ச நேரம் இருக்கிறது. 118 00:07:29,512 --> 00:07:30,638 காபி குடிக்கிறீர்களா? 119 00:07:30,638 --> 00:07:35,602 இந்த அற்புதமான கலைப்பொருட்களையும் உன் அற்புதமான வேலையையும் நான் பார்க்க விரும்புகிறேன். 120 00:07:35,602 --> 00:07:37,478 கண்டுகளியுங்கள். 121 00:07:37,979 --> 00:07:40,523 மறப்பதற்குள் கேட்டுவிடுகிறேன், பேண்டோரா டெவியின் வீட்டில் சாப்பிடுகிறாளா? 122 00:07:41,399 --> 00:07:43,693 அவள் என்னிடம் சொல்லவில்லை. 123 00:07:43,693 --> 00:07:45,737 சரி. நான் அவளுக்கு மெஸ்ஸேஜ் அனுப்பி கேட்கிறேன். 124 00:07:59,209 --> 00:08:00,835 போய்க்கொண்டே இரு. 125 00:08:06,549 --> 00:08:08,384 என் மீது முழுக்க ஒட்டிவிட்டது. 126 00:08:09,093 --> 00:08:10,094 மோசம். 127 00:08:12,555 --> 00:08:14,891 நாம் உன் ஃபோனிடம் போக முடிந்தால், நம்மால் உதவி கேட்க முடியும். 128 00:08:16,100 --> 00:08:18,353 இந்த தொட்டியிலிருந்து எப்படி வெளியேற போகிறோம்? 129 00:08:19,479 --> 00:08:22,440 தண்ணீர் பாட்டில். நாம் அதன் மீது எறி தொட்டியின் உச்சிக்குப் போகலாம். 130 00:08:22,440 --> 00:08:23,525 வா. 131 00:08:30,490 --> 00:08:31,699 விரைவான கேள்வி. 132 00:08:31,699 --> 00:08:34,160 லின்டா வழக்கமாக இந்தப் பாறையில் எவ்வளவு நேரம் உட்கார்ந்திருக்கும்? 133 00:08:34,160 --> 00:08:37,829 ஒன்று முதல் ஆறு மணிநேரம். 134 00:08:37,829 --> 00:08:40,625 ஆறு மணிநேரம். ஆறு மணிநேரம்! 135 00:08:41,959 --> 00:08:44,170 தங்க மீனை வைத்துக்கொள் என்றேன், ஆனால் கேட்கவில்லை. 136 00:08:44,170 --> 00:08:45,838 நீ ஒரு வினோதமான உயிரினத்தை வளர்க்க விரும்பினாய். 137 00:08:46,965 --> 00:08:48,424 இது லின்டாவின் தவறில்லை. 138 00:08:48,424 --> 00:08:50,718 அது தன்னுடைய ஊர்வன உயிரினத்தின் உள்ளுணர்வுபடி நடக்கிறது. 139 00:08:51,886 --> 00:08:53,137 எனக்குத் தெரியும். 140 00:08:53,137 --> 00:08:54,430 அது அப்பாவின் தவறு. 141 00:08:54,430 --> 00:08:56,140 இதில் எந்த அர்த்தமும் இல்லை. 142 00:08:56,140 --> 00:08:58,935 நீ கண்டுபிடித்த தகவலைப் பற்றி பேசவில்லை, அப்பாவைப் பற்றி பேசினேன். 143 00:08:59,519 --> 00:09:01,729 அவர் அவராக இல்லை. 144 00:09:03,565 --> 00:09:06,025 மயக்கங்கள். முள் கொடி. 145 00:09:06,818 --> 00:09:08,778 அப்பா தன்னுடைய மனதை நம்ப முடியவில்லை என்றார். 146 00:09:09,445 --> 00:09:11,406 நிஜமாகவே அவர் அவராக இல்லை என்றால்? 147 00:09:11,906 --> 00:09:14,534 பேய் பிடித்தது போல என்கிறாயா? 148 00:09:15,243 --> 00:09:17,120 நான் அதைப் பற்றி பயமுறுத்தும் வரலாற்றில் படித்தேன். 149 00:09:17,120 --> 00:09:19,581 அப்பாவுக்குப் பேய் பிடித்திருந்தால், அவர் அடுத்து என்ன செய்வார் என்று யாருக்குத் தெரியும். 150 00:09:20,164 --> 00:09:21,541 நாம் அம்மாவை எச்சரிக்க வேண்டும். 151 00:09:22,083 --> 00:09:23,751 இந்த பல்லியை நாம் நகர்த்திய பிறகு. 152 00:09:23,751 --> 00:09:27,547 அதை என்னிடம் விட்டுவிடு. என்னிடம் ஒரு திட்டம் இருக்கிறது. 153 00:09:29,841 --> 00:09:32,760 எப்படி இருக்கிறாய், லின்டா. நான் ஒரு ஈ. 154 00:09:32,760 --> 00:09:35,430 என்னைச் சாப்பிட வேண்டாமா? 155 00:09:53,156 --> 00:09:54,532 இது சரியில்லை. 156 00:10:00,079 --> 00:10:01,414 என் பிடி நழுவப் போகிறது. 157 00:10:03,374 --> 00:10:05,710 உன் வயிற்றுக்கு சுவையான ஈ. 158 00:10:05,710 --> 00:10:07,295 ஆம். 159 00:10:25,897 --> 00:10:26,898 சூடு. 160 00:10:33,821 --> 00:10:36,157 ரஸ்? சீக்கிரம்! 161 00:11:00,014 --> 00:11:01,015 அம்மா 162 00:11:02,767 --> 00:11:04,143 இது ஒரு தற்செயல் அழைப்பு. 163 00:11:08,439 --> 00:11:09,732 பேண்டோரா? 164 00:11:10,900 --> 00:11:12,986 - சரி, நான் என் கூட்டத்திற்குப் போக வேண்டும். - ஆம். 165 00:11:13,486 --> 00:11:15,196 குட் லக். உன்னை வீட்டில் பார்க்கிறேன். 166 00:11:15,196 --> 00:11:16,489 நன்றி. 167 00:11:16,489 --> 00:11:18,283 நீங்கள் கொஞ்சம்... 168 00:11:19,576 --> 00:11:20,577 அலெக்ஸ்? 169 00:11:25,915 --> 00:11:26,833 ஜார்ஜியா. 170 00:11:27,417 --> 00:11:30,086 - உங்களிடம் பேசலாமா? - அலெக்ஸ், ஹாய். 171 00:11:30,086 --> 00:11:31,671 ஸ்கையைத் தேடுகிறீர்களா? 172 00:11:31,671 --> 00:11:33,506 அவள் ஒரு கூட்டத்திற்குப் போயிருக்கிறாள். 173 00:11:33,506 --> 00:11:36,175 நான் அவளைப் பற்றி உங்களிடம் பேச வேண்டும். 174 00:11:39,470 --> 00:11:40,847 {\an8}டெவி 175 00:11:42,682 --> 00:11:45,101 {\an8}- பேண்டோரா? - ஹலோ! டெவி! 176 00:11:45,101 --> 00:11:46,769 {\an8}நான்தான், ரஸ்! 177 00:11:47,395 --> 00:11:49,731 ஹலோ, பேண்டோரா? 178 00:11:53,276 --> 00:11:55,945 {\an8}நான் மிகவும் சின்னதாக இருக்கிறேன். நான் சொல்வது அவளுக்குக் கேட்காது. 179 00:11:59,824 --> 00:12:02,619 "சீக்கிரம் என் அறைக்கு வா. எங்களைக் காப்பாற்று." 180 00:12:02,619 --> 00:12:05,955 ஓ, பேண். நீ மீண்டும் சபிக்கப்பட்டாயா? 181 00:12:08,416 --> 00:12:09,292 10 நிமிடத்தில் வருகிறேன் 182 00:12:39,864 --> 00:12:42,492 பத்து நிமிடத்தில் டெவி வந்துவிடுவாள். 183 00:12:42,492 --> 00:12:45,787 அருமை. ஆனால் நான் இன்னும் இங்கிருந்து வெளியேற ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். 184 00:12:47,163 --> 00:12:50,458 கவலைப்படாதே. கவ்பாய் திறமை நம்... 185 00:12:53,294 --> 00:12:54,295 இரத்தத்தில் இருக்கிறது. 186 00:12:54,295 --> 00:12:55,505 சரியாக செய்துவிடு, ரஸ். 187 00:12:57,966 --> 00:12:58,841 ஆம்! 188 00:13:10,687 --> 00:13:11,938 நான் சிக்கிக்கொண்டேன். 189 00:13:14,941 --> 00:13:16,609 பேண்! 190 00:13:26,244 --> 00:13:27,412 இல்லை! 191 00:13:31,291 --> 00:13:33,042 ஸ்கை விசித்திரமாக நடந்துகொள்கிறாள். 192 00:13:33,042 --> 00:13:36,045 தூக்கத்தில் நடக்கிறாள், மயங்கிவிடுகிறாள். எனக்குக் கவலையாக இருக்கிறது. 193 00:13:36,045 --> 00:13:38,673 அது மிகவும் கவலைக்குரியது, அலெக்ஸ். 194 00:13:38,673 --> 00:13:40,967 ஒருவேளை ஸ்கைக்கு ஏதாவது உதவி தேவைப்படலாம். 195 00:13:40,967 --> 00:13:44,470 நான் அதை அவளிடம் சொல்ல முயற்சித்தேன், ஆனால் அவள் நன்றாக இருப்பதாகச் சொல்கிறாள். 196 00:13:44,470 --> 00:13:46,890 பிறகு இதை எங்கள் அலமாரியில் பார்த்தேன். 197 00:13:48,016 --> 00:13:50,226 இது ஸ்கையிடம் இருந்ததா? 198 00:13:50,226 --> 00:13:52,520 ஆம். உங்களுக்கு இது திரும்ப தேவைப்படும் என்று நினைத்தேன். 199 00:13:52,520 --> 00:13:54,272 அவள் என்னிடம் பொய் சொல்லியிருக்கிறாள். 200 00:13:54,772 --> 00:13:57,567 அவள் நம் எல்லோரிடமும் பொய் சொல்லியிருக்கிறாள், ஜார்ஜியா. 201 00:13:58,818 --> 00:14:00,528 லின்டா! இப்போதே வாயைத் திற! 202 00:14:00,528 --> 00:14:02,614 பேண்டோரா! 203 00:14:02,614 --> 00:14:04,115 பேண்டோரா? 204 00:14:04,115 --> 00:14:06,784 டெவி! டெவி, கீழே! 205 00:14:06,784 --> 00:14:08,036 பேண்டோரா? 206 00:14:08,036 --> 00:14:10,663 யாரும் கதவைத் திறக்கவில்லை, அதனால் நானே உள்ளே வந்துவிட்டேன். 207 00:14:12,332 --> 00:14:14,667 ஹேய்! ஹலோ! 208 00:14:14,667 --> 00:14:16,920 இங்கே வா! இங்கே கீழே! 209 00:14:17,712 --> 00:14:19,589 ரஸ்! என்ன... 210 00:14:21,049 --> 00:14:24,219 பேண்டோரா லின்டாவின் வாயில் இருக்கிறாள். அவளை வெளியேற்ற வேண்டும். 211 00:14:24,886 --> 00:14:26,804 பேண்டோரா... என்ன? 212 00:14:33,436 --> 00:14:35,980 டெவி, நீதான் என் ஹீரோ. மீண்டும் ஒருமுறை. 213 00:14:35,980 --> 00:14:39,067 பேண்டோரா, நான்... 214 00:14:42,529 --> 00:14:44,572 நீ நலமாக இருப்பதில் மிக்க மகிழ்ச்சி. 215 00:14:45,156 --> 00:14:46,157 எனக்கும்தான். 216 00:14:47,200 --> 00:14:48,868 என் மீது பல்லியின் சுவாசம் போன்ற துர்நாற்றம். 217 00:14:49,410 --> 00:14:50,787 எனக்குக் கவலையில்லை. 218 00:14:51,746 --> 00:14:53,039 எனக்கு பயமாக இருக்கிறது. 219 00:14:53,039 --> 00:14:55,375 இது எப்படி நடந்தது? அதை எப்படி சரிசெய்வது? 220 00:14:55,375 --> 00:14:57,460 புத்தக அலமாரிக்குப் போகிறாயா? 221 00:14:59,337 --> 00:15:00,797 பேண், அந்த பாட்டில் தெரிகிறதா? 222 00:15:00,797 --> 00:15:02,340 அப்பா அதை வைத்திருப்பதைப் பார்த்தேன். 223 00:15:02,340 --> 00:15:04,342 அவர் அதை நம் மீது தெளித்தார் என்று நினைக்கிறேன். 224 00:15:04,342 --> 00:15:07,053 "டாக்டர் டெர்ரிஃபிகோவின் வலிமைக்கான டானிக்." 225 00:15:07,053 --> 00:15:09,639 வலிமைக்கான டானிக் நம்மை சின்னதாக்கிவிட்டதா? 226 00:15:09,639 --> 00:15:11,599 புரியவில்லை, உன் அப்பா என்ன செய்தார்? 227 00:15:11,599 --> 00:15:14,394 அப்பா வில்லன் போல நடந்துகொள்கிறார். 228 00:15:14,394 --> 00:15:17,647 ஆம், அந்த பாட்டில் கீழே இருந்து வந்தது என்று நினைக்கிறேன். 229 00:15:17,647 --> 00:15:18,773 அதாவது... 230 00:15:18,773 --> 00:15:19,941 அது சபிக்கப்பட்டது. 231 00:15:19,941 --> 00:15:21,901 அதற்கு நான் தொட மாட்டேன் என்று அர்த்தம். 232 00:15:21,901 --> 00:15:23,820 நான் அதை தாயக் கட்டையிடம் கற்றுக்கொண்டேன். 233 00:15:24,404 --> 00:15:25,697 நல்ல முடிவு. 234 00:15:25,697 --> 00:15:28,366 எங்களை தடைசெய்யப்பட்ட பிரிவுக்கு தூக்கிச் செல்ல முடியுமா? 235 00:15:28,366 --> 00:15:30,285 நிச்சயமாக. தடைசெய்யப்பட்ட பிரிவு என்றால் என்ன? 236 00:15:30,285 --> 00:15:33,955 இந்த சபிக்கப்பட்ட சூழ்நிலை பற்றி நான் சொன்னதைவிட இன்னும் கொஞ்சம் இருக்கிறது. 237 00:15:33,955 --> 00:15:36,416 விளையாடாதே. அது பற்றி சொல், பேண்-வேன். 238 00:15:36,416 --> 00:15:37,625 நடந்துகொண்டே பேசுவோம். 239 00:15:39,210 --> 00:15:41,504 ஒரு காலத்தில் கோர்னீலியஸ் வேண்டர்ஹூவன் என்ற 240 00:15:41,504 --> 00:15:43,590 பேராசை பிடித்த ஒரு முட்டாள் இருந்தார். 241 00:15:43,590 --> 00:15:45,633 அவர் நிஜமாகவே மிக மிக வயதானவர், ஆனால்... 242 00:15:48,344 --> 00:15:49,888 நாங்கள் கீழே பேஸ்மென்டுக்குச் சென்றோம். 243 00:15:49,888 --> 00:15:52,390 இந்த பயமுறுத்தும் கலைப்பொருட்கள் எல்லாம் இருந்தன, சரியா? 244 00:15:52,390 --> 00:15:53,558 ஆனால் நான் நினைத்தேன்... 245 00:15:55,476 --> 00:15:59,480 பிறகு அந்த பேய் உஷ் என்று மறைந்துவிட்டது. 246 00:15:59,480 --> 00:16:02,525 பிறகு, பார்க்கலாம். ரஸ் ஒரு பொம்மையாக மாறினான். 247 00:16:05,278 --> 00:16:06,946 அப்போதுதான் நான் சின்னதாகிவிட்டேன். 248 00:16:08,865 --> 00:16:10,116 ஆம். 249 00:16:17,457 --> 00:16:20,877 எனக்கு உன்னைத் தெரிந்த காலமெல்லாம் இது உன் வீட்டின் கீழ் இருந்ததா? 250 00:16:23,504 --> 00:16:25,381 அது டெவி. அசையாதீர்கள். 251 00:16:27,008 --> 00:16:28,509 ஹலோ? 252 00:16:28,509 --> 00:16:31,512 லேரியையும் ஸ்டான்லியையும் கண்டுபிடிக்க வேண்டுமா? 253 00:16:31,512 --> 00:16:35,350 ரஸ்ஸும் பேண்டோராவும் சபிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அவர்களிடம் சொல்ல வேண்டும். 254 00:16:39,896 --> 00:16:42,899 - லேரி! - இங்கே கீழே! நாங்கள்தான்! 255 00:16:42,899 --> 00:16:43,816 இங்கே! 256 00:16:43,816 --> 00:16:45,902 சரி, ஆச்சரியம். 257 00:16:47,320 --> 00:16:49,322 நீதான் பேசும் மண்டையோடா? 258 00:16:49,322 --> 00:16:51,407 எப்போதிலிருந்து மண்டை ஓடுகள் பேசுகின்றன? 259 00:16:51,407 --> 00:16:56,412 எல்லா மண்டை ஓடுகளாலும் முடியாது, ஆனால் என்னைப் பொறுத்தவரை நூறு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. 260 00:16:56,996 --> 00:16:58,831 ஸ்டான், போதும். பார். 261 00:17:05,129 --> 00:17:08,174 - ரஸ்! பேண்டோரா! - கொஞ்சம் உதவி தேவை! 262 00:17:08,174 --> 00:17:11,094 - நாங்கள் சின்னதாகிவிட்டோம்... - ம். பதில்கள் பிறகு, நண்பா. 263 00:17:11,094 --> 00:17:13,972 இது அவசரம். சத்தியமாக. 264 00:17:14,556 --> 00:17:16,390 ஸ்டான்லி, ரோபோவை மேலே கூட்டிக்கொண்டு போய், 265 00:17:16,390 --> 00:17:19,601 பேண்டோராவின் அலமாரியில் இருந்து டாக்டர் டெர்ரிஃபிகோவின் வலிமைக்கான டானிக்கை எடுத்துவா. 266 00:17:22,062 --> 00:17:23,398 அதிர்ச்சியடைவதற்கு நேரமில்லை. 267 00:17:23,398 --> 00:17:26,149 நீ சில குறிப்பேடுகளை எடுத்துவர உதவ வேண்டும். 268 00:17:30,780 --> 00:17:32,407 நான் அம்மாவைப் பற்றி கவலைப்படுகிறேன். 269 00:17:32,407 --> 00:17:34,868 அம்மாவுக்கு ஒன்றும் ஆகாது. அம்மா வலிமையானவர். 270 00:17:34,868 --> 00:17:37,203 ஆம், ஆனால் அப்பா நமக்கு என்ன செய்தார் என்று பார். 271 00:17:37,704 --> 00:17:39,372 அவரை என்ன செய்வார் என்று யாருக்குத் தெரியும். 272 00:17:39,372 --> 00:17:41,791 கடைசி முறையாக சொல்கிறேன், அது அப்பா இல்லை. 273 00:17:41,791 --> 00:17:43,251 சரி, யாராக இருந்தாலும். 274 00:17:58,933 --> 00:18:00,476 கடைசி முறையாக சொல்கிறேன், லின்டா, 275 00:18:00,476 --> 00:18:02,395 நாங்கள் மதிய உணவு இல்லை! 276 00:18:14,532 --> 00:18:15,867 மேஜை முடியப் போகிறது! 277 00:18:23,333 --> 00:18:25,627 யாராவது எங்களுக்கு உதவுங்கள்! 278 00:18:31,841 --> 00:18:33,259 நாங்கள் ஒன்றைக் கண்டுபிடித்தோம்! 279 00:18:33,259 --> 00:18:34,552 ஓ, இல்லை! 280 00:18:39,766 --> 00:18:41,434 கிட்டத்தட்ட விழுந்திருப்பீர்கள். 281 00:18:41,434 --> 00:18:43,228 எங்களிடம் சொல்கிறாய். 282 00:18:44,479 --> 00:18:46,022 மோசம், லின்டா! மோசம்! 283 00:18:46,022 --> 00:18:47,690 உனக்கு ஒரு நாள் முழுக்க ஈக்கள் கிடையாது. 284 00:18:49,776 --> 00:18:54,197 ஹேங்க், இனி தொந்தரவு செய்யாமல் இருக்க, தயவுசெய்து லின்டாவை மாடிக்குக் கூட்டிச்செல். 285 00:19:00,537 --> 00:19:03,206 இன்னொரு செய்தி, சாபத்தை எப்படி நீக்குவது என்று எங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். 286 00:19:05,667 --> 00:19:08,670 இது 1855-இன் நம்பகத்தன்மைக்கான உறுதிமொழி. 287 00:19:08,670 --> 00:19:11,297 கோர்னீலியஸுக்கு டானிக்கை விற்ற துப்புரவு பணியாளர் கையெழுத்திட்டது. 288 00:19:11,297 --> 00:19:15,260 டாக்டர் டெர்ரிஃபிகோவின் வண்டியை சின்னதாக்க ஒரு பெண் அதைப் பயன்படுத்துவதைப் பார்த்திருக்கிறார். 289 00:19:15,260 --> 00:19:17,220 அவள் அனுபவித்தது போல அவரும் ஒரு நாள் 290 00:19:17,220 --> 00:19:20,390 சின்னதாக ஆவார் என்று சாபம் விட்டுக்கொண்டே, அவள் டானிக்கை டாக்டர் டெர்ரிஃபிகோ மீது தெளித்தாள். 291 00:19:20,390 --> 00:19:22,308 அவருடைய வண்டி உடனே சின்னதானது. 292 00:19:22,308 --> 00:19:24,227 அந்தப் பெண் டானிக்கை சபித்தாள். 293 00:19:24,811 --> 00:19:26,437 அவள் வேண்டுமென்ற செய்யவில்லை போல. 294 00:19:27,021 --> 00:19:30,859 இதில் "அவள் அதிர்ச்சியடைந்து, என்ன நடந்தது என்று குழப்பத்துடன் ஓடிவிட்டாள்" என்று இருக்கிறது. 295 00:19:30,859 --> 00:19:34,112 பொம்மைக்கு நடந்தது போல சக்தி வாய்ந்த உணர்ச்சிகள் சாபங்களை உருவாக்கலாம். 296 00:19:34,112 --> 00:19:37,699 தன்னை சின்னதாக உணர வைத்ததற்காக அவள் டாக்டர் டெர்ரிஃபிகோ மீது கோபப்பட்டாள். 297 00:19:37,699 --> 00:19:39,576 அவளுடைய ஆத்திரம் டானிக்காக மாறியது, 298 00:19:39,576 --> 00:19:42,620 அதனால் அவள் அவர் மீது தெளித்தபோது அது அவரை சின்னதாக்கியது. 299 00:19:43,830 --> 00:19:47,917 எனவே சாபத்தை நீக்க, அந்தப் பெண்ணின் கோபத்தை நாம் போக்க வேண்டும். 300 00:19:47,917 --> 00:19:50,628 சரிதான், டெவி. அருமையான பகுத்தறிவு. 301 00:19:50,628 --> 00:19:52,672 ஆனால் அந்தப் பெண் கண்டிப்பாக இறந்திருப்பாள். 302 00:19:53,298 --> 00:19:55,133 இப்போது அவள் கோபத்திற்கு என்ன செய்ய முடியும்? 303 00:19:56,342 --> 00:19:58,261 நமக்கு அவளுடைய லாக்கெட் தேவைப்படும். 304 00:19:58,261 --> 00:20:01,180 அவள் அதைத்தான் விரும்பினாள், ஆனால் அது எங்கே இருக்கும் என்று யாருக்குத் தெரியும். 305 00:20:01,890 --> 00:20:04,434 கொஞ்சம் பொறுங்கள். என்னிடம் ஒரு யோசனை இருக்கிறது. 306 00:20:18,239 --> 00:20:19,240 அதோ இருக்கிறது. 307 00:20:21,034 --> 00:20:23,912 "டாக்டர் டெர்ரிஃபிகோவின் மருத்துவ நிகழ்ச்சி." 308 00:20:24,537 --> 00:20:26,456 அந்த உறுதிமொழியில் குறிப்பிடப்பட்ட வண்டி இதுதான். 309 00:20:26,456 --> 00:20:29,959 ஆம். டாக்டர் டெர்ரிஃபிகோ சின்னதாகும்போது லாக்கெட்டை வைத்திருந்தால், 310 00:20:29,959 --> 00:20:31,920 அது இன்னும் உள்ளே இருக்கலாம். 311 00:20:39,677 --> 00:20:40,762 கிடைத்துவிட்டது. 312 00:20:41,846 --> 00:20:43,890 "டயானா கேமரூன், 1840." 313 00:20:43,890 --> 00:20:48,102 அவர் எங்கே புதைக்கப்பட்டார் என்று நமக்கு தெரிந்தால், அவரை இதனுடன் மீண்டும் இணைக்க முடியும். 314 00:20:48,770 --> 00:20:50,438 அவருடைய கல்லறையை என்னால் கண்டுபிடிக்க முடியும். 315 00:20:50,438 --> 00:20:53,775 வருங்காலத்தைக் கணிப்பவர், இல்லையா? எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது. 316 00:20:53,775 --> 00:20:55,985 இல்லை. இணைய கல்லறை தள கோப்பகம். 317 00:21:02,534 --> 00:21:05,620 இதோ வந்துவிட்டோம். டயானா கேமரூனின் கல்லறை. 318 00:21:12,001 --> 00:21:14,754 நீங்கள் கடைசியாக ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து வெளியேறிவிட்டீர்கள் என்று நம்புகிறேன், டயானா. 319 00:21:15,547 --> 00:21:18,007 உனக்கு டானிக் கூட தேவையில்லை என்பது போல தெரிகிறது. 320 00:21:18,007 --> 00:21:20,802 உன்னைப் போல கிண்டல் செய்பவனை எதிர்த்து நிற்க வலிமை தேவை. 321 00:21:27,016 --> 00:21:29,894 இதோ உங்கள் லாக்கெட். நீங்கள் விரும்பியது போலவே. 322 00:21:39,779 --> 00:21:42,031 டெவி மீண்டும் காப்பாற்றிவிட்டாள். நம்முடைய ஹீரோ. 323 00:21:42,782 --> 00:21:45,243 ஆம், அது பிரமாதம். 324 00:21:46,452 --> 00:21:48,872 இது முடியவில்லை. நாம் அம்மாவைக் கண்டுபிடிக்க வேண்டும். 325 00:21:49,414 --> 00:21:51,040 நமக்கு மிகவும் தாமதமாகவில்லை என்று நம்புகிறேன். 326 00:21:57,922 --> 00:22:00,925 யாஹூ! அவர்கள் சாபத்தை நீக்கிவிட்டார்கள்! 327 00:22:00,925 --> 00:22:02,677 மற்ற விஷயங்களுக்கு மத்தியில். 328 00:22:05,054 --> 00:22:09,767 சாம்பர்ஸ், மீண்டும் சந்திக்கிறோம். ஒரு நண்பனை கூட்டி வந்திருக்கிறாய். 329 00:22:19,777 --> 00:22:21,321 என்னைப் பார்க்க விரும்பினீர்களா, ஜார்ஜியா? 330 00:22:21,321 --> 00:22:27,619 ஸ்கை, இது உன் வீட்டில் இருந்தது என்று என் கவனத்துக்கு வந்தது. 331 00:22:30,496 --> 00:22:32,665 இதற்கு விளக்கம் தர முடியுமா? 332 00:23:02,320 --> 00:23:04,322 வசனத் தமிழாக்கம் அருண்குமார்