1 00:00:14,953 --> 00:00:18,206 லண்டனிலிருந்து வரும் நம் நண்பர்கள் கண்காட்சியைப் பற்றி கேட்க ஆர்வமாக இருக்கிறார்கள், ஸ்கை. 2 00:00:18,206 --> 00:00:22,752 சார்கானின் சிம்மாசனத்தைக் கைப்பற்றியது அபாரம். 3 00:00:23,795 --> 00:00:25,463 பாபிலோனின் தொலைந்த பேரரசு 4 00:00:25,463 --> 00:00:27,257 நீங்கள் இருவரும் முன்னால் செல்லுங்கள். 5 00:00:27,257 --> 00:00:29,008 நான் ஒன்றைப் பார்க்க வேண்டும். 6 00:00:29,592 --> 00:00:30,677 நான் உங்களோடு இணைந்துகொள்கிறேன். 7 00:00:30,677 --> 00:00:32,136 அதிக கவனச்சிதறல் வேண்டாம். 8 00:01:16,222 --> 00:01:17,348 விழித்துக்கொள். 9 00:01:48,421 --> 00:01:50,048 என்னோடு வா, சிறிய நண்பா. 10 00:01:50,715 --> 00:01:52,717 நாம் செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கிறது. 11 00:02:15,865 --> 00:02:18,785 லாபிஸ் வண்டுகள் 12 00:02:19,869 --> 00:02:21,871 நான் வண்டைத் திருடியதாக அலெக்ஸ் சொன்னாரா? 13 00:02:21,871 --> 00:02:23,998 அது அபத்தம். அவர் ஏன் அப்படி சொல்ல வேண்டும்? 14 00:02:23,998 --> 00:02:25,833 அவர் உன்னைப் பற்றி கவலைப்படுகிறார். 15 00:02:25,833 --> 00:02:27,669 நீ சமீப காலமாக கவலையுடன் இருப்பதாக சொன்னார். 16 00:02:27,669 --> 00:02:30,880 அதோடு, நீ தூக்கத்தில் நடக்கிறாயா? 17 00:02:30,880 --> 00:02:33,591 தூக்கத்தில் நடக்கிறேனா? மயக்கம் அடைவது அவர்தான். 18 00:02:33,591 --> 00:02:35,051 நீங்கள் என்னை நம்புங்கள். 19 00:02:35,051 --> 00:02:36,761 நான் உன்னை நம்ப விரும்புகிறேன், ஸ்கை, 20 00:02:37,387 --> 00:02:40,723 ஆனால் சில விஷயங்கள் கவலையளிப்பதாக இருக்கின்றன. 21 00:02:40,723 --> 00:02:43,768 வண்டு திருடப்பட்ட அன்று இரவு நீயும் உன் கணவரும் இங்கே இருந்தீர்கள். 22 00:02:43,768 --> 00:02:46,020 நான் இந்த அருங்காட்சியகத்தை விளம்பரப்படுத்தவே இங்கிருந்தேன். 23 00:02:46,020 --> 00:02:47,939 என்னுடைய வேலையை செய்வதே இப்போது சந்தேகத்திற்குரியதாக இருக்கிறதா? 24 00:02:48,898 --> 00:02:49,983 இல்லாமலும் இருக்கலாம். 25 00:02:49,983 --> 00:02:53,945 ஆனால் ஆவணக்காப்பகத்தில் இருந்து வண்டின் எல்லா தகவல்களையும் மீட்டெடுத்தது. 26 00:02:53,945 --> 00:02:56,656 நான் உங்களிடம் சொல்கிறேன், அது நானில்லை. 27 00:02:56,656 --> 00:03:00,493 கேபராஸ், நீ போகலாம். நான் ஸ்கையுடன் தனியாக பேச வேண்டும். 28 00:03:00,493 --> 00:03:02,203 நீங்கள் விளையாடுகிறீர்கள். 29 00:03:02,203 --> 00:03:04,414 நீ போகலாம். 30 00:03:09,752 --> 00:03:12,547 எங்கள் கண்ணோட்டத்தை நீ புரிந்துகொள்ள வேண்டும், ஸ்கை. 31 00:03:12,547 --> 00:03:16,426 உன் கணவர் நீ வண்டைத் திருடியதாக எங்களிடம் புகாரளித்திருக்கிறார். 32 00:03:16,426 --> 00:03:18,720 அலெக்ஸுக்கு என்ன பிரச்சினை என்று எனக்கு நிஜமாகவே தெரியவில்லை, 33 00:03:18,720 --> 00:03:20,471 ஆனால் அவர் உண்மையைச் சொல்லவில்லை. 34 00:03:20,471 --> 00:03:21,764 நீ சொல்கிறாயா? 35 00:03:21,764 --> 00:03:24,559 பல மாதங்களாக நீ என்னிடம் நேர்மையில்லாமல் நடந்துகொண்டது போல தோன்றுகிறது. 36 00:03:24,559 --> 00:03:28,855 கலைப்பொருட்கள் பற்றிய நிறைய கேள்விகள், திடீர் வெளிநாட்டு பயணங்கள், 37 00:03:28,855 --> 00:03:31,274 இப்போது ஒரு திருட்டில் சம்பந்தப்பட்டிருக்கிறாயா? 38 00:03:31,858 --> 00:03:34,861 நீ உண்மையைச் சொன்னால் என்னால் உதவ முடியும், ஸ்கை. 39 00:03:35,445 --> 00:03:37,614 இல்லையென்றால், விஷயம் என் கைமீறி போய்விடும். 40 00:03:38,615 --> 00:03:40,491 நீங்கள் தெரிந்துகொள்ள விரும்புவதை என்னால் சொல்ல முடிந்திருக்கலாம், 41 00:03:40,491 --> 00:03:43,161 ஆனால் வண்டு தொலைந்ததற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 42 00:03:43,161 --> 00:03:46,873 ஸ்கை, உன்னைப் பற்றி உயர்வாக நினைத்தேன். அதனால்தான் உன்னைப் பாதுகாக்க முயற்சிக்கிறேன். 43 00:03:46,873 --> 00:03:49,667 ஆனால் எனக்கு வேறு வழியில்லை. 44 00:03:49,667 --> 00:03:52,045 உனக்கு கொஞ்ச நேரம் அவகாசம் தருகிறேன். 45 00:03:52,045 --> 00:03:55,548 தேநீர் குடித்து கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள், 46 00:03:56,341 --> 00:03:59,427 பிறகு உண்மையைச் சொல்வதன் சிறப்புகளை கருத்தில்கொள். 47 00:04:02,347 --> 00:04:04,265 நீங்கள் எனக்கு இப்படி செய்யக் கூடாது, ஜார்ஜியா? 48 00:04:04,265 --> 00:04:06,392 இப்போதே என்னை வெளியே விடுங்கள்! 49 00:04:07,727 --> 00:04:10,313 இதற்கு என்ன விளக்கும் கொடுக்கப் போகிறீர்கள், அலெக்ஸ். 50 00:04:10,313 --> 00:04:11,731 என் ஃபோன் எங்கே? 51 00:04:14,651 --> 00:04:16,151 அம்மா இன்னமும் பதில் அளிக்கவில்லையா? 52 00:04:16,151 --> 00:04:18,571 இன்னுமில்லை. கவலையாக உள்ளது. 53 00:04:20,740 --> 00:04:21,949 அது அவன்தான். 54 00:04:25,995 --> 00:04:28,581 அம்மா இன்யூட் கண்ணாடியில் பார்த்த கருப்பு கோடுக்காரன். 55 00:04:28,581 --> 00:04:31,209 அவன் நம் வீட்டிற்கு வெளியேயும் படகுத்துறையிலும் இருந்தான். 56 00:04:37,924 --> 00:04:39,842 இதில் அவனுக்கு என்ன தொடர்பு இருக்கிறது? 57 00:04:39,842 --> 00:04:41,928 எனக்குத் தெரியவில்லை, ஆனால் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து அப்பாவை அடித்திருக்கிறான். 58 00:04:42,512 --> 00:04:43,846 நாம் போய் அவனைத் தாக்குவோம். 59 00:04:44,597 --> 00:04:47,100 கொஞ்சம் பொறு, பேண். அவன் ஆபத்தானவன். 60 00:04:55,316 --> 00:04:56,651 நாம் அவனிடமிருந்து தள்ளியிருப்பதே நல்லது. 61 00:04:57,360 --> 00:05:00,530 நடந்துகொண்டே இரு. நாம் முற்றிலும் இயல்பான பார்வையாளர்கள். 62 00:05:01,489 --> 00:05:03,908 நீங்கள் இருவரும் அங்கேயே நில்லுங்கள். 63 00:05:04,659 --> 00:05:05,869 ஹலோ, சார். 64 00:05:05,869 --> 00:05:08,621 நாங்கள் கல்விச் சுற்றுலாவிற்கு வந்திருக்கும் இரண்டு பள்ளி மாணவர்கள். 65 00:05:08,621 --> 00:05:11,332 நீங்கள் யாரென்று எனக்குத் தெரியும். நீங்கள் வெளியேற வேண்டும். 66 00:05:11,958 --> 00:05:13,543 ஹேய், நண்பா, நான் இங்கே வேலை செய்கிறேன். 67 00:05:13,543 --> 00:05:17,338 நீ ஒரு இளம் வழிகாட்டி. அதை வேலை என்று சொல்வது பொருத்தமற்றது. 68 00:05:17,922 --> 00:05:19,007 வெளியே போ! 69 00:05:19,007 --> 00:05:21,467 பாருங்கள், நாங்கள் எங்கள் பெற்றோரை கண்டுபிடிக்க வேண்டும். 70 00:05:21,467 --> 00:05:26,222 உன் அப்பா இப்போதுதான் கிளம்பினார், உன் அம்மா ஜார்ஜியாவுடன் சந்திப்பில் இருக்கிறார். 71 00:05:27,640 --> 00:05:31,102 நாங்கள் அவரைப் பார்த்தே ஆக வேண்டும், எனவே நாங்கள் அங்கே போகிறோம். 72 00:05:31,102 --> 00:05:33,271 உங்களால் அப்படிச் செய்ய முடியாது. 73 00:05:33,271 --> 00:05:35,481 என்ன சொன்னீர்கள்? ஏன் முடியாது? 74 00:05:35,481 --> 00:05:37,734 அது தேவைப்பட்டால் மட்டுமே தெரிவிக்க வேண்டிய தகவல். 75 00:05:37,734 --> 00:05:41,905 ஆனால் என்னை நம்புங்கள், உங்கள் அம்மாவால் எங்கும் போக முடியாது. 76 00:05:41,905 --> 00:05:44,199 இப்போதே வீட்டிற்குச் செல்லுங்கள். 77 00:05:47,118 --> 00:05:49,913 அம்மாவை இவனுடன் தனியாக விட முடியாது. அவருக்கு நாம் தேவை. 78 00:05:49,913 --> 00:05:53,333 ஆம், நீ சொல்வது சரிதான். ஆனால் இவனைத் தாண்டி எப்படி போகப் போகிறோம்? 79 00:05:54,125 --> 00:05:57,128 அருங்காட்சியகம் முழுக்க ஓல்மெக் குட்டிகளைத் துரத்தியது நினைவிருக்கிறதா? 80 00:06:02,550 --> 00:06:05,511 - கொஞ்சம் அமைதியாக வருகிறாயா? - ரஸ்? 81 00:06:05,511 --> 00:06:07,680 - அம்மா! - பிள்ளைகளா! 82 00:06:07,680 --> 00:06:09,265 நாங்கள் மேலே இங்கே இருக்கிறோம். 83 00:06:09,265 --> 00:06:12,101 நான் மிகவும் கவலையடைந்தேன். உங்கள் அப்பாவிடம் ஏதோ பிரச்சினை இருக்கிறது. 84 00:06:12,101 --> 00:06:14,604 நான் அருங்காட்சியகத்தில் இருந்து வண்டைத் திருடியதாக அவர் ஜார்ஜியாவிடம் சொன்னார். 85 00:06:14,604 --> 00:06:18,066 அவரைப் பற்றி சொல்லத்தான் நாங்கள் வந்தோம். எங்களை சிறியதாக்க கலைப்பொருள் ஒன்றைப் பயன்படுத்தினார். 86 00:06:18,066 --> 00:06:19,317 அவர் என்ன செய்தார்? 87 00:06:19,317 --> 00:06:21,194 லின்டா, பேணை கிட்டத்தட்ட சாப்பிட்டிருக்கும். 88 00:06:21,194 --> 00:06:23,738 அவருக்குப் பேய் பிடித்திருக்கலாம் என்று நினைக்கிறோம். 89 00:06:23,738 --> 00:06:25,907 அப்பா நம்மைக் காயப்படுத்த மாட்டார் என்று நம் எல்லோருக்கும் தெரியும். 90 00:06:25,907 --> 00:06:29,827 பொம்மலாட்ட பொம்மைப் போல மனிதர்களை ஆட்டிப்படைக்கும் கலைப்பொருட்கள் இருக்கின்றன. 91 00:06:30,662 --> 00:06:31,829 அதை எனக்கு ஞாபகப்படுத்தாதீர்கள். 92 00:06:31,829 --> 00:06:35,291 விஷயம் என்னவென்றால் அப்பா ஆபத்தானவராக இருந்தாலும் கூட, அவருக்கு நாம் தேவை. 93 00:06:35,291 --> 00:06:37,335 இங்கிருந்து வெளியேறி அவரைக் கண்டுபிடிப்போம். 94 00:06:58,273 --> 00:06:59,566 இங்கே யாராவது இருக்கிறீர்களா? 95 00:07:02,443 --> 00:07:05,822 அருங்காட்சியகம் மூடப்பட்டிருக்கிறது. நீங்கள் அதிகாரப்பூர்வமாக அத்துமீறி நுழைகிறீர்கள். 96 00:07:33,725 --> 00:07:37,020 நாம் அடுத்து தேட வேண்டிய இடம் பொம்மைகளின் அறை. 97 00:07:37,020 --> 00:07:38,688 அலங்கோலமாக இருப்பதற்கு வருந்துகிறேன், 98 00:07:38,688 --> 00:07:42,609 ஆனால் உண்மையில் நடந்தது, டானிக்கின் சாபத்தை போக்கியபோது நீதான் அப்படிச் செய்தாய். 99 00:07:42,609 --> 00:07:43,776 ஆம். 100 00:07:44,402 --> 00:07:46,404 சுற்றிக் காட்டிய பிறகு சுத்தம் செய்ய உங்களுக்கு உதவுகிறேன். 101 00:07:50,408 --> 00:07:54,204 இது சுற்றிப் பார்ப்பது இல்லை. நாம் சாம்பர்ஸையும் அதன் இரட்டையையும் வேட்டையாடுகிறோம். 102 00:07:54,204 --> 00:07:58,082 சுற்றிப் பார்ப்பதோ வேட்டையோ, எதுவாக இருந்தாலும் அற்புதமாக இருக்கிறது. 103 00:07:58,082 --> 00:08:00,084 தடைசெய்யப்பட்ட பிரிவை எனக்கு சுற்றிக் காட்டியதற்கு நன்றி. 104 00:08:05,965 --> 00:08:06,966 ஒன்றைக் கண்டுபிடித்துவிட்டோம். 105 00:08:09,177 --> 00:08:10,428 ஆனால் அது என்ன செய்கிறது? 106 00:08:11,930 --> 00:08:14,724 அந்த கேடுகெட்டது மீண்டும் முள் கொடியை கடிக்கிறது. 107 00:08:23,483 --> 00:08:24,651 அது உயிர்பெற்றுவிட்டது. 108 00:08:32,242 --> 00:08:33,493 அது நின்றுவிட்டது. 109 00:08:33,493 --> 00:08:35,078 அவ்வளவுதான். 110 00:08:35,078 --> 00:08:38,540 சபிக்கப்பட்ட கலைப்பொருட்களின் சக்தியை முள் கொடி கட்டுப்படுத்துகிறது. 111 00:08:38,540 --> 00:08:40,833 முள் கொடியால் பொருட்களை உயிர்ப்பிக்க முடிந்தால், 112 00:08:40,833 --> 00:08:43,836 அதனால் அதை கட்டுப்படுத்தி வைக்கவும் முடியும். 113 00:08:44,546 --> 00:08:47,924 அதனால்தான் வண்டுகள் முள் கொடியைத் தாக்குகின்றன. 114 00:08:47,924 --> 00:08:50,885 அது நமக்கு உதவுவதை யாரோ விரும்பவில்லை. 115 00:08:50,885 --> 00:08:53,513 யாரோவொரு நாசக்காரன் முள் கொடி இறந்துவிட விரும்புகிறான். 116 00:08:53,513 --> 00:08:56,140 ஒருவரால் எப்படி இப்படிப்பட்ட வில்லத்தனம் செய்ய முடியும்? 117 00:08:56,140 --> 00:08:59,811 விஷயம் கைமீறி போவதற்கு முன்பு நாம் வண்டுகளை நிறுத்த வேண்டும், 118 00:08:59,811 --> 00:09:02,230 அதிலிருந்து தொடங்குவோம். 119 00:09:03,481 --> 00:09:04,566 அதைச் செய்வோம். 120 00:09:11,155 --> 00:09:12,907 கீழே இருப்பவர்கள் கவனியுங்கள்! 121 00:09:15,910 --> 00:09:18,413 ஆஹா, எவ்வளவு எளிதாக வேலை முடிந்தது. 122 00:09:18,413 --> 00:09:20,748 குறைந்தபட்சம் நல்லதுக்காக அதைக் கொன்றோம். 123 00:09:20,748 --> 00:09:23,835 நிஜம்தான். நான் ஒரு துடைப்பம் எடுத்து வந்து சுத்தம் செய்கிறேன். 124 00:09:23,835 --> 00:09:25,169 என்னுடன் வருகிறாயா, டெவி? 125 00:09:33,094 --> 00:09:34,178 என்ன ஆனது? 126 00:09:35,054 --> 00:09:36,639 இன்னும் பல வண்டுகள். இதை நான் பார்த்துக்கொள்கிறேன். 127 00:09:36,639 --> 00:09:37,974 டெவி, இல்லை! வேண்டாம்! 128 00:09:39,100 --> 00:09:43,605 இது வெட்ட வெட்ட முளைக்கும் ஹைட்ரா போன்றது. ஒன்றை நொறுக்கினால், இன்னும் அதிகமாகிறது. 129 00:09:44,522 --> 00:09:47,358 நம்மால் தாமதிக்க முடியாது. அவற்றைப் பிடிக்க வேண்டும்... 130 00:09:47,984 --> 00:09:49,068 இல்லை, போய்விட்டன. 131 00:10:00,455 --> 00:10:01,873 அவை எங்கே? 132 00:10:03,541 --> 00:10:05,710 அவை எங்கே? 133 00:10:08,922 --> 00:10:12,967 திருடர்கள். ஏமாற்றுக்காரர்கள். என்னுடையதை எடுக்க அவர்களுக்கு எவ்வளவு தைரியம்? 134 00:10:14,594 --> 00:10:16,930 இந்த சத்தம் ஓயவே ஓயாதா? 135 00:10:17,597 --> 00:10:19,599 என்ன? உங்களுக்கு என்ன வேண்டும்? 136 00:10:20,475 --> 00:10:22,310 அலெக்ஸ், உங்களுக்கு என்ன ஆனது? 137 00:10:22,310 --> 00:10:24,479 நான்தான், உங்கள் பழைய தோழி, மார்ஜி. 138 00:10:26,314 --> 00:10:27,148 மன்னித்துவிடுங்கள். 139 00:10:27,148 --> 00:10:30,985 உங்களையும் ஸ்கையையும் நிறைய முறை அழைத்தேன். எங்கே இருந்தீர்கள்? 140 00:10:30,985 --> 00:10:33,988 நாங்கள் வேலையில் பிஸியாக இருந்தோம். 141 00:10:33,988 --> 00:10:35,573 எனக்குப் புரிகிறது. 142 00:10:35,573 --> 00:10:39,202 எப்படியிருந்தாலும், நான் ஓல்டு ரூஃபஸை வாராந்திர பராமரிப்புக்கு அனுப்பினேன்... 143 00:10:39,202 --> 00:10:40,912 அது அதற்குப் பிடிக்கும்... 144 00:10:40,912 --> 00:10:44,874 சுவரில் உடைந்த பழைய கற்கள் கொண்ட பை ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது. 145 00:10:44,874 --> 00:10:46,376 அவை உங்களுடையவை என்று நினைத்தேன். 146 00:10:46,376 --> 00:10:49,379 துறைமுகத்திற்கு வரவழைக்கலாம் என்று நினைத்தேன், ஆனால் நீங்கள் அழைப்பை எடுக்கவில்லை. 147 00:10:49,379 --> 00:10:55,009 அதனால் நானே லில் ரூஃபஸில் பிரையர்ஸ்டோன் வந்து கொடுத்துவிடலாம் என்று நினைத்தேன். 148 00:10:56,469 --> 00:10:58,137 நன்றி, மார்ஜி. எவ்வளவு அக்கறை கொண்டவர் நீங்கள். 149 00:10:58,805 --> 00:11:00,515 ஆனால் இப்போது வீட்டில் யாரும் இல்லை. 150 00:11:00,515 --> 00:11:03,184 என்னை வேறு எங்காவது சந்திக்க முடியுமா? 151 00:11:03,768 --> 00:11:05,270 நிச்சயமாக. 152 00:11:05,270 --> 00:11:06,813 எங்கே வர வேண்டும் என்று மட்டும் சொல்லுங்கள். 153 00:11:12,443 --> 00:11:15,530 அப்படியென்றால் அலெக்ஸ் கலைப்பொருட்களையும் திருடுகிறார் என்கிறாயா? 154 00:11:15,530 --> 00:11:16,906 அதில் அர்த்தமில்லை. 155 00:11:17,407 --> 00:11:20,660 ஆம், நான் அவர் மயங்கிய நேரத்தை சமீபத்திய சில திருட்டுகளுடன் தொடர்புபடுத்தினேன். 156 00:11:20,660 --> 00:11:23,454 துரதிர்ஷ்டவசமாக, நேரம் சரியாக பொருந்துகிறது. 157 00:11:23,454 --> 00:11:25,039 அவர் சபிக்கப்பட்டிருக்க வேண்டும். 158 00:11:25,039 --> 00:11:27,584 அப்பா அப்படிச் செய்வார் என்று யாராவது நம்புகிறார்களா? 159 00:11:27,584 --> 00:11:30,545 இல்லை, அலெக்ஸ் எப்போதும் சரியானதைச் செய்ய முயற்சிப்பார். 160 00:11:31,129 --> 00:11:33,631 கல்லூரி காலத்தில், நாவஹோ நேஷனிடம் இருந்து எடுக்கப்பட்ட 161 00:11:33,631 --> 00:11:36,885 சில சடங்குகளுக்கான கலைப்பொருட்களை எங்கள் கல்லூரி திரும்ப கொடுக்கவைக்கும் 162 00:11:36,885 --> 00:11:38,636 ஒரு பெரிய போராட்டத்தில் அலெக்ஸ் சேர்ந்தார். 163 00:11:38,636 --> 00:11:42,307 நிஜமாகவா? அப்பா நீண்ட காலமாகவே திருப்பிக் கொடுக்கும் வேலை பார்க்கிறார். 164 00:11:42,307 --> 00:11:46,853 அதற்காக அவர் மிகவும் சிரமப்பட்டார். அவர் கிட்டத்தட்ட வெளியேற்றப்பட்டார், ஆனால் அதைப் பொருட்படுத்தவில்லை. 165 00:11:46,853 --> 00:11:49,272 அதுதான் சரியான செயல் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். 166 00:11:49,272 --> 00:11:51,900 குடும்பத்தின் மீதான சாபம் பற்றி அவருக்கு தெரிவதற்கு முன்பே கொள்ளையடிக்கப்பட்ட 167 00:11:51,900 --> 00:11:54,277 கலைப்பொருட்கள் திரும்பக் கொடுக்கப்பட வேண்டும் என்று அவர் எப்போதும் நம்பினார். 168 00:11:54,277 --> 00:11:55,904 அப்படிப்பட்டவர்தான் உங்கள் அப்பா. 169 00:11:55,904 --> 00:11:58,489 அந்த மனிதர் ஒரு கலைப்பொருளைத் திருடவே மாட்டார். 170 00:11:58,489 --> 00:11:59,699 டெவி உள்வரும் அழைப்பு 171 00:12:00,491 --> 00:12:02,869 - ஹேய், டெவ்ஸ். என்ன... - உங்கள் சபிக்கப்பட்ட பேஸ்மென்டில் 172 00:12:02,869 --> 00:12:05,830 நீல நிற வண்டுகள் நிறைய எல்லா கொடிகளையும் சாப்பிடுகின்றன. 173 00:12:05,830 --> 00:12:07,665 - நான் தெளிவுபடுத்துகிறேன். - ஹேய்! 174 00:12:07,665 --> 00:12:10,210 தடைசெய்யப்பட்ட பிரிவு லாபிஸ் வண்டுகளால் நிறைந்திருக்கிறது, 175 00:12:10,210 --> 00:12:15,548 அவை முள் கொடியை கடுமையாக சேதப்படுத்துகின்றன, அவை எல்லாவற்றையும் எங்களால் பிடிக்க முடியாது. 176 00:12:15,548 --> 00:12:18,593 ஒன்றுக்கு மேற்பட்ட வண்டு இருக்கிறதா? அது எப்படி சாத்தியம்? 177 00:12:18,593 --> 00:12:21,596 பிறகு விளக்குகிறோம், ஆனால் நீங்கள் உடனே இங்கே திரும்பி வர வேண்டும். 178 00:12:21,596 --> 00:12:24,307 தடை செய்யப்பட்ட பிரிவு முழுவதும் ஆபத்தில் இருக்கிறது. 179 00:12:24,307 --> 00:12:26,267 முள் கொடிதான் சபிக்கப்பட்ட கலைப்பொருட்களை 180 00:12:26,267 --> 00:12:29,520 செயல்படவிடாமல் காக்கிறது என்பதற்கான மறுக்க முடியாத ஆதாரத்தை நாங்கள் பார்த்தோம். 181 00:12:29,520 --> 00:12:32,607 ஆனால் எல்லா வண்டு கடிகளும் முள் கொடியை பாதிக்கின்றன, 182 00:12:32,607 --> 00:12:35,193 அதோடு அது கலைப்பொருட்கள் மீதான தனது கட்டுப்பாட்டை இழக்கிறது. 183 00:12:35,193 --> 00:12:37,946 எனவே வண்டுகள் முள் கொடியை அழித்துவிட்டால், 184 00:12:38,738 --> 00:12:42,158 கட்டுப்படுத்தப்பட்ட பிரிவில் இருக்கும் எல்லா கலைப்பொருட்களும் ஒரே நேரத்தில் உயிர்பெறும். 185 00:12:42,158 --> 00:12:45,328 நாம் அப்படி நடக்க விடக்கூடாது. அது கெட்ட கனவு போல இருக்கும். 186 00:12:45,328 --> 00:12:47,455 காத்திருங்கள். நாங்கள் வந்துகொண்டிருக்கிறோம். 187 00:12:48,122 --> 00:12:50,833 அப்பாவைப் பிடித்திருப்பது இப்படிச் செய்தது என்று நினைக்கிறீர்களா? 188 00:12:50,833 --> 00:12:53,962 இன்று நமக்கு எதிராக ஒரு கலைப்பொருள் பயன்படுத்தப்படுவது இது முதல்முறை இல்லை. 189 00:12:53,962 --> 00:12:55,672 நாம் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப் போகிறோம். 190 00:12:55,672 --> 00:12:58,591 நம் வீட்டையும் உங்கள் அப்பாவையும் காப்பாற்ற வேண்டிய நேரம் இது. 191 00:13:18,611 --> 00:13:20,530 ஹேய், டெவி, நிலைமை என்ன? 192 00:13:20,530 --> 00:13:23,157 வண்டுகள் ஏதாவது இந்த வழியாக வரலாம் என்பதால் பாதுகாப்புக்காக நிற்கிறேன். 193 00:13:23,741 --> 00:13:25,410 பாதுகாப்பில் டெவி. 194 00:13:26,160 --> 00:13:27,620 பேண்டோரா, பொறு! 195 00:13:30,123 --> 00:13:32,876 ஓ, இல்லை. அது பிரச்சினையாக இருக்கும். 196 00:13:32,876 --> 00:13:34,002 ஏன்? என்ன பிரச்சினை? 197 00:13:40,049 --> 00:13:42,635 நான் அதன் ஒவ்வொரு நொடியையும் வெறுக்கிறேன். 198 00:13:42,635 --> 00:13:43,928 இது இன்னும் மோசமாகிறது. 199 00:13:43,928 --> 00:13:47,765 லேரியும் நானும் ஆளுக்கொன்றை உடைத்தோம். இன்னும் நிறைய இருக்கின்றன. 200 00:13:48,308 --> 00:13:50,018 அவை எல்லாம் முள் கொடியை சேதப்படுத்துகின்றன. 201 00:13:51,603 --> 00:13:52,896 நாம் தடுத்தால் அவற்றால் முடியாது. 202 00:13:52,896 --> 00:13:57,066 நாம் எல்லா வண்டுகளையும் பிடித்து அவற்றை ஒழிப்பதற்கான வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். 203 00:13:57,066 --> 00:14:01,112 நாம் ஒன்றையும் தவறவிடக் கூடாது. முடிவுகள் பேரழிவை ஏற்படுத்தலாம். 204 00:14:01,112 --> 00:14:04,115 தடைசெய்யப்பட்ட பிரிவு முழுவதும் ஒரே நேரத்தில் உயிர்பெறுவது. 205 00:14:04,115 --> 00:14:06,242 அதை நினைத்தாலே நடுங்குகிறது. 206 00:14:06,242 --> 00:14:09,704 அது நடக்காமல் இருப்பதை உறுதிசெய்வோம். டெவி, நீயும் ஹேங்க்கும் என்னுடன் வாருங்கள். 207 00:14:11,372 --> 00:14:13,541 ஆம். நான் இங்கேயே நன்றாக இருக்கிறேன். 208 00:14:13,541 --> 00:14:16,127 சுற்றிக் காட்டும்போது பாதுகாப்பு பொறிகளைப் பற்றி ஸ்டான்லி சொன்னது, 209 00:14:16,127 --> 00:14:18,338 அதோடு அவற்றை வேலை செய்ய வைப்பது எவ்வளவு எளிதானது என்று சொன்னது. 210 00:14:19,172 --> 00:14:21,299 நாங்கள் கண்டுபிடிக்கும் வண்டுகளை உன்னிடம் கொண்டு வருகிறோம், 211 00:14:21,299 --> 00:14:22,967 நீ அவற்றை ஜாடியில் அடைத்து வைப்பது எப்படி? 212 00:14:22,967 --> 00:14:25,553 அதை என்னால் செய்ய முடியும். 213 00:14:25,553 --> 00:14:26,930 உன் வேட்டை வெற்றியடையட்டும். 214 00:14:29,224 --> 00:14:30,058 கவனமாக இரு, ஹேங்க். 215 00:14:37,815 --> 00:14:39,108 அங்கே இருக்கிறாய். 216 00:14:39,609 --> 00:14:40,985 அசையாதே. 217 00:14:43,071 --> 00:14:45,740 ஹேய்! வலைக்குள் போ! 218 00:14:49,160 --> 00:14:50,745 கிட்டத்தட்ட இறந்திருப்பேன். 219 00:14:51,538 --> 00:14:52,914 உதவிக்கு நன்றி, நண்பா. 220 00:14:54,499 --> 00:14:56,209 தயவுசெய்து, மாட்டிக்கொள்! 221 00:14:56,209 --> 00:14:57,877 இங்கே வா! ஓடாதே! 222 00:15:04,342 --> 00:15:05,718 பிடித்துவிட்டேன்! 223 00:15:12,058 --> 00:15:14,477 அடக் கடவுளே, இவை மிகவும் மோசமானவை. ஜாடியைத் திற. 224 00:15:24,195 --> 00:15:25,238 நாம் எண்ணிக்கையில் குறைவு. 225 00:15:25,238 --> 00:15:27,574 எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பிடிப்பதுதான் நமக்கான சிறந்த வாய்ப்பு. 226 00:15:28,157 --> 00:15:30,118 சரி. இதோ. 227 00:15:31,077 --> 00:15:32,245 அதைப் பிடி, ரஸ்! 228 00:15:36,749 --> 00:15:37,750 ரஸ்! 229 00:15:38,334 --> 00:15:39,669 இல்லை! 230 00:15:45,800 --> 00:15:48,261 நல்ல வேலை செய்தாய். பெயின்டை நன்றாக பயன்படுத்தினாய். 231 00:15:52,724 --> 00:15:54,225 இடதுபக்கம் வருகிறது. 232 00:16:11,993 --> 00:16:13,119 அப்பாடா. 233 00:16:13,119 --> 00:16:15,830 ஒரு பெண்ணை எங்கே வரவழைப்பது என்று உங்களுக்குத் தெரிகிறது, அலெக்ஸ். 234 00:16:19,500 --> 00:16:20,585 அலெக்ஸ்? 235 00:16:21,669 --> 00:16:24,464 இங்கே இருக்கிறீர்களா? அலெக்ஸ்? 236 00:16:25,465 --> 00:16:27,258 அவர் ஏன் இந்த கேவலமான இடத்தில் சந்திக்க விரும்புகிறார்? 237 00:16:28,092 --> 00:16:29,093 அலெக்ஸ்! 238 00:16:38,102 --> 00:16:39,437 எனக்கு ஏதோ கேட்டது. 239 00:16:39,437 --> 00:16:41,731 எங்கோ ஒரு வண்டு ஒளிந்துகொண்டிக்க வேண்டும். 240 00:16:47,028 --> 00:16:48,530 சரி, அதை சீக்கிரம் செய்வோம். 241 00:16:48,530 --> 00:16:51,115 விளக்குகள் எரியும்போதே இந்த இடம் மிகவும் பயமுறுத்தும். 242 00:16:54,994 --> 00:16:58,456 அந்த பெரிய கொடியைப் பாருங்கள். அவை அரிதாகவே பிடித்துக்கொண்டிருக்கின்றன. 243 00:16:59,082 --> 00:17:01,042 வண்டு வேலையை முடிக்கப் போகிறது. 244 00:17:21,020 --> 00:17:24,107 பொம்மைகளாக இருக்கக் கூடாது, பொம்மைகளைத் தவிர வேறு எதுவாகவும் இருக்கட்டும். 245 00:17:31,531 --> 00:17:33,157 ஏன் அவை எல்லாம் உயிர்பெற்றன? 246 00:17:33,157 --> 00:17:36,035 அது அந்த பெரிய முள் கொடியால் இருக்க வேண்டும். 247 00:17:36,536 --> 00:17:38,621 அது அவற்றைக் கட்டுக்குள் வைத்திருந்திருக்க வேண்டும். 248 00:17:39,998 --> 00:17:41,332 நாம் அதை இப்போது தொலைக்கக் கூடாது. 249 00:17:43,835 --> 00:17:44,836 பிடித்துவிட்டேன்! 250 00:17:54,429 --> 00:17:56,806 அம்மா. 251 00:17:58,433 --> 00:18:01,144 அம்மா. 252 00:18:03,605 --> 00:18:05,356 அம்மா! 253 00:18:05,356 --> 00:18:09,027 நாம் என்ன செய்ய வேண்டும்? இப்போது எல்லா கலைப்பொருட்களின் சாபத்தையும் நாம் போக்க முடியாது. 254 00:18:09,027 --> 00:18:10,987 நாம் வண்டுகளை தடுத்து, அப்பாவுக்கு உதவ வேண்டும். 255 00:18:10,987 --> 00:18:12,864 இப்போது இவற்றை சமாளிக்க வேண்டியதில்லை. 256 00:18:14,115 --> 00:18:15,575 டெவி, பிடி! 257 00:18:17,160 --> 00:18:18,161 ஓடு! 258 00:18:52,237 --> 00:18:54,280 - அம்மா. - என்னைவிட்டு போ! 259 00:18:57,742 --> 00:18:59,118 உங்களுக்கு எப்படியோ தெரியவில்லை, 260 00:18:59,118 --> 00:19:01,913 ஆனால் நான் மீண்டும் இன்னொரு பொம்மையை பார்க்க விரும்பவில்லை. 261 00:19:06,918 --> 00:19:10,630 பாருங்கள், அம்மா, வால்ட்டுக்குச் செல்ல இந்த முள் கொடிகளை நாம் வெட்டியது நினைவிருக்கிறதா? 262 00:19:10,630 --> 00:19:12,674 அதில் பல ஏற்கனவே மீண்டும் வளர்ந்துவிட்டன. 263 00:19:12,674 --> 00:19:14,968 நல்லது. அப்படியென்றால் ஒருவேளை, 264 00:19:14,968 --> 00:19:18,846 முள் கொடி அந்த பொம்மைகளை மீண்டும் தூங்க வைக்கலாம். 265 00:19:19,847 --> 00:19:21,266 வந்துவிடு. 266 00:19:21,266 --> 00:19:23,685 இந்த வலையில் சிக்கு. 267 00:19:45,331 --> 00:19:47,792 அதுதான்! அப்படித்தான் நாம் வண்டுகளை அழிக்க வேண்டும். 268 00:19:47,792 --> 00:19:49,127 நாம் அவற்றை உருக்க வேண்டும். 269 00:19:49,127 --> 00:19:51,296 நாம் ஒரு அருமையான அணியாக செயல்படுகிறோம். ஹை ஃபைவ்! 270 00:19:53,923 --> 00:19:56,426 ஆம், அது ஒருவேளை காயப்படுத்தலாம். பரவாயில்லை. 271 00:19:57,677 --> 00:20:00,221 ஹேங்கின் உருக்கும் உலைக்குள் செல்லுங்கள், நாசக்காரர்களே. 272 00:20:00,930 --> 00:20:02,348 அவைதான் கடைசியாக இருந்தவை. 273 00:20:02,348 --> 00:20:04,684 உன்னுடைய பயமுறுத்தும் பேஸ்மென்ட்டில் இனி வண்டுகள் கிடையாது. 274 00:20:04,684 --> 00:20:07,103 வண்டுகள் நிஜமாகவே இதை சேதப்படுத்திவிட்டன. 275 00:20:10,106 --> 00:20:13,610 முட்கள் அப்படி மின்னுவதை இதற்கு முன் நான் பார்த்ததில்லை. 276 00:20:14,194 --> 00:20:15,737 ஏதோ தவறாக உள்ளது. 277 00:20:15,737 --> 00:20:18,573 அது நம்மிடம் ஏதோ சொல்ல முயற்சிக்கிறது என்று நினைக்கிறேன். 278 00:20:24,412 --> 00:20:25,705 நான் எங்கே இருக்கிறேன்? 279 00:20:30,585 --> 00:20:31,586 அப்பா? 280 00:20:40,136 --> 00:20:41,387 கோர்னீலியஸ். 281 00:20:41,888 --> 00:20:43,056 அது கோர்னீலியஸ்! 282 00:20:43,056 --> 00:20:45,225 அவர்தான் அப்பாவைக் கட்டுப்படுத்திக்கொண்டிருக்கிறார். 283 00:20:45,225 --> 00:20:47,060 கோர்னீலியஸ்தான் சாபமே. 284 00:20:47,060 --> 00:20:50,396 இவ்வளவு காலத்திற்குப் பிறகு கோர்னீலியஸ் உயிருடன் இருக்கிறாரா? 285 00:20:50,396 --> 00:20:53,775 அவர் அலெக்ஸின் உடலில் இருக்கிறாரா? 286 00:20:53,775 --> 00:20:55,235 அது எப்படி சாத்தியம்? 287 00:20:55,235 --> 00:20:58,780 எனக்குத் தெரியவில்லை, ஆனால் முள் கொடி அதைத்தான் சொல்ல முயற்சிக்கிறது. 288 00:20:58,780 --> 00:21:02,242 குழப்பமாக இருந்தாலும், அது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. 289 00:21:02,242 --> 00:21:06,120 அதாவது கோர்னீலியஸ்தான் கருப்பு கோடுக்காரன், கேபராஸ் இல்லை. 290 00:21:06,621 --> 00:21:08,790 அதனால்தான் அம்மா வால்ட்டில் ஒரு கருப்பு கோட்டை பார்த்திருக்கிறார். 291 00:21:08,790 --> 00:21:13,294 கோர்னீலியஸ் கட்டுப்பாட்டில் இருந்தபோது இன்யூட் கண்ணாடிகள் வேறு நிறத்தை பார்த்திருக்கின்றன. 292 00:21:13,294 --> 00:21:15,505 அதனால்தான் கோடு விட்டு விட்டு இருந்திருக்கிறது. 293 00:21:15,505 --> 00:21:20,260 சரி, ஆனால் கோர்னீலியஸ் திரும்பி வந்திருந்தால், அவர் சதி செய்கிறார். 294 00:21:20,260 --> 00:21:23,513 அவரிடம் எப்பொழுதும் ஒரு திட்டம் இருப்பதை நாம் அவருடைய கையேடுகளில் படித்திருக்கிறோம். 295 00:21:24,097 --> 00:21:25,557 அவருக்கு என்ன வேண்டும்? 296 00:21:25,557 --> 00:21:28,768 அப்பா திருடிய எல்லா கலைப்பொருட்களுக்கும் இதற்கும் நிச்சயமாக சம்பந்தம் இருக்கும். 297 00:21:28,768 --> 00:21:32,772 அதாவது, கோர்னீலியஸ் அப்பாவை திருடச் செய்த கலைப்பொருட்கள், சரியா? 298 00:21:32,772 --> 00:21:37,735 அவை எல்லாமே சுமார் 3500 கி.முவின் பாபிலோனைச் சேர்ந்த தொல் எழுத்து டேப்லெட்கள். 299 00:21:37,735 --> 00:21:39,612 இது அநேகமாக தற்செயல் நிகழ்வாக இருக்காது. 300 00:21:41,656 --> 00:21:44,450 அவர் சார்கானின் சிம்மாசனத்தை உயிர்ப்பிக்கப் போகிறார். 301 00:21:44,450 --> 00:21:45,743 யாருடைய என்னது? 302 00:21:45,743 --> 00:21:49,497 அந்த கலைப்பொருட்கள் எல்லாம் அவரிடம் இருந்தால், என்ன செய்யப் போகிறார் என்பது எனக்குத் தெரியும். 303 00:21:50,081 --> 00:21:52,500 அவர் அலெக்ஸை நிரந்தரமாக எடுத்துக்கொள்ள முயற்சிக்கிறார். 304 00:22:00,341 --> 00:22:01,509 இல்லை, அவ்வளவுதான். 305 00:22:01,509 --> 00:22:05,430 நான் இங்கிருந்து போகிறேன். எப்படியும் ஒரு மணிநேரத்தில் விளையாட்டு இருக்கிறது. 306 00:22:07,557 --> 00:22:10,393 ஹாய், மார்ஜி. எப்படி இருக்கிறீர்கள்? 307 00:23:02,320 --> 00:23:04,322 வசனத் தமிழாக்கம் அருண்குமார்