1 00:00:10,010 --> 00:00:11,803 கதைகளை ஆராய்தல் 2 00:00:11,887 --> 00:00:13,931 அமெரிக்க இலக்கியம் 3 00:00:18,101 --> 00:00:20,020 அவசரம் இறுதி அறிவிப்பு 4 00:01:03,730 --> 00:01:05,649 ரூஃபி தோர்ப் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது 5 00:01:23,125 --> 00:01:24,918 நீங்க இறந்துட்டீங்கனு நினைச்சேன். 6 00:01:25,836 --> 00:01:27,379 இல்ல. நான் சாகல. 7 00:01:28,547 --> 00:01:31,967 இப்பதான் விஷயம் தெரிஞ்சது. மறுவாழ்வு மையத்துல இருந்தேன். அங்க ஃபோனை வாங்கி வச்சுப்பாங்க. 8 00:01:32,050 --> 00:01:33,051 மறுவாழ்வு மையமா? 9 00:01:33,135 --> 00:01:34,386 விஷயம் தெரிஞ்ச உடனே… 10 00:01:36,263 --> 00:01:37,264 என்னை மன்னிச்சிடு. 11 00:01:38,307 --> 00:01:39,516 நான் இப்போ இங்க வந்துட்டேன். 12 00:01:45,814 --> 00:01:46,815 நான் வந்துட்டேன். 13 00:01:59,369 --> 00:02:00,662 அடக் கடவுளே. 14 00:02:02,831 --> 00:02:03,832 ஹாய். 15 00:02:05,626 --> 00:02:07,920 சூசி, இவர்தான் ஜின்க்ஸ். 16 00:02:10,881 --> 00:02:12,216 இவர்தான் என் அப்பா. 17 00:02:15,969 --> 00:02:17,137 இவர் உன்னோட அப்பாவா? 18 00:02:17,930 --> 00:02:21,141 அப்புறம் ஏன் நீ என்கிட்ட சொல்லல, ஏன்னா… 19 00:02:21,225 --> 00:02:22,267 அது வந்து… 20 00:02:22,351 --> 00:02:23,810 ஆமா. சூசி உங்களோட ரசிகை. 21 00:02:23,894 --> 00:02:25,604 அப்புறம் எனக்கு சங்கடமா இருந்தது… 22 00:02:26,271 --> 00:02:29,066 தெரியல. வந்து… உங்களால இல்ல. சும்மா ஒரு மாதிரி விசித்திரமா இருந்துச்சு. 23 00:02:31,318 --> 00:02:32,319 அது அவன்தானா? 24 00:02:33,987 --> 00:02:35,030 நான் அவனைப் பார்க்கலாமா? 25 00:02:48,335 --> 00:02:49,461 நீங்க தாத்தா ஆயிட்டீங்க. 26 00:02:52,256 --> 00:02:56,301 எல்லாரும் அவன் அழகா இருக்கான்னு சொல்றாங்க. அதனால நான் அதை ஏத்துக்கிறேன். 27 00:02:57,803 --> 00:02:59,513 அவன் ரொம்ப அழகா இருக்கான். 28 00:03:01,932 --> 00:03:03,976 உனக்காக ஒரு காசோலை கொண்டு வந்தேன். 29 00:03:04,768 --> 00:03:06,061 ஒரு பழைய பைக்கை வித்துட்டேன். 30 00:03:06,144 --> 00:03:12,025 இது கம்மிதான், ஆனா நான்… உன்னைத் திரும்பக் கூப்பிட முடியாம போனதுக்கு என்னை மன்னிச்சுடு. 31 00:03:14,736 --> 00:03:16,071 நீங்க எங்க தங்கியிருக்கீங்க? 32 00:03:18,156 --> 00:03:22,119 அது, இன்னைக்கு ராத்திரிக்கு ஏதாவது யோசிக்கணும், அப்புறம் நாளைல இருந்து, 33 00:03:22,786 --> 00:03:25,873 அதையும் யோசிக்கணும்னு நினைக்கிறேன். 34 00:03:25,956 --> 00:03:26,999 நான் அவனைத் தூக்கிக்கட்டுமா? 35 00:03:29,710 --> 00:03:30,794 அவன் கொஞ்சம் அடம் பிடிக்கிறான். 36 00:03:38,969 --> 00:03:39,970 ஹே. 37 00:03:41,972 --> 00:03:43,140 ஹே, குட்டி செல்லமே. 38 00:03:45,392 --> 00:03:46,393 ஆஹா. 39 00:03:47,686 --> 00:03:48,854 அவனுக்கு உங்களைப் பிடிச்சிருக்கு. 40 00:03:53,442 --> 00:03:54,526 அடடா. 41 00:03:59,281 --> 00:04:01,992 நீங்க இன்னைக்கு ராத்திரி இங்கேயே தங்குறதா இருந்தா, எனக்கு பிரச்சனை இல்ல. 42 00:04:04,578 --> 00:04:05,579 ஆஹா. 43 00:04:08,624 --> 00:04:09,625 ஆஹா. 44 00:04:13,962 --> 00:04:17,757 காலை 6 59 45 00:04:17,841 --> 00:04:19,301 காலை 7 00 46 00:04:30,938 --> 00:04:31,939 காலை 7 01 47 00:05:28,954 --> 00:05:29,955 ஹே. 48 00:05:31,206 --> 00:05:33,542 உன் அப்பா பாத்ரூமை டூத்-பிரஷ் வச்சு சுத்தப்படுத்திட்டு இருக்காரு. 49 00:05:34,126 --> 00:05:36,920 எனக்குத் தெரியும். மன்னிச்சிடு. அவர் சீக்கிரம் கிளம்பிடுவாரு. 50 00:05:37,004 --> 00:05:38,005 அது பரவாயில்ல. 51 00:05:38,088 --> 00:05:42,301 ஜின்க்ஸ் என் வீட்டுல இருக்காருன்றத என்னால நம்பவே முடியல. 52 00:05:42,384 --> 00:05:43,427 குட் மார்னிங். 53 00:05:43,927 --> 00:05:46,722 ஹேய். குட் மார்னிங். எப்படித் தூங்கினீங்க? 54 00:05:46,805 --> 00:05:48,140 குழந்தை மாதிரி நல்லாத் தூங்கினேன். 55 00:05:48,223 --> 00:05:53,562 அதப் பத்தி சொல்லணும்னா, என்னால இன்னும் நம்ப முடியல, இந்தக் குட்டி கண்ணன்… 56 00:05:55,230 --> 00:05:57,649 அவன் அம்மாகிட்ட இருக்கும்போது நிறுத்தாம அழுதுட்டே இருக்கான். 57 00:05:59,318 --> 00:06:01,778 எப்படி… அவ எப்படி இருக்கா? ஷயான். 58 00:06:01,862 --> 00:06:03,280 ரொம்ப நல்லா இருக்காங்க. அவங்க இப்போதான்… 59 00:06:05,199 --> 00:06:07,242 புதுசா இன்னும் மேம்பட்ட அழகு சிகிச்சை பண்ணியிருக்காங்க. 60 00:06:07,826 --> 00:06:08,827 அது பிரமாதமா இருக்கு. 61 00:06:08,911 --> 00:06:10,412 அவகிட்ட எப்பவுமே சிறந்த விஷயம்தான் கிடைக்கும். 62 00:06:12,331 --> 00:06:16,919 நான் ஒண்ணு சொல்லணும். நேத்து ராத்திரி நான் கொஞ்சம் குழம்பி இருந்ததுக்கு மன்னிப்பு கேட்க விரும்புறேன். 63 00:06:17,503 --> 00:06:19,421 விஷயம் என்னன்னா, நீங்க… 64 00:06:21,757 --> 00:06:22,925 நீங்கதான் எனக்கு ரொம்பப் பிடிச்ச மல்யுத்த வீரர். 65 00:06:24,635 --> 00:06:27,721 எனக்குப் புரியுது. அப்புறம் உங்களுக்கு நன்றி. 66 00:06:31,725 --> 00:06:33,227 சரி, இன்னைக்கு என்ன பிளான்? 67 00:06:33,810 --> 00:06:37,648 வேலைக்கான இன்டர்வியூ, அப்புறம், ஒரு மீட்டிங் இருக்கு. 68 00:06:38,815 --> 00:06:39,900 நான் போதியை பாத்துக்கணும்னு நினைக்கிறியா? 69 00:06:40,943 --> 00:06:43,320 இல்ல. அதெல்லாம் வேணாம். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தே இதை சமாளிப்போம். 70 00:06:44,780 --> 00:06:46,281 சரி. போய் ஜெயிச்சிட்டு வா, செல்லம். 71 00:06:46,365 --> 00:06:47,491 ஆமா. 72 00:06:49,868 --> 00:06:50,994 உனக்கு இது வேணுமா? 73 00:06:53,580 --> 00:06:54,623 ஆமா. 74 00:06:55,499 --> 00:06:56,583 சமத்து பையனா இரு. 75 00:06:57,543 --> 00:06:59,753 அம்மாவுக்கு ஒரு இன்டர்வியூ இருக்கு. ஆமா. 76 00:06:59,837 --> 00:07:00,963 மிஸ் மில்லட். 77 00:07:01,588 --> 00:07:02,589 ஆமா. 78 00:07:03,841 --> 00:07:05,008 நீங்க குழந்தையைக் கூட்டிட்டு வந்திருக்கீங்களா? 79 00:07:05,676 --> 00:07:07,761 ஆமா, இவன் பேரு போதி. 80 00:07:07,845 --> 00:07:11,598 கண்டிப்பா, எனக்கு வேலை கிடைச்சா குழந்தையைப் பாத்துக்க ஏதாவது ஏற்பாடு பண்ணிடுவேன். 81 00:07:11,682 --> 00:07:14,434 நான் போதியை வேலைக்கு கூட்டிட்டு வரணும்னு நினைக்கல. 82 00:07:15,394 --> 00:07:16,562 ஆனாலும் அவனை இங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க. 83 00:07:19,690 --> 00:07:22,192 அதனால ஏதாவது பிரச்சனைன்னா நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன். 84 00:07:26,947 --> 00:07:29,241 வேலை அனுபவம், நீங்க சர்வரா வேலை செய்ஞ்சிருக்கீங்கன்னு தெரியுது. 85 00:07:29,324 --> 00:07:32,452 "ஆர்டர்களுக்கு இடைப்பட்ட நேரத்தை நிர்வகித்து உணவுகள், பானங்களை உடனுக்குடன் டெலிவரி செஞ்சேன்." 86 00:07:32,536 --> 00:07:33,787 அதுவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கு. 87 00:07:34,663 --> 00:07:39,126 "ஃபுரோயோ கோ, ஃப்ரோசன் யோகர்ட் பாரிஸ்டா. யோகர்ட் மற்றும் டாப்பிங்ஸ் தீர்ந்து போகாம பாத்துக்கிட்டேன்." 88 00:07:39,209 --> 00:07:40,294 இதுல "டாப்ளிங்"-னு இருக்கு. 89 00:07:40,377 --> 00:07:42,796 அது தட்டச்சு பிழை, அத ஒரு பெரிய விஷயமா நான் எடுத்துக்க மாட்டேன். 90 00:07:43,881 --> 00:07:46,884 சரி, வேற ஏதாவது இருக்கா? 91 00:07:46,967 --> 00:07:50,345 ஆமா, என்னோட எழுத்துத் திறமை தான் என்னோட பலம். 92 00:07:50,429 --> 00:07:53,724 நான் கர்ப்பமான நேரத்துல காலேஜ்ல அதான் படிச்சிட்டு இருந்தேன். 93 00:07:55,017 --> 00:07:57,477 சொல்லப்போனா, என் ப்ரொஃபஸர் சொன்னாரு… 94 00:07:58,896 --> 00:08:00,230 உங்க ப்ரொஃபஸர் என்ன சொன்னாரு? 95 00:08:01,899 --> 00:08:04,568 அதாவது… என்கிட்ட ஒரு வரம் இருக்குன்னு. 96 00:08:05,611 --> 00:08:07,571 என் எழுத்துத் திறமையைச் சொன்னாரு. 97 00:08:11,033 --> 00:08:12,075 சூப்பர். 98 00:08:12,159 --> 00:08:16,747 ஆக மொத்தம், எழுத்துத் திறன், கணக்கு பராமரித்தல், மற்றும் சர்வர் வேலை. 99 00:08:16,830 --> 00:08:17,831 வேற ஏதாவது இருக்கா? 100 00:08:17,915 --> 00:08:19,082 அதேதான். 101 00:08:19,166 --> 00:08:20,250 என்ன சொன்னீங்க? 102 00:08:20,334 --> 00:08:24,463 வேற எதுவா இருந்தாலும் சரி. எந்த வேலையா இருந்தாலும் சரி. கூலி வேலையா இருந்தாலும் சரி. 103 00:08:24,546 --> 00:08:26,215 குழி தோண்டுற வேலையா இருந்தாலும் செய்யத் தயாரா இருக்கேன். 104 00:08:27,758 --> 00:08:29,343 நீங்க ஏற்கனவே ஒரு குழியைத் தோண்டி வச்ச மாதிரி தெரியுது. 105 00:08:31,553 --> 00:08:33,304 அவ சரியான ராட்சசி மாதிரி தெரியுது. 106 00:08:33,388 --> 00:08:35,765 - ஆமா, கிட்டத்தட்ட அப்படித்தான் இருந்தா. - அவ உனக்கு வேலை எதுவும் சொல்லலயா? 107 00:08:35,849 --> 00:08:36,850 பெக்கா 108 00:08:36,933 --> 00:08:40,854 இல்ல. சர்வர் வேலைக்கு ஏதாவது இடம் இருந்தா சொல்லுறேன்னு சொன்னா. 109 00:08:41,605 --> 00:08:44,107 நீ இதையெல்லாம் ஒரு கதையா எழுதணும். 110 00:08:44,191 --> 00:08:48,070 குழந்தையை வளர்க்கிறது. ஸ்டீஃபன் கிங்-இன் பேய்க் கதை மாதிரி. 111 00:08:48,153 --> 00:08:49,738 - எழுதலாம். - வாழ்க்கை உன்னைத் தேடி வரும்போது, 112 00:08:49,821 --> 00:08:50,822 நீ அதை எழுதி வைக்கணும். 113 00:08:50,906 --> 00:08:53,700 உங்கள் இலக்கு இன்னும் 200 அடியில் வலது பக்கத்தில் இருக்கு. 114 00:08:53,784 --> 00:08:57,538 சரி. நான் போகணும். அந்த காட்ஸில்லா அம்மாகூட உட்கார்ந்து ஒரு முக்கியமான விஷயம் பேசணும். 115 00:08:58,247 --> 00:09:00,207 லவ் யூ. அப்புறம் பேசுறேன், பை. 116 00:09:05,045 --> 00:09:06,213 உங்களுக்கு என்ன வேணும்? 117 00:09:06,296 --> 00:09:08,048 நான் மிஸ்டர் பாக்-ஐ பாக்க வந்திருக்கேன். 118 00:09:08,131 --> 00:09:09,341 அவர் ஆறாவது மாடியில் இருக்கார். 119 00:09:28,694 --> 00:09:29,695 ஹாய். 120 00:09:30,279 --> 00:09:31,864 வந்து, 121 00:09:31,947 --> 00:09:35,200 நாம இதைக் கண்டிப்பா எதிர்பார்க்கல. 122 00:09:36,326 --> 00:09:37,828 சாரி. என்னோட… 123 00:09:37,911 --> 00:09:41,206 என்னோட குழந்தை பராமரிப்பாளர் தன் நோபல் பரிசை வாங்குறதுக்காக ஸ்வீடனுக்குப் போக வேண்டியதா போச்சு. 124 00:09:42,875 --> 00:09:45,169 ஹலோ. என் பெயர் லாரன்ஸ் ஜே. பாக். 125 00:09:45,252 --> 00:09:47,421 மார்கோ எம். மில்லட். 126 00:09:47,504 --> 00:09:48,881 மார்கோ, நீங்க உட்காரலாமே? 127 00:09:57,306 --> 00:10:01,101 உன் மிரட்டலைப் பத்தி மார்க் எங்களிடம் சொன்னார். 128 00:10:01,810 --> 00:10:02,895 நான் ஒண்ணும் அவரை மிரட்டல. 129 00:10:02,978 --> 00:10:04,479 இப்ப, நான் சொல்றத நல்லா கவனி. 130 00:10:04,563 --> 00:10:07,524 நான் பாக்குறதுக்கு ரகூன் மாதிரி இருக்கேன்னு என் மேல ஒரு குற்றச்சாட்டு உண்டு. 131 00:10:07,608 --> 00:10:10,777 உண்மைய சொல்லணும்னா, என் குணமும் அதே மாதிரி தான். 132 00:10:10,861 --> 00:10:13,655 வம்பு பண்ணாத வரை நான் சமத்து, ஆனா யாராவது என்னைச் சீண்டிப் பார்த்தா அவ்வளவுதான். 133 00:10:13,739 --> 00:10:16,033 சரி, எலிசபெத். நான் பேசிக்குறேன். 134 00:10:18,202 --> 00:10:22,915 மார்கோ, சட்டத்தை நான் கையாளும் விதம் கொஞ்சம் வித்தியாசமானது. 135 00:10:23,874 --> 00:10:27,544 எல்லாத்தையும் சீக்கிரம் சுமுகமா முடிச்சுட்டு போறதுதான் எனக்கு பிடிக்கும். 136 00:10:29,129 --> 00:10:31,548 சரி, இந்த வழி உங்களுக்கு ஒத்து வரும்னு தோணுதா? 137 00:10:32,090 --> 00:10:33,425 கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு. 138 00:10:33,509 --> 00:10:34,635 நிச்சயமா. 139 00:10:35,177 --> 00:10:38,597 நேத்து நீங்க அவரோட ஆபீஸ்க்குப் போனப்ப என் கிளையண்ட் ரொம்பவே கலங்கிட்டாரு. 140 00:10:38,680 --> 00:10:40,349 சொல்லப்போனா, மனுஷன் ரொம்பவே ஆடிப்போயிட்டாரு. 141 00:10:40,933 --> 00:10:42,976 உங்க பேச்சுல ஏதோ மிரட்டுற சாயல் இருந்ததா அவர் நினைக்கிறாரு. 142 00:10:43,060 --> 00:10:44,061 மிரட்டலா? 143 00:10:44,144 --> 00:10:45,646 ஓ, நீ ரொம்ப புத்திசாலினு நினைச்சிட்டு இருக்க. 144 00:10:45,729 --> 00:10:48,482 - உன்னோட இந்த குட்டி குழந்தைய வச்சு. - எலிசபெத், கொஞ்சம் சும்மா இரு. 145 00:10:48,565 --> 00:10:52,402 மார்கோ, நாங்க உங்களுக்கு ஒரு செக் கொடுக்கத் தயாரா இருக்கோம். 146 00:10:52,986 --> 00:10:57,199 உங்க குழந்தையோட பேர்ல ஒரு டிரஸ்ட்-ல 50,000 டாலர் போடப்படும். 147 00:10:58,325 --> 00:11:00,327 அது ஒரு மியூச்சுவல் ஃபண்ட்-ல முதலீடு செய்யப்படும். 148 00:11:00,410 --> 00:11:02,663 நிச்சயமா, அந்தப் பணம் வட்டியோட சேர்ந்து வளரும். 149 00:11:03,205 --> 00:11:07,292 இந்த குழந்தைக்கு 18 வயசு ஆகும்போது, அதோட மதிப்பு… 150 00:11:08,043 --> 00:11:09,753 தோராயமா 3,00,000 டாலர் இருக்கும். 151 00:11:11,755 --> 00:11:14,299 அந்த நேரத்துல அந்தப் பணம் அவனுக்கே போய்ச் சேந்துடும். 152 00:11:17,219 --> 00:11:18,470 அதுக்கு பதிலா… 153 00:11:19,763 --> 00:11:22,933 நீங்க இப்போவோ இல்ல எதிர்காலத்துலயோ ஃபுல்லர்டன் காலேஜ்ல படிக்க மாட்டீங்கன்னு ஒத்துக்கணும். 154 00:11:24,268 --> 00:11:27,437 அதோடு, மார்க் இல்லன்னா அவரோட குடும்பத்த தொடர்புகொள்ள மாட்டீங்கன்னு சம்மதிக்கணும். 155 00:11:27,521 --> 00:11:29,898 அப்புறம் நீங்க ஒரு ரகசியக் காப்பு ஒப்பந்தத்துல கையெழுத்துப் போடணும், 156 00:11:29,982 --> 00:11:32,860 அப்புறம், எதிர்காலத்துல எந்த உரிமையும் கோர மாட்டீங்கன்னு ஒரு உறுதிமொழியும் கொடுக்கணும். 157 00:11:36,446 --> 00:11:37,447 ஆக? 158 00:11:38,991 --> 00:11:40,117 நீ சம்மதிக்கிறியா? 159 00:11:45,664 --> 00:11:46,832 நான் சம்மதிக்கிறேன். 160 00:11:49,918 --> 00:11:50,919 நிச்சயமாவா சொல்ற? 161 00:11:51,003 --> 00:11:53,088 அப்படின்னா உன்னால அந்தப் பணத்தை பயன்படுத்த முடியாது. 162 00:11:53,172 --> 00:11:54,381 அடுத்த மாசம் வாடகை எப்படி கொடுப்ப? 163 00:11:54,464 --> 00:11:55,465 சூசி 164 00:11:55,549 --> 00:11:56,550 எனக்குத் தெரியும். 165 00:11:57,050 --> 00:11:58,510 ஆனா போதிக்கு ஒரு டிரஸ்ட்ல இருந்து பணம் கிடைக்குதுன்னா? 166 00:11:59,178 --> 00:12:00,345 ஆமா. 167 00:12:00,429 --> 00:12:02,389 ஹே, நீ இப்போ எங்க இருக்க? 168 00:12:02,472 --> 00:12:04,224 நான் கிட்டத்தட்ட வீட்ட நெருங்கிட்டேன். இதோ வந்திடுறேன். 169 00:12:04,308 --> 00:12:06,476 ஓ, நல்லது. ஏன்னா… 170 00:12:07,728 --> 00:12:08,729 என்ன "உம்"? 171 00:12:11,398 --> 00:12:13,108 - ஹே. - ஹே. 172 00:12:14,067 --> 00:12:16,111 சரி, என்ன நடக்குது? 173 00:12:16,195 --> 00:12:20,490 அவர் நாள் முழுக்க சுத்தப்படுத்திட்டே இருக்காரு. உங்க அப்பா. 174 00:12:20,574 --> 00:12:23,577 அவர் இப்போ அங்கதான் இருக்காரு… …பாத்திரங்களையெல்லாம் மெருகூட்டிட்டு. 175 00:12:23,660 --> 00:12:24,661 என்னது? 176 00:12:26,205 --> 00:12:28,874 அப்பா? என்ன பண்ணிட்டு இருக்கீங்க? 177 00:12:28,957 --> 00:12:31,126 இது ஓவன். வாக் கிடையாது. 178 00:12:32,211 --> 00:12:34,838 நிஜமாவே நீங்க இதெல்லாம் பண்ணத் தேவையில்ல. 179 00:12:34,922 --> 00:12:37,674 ஆனா, எனக்குப் பண்ண வேண்டியிருக்கு. அப்போதான் நான் பிஸியா இருக்க முடியும். 180 00:12:40,552 --> 00:12:41,553 பசிக்குதா? 181 00:12:41,637 --> 00:12:44,223 - என் குட்டி செல்லம் எப்படி இருக்கான்? - நல்லா இருக்கான். 182 00:12:44,306 --> 00:12:47,809 நீ இன்னொரு பக்கம் மாத்திவிடு, இல்லன்னா ஏத்தி இறக்கமா இருக்கும். 183 00:12:49,811 --> 00:12:50,812 நான் போய் பாக்குறேன். 184 00:12:52,356 --> 00:12:53,774 நீ எழுந்திரிக்காதே, சூசி. 185 00:13:00,197 --> 00:13:01,198 என்ன எழவு இது? 186 00:13:03,700 --> 00:13:04,952 நீங்க இங்க என்ன பண்றீங்க? 187 00:13:05,869 --> 00:13:09,373 ஆமா, நான் அந்த மே டே பார்ட்டிக்கு கொஞ்சம் தாமதமா வந்துட்டேன். 188 00:13:10,374 --> 00:13:11,583 நானும் அப்படித்தான் சொல்லணும். 189 00:13:12,835 --> 00:13:13,919 பார்க்க ரொம்ப அழகா இருக்க. 190 00:13:14,670 --> 00:13:16,672 அம்மா. நீங்க ஏன் இங்க வந்திருக்கீங்க? 191 00:13:17,172 --> 00:13:19,675 என் மகள் இங்கதான் இருக்கா. என் பேரனும். 192 00:13:19,758 --> 00:13:22,177 ஆமா, எனக்குத் தெரியும். கண்டிப்பா. அதாவது, நீங்க எப்பவுமே வரலாம். 193 00:13:22,261 --> 00:13:24,346 ஆனா… நீங்க என்கிட்ட சொல்லவே இல்ல. 194 00:13:24,429 --> 00:13:26,348 உனக்கு இன்ப அதிர்ச்சி தர நினைச்சேன். 195 00:13:26,431 --> 00:13:29,142 நான் உன்னோட டிரஸை கொண்டு வந்தேன். 196 00:13:29,726 --> 00:13:32,771 - டிரஸா? - ஆமா. என்னோட… அந்த… அந்த விஷயத்துக்கு. 197 00:13:33,272 --> 00:13:34,273 என்ன விஷயம்? 198 00:13:35,357 --> 00:13:36,775 இது மணப்பெண் தோழிக்கான டிரஸ். 199 00:13:37,609 --> 00:13:38,819 நான்தான் உங்களோ மணப்பெண் தோழியா? 200 00:13:38,902 --> 00:13:40,404 இரு. உனக்குக் கல்யாணம் ஆகப் போகுதா? 201 00:13:40,904 --> 00:13:45,951 ஆமா, எனக்கு ரொம்ப நல்ல மனுஷனோட நிச்சயம் ஆகியிருக்கு. 202 00:13:46,034 --> 00:13:47,244 ஆஹா. 203 00:13:48,245 --> 00:13:49,454 வாழ்த்துகள். 204 00:13:49,997 --> 00:13:51,248 நன்றி. 205 00:13:51,832 --> 00:13:57,880 டாப்ஸ் கொஞ்சம் டைட்டா இருக்கலாம், ஆனா கல்யாண அன்னைக்குள்ள… 206 00:13:58,422 --> 00:14:00,591 நமக்கு ஒரு ஃபிட்டிங் இருக்கு. புதன்கிழமை காலையில 9:00 மணிக்கு. 207 00:14:01,133 --> 00:14:02,843 கடவுளே, இது அட்டகாசமா இருக்கு. 208 00:14:02,926 --> 00:14:05,262 அப்படியா? நிஜமாவே பிடிச்சிருக்கா? சத்தியமா? 209 00:14:05,345 --> 00:14:08,724 இது நான் பாத்ததுலயே ரொம்ப அழகான டிரஸ். 210 00:14:08,807 --> 00:14:10,392 ஆமா. இது நிஜமாவே ரொம்ப அழகா இருக்கு. 211 00:14:13,437 --> 00:14:15,314 வந்து, கை வைக்காதீங்க… உங்க கை எண்ணெயா இருக்கு. 212 00:14:16,607 --> 00:14:20,027 சரி. வந்து… இன்னும் 30 நிமிஷத்துல என் ஷிஃப்ட் ஆரம்பிக்குது, 213 00:14:20,110 --> 00:14:23,947 அதனால, நான்… நான் கிளம்புறதுதான் நல்லதுன்னு நினைக்கிறேன். 214 00:14:24,031 --> 00:14:27,242 சரி, ஜின்க்ஸ், உங்களை மறுபடியும் பாத்ததுல ரொம்ப சந்தோஷம். 215 00:14:27,326 --> 00:14:28,368 - சூப்பர். - அப்புறம்… 216 00:14:28,452 --> 00:14:30,537 ஃபிட்டிங் பண்ற இடத்தோட அட்ரஸை உனக்கு அனுப்புறேன். 217 00:14:30,621 --> 00:14:32,831 சரி. பை! 218 00:14:32,915 --> 00:14:33,957 பை. 219 00:14:34,583 --> 00:14:35,584 ஆமா. 220 00:14:39,379 --> 00:14:41,173 அப்பா, நீங்க ஓகே தானே? 221 00:14:41,256 --> 00:14:42,549 ஆமா. ஆமா, நான் நல்லாத்தான் இருக்கேன். 222 00:14:44,009 --> 00:14:46,053 நான் அதைச் சுத்தப்படுத்தணும்… சில விஷயங்களைச் சுத்தப்படுத்தணும். 223 00:14:51,850 --> 00:14:53,477 நான் போய் டயப்பர் வாங்கிட்டு வரணும். 224 00:14:53,560 --> 00:14:55,562 சுமார் ஒரு மணிநேரம் அவனைப் பாத்துக்க முடியுமா? 225 00:14:56,230 --> 00:14:57,231 ஆமா. கண்டிப்பா. 226 00:14:57,314 --> 00:14:58,315 நன்றி. 227 00:14:59,233 --> 00:15:03,654 டயப்பர்ஸ் - டயப்பர்ஸ் டயப்பர்ஸ் - டயப்பர்ஸ் 228 00:15:03,737 --> 00:15:04,905 மொத்தம் 157.83 டாலர் 229 00:15:17,835 --> 00:15:20,170 உங்களோட மொத்த பில் 238 டாலர். 230 00:15:20,671 --> 00:15:24,174 ஹக்கீஸ் 231 00:15:34,726 --> 00:15:35,811 ஃபினிஷிங் கிக்! 232 00:15:35,894 --> 00:15:36,895 சரி. சரி. 233 00:15:36,979 --> 00:15:38,981 - அது… கொஞ்சம் ஓவர்தான். - குட்டிப் பையா. 234 00:15:39,064 --> 00:15:40,816 இங்க கொடு. அவன என்கிட்ட கொடு. 235 00:15:42,985 --> 00:15:45,112 நீ அவனை லேசா இப்படி ஆட்டுனாலே போதும். 236 00:15:46,321 --> 00:15:47,322 இதோ சமத்தா இருக்கான். 237 00:15:47,906 --> 00:15:49,658 ஆமா. அவன் இப்போ சமத்துதான். 238 00:15:52,160 --> 00:15:53,495 - ஹே, செல்லம். - ஹே. 239 00:15:53,579 --> 00:15:56,081 ஹே. அவன் என்ன பண்றான்? 240 00:15:56,164 --> 00:15:58,917 அவன் ரொம்பப் பிரமாதமா இருக்கான். 241 00:15:59,001 --> 00:16:01,086 ஏன்னா நீ ஒரு பிரமாதமான செல்லக் குட்டி. 242 00:16:01,628 --> 00:16:02,880 சரி. 243 00:16:02,963 --> 00:16:06,049 இதோ வந்துட்டோம். இப்போ தூங்குற நேரம். 244 00:16:06,133 --> 00:16:09,928 அப்படியே ஸ்லோ-மோ குத்து. 245 00:16:13,056 --> 00:16:15,184 ஓ, இரு. அது அரபெல்லா. 246 00:16:15,934 --> 00:16:17,936 அவ AEW-க்கு போயிட்டாள்னு எனக்குத் தெரியாது. 247 00:16:18,020 --> 00:16:19,354 ஆமா, இது பல மாசத்துக்கு முன்னாடி நடந்துச்சு. 248 00:16:19,438 --> 00:16:23,442 அவ WWE-ல தான் இருந்தா, ஆனா அப்புறம் அவளோட ஒப்பந்தத்தை ரத்து பண்ணிட்டாங்க, 249 00:16:23,525 --> 00:16:24,526 ஏன்னா அவ… 250 00:16:25,819 --> 00:16:26,945 நீ ஒன்லிஃபேன்ஸ் பத்தி கேள்விப்பட்ருக்கியா? 251 00:16:27,029 --> 00:16:30,115 ஆமா, கண்டிப்பா. எல்லாரும் கேள்விப்பட்டிருப்பாங்க. அது ஒரு அமெச்சூர் போர்ன். 252 00:16:30,199 --> 00:16:31,366 ஆனா அது போர்ன் மட்டும் கிடையாது. 253 00:16:31,450 --> 00:16:33,869 உண்மைதான். நிறைய காஸ்பிளேயர்ஸ் ஒன்லிஃபேன்ஸ்ல நல்லா சம்பாதிக்கிறாங்க. 254 00:16:33,952 --> 00:16:36,997 அரபெல்லாவுக்கு நிறைய ஃபாலோயர்ஸ் இருந்தாங்கன்னு கேள்விப்பட்டேன். 255 00:16:37,080 --> 00:16:40,042 ஆனா WWE-க்கு அதுல சம்பந்தப்பட விருப்பம் இல்ல. 256 00:16:40,125 --> 00:16:41,168 எவ்வளவு இருக்கும்? 257 00:16:42,127 --> 00:16:43,504 என்ன கேட்ட? 258 00:16:43,587 --> 00:16:45,005 அவங்க எவ்வளவு பணம் சம்பாதிச்சாங்க? 259 00:16:45,088 --> 00:16:48,008 ரெஸ்லிங்ல ஒரு வருஷம் சம்பாதிக்கிறதை விட, ஒன்லிஃபேன்ஸ்ல 260 00:16:48,091 --> 00:16:49,801 ஒரே மாசத்துல அதிகமா சம்பாதிச்சதா அவ சொன்னா. 261 00:16:50,969 --> 00:16:53,514 சத்தம் போடாத. அவ தன்னோட ஃபினிஷர் மூவ் பண்ணப் போறா. 262 00:16:57,309 --> 00:16:58,352 அப்படித்தான்! 263 00:16:59,353 --> 00:17:02,731 சரி. நான் யாரையாவது கொல்லணும்னு நினைச்சா, அப்படித்தான் கொல்லுவேன். 264 00:17:06,359 --> 00:17:07,486 ஹே. 265 00:17:07,569 --> 00:17:08,694 இங்க பாரு. 266 00:17:09,655 --> 00:17:14,076 நீ ஒரு ரூம்மேட் தேடிட்டு இருக்குறதா சூசி சொன்னா. 267 00:17:14,617 --> 00:17:17,162 எனக்கும் தங்குறதுக்கு ஒரு இடம் வேணும். 268 00:17:22,416 --> 00:17:23,627 அது வந்து… 269 00:17:23,710 --> 00:17:26,338 அதாவது, பாரு, என்னால அதிக வாடகையெல்லாம் தர முடியாது. 270 00:17:26,421 --> 00:17:30,175 விவாகரத்து என்னை மொத்தமா காலி பண்ணிடுச்சு, ஆனா என்னால சமைக்க, வீட்டை சுத்தமா வச்சுக்க முடியும். 271 00:17:31,760 --> 00:17:35,681 அப்புறம் உன்கூட நேரம் செலவு பண்ணலாம் என்ற அந்த எண்ணம். நாம இழந்த அந்த காலத்தை. 272 00:17:41,436 --> 00:17:42,938 சரி. எனக்கான பதில் கிடைச்சிருச்சுன்னு நினைக்கிறேன். 273 00:17:43,021 --> 00:17:44,147 அது அப்படி இல்ல… 274 00:17:45,816 --> 00:17:51,655 இல்ல, எங்களுக்கு ஒரு ரூம்மேட் தேவைதான், அப்புறம் உங்ககூட நேரத்தை செலவு பண்றது நல்லாதான் இருக்கும். 275 00:17:52,948 --> 00:17:53,949 ஆனா? 276 00:17:55,534 --> 00:17:57,870 போதைக்கு அடிமையானவங்களோட நிலைமை எனக்குத் தெரியும். 277 00:17:58,912 --> 00:18:02,749 இங்க தங்குறதா இருந்தா, நீங்க போதை பழக்கம் இல்லாம இருக்கணும்… 278 00:18:04,918 --> 00:18:07,462 நீங்க போதி கூட இருக்குறதா இருந்தா இது ரொம்ப முக்கியம். 279 00:18:08,922 --> 00:18:12,509 மார்கோ… இப்போ எனக்கு அந்த பழக்கம் இல்ல. 280 00:18:14,011 --> 00:18:17,472 நானாதான் போயி மறு வாழ்வு மையத்துல சேர்ந்தேன். 281 00:18:18,932 --> 00:18:22,436 ஏன் என் கிட்ட கேக்குறீங்க? ஆன்ட்ரியா கிட்டயோ இல்ல மத்த பசங்க கிட்டயோ கேட்கலாமே? 282 00:18:22,519 --> 00:18:25,522 அதாவது, அவங்களோட இன்ஸ்டாகிராம் பாத்தேன். அவங்க வசதியாத்தான் இருக்காங்க. 283 00:18:25,606 --> 00:18:28,233 அந்தப் பழைய உறவுகள் கொடுக்கிற அழுத்தம் என்னைத் திரும்பவும் அந்தப் பழக்கத்துக்குத் 284 00:18:28,317 --> 00:18:29,902 தள்ளிடும்னு என் தெரபிஸ்ட் நினைக்கிறாரு. 285 00:18:31,320 --> 00:18:33,363 அப்புறம் தனியா ஒரு இடம் பாக்குறது? 286 00:18:33,447 --> 00:18:35,741 கண்டிப்பா நான் திரும்பவும் பழைய நிலைமைக்குப் போயிடுவேன். 287 00:18:35,824 --> 00:18:38,744 ஏன்னா, நான் ஒழுங்கா இருக்கேன்னு காட்டுறதுக்கு அங்கே யாருமே இருக்க மாட்டாங்க. 288 00:18:43,498 --> 00:18:45,334 நீங்க ரெண்டு பேரும் முடிவெடுங்க. 289 00:18:46,835 --> 00:18:48,086 எனக்கு எதுவா இருந்தாலும் சம்மதம்தான். 290 00:19:03,143 --> 00:19:04,520 நிலைமை எவ்வளவு மோசமா இருந்துச்சு? 291 00:19:07,523 --> 00:19:11,401 இந்தச் சில வருஷங்கள்ல என் முதுகுத் தண்டுல பல அறுவை சிகிச்சைகள் நடந்திருக்கு. 292 00:19:12,694 --> 00:19:16,782 வலி மாத்திரைகளைச் சாப்பிடாம இருக்குறதுக்கு வாய்ப்பே இல்ல. 293 00:19:16,865 --> 00:19:19,451 டாக்டர் சொன்ன மாதிரி மட்டும் சாப்பிடுறதும் ஒரு வழியா தெரியல. 294 00:19:20,577 --> 00:19:24,122 அதைச் சேர்த்து வைக்கிறது, அதிகமா பயன்படுத்துறது, ஒரே நேரத்துல நிறையச் சாப்பிடுறதுன்னு ஆயிடுச்சு. 295 00:19:27,459 --> 00:19:28,710 அப்புறம் அது ஹெராயின்-ல கொண்டு போய் விட்டுடுச்சு. 296 00:19:33,966 --> 00:19:35,300 ஆனா நான் ரொம்ப உறுதியா இருக்கேன்… 297 00:19:37,177 --> 00:19:40,806 திரும்பவும் அந்த நிலைக்குப் போகக்கூடாதுன்னு… ரொம்ப பிடிவாதமா இருக்கேன். 298 00:19:46,353 --> 00:19:47,855 எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்னு உங்களுக்கே தெரியும். 299 00:19:51,316 --> 00:19:52,734 அது உங்களுக்குத் தெரியுமா, அப்பா? 300 00:20:09,918 --> 00:20:11,211 நீங்க இங்கேயே தங்கலாம். 301 00:20:16,133 --> 00:20:19,553 கொஞ்சம் நேரம் எடுத்துக்கோ. நீயும் சூசியும் இதைப் பத்தி நிதானமா யோசிங்க. 302 00:20:20,512 --> 00:20:22,264 நீங்க இங்க இருக்கணும்னு நான் ஆசைப்படுறேன். 303 00:20:32,566 --> 00:20:37,863 மொத்த வாழ்வையும் எடுத்துக்கோ 304 00:20:38,614 --> 00:20:43,410 ஏனெனில், என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை 305 00:20:43,493 --> 00:20:49,791 உன் மீது காதல் வயப்படுகிறேன் 306 00:20:50,751 --> 00:20:54,087 பாயும் ஆறு மாதிரி 307 00:20:54,171 --> 00:20:56,882 அமைதியாக கடலை நோக்கி 308 00:20:56,965 --> 00:20:59,760 அன்பே, இது அப்படித்தான் 309 00:20:59,843 --> 00:21:04,181 நம் காதல் மன ரீதியானது 310 00:21:04,264 --> 00:21:05,641 சரி, நிறுத்துங்க. 311 00:21:07,392 --> 00:21:08,519 "மென்ட் டூ பி." 312 00:21:10,479 --> 00:21:12,898 - என்ன சொன்னீங்க? - "நம்ம காதல் அமையணும்னு விதிச்சிருக்கு." 313 00:21:12,981 --> 00:21:15,234 நீ "நம்ம காதல் மன ரீதியானது"னு பாடுற. 314 00:21:17,903 --> 00:21:18,904 சரி. 315 00:21:19,613 --> 00:21:21,365 அப்புறம், நீ கொஞ்சம் ஸ்ருதி விலகிப் பாடுற. 316 00:21:23,617 --> 00:21:24,868 என்ன சொன்னீங்க? 317 00:21:24,952 --> 00:21:30,082 அடக் கடவுளே. ஷயான், அது எல்விஸ் ப்ரெஸ்லியோட பாட்டு. 318 00:21:31,625 --> 00:21:33,293 நாம ஏன் பீட்டில்ஸோட பாட்டு ஏதாவது பாடக்கூடாது? 319 00:21:33,877 --> 00:21:38,549 ஏன்னா நாம எல்விஸ் ப்ரெஸ்லி தேவாலயத்துல தான் கல்யாணம் பண்ணிக்கப் போறோம். 320 00:21:39,299 --> 00:21:42,135 அப்புறம் எனக்கு எல்விஸை எவ்ளோ பிடிக்கும்னு உனக்கே தெரியும். 321 00:21:42,219 --> 00:21:44,471 அது காதலைப் போற்றிப் பாடுற பாட்டு கூட கிடையாது. 322 00:21:45,180 --> 00:21:46,181 "முட்டாள்கள் அவசரப்படுவார்கள்." 323 00:21:46,265 --> 00:21:48,642 - நாம முட்டாள்தனமா நடந்துக்குறோம்னு தோணுதா? - இல்ல. 324 00:21:49,810 --> 00:21:53,397 அந்தப் பாட்டு காதலோட வலிமையைப் பத்தினது. 325 00:21:53,480 --> 00:21:56,900 அந்தக் காதலுக்கு முன்னாடி நாம ஒண்ணும் பண்ண முடியாம நிற்பது பத்தினது. 326 00:21:56,984 --> 00:22:00,195 உன்கூட இருக்குறப்போ எனக்கு அப்படித்தான் தோணுது. 327 00:22:00,946 --> 00:22:06,034 எனக்குள்ள உன் மேல இருக்குற இந்தத் தணியாத காதலுக்கு முன், நான் ஒண்ணும் இல்லாம போயிடுறேன். 328 00:22:07,327 --> 00:22:08,954 ஒருவேளை நாம "பர்னிங் லவ்" பாடலைப் பாடலாம். 329 00:22:10,914 --> 00:22:11,915 சரி, சரி. 330 00:22:11,999 --> 00:22:14,501 ஹே. நாம ஒரு பொதுவான முடிவுக்கு வரலாம். 331 00:22:15,210 --> 00:22:18,839 பீட்டில்ஸ் "லெட் இட் பி"னு ஒரு குட்டிப் பாட்டு பாடியிருக்காங்க. 332 00:22:20,924 --> 00:22:22,926 ஒருவேளை நாம எல்விஸ் ப்ரெஸ்லியோட "லெட் இட் பி மீ" பாடலாம். 333 00:22:26,096 --> 00:22:27,681 வந்து, அது இனிமையா இருக்கும்னு நினைக்கிறேன். 334 00:22:27,764 --> 00:22:28,807 அட என்ன? 335 00:22:28,891 --> 00:22:29,892 ஆமா. 336 00:22:29,975 --> 00:22:31,727 அதாவது, கென்னிக்கு எதிரா எதுவும் இல்ல, 337 00:22:31,810 --> 00:22:34,396 ஆனா அவருக்கு இந்த மாதிரி தருணங்கள் அதிகமா கிடைச்சிருக்காது, 338 00:22:34,479 --> 00:22:36,982 அதனால தான் இதை அவர் நல்லா பயன்படுத்திக்கப் பாக்குறாரு போல. 339 00:22:37,649 --> 00:22:38,817 அதைச் சொன்னதும் தான் தோணுது. 340 00:22:38,901 --> 00:22:41,403 கடவுளே, எல்லாமே தாய்ப்பால் கொடுக்குறதைப் பத்தினது தானா? 341 00:22:41,486 --> 00:22:44,489 பால் கொடுத்து முடிச்சதும் நான் உங்களுக்கு ஃபோன் பண்ணுறேன். 342 00:22:46,325 --> 00:22:47,409 முடிச்சுட்டியா? 343 00:22:59,588 --> 00:23:01,089 சரி. 344 00:23:27,783 --> 00:23:29,868 கடவுளே. 345 00:23:40,295 --> 00:23:41,922 இதப் பாக்குறதுக்கே மக்கள் காசு கொடுப்பாங்க. 346 00:23:55,269 --> 00:23:57,020 ஒன்லிஃபேன்ஸ்.காம் 347 00:23:57,104 --> 00:24:00,274 உங்களுக்குப் பிடித்த படைப்பாளர்களுக்கு ஆதரவளிக்கப் பதிவு செய்யுங்கள் 348 00:24:03,026 --> 00:24:04,027 புரொஃபைல் பெயர். 349 00:24:04,111 --> 00:24:05,112 உங்கள் புரொஃபைலை உருவாக்குங்கள் 350 00:24:09,575 --> 00:24:12,202 பூப்ஸ் மெக்கீ 351 00:24:17,499 --> 00:24:19,877 கேபேஜ் பேட்ச் டிட்ஸ் 352 00:24:30,345 --> 00:24:33,432 தி ஹங்ரி கோஸ்ட் 353 00:24:37,352 --> 00:24:39,646 ஹங்ரிகோஸ்ட் 354 00:24:46,153 --> 00:24:47,821 பெத்தானி பேக்ஸ் 355 00:24:47,905 --> 00:24:49,323 மரியல்99 என்னோடு சேர்ந்து இத்தாலியன் கற்றுக்கொள்ளுங்கள்! 356 00:24:49,406 --> 00:24:50,991 ஜென் ஏடிவி ஓட்டுகிறாள் 357 00:24:52,618 --> 00:24:54,286 ஃபூட்டீஸ் பொம்மை ஆட்டம் 358 00:24:58,207 --> 00:24:59,499 புதன்கிழமைகள் என்னை மோக மூட்டும் 359 00:25:03,378 --> 00:25:05,380 நாம ஹாலோவீனுக்கு என்ன பண்ணப் போறோம்? 360 00:25:07,049 --> 00:25:08,425 குக்கீஸும் பாலும். 361 00:25:09,801 --> 00:25:11,386 பீனட் பட்டர் ஜெல்லி டைம் 362 00:25:11,470 --> 00:25:13,138 பீனட் பட்டர் ஜெல்லி டைம் 363 00:25:13,222 --> 00:25:14,431 பீனட் பட்டர் ஜெல்லி பீனட் பட்டர் ஜெல்லி 364 00:25:14,515 --> 00:25:15,891 பீனட் பட்டர் ஜெல்லி பாப் இட் 365 00:25:15,974 --> 00:25:17,809 - பீனட் பட்டர் ஜெல்லி, பீனட் பட்டர்… - இரு. 366 00:25:19,186 --> 00:25:20,229 வேங்மேங்லர் 367 00:25:20,312 --> 00:25:23,815 எனக்கு 50 டாலர் டிப்ஸ் கொடுங்கள் நான் உங்கள் ஆணுறுப்பை அவமதிப்பேன். 368 00:25:28,153 --> 00:25:30,405 அதுவே ஒரு முழு பாக்கெட் ஹக்கீஸ் விலைக்குச் சமம். 369 00:25:47,047 --> 00:25:49,258 ஒருவேளை யாராவது அம்மா கூட உறவு வச்சுக்க விரும்பலாம். 370 00:25:51,760 --> 00:25:53,428 ஒரு பொண்ணு இருக்கா, அவளோட வேலையே 371 00:25:53,512 --> 00:25:57,683 அவளோட கிளைன்ட்ஸ் அனுப்புற ஆணுறுப்போட ஃபோட்டோக்களை வாங்கி அவற்றை அவமதிப்பதுதான். 372 00:25:58,267 --> 00:26:01,812 அதாவது, எதுக்காக ஆண்கள் 50 டாலர் கொடுத்து தங்களோட ஆணுறுப்பை கேவலப்படுத்திக்கணும்? 373 00:26:02,396 --> 00:26:05,566 வந்து, ஆணுறுப்பை வெறுக்குறதே ஒரு தனி கலாச்சாரம் தான். 374 00:26:05,649 --> 00:26:08,068 அது பாக்குறதுக்கு எப்படி இருக்கு என்பதோ இல்ல அதோட செயல்பாடோ மட்டும் இல்லாம, 375 00:26:08,151 --> 00:26:11,905 இந்த "மீ டூ" இயக்கத்துக்கு அப்புறம் அது ஒழுக்கமா பயன்படுத்தப்பட்டிருக்கான்றதையும் பாக்குறாங்க. 376 00:26:14,199 --> 00:26:15,534 ஒருவேளை நானும் அதைத்தான் செய்யணுமோ என்னவோ. 377 00:26:16,577 --> 00:26:19,329 நான் என் எழுத்துத் திறமையை வச்சு, இதப் பத்தி ஒரு ஆக்கப்பூர்வமான, 378 00:26:19,413 --> 00:26:22,624 ஒரு பொழுதுபோக்கு ரீதியான ஆய்வை பண்ணுவேன். 379 00:26:22,708 --> 00:26:24,543 எல்லாருக்கும் இனிய காலை வணக்கம். 380 00:26:24,626 --> 00:26:27,129 நீங்க 35 நிமிஷமா பாத்ரூம்க்குள்ளயே இருந்தீங்க. 381 00:26:27,212 --> 00:26:29,047 இது ஏதாவது மருத்துவப் பிரச்சனையா இருந்தா, பரவாயில்ல. ஆனா… 382 00:26:30,215 --> 00:26:32,217 இது உங்க ப்ராஸ்டேட் பிரச்சனையா? 383 00:26:32,301 --> 00:26:35,137 என் ப்ராஸ்டேட் நல்லாதான் இருக்கு. உன் அக்கறைக்கு நன்றி. 384 00:26:35,220 --> 00:26:39,474 நான் தியானம் பண்றேன். எனக்கு வசதியா உட்காருறதுக்கு ஒரு சின்ன இடம் தேவைப்படுது. 385 00:26:39,558 --> 00:26:41,935 எனக்கு… சில சத்தங்கள் கேட்டுச்சு. 386 00:26:42,019 --> 00:26:44,021 அது நான் மந்திரம் சொல்லும் சத்தமா இருக்கும். 387 00:26:44,104 --> 00:26:47,357 அடக் கடவுளே. என் ஃபிட்டிங்கிற்கு தாமதம் ஆயிடும் போலயே. 388 00:26:48,650 --> 00:26:50,485 அப்பா, நீங்க போதியை பாத்துக்க முடியுமா? 389 00:26:50,569 --> 00:26:52,446 - நான் அவனைப் பாத்துக்கிறேன். - இல்ல, வேணாம். நான் அவனைக் கூட்டிட்டுப் போறேன். 390 00:26:52,529 --> 00:26:55,490 வேணாம். மார்கோ, மார்கோ, நான் பாத்துக்கிறேன். நான் பாத்துக்கிறேன். 391 00:27:03,457 --> 00:27:04,458 பத்திரமா பார்த்துக்கிறேன். 392 00:27:06,293 --> 00:27:08,629 அங்கே வேறு வாழ்க்கை இருக்கா? 393 00:27:08,712 --> 00:27:11,131 அவள் செய்யாத விஷயங்கள் நிறைய உண்டு 394 00:27:11,215 --> 00:27:16,220 அவள் குடும்பம் அப்புறம் வீட்டைத் தாண்டி வேறு வாழ்க்கை இருக்கிறதா? 395 00:27:16,303 --> 00:27:18,305 அவள் செய்ய வேண்டியதை செய்துவிட்டாள் 396 00:27:18,388 --> 00:27:21,266 அவள் துணிந்து எதையாவது செய்ய வேண்டுமா? 397 00:27:21,350 --> 00:27:23,435 அவள் புறப்பட விரும்பவில்லை 398 00:27:23,519 --> 00:27:30,359 அங்கே வேறு வாழ்க்கை இருக்கிறதா என்று அவள் யோசிக்கிறாள் 399 00:27:36,782 --> 00:27:37,783 நன்றி. 400 00:27:38,700 --> 00:27:40,786 ரெண்டு பேரும் ரொம்ப அழகா இருக்கீங்க. 401 00:27:40,869 --> 00:27:42,996 ரொம்ப அழகான மணப்பெண் அப்புறம் மணப்பெண் தோழி. 402 00:27:43,080 --> 00:27:45,165 அம்மாவும் மகளும். அடக் கடவுளே. 403 00:27:45,249 --> 00:27:46,500 நான் இதோ வந்துடுறேன். 404 00:27:54,049 --> 00:27:56,385 ஆமா. நல்லது. ஆமா. 405 00:27:57,052 --> 00:28:00,639 டிரஸ் பிரமாதமா இருக்கு, அம்மா. பார்க்க ரொம்ப அழகா இருக்கீங்க. 406 00:28:01,348 --> 00:28:02,766 எனக்கும் அப்படித்தான் தோணுது. 407 00:28:03,684 --> 00:28:06,687 - நீயும் பார்க்க ரொம்ப அழகா இருக்க. - நன்றி. 408 00:28:10,065 --> 00:28:13,235 என்னை மணப்பெண் தோழியா ஆக்குனது எனக்கு ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு. 409 00:28:15,654 --> 00:28:17,447 வேற யாரும் இல்ல, அதான்… 410 00:28:18,699 --> 00:28:20,701 நீங்க இதை விட இன்னும் கொஞ்சம் நல்ல விதமா சொல்லலாம்னு 411 00:28:20,784 --> 00:28:21,952 உங்களுக்குத் தோணலையா? 412 00:28:22,035 --> 00:28:26,665 அதாவது, "உன்னைத் தவிர வேற யாரையும் யோசிக்க முடியல, செல்லம். 413 00:28:26,748 --> 00:28:30,419 நான் உன்னை நேசிக்கிற அளவுக்கு வேற யாரையும் நேசிக்கல" அப்படி சொல்லலாம்ல. 414 00:28:30,502 --> 00:28:32,004 சரி, அப்படியே வச்சுக்கலாம். 415 00:28:40,220 --> 00:28:42,723 நீங்க அதைச் சொன்னப்போ அப்பாவோட முகத்தைப் பாத்தீங்களா? 416 00:28:43,515 --> 00:28:44,600 இல்ல. 417 00:28:44,683 --> 00:28:46,018 இல்ல, பாத்தீங்க. 418 00:28:46,101 --> 00:28:48,520 அவரோட மனசு உடையுறத நீங்க கவனிச்சத நான் பார்த்தேன். 419 00:28:48,604 --> 00:28:53,525 எப்பவாவது நீங்க ரெண்டு பேரும் திரும்ப சேர்ந்துடுவீங்கன்னு உங்களுக்குத் தோணியிருக்கா? 420 00:28:55,569 --> 00:28:59,072 நான் ஒருத்தருக்கு வாக்குக் கொடுத்துட்டேன். எனக்கு கென்னி கூட நிச்சயம் ஆகியிருக்கு. 421 00:29:02,910 --> 00:29:05,329 அவர் எங்க கூடத்தான் தங்கப் போறாரு. அப்பா. 422 00:29:07,247 --> 00:29:08,248 என்ன சொன்ன? 423 00:29:09,833 --> 00:29:12,169 அவருக்குத் தங்குறதுக்கு ஒரு இடம் தேவை, எனக்கு ஒரு ரூம்மேட் தேவை, அதனால… 424 00:29:14,796 --> 00:29:15,797 கொஞ்சம் பொறு. இரு. 425 00:29:15,881 --> 00:29:18,967 ஜின்க்ஸ் உன்னோட விட்டுல தங்கப் போறாரா? 426 00:29:19,051 --> 00:29:20,969 - அது கொஞ்சம் ஆபத்துதான். தெரியும். - இல்ல, அது ஆபத்து மட்டும் இல்ல. 427 00:29:21,053 --> 00:29:23,263 - பைத்தியக்காரத்தனம். உனக்கு புத்தி கெட்டுப்போச்சா? - அம்மா. 428 00:29:23,347 --> 00:29:24,473 உனக்கு ஒரு குழந்தை இருக்கு. 429 00:29:24,556 --> 00:29:27,059 ஆமா. குழந்தையைப் பாத்துக்க அவரும் உதவி பண்ணுவாரு. 430 00:29:27,142 --> 00:29:28,894 எனக்கு வேலை போயிடுச்சு. ஞாபகம் இருக்கா? 431 00:29:28,977 --> 00:29:30,979 அப்புறம் டே கேர்ல ஆறு மாசம் வெயிட்டிங் லிஸ்ட் இருக்கு. 432 00:29:31,063 --> 00:29:32,231 அடக் கடவுளே. 433 00:29:32,898 --> 00:29:34,066 ஏதும் பிரச்சனை இல்லயே? 434 00:29:34,149 --> 00:29:35,317 எங்களை கொஞ்சம் தனியா விடுங்க. 435 00:29:36,068 --> 00:29:37,569 நீ என்ன நினைச்சிட்டு இருக்க? 436 00:29:38,403 --> 00:29:40,572 அவர் போதிக்கு ஒரு நல்ல முன்னுதாரணமா இருக்க மாட்டாரு. 437 00:29:40,656 --> 00:29:42,991 அவர் எனக்கு ஒரு கெட்ட முன்னுதாரணமா இருந்தாரா? 438 00:29:43,075 --> 00:29:45,744 அவர் நம்ம கூட ரொம்ப காலம் இல்லையே. 439 00:29:45,827 --> 00:29:47,663 ஏன் இவ்வளவு கோபப்படுறீங்க? 440 00:29:47,746 --> 00:29:50,457 நீ இந்த வழக்கத்திலிருந்து வெளிய வரணும். 441 00:29:50,541 --> 00:29:51,583 எந்த வழக்கம்? 442 00:29:51,667 --> 00:29:54,586 விளைவுகளைப் பத்தி யோசிக்காம… 443 00:29:54,670 --> 00:29:56,922 எதையாவது செய்யுற இந்த வழக்கம். 444 00:29:57,005 --> 00:29:59,424 அப்படின்னா என்ன? நான் கர்ப்பமானது பத்தி சொல்றீங்களா? 445 00:29:59,508 --> 00:30:03,428 ஆமா. காலேஜ்ல சேர்ந்த புதுசுலயே இலக்கிய ப்ரொஃபஸரால கர்ப்பமானது பத்திதான். 446 00:30:03,512 --> 00:30:05,597 - நான் அதப் பத்தித்தான் சொல்றேன். - எக்கேடோ போங்க. 447 00:30:07,140 --> 00:30:09,059 - நீ என்ன சொன்ன? - "எக்கேடோ போங்க"னு சொன்னேன். 448 00:30:09,142 --> 00:30:12,229 நான் உன் அம்மா! அவர் உனக்கு ஒருபோதும் அப்பாவா இருந்தது இல்ல. 449 00:30:12,312 --> 00:30:14,982 ஆனா நீ அவர்கிட்ட போய் "எக்கேடோ போங்க"னு சொல்ல மாட்ட, இல்லயா? 450 00:30:15,065 --> 00:30:18,861 இல்ல, நீ, "ஓ, இங்க வந்து தங்குங்க, அப்பா. என் நெட்ஃபிக்ஸ் பாஸ்வேர்டைப் பகிர்ந்துக்கோங்க"னு சொல்லுவ. 451 00:30:18,944 --> 00:30:23,156 ஒரு ஒற்றை அம்மாவா இருக்குறது எவ்வளவு கஷ்டம்னு உனக்குத் தெரியுமா? 452 00:30:23,240 --> 00:30:24,449 ஆமா. எனக்குத் தெரியும். 453 00:30:24,533 --> 00:30:25,701 ஓரளவுக்குத்தான் தெரியும். 454 00:30:25,784 --> 00:30:28,829 ஏன்னா நான் சத்தியமா சொல்றேன், இது போகப் போக இன்னும் கஷ்டமாகும். 455 00:30:28,912 --> 00:30:32,332 நான் பிறந்ததைக் கூட தப்புன்னு சொல்லி உங்ககிட்ட மன்னிப்பு கேட்கணும்னு நினைக்குறீங்க போல. 456 00:30:33,750 --> 00:30:35,252 அப்படியே அவரை மாதிரியே பேசுற. 457 00:30:36,003 --> 00:30:42,009 ஆறு மாசத்துக்கு ஒரு தடவை வருவாரு, உன்கிட்ட ஒரு பொம்மையக் கொடுத்துட்டு ஹீரோ மாதிரி போயிடுவாரு. 458 00:30:43,886 --> 00:30:48,640 "அம்மா, நாங்க திரும்ப 459 00:30:48,724 --> 00:30:51,977 உங்க கூடவே வந்து தங்கிக்கட்டுமா?"னு ஒரு நிமிஷம் கூட நீ யோசிக்கலயா? 460 00:30:52,477 --> 00:30:53,604 என்னது? 461 00:30:54,438 --> 00:30:57,816 உங்க துணிகள், செருப்புகள், அப்புறம் உங்களோட சீரம்ஸ்-னு, 462 00:30:57,900 --> 00:31:00,527 உங்க வீடு முழுக்க அதையெல்லாம் தான் வச்சிருக்கீங்க. 463 00:31:00,611 --> 00:31:03,488 அதனால, அங்க ஒரு தொட்டில் வைக்குறதுக்குக் கூட இடம் இருக்கும்னு எனக்குத் தோணல. 464 00:31:03,572 --> 00:31:05,324 அதுக்காக நீ கேட்காம இருக்கக் கூடாது! 465 00:31:13,999 --> 00:31:15,834 அடக் கடவுளே! 466 00:31:23,050 --> 00:31:24,635 உங்களுக்குன்னு ஒரு செஸ்ட் பேக் வச்சிருக்கீங்க. 467 00:31:24,718 --> 00:31:26,470 ஓ, ஆமா. அது என் முதுகு வலிக்கு கொஞ்சம் நல்லா இருக்கும். 468 00:31:26,553 --> 00:31:28,555 அது L5 தண்டுவடத்துல அதிக அழுத்தம் கொடுக்காது. 469 00:31:29,723 --> 00:31:30,724 பெக்கா தான் கூப்பிடுறா. 470 00:31:31,475 --> 00:31:32,476 ஹே, செல்லம். 471 00:31:32,559 --> 00:31:33,894 ஹாய், செல்லம். 472 00:31:33,977 --> 00:31:35,562 ஒரே வாரத்துல ரெண்டு தடவை. 473 00:31:35,646 --> 00:31:37,856 ஆமா, நான் யோசிச்சிட்டு இருந்தேன்… 474 00:31:39,900 --> 00:31:41,527 காலேஜ்ல இருந்தா அப்படித்தான் தோணும். 475 00:31:41,610 --> 00:31:42,611 என்ன நடக்குது? 476 00:31:42,694 --> 00:31:45,447 ஜின்க்ஸ் இங்க வந்து தங்குறதுல எனக்கு ஒரு தயக்கம் இருக்கு. 477 00:31:46,448 --> 00:31:48,283 இது ஒரு விசித்திரமான முடிவுதான், எனக்குத் தெரியும். 478 00:31:49,451 --> 00:31:52,120 ஒருவேளை அவர் உங்க அம்மாவ பைத்தியமாக்கிட்டார் போல. 479 00:31:53,121 --> 00:31:56,166 குழந்தைய நல்லா பாத்துக்கிறார், அப்புறம் பாத்ரூமையும் சுத்தம் பண்றார், அதனால… 480 00:31:56,708 --> 00:31:58,377 - சரி. - ஒரு டூத்-பிரஷ் வச்சு. 481 00:31:59,461 --> 00:32:01,380 மார்கோ, இது ரொம்ப ஓவர். 482 00:32:01,463 --> 00:32:03,757 அது… அது நிஜமாவே ரொம்ப ஓவர் தான். 483 00:32:05,384 --> 00:32:06,385 ரெண்டு நொடிதான். 484 00:32:06,468 --> 00:32:10,556 நான் ஒரு அதிரடியான யோசனை சொல்லட்டுமா? ப்ளீஸ், அதனால என்னை வெறுக்காத. 485 00:32:10,639 --> 00:32:11,890 என்ன? 486 00:32:12,641 --> 00:32:15,561 உன்னோட அந்த ப்ரொஃபஸர் ஒரு விஷயத்துல சரியாத்தான் சொல்லியிருக்காரு. 487 00:32:16,061 --> 00:32:18,063 உன்னால எழுத முடியும். உனக்கு ஒரு எதிர்காலம் இருக்கு. 488 00:32:19,523 --> 00:32:20,858 இது ஒண்ணும் யோசனை இல்ல. 489 00:32:21,733 --> 00:32:23,402 நீ யுனிவர்சிட்டில இருக்கணும். 490 00:32:24,027 --> 00:32:25,279 ஆமா, அதெல்லாம் நடக்குற மாதிரியா இருக்கு. 491 00:32:25,362 --> 00:32:28,782 அது நடக்க வாய்ப்பிருக்கு. அதுதான் இப்போ நான் சொல்லப்போற அந்த அதிரடியான விஷயம். 492 00:32:28,866 --> 00:32:32,619 ஃபாஸ்டர் கேர். உன்னோட வாழ்க்கையை நீயே சரி பண்ணிக்கிற வரைக்கும் இது தற்காலிகமானது. 493 00:32:32,703 --> 00:32:34,872 நீ போதியை ஒரு அன்பான ஃபாஸ்டர் ஃபேமிலிகிட்ட கொடுத்துடு, 494 00:32:34,955 --> 00:32:36,206 அதுவும் பக்கத்துலயே இருக்குற ஒரு குடும்பத்துகிட்ட… 495 00:32:36,290 --> 00:32:37,958 உனக்கு என்ன புத்தி கெட்டுப் போச்சா? 496 00:32:38,041 --> 00:32:40,586 அப்போ நீ அவனைத் தினமும் பாக்கலாமே. 497 00:32:42,171 --> 00:32:44,256 நீ எப்படி இப்படி ஒரு யோசனையைச் சொல்லலாம்? 498 00:32:45,215 --> 00:32:47,426 போதிக்குத் தன் வாழ்க்கையைச் சரியா கொண்டு போற ஒரு அம்மா தேவை. 499 00:32:47,509 --> 00:32:49,344 ஆமா, நான் என் வாழ்க்கையைச் சரியாத்தான் கொண்டு போயிட்டு இருக்கேன். 500 00:32:49,887 --> 00:32:51,221 நீ கோபப்படத் தேவையில்ல. 501 00:32:51,305 --> 00:32:52,472 ஆனா எனக்குக் கோபமா வருது. 502 00:32:52,556 --> 00:32:56,059 அதாவது, எந்த மாதிரியான ஆளு தன்னோட குழந்தையை சும்மா ஒரு ஃபாஸ்டர் கேர்ல கொண்டு போய் விடுவாங்க? 503 00:32:56,143 --> 00:32:59,980 என் மேல ரொம்ப கோபப்படாத. நீயும் இன்னொருத்தியோட புருஷன் கூடதானே பழகின. 504 00:33:13,327 --> 00:33:16,580 எனக்கும் என் சில நண்பர்களை கழிவறையில தூக்கி எறிஞ்ச அனுபவம் இருக்குன்னு சொல்லலாம். 505 00:33:17,289 --> 00:33:18,665 இது வீணாயிடுச்சா? 506 00:33:18,749 --> 00:33:20,667 இல்ல. இதெல்லாம் அவ்வளவு சீக்கிரம் வீணாகாது. 507 00:33:20,751 --> 00:33:22,794 உன் டாய்லெட்டுக்கு வாய் சின்னதா இருக்குறது ஒரு விதத்துல நல்லதுதான். 508 00:33:33,263 --> 00:33:35,098 மன்னிப்பு கேட்கலாம்னு வந்தேன். 509 00:33:36,099 --> 00:33:40,437 நான் உன்கிட்ட அப்படி கோபப்பட்டிருக்கக் கூடாது. 510 00:33:45,567 --> 00:33:46,568 ஆனா உங்ககிட்ட. 511 00:33:47,569 --> 00:33:49,488 கொஞ்சம் எங்களை தனியா விடுறியா? 512 00:33:49,571 --> 00:33:51,490 என்னது? இது என் வீடு. 513 00:33:51,573 --> 00:33:54,576 உங்க அப்பாக்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும். சரியா? 514 00:34:07,464 --> 00:34:09,299 இது ஒரு தப்பு. 515 00:34:09,382 --> 00:34:11,217 இது சரி இல்ல. 516 00:34:12,261 --> 00:34:14,137 நீ அப்படி நினைக்கிறது வருத்தமா இருக்கு. 517 00:34:22,020 --> 00:34:25,607 நீங்க எப்படி இவ்வளவு சுயநலவாதியா இருக்கீங்க? 518 00:34:28,193 --> 00:34:31,196 நீங்க எங்களை விட்டுட்டு போனப்ப, அவளோட முக்கால் வாசி வாழ்க்கைய அழிச்சுட்டீங்க. 519 00:34:32,656 --> 00:34:33,824 இப்போ என்ன? 520 00:34:34,574 --> 00:34:38,161 மிச்ச கால்வாசியையும் முடிக்கத் திரும்ப வந்துட்டீங்களா? 521 00:34:38,245 --> 00:34:41,456 நான் பார்த்த வரைக்கும், நம்ம மகள் ஒண்ணும் அழிஞ்சு போயிடல. 522 00:34:41,540 --> 00:34:44,376 ஆமா, ஏன்னா நான் அவளை அப்படிப் பார்த்துக்கிட்டேன். 523 00:34:45,293 --> 00:34:47,795 இனி மேலும் நான் பார்த்துப்பேன். 524 00:34:50,424 --> 00:34:53,927 மார்கோ இன்னும் சின்னப் பொண்ணுதான். ஆனா அவளுக்கே ஒரு குழந்தை இருக்கு. 525 00:34:54,011 --> 00:34:57,347 இப்போ உங்க ரூபத்துல அவளுக்கு இன்னொரு குழந்தையைத் தாங்குற அவசியம் இல்ல. 526 00:34:57,431 --> 00:35:00,017 அம்மா, நீங்க பேசினது போதும்னு நினைக்கிறேன். 527 00:35:00,851 --> 00:35:04,605 நீ ஒரு நூலிழைலதான் தொங்கிட்டு இருக்க. 528 00:35:04,688 --> 00:35:08,567 உன்னைக் குறை சொல்லல, ஆனா கொஞ்சம் காசு, 529 00:35:08,650 --> 00:35:11,653 ஒத்தாசைக்கு ஆள் இல்லாம ஒரு ஒற்றை அம்மாவா இருக்குற நிஜம் அப்படி. ஒரு நூலிழைதான். 530 00:35:12,404 --> 00:35:14,865 நான் அந்த நிலைமையைக் கடந்து வந்திருக்கேன். ஆனா அவர் அப்படி இல்ல. 531 00:35:14,948 --> 00:35:16,825 இப்போ இவர் இங்க இருக்குறது… 532 00:35:16,909 --> 00:35:18,327 நீங்க பேசினது போதும். 533 00:35:23,624 --> 00:35:24,625 ஆஹா! 534 00:35:30,297 --> 00:35:31,632 பை-பை, அப்பா. 535 00:35:43,101 --> 00:35:44,353 மன்னிச்சிடுங்க. 536 00:35:45,938 --> 00:35:47,105 அது ரொம்ப அநியாயம். 537 00:35:48,440 --> 00:35:49,775 இல்லை, அப்படியெல்லாம் இல்ல. 538 00:35:50,275 --> 00:35:53,529 நீ என்மேல வெச்சிருக்கற அந்த நம்பிக்கைக்குத் தகுதியானவனா 539 00:35:53,612 --> 00:35:55,197 நான் இப்போ இல்ல. 540 00:35:55,989 --> 00:35:57,908 ஆனா, அந்தத் தகுதியை நான் சம்பாதிப்பேன். 541 00:35:57,991 --> 00:36:03,080 நீயும் என் பேரனும் பெருமைப்படுற அளவுக்கு ஒரு மனுஷனா நான் மாறுவேன். 542 00:36:03,747 --> 00:36:04,748 ஆமா. 543 00:36:07,376 --> 00:36:10,045 நீங்க இப்போ கிளம்புறதுதான் சரியா இருக்கும்னு தோணுது, அப்பா. 544 00:36:13,924 --> 00:36:15,175 ஆனா, ப்ளீஸ் போயிடாதீங்க. 545 00:36:34,945 --> 00:36:37,823 பையோ காலடி எடுத்து வைத்துவிட்டேன். 546 00:36:39,825 --> 00:36:42,828 தனிமையில தவிக்குற, பண நெருக்கடியில இருக்க ஒரு பொண்ணு. 547 00:36:44,621 --> 00:36:46,623 நான் ஆணுறுப்புகளை ரேட்டிங்கும் பண்ணுவேன். 548 00:36:48,166 --> 00:36:51,253 உங்களோடது எந்த போகிமான் மாதிரி இருக்கு, அதுக்கு என்ன மாதிரியான 549 00:36:51,336 --> 00:36:55,340 அட்டாக்ஸ் இருக்கும்னு தெரிஞ்சுக்கணும்னா எனக்கு 20 டாலர் டிப்ஸ் அணுப்புங்க. 550 00:37:15,402 --> 00:37:18,113 பதிவு செய் 551 00:37:24,328 --> 00:37:27,039 ஹங்ரிகோஸ்ட் சந்தா 8.99 டாலர் 552 00:37:37,382 --> 00:37:38,717 நீ சொன்னது ஒண்ணும் தப்பில்லை. 553 00:37:38,800 --> 00:37:41,303 நீ அவளோட அம்மா, போதியோட பாட்டி. 554 00:37:42,012 --> 00:37:45,182 அவன் அந்த வீட்டுக்குள்ள இருக்குறது ஆபத்துன்னு நீ நினைச்ச. 555 00:37:45,265 --> 00:37:46,433 அதாவது, நீ… 556 00:37:46,517 --> 00:37:48,936 உன் கடமையைச் செய்யணும்னு நீ சண்டைக்குப் போனதுல தப்பில்லை. 557 00:37:49,520 --> 00:37:50,854 போதைக்கு அடிமையான ஒருவனா? 558 00:37:52,481 --> 00:37:53,690 மறுவாழ்வு மையத்துல இருந்து வந்தவனா? 559 00:37:55,234 --> 00:38:00,155 எனக்குத் தெரியல, ஒருவேளை நான் கொஞ்சம் கம்மியா… 560 00:38:00,239 --> 00:38:01,240 எதைக் குறைச்சிருக்கலாம்? 561 00:38:02,783 --> 00:38:04,868 பெண் பன்றி தன் குட்டிகளைப் பாதுகாக்கும். 562 00:38:10,624 --> 00:38:12,292 நீ ஒரு பெண் பன்றி. 563 00:38:26,682 --> 00:38:28,350 - சரி. - என்ன நடக்குது? 564 00:38:28,433 --> 00:38:29,852 அவருக்கு என்னதான் பிரச்சனை? 565 00:38:29,935 --> 00:38:31,353 சரி. நிறுத்துங்க. 566 00:38:39,653 --> 00:38:41,905 நமக்குக் குளிக்கிறது பிடிக்கும் தானே? 567 00:38:42,573 --> 00:38:47,911 ஆமா. மிஸ்டர் பளபளக்கும் கண்ணா. சுத்தம், சுத்தப்பத்தம். 568 00:38:48,871 --> 00:38:51,748 பளபளன்னு சுத்தமான செல்லம். 569 00:39:04,887 --> 00:39:05,971 ஒண்ணு தெரியுமா? 570 00:39:08,348 --> 00:39:10,601 இங்கே சுத்தி இருக்குறவங்க பேசுற எதையும் 571 00:39:10,684 --> 00:39:13,312 நீ காதுல போட்டுக்காத. 572 00:39:15,189 --> 00:39:19,693 நீ என் வாழ்க்கையைச் சீரழிச்சிட்ட, 573 00:39:19,776 --> 00:39:22,863 இல்லன்னா சீரழிச்சிருப்பேன்னு வர்ற பேச்சு எதுவுமே வேணாம்… 574 00:39:27,326 --> 00:39:29,119 நீதான் என் வாழ்க்கையையே உருவாக்கினவன். 575 00:39:31,914 --> 00:39:34,166 வாழ்க்கையை கஷ்டமாக்கியவன், ஆனா… 576 00:39:35,501 --> 00:39:37,628 உருவாக்கினதும் நீதான். 577 00:39:41,381 --> 00:39:43,383 எப்படியோ நீ என்னை உருவாக்கிட்ட. 578 00:39:46,678 --> 00:39:47,679 இதோ இப்ப இங்க இருக்கேன். 579 00:39:50,849 --> 00:39:54,937 நான் இப்போ ஒரு மிகப்பெரிய வெற்றியோட விளிம்புல நிக்கிறேன். 580 00:39:56,313 --> 00:39:58,315 அது என்ன மாதிரியான வெற்றின்னு… 581 00:39:58,815 --> 00:40:01,818 எனக்கு இன்னும் தெரியல, ஆனா… 582 00:40:04,321 --> 00:40:05,322 என்னால அதை உணர முடியுது. 583 00:40:07,741 --> 00:40:10,244 நம்ம வெற்றியோட மணி அடிக்கப் போகுது. 584 00:40:20,045 --> 00:40:22,965 உங்களுக்குப் புதிய சந்தாதாரர் வந்துள்ளார் உங்களுக்கு 20.00 டாலர் டிப்ஸ் கிடைத்துள்ளது 585 00:40:24,174 --> 00:40:26,385 அடக் கடவுளே! 586 00:40:28,095 --> 00:40:29,388 எனக்கு ஒரு ரசிகர் கிடைச்சிருக்கார்! 587 00:41:30,824 --> 00:41:32,826 வசனங்கள் மொழிபெயர்ப்பு மேனகா மணிகண்டன்