1 00:00:10,093 --> 00:00:13,721 {\an8}இரண்டாம் உலகப் போர். ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல் படை அட்லாண்டிக் கடலில் இரகசியமாக சுற்றித் திரிந்தது. 2 00:00:13,722 --> 00:00:15,806 {\an8}1975 ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம், கலிஃபோர்னியா 3 00:00:15,807 --> 00:00:20,103 {\an8}அவர்களுக்கான ஆணைகள் குறியீடாக அனுப்பப்பட்டன. குறியீடுகள் இதன் மூலமாக ஆணைகளாக மாற்றப்பட்டன. 4 00:00:23,106 --> 00:00:25,192 எனிக்மா. ஒரு வகையான சாவி. 5 00:00:25,984 --> 00:00:28,987 ஒவ்வொரு நீர்மூழ்கிக் கப்பலின் தளபதியிடமும் ஒன்று இருந்தது. 6 00:00:29,655 --> 00:00:31,823 மறுக்க முடியாத வகையில், கடல் யுத்தங்களின்போது, 7 00:00:32,323 --> 00:00:36,370 அந்த இயந்திரம் ஒன்று எதிரியின் கைகளுக்கு கிடைத்து, இரகசிய குறியீடு தெரிந்துகொள்ளப்பட்டது. 8 00:00:36,995 --> 00:00:41,625 அந்த சாவி பகிர்வுதான் நாஜிக்களின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. 9 00:00:45,254 --> 00:00:50,300 எனவே, சிலிக்கான் தொழிநுட்ப யுகத்தில் பிரச்சினையை எப்படி சமாளிக்கப் போகிறோம்? 10 00:00:50,801 --> 00:00:54,637 நம்முடைய விலைமதிப்பற்ற சாவிகளை உடனடியாகக் கிடைக்கச் செய்யும் அதே வேளையில், 11 00:00:54,638 --> 00:00:57,724 அவற்றை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்கப் போகிறோம்? 12 00:00:58,767 --> 00:00:59,976 பதில். 13 00:00:59,977 --> 00:01:05,146 ஒவ்வொரு விலைமதிப்பற்ற பொருளுக்கும், ஒரு விசேஷமான பூட்டை உருவாக்குகிறோம். 14 00:01:05,147 --> 00:01:09,027 மூடுவதற்கு ஒரு சாவியும், அதைத் திறக்க 15 00:01:09,945 --> 00:01:12,155 வேறு ஒரு சாவியும் தேவைப்படும் ஒரு பூட்டு. 16 00:01:13,073 --> 00:01:17,452 இரண்டு வெவ்வேறு சாவிகள், இரண்டு வெவ்வேறு செயல்முறைகள். 17 00:01:18,036 --> 00:01:23,166 முதல் சாவி, பூட்டும் சாவி, அதை எல்லோருக்கும் கிடைக்கச் செய்வோம். 18 00:01:24,543 --> 00:01:26,170 எல்லோருக்கும் கிடைக்கும் சாவி. 19 00:01:29,214 --> 00:01:33,635 இரண்டாவது சாவி, பிரதி எடுக்க சாத்தியமில்லாத ஒன்று. 20 00:01:36,180 --> 00:01:40,142 அவை ஒரு கணித செயல்பாட்டின் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். 21 00:01:42,227 --> 00:01:46,231 பிரைம் எண்களை பயன்படுத்தும் ஒரு அல்காரிதம். 22 00:01:48,192 --> 00:01:50,485 பப்ளிக் கீ கிரிப்டோகிராஃபி. 23 00:03:29,418 --> 00:03:30,419 ஹேக் செய்துவிட்டாயா? 24 00:03:32,629 --> 00:03:33,880 அழிக்கப்படுகிறது 25 00:03:33,881 --> 00:03:35,131 ஃபோல்டர் காலி 26 00:03:35,132 --> 00:03:36,216 டெய்லா. 27 00:03:38,635 --> 00:03:39,720 அவர்களுக்கு தெரியக்கூடாது. 28 00:03:41,555 --> 00:03:43,891 நான் அங்கே செய்த ஆய்வின் ஒவ்வொரு பதிவையும் நீக்கிவிடு. 29 00:03:45,017 --> 00:03:46,017 கோப்புகள் அழிக்கப்பட்டன 30 00:03:46,018 --> 00:03:48,729 - எங்கும் கேமராக்களை வைத்திருந்தார்கள். - ஆம், இனி இல்லை. 31 00:03:51,315 --> 00:03:52,648 எல்லாவற்றையும் அழித்துவிட்டாயா? 32 00:03:52,649 --> 00:03:53,734 அழித்துவிட்டேன். 33 00:03:55,402 --> 00:03:56,903 - எல்லாவற்றையுமா? - எல்லாவற்றையும்தான். 34 00:03:56,904 --> 00:03:59,071 அழித்துவிட்டேன். நீ செய்த கடைசி விஷயம் வரை. 35 00:03:59,072 --> 00:04:01,658 பிரைம் ஃபைண்டர் இப்போது இந்த ஃபோனில் மட்டும்தான் இருக்கிறது. 36 00:04:12,294 --> 00:04:14,505 ஹேய். நீ நலமா? 37 00:04:24,932 --> 00:04:26,850 சரி. போகலாம். 38 00:05:03,428 --> 00:05:07,432 {\an8}கப்லர் இன்ஸ்டிடியூட், கேம்பிரிட்ஜ் 39 00:05:08,934 --> 00:05:11,561 மற்ற எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டோம். லண்டனில் என்ன நடந்தது? 40 00:05:11,562 --> 00:05:12,938 லண்டனில் எதுவும் நடக்கவில்லை. 41 00:05:13,438 --> 00:05:15,523 - அவர்கள் இங்கே இருக்கிறார்கள் என்று நினைக்கிறோம். - என்ன? கேம்பிரிட்ஜிலா? 42 00:05:15,524 --> 00:05:19,485 அவர்கள் லண்டனுக்கு வெளியே M11 சாலையை நோக்கி போவதை CCTV-யில் பார்த்தோம். 43 00:05:19,486 --> 00:05:21,028 அவர்களுடைய திட்டம் என்ன? 44 00:05:21,029 --> 00:05:22,780 அவர்கள் நம்மை காயப்படுத்த நினைக்கிறார்கள். 45 00:05:22,781 --> 00:05:25,659 ஒரு கட்டத்தில் அவர்கள் வெளியே வருவார்கள். அவர்களுக்காக தயாராக இருப்போம். 46 00:05:41,258 --> 00:05:42,134 இரண்டு இருக்கின்றன. 47 00:05:42,885 --> 00:05:43,927 நன்றி. 48 00:05:54,188 --> 00:05:56,189 யாராவது என்னுடைய ஸ்போர்ட்ஸ் கிட்டைக் கொடுத்தார்களா? 49 00:05:56,190 --> 00:05:57,691 அதை எங்கேயும் காணவில்லை. 50 00:05:58,233 --> 00:06:00,067 அதை நான் சேமிப்பு அறையில் பார்க்க வேண்டும். 51 00:06:00,068 --> 00:06:01,403 நன்றி, கீத். 52 00:06:11,538 --> 00:06:13,789 இல்லை. துரதிர்ஷ்டவசமாக, அங்கேயும் இல்லை. 53 00:06:13,790 --> 00:06:16,001 வினோதம். மிகவும் வருந்துகிறேன். 54 00:08:02,024 --> 00:08:03,150 நீ சாப்பிட வேண்டும். 55 00:08:03,942 --> 00:08:04,943 சரியா? 56 00:08:13,243 --> 00:08:15,579 தெரியுமா, பேராசிரியர் ஆஸ்பார்ன்தான் என்னை கல்லூரியில் சேர்த்தார். 57 00:08:18,248 --> 00:08:21,793 பிறகு இந்த அறையையும் எனக்காக ஏற்பாடு செய்தார். 58 00:08:23,462 --> 00:08:24,671 மற்ற எல்லோருமே இதைக் கேட்டார்கள். 59 00:08:27,299 --> 00:08:29,134 இங்கிருந்து பார்க்க எனக்குப் பிடிக்கும் என்றார். 60 00:08:32,261 --> 00:08:33,514 நாங்கள் அங்கே போய்... 61 00:08:35,515 --> 00:08:37,267 புற்கள் மீது அமர்ந்து பயிற்சிகளை செய்வோம். 62 00:08:40,270 --> 00:08:43,607 அவர் இல்லையென்றால் நான் தொலைந்திருப்பேன். 63 00:08:46,693 --> 00:08:49,530 நான் இந்த இடத்துக்கானவன் என்று எனக்குத் தோன்றிய முதல் முறை அதுதான். 64 00:08:56,328 --> 00:08:57,621 இப்போது அவர் இறந்துவிட்டார். 65 00:09:01,542 --> 00:09:03,043 ஏனென்றால் நான் நிறுத்தவில்லை. 66 00:09:09,049 --> 00:09:11,718 அவர் உன் மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்தார், எட். 67 00:09:12,845 --> 00:09:14,054 வெளிப்படையாக தெரிகிறது. 68 00:09:19,893 --> 00:09:22,145 இது அழகானது என்று நினைத்தேன். 69 00:09:25,816 --> 00:09:26,733 ஆனால் இப்போது... 70 00:09:31,613 --> 00:09:33,073 நான் எதிர்த்து போராட விரும்புகிறேன். 71 00:09:33,991 --> 00:09:38,161 நல்லது. கப்லர், கார்ட்டர், ஆக்ஸியர்ன், ஜேன். 72 00:09:39,246 --> 00:09:40,289 அவர்களை பழிவாங்குவோம். 73 00:09:43,250 --> 00:09:45,836 அதை ஒரு முறை பயன்படுத்திவிட்டு பிறகு அழித்துவிடுவோம். 74 00:09:48,463 --> 00:09:49,882 நாம் கவனமாக இருக்க வேண்டும். 75 00:09:50,465 --> 00:09:51,841 ஏனென்றால் அவர்கள் அதை கண்காணிப்பார்கள். 76 00:09:51,842 --> 00:09:54,093 அது இருட்டில் தீ பந்தத்தை கொளுத்துவதைப் போல. 77 00:09:54,094 --> 00:09:57,306 - எட்? என்ன நடக்கிறது? - ஹேய். 78 00:09:58,307 --> 00:09:59,640 நீ மோசமான நிலைமையில் இருக்கிறாய். 79 00:09:59,641 --> 00:10:01,767 நீ இங்கே இருக்கக் கூடாது. 80 00:10:01,768 --> 00:10:03,895 முதலில் எத்தனை நாட்கள் என்று தெரியாத அளவுக்கு காணாமல் போனாய். 81 00:10:03,896 --> 00:10:04,979 சரி, என்னை மன்னித்துவிடு. 82 00:10:04,980 --> 00:10:07,857 நீ பைத்தியக்காரத்தனமாக, அந்த பார் பையனோடு ஓடிவிட்டாய் என்று நினைத்தேன். 83 00:10:07,858 --> 00:10:08,984 யார் இது? 84 00:10:10,319 --> 00:10:11,736 ஃபி, இது டெய்லா. 85 00:10:11,737 --> 00:10:12,988 டெய்லா, இது ஃபி. 86 00:10:17,576 --> 00:10:18,701 பொறு, நீங்கள் இருவரும்... 87 00:10:18,702 --> 00:10:19,786 - இல்லை. - இல்லை. 88 00:10:22,247 --> 00:10:23,457 சொல்வதைக் கேள், ஃபி. 89 00:10:24,374 --> 00:10:25,541 நீ அற்புதமானவள். 90 00:10:25,542 --> 00:10:28,795 உனக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறேன், ஆனால்... நீ இங்கே இருக்க முடியாது. 91 00:10:31,298 --> 00:10:32,758 - சரி. - சரி. 92 00:10:35,260 --> 00:10:36,720 பொறு. ம். 93 00:10:39,473 --> 00:10:42,893 அவனுக்காக நீ செய்ய வேண்டிய கடைசி விஷயம் ஒன்று இருக்கிறது. 94 00:10:49,149 --> 00:10:51,692 சரி. ஏதாவது தெரிந்ததா? 95 00:10:51,693 --> 00:10:52,986 எதுவுமில்லை. இன்னும் இல்லை. 96 00:10:57,407 --> 00:10:58,408 சரி. 97 00:11:01,036 --> 00:11:02,578 கேம்பிரிட்ஜ் போலீஸை அழை. 98 00:11:02,579 --> 00:11:06,165 லண்டன் நகரில் நேற்று இரவு ஒரு சடலம் வீதியில் வீசப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. 99 00:11:06,166 --> 00:11:10,253 எட்வர்ட் புரூக்ஸ்தான் சந்தேகத்துக்குரிய நபர். அவன் கேம்பிரிட்ஜில் இருக்கிறான் என்று சொல்வோம். 100 00:11:10,254 --> 00:11:11,587 அவர்கள் அவனைக் கைது செய்தால்? 101 00:11:11,588 --> 00:11:14,424 அவர்களின் விசாரணையை கண்காணித்து அங்கே முதலில் போவோம். 102 00:11:24,434 --> 00:11:27,271 தொந்தரவுக்கு வருந்துகிறேன், மாஸ்டர். போலீஸார் வரவேற்பறையில் இருக்கிறார்கள். 103 00:11:28,146 --> 00:11:29,230 போலீஸா? 104 00:11:29,231 --> 00:11:30,941 ஆம், எட்வர்ட் புரூக்ஸைத் தேடுகிறார்கள். 105 00:11:32,860 --> 00:11:36,612 புரூக்ஸா? அவன் இனி நம்மோடு இல்லை. அவனை கல்லூரியிலிருந்து நீக்கிவிட்டோம். 106 00:11:36,613 --> 00:11:38,030 - அதை அவர்களிடம் சொன்னாயா? - சொன்னேன். 107 00:11:38,031 --> 00:11:40,742 அவன் கேம்பிரிட்ஜில் இருக்கிறான் என்பதற்கு அவர்களிடம் காரணம் இருப்பதாக சொன்னார்கள், சார். 108 00:11:42,244 --> 00:11:43,287 சரி. 109 00:11:44,663 --> 00:11:46,497 பத்து நிமிடம் அவர்களை தடுத்து நிறுத்து. 110 00:11:46,498 --> 00:11:48,959 - நான் சில அழைப்புகளை செய்கிறேன். - சார். 111 00:12:03,473 --> 00:12:04,474 ஹேய். 112 00:12:06,643 --> 00:12:08,228 - இதோ. - சியர்ஸ். நன்றி. 113 00:12:17,070 --> 00:12:19,239 கைரேகையை ஸ்கேன் செய்து கடவுச்சொல்லை உள்ளிடவும் 114 00:12:23,202 --> 00:12:25,120 அணுகல் குறியீடு 115 00:12:26,622 --> 00:12:27,622 உள்நுழைவு உறுதிசெய்யப்பட்டது 116 00:12:27,623 --> 00:12:29,124 மீண்டும் வரவேற்கிறேன் ஃபியோனா 117 00:12:36,507 --> 00:12:38,550 என்னை அழை. 118 00:12:40,010 --> 00:12:41,094 ஹாய். சரி, ஹாய். 119 00:12:41,720 --> 00:12:43,805 மன்னித்துவிடுங்கள். கொஞ்சம் காத்திருக்க முடியுமா? 120 00:12:47,142 --> 00:12:48,143 ஆம். 121 00:12:49,353 --> 00:12:51,812 நான் அழைப்புக்கு பதிலளிக்கிறேன். 122 00:12:51,813 --> 00:12:53,190 - உடனே வந்துவிடுகிறேன். - பரவாயில்லை. 123 00:12:55,067 --> 00:12:57,276 முடிந்தது. இரண்டு நிமிடங்களில் லாக் அவுட் ஆகிவிடும். 124 00:12:57,277 --> 00:12:58,362 சரி. போ. 125 00:13:03,575 --> 00:13:04,660 டார்னெல் கல்லூரி. 126 00:13:05,160 --> 00:13:07,119 தயவுசெய்து என்னை நிர்வாகியுடன் இணைக்க முடியுமா? 127 00:13:07,120 --> 00:13:08,413 பொறுங்கள், தயவுசெய்து. 128 00:13:18,131 --> 00:13:20,174 இன்ஆடிவிடி காரணமாக தானாக லாக் அவுட் செய்யப்படுவீர்கள் 129 00:13:20,175 --> 00:13:21,635 டார்னெல் கல்லூரி, நிர்வாகி பேசுகிறேன். 130 00:13:23,095 --> 00:13:24,096 ஹலோ? 131 00:13:25,556 --> 00:13:26,557 ஹலோ? 132 00:13:31,395 --> 00:13:32,396 சரி. 133 00:13:51,206 --> 00:13:53,166 தரவிறக்கம் செய்யப்படுகிறது 134 00:14:30,370 --> 00:14:31,662 அவன் வெளியே வந்துவிட்டான். 135 00:14:31,663 --> 00:14:32,748 எங்களுக்குக் காட்டு. 136 00:14:38,337 --> 00:14:39,296 டிரினிட்டி லேன். 137 00:14:43,217 --> 00:14:44,467 அங்கே போ. 138 00:14:44,468 --> 00:14:45,969 எல்லோரையும் அழைத்துப் போ. 139 00:14:47,137 --> 00:14:48,138 உடனே! 140 00:14:51,808 --> 00:14:52,809 அவன் என்ன செய்கிறான்? 141 00:14:57,981 --> 00:14:59,274 வாருங்கள். போகலாம்! 142 00:15:05,239 --> 00:15:06,865 டிரினிட்டி லேன். போ. போ. 143 00:15:41,900 --> 00:15:42,985 நிறைவடைந்தது 144 00:15:45,195 --> 00:15:47,781 ஓபன் கப்லர் இன்ஸ்டிடியூட் 145 00:15:58,208 --> 00:16:00,168 புரூக்ஸ் கடைசியாக டிரினிட்டி லேனில் இருந்து, 146 00:16:00,169 --> 00:16:01,920 வடக்காக ஸ்மித் தெருவுக்குப் போனதைப் பார்த்தோம். 147 00:16:02,504 --> 00:16:05,382 சரி, அவன் நடந்து போகிறான். நீண்ட தூரம் போயிருக்க முடியாது. பிரிந்து போகிறோம். 148 00:16:29,990 --> 00:16:30,991 நீல்ட். 149 00:16:31,700 --> 00:16:32,910 அதைப் பார்த்தாயா? 150 00:16:35,579 --> 00:16:36,914 தொழில்நுட்ப கோளாறு. 151 00:16:39,166 --> 00:16:40,166 அடச்சே. 152 00:16:40,167 --> 00:16:41,752 அவள் சிஸ்டத்தில் ஊடுருவுகிறாள். 153 00:16:47,257 --> 00:16:49,926 பாருங்கள், நெறிமுறைகள் இருக்கின்றன. நாங்கள் இதற்காகத்தான் பயிற்சி பெற்றிருக்கிறோம். 154 00:16:49,927 --> 00:16:51,719 இல்லை. இதற்காக இல்லை. 155 00:16:51,720 --> 00:16:54,347 இந்த பிரைம் ஃபைண்டர் எந்த கணினி அமைப்பையும் தகர்க்கும் திறன் கொண்டது. 156 00:16:54,348 --> 00:16:56,933 இப்போது நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவர்களைக் கண்டுபிடிப்பதுதான். வேகமாக. 157 00:16:56,934 --> 00:16:58,101 அவள்... 158 00:16:59,228 --> 00:17:02,189 கடவுளே. அவள் மொத்த அமைப்பையும் டீகிரிப்ட் செய்கிறாள். 159 00:17:02,856 --> 00:17:04,565 அவள் ஆக்ஸியர்ன் புராஜெக்டை எடுக்கிறாள். 160 00:17:04,566 --> 00:17:06,192 ஈமெயில்கள், கண்காணிப்பு. எல்லாவற்றையும். 161 00:17:06,193 --> 00:17:07,235 அடடா. 162 00:17:07,236 --> 00:17:08,736 தாக்குதல் எங்கிருந்து நடக்கிறது என்பதை கண்டுபிடி. 163 00:17:08,737 --> 00:17:10,781 அவளுடைய லொகேஷன் கிடைக்கிறதா என்று பார்க்கிறேன். 164 00:17:17,746 --> 00:17:19,163 நம்முடைய தரவை வேறு எங்கோ அனுப்புகிறாள். 165 00:17:19,164 --> 00:17:20,624 எங்கே இருக்கிறாய்? சீக்கிரம். 166 00:17:21,541 --> 00:17:24,418 பாருங்கள். அவளைக் கண்டுபிடித்துவிட்டேன். இங்கே இருக்கிறாள். 167 00:17:24,419 --> 00:17:26,671 - அவளுடைய செல்ஃபோனை டிராக் செய்தாயா? - இல்லை. 168 00:17:26,672 --> 00:17:28,088 அவள் செல்லைப் பயன்படுத்தவில்லை. 169 00:17:28,089 --> 00:17:29,675 அவள் டார்னெல் கல்லூரியில் இருக்கிறாள். 170 00:17:30,926 --> 00:17:33,095 அவள் கல்லூரியின் பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தி இதை செய்கிறாள். 171 00:17:43,939 --> 00:17:46,107 கோப்புகள் பரிமாற்றப்படுகின்றன 73% 172 00:17:46,108 --> 00:17:48,359 - கப்லர் தரவு மையத்தை ஆஃப் செய்யுங்கள். - முடியவில்லை. 173 00:17:48,360 --> 00:17:50,028 அவள் நம்மை முழுவதுமாக லாக் செய்துவிட்டாள். 174 00:17:54,741 --> 00:17:57,578 டார்னெல் கல்லூரியில் சமிக்ஞை கிடைத்திருக்கிறது. அங்கே செல்லுங்கள். உடனே. 175 00:18:10,132 --> 00:18:13,467 பெண்கள் மற்றும் ஆண்களே, டார்னெல் கல்லூரியை சுற்றிப் பார்க்க வரிசையில் நில்லுங்கள். 176 00:18:13,468 --> 00:18:14,553 இந்தப் பக்கமாக. 177 00:18:23,437 --> 00:18:25,855 சரி, உள்ளே வந்துவிட்டேன். அவள் எங்கே இருக்கிறாள்? 178 00:18:25,856 --> 00:18:27,524 சமிக்ஞை தெளிவாக கிடைக்கவில்லை. 179 00:18:28,025 --> 00:18:30,568 பொறுங்கள். பார்த்துவிட்டேன். 180 00:18:30,569 --> 00:18:31,778 என்னை வழிநடத்து. 181 00:18:41,038 --> 00:18:42,039 சீக்கிரம். 182 00:18:47,085 --> 00:18:48,295 நெருங்கிவிட்டீர்கள். 183 00:18:52,174 --> 00:18:54,259 அவள் அங்கேதான் இருக்கிறாள். அவள் தெரிகிறாளா? 184 00:19:03,018 --> 00:19:04,269 அவளைப் பார்த்துவிட்டீர்களா? 185 00:19:05,479 --> 00:19:06,604 ஜேன்? 186 00:19:06,605 --> 00:19:07,856 எல்லாவற்றையும் அழித்துவிடு. 187 00:19:15,030 --> 00:19:16,907 {\an8}டெய்லா சாண்டர்ஸ் இதுதான் ஜேன் டோரஸின் முகம் 188 00:19:17,407 --> 00:19:20,284 {\an8}தன் நாட்டுக்கு துரோகம் செய்த, அப்பாவி மக்களைக் கொன்ற 189 00:19:20,285 --> 00:19:22,037 {\an8}அமெரிக்க ஏஜென்ட் 190 00:19:25,541 --> 00:19:27,543 என்னை சந்தியுங்கள். வரைபட இணைப்பு 191 00:19:32,798 --> 00:19:35,342 சரி. நாம் இப்போதே அலுவலகத்தைவிட்டு வெளியேற வேண்டும். உடனே. 192 00:19:36,176 --> 00:19:38,512 எல்லாவற்றையும் அழித்துவிடு. வரைமுறை உனக்கே தெரியும். 193 00:20:46,663 --> 00:20:48,874 அது பெரிதாகத் தோன்றவில்லை, இல்லையா? 194 00:20:50,918 --> 00:20:54,922 உங்கள் புராஜெக்டை முடிவுக்கு கொண்டு வர இது போதுமானதாக இருந்ததைத் தவிர. 195 00:20:56,590 --> 00:20:58,758 எல்லாமே ஃபோர்ட் மியாடுக்கு அனுப்பப்பட்டுவிட்டன. 196 00:20:58,759 --> 00:21:01,177 NSA ஆய்வாளர்கள் எல்லோருக்கும் எல்லாமே 197 00:21:01,178 --> 00:21:03,304 மிக எளிதாக ஒப்படைக்கப்பட்டது. 198 00:21:03,305 --> 00:21:05,224 இதுவரை ஆக்ஸியர்ன் செய்த எல்லாமே. 199 00:21:06,058 --> 00:21:09,478 கொலைகள், மரணங்கள், தற்கொலைகள், எல்லாமே. 200 00:21:12,564 --> 00:21:16,776 எது வலியை ஏற்படுத்தும் தெரியுமா, நீ எப்படி எல்லா மக்களுக்கும்... 201 00:21:16,777 --> 00:21:18,945 ஜேன், இதை நம்மைப் பற்றியதாக மாற்றாதீர்கள். 202 00:21:18,946 --> 00:21:20,656 இது பொறுப்பைப் பற்றியது. 203 00:21:21,365 --> 00:21:24,325 நான் சிறைக்குப் போவது எதையாவது சரிசெய்யப் போகிறது என்று நினைக்கிறாயா? 204 00:21:24,326 --> 00:21:25,953 அது எனக்கு நிம்மதியை கொடுக்கலாம். 205 00:21:28,539 --> 00:21:30,040 அது உனக்கு நிம்மதியை கொடுக்கும். 206 00:21:32,042 --> 00:21:33,126 பிறகு என்ன? 207 00:21:35,504 --> 00:21:37,339 ஆக்ஸியர்ன் முடிந்தது என்று நினைக்கிறாயா? 208 00:21:38,423 --> 00:21:39,882 அவர்களிடம் ஏராளமான பணம் இருக்கிறது. 209 00:21:39,883 --> 00:21:41,176 அவர்கள்தான் பணமே. 210 00:21:42,344 --> 00:21:43,719 என்ன தெரியுமா? 211 00:21:43,720 --> 00:21:45,722 விசில்ப்ளோவரை யாருக்கும் பிடிக்காது. 212 00:21:47,933 --> 00:21:49,101 நீ நம்பினாலும் நம்பாவிட்டாலும், 213 00:21:50,060 --> 00:21:53,104 நீ... உன் உயிர் எனக்கு விலைமதிப்பில்லாதது. 214 00:21:53,105 --> 00:21:54,690 அது உங்களுக்குச் சொந்தமானது என்று நினைப்பதாலா? 215 00:21:55,774 --> 00:21:57,526 - நீங்கள் அதை திருப்பி கொடுத்ததாலா? - என்ன? 216 00:21:58,026 --> 00:22:01,238 அது மகிழ்ச்சி இல்லை, ஜேன். அது நியாயமும் இல்லை. 217 00:22:01,905 --> 00:22:02,989 நான் ஒருவரின் உயிரை பறித்தேன். 218 00:22:02,990 --> 00:22:05,157 எனவே நீ நியாயத்தின்படி துயரத்தை அனுபவிக்க கடன்பட்டிருக்கிறாயா? 219 00:22:05,158 --> 00:22:07,160 ஆம்! ஏதோ. 220 00:22:12,332 --> 00:22:13,584 அது. 221 00:22:14,626 --> 00:22:16,461 நீ பாக்கெட்டில் வைத்திருக்கும் அந்த ஃபோன். 222 00:22:18,547 --> 00:22:19,965 அதால் என்ன செய்ய முடியும் என்று உனக்கே தெரியும். 223 00:22:21,341 --> 00:22:23,760 உனக்கு வரப்போகும் குழப்பம் புரிகிறதா? 224 00:22:24,803 --> 00:22:26,053 எட்வர்ட் புரூக்ஸ் எப்படி இருக்கிறான்? 225 00:22:26,054 --> 00:22:28,556 - அவன் நன்றாக இருக்கிறான். - அவன் நன்றாக இல்லை. 226 00:22:28,557 --> 00:22:29,682 அவன் தலைமறைவாக இருக்கிறான். 227 00:22:29,683 --> 00:22:32,185 அவன் வாழ்நாள் முழுவதும் அப்படித்தான் இருப்பான். 228 00:22:32,186 --> 00:22:34,104 அவனை அப்படி ஆக்கியது நீதான், டெய்லா. 229 00:22:34,771 --> 00:22:37,441 அவன் நீ கடந்து வந்த இன்னொரு உடல். 230 00:22:45,908 --> 00:22:47,326 உன்னையும் என்னையும் போன்றவர்களுக்கு... 231 00:22:49,912 --> 00:22:53,540 நாம் விரும்பியதைச் செய்யும் சுதந்திரம் நமக்கு இல்லை. 232 00:22:55,417 --> 00:22:59,963 சில சமயங்களில் நாம் கொடூரமான செயல்களைச் செய்ய வேண்டியிருக்கும். 233 00:23:00,714 --> 00:23:05,677 நாம் செய்யக்கூடியது, அது நாம் நேசிப்பவர்களுக்கு தெரிந்துவிடக்கூடாது என கடவுளிடம் வேண்டுவதுதான். 234 00:23:09,598 --> 00:23:10,599 நான் செய்தேன். 235 00:23:13,393 --> 00:23:15,020 உங்களைப் பற்றி கண்டுபிடித்தேன், ஜேன். 236 00:23:18,607 --> 00:23:20,609 சரி, நான் உன்னை நேசிக்கிறேன். ஆம். 237 00:23:23,612 --> 00:23:24,613 அதோடு நான் உன்னை மன்னிக்கிறேன். 238 00:23:28,534 --> 00:23:31,161 எனக்கு உங்கள் மன்னிப்பு வேண்டாம். 239 00:23:32,120 --> 00:23:33,372 எனக்கு அது தேவையில்லை. 240 00:24:19,209 --> 00:24:20,210 ஹாய். 241 00:24:21,086 --> 00:24:22,712 - மன்னித்துவிடுங்கள். - எட். 242 00:24:22,713 --> 00:24:25,215 - கடவுளே. - உங்களை பயமுறுத்த நினைக்கவில்லை. 243 00:24:26,967 --> 00:24:30,554 எப்படி இருக்கிறாய்? நான் ரொம்ப கவலைப்பட்டேன். 244 00:24:36,268 --> 00:24:38,228 ஓர்லியான் காப்பகத்திற்குப் போனீர்களா? 245 00:24:42,900 --> 00:24:43,901 அதைக் கண்டுபிடித்தேன். 246 00:24:47,404 --> 00:24:49,198 நம் காணாமல் போன துண்டை. அதைக் கண்டுபிடித்தேன். 247 00:24:50,866 --> 00:24:51,867 அப்படியா? 248 00:24:53,785 --> 00:24:55,078 உனக்கு வேண்டிய எல்லாம் கிடைத்துவிட்டது. 249 00:25:02,127 --> 00:25:03,337 பாக்தாத்தில், 250 00:25:04,338 --> 00:25:08,425 ஹோட்டலில், நீங்கள் ராபர்ட் எப்படி இறந்தார் என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்று சொன்னீர்கள். 251 00:25:10,969 --> 00:25:12,179 இன்னும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? 252 00:25:14,097 --> 00:25:15,015 ஆம். 253 00:25:20,854 --> 00:25:22,481 அவர்களின் பெயர் ஆக்ஸியர்ன். 254 00:25:24,691 --> 00:25:26,693 அது ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனம். 255 00:25:27,694 --> 00:25:31,907 பல வங்கிகளின் பாக்கெட்டுகளில் இருக்கும் கூலிப்படையினர். 256 00:25:34,618 --> 00:25:35,869 அது கணிதம். 257 00:25:37,955 --> 00:25:40,332 பிரைம் ஃபைண்டர், அதற்குத்தான் அவர்கள் பயப்படுகிறார்கள். 258 00:25:41,416 --> 00:25:43,418 அவர்கள் செய்த இன்னும் நிறைய அட்டூழியங்கள் வெளியாவதை. 259 00:25:44,336 --> 00:25:47,130 அவர்கள் விரும்பும் எல்லாம் பாதுகாக்கப்பட வேண்டும். 260 00:25:49,174 --> 00:25:52,970 அதாவது, அது பல ஆண்டுகளுக்குப் பின்னால் போகிறது. 261 00:25:53,804 --> 00:25:55,013 பல பத்தாண்டுகள். 262 00:25:56,807 --> 00:25:58,433 அடக்குவது, கொல்வது. 263 00:25:59,268 --> 00:26:01,519 சாஃபியாவைக் கொல்வது, ராபர்ட்டைக் கொல்வது. 264 00:26:01,520 --> 00:26:03,105 - யாரையும் கொல்வது... - சரி. 265 00:26:06,650 --> 00:26:08,360 என்னை பாதுகாக்கும் முயற்சியில் இறந்திருக்கிறார். 266 00:26:24,251 --> 00:26:27,337 நாங்கள் மிகச் சரியானவர்களாக இல்லை. ஆனால் நான் அவரை மிஸ் செய்கிறேன். 267 00:26:48,942 --> 00:26:49,776 அது... 268 00:26:50,819 --> 00:26:52,653 - ஜேம்ஸ். - மோசமான நேரத்தில் அழைத்துவிட்டேனா? 269 00:26:52,654 --> 00:26:53,738 இல்லை, சொல்லுங்கள். 270 00:26:53,739 --> 00:26:58,327 அது நான் எட்வர்ட் புரூக்ஸ் பற்றி கவலைப்படுகிறேன். 271 00:26:59,369 --> 00:27:00,536 ஏன்? 272 00:27:00,537 --> 00:27:04,707 இங்கே போலீஸ் வந்தது, கல்லூரிக்கு, அவனிடம் பேச. 273 00:27:04,708 --> 00:27:07,002 வெளிப்படையாக, இது மிகவும் அவசரநிலை. 274 00:27:07,669 --> 00:27:12,716 நான் உதவ விரும்புகிறேன், எனவே அவன் எங்கே என்று உனக்குத் தெரியும் என்றால்... 275 00:27:14,009 --> 00:27:17,554 அவன்... உண்மையில், என்னுடன் இருக்கிறான். 276 00:27:18,430 --> 00:27:23,519 சரி, அப்படியென்றால், நீ அவனை என்னிடம் அனுப்பிவைக்க முடியுமா? 277 00:27:33,153 --> 00:27:35,155 நான் இங்கே இருக்கக்கூடாது. எல்லோரும் என்னைத் தேடுகிறார்கள். 278 00:27:35,739 --> 00:27:38,951 பரவாயில்லை. என்ன செய்வது என்று ஜேம்ஸுக்குத் தெரியும். 279 00:27:44,206 --> 00:27:45,958 திரு. புரூக்ஸ். 280 00:27:47,417 --> 00:27:48,836 இப்போது எல்லோராலும் கவனிக்கப்படுபவன். 281 00:27:50,963 --> 00:27:56,134 ஆண்ட்ரியா, நம்பிக்கையோடு இவனை என்னிடம் பாதுகாப்பாக கூட்டிவந்ததற்கு நன்றி. 282 00:27:57,344 --> 00:27:58,594 நான்... 283 00:27:58,595 --> 00:28:02,014 கொஞ்சம் வெளியே காத்திருக்கிறாயா? 284 00:28:02,015 --> 00:28:04,392 பிறகு நாம் எல்லோரும் சந்தித்து, ஒன்றாக மது அருந்துவோம், சரியா? 285 00:28:04,393 --> 00:28:06,687 - சரி. நிச்சயமாக. - நான் அவனுடன் பேச வேண்டும். நன்றி. 286 00:28:10,482 --> 00:28:11,483 தயவுசெய்து. 287 00:28:23,787 --> 00:28:25,873 எனவே, கொஞ்சம் கடினமான நாள்தான் போல. 288 00:28:28,166 --> 00:28:33,463 இப்போது கல்லூரியைச் சுற்றி காவல்துறை அதிகாரிகள் திரிகிறார்கள், உன்னால் நம்ப முடிகிறதா? 289 00:28:38,510 --> 00:28:40,512 அது எதற்காக என்று எனக்குத் தெரியும். 290 00:28:41,805 --> 00:28:42,890 பேராசிரியர் ஆஸ்பார்ன். 291 00:28:45,684 --> 00:28:48,895 என்ன நடந்திருந்தாலும், இது உன் தவறு இல்லை. 292 00:28:48,896 --> 00:28:50,981 ஆம். 293 00:28:56,987 --> 00:28:57,988 அது உனக்குக் கேட்டதா? 294 00:29:00,699 --> 00:29:01,825 அதுதான் நம் கருப்பு குருவி. 295 00:29:06,163 --> 00:29:07,998 ஆம். எனக்கு எப்போதும் கேம்பிரிட்ஜ்தான். 296 00:29:08,707 --> 00:29:12,293 ஸ்டான்ஃபோர்ட் திறமைசாலிகளின் கூடாரமாக இருந்தது, இருக்கிறது, 297 00:29:12,294 --> 00:29:14,963 ஆனால் அது கடந்த காலத்தின் தாக்கம்தான். 298 00:29:15,506 --> 00:29:21,470 நியூட்டன் முதல், ஆலன் டூரிங், ஸ்டீபன் ஹாக்கிங் வரை அந்த அறிவுஜீவித்தனம் ஆறாக ஓடியது. 299 00:29:23,889 --> 00:29:24,973 இப்போது, எட்வர்ட்... 300 00:29:27,601 --> 00:29:28,602 உன்னிடமும். 301 00:29:33,190 --> 00:29:36,109 இரட்டை பிரைம் பற்றிய அனுமானம். 302 00:29:37,653 --> 00:29:39,071 வசீகரமான துறை. 303 00:29:43,659 --> 00:29:44,910 விஷயங்கள் பரவும். 304 00:29:47,120 --> 00:29:48,539 நீங்கள் கணிதவியலாளரா? 305 00:29:50,207 --> 00:29:53,000 நான் கணினி அறிவியலில் என் தொழில் வாழ்க்கையை தொடங்கினேன். 306 00:29:53,001 --> 00:29:55,504 ஸ்டான்ஃபோர்டில் முதுகலை படித்தேன். 307 00:29:58,173 --> 00:30:00,341 பப்ளிக் கீ கிரிப்டோகிராஃபியை கண்டுபிடித்த 308 00:30:00,342 --> 00:30:04,721 ஆராய்ச்சி குழுவில் நானும் இருந்தேன். 309 00:30:06,807 --> 00:30:07,849 எனக்குத் தெரியாது. 310 00:30:07,850 --> 00:30:10,936 உனக்குத் தெரிய எந்த காரணமும் இல்லை. 311 00:30:13,188 --> 00:30:16,358 பிரைம் எங்களுக்கான பொதுவான சூத்திரம். 312 00:30:19,027 --> 00:30:22,531 வேடிக்கையானது. உன்னுடைய மிகப்பெரிய சாதனை என்னுடையதை அழிக்கும் விஷயமாக இருக்கலாம். 313 00:30:26,743 --> 00:30:28,245 அதில் எவ்வளவு தூரம் போயிருக்கிறாய்? 314 00:30:30,455 --> 00:30:31,498 அதைக் கண்டுபிடித்துவிட்டேன். 315 00:30:38,005 --> 00:30:39,006 கண்டுபிடித்துவிட்டாய். 316 00:30:44,178 --> 00:30:47,014 ஓ, எட்வர்ட். உனக்கு இப்போது என்ன வயது? 317 00:30:48,724 --> 00:30:49,807 26. 318 00:30:49,808 --> 00:30:52,060 இருபத்தி ஆறு. அடக் கடவுளே. 319 00:30:54,980 --> 00:30:56,899 அப்போது எனக்கு ஆகியிருந்த அதே வயதுதான். 320 00:30:58,901 --> 00:31:00,277 ஒரு அன்பான ஆத்மா. 321 00:31:01,945 --> 00:31:03,155 நீ அதை உணர்கிறாயா? 322 00:31:05,657 --> 00:31:07,075 வரலாற்று சக்திகளின் தாக்கத்தை? 323 00:31:12,289 --> 00:31:13,790 விசித்திரமானது, அந்த பயம். 324 00:31:15,334 --> 00:31:18,420 அந்த மயிர்க்கூச்செறிதல். 325 00:31:19,338 --> 00:31:20,839 அதை யாரும் எதிர்பார்க்கமாட்டார்கள். 326 00:31:23,175 --> 00:31:24,092 இப்போது என்ன செய்வது? 327 00:31:39,316 --> 00:31:40,525 வா. 328 00:31:40,526 --> 00:31:42,152 அந்த விஷயத்தில் என்னால் உனக்கு உதவ முடியும். 329 00:31:57,000 --> 00:31:58,001 ஹலோ? 330 00:31:59,503 --> 00:32:00,504 எட்? 331 00:32:18,355 --> 00:32:19,439 அடச்சே. 332 00:32:31,326 --> 00:32:33,452 - ஹலோ? - ஹேய், ஆண்ட்ரியா, டெய்லா பேசுகிறேன். 333 00:32:33,453 --> 00:32:35,539 கேம்பிரிட்ஜில் இருக்கிறேன். எட்டை காணவில்லை. உங்களோடு இருக்கிறானா? 334 00:32:36,039 --> 00:32:38,207 இல்லை, அவனை கல்லூரி முதல்வரிடம் விட்டுவிட்டு வந்தேன். 335 00:32:38,208 --> 00:32:39,293 அவன் நலமாக இருக்கிறான். 336 00:32:40,043 --> 00:32:42,545 கேள், நான் உன்னை அங்கே சந்தித்து, வேண்டுமென்றால் அவனிடம் கூட்டிப் போகட்டுமா? 337 00:32:42,546 --> 00:32:45,799 - ஆம், நிச்சயமாக. - சரியா? சரி. அங்கே பார்ப்போம். 338 00:32:59,605 --> 00:33:00,731 பேராசிரியர் ஆர். மலிண்டர் - உள்ளே இல்லை 339 00:33:29,551 --> 00:33:32,387 உனக்கு இங்கிருந்து வேலை செய்யலாம் என்று தோன்றுகிறதா? 340 00:33:34,723 --> 00:33:36,350 இது ராபர்ட்டின் அலுவலகம். 341 00:33:37,559 --> 00:33:39,061 அவர் பேராசிரியராக இருந்தார். 342 00:33:40,354 --> 00:33:42,063 நீ அப்படியாகத்தான் இருப்பாய். 343 00:33:42,064 --> 00:33:44,233 நீ அதையெல்லாம் பொருட்படுத்த மாட்டாய் என்று எனக்குத் தெரியும். 344 00:33:45,984 --> 00:33:47,945 ஆனால் நான் உனக்கு ஒரு பாதுகாப்பான இடத்தைக் கொடுக்கிறேன். 345 00:33:52,699 --> 00:33:54,076 ஆதாரம். 346 00:33:56,328 --> 00:33:58,830 அது எந்த வடிவத்தில் இருக்கிறது? 347 00:33:59,706 --> 00:34:01,083 அதை என் குறிப்பேட்டில் எழுதி வைத்தேன். 348 00:34:06,088 --> 00:34:07,130 நான் அதைப் பார்க்கலாமா? 349 00:34:09,507 --> 00:34:10,467 அதை எரித்துவிட்டேன். 350 00:34:15,556 --> 00:34:16,556 அதை எரித்துவிட்டாயா? 351 00:34:17,139 --> 00:34:19,059 ஆம். அது இனி எனக்கு வேண்டாம். 352 00:34:21,186 --> 00:34:23,105 ஆனால் அது இன்னும் உன் மூளையில் இருக்கிறது. 353 00:34:24,273 --> 00:34:25,357 இல்லையா? 354 00:34:33,907 --> 00:34:35,324 உனக்கு பாதுகாப்பு தேவை. 355 00:34:37,494 --> 00:34:38,536 உனக்கு ஒரு வீடு தேவை. 356 00:34:39,996 --> 00:34:40,998 இங்கே. 357 00:34:42,040 --> 00:34:45,543 நியூட்டன் மற்றும் ராமானுஜன் உடன். 358 00:34:48,463 --> 00:34:51,091 இது உன் கனவு என்று சொன்னாய், எட்வர்ட். 359 00:34:56,054 --> 00:34:57,054 அக்ரம்! 360 00:34:59,308 --> 00:35:00,309 ஆண்ட்ரியா. 361 00:35:02,603 --> 00:35:05,105 - என் மகள், அஃபீனாவை உங்களுக்கு நினைவிருக்கும். - ஹாய். 362 00:35:05,689 --> 00:35:06,690 ஹாய். 363 00:35:09,276 --> 00:35:10,903 என்ன விஷயமாக கேம்பிரிட்ஜ் வந்திருக்கிறீர்கள்? 364 00:35:11,445 --> 00:35:13,863 எனக்கு ஒரு இடம் கிடைத்தது. 365 00:35:13,864 --> 00:35:17,075 செப்டம்பரில் தொடங்குகிறேன். எனக்கு முழு உதவித்தொகை கிடைத்தது. 366 00:35:19,077 --> 00:35:21,829 நிஜமாகவா? எந்த கல்லூரி? 367 00:35:21,830 --> 00:35:23,123 டார்னெல். 368 00:35:24,166 --> 00:35:25,667 டார்னெல். என் கல்லூரி. 369 00:35:27,836 --> 00:35:30,297 உதவித்தொகைகள் எல்லாமே ஒதுக்கப்பட்டுவிட்டன என்று நினைத்தேன். 370 00:35:31,632 --> 00:35:33,382 உங்களுக்கு பெரிய இடங்களில் நண்பர்கள் இருக்க வேண்டும். 371 00:35:33,383 --> 00:35:35,093 அது அப்படி இல்லை. 372 00:35:40,849 --> 00:35:43,268 அதைச் செய்ய ஒருவருக்கு மட்டும்தான் அதிகாரம் இருக்கிறது. 373 00:35:48,065 --> 00:35:49,066 ஆண்ட்ரியா. 374 00:35:50,567 --> 00:35:51,568 ஆண்ட்ரியா! 375 00:35:54,238 --> 00:35:55,864 நீ புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், 376 00:35:56,698 --> 00:36:02,037 நான் முன்னோடியாகக் கொண்டு வந்த கணினி கோட் மக்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கானது. 377 00:36:04,039 --> 00:36:05,874 அவர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு கொடுக்க. 378 00:36:08,085 --> 00:36:11,379 ஆனால் பிறகு பெரிய அரசாங்கங்கள் அதை கைப்பற்றின, 379 00:36:11,380 --> 00:36:14,800 இது அவர்களின் மோசமான குற்றங்களை மறைப்பதற்கான ஒரு கருவியாக மாறிவிட்டது. 380 00:36:15,968 --> 00:36:17,594 ஒருபோதும் நோக்கம் அது இல்லை. 381 00:36:20,347 --> 00:36:24,142 அதோடு அதில் என் பங்குக்கான பரிகாரத்தை நான் செய்ய வேண்டும். 382 00:36:25,060 --> 00:36:26,812 9/11 சம்பவத்துக்கு பிறகு, 383 00:36:27,479 --> 00:36:29,773 எத்தனை பேர் சித்திரவதை செய்யப்பட்டார்கள் தெரியுமா? 384 00:36:30,941 --> 00:36:32,192 தாக்கப்பட்டார்கள் தெரியுமா? 385 00:36:33,443 --> 00:36:35,654 எல்லாம் என் கோடால் மறைக்கப்பட்டன. 386 00:36:42,160 --> 00:36:43,662 அதுதான் நான் செய்த பாவம். 387 00:36:46,582 --> 00:36:49,334 அந்த குற்ற உணர்வோடுதான் நான் வாழ்கிறேன். 388 00:36:55,340 --> 00:36:57,843 ஆனால் உன் ஆய்வு, உன் ஆதாரம்... 389 00:37:00,345 --> 00:37:02,181 அந்த சமநிலையை கொண்டுவர முடியும். 390 00:37:06,977 --> 00:37:07,978 என்னுடன் வா. 391 00:37:15,819 --> 00:37:17,029 - ஹாய். - ஹேய். 392 00:37:20,949 --> 00:37:23,701 சரி, நாம் கல்லூரியின் முதல்வர், ஆல்டர்மேனைக் கண்டுபிடிக்க வேண்டும். 393 00:37:23,702 --> 00:37:25,746 - என்ன? - அவர்தான் காணாமல் போன துண்டு. 394 00:37:26,371 --> 00:37:30,334 அவர் மிகவும் ஆபத்தானவர், டெய்லா, நான் எட்டை நேராக அவரிடம் கொண்டுபோய் விட்டுவிட்டேன். 395 00:37:31,793 --> 00:37:34,045 இத்தனை வருடங்களாக என்னை அவருடைய வழிகாட்டுதலின் கீழ் வைத்துக்கொண்டு, 396 00:37:34,046 --> 00:37:37,758 பேய்ட் அல்-ஹிக்மாவைத் தேட என்னைத் தொடர்ந்து ஊக்குவித்து, முட்டாள் போல பயன்படுத்தியிருக்கிறார். 397 00:37:38,800 --> 00:37:40,219 எல்லா ஆயுத வர்த்தகமும், 398 00:37:41,845 --> 00:37:43,514 எல்லா பாதுகாக்கப்பட்ட இரகசியமும், 399 00:37:44,765 --> 00:37:46,141 எல்லா தீமையும். 400 00:37:46,808 --> 00:37:47,851 எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள். 401 00:37:48,810 --> 00:37:50,521 நாம் உண்மையை வெளியே கொண்டுவரலாம். 402 00:37:51,563 --> 00:37:53,398 எல்லாவற்றையும் வெளிச்சம்போட்டுக் காட்டலாம். 403 00:37:55,067 --> 00:37:56,568 கொடுங்கோன்மைக்கு முடிவு. 404 00:37:58,779 --> 00:37:59,780 ஒரு புதிய ஆரம்பம். 405 00:38:04,243 --> 00:38:06,578 நீ செய்யக்கூடிய எல்லா நன்மைகளையும் நினைத்துப் பார். 406 00:38:07,996 --> 00:38:09,414 அது சரியான கைகளில் இருந்தால். 407 00:38:14,211 --> 00:38:16,255 அமைப்பை மறுகட்டமைப்பு செய்வது பற்றி பேசுகிறீர்கள். 408 00:38:16,755 --> 00:38:18,382 டிஜிட்டல் உலகத்தை சிதைப்பது. 409 00:38:19,633 --> 00:38:20,884 முதல் தாக்குதல். 410 00:38:21,760 --> 00:38:23,219 நாம் ஒரு செய்தியை அனுப்பப் போகிறோம், 411 00:38:23,220 --> 00:38:26,931 இங்கே கேம்பிரிட்ஜில் இருந்து வால் ஸ்ட்ரீட்டில் இருக்கும் நம் நண்பர்களுக்கு. 412 00:38:26,932 --> 00:38:29,935 வங்கி பாதுகாப்பை மீற உன் தேற்றத்தைப் பயன்படுத்தப் போகிறோம். 413 00:38:31,270 --> 00:38:33,272 அவர்களின் டிஜிட்டல் பெட்டகங்களைத் திறக்கப் போகிறோம். 414 00:38:34,356 --> 00:38:35,607 அவை எல்லாம் அழிக்கப்படும். 415 00:38:37,693 --> 00:38:40,737 நான் சொல்கிறேன், அது வெறும் ஆரம்பம்தான். 416 00:38:43,448 --> 00:38:46,535 வீழ்ச்சி எப்படியானதாக இருக்கும்? மற்றவர்களுக்கு அது ஏற்படுத்தும் இழப்பு? 417 00:38:47,619 --> 00:38:50,622 புரட்சி மென்மையாக நடக்காது. 418 00:38:51,498 --> 00:38:55,252 நாம் உலகத்தின் மீது தீவிரமான செயல்களை செய்ய வேண்டும். 419 00:38:57,462 --> 00:38:59,756 சில சேதங்கள் ஏற்படும்தான். 420 00:39:02,467 --> 00:39:03,677 பாக்தாத்தை சொல்கிறீர்கள். 421 00:39:05,804 --> 00:39:08,432 ஒரு பரபரப்பான தெருவில் வெடிப்பை ஏற்படுத்துவது. 422 00:39:10,642 --> 00:39:11,643 அதைச் செய்தது நீங்கள்தானே? 423 00:39:12,186 --> 00:39:16,690 அந்த மக்கள் முன்னேற்றத்துக்காக இறந்தார்கள். 424 00:39:17,316 --> 00:39:18,317 சரி. 425 00:39:20,027 --> 00:39:22,278 இது இன்னும் எத்தனை உயிர்கள் பறிக்கப் போகிறது? 426 00:39:22,279 --> 00:39:23,447 ஓ, எட். 427 00:39:24,031 --> 00:39:27,951 உங்கள் நண்பர்கள், சக ஊழியர்கள் எல்லோரும் இறந்துவிட்டார்கள். 428 00:39:29,494 --> 00:39:32,872 உங்களைப் போன்றவர்கள் என் தேற்றத்தை வெளிக்கொண்டுவர முயற்சிப்பதால். 429 00:39:32,873 --> 00:39:36,376 இல்லை. நீ ஒருபோதும் அறிவியலைக் குறை சொல்லக்கூடாது. 430 00:39:40,672 --> 00:39:41,882 நானும் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். 431 00:39:43,759 --> 00:39:46,135 நானும் ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தேன். 432 00:39:46,136 --> 00:39:50,224 இப்போது நீ அதைக் கண்டுபிடித்துவிட்டதால், அது வெளிவருவதற்கு ரொம்ப நேரம் ஆகாது. 433 00:39:52,643 --> 00:39:55,436 உலகம் மாறும், எட்வர்ட். 434 00:39:55,437 --> 00:39:57,772 நாம்தான் அதன் படைப்பாளிகளாக இருப்போம். 435 00:39:57,773 --> 00:40:02,069 பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவர்களாக. 436 00:40:11,578 --> 00:40:13,205 பேராசிரியர் ஆஸ்பார்ன் கொல்லப்பட்டது? 437 00:40:16,834 --> 00:40:19,586 பாவப்பட்டவர், தன் துயரத்திலிருந்து விடுபட்டார். 438 00:40:20,754 --> 00:40:23,673 ஆனால் ஒரு பெரிய விஷயத்துக்காக உன்னை வளர்த்தார். 439 00:40:23,674 --> 00:40:27,177 இப்போது இங்கே, உனக்கான நேரம் வந்திருப்பதால், 440 00:40:29,137 --> 00:40:30,556 அவர் மகிழ்ச்சியடைந்திருப்பார். 441 00:40:33,016 --> 00:40:34,643 அவர் பெருமைப்பட்டிருப்பார். 442 00:40:39,565 --> 00:40:42,234 என் நண்பர் என் கண் எதிரிலேயே கொல்லப்படுவதை நான் பார்த்தேன். 443 00:40:44,528 --> 00:40:46,947 என் தேற்றம் ஒரு விஷம். 444 00:40:48,031 --> 00:40:50,242 அது மக்களை ஒருவரோடு ஒருவர் இரக்கமில்லாமல் அடித்துக்கொள்ள வைக்கிறது. 445 00:40:52,119 --> 00:40:53,328 அதுதான் என்னைப் பற்றி நிலைபெறும். 446 00:40:54,663 --> 00:40:57,748 அதுதான் என் பெயருக்கு பக்கத்தில் செதுக்கப்படும். 447 00:40:57,749 --> 00:40:59,960 - இல்லை. - உலகத்தை அழித்தவன். 448 00:41:03,755 --> 00:41:04,882 என்னிடம் வேறு எதுவும் இல்லை. 449 00:41:06,341 --> 00:41:07,426 ஒன்றுமில்லை. 450 00:41:09,219 --> 00:41:14,975 இது... இது ஒன்றைத்தான் நான் விட்டுவிட்டு போவேன். 451 00:41:17,978 --> 00:41:21,647 அது தூய்மையானது என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். 452 00:41:21,648 --> 00:41:22,816 ஆனால்... 453 00:41:27,154 --> 00:41:28,780 எப்போதும் அதில் உயிரிழப்பு இருக்கிறது. 454 00:41:32,576 --> 00:41:35,537 நாம் உருவாக்காத வரை மோசமான விஞ்ஞானம் என்று ஒன்று இல்லை. 455 00:41:38,832 --> 00:41:40,334 அது இப்போது வெளியே வந்துவிட்டது. 456 00:41:44,087 --> 00:41:45,297 நான் சொன்னேனே. 457 00:41:46,757 --> 00:41:51,803 அதை நீ செய்யவில்லை என்றால், வேறொருவனைக் கண்டுபிடிப்பேன். 458 00:41:53,722 --> 00:41:55,557 இன்னொரு இளம் மேதாவியை. 459 00:41:58,852 --> 00:42:00,687 நீங்கள் நிறுத்தமாட்டீர்கள், இல்லையா? 460 00:42:03,524 --> 00:42:04,525 இல்லை. 461 00:42:33,303 --> 00:42:34,304 எட். 462 00:42:37,391 --> 00:42:38,600 எட். 463 00:42:42,187 --> 00:42:44,690 எட், உனக்கு ஒன்றுமாகவில்லையே? 464 00:42:45,190 --> 00:42:46,775 எட், உனக்கு ஒன்றுமாகவில்லையே? 465 00:42:53,615 --> 00:42:54,950 அடக் கடவுளே. 466 00:42:56,994 --> 00:43:00,247 ஹேய். எட்வர்ட். 467 00:43:04,585 --> 00:43:07,170 டெய்லா, அவனை இங்கிருந்து கூட்டிப்போ. என் காரை எடுத்துக்கொள். 468 00:43:07,171 --> 00:43:09,088 ஃப்ரீ ஸ்கூல் லேன். என் சாவியை பிடி. 469 00:43:09,089 --> 00:43:11,091 - போ! - சரி. சீக்கிரம். போகலாம். 470 00:43:26,064 --> 00:43:28,066 எட், என்ன செய்கிறாய்? நாம் போக வேண்டும். வா! 471 00:43:29,401 --> 00:43:30,402 போகலாம்! ஏறு! 472 00:44:30,504 --> 00:44:31,505 நான்... 473 00:44:33,590 --> 00:44:34,591 என்ன? 474 00:44:37,386 --> 00:44:38,428 நான்... 475 00:44:39,012 --> 00:44:40,097 இல்லை. நிறுத்து. 476 00:44:44,476 --> 00:44:45,602 ஆதாரம் என் மூளையில் இருக்கிறது. 477 00:44:47,521 --> 00:44:48,646 நான்தான் அந்த ஆயுதம். 478 00:44:48,647 --> 00:44:50,107 சரி. 479 00:44:58,824 --> 00:45:00,450 அதை நல்ல விஷயத்திற்கு பயன்படுத்து. 480 00:45:07,374 --> 00:45:09,083 சரி. நீ போக வேண்டும். 481 00:45:09,084 --> 00:45:11,170 - என்ன? - பார், நீதான் இலக்கு. 482 00:45:12,296 --> 00:45:14,088 அவர்கள் உன்னைத் தேடி வருவார்கள், 483 00:45:14,089 --> 00:45:15,716 அவர்கள் உன்னைக் கண்டுபிடித்தால், காயப்படுத்துவார்கள். 484 00:45:16,967 --> 00:45:19,011 அவர்கள் உன்னைப் பயன்படுத்துவார்கள், எட். 485 00:45:19,845 --> 00:45:21,054 இனி உனக்கு பாதுகாப்பு கிடையாது. 486 00:45:22,598 --> 00:45:26,226 சில நேரங்களில் சில விஷயங்கள் நடக்கும், நாம் சில தியாகங்களை செய்ய வேண்டியிருக்கும். 487 00:45:28,687 --> 00:45:30,898 யாரையாவது பொறுப்பாக்க வேண்டும். 488 00:45:37,529 --> 00:45:38,864 அவர்களிடம் என்ன சொல்வாய்? 489 00:45:39,865 --> 00:45:40,866 ஏதாவது. 490 00:45:43,076 --> 00:45:45,953 உன்னை சம்பந்தப்படுத்தாத ஒன்றை. 491 00:45:45,954 --> 00:45:47,163 டெய்லா... 492 00:45:47,164 --> 00:45:49,875 பார், எட், நான் நேசித்த ஒருவன் என்னால் இறந்துவிட்டான். 493 00:45:51,752 --> 00:45:52,961 நான் அதற்கு ஒருபோதும் தண்டனை அனுபவிக்கவில்லை. 494 00:46:01,720 --> 00:46:03,972 உனக்காக வேறு யாராவது முடிவெடுக்க விடாதே. 495 00:46:05,724 --> 00:46:06,974 நீ செய்தது போல. 496 00:46:06,975 --> 00:46:08,143 நான் செய்தது போல. 497 00:46:12,022 --> 00:46:13,023 இனி நடக்காது. 498 00:46:18,820 --> 00:46:20,781 பார், அவர்கள் என்னைப் பிடிப்பது முக்கியமில்லை. 499 00:46:21,573 --> 00:46:22,866 பிரைம் ஃபைண்டர் உன்னிடம் இருக்கும். 500 00:46:23,575 --> 00:46:24,868 எனக்கு அது முக்கியம்தான். 501 00:46:26,912 --> 00:46:28,121 நீ எனக்கு முக்கியம். 502 00:46:31,625 --> 00:46:32,709 இதைவிட. 503 00:46:38,757 --> 00:46:40,259 கேள், நீ போ. 504 00:46:41,969 --> 00:46:42,970 போ. 505 00:48:46,510 --> 00:48:49,512 {\an8}காலை வணக்கம். முன்னெப்போதும் நடக்காத சமீபத்திய தரவு கசிவைத் தொடர்ந்து... 506 00:48:49,513 --> 00:48:51,013 {\an8}NSA தலைமையகம் ஃபோர்ட் மியாட், அமெரிக்கா 507 00:48:51,014 --> 00:48:53,683 {\an8}...ஊழல் குற்றச்சாட்டுகள் மீது தேசிய பாதுகாப்பு நிறுவனம் 508 00:48:53,684 --> 00:48:55,435 விசாரணையைத் தொடங்கியிருக்கிறது. 509 00:48:56,019 --> 00:48:59,898 பல முக்கிய திட்டங்கள் மூடப்பட்டு, மேலதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். 510 00:49:00,524 --> 00:49:02,233 உளவுத்துறைக்கான செனட் தேர்வுக் குழுவுக்கும் 511 00:49:02,234 --> 00:49:04,361 நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம். 512 00:49:04,903 --> 00:49:07,613 தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் உத்தரவின் பேரில், 513 00:49:07,614 --> 00:49:09,949 கண்காணிப்பு நடவடிக்கைகளின் தலைமை இயக்குநராக 514 00:49:09,950 --> 00:49:12,327 ஆண்ட்ரூ கார்ட்டருக்கு NSA பதவி உயர்வு கொடுத்திருக்கிறது. 515 00:49:12,911 --> 00:49:14,912 அவர் கண்காணிப்பு பிரிவின் ஒட்டுமொத்த செயல்பாட்டு 516 00:49:14,913 --> 00:49:19,001 மற்றும் வியூக வகுப்புக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வார். 517 00:49:19,793 --> 00:49:22,128 நான் இப்போது விஷயங்களை தலைமை இயக்குனர் கார்ட்டரிடம் ஒப்படைக்கிறேன், 518 00:49:22,129 --> 00:49:25,716 சுருக்கமாக சில கருத்துக்களை வழங்கிய பிறகு உங்கள் கேள்விகளுக்கு அவர் பதிலளிப்பார்கள். 519 00:49:28,260 --> 00:49:30,470 திரு. கார்ட்டர், இங்கே! வாஷிங்டன் போஸ்ட். 520 00:49:32,764 --> 00:49:33,931 காலை வணக்கம். 521 00:49:33,932 --> 00:49:35,016 {\an8}முக்கியச் செய்திகள் 522 00:49:35,017 --> 00:49:36,684 {\an8}ஆண்ட்ரூ கார்ட்டர் புதிய செயல்பாடுகளின் இயக்குநர் 523 00:49:36,685 --> 00:49:37,769 {\an8}NSA தரவு கசிவுகள் 524 00:50:13,639 --> 00:50:17,976 {\an8}ஸ்டார்ட் 525 00:51:47,024 --> 00:51:49,026 வசனத் தமிழாக்கம் அருண்குமார்