1 00:00:01,668 --> 00:00:05,463 ஆட்டோபானின் நடுவில் போக்குவரத்து நெரிசலாக இருந்தது, 2 00:00:05,464 --> 00:00:08,633 நான் ஓட்டுநரிடம், “நண்பா, 3 00:00:08,634 --> 00:00:10,551 என் மகன் ரெடிஸேஃப் இன்விடேஷனலில் விளையாகிடுறான், 4 00:00:10,552 --> 00:00:12,346 நான் அந்த விமானத்தைப் பிடிக்க நீதான் உதவணும்” என்றேன். 5 00:00:12,846 --> 00:00:14,263 - அது பைத்தியக்காரத்தனம். - ஆமாம். 6 00:00:14,264 --> 00:00:18,267 பொறுங்க, சரி. நீங்க எவ்வளோ காலமா ஜெர்மனியில இருக்கீங்க? 7 00:00:18,268 --> 00:00:20,103 கிட்டத்தட்ட ஒரு வருஷம். ஆமாம். 8 00:00:20,687 --> 00:00:21,562 உனக்கு இந்த இடம் பிடிக்கும், கண்ணா. 9 00:00:21,563 --> 00:00:26,317 நிறைய அரண்மனைகள் இருக்கு மற்றும் இவையெல்லாம் வரலாறு. ரொம்ப அழகாக இருக்கும். 10 00:00:26,318 --> 00:00:28,236 அடுத்தக் கோடையில நீ வரணும், சரியா? 11 00:00:28,237 --> 00:00:30,821 நீயும்தான், ஸீரோ. உன்னை உபசரிப்பது சந்தோஷம்தான். 12 00:00:30,822 --> 00:00:31,865 நன்றி. 13 00:00:32,366 --> 00:00:34,201 உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு. 14 00:00:36,119 --> 00:00:38,496 - அம்மா, அம்மா. - வேண்டாம், சான்டி, பரவாயில்ல. 15 00:00:38,497 --> 00:00:41,708 நான் இங்க இருப்பது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். 16 00:00:42,668 --> 00:00:43,584 பாரு, 17 00:00:43,585 --> 00:00:47,798 நான் ரொம்ப காலமாக உங்களை பிரிந்திருந்ததற்கு வருந்துகிறேன், சரியா? அது என் நோக்கமே இல்ல. 18 00:00:48,632 --> 00:00:52,093 - பரவாயில்ல. - இல்ல, சான்டி, அப்படியில்ல. 19 00:00:52,094 --> 00:00:53,387 நான் உங்களோடு இருந்திருக்கணும். 20 00:00:55,222 --> 00:00:58,016 சரி. ஆனா நீ விளையாடுவதை மறுபடியும் பார்ப்பது? அடேங்கப்பா. 21 00:00:59,643 --> 00:01:01,353 எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. 22 00:01:05,315 --> 00:01:07,025 நான் இன்ஸ்டாகிராமில் ஃபாலோ பண்ணுறேன். 23 00:01:07,693 --> 00:01:11,321 அந்த போஸ்ட்டுகளைப் பார்த்தப்போ, குடும்பத்தின் ஒரு அங்கமாகவே உணர்ந்தேன். 24 00:01:17,911 --> 00:01:20,705 எப்படியோ, நான் உன்னை வாழ்த்தவே வந்தேன். 25 00:01:20,706 --> 00:01:22,999 - சான்டிய மறுபடியும் விளையாட்டுக்கு... - ஆமா. 26 00:01:23,000 --> 00:01:25,002 ...கொண்டு வந்ததுக்கு உனக்கு என் நன்றிகள், எலினா. 27 00:01:26,003 --> 00:01:27,462 சரி. 28 00:01:29,006 --> 00:01:30,257 உன்னை நேசிக்கிறேன், கண்ணா. 29 00:01:32,301 --> 00:01:34,468 - பொறுங்க, எங்கே போறீங்க? - திரும்ப ஹோட்டலுக்குப் போகிறேன். 30 00:01:34,469 --> 00:01:36,679 அங்கிருந்து பார்க்கப் போகிறேன். கவனச் சிதறலை உண்டாக விரும்பலை. 31 00:01:36,680 --> 00:01:40,474 அப்பா, உங்களால கவனச் சிதறல் ஆகாது. இங்கே உண்மையில் 25,000 பேர் இருக்காங்க. 32 00:01:40,475 --> 00:01:41,809 - இல்ல. - வந்து... 33 00:01:41,810 --> 00:01:43,854 ப்ரைஸ், உங்களால அவருக்கு பாஸ் வாங்கித் தர முடியும்தானே? 34 00:01:46,398 --> 00:01:47,399 சரியா? 35 00:01:53,363 --> 00:01:54,989 ரெடிஸேஃப் இன்சூரன்ஸ் இன்விடேஷனல் 36 00:01:54,990 --> 00:01:57,366 {\an8}1 - பார் 4 483 யார்ட்ஸ் 37 00:01:57,367 --> 00:02:00,329 {\an8}பிஜிஏ - அமெரிக்க தொழில்முறை கோல்ஃபர்கள் சங்கம் 38 00:02:03,373 --> 00:02:05,166 {\an8}- இந்தா. - இந்தா. 39 00:02:05,167 --> 00:02:06,250 {\an8}ரெடிஸேஃப் இன்விடேஷனல் விஐபி 40 00:02:06,251 --> 00:02:07,418 நன்றி, மேனி. 41 00:02:07,419 --> 00:02:08,627 சரி, நாம இப்போ சமமாகிட்டோம்தானே? 42 00:02:08,628 --> 00:02:10,588 - கிட்டத்தட்ட. - “கிட்டத்தட்ட” என்றால் என்ன அர்த்தம்? 43 00:02:10,589 --> 00:02:13,466 அட என்ன இது? ஒரு ஞாயிற்றுக்கிழமை நீ என்னை அதிகாலை 4 மணிக்கு கூப்பிட்டே. 44 00:02:13,467 --> 00:02:14,759 - ஆமா... - கிட்டத்தட்ட சமமாகிவிட்டோம். 45 00:02:14,760 --> 00:02:16,845 ப்ரைஸ், பாரு, நண்பா. இதை வாழ்க்கை முழுவதும் செய்ய முடியாது. 46 00:02:20,140 --> 00:02:22,142 {\an8}வீலர் 47 00:02:23,185 --> 00:02:26,188 கேரி, இந்தாங்க. எல்லா அனுமதிகளும் உள்ளன. 48 00:02:26,772 --> 00:02:29,148 - அடடா. நன்றி, ப்ரைஸ். - சரி. 49 00:02:29,149 --> 00:02:31,984 செசிலியா, நீ என் மனதை உடைக்கிறாய் 50 00:02:31,985 --> 00:02:33,486 தினமும் என் நம்பிக்கையை குலைக்கிறாய் 51 00:02:33,487 --> 00:02:34,570 உனக்கு ரசிகர்கள் உண்டா? 52 00:02:34,571 --> 00:02:36,989 போ, போ. ஆட்டோகிராஃப் போடு. 53 00:02:36,990 --> 00:02:38,199 உன்னை நேசிக்கிறோம், சான்டி. 54 00:02:38,200 --> 00:02:40,494 - கோல்ஃபின் அடுத்த பெரிய வீரனை சிந்திக்கட்டும். - நான்... 55 00:02:41,578 --> 00:02:42,495 ஹாய். 56 00:02:42,496 --> 00:02:43,914 வா. ஜாலியா இரு. 57 00:02:51,463 --> 00:02:52,964 உங்களைப் பார்த்ததில் அவன் ரொம்ப உற்சாகமாக இருக்கிறான். 58 00:02:52,965 --> 00:02:54,049 ஆமா. 59 00:02:55,676 --> 00:02:59,262 இது முக்கியமான நாள் நமக்கும் பேச வாய்ப்பு கிடைக்கலை. 60 00:02:59,263 --> 00:03:01,472 - இது சங்கடமா இருக்கக் கூடாது என நினைக்கிறேன். - சரி. 61 00:03:01,473 --> 00:03:03,684 - ப்ரைஸ், எதுவும் சொல்லாதீங்க. - நான்... 62 00:03:04,393 --> 00:03:07,353 நீங்க அவனுடைய கோச். நான் குறுக்கே வர மாட்டேன். 63 00:03:07,354 --> 00:03:08,729 உண்மையாகவே. 64 00:03:08,730 --> 00:03:12,734 என் மகனுக்கு ஆதரவாக இருக்கும் ஒரு வாய்ப்புதான் எனக்கு வேணும். 65 00:03:14,486 --> 00:03:16,530 - இதுக்கு நன்றி. - சரி. 66 00:03:21,535 --> 00:03:24,203 நீங்க அவரை அனுப்பணும், மிட்ஸ். இது அவருக்கு ஏற்ற இடமில்ல. 67 00:03:24,204 --> 00:03:27,291 எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை. அதை சான்டிதான் முடிவு செய்யணும். 68 00:03:29,084 --> 00:03:30,209 {\an8}ப்ரைஸ்? 69 00:03:30,210 --> 00:03:32,712 {\an8}வந்து, நானும் மிட்ஸ் சொல்வதை ஒத்துக்குறேன். செய்யறதுக்கு எதுவுமில்லைன்னு தோணுது. 70 00:03:32,713 --> 00:03:35,882 வந்து, அவனை கவனம் செல்லுத்த உதவணும். 71 00:03:35,883 --> 00:03:36,966 அவன் நல்லா இருப்பான். 72 00:03:36,967 --> 00:03:38,302 சரி. சரி. 73 00:03:39,219 --> 00:03:40,136 ஆமா. 74 00:03:40,137 --> 00:03:42,723 சான்டி, தயாரா? போகலாம், எல்விஸ். 75 00:03:43,432 --> 00:03:45,100 டிரைவிங் ரேஞ்சுக்கு போக வேண்டிய நேரம். 76 00:03:56,153 --> 00:03:57,821 இன்டியானாவுக்கு வருக கவனமாக வண்டி ஓட்டவும் 77 00:04:28,727 --> 00:04:29,727 {\an8}ரெடிஸேஃப் இன்விடேஷனல் 78 00:04:29,728 --> 00:04:33,022 {\an8}இதுதான், நண்பர்களே. ரெடிஸேஃப் இன்விடேஷனலின் கடைசி சுற்று. 79 00:04:33,023 --> 00:04:37,109 {\an8}ஹலோ, நண்பர்களே. மாஸ்டர்ஸ் சாம்பியன் ட்ரெவர் எம்மெல்மனோடு, நான் ஜிம் நாண்ட்ஸ். 80 00:04:37,110 --> 00:04:39,529 ஜிம், இந்த வாரம் பிரமாதமாக இருந்தது, 81 00:04:39,530 --> 00:04:43,449 அதாவது, இரண்டு-முறை மாபெரும் சாம்பியன்ஷிப் வென்ற காலின் மொரிக்காவாவை விட யாருமே, 82 00:04:43,450 --> 00:04:45,868 நன்றாக விளையாடியதில்லை. 83 00:04:45,869 --> 00:04:47,954 மொரிக்காவா பிரமாதமாக விளையாடினாலும், 84 00:04:47,955 --> 00:04:49,872 நம்மால் இன்னொரு கதையையும் பார்க்க முடிகிறது. 85 00:04:49,873 --> 00:04:51,958 அதுதான் சான்டி வீலர், 86 00:04:51,959 --> 00:04:55,795 17 வயது அமெச்சூர், இந்த வாரத்தின் தடைகளைத் தாண்டி, 87 00:04:55,796 --> 00:04:57,714 இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 88 00:04:58,298 --> 00:04:59,299 என்ன ஆச்சு? 89 00:04:59,883 --> 00:05:01,133 இது வெறும் சாதாரண கோல்ஃப் கோர்ஸ்தான். 90 00:05:01,134 --> 00:05:02,636 அருமை. இப்போது போய் அசத்து. 91 00:05:17,317 --> 00:05:18,902 மொரிக்காவா 92 00:05:27,744 --> 00:05:30,580 இப்போது டீ பகுதியில், கலிஃபோர்னியா, லா கனடாவில் இருந்து, 93 00:05:30,581 --> 00:05:31,999 காலின் மொரிக்காவா. 94 00:05:46,805 --> 00:05:48,806 மொரிக்காவாவிடமிருந்து நல்ல தொடக்கம். 95 00:05:48,807 --> 00:05:52,769 318 யார்ட்ஸ் தூரம், நேராக இடது பக்க துளைக்கு. 96 00:05:54,688 --> 00:05:57,106 இப்போதுதான் வீலருக்கு உண்மையான சோதனை ஆரம்பம். 97 00:05:57,107 --> 00:06:00,318 நீ வெளியில் வரும் போது உன் பின் கூட்டம் நிற்கும் போது, 98 00:06:00,319 --> 00:06:02,320 நீ இந்த தருணத்தைச் சந்திப்பாயா? 99 00:06:02,321 --> 00:06:04,989 இப்போது, டீ பகுதியில் இன்டியானா, ஃபோர்ட் வெய்னில் இருந்து, 100 00:06:04,990 --> 00:06:07,075 சான்டியாகோ வீலர். 101 00:06:19,379 --> 00:06:20,380 நல்லா ஆடு, சான்டி. 102 00:06:40,943 --> 00:06:42,653 எதிர்பார்த்த தருணம் நடந்துவிட்டது. 103 00:06:44,404 --> 00:06:47,991 இது சான்டி வீலரின் மிகப் பெரிய டிரைவ். 104 00:06:50,244 --> 00:06:51,578 அட்டகாசம். 105 00:06:52,871 --> 00:06:55,414 இடுப்பை இன்னும் கொஞ்சம் வேகமாக திருப்ப பயப்படாதே, 106 00:06:55,415 --> 00:06:57,501 அப்பத்தான் இன்னும் அதிக தூரம் அடிக்கலாம். 107 00:07:12,850 --> 00:07:14,350 அப்படித்தான்! 108 00:07:14,351 --> 00:07:15,811 இறுதிச் சுற்று காலின் மொரிக்காவா 109 00:07:29,449 --> 00:07:30,826 மொரிக்காவா -9 வீலர் -6 110 00:07:52,764 --> 00:07:54,348 ட்ரெவர், இங்கே ஒரு பெரிய லோ ஷாட் இருக்கிறது. 111 00:07:54,349 --> 00:07:57,018 இதை வீலர் நெருக்கமாக அடித்தால், எட்டு ஸ்ட்ரோக் கம்மியாக இருப்பார், 112 00:07:57,019 --> 00:07:59,188 அதோடு, மொரிக்காவாவை விட ஒரு ஷாட் குறைவாக இருப்பார். 113 00:07:59,730 --> 00:08:01,647 ஆமாம், அது ஒரு கடினமான நிலைதான், ஜிம். 114 00:08:01,648 --> 00:08:02,773 இந்த விதமான ஷாட்கள்தான் 115 00:08:02,774 --> 00:08:05,736 போட்டியில் நம்மை ஏற்றவோ இறக்கவோ வைக்கும். 116 00:08:13,952 --> 00:08:15,661 - போ. - அப்படித்தான், செல்லம்! 117 00:08:15,662 --> 00:08:17,497 அந்த ஹோலில் விழு! 118 00:08:18,081 --> 00:08:19,499 போ, போ, போ, போ. 119 00:08:23,003 --> 00:08:23,921 அய்யோ. 120 00:08:26,757 --> 00:08:28,216 - அப்படித்தான்! - அடடா! 121 00:08:28,217 --> 00:08:31,135 சான்டி வீலர் குறுகிய ஸ்ட்ரோக்கால் ஈகிள் பெற்றுவிட்டார். 122 00:08:31,136 --> 00:08:34,138 பிஜிஏ டூர் வரலாற்றில், எட்டாவது முறையாக மட்டுமே, 123 00:08:34,139 --> 00:08:37,350 இறுதி சுற்றில் ஒரு அமெச்சூர் முன்னிலையைப் பகிர்ந்துள்ளார். 124 00:08:37,351 --> 00:08:38,893 - வா, அப்பா! - நாள் முழுசும்! 125 00:08:38,894 --> 00:08:41,269 - பாருங்க, அப்பா! பாருங்க! - நம்ப முடியலை. 126 00:08:41,270 --> 00:08:44,024 - பேம், பேம், பூம். - அப்படித்தான்! 127 00:08:48,987 --> 00:08:51,489 {\an8}ஓ-ஹோ. மக்களே, அது மின்னல். 128 00:08:51,490 --> 00:08:54,033 {\an8}ரெடிஸேஃப் இன்விடேஷனலில் நம் முன்னிலை வீரர்கள் ஒன்பது ஸ்ட்ரோக் குறைவாக, 129 00:08:54,034 --> 00:08:56,744 {\an8}சமமாக இருக்கும் நிலையில், இடி புயலின் காரணமாக நம் போட்டியில் தாமதம் ஏற்படும் என்று தோன்றுகிறது. 130 00:08:56,745 --> 00:08:58,956 இறுதி சுற்று - டி1 காலின் மொரிக்காவா டி1 சான்டியாகோ வீலர் 131 00:09:03,502 --> 00:09:05,044 - ஹே. - ஹே. 132 00:09:05,045 --> 00:09:07,213 அந்த புயல் நம்மைக் கடந்துவிட்டது போலத் தெரியுது. 133 00:09:07,214 --> 00:09:08,965 நாம் சீக்கிரம் மைதானத்திற்கு போகலாம்னு அதிகாரிகள் சொல்றாங்க. 134 00:09:08,966 --> 00:09:11,092 - சரி. சரி. - நீ நலமா? 135 00:09:11,093 --> 00:09:12,970 ஹே, ஹே. உனக்கு பசிக்கும்னு தோணுச்சு. 136 00:09:13,804 --> 00:09:15,806 ஆமா, நல்ல யோசனை. சாப்பிட ஏதாவது கொண்டு வருவது. 137 00:09:17,641 --> 00:09:18,809 நான் பை பக்கத்தில் இருக்கேன். 138 00:09:23,021 --> 00:09:24,021 டர்கி சாப்பிடுவியா? 139 00:09:24,022 --> 00:09:25,566 ஆம். அருமை. 140 00:09:31,029 --> 00:09:32,447 வந்து, அதைக் கொஞ்சம் பாக்குறியா? 141 00:09:33,198 --> 00:09:34,824 9-ல் - சமம் - காலின் மொரிக்காவா சான்டியாகோ வீலர் 142 00:09:34,825 --> 00:09:37,869 ரெடிஸேஃப் இன்விடேஷனலின் முன்னிலையில் சான்டி வீலர் சமநிலையில் இருக்கிறானா? 143 00:09:37,870 --> 00:09:40,288 இன்னும் எட்டு துளைகள் உள்ளன. 144 00:09:40,289 --> 00:09:43,082 முதல் பத்து துளைகளைப் போல அந்த எட்டு துளைகளும் இருந்தால், 145 00:09:43,083 --> 00:09:45,085 நீ டூர் கார்டுடன்தான் இங்கிருந்து கிளம்புவாய். 146 00:09:47,504 --> 00:09:49,298 கடவுளே, ஆலன் கவுன்டி ஜூனியர்ஸ் போட்டி நினைவிருக்கா? 147 00:09:50,632 --> 00:09:53,593 இருக்கலாம். தெரியலை. அந்த டோர்ணமென்டுகள் எல்லாமே தெளிவில்லாம இருக்கு. 148 00:09:53,594 --> 00:09:56,804 18வது துளைக்கு போகும்போது, நீ பத்து ஸ்ட்ரோக்ஸ் முன்னிலையில் இருந்தாய். பத்து. 149 00:09:56,805 --> 00:09:59,391 ரொம்ப வெப்பமாக இருந்ததால், பாதிப் பேர் வெளியேறிட்டாங்க. 150 00:10:00,184 --> 00:10:04,021 ஆனா, நீ அப்படி செய்யல. நீ அதுக்கெல்லாம் கவலப்படலை. நீ தொடர்ந்து விளையாடிக்கிட்டே இருந்த. 151 00:10:05,522 --> 00:10:10,736 இந்த விளையாட்டை உன்னால் உயர்ந்த அளவில் விளையாட முடியும்னு அன்னைக்குதான் தெரிஞ்சுகிட்டேன். 152 00:10:11,445 --> 00:10:14,198 சரியா? எனவே, அப்போ உன்னிடம் சொன்னதை திரும்ப இப்போ சொல்லப் போறேன். 153 00:10:18,535 --> 00:10:19,870 உன்னால இது முடியும், சான்டி. 154 00:10:22,623 --> 00:10:23,957 நான் ஜெயிப்பேன்னு உண்மையாவே நினைக்கிறீர்களா? 155 00:10:24,541 --> 00:10:26,335 என் மனசுல எந்த சந்தேகமும் இல்ல. 156 00:10:39,806 --> 00:10:41,308 நான் விலகி போனதுக்கு மன்னிச்சிடு, செல்லம். 157 00:10:42,935 --> 00:10:44,436 அதுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. 158 00:10:46,230 --> 00:10:48,690 நான் போராடிக்கிட்டு இருந்தேன். நான் வந்து... 159 00:10:50,317 --> 00:10:53,862 நான் என் மனதைத் தெளிவாக்க வேண்டியிருந்தது. உனக்கு நல்லவனாக இருக்க வேணும்னா. 160 00:10:54,655 --> 00:10:55,822 உன் அம்மாவுக்கும் கூட. 161 00:10:56,949 --> 00:10:58,367 பிறகு... 162 00:10:59,993 --> 00:11:01,703 எப்படி திரும்பி வரதுன்னு தெரியலை. 163 00:11:04,957 --> 00:11:09,962 உன்னோட இருக்க முடியல என்பதுதான் எனக்கு இருக்கும் பெரிய வருத்தம். 164 00:11:10,838 --> 00:11:15,591 அந்த கோர்ஸில் ஒன்றாக நடந்து போவது. அப்பாவும் மகனுமாக. 165 00:11:15,592 --> 00:11:17,094 நாம எப்போதும் பேசியது போல. 166 00:11:27,187 --> 00:11:28,271 நான் அதை அப்படியே, 167 00:11:28,272 --> 00:11:30,189 - பச்சை பகுதியைத் தாண்டி 60 யார்டுகள் அடிச்சேன்... - ப்ரைஸ். 168 00:11:30,190 --> 00:11:32,317 இதோ வந்துட்டான். நல்லா இருக்கியா? 169 00:11:32,901 --> 00:11:36,404 ஆமா. நான்... உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசலாமா? 170 00:11:36,405 --> 00:11:38,657 சரி. என்ன விஷயம்? 171 00:11:39,408 --> 00:11:41,994 ஒண்ணும் இல்ல. நான்... 172 00:11:43,704 --> 00:11:45,122 வந்து, பெரிய விஷயம் இல்ல, ஆனா, நான்... 173 00:11:45,956 --> 00:11:48,542 மீதி சுற்றுக்கு என்னுடைய அப்பா காடியாக இருக்க விரும்புறேன். 174 00:11:53,130 --> 00:11:54,047 இப்பவா? 175 00:11:55,966 --> 00:11:59,677 அவர் எல்லா ஜூனியர்ஸ் போட்டியிலும், என் வாழ்க்கை முழுவதும் காடியாக இருந்திருக்கார், 176 00:11:59,678 --> 00:12:04,015 அதனால அவர் இல்லாம இதை முடிப்பது விசித்திரமா இருக்கு. 177 00:12:04,016 --> 00:12:06,268 இல்ல, எனக்குப் புரியுது. நான்... 178 00:12:07,144 --> 00:12:10,313 உன்னுடைய வாழ்க்கையின் மிகச் சிறந்த கோல்ஃபை நீ விளையாடும்போது, 179 00:12:10,314 --> 00:12:13,774 ஒரு சுற்றின் நடுவுல காடியை மாற்றுவது நல்லதான்னு யோசிக்கிறேன். 180 00:12:13,775 --> 00:12:16,110 அவர் வெறும் காடி இல்ல, தெரியுமா? 181 00:12:16,111 --> 00:12:18,487 - அவர் என் அப்பா... - தெரியும். 182 00:12:18,488 --> 00:12:20,699 ...விளையாட்டை எப்படி விளையாடணும்னு அவர்தான் சொல்லி கொடுத்தார். 183 00:12:21,742 --> 00:12:22,826 எனக்குப் புரியுது. நான்... 184 00:12:23,744 --> 00:12:26,621 நீ தடுமாறும் படியாக எதையும் செய்யக் கூடாதுன்னு கவலைப்படுறேன் 185 00:12:26,622 --> 00:12:28,039 அது உன் மனதைக் குழப்பலாம் இல்ல... 186 00:12:28,040 --> 00:12:29,457 நீங்க எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கீங்க. 187 00:12:29,458 --> 00:12:31,543 மனதை எப்படி தெளிவாக வச்சிக்கணும்னு நீங்க சொல்லிக் கொடுத்திருக்கீங்க. 188 00:12:32,044 --> 00:12:34,004 “சத்தத்தை கண்டுக்காதே”, ஞாபகமிருக்கா? 189 00:12:40,093 --> 00:12:41,678 உறுதியாக இதை செய்ய விரும்புறியா? 190 00:12:44,223 --> 00:12:45,641 இதைத்தான் செய்ய விரும்புறேன். 191 00:12:46,850 --> 00:12:48,852 சரி, உன் இஷ்டம். 192 00:12:51,522 --> 00:12:52,855 பொறுங்க, ஹே. நீங்க... 193 00:12:52,856 --> 00:12:56,859 என்னை மன்னிச்சிடுங்க, சரியா? உங்களுக்கு கஷ்டமில்லையே? 194 00:12:56,860 --> 00:12:59,862 இல்ல, எனக்கு ஒண்ணுமில்ல. ஹே, என்னைப் பத்தி கவலைப்படாதே. 195 00:12:59,863 --> 00:13:03,866 நீ சிறப்பா விளையாடணும், அதைத்தான் நீ செய்யவும் போற. 196 00:13:03,867 --> 00:13:06,286 சத்தத்தைக் கண்டுக்காதே. உன்னால இது முடியும். 197 00:13:07,996 --> 00:13:09,039 சரி. 198 00:13:15,295 --> 00:13:17,588 மக்களே, ஒரு மணிநேர தாமதத்துக்குப் பிறகு, நாம் வந்துட்டோம். 199 00:13:17,589 --> 00:13:20,132 மேலும், ட்ரெவ், இது போன்ற இடைவேளையிலிருந்து வெளிவந்து, 200 00:13:20,133 --> 00:13:21,843 மீண்டும் போட்டிக்குத் தயாராவதற்கு முக்கியமானது என்ன? 201 00:13:21,844 --> 00:13:24,262 நிலைத்தன்மையும் வழக்கமும். 202 00:13:24,263 --> 00:13:26,013 நீங்கள் சிறப்பாக விளையாடுவது உங்களுக்குத் தெரியும். 203 00:13:26,014 --> 00:13:28,099 கடந்த பத்து துளைகளில் செய்ததைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதை மட்டும் 204 00:13:28,100 --> 00:13:29,934 உங்களுக்கு நினைவூட்டிக்கொள்ள வேண்டும். 205 00:13:29,935 --> 00:13:30,978 பிரமாதம்! 206 00:13:35,732 --> 00:13:38,192 - இதற்கு முன் இப்படி நடந்ததே இல்லை. - இதை நம்ப முடியலை. 207 00:13:38,193 --> 00:13:41,028 சான்டி வீலர் தன்னுடைய காடியை மாற்றிவிட்டார் போலும். 208 00:13:41,029 --> 00:13:43,155 - சான்டி? சான்டி? - ப்ரைஸ் கேஹில், 209 00:13:43,156 --> 00:13:47,326 பிஜிஏ டூரில் 15 ஆண்டுகளாக விலகி இருந்து, போன வாரம் முழுவதும் தலைப்புச்செய்தியாக இருந்தார், 210 00:13:47,327 --> 00:13:50,371 - இப்போ அவர் காடி இல்லை. - கண்ணா. என்ன நடக்குது? 211 00:13:50,372 --> 00:13:52,957 - இல்ல, பரவாயில்ல. - இல்ல. பரவாயில்லன்னு சொல்லாதே. 212 00:13:52,958 --> 00:13:55,585 நீ என்ன செய்யற? ப்ரைஸ் எங்கே? 213 00:13:55,586 --> 00:13:57,713 சான்டி? நீ விளையாடணும். 214 00:13:59,047 --> 00:14:00,131 என்னை நம்புங்க. 215 00:14:00,132 --> 00:14:01,216 இல்ல... 216 00:14:02,342 --> 00:14:03,343 அடிச்சு ஆடு, கண்ணா. 217 00:14:14,104 --> 00:14:15,105 சூப்பர். 218 00:14:18,442 --> 00:14:20,277 அப்படித்தான், அன்பே. அப்படித்தான். 219 00:14:22,279 --> 00:14:23,447 அப்படித்தான். 220 00:14:24,114 --> 00:14:26,657 {\an8}பார் 5 545 யார்டுகள் 221 00:14:26,658 --> 00:14:30,536 14வது துளையில் இருக்கிறோம், அங்கு சான்டி வீலர் புல்வெளியை அடைந்துள்ளார், 222 00:14:30,537 --> 00:14:32,872 மொரிக்காவாவிற்கு இது பெரிய பாதிப்பாக இருக்கலாம். 223 00:14:32,873 --> 00:14:36,626 அவர் பந்தை கண்டுபிடிக்க முடியாவிட்டால், மூன்றாவது ஸ்ட்ரோக்கை தொடக்கத்தில் இருந்துதான் அடிக்க வேண்டும். 224 00:14:36,627 --> 00:14:40,380 வீலர் பதுங்கி இருக்கும்போது, இப்போது அவருக்கு நிச்சயம் இது பிடிக்காது. 225 00:14:41,798 --> 00:14:43,382 என்ன பண்ணுற? 226 00:14:43,383 --> 00:14:46,010 தண்ணீருக்கு முன் பந்தை நிறுத்துவதற்காக, ப்ரைஸ் இங்கிருந்து ஒன்பதாவது துளைக்கு அடிக்கச் சொன்னார். 227 00:14:46,011 --> 00:14:48,554 கண்ணா, மொரிக்காவா மோசமான சூழலில் இருக்கான். இது நாம் அடிக்க வேண்டிய நேரம். 228 00:14:48,555 --> 00:14:50,390 ஃபோர் அயர்ன் பயன்படுத்த வாழ்த்துகள். 229 00:14:51,892 --> 00:14:52,893 ஆடு. 230 00:14:57,773 --> 00:14:58,690 அது சரியில்லை. 231 00:14:59,274 --> 00:15:00,733 என்ன நடக்குது? 232 00:15:00,734 --> 00:15:04,821 வந்து, இங்கு சான்டி கவனமாக அருகில் அடிக்கணும், கேரி அகலக் கால் வைக்க வைக்கிறான். 233 00:15:13,956 --> 00:15:16,749 ஐயோ. அது தண்ணீரைத் தாண்டிப் போகாது. 234 00:15:16,750 --> 00:15:19,169 - ஐயோ, கடவுளே. - போ. போ. அங்கே போயிடு. 235 00:15:23,966 --> 00:15:26,717 அவர் பந்தை துளையிலிருந்து 20 அடி தொலைவில் தரையிறக்கியுள்ளார். 236 00:15:26,718 --> 00:15:28,887 ஜிம், மதிப்பெண்ணில் இரண்டு ஸ்ட்ரோக்ஸ் வித்தியாசத்தைப் பார்க்கிறோம். 237 00:15:29,972 --> 00:15:32,098 இந்த சிறுவனின் ஆட்டத்தை நம்ப முடியவில்லை. 238 00:15:32,099 --> 00:15:34,433 சான்டி வீலர், அவரைப் பற்றி புத்தகம் எழுதப்படும்போது, 239 00:15:34,434 --> 00:15:36,644 அந்த ஷாட்டைத்தான் அவர்கள் நினைவில்கொள்ளலாம். 240 00:15:36,645 --> 00:15:37,854 அந்தப் பையனுக்கு நம்பமுடியாத திறமை. 241 00:15:37,855 --> 00:15:40,065 அதாவது, அவன் திடீரென வந்துவிட்டான். 242 00:15:40,858 --> 00:15:41,942 நிச்சயமாக. 243 00:15:49,157 --> 00:15:52,244 சான்டி வீலர் முன்னிலையில்: -10 244 00:15:57,958 --> 00:15:59,585 நன்றாக பெர்டீ செய்தாய். தீயாக இருக்க, நண்பா. 245 00:16:00,210 --> 00:16:01,336 நன்றி, காலின். 246 00:16:10,596 --> 00:16:11,847 என்னிடம் சொல். எதைப் பத்தி யோசிக்குற? 247 00:16:14,141 --> 00:16:15,683 அமைதியா இருக்க முயற்சிக்கிறேன். 248 00:16:15,684 --> 00:16:17,101 அமைதி. 249 00:16:17,102 --> 00:16:19,605 நீதான் போட்டியில் முன்னனியில் இருக்க, மகனே. பந்தை பலமாக அடி. 250 00:16:38,207 --> 00:16:40,083 இடது பக்கம் ஜாக்கிரதை! இடது பக்கம் ஜாக்கிரதை! 251 00:16:40,918 --> 00:16:43,878 அடக் கடவுளே. இது இப்படி நடந்துதான் ஆக வேண்டும். 252 00:16:43,879 --> 00:16:46,048 இது வீலர் செய்த மிகப் பெரிய தவறு. 253 00:16:51,011 --> 00:16:52,179 அது ஆச்சு? 254 00:16:53,597 --> 00:16:55,264 நீ இதை சரியாக செய்யாணும், கண்ணா. 255 00:16:55,265 --> 00:16:56,891 இவனுக்கு எந்த வாய்ப்பும் கொடுக்க கூடாது. 256 00:16:56,892 --> 00:16:58,810 சரியா? அருகே கொண்டு போ. 257 00:17:02,481 --> 00:17:03,899 இப்படித்தான் அது தொடங்கும். 258 00:17:04,691 --> 00:17:06,108 அவனிடம் என்ன சொல்கிறார்? 259 00:17:06,818 --> 00:17:08,069 நல்லவிதமா எதுவும் இல்ல. 260 00:17:14,742 --> 00:17:15,992 இது நல்லதுக்கே இல்லை. 261 00:17:15,993 --> 00:17:19,664 சான்டி வீலருக்கு, இங்கு நிலைமை மோசத்திலிருந்து மிக மோசமாக மாறிவிட்டது. 262 00:17:19,665 --> 00:17:21,875 பந்து மோசமான இடத்தில் இருக்கிறது. 263 00:17:22,584 --> 00:17:25,586 சான்டி தானே சிக்கிக்கொண்ட இந்த பிரச்சனையில் இருந்து வெளி வருவதற்கான 264 00:17:25,587 --> 00:17:29,006 சிறந்த வழியைப் பற்றி சான்டியும், அவரது காடியும் பதட்டமான பேச்சு வார்த்தையில் உள்ளனர். 265 00:17:29,007 --> 00:17:30,926 அவர்களுக்குள் கருத்து வேறுபாடு உள்ளது போலத் தெரிகிறது. 266 00:17:33,679 --> 00:17:36,348 வீலர் இங்கே அகலக்கால் வைக்கிறார். 267 00:17:38,308 --> 00:17:42,020 ஐயோ. அவர் கொஞ்சம் கவனமாக விளையாடி, அவரைத் தோற்கடிக்கலாமே? 268 00:17:49,361 --> 00:17:50,487 மன்னிச்சிடுங்க. நாம... 269 00:17:51,363 --> 00:17:53,865 எனக்கு மன்னிப்பெல்லாம் வேண்டாம். நீ கொஞ்சமாச்சும் யோசி. 270 00:17:53,866 --> 00:17:55,449 நிஜமா. 271 00:17:55,450 --> 00:17:57,368 ஸ்விங் செய்வதற்கு முன் கொஞ்சம் யோசி. 272 00:17:57,369 --> 00:17:59,662 அதாவது, என்ன, இது போல எத்தனை முறை நடந்திருக்கு, நண்பா? 273 00:17:59,663 --> 00:18:00,747 நான் நினைச்சேன். 274 00:18:02,040 --> 00:18:03,166 இதை விடு. 275 00:18:04,710 --> 00:18:06,879 இந்த ஆட்டத்துல கவனம் செலுத்தணும். 276 00:18:14,845 --> 00:18:16,263 சரி, வா போகலாம்! வா. 277 00:18:17,723 --> 00:18:18,724 போயிட்டே இருப்போம். 278 00:18:23,645 --> 00:18:25,062 {\an8}முன்னிலையில்: -9 1 மொரிக்காவா சி - டி2 ஹோமா எம் 279 00:18:25,063 --> 00:18:26,689 {\an8}டி2 கிளார்க் டபிள்யூ டி4 வீலர் எஸ் 280 00:18:26,690 --> 00:18:29,775 மோசமான 15வது துளைக்குப் பிறகு, 281 00:18:29,776 --> 00:18:32,486 மூன்று ஸ்ட்ரோக் கொண்ட 16வது துளையில் ஒரு ஸ்ட்ரோக் அதிகமாக அடித்து 282 00:18:32,487 --> 00:18:34,155 போகீ செய்ய வீலர் முயற்சிக்கிறார். 283 00:18:34,156 --> 00:18:35,240 நீ சொன்னது சரிதான். 284 00:18:38,452 --> 00:18:40,286 நீங்க பெரும்பாலும் இப்படிச் சொல்ல மாட்டீங்களே. 285 00:18:40,287 --> 00:18:41,705 பெரும்பாலும் அது சரியாக இருக்காது. 286 00:18:43,749 --> 00:18:45,167 நான் என்ன சரியாகச் சொன்னேன்? 287 00:18:45,959 --> 00:18:46,960 சான்டி. 288 00:18:47,920 --> 00:18:49,921 நீ அவனை சந்திச்சப்ப, அவன் ஒரு விசேஷமான குழந்தை, 289 00:18:49,922 --> 00:18:51,464 அவனுக்கு உன்னால் உதவ முடியும்னு சொன்ன. 290 00:18:51,465 --> 00:18:54,634 இப்போது, அவனுக்கு உன் உதவி தேவை. 291 00:18:54,635 --> 00:18:58,055 வந்து, நான் என்ன செய்யட்டும்? என்னை விட்டுட்டு போகச் சொன்னான், மிட்ஸ். 292 00:18:58,639 --> 00:19:01,558 சரியா? அவன் ஒரு கோல்ஃபர், நானொரு காடி. இது அவனுடைய முடிவு. 293 00:19:02,768 --> 00:19:04,645 நான் கோல்ஃபரைப் பத்திப் பேசலை. 294 00:19:06,563 --> 00:19:08,106 அந்த சிறுவனைப் பத்திப் பேசுறேன். 295 00:19:27,793 --> 00:19:30,795 அறுபத்து எட்டு குழிகளிலும் புத்திசாத்தினமான ஆட்டம், 296 00:19:30,796 --> 00:19:34,883 சான்டி வீலரின் சக்கரங்கள், பிறகு வலிமை இழக்கின்றன. 297 00:19:35,592 --> 00:19:37,677 தற்போது அந்த இளைஞன் தரவரிசைப் பட்டியலிலிருந்து வேகமாக சரிந்து வருகிறார். 298 00:19:37,678 --> 00:19:39,929 இந்தப் பாவமான சிறுவனை நாம் நினைவில்கொள்வோம், 299 00:19:39,930 --> 00:19:42,890 17 வயது, தற்போது ஆட்டத்தில் தடுமாறி, 300 00:19:42,891 --> 00:19:44,350 தன் காடியுடன் சண்டை போடுகிறான். 301 00:19:44,351 --> 00:19:47,270 ட்ரெவ், இப்போது இருப்பதை விட தனிமையான இடம் பூமியில் உண்டா? 302 00:19:47,271 --> 00:19:49,146 ஆம், இதைப் பார்க்கக் கஷ்டமாக இருக்கு. 303 00:19:49,147 --> 00:19:51,233 அவன் உச்சத்தில் இருந்தான். 304 00:19:52,943 --> 00:19:55,319 ஏன்னா, நான் வெறும் தோட்டக்காரன் மட்டுமல்ல. நான் ஒரு கலைஞன். 305 00:19:55,320 --> 00:20:00,074 நான் கோர்ஸை என் கையில் எடுத்து, வடிவமைப்பேன். அதை செதுக்குவேன். 306 00:20:00,075 --> 00:20:01,367 உன் உதவி வேண்டும், மேனி. 307 00:20:01,368 --> 00:20:02,827 ஒரு வேலையாக இருக்கிறேன், ப்ரைஸ். 308 00:20:02,828 --> 00:20:04,495 புரிகிறது, மன்னிச்சிடு. இடையூறு செய்ய நினைக்கலை. 309 00:20:04,496 --> 00:20:06,664 - என்ன? - உன் கலைஞன் சொற்பொழிவைப் பிறகு கொடுக்கலாம். 310 00:20:06,665 --> 00:20:07,958 இதற்கு ரொம்ப நேரம் ஆகாது. 311 00:20:11,962 --> 00:20:13,129 ஹேய். 312 00:20:13,130 --> 00:20:14,755 புல்தரையில் பந்தை அடி போதும். 313 00:20:14,756 --> 00:20:17,426 சரியா? பச்சைப் பகுதியை மூன்று ஸ்ட்ரோக்கில் அடையலாம். பிறகு எல்லாரும் வீட்டுக்குப் போலாம். 314 00:20:19,386 --> 00:20:21,221 அட என்ன, இதை முடிக்கலாம். 315 00:20:41,491 --> 00:20:44,160 அது வீலரின் மோசமான ஸ்விங். 316 00:20:44,161 --> 00:20:46,705 18வது டீ-பகுதி ஸ்விங்கை வீணடித்துவிட்டார். 317 00:20:47,664 --> 00:20:50,291 வந்து, அவர் சந்தோஷமா இல்ல. அவரைக் குறை சொல்ல முடியாது. 318 00:20:50,292 --> 00:20:51,792 இதுவரை அற்புதமாக இருந்த வாரம், 319 00:20:51,793 --> 00:20:54,296 இப்போது கடுமையாக முடிவடைகிறது. 320 00:21:01,803 --> 00:21:03,347 மொரிக்காவா -10 வீலர் -2 321 00:21:13,315 --> 00:21:14,858 என்ன? என்ன ஆச்சு? 322 00:21:15,734 --> 00:21:17,819 நான் உன்னை கவனித்துக்கொள்ளணுமா? அதுதானா விஷயம்? 323 00:21:18,820 --> 00:21:20,404 நண்பா, நான் உதவ முயன்றேன். 324 00:21:20,405 --> 00:21:22,950 நீ கேட்கலை. எனவே, இதுக்கு நீதான் பொறுப்பு. நான் இல்ல. 325 00:21:25,744 --> 00:21:27,329 என்ன, திரும்ப விட்டுட்டு ஓடப் போறியா? 326 00:21:28,539 --> 00:21:31,625 நான் அப்படி பண்ணா, நீங்க திடீரென காணமல் போய், உங்க மனதை தெளிவுப்படுத்த வேண்டியிருக்குமா? 327 00:21:32,417 --> 00:21:33,459 இதை என் பக்கம் திருப்பாதே. 328 00:21:33,460 --> 00:21:37,631 இப்பவே நான் இதை விட்டுட்டுப் போனால், திரும்ப நீங்க என்னை விட்டுட்டுப் போயிடுவீங்களா? 329 00:21:39,842 --> 00:21:42,427 வந்து, நான் இங்கே தொடர்ந்து இருக்க, நீ எந்தக் காரணமும் தரலையே. 330 00:21:45,472 --> 00:21:46,348 என்ன... 331 00:21:48,100 --> 00:21:49,892 நீர் தெளிப்பான்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. 332 00:21:49,893 --> 00:21:52,645 என்ன நடக்கிறது என்று தெரியவில்லை, ஆனால் இது ஆட்டத்தை தாமதப்படுத்தும். 333 00:21:52,646 --> 00:21:55,023 ஹே! உனக்கு ஒண்ணுமில்லையே? 334 00:21:57,776 --> 00:21:58,861 நீங்களா இப்படி பண்ணீங்க? 335 00:21:59,695 --> 00:22:01,821 வந்து, உனக்குக் கொஞ்சம் இடைவெளி தேவை போல தெரிந்தது. 336 00:22:01,822 --> 00:22:04,323 ஆனா, இது சீக்கிரமா முடிஞ்சிடும். நமக்குக் கொஞ்ச நேரம்தான் அவகாசம் இருக்கு. 337 00:22:04,324 --> 00:22:07,618 ப்ரைஸ், நான்... நீங்க சொன்னது சரிதான். மன்னிச்சிடுங்க. 338 00:22:07,619 --> 00:22:09,245 அதைப் பத்தி கவலைப்படாதே. 339 00:22:09,246 --> 00:22:11,581 ஹேய். இதை நாங்க பாத்துக்குறோம், ப்ரைஸ். 340 00:22:11,582 --> 00:22:14,584 நீங்க பாத்துப்பீங்கன்னு தெரியும், கேரி, ஆனா, என்னை என் கோல்ஃபரோடு கொஞ்சம் பேசவிடுங்க. 341 00:22:14,585 --> 00:22:15,918 வந்து, அவன் இப்போ உங்க கோல்ஃபர் கிடையாது. 342 00:22:15,919 --> 00:22:17,461 வந்து, உண்மையில், அவன் அப்படித்தான். 343 00:22:17,462 --> 00:22:20,674 ஆனா, எங்களுக்கு பேச அவகாசம் தந்தால், நீங்க திரும்ப ஆட்டத்தைக் கலக்கலாம். 344 00:22:22,217 --> 00:22:24,511 நண்பர்களே, நீங்கள் இருவரும் இங்கே இருக்க கூடாது. 345 00:22:25,179 --> 00:22:26,179 நான் அவனுடைய காடி. 346 00:22:26,180 --> 00:22:28,514 வந்து, உண்மையில், பதிவு செய்த காடி நான்தான். 347 00:22:28,515 --> 00:22:30,893 திரு. வீலர், இருவரில் யார் உங்களுடைய காடி? 348 00:22:38,317 --> 00:22:39,234 இவர். 349 00:22:39,985 --> 00:22:42,821 சார், நீங்கள் புல்தரையில் இருந்து விலக வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 350 00:22:47,075 --> 00:22:48,410 கத்துக்குட்டிக்கான நேரம். 351 00:22:57,711 --> 00:22:58,712 கேரி. 352 00:23:03,675 --> 00:23:04,927 எங்களிடமிருந்து விலகி இருங்கள். 353 00:23:05,802 --> 00:23:07,137 அவன் என் மகன். 354 00:23:08,889 --> 00:23:09,890 இனி கிடையாது. 355 00:23:10,807 --> 00:23:12,976 அவன் ஏன் இங்கே இருக்கான் என்றாவது உனக்குத் தெரியுமா, எலினா? 356 00:23:14,019 --> 00:23:17,523 என்னால்தான். என்னால்தான் அவன் இங்கே இருக்கான். 357 00:23:21,026 --> 00:23:22,027 அடச்சே. 358 00:23:27,157 --> 00:23:29,575 ட்ரேவர், தரவரிசையில் சரிந்து, 359 00:23:29,576 --> 00:23:32,036 துரதிர்ஷ்டவசமாக இந்த நீர் தெளிப்பான் இயங்கியது, இவை இரண்டிற்கும் நடுவில்... 360 00:23:32,037 --> 00:23:35,748 இந்தச் சுற்றை அந்தச் சிறுவன் முடிப்பான் என்று யாராலும் எதிர்பார்க்க முடியாது. 361 00:23:35,749 --> 00:23:39,253 திரு. வீலர், நீங்கள் தயாரானதும், ஆட்டத்தைத் தொடரலாம். 362 00:23:40,337 --> 00:23:43,631 வீலரால் ஸ்ட்ரோக்ஸை மீட்க இங்கு எதுவும் பெருசாக இல்லை. 363 00:23:43,632 --> 00:23:46,802 இல்ல, இந்த தருணத்தில், இந்தச் சுற்றை முடிப்பதுதான் அவர் செய்யக்கூடியது. 364 00:23:49,263 --> 00:23:50,848 என்ன செய்றதுன்னே தெரியலை, ப்ரைஸ். 365 00:23:54,393 --> 00:23:58,397 வந்து, பாரில் இருந்து உன் ஆட்டத்தைப் பார்த்தப்ப, ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. 366 00:23:59,147 --> 00:24:01,399 உன்னை எனக்குத் தெரிஞ்ச நாளிலிருந்தே, 367 00:24:01,400 --> 00:24:04,443 நீ தவறான காரணங்களுக்காக, கிளப்பை ஸ்விங் செய்யுற. 368 00:24:04,444 --> 00:24:07,530 எனக்காக, அல்லது உன் அம்மாவுக்காக, 369 00:24:07,531 --> 00:24:12,326 அல்லது ஸீரோவைக் கவருவதற்காக, அல்லது இப்போ உன் அப்பாவுக்காக. 370 00:24:12,327 --> 00:24:15,580 ஆனா, ஆட்டக் களத்துல நான் உன்னை முதல்ல பாத்தது, நினைவிருக்கா? 371 00:24:15,581 --> 00:24:19,000 தனியாக, பலன் ஏதும் எதிர்பார்க்காமல், யாரும் கவனிக்காமல். 372 00:24:19,001 --> 00:24:20,669 அது அற்புதமாக இருந்தது. 373 00:24:22,546 --> 00:24:26,175 ஏன்னா நீ உனக்காக கிளப்பை ஸ்விங் செஞ்ச. ஏன்னா உனக்கு அது பிடிக்கும். 374 00:24:27,259 --> 00:24:29,260 உன் காடியாக, நான் என் கருத்தை சொல்லட்டுமா? 375 00:24:29,261 --> 00:24:31,596 உனக்காக நீ கிளப்பை ஸ்விங் செய்யத் தயாராக இருந்தால், 376 00:24:31,597 --> 00:24:33,849 நான் உன் காடியாக இங்கிருப்பேன். 377 00:24:34,474 --> 00:24:36,142 ஆனா, அப்படி இல்லன்னாலும் பரவாயில்ல. 378 00:24:36,143 --> 00:24:38,102 வீட்டுக்குப் போகலாம், சரியா? 379 00:24:38,103 --> 00:24:42,607 ஆர்விக்குள் போகலாம், கொஞ்சம் பார்பிக்யூ சாப்பிடுவோம், பாட்டு கேட்போம். 380 00:24:42,608 --> 00:24:45,319 இல்லன்னா, மிட்ஸ் பொலம்புவதைக் கூட கேட்போம், 381 00:24:45,986 --> 00:24:48,947 அதுலயே ஒரு நல்ல ராகம் இருக்கும். 382 00:24:51,241 --> 00:24:52,659 ஆனா, முடிவு உன் கையில். 383 00:24:53,785 --> 00:24:56,788 இது உன் ஆட்டம். வேறு யாருடையதும் இல்ல. 384 00:25:10,886 --> 00:25:15,139 செசிலியா, நீ என் மனதை உடைக்கிறாய் 385 00:25:15,140 --> 00:25:18,977 தினமும் என் நம்பிக்கையை குலைக்கிறாய் 386 00:25:19,561 --> 00:25:24,190 ஓ, செசிலியா, நான் மன்றாடுகிறேன் 387 00:25:24,191 --> 00:25:28,320 நீ வீட்டுக்கு வர உன்னைக் கெஞ்சுகிறேன் 388 00:25:28,946 --> 00:25:33,699 செசிலியா, நீ என் மனதை உடைக்கிறாய் 389 00:25:33,700 --> 00:25:37,787 தினமும் என் நம்பிக்கையை குலைக்கிறாய் 390 00:25:37,788 --> 00:25:42,875 ஓ, செசிலியா, நான் மன்றாடுகிறேன் 391 00:25:42,876 --> 00:25:46,213 நீ வீட்டுக்கு வர உன்னைக் கெஞ்சுகிறேன் 392 00:25:52,302 --> 00:25:54,136 புத்திசாலித்தனமான ஆட்டம் என்னன்னா, 7-அயர்னால், 393 00:25:54,137 --> 00:25:57,099 வளைவுக்கு முன் பந்தை நிறுத்தி, பிறகு அந்த மரங்களைச் சுற்றி எளிதாக முன்னேறுவது. 394 00:25:58,308 --> 00:26:00,561 ஆமாம், இது புத்திசாலிதனாமான ஆட்டம்தான். 395 00:26:02,563 --> 00:26:04,815 ஆனா ஏன் நேராக போகாமல், சுத்தி வளைச்சு போகணும்? 396 00:26:11,989 --> 00:26:14,866 அது ஒரு டிரைவர், ஜிம். என்ன விளையாடுகிறாரா? 397 00:26:14,867 --> 00:26:18,536 ஹே, கேளுங்கள், கடந்த ஐந்து துளைகளில் வீலரின் ஆட்டத்தைப் பார்த்த பின், 398 00:26:18,537 --> 00:26:20,913 ஆம், அவர் தரையிலிருந்து டிரைவரால் அடிக்கப் போகிறார். 399 00:26:20,914 --> 00:26:24,000 சான்டி வீலர் குறுக்கு வழியில் போக முயற்சிக்கிறார். 400 00:26:24,001 --> 00:26:25,502 நம்ப முடியவில்லை. 401 00:26:44,771 --> 00:26:46,439 - வீலர் சாதித்துவிட்டார்... - ஆமா! 402 00:26:46,440 --> 00:26:49,775 ...அதளபாதாளத்தில் இருந்து, எப்படியோ இங்கே 18வது துளையில் முடித்திருக்கிறார். 403 00:26:49,776 --> 00:26:51,944 இந்த சிறுவனிடம் நல்ல திறமை இருக்கு, ஜிம். 404 00:26:51,945 --> 00:26:55,489 அவன் ஆட்டம் முடிந்ததென்று நாம் நினைக்கும் போதெல்லாம், “இல்ல. களைகட்டும் நேரம்” என்கிறான். 405 00:26:55,490 --> 00:26:57,326 - அப்படித்தான்! - வீலர் களைகட்டும் நேரம். 406 00:26:58,327 --> 00:27:00,204 நன்றாக சொன்னீர்கள், ஜிம். அது நிலைத்திருக்கும். 407 00:27:10,964 --> 00:27:13,799 18வது துளையில், இது எத்தகைய மகத்தான காட்சி. 408 00:27:13,800 --> 00:27:16,969 நான் இதுவரை பார்த்திராத அளவு கூட்டம் 409 00:27:16,970 --> 00:27:18,930 சான்டி வீலரின் பின்னால் செல்கிறது. 410 00:27:18,931 --> 00:27:22,351 கொஞ்சம் சைமனும், கார்ஃபங்கலும். உங்களுக்கு இது ரொம்பப் பிடிக்கும். 411 00:27:34,404 --> 00:27:35,572 நீங்க என்ன நினைக்குறீங்க? 412 00:27:39,159 --> 00:27:42,620 உண்மையில்...இந்த புட்டை எப்படி அடிப்பதுன்னு தெரியலை. 413 00:27:42,621 --> 00:27:46,250 நான் நேராக அப்படியே அடிச்சிடுவேன், ஆனா முடிவு உன் கையில். 414 00:28:00,013 --> 00:28:03,267 பந்து சாத்தியமற்ற 35-அடி இரட்டை வளைவில் இருக்கு. 415 00:28:23,036 --> 00:28:26,038 வீலர் இங்கே என்ன முயற்சிக்கிறார்? 416 00:28:26,039 --> 00:28:28,457 அவர் துளையிலிருந்து விலகி அடிக்கிறார். 417 00:28:28,458 --> 00:28:30,877 இந்தச் சிறுவனின் கற்பனைத்திறன் எப்படி இருக்கு? 418 00:28:30,878 --> 00:28:34,131 வேறு யாரும் யோசிக்கக் கூடத் தோன்றாத விதத்தில் இவன் யோசிக்கிறான். 419 00:29:02,159 --> 00:29:03,327 வருகிறது! 420 00:29:04,328 --> 00:29:05,536 அடடா. 421 00:29:05,537 --> 00:29:07,206 உள்ள போ, உள்ள போ, உள்ள போ. 422 00:29:12,336 --> 00:29:13,628 - போ! போ! போ! - போ. 423 00:29:13,629 --> 00:29:15,214 ஐயோ, கடவுளே. 424 00:29:22,012 --> 00:29:24,348 சான்டி அற்புதமானவன்! 425 00:29:26,433 --> 00:29:27,434 அது துளையில் விழுந்துடுச்சு. 426 00:29:28,852 --> 00:29:29,853 - சூப்பர். - அற்புதமான புட். 427 00:29:31,104 --> 00:29:34,482 ஒரு வருடத்தில் இருபது வாரங்கள், நாம் இந்த நாற்காலிகளில் அமர்கிறோம், 428 00:29:34,483 --> 00:29:35,942 ஆனால் ஒருபோதும், உண்மையாக ஒருபோதும், 429 00:29:35,943 --> 00:29:39,237 இது போன்ற ஒரு சிறப்புமிக்க பிஜிஏ டூர் நிகழ்வை நாம் பார்த்ததில்லை. 430 00:29:39,238 --> 00:29:40,571 அப்படித்தான், அன்பே! 431 00:29:40,572 --> 00:29:43,950 சான்டியாகோ வீலரும், ப்ரைஸ் கேஹிலும், 432 00:29:43,951 --> 00:29:47,620 இந்த வாரம் ஓக்லஹோமா, டுல்ஸாவில் சாதித்தது, மிகப் பெரிய விஷயம். 433 00:29:47,621 --> 00:29:49,330 அருமையான புட், ரோபோ. 434 00:29:49,331 --> 00:29:51,834 - எனக்கு உன்னைப் பிடிக்கும். நீதான் சிறந்தவள். - எனக்கும்தான். 435 00:30:00,342 --> 00:30:02,635 ப்ரைஸ்! நீங்கள் சாதனையாளர்! 436 00:30:02,636 --> 00:30:04,095 ஆனால், ஜெயிக்க எனக்கு இன்னும் இரண்டு புட் இருக்கு. 437 00:30:04,096 --> 00:30:07,598 தெரியும், மன்னிக்கவும். நாம் கொஞ்ச நேரம் காத்திருக்க வேண்டுமென நினைக்கிறேன். 438 00:30:07,599 --> 00:30:08,808 சரி. 439 00:30:08,809 --> 00:30:10,185 அற்புதமான ஆட்டம். 440 00:30:22,072 --> 00:30:24,074 - சரி, வாங்க செய்யலாம்! வா, அன்பே! - ஜாலி! 441 00:30:45,888 --> 00:30:47,890 லெனாக்ஸ் நகராட்சி கோல்ஃப் மைதானம் உங்களை வரவேற்கிறது 442 00:30:52,519 --> 00:30:53,644 அது என்னது? 443 00:30:53,645 --> 00:30:55,813 ஓபன் டெக்சாஸ் ஸ்க்ராம்பிள் கோடைக்கால கொண்டாட்டம் - கோல்ஃப் போட்டி 444 00:30:55,814 --> 00:30:58,233 {\an8}அதிரவைக்கும் சான்டி: பிஜிஏ போட்டியில் உள்ளூர் டீனேஜ் பையன் அதிர வைத்தான் 445 00:31:01,987 --> 00:31:03,988 {\an8}நீங்க உண்மையாகவே அதைப் பத்தி யோசித்ததே இல்லயா? 446 00:31:03,989 --> 00:31:06,574 நிச்சயமா நான் யோசிப்பேன். நிறைய விஷயங்களைப் பத்தி யோசிப்பேன். 447 00:31:06,575 --> 00:31:09,619 ஏன்னா, உங்களால முடியும், சரியா? அதாவது, எல்லாத்தையும் ஓரம் தள்ளிவிட்டு, 448 00:31:09,620 --> 00:31:13,581 தினமும் பயிற்சி செய்து, மீண்டும் உடற்தகுதி பெற்றால், உங்களால் திரும்ப ஆட முடியும். 449 00:31:13,582 --> 00:31:14,875 இல்ல, எனக்கு வயசாயிடுச்சு. 450 00:31:15,375 --> 00:31:18,044 டேவிட் டுவாலுக்கு 52 வயசு. அவர் அடுத்த வாரம் ஜான் டீரில் விளையாடுகிறார். 451 00:31:18,045 --> 00:31:21,547 அந்தக் கப்பல் ரொம்ப காலத்துக்கு முன்பே என்னைக் கடந்துடுச்சு, அதை உன்னால பார்க்கக் கூட முடியாது. 452 00:31:21,548 --> 00:31:23,674 - அது இப்போ சிங்கபூர்ல இருக்கு. - அட, நான் பார்த்தேன்... 453 00:31:23,675 --> 00:31:25,760 நீங்க காட்ஸ் தம்ப் ஆடி நான் பார்த்தேன். அது முற்றிலும் நம்ப முடியாத ஆட்டம். 454 00:31:25,761 --> 00:31:26,928 அது முற்றிலும் அதிர்ஷ்டம்தான். 455 00:31:26,929 --> 00:31:30,681 ப்ரைஸ்... பொய். சுத்தப் பொய். இது வந்து... 456 00:31:30,682 --> 00:31:32,517 பொறு, இது உங்கள் தந்திரங்களில் ஒன்றா? 457 00:31:32,518 --> 00:31:34,185 உங்களிடம் எதுவும் இல்லாதது போல நடிச்சு, 458 00:31:34,186 --> 00:31:36,646 என்னை உள்ள இழுத்தீங்க, நானும் நம்பிட்டேன். அதைத்தான் நீங்க செய்யுறீங்களா? 459 00:31:36,647 --> 00:31:38,689 நான் உன்னை தந்திரம் பண்ணி ஏமாற்றலை. ஏமாற்ற உன்னிடம் எதுவுமில்லை. 460 00:31:38,690 --> 00:31:40,274 எனக்கு என்ன கிடைக்கும்? உன் ஹூடியா? 461 00:31:40,275 --> 00:31:42,402 - உன் ஸ்கூட்டரா? - அடக் கடவுளே. 462 00:31:43,654 --> 00:31:44,570 சரி, பாருங்க. 463 00:31:44,571 --> 00:31:48,824 போன வருடம், டூர் போட்டியில் சராசரி தூரம் 293 யார்டுகள். 464 00:31:48,825 --> 00:31:51,619 2005-ல், உங்கள் சராசரி 301. 465 00:31:51,620 --> 00:31:52,912 - நீ என்னைப் பற்றி கூகுளில் தேடுனியா? - அட! 466 00:31:52,913 --> 00:31:56,582 உங்கள் திறமையை நான் பார்க்கணும். இரண்டாவது ஒன்பது துளைகள். நீங்களும் நானும். 467 00:31:56,583 --> 00:31:57,667 உண்மையாகவா? 468 00:31:57,668 --> 00:31:58,752 உண்மையாக. 469 00:32:05,175 --> 00:32:06,968 என் திறமை என்னன்னு நீ பார்க்கணுமா? 470 00:32:06,969 --> 00:32:09,303 சரி. பார்ப்போம். 471 00:32:09,304 --> 00:32:10,514 வாங்க போகலாம். 472 00:32:34,496 --> 00:32:36,163 - நல்ல ஷாட். - ஆமா. 473 00:32:36,164 --> 00:32:38,083 இப்பவும் மணிக்கட்டைக் கொஞ்சம் குவிச்சு வச்சிருக்க. 474 00:32:38,792 --> 00:32:41,378 - ஒரு நாள் நீயே அதை கண்டுபிடிப்ப. - பேசாம போங்க. 475 00:32:43,755 --> 00:32:46,132 சரி, இங்க பாருங்க. என்னை எளிமையாக கையாள வேண்டியது இல்ல, சரியா? 476 00:32:46,133 --> 00:32:47,593 உங்க மொத்த திறமையையும் நான் பார்க்கணும். 477 00:32:59,730 --> 00:33:00,898 அடேங்கப்பா. 478 00:34:33,991 --> 00:34:35,993 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்