1 00:00:06,131 --> 00:00:09,717 "நீ ஒரு தோத்தாங்கோலி. சீரழிந்தவன். சொதப்பல் பேர்வழி. 2 00:00:09,718 --> 00:00:12,470 எப்பவுமே அப்படித்தான் இருந்தாய். இனியும் அப்படித்தான் இருப்பாய்." 3 00:00:12,471 --> 00:00:14,222 போன வருஷம் நீ என்கிட்ட இப்படி சொன்னே. 4 00:00:14,223 --> 00:00:17,099 அத விடு. அது சும்மா விளையாட்டுக்குச் சொன்னது. 5 00:00:17,100 --> 00:00:19,352 ஒரு போட்டி மனப்பான்மையை தூண்டி விடுறதுக்காக அப்படி சொன்னேன். 6 00:00:19,353 --> 00:00:20,811 கிளார்க், நீ உண்மையிலேயே கிரேட். 7 00:00:20,812 --> 00:00:24,607 நீ செஞ்ச வேலைக்கு அப்புறமும் இப்படி வந்து நிக்கிறதுக்கு ஒரு தனிப்பட்ட மனசு வேணும், 8 00:00:24,608 --> 00:00:27,194 அதாவது ஒரு சைக்கோவால தான் இப்படி கூச்சமே இல்லாம வர முடியும். 9 00:00:27,778 --> 00:00:31,113 சரி, எனக்குப் புரியுது. நான் கடந்த காலத்துல கொஞ்சம் கேவலமா நடந்துக்கிட்டேன் தான். 10 00:00:31,114 --> 00:00:33,866 - கொஞ்சமா? இல்ல. ஹே. ஹே, இல்ல, இல்ல. - அது… எனக்கு இப்போ புரியுது. 11 00:00:33,867 --> 00:00:35,368 உன்னை நீயே குறைச்சு எடை போடாதே. 12 00:00:35,369 --> 00:00:38,204 மத்த கெட்டவங்கெல்லாம் பார்த்து பொறாமைப்படுற அளவுக்கு, நீ ஒரு மிகப்பெரிய கெட்டவன். 13 00:00:38,205 --> 00:00:42,375 நீ ஒரு கலப்படமில்லாத அயோக்கியன். என் பின்னாடி வராதே. 14 00:00:42,376 --> 00:00:44,628 சரி, எனக்கு இது தேவைதான். என் மேல தான் தப்பு. 15 00:00:45,379 --> 00:00:46,546 ஆனா… 16 00:00:46,547 --> 00:00:48,631 அதுக்காக இந்த ஐடியா சரி வராதுன்னு அர்த்தமில்ல. 17 00:00:48,632 --> 00:00:50,132 ஆமா. நானா? மறுபடியும் விளையாடுறதா? 18 00:00:50,133 --> 00:00:52,635 இல்ல, இல்ல. விளையாடுறது மட்டும் இல்ல. பத்து வாரத்துல நடக்கப்போற சில்வர் பைன்ஸில் 19 00:00:52,636 --> 00:00:54,470 - 'யு.எஸ் ஓபன்' போட்டியை ஜெயிக்கப் போற. - வாயை மூடு. 20 00:00:54,471 --> 00:00:57,431 உனக்கு தெரியலனா தெரிஞ்சுக்கோ, எனக்கு இப்போ 55 வயசாகுது. 21 00:00:57,432 --> 00:00:59,517 - இந்த 55 வருஷமும் ரொம்ப கஷ்டமான காலம். - அதேதான்! 22 00:00:59,518 --> 00:01:02,395 55 வயசான ப்ரைஸ் கேஹில், தான் ஒதுக்கி வச்ச 23 00:01:02,396 --> 00:01:04,646 கோல்ஃப் விளையாட்டுக்கு மறுபடியும் திரும்பி, 24 00:01:04,647 --> 00:01:07,733 வரலாற்றிலேயே மிக அதிக வயதில் ஒரு கப் ஜெயிச்சவர்னு சாதனை படைக்கப்போறாரு. 25 00:01:07,734 --> 00:01:10,361 - இது அபத்தமா இருக்கு. - இல்ல. இது ஒரு காவியம். 26 00:01:10,362 --> 00:01:13,155 95-ல ஜோர்டான் திரும்பி வந்தது? மொக்கை. 27 00:01:13,156 --> 00:01:16,492 40 வயசுக்கு மேல ஃபோர்மேன் ரிங்குக்கு திரும்ப வந்தது? உவாக். 28 00:01:16,493 --> 00:01:19,287 2019-ல டைகர் ஜெயிச்ச மாஸ்டர்ஸ் கப் கூட இதோட ஈடாகாது. 29 00:01:19,288 --> 00:01:21,163 இந்த நூற்றாண்டின் விளையாட்டு உலகில் மிகப்பெரிய செய்தியே நீதான். 30 00:01:21,164 --> 00:01:22,582 வாய்ப்பே இல்ல. 31 00:01:22,583 --> 00:01:25,127 உன்கிட்ட இன்னும் அந்த திறமை இருக்கு, உனக்கே அது தெரியும். நான் சொல்றது பொய்னு சொல்லு பார்ப்போம். 32 00:01:27,212 --> 00:01:28,421 குட் நைட், கிளார்க். 33 00:01:28,422 --> 00:01:29,798 நான் சொல்றது பொய்னு சொல்லு பார்ப்போம். 34 00:01:31,133 --> 00:01:34,010 பார்த்தியா? உன்னால நான் சொல்றதை பொய்னு சொல்ல முடியல, இல்ல? 35 00:01:34,011 --> 00:01:36,513 இது உனக்கான ஒரு மிகப்பெரிய வாய்ப்பு, ப்ரைஸ். உன் வாழ்க்கையை மாற்றப்போற தருணம். 36 00:01:37,890 --> 00:01:39,349 இதை வேண்டாம்னு சொல்லி ஒதுக்கிடாத. 37 00:01:39,933 --> 00:01:41,767 ஒருவேளை நீ யு.எஸ் செனட்டரா இருந்திருந்தா, 38 00:01:41,768 --> 00:01:44,438 பேசியே நேரத்தை கடத்துறதுலதான் நீ பெரிய ஆளா இருந்திருப்பியோ? 39 00:01:58,535 --> 00:01:59,536 என்ன? 40 00:02:00,704 --> 00:02:01,872 நீ தப்பிச்சுட்டே இருக்க. 41 00:02:02,831 --> 00:02:04,248 யார் அது? 42 00:02:04,249 --> 00:02:05,709 ஜெரமி. 43 00:02:06,543 --> 00:02:08,543 - எப்படி இருக்க, தம்பி? - ஹேய், ப்ரோ. 44 00:02:08,544 --> 00:02:09,962 ஹேய், ஜெரமி. 45 00:02:09,963 --> 00:02:11,881 ஹே, ஸீரோ. தப்பான நேரத்துல ஃபோன் பண்ணிட்டேனோ? 46 00:02:11,882 --> 00:02:13,341 இல்ல, ப்ரோ. பிரச்சனை இல்ல. என்ன விஷயம்? 47 00:02:13,342 --> 00:02:16,677 என்ன விஷயம்னா, உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். 48 00:02:16,678 --> 00:02:19,348 நான் இப்போ சொல்லப்போற விஷயத்தை கேட்டு, நீ கண்டிப்பா ஷாக் ஆகப்போற. 49 00:02:20,974 --> 00:02:23,434 இரு, கிளார்க் ராஸ் இங்க வந்தானா? இண்டியானாவுலயா? 50 00:02:23,435 --> 00:02:26,729 ஆமா. நேத்து ராத்திரி திடீர்னு எங்கிருந்தோ வந்தான். 51 00:02:26,730 --> 00:02:28,940 - நான் டேட்டிங்ல இருந்தேன், அவன்… - நீங்க டேட்டிங்ல இருந்தீங்களா? 52 00:02:28,941 --> 00:02:31,859 ஆமா, அதுவும் ரொம்ப நல்லாதான் போயிட்டு இருந்தது. 53 00:02:31,860 --> 00:02:34,904 நான் இயற்கையைப் பத்தின ஒரு சூப்பர் கதையை சொல்லிட்டு இருந்தேன், 54 00:02:34,905 --> 00:02:37,448 திடீர்னு, பூம்! கிளார்க் ராஸ் வந்து உட்கார்ந்துகிட்டு… 55 00:02:37,449 --> 00:02:39,534 - கிளார்க் ராஸ் என்ன பண்ண பார்க்குறான்? - எனக்குத் தெரியல. 56 00:02:39,535 --> 00:02:42,870 நான் திரும்ப கோல்ஃப் விளையாடணும்னு ஏதோ ஒரு லூசுத்தனமான ஐடியாவை கொடுத்துட்டு இருந்தான். 57 00:02:42,871 --> 00:02:44,163 வந்த பொண்ணையும் பயமுறுத்திட்டான். 58 00:02:44,164 --> 00:02:45,831 - நீங்க மறுபடியும் விளையாட போறீங்களா? - இல்ல, இல்ல, இல்ல. 59 00:02:45,832 --> 00:02:48,084 லூசுத்தனமான ஐடியா. அதாவது முட்டாள்தனமானது. 60 00:02:48,085 --> 00:02:49,544 இல்ல, இல்ல, இல்ல. எனக்குத் தெரியல. 61 00:02:49,545 --> 00:02:51,087 ஆனா நீங்க 'டவ்' மேட்ச்ல நல்லா விளையாடுனீங்க. 62 00:02:51,088 --> 00:02:54,549 சரிதான், அது ஏதோ அதிர்ஷ்டத்துல ஜெயிச்சது, அப்புறம் ஒரு மூணு நாலு பீர், அப்புறம் 63 00:02:54,550 --> 00:02:55,801 - கொஞ்சம் வலி நிவாரணி மாத்திரை… - மக்களே! 64 00:02:56,802 --> 00:02:58,511 - நீங்க இங்கே என்ன பண்றீங்க? - ஹேய்! 65 00:02:58,512 --> 00:03:00,555 எனக்கு 'த ஃபவுண்டர்ஸ்' மேட்சுக்கு அழைப்பு வந்திருக்கு. 66 00:03:00,556 --> 00:03:01,723 என்ன? 67 00:03:02,307 --> 00:03:05,393 இந்த வாரம் லாஸ் ஏஞ்சலஸ்ல நடக்குற 'பவுண்டர்ஸ் இன்விடேஷனல்' மேட்ச்ல விளையாட 68 00:03:05,394 --> 00:03:06,644 எனக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு. 69 00:03:06,645 --> 00:03:08,062 இது எப்போ நடந்தது? 70 00:03:08,063 --> 00:03:10,065 - இப்போதான். ஜெரமி இப்போதான் ஃபோன் பண்ணார். - ஆமா. 71 00:03:10,774 --> 00:03:12,692 - ஜெரமியா? - ஆமா, ஜெரமி பியர்ஸ். 72 00:03:12,693 --> 00:03:13,861 என்னுடைய அந்த ஏஜென்ட் நண்பர். 73 00:03:14,611 --> 00:03:15,820 நீ சம்மதிச்சிட்டியா? 74 00:03:15,821 --> 00:03:18,072 இல்ல, ப்ரைஸ். நான் அவருக்கு ரொம்ப நன்றி, ஆனா எனக்கு வேண்டாம்னு சொல்லிட்டேன். 75 00:03:18,073 --> 00:03:19,408 நிச்சயமா, சம்மதம் சொல்லிட்டேன்! 76 00:03:19,908 --> 00:03:21,826 இது ஃபவுண்டர்ஸ் இன்விடேஷனல்! 77 00:03:21,827 --> 00:03:24,245 அவங்களே எல்லாமே ரெடி பண்ணிட்டாங்க. ஃபிளைட், ஹோட்டல் எல்லாமே! 78 00:03:24,246 --> 00:03:25,955 நாளைக்கு காலையிலயே கிளம்புற மாதிரி எல்லா ஏற்பாடும் பண்ணிட்டாங்க. 79 00:03:25,956 --> 00:03:28,457 நாளைக்கா? அது ரொம்ப சீக்கிரம். 80 00:03:28,458 --> 00:03:30,376 ஆமா, ஆனா போட்டி வியாழக்கிழமை ஆரம்பிக்குது. 81 00:03:30,377 --> 00:03:31,712 உங்களால நம்ப முடியுதா? 82 00:03:32,504 --> 00:03:34,172 நாம எல்ஏ போகப்போறோம்! 83 00:03:34,173 --> 00:03:35,340 சரி! 84 00:03:36,633 --> 00:03:37,967 போகலாம்! 85 00:03:37,968 --> 00:03:40,470 ஹாலிவுட்! 86 00:04:40,989 --> 00:04:43,157 - சூப்பரா இருக்கு. - ஆமா. 87 00:04:43,158 --> 00:04:44,242 சூப்பர்! 88 00:04:44,243 --> 00:04:47,203 கேளு, நீ 11-வது ஹோல் கிட்ட கொஞ்சம் கவனமா 89 00:04:47,204 --> 00:04:49,163 - இருக்கணும், சரியா? - சரி. 90 00:04:49,164 --> 00:04:51,707 ஏன்னா அங்க இருக்க மணல் குழிகள் தெரிவதை விட கிரீனுக்கு பக்கத்துல இருக்கு. 91 00:04:51,708 --> 00:04:52,792 ஆமா, எனக்குத் தெரியும். 92 00:04:52,793 --> 00:04:54,210 புல் எந்தப் பக்கம் சாய்ஞ்சிருக்குன்னு கவனி, 93 00:04:54,211 --> 00:04:55,920 ஏன்னா எல்லாமே கடலை நோக்கித்தான் சாய்வா போகும். 94 00:04:55,921 --> 00:04:58,005 - சரிதான், ஆனா சில நேரம்… - ஹேய், மக்களே. 95 00:04:58,006 --> 00:05:00,925 மக்களே, உங்களோட பேச்சு முடிஞ்சா நான் போய் என் வேலையைப் பார்க்கட்டுமா? சரியா? 96 00:05:00,926 --> 00:05:02,802 - சரி, அப்புறம் பார்க்கலாம். - அப்புறம் பார்க்கலாம். 97 00:05:02,803 --> 00:05:03,886 - நான் உனக்கு மெசேஜ் பண்றேன். - பை. 98 00:05:03,887 --> 00:05:07,390 எல்லாரும் கவனமா இருங்க! நம்ம ஷோடைம் வீலர் லாஸ் ஏஞ்சலஸுக்குள்ள காலடி எடுத்து வச்சுட்டாரு! 99 00:05:07,391 --> 00:05:08,474 எப்படி இருக்கீங்க, ப்ரோ? 100 00:05:08,475 --> 00:05:10,393 என்ன, ப்ரோ ப்ரோ? பயிற்சி ஆட்டம் எல்லாம் எப்படி போச்சு? 101 00:05:10,394 --> 00:05:12,979 - தூள் கிளப்புது. இந்த கோர்ஸ் செமையா இருக்கு. - ஆமா. 102 00:05:12,980 --> 00:05:14,063 ப்ரைஸ் கேஹில். 103 00:05:14,064 --> 00:05:16,107 வாழும் லெஜண்ட் நேர்ல இருக்காரு. 104 00:05:16,108 --> 00:05:18,192 ஐயோ, கடவுளே! நான் உங்களோட மிகப்பெரிய ரசிகன். 105 00:05:18,193 --> 00:05:20,027 - ஜெரமி பியர்ஸ். - ஹேய், ஜெரமி. 106 00:05:20,028 --> 00:05:21,696 ஆமா. நீங்க 'டவ்' மேட்ச்ல பண்ணது இருக்கே… 107 00:05:21,697 --> 00:05:25,117 - அட, தூள் கிளப்பிட்டீங்க. - ஆமா. நன்றி. 108 00:05:26,034 --> 00:05:28,536 ஹேய், நண்பா, நாம 'எல் டாகோ ரோயோ' போறோம் தானே? 109 00:05:28,537 --> 00:05:30,288 ஆமா, ஆமா. சரி, நான் போய் டிரஸ் மாத்திட்டு வர்றேன். 110 00:05:30,289 --> 00:05:31,455 இரு, என்ன நடக்குது? 111 00:05:31,456 --> 00:05:35,001 நான் சான்டியை எல்.ஏ-விலேயே ரொம்ப சூப்பரான டாகோஸ் கடைக்கு கூட்டிட்டு போக போறேன். 112 00:05:35,002 --> 00:05:37,336 அந்த இடம் உண்மையிலேயே வேற லெவல்ல இருக்கும், நண்பா. 113 00:05:37,337 --> 00:05:39,797 - ஆனா 'லா பிரியா தார் பிட்ஸ்' போறது? - ஆமா. 114 00:05:39,798 --> 00:05:41,675 - அங்க பனி யுகக் கண்காட்சி வச்சிருக்காங்க. - ஆமா. 115 00:05:42,176 --> 00:05:43,926 ஆமா, எனக்கு அங்க போகணும்னுதான் ஆசை. 116 00:05:43,927 --> 00:05:45,261 ப்ரைஸ், அது வந்து… 117 00:05:45,262 --> 00:05:47,848 இதுதான் எல்.ஏ-வுல எனக்கு முதல் நாள், அதான் சுத்திப் பார்க்க விரும்புறேன். 118 00:05:48,348 --> 00:05:49,557 நாம அப்புறமா தார் பிட்ஸ் போலாமா? 119 00:05:49,558 --> 00:05:51,559 - கண்டிப்பா. சரி. - அப்படியா? சரி, நன்றி. 120 00:05:51,560 --> 00:05:52,894 சரி. பத்து நிமிஷத்துல வெளிய வந்துடுறியா? 121 00:05:52,895 --> 00:05:54,145 - கண்டிப்பா. - சரி. 122 00:05:54,146 --> 00:05:55,396 சரி, உன்னைப் பார்த்ததுல சந்தோஷம். 123 00:05:55,397 --> 00:05:58,024 - ஆமா, எனக்கும் தான். - ஓ, ஹேய். உன்கிட்ட ஒரு நிமிஷம் பேசலாமா? 124 00:05:58,025 --> 00:05:59,276 கண்டிப்பா. என்ன விஷயம்? 125 00:05:59,818 --> 00:06:01,402 இதையெல்லாம் ஏற்பாடு பண்ணதுக்கு நன்றி. 126 00:06:01,403 --> 00:06:03,654 - ரொம்ப சந்தோஷமா இருக்கு. - நிச்சயமா. 127 00:06:03,655 --> 00:06:05,156 அப்புறம் இது ரொம்ப முக்கியமான வாரம், 128 00:06:05,157 --> 00:06:09,285 அதான் சான்டி கவனமெல்லாம் முக்கியமான விஷயத்துல மட்டுமே இருக்கணும்னு நினைக்கிறேன். 129 00:06:09,286 --> 00:06:11,078 ஆமா. இல்ல, அவனோட கவனம் சிதறக்கூடாதுனு தான் நானும் நினைக்கிறேன். 130 00:06:11,079 --> 00:06:13,247 டாகோஸ் சாப்பிடுறதுக்காகத்தான் அவனை கூட்டிட்டு போகணும்னு நினைச்சேன். 131 00:06:13,248 --> 00:06:14,749 இல்ல, டாகோஸ் மட்டும் இல்லனு எனக்கு தெரியும். 132 00:06:14,750 --> 00:06:18,503 அந்த டாகோஸுக்கு பின்னாடி என்ன இருக்குன்றதுதான் என்னைக் கவலைப்பட வைக்குது, 133 00:06:18,504 --> 00:06:22,798 ஏன்னா அது வெறும் சுவையான பாரம்பரிய மெக்சிகன் உணவு மட்டும் கிடையாது, இல்லயா? 134 00:06:22,799 --> 00:06:24,134 இந்த விஷயத்துல. 135 00:06:24,676 --> 00:06:26,594 ப்ரைஸ்… இது… இது வெறும் டின்னர்தான். 136 00:06:26,595 --> 00:06:29,430 ஆமா, ஆனா, இதெல்லாம் எப்படி நடக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும். 137 00:06:29,431 --> 00:06:32,267 சான்டி ஒரு அசாதாரணமான கோல்ஃப் ஆட்டக்காரன். நீ ஒரு ஏஜென்ட். 138 00:06:32,851 --> 00:06:34,143 நீ உன் வேலையைத்தான் பண்ற. 139 00:06:34,144 --> 00:06:36,230 இன்னைக்கு டாகோஸ் வாங்கித் தருவ, நாளைக்கு, 140 00:06:37,272 --> 00:06:39,233 மசெராட்டி கார் ஷோரூமுக்கு கூட்டிட்டு போய் வேடிக்கை பார்க்க வைப்ப. 141 00:06:40,609 --> 00:06:43,110 ப்ரைஸ், நீங்க சொல்றது எனக்கு புரியுது. 142 00:06:43,111 --> 00:06:45,196 நான் எந்த பிரச்சனையும் பண்ண விரும்பலை. உண்மையாவே. 143 00:06:45,197 --> 00:06:46,572 சான்டி உங்களோட கோல்ஃப் பிளேயர், 144 00:06:46,573 --> 00:06:49,909 உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருக்கிற விஷயத்துல நான் கண்டிப்பா தலையிட மாட்டேன். 145 00:06:49,910 --> 00:06:50,994 உண்மையாவே தான் சொல்றேன். 146 00:06:54,039 --> 00:06:55,123 உண்மையாவே. 147 00:06:59,670 --> 00:07:01,088 வறுத்த பாதாம் பருப்பு. 148 00:07:01,755 --> 00:07:03,757 ஆஹா, எனக்கு இந்த அன்பளிப்பு கூடைனாலே பிடிக்கும். 149 00:07:04,383 --> 00:07:09,054 சின்ன சின்ன தொட்டுக்கிற காரப் பொருட்கள் எல்லாம் இருக்கு. குட்டி காரக் கடுகு சாஸ் கூட இருக்கு. 150 00:07:09,763 --> 00:07:10,930 ஆனா பிஸ்கட் எதுவும் இல்லயே. 151 00:07:10,931 --> 00:07:14,268 கடுகு சாஸ் இருக்கு ஆனா பிஸ்கட் இல்லன்னா என்ன பிரயோஜனம்னு தெரியல. 152 00:07:14,935 --> 00:07:16,352 எனக்கு பசிக்குது. 153 00:07:16,353 --> 00:07:17,770 ஆமா, எனக்கும் தான். 154 00:07:17,771 --> 00:07:19,856 ஊபர் புக் பண்ணி பெவர்லி ஹில்ஸ் போவோமா, 155 00:07:19,857 --> 00:07:21,525 அங்கே போய் ஏதாச்சும் ஃபேன்சியா மதிய சாப்பாடு சாப்பிடலாமா? 156 00:07:24,570 --> 00:07:25,820 ஓ, சரி. 157 00:07:25,821 --> 00:07:27,780 நீ அந்த மாதிரி பசியை சொல்றியா. 158 00:07:27,781 --> 00:07:29,198 வாவ். 159 00:07:29,199 --> 00:07:30,576 உன்னைப் பார்க்கணுமே, செம கவர்ச்சியா இருக்க. 160 00:07:31,243 --> 00:07:32,494 இங்கே வா, செல்லம். 161 00:07:40,127 --> 00:07:42,879 சரி. சரி, சரி, சரி, சரி. 162 00:07:42,880 --> 00:07:44,882 சரி… சரி, வா. 163 00:07:46,550 --> 00:07:47,633 சரி. சரி. 164 00:07:47,634 --> 00:07:49,636 - சரி. உங்களுக்கு ஒண்ணுமில்லயே? - ஒண்ணுமில்ல. 165 00:07:52,681 --> 00:07:54,098 - சரி. என்ன பிரச்சனை? - சரி… 166 00:07:54,099 --> 00:07:56,185 - என்… என் முதுகு. - உங்களுக்கு ஒண்ணுமில்லயே? 167 00:07:56,894 --> 00:07:58,144 எனக்கு தெரியாது. 168 00:07:58,145 --> 00:08:00,480 நாம… இப்படி திரும்பிப் பார்ப்போம்… இரு… 169 00:08:01,064 --> 00:08:02,149 ஓ, என் கால். 170 00:08:04,318 --> 00:08:05,319 சரி. 171 00:08:06,361 --> 00:08:07,362 சரி. 172 00:08:13,452 --> 00:08:14,785 - ஹேய், ப்ரைஸ்! - ஹேய். 173 00:08:14,786 --> 00:08:17,622 டவ் மேட்ச்ல 18-வது ஹோல்ல நீங்க அடிச்ச 3-வுட் ஷாட் வேற லெவல். 174 00:08:17,623 --> 00:08:19,707 - எனக்கு புரியுது. சரி, நன்றி. - செம ஷாட். 175 00:08:19,708 --> 00:08:21,292 ஆமா, செமையா அடிச்சீங்க. 176 00:08:21,293 --> 00:08:25,838 கடவுளே, கிளார்க். நீ இப்படி திடீர் திடீர்னு ஆளுங்க முகத்துக்கு முன்னாடி வந்து நிக்காதே. 177 00:08:25,839 --> 00:08:28,508 பெல்சவுத் கிளாசிக். 1998. 178 00:08:28,509 --> 00:08:32,762 எனக்கு அப்போ 28 வயசு, உலகத்துல இருக்குற எந்த மனுஷனை விடவும் நான் ரொம்ப ஃபிட்டா இருந்தேன். 179 00:08:32,763 --> 00:08:36,474 நாளைக்கு பத்து மணிநேரம் பயிற்சி, என் வாழ்நாள்லயே மிகச்சிறந்த கோல்ஃப் ஆட்டத்தை ஆடிட்டு இருந்தேன். 180 00:08:36,475 --> 00:08:39,560 நீ லேட்டா வந்த. போதை மயக்கத்துல, கண்ணெல்லாம் ரத்தக் சிவப்பா வந்து நின்ன. 181 00:08:39,561 --> 00:08:41,771 நீ ஒரு வார்ம்-அப் ஷாட் கூட அடிக்கல. 182 00:08:41,772 --> 00:08:44,190 அன்னைக்கு நீ எவ்வளவு ஸ்கோர் பண்ண தெரியுமா? ஞாபகம் இருக்கா? 183 00:08:44,191 --> 00:08:45,316 நைன் அண்டர். 184 00:08:45,317 --> 00:08:47,360 - நான் ஃபோர் அண்டர் அடிச்சேன். - சரி. 185 00:08:47,361 --> 00:08:49,362 நீ அன்னைக்கு சாஃக்ஸ் கூட போடல, ப்ரைஸ். 186 00:08:49,363 --> 00:08:52,616 நான் முடிஞ்சளவு சிறப்பா விளையாடியும், என்னால உன் பக்கத்துல கூட வர முடியல. 187 00:08:53,158 --> 00:08:55,868 அன்னைக்கு நீதான் மாஸ். இன்னைக்கும் நீதான் மாஸ். 188 00:08:55,869 --> 00:08:58,538 - இல்லனா இனியாவது அப்படி மாற முடியும். - நீ என்ன திட்டம் போடுற? 189 00:08:58,539 --> 00:09:02,124 நான் மறுபடியும் விளையாடுறதுல திடீர்னு உனக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்? 190 00:09:02,125 --> 00:09:06,587 "எனக்கு திடீர்னு ஞானோதயம் வந்துடுச்சு, என் தப்பை உணர்ந்துட்டேன்"னு கட்டுக்கதை அவிழ்த்து விடாதே. 191 00:09:06,588 --> 00:09:09,882 ஏன்னா, எனக்கு என்ன ஆனாலும் உனக்கு கவலையில்லன்னு உனக்கும் தெரியும், எனக்கும் தெரியும். 192 00:09:09,883 --> 00:09:11,884 அங்கேதான் நீ தப்பு பண்ற. எனக்கு உன் மேல கவலை இருக்கு, 193 00:09:11,885 --> 00:09:15,638 என் தொழிலதிபர் திறமையையும் தொடர்புகளையும் வச்சு, நாம ரெண்டு பேரும் லட்சக்கணக்கில சம்பாதிக்கலாம். 194 00:09:15,639 --> 00:09:17,473 அப்படி வாடா வழிக்கு. பணம். 195 00:09:17,474 --> 00:09:20,560 அதை ஏதோ கெட்ட வார்த்தை மாதிரி சொல்லாதே. 196 00:09:20,561 --> 00:09:22,729 இப்படிச் சொல்லு. பணம்! 197 00:09:23,772 --> 00:09:28,526 சில நேரத்துல உன்னைப் பார்க்கும்போது என்னையே பார்க்குற மாதிரி இருக்கு, அது நல்ல விஷயம் இல்ல. 198 00:09:28,527 --> 00:09:31,654 உன்னால முடியும். உன்னோட நம்பிக்கையை நாம முதல்ல மீட்டெடுக்கணும். 199 00:09:31,655 --> 00:09:34,407 நாம பட்ச் லைடெக்கரைப் போய் பார்ப்போம். உன் ஆட்டத்தைப் பத்தி அவருக்குத்தான் நல்லா தெரியும். 200 00:09:34,408 --> 00:09:36,827 பட்ச் கூட ரெண்டு வாரம் பயிற்சி எடுத்தா போதும், நீ பழய ஃபார்முக்கு வந்துடுவ. 201 00:09:38,078 --> 00:09:40,956 அட என்ன, ப்ரைஸ். உன்னால இந்த 'யு.எஸ். ஓபன்' போட்டியை ஜெயிக்க முடியும். 202 00:09:42,624 --> 00:09:43,876 உனக்கு விளையாடணும்னு ஆசை இருக்குனு எனக்குத் தெரியும். 203 00:09:46,044 --> 00:09:47,337 உண்மையிலேயே எனக்கு ஆசையில்லை. 204 00:09:50,549 --> 00:09:53,886 இந்த ஹோட்டல் அறை உடலுறவு ஒரு ஏமாற்று வேலைனு நினைக்கிறேன். 205 00:09:56,763 --> 00:09:59,515 நாம இன்னும் சின்ன வயசுக்காரங்க மாதிரியும், பிளெக்ஸிபிளா இருக்கோம்னு நம்மளை நம்ப வச்சிடுது, 206 00:09:59,516 --> 00:10:02,436 ஆனா ரெண்டுமே உண்மையில்ல. 207 00:10:03,020 --> 00:10:05,022 ஆனா உங்களுக்கு இது ரொம்ப பிடிச்சிருக்கு போலயே. 208 00:10:05,647 --> 00:10:07,608 ஆமா, எனக்குப் பிடிச்சிருக்கு. 209 00:10:08,108 --> 00:10:10,443 நாம சாதாரண வாழ்க்கைக்கு திரும்பும் போது என்ன ஆகும்னுதான் பயமா இருக்கு, 210 00:10:10,444 --> 00:10:12,279 அப்போ என் உடம்பு எனக்கு உண்மையான வயசை ஞாபகப்படுத்திடும். 211 00:10:17,242 --> 00:10:18,285 அதனால, 212 00:10:18,827 --> 00:10:22,080 நான் சில விஷயங்களை பத்தி யோசிச்சுட்டு இருந்தேன். 213 00:10:22,831 --> 00:10:25,250 ஓ, அப்படியா? என்ன விஷயம்? 214 00:10:27,669 --> 00:10:31,256 நாம ரெண்டு பேரும் இந்த உறவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போனா என்ன? 215 00:10:32,674 --> 00:10:34,592 "அடுத்த கட்டம்"னா என்ன சொல்றீங்க? 216 00:10:34,593 --> 00:10:36,427 இதைவிட பெரிய அறைக்கு மாறணும்னு சொல்றீங்களா? 217 00:10:36,428 --> 00:10:37,929 இல்ல, இல்ல. 218 00:10:37,930 --> 00:10:40,516 நான் சொல்றது, இது. நம்ம உறவைப் பற்றி. 219 00:10:42,351 --> 00:10:45,436 நாம ரெண்டு பேரும் ஒரே வீட்ல சேர்ந்து வாழ்ந்தா என்ன? 220 00:10:45,437 --> 00:10:47,981 அதாவது, எப்படியும் வாரத்துல அஞ்சு நாள் நாம ஒன்னாதானே இருக்கோம். 221 00:10:49,274 --> 00:10:50,816 - நிஜமாவா சொல்றீங்க? - ஆமா. 222 00:10:50,817 --> 00:10:52,860 அது என் வீடாத்தான் இருக்கணும்னு கூட அவசியமில்ல. 223 00:10:52,861 --> 00:10:54,403 நான் என் வீட்டை வித்துடுறேன், 224 00:10:54,404 --> 00:10:56,865 ஏம்பர்-லினை வச்சு நமக்குன்னு தனியா ஒரு புதிய இடத்தை பார்த்துக்கலாம். 225 00:10:57,533 --> 00:10:59,701 உங்க வீட்டை விற்க போறீங்களா? 226 00:11:00,786 --> 00:11:01,870 ஆமா. 227 00:11:02,913 --> 00:11:04,288 நேரம் வந்துடுச்சு. 228 00:11:04,289 --> 00:11:06,458 ரொம்ப நாளாவே இந்த முடிவை எடுக்க வேண்டியிருந்தது. 229 00:11:10,045 --> 00:11:11,129 வாவ். 230 00:11:12,089 --> 00:11:13,173 ஓ, வாவ். 231 00:11:14,925 --> 00:11:16,801 "ரொம்ப சந்தோஷம்"ன்ற அர்த்தத்துல வாவ் சொல்றியா, 232 00:11:16,802 --> 00:11:19,262 இல்ல "ஐயோ பயமா இருக்கே, 233 00:11:19,263 --> 00:11:21,180 இவன் சூழ்நிலையை புரிஞ்சுக்காம லூசு மாதிரி பேசுறானே"ன்ற அர்த்தத்துலயா? 234 00:11:21,181 --> 00:11:22,599 இல்ல, அந்த வாவ்… 235 00:11:25,227 --> 00:11:26,310 கண்டிப்பா பண்ணலாம். 236 00:11:26,311 --> 00:11:27,312 நிஜமாவா? 237 00:11:28,230 --> 00:11:29,564 சரி. 238 00:11:29,565 --> 00:11:30,773 - அடுத்த கட்டம். - இரு. 239 00:11:30,774 --> 00:11:33,025 என்னால… என்னால மறுபடியும் இதை பண்ண முடியுமானு தெரியல. 240 00:11:33,026 --> 00:11:36,070 எனக்கு குறைஞ்சது 24 மணிநேரம் ஆவது இடைவெளி வேணும். 241 00:11:36,071 --> 00:11:37,406 சரி, அவ்வளவு நேரம் தேவையில்லாமலும் இருக்கலாம். 242 00:11:47,124 --> 00:11:49,209 - சாப்பிட்டு பாரு. - சரி, சால்சா. 243 00:11:50,669 --> 00:11:52,296 சாப்பிடுவோம். 244 00:11:54,298 --> 00:11:55,506 ப்ரோ. 245 00:11:55,507 --> 00:11:56,716 சூப்பரா இருக்கா? 246 00:11:56,717 --> 00:11:59,051 - ப்ரோ. இது… - செம மாஸா இருக்கு, ப்ரோ. 247 00:11:59,052 --> 00:12:02,722 லத்தீன் காரனா இருந்துக்கிட்டு இதுவரை இப்படி ஒன்னை சாப்பிட்டதே இல்லன்றது வெக்கமா இருக்கு. 248 00:12:02,723 --> 00:12:04,141 - வெட்கப்பட வேண்டிய விஷயம் தான், தம்பி. - இது… 249 00:12:06,059 --> 00:12:08,145 - இது அற்புதமா இருக்கு. - எனக்கு தெரியும், ப்ரோ. 250 00:12:08,687 --> 00:12:13,066 ஒரு நாள் நைட்டு 310பேபி ஷோ முடிஞ்சு வீட்டுக்கு வரும்போதுதான்… இந்த கடை கண்ணுல பட்டுச்சு. 251 00:12:13,901 --> 00:12:15,193 உண்மையாவா? அவரை நேர்ல பார்த்தீங்களா? 252 00:12:15,194 --> 00:12:17,946 ஜனவரில மறுபடியும் அவரோட ஷோவுக்கு போறேன்னு நினைக்கிறேன். 253 00:12:18,488 --> 00:12:19,697 நான் உன்னை கூப்பிடுறேன். 254 00:12:19,698 --> 00:12:20,824 கண்டிப்பா, நானும் வரேன். 255 00:12:27,122 --> 00:12:28,290 அடச்சே. 256 00:12:28,999 --> 00:12:30,625 அடச்சே. 257 00:12:30,626 --> 00:12:32,336 - துப்பாக்கியால சுட்ட மாதிரி இருக்கீங்க. - தெரியும். 258 00:12:34,796 --> 00:12:35,797 கொலை உறுதி. 259 00:12:36,381 --> 00:12:38,550 - கொலை உறுதி செய்யப்பட்டட்டது. - ஐயோ, தம்பி. 260 00:12:39,051 --> 00:12:42,178 சரி, நான் ஒரு ஏஜென்ட்டா பேசாம கொஞ்சம் அந்த பேச்சை ஓரமா வச்சுட்டு, 261 00:12:42,179 --> 00:12:43,513 உண்மையான நண்பனா மனசு விட்டு பேசுறேன். 262 00:12:43,514 --> 00:12:46,350 நீங்க ஏஜென்ட் மாதிரி நடந்துக்கவே இல்ல, நண்பா. 263 00:12:48,101 --> 00:12:49,353 இல்ல, நேரடியாவே கேக்குறேன். 264 00:12:51,271 --> 00:12:55,191 பெரிய லீக் டோர்னமென்ட் எல்லாம் இங்கே நடக்கும்போது, நீ உண்மையிலேயே 265 00:12:55,192 --> 00:12:56,610 இண்டியானால குளுர்ல நடுங்கிட்டு இருக்க போறியா? 266 00:12:57,152 --> 00:12:59,362 நல்ல வெயில். பெரிய ஸ்பான்சர்கள். 267 00:12:59,363 --> 00:13:02,241 உன்னோட கோல்ஃப் ரெக்கார்ட்ஸ விரல் நுனியில வச்சிருக்க போற பெண் ரசிகர்கள்… 268 00:13:03,408 --> 00:13:04,826 விஷயம் அது இல்ல. 269 00:13:05,494 --> 00:13:06,702 அப்புறம் என்னன்னா, 270 00:13:06,703 --> 00:13:08,872 இந்த டார்னமென்ட் எல்லாம் எப்பவும் இங்கதானே இருக்கப்போகுது… 271 00:13:09,456 --> 00:13:11,875 அது உண்மைதான். போட்டிகள் எல்லாம் எப்பவும் இருக்கும் தான்… 272 00:13:13,126 --> 00:13:14,461 ஆனா நீ இருப்பியா? 273 00:13:15,671 --> 00:13:18,339 மக்களுக்கு விஷயங்கள் உடனே மறந்துடும், தம்பி. 274 00:13:18,340 --> 00:13:20,342 நாலு வருஷம்ன்றது ஒரு வாழ்நாள் மாதிரி. 275 00:13:20,968 --> 00:13:23,302 நீ படிச்சு முடிச்சு வரும்போது எந்த மாதிரி ஆட்டக்காரனா இருப்பன்னு உனக்கே தெரியாது. 276 00:13:23,303 --> 00:13:24,304 யாருக்குமே தெரியாது. 277 00:13:27,516 --> 00:13:29,059 உனக்கு பில்லி பவ்மேன் யாருன்னு தெரியுமா? 278 00:13:30,102 --> 00:13:31,769 - தெரியாது. - ஆமா, அதேதான். 279 00:13:31,770 --> 00:13:34,438 2005-ல 'யூ.எஸ். அமெச்சூர்' சாம்பியன். 280 00:13:34,439 --> 00:13:37,358 'வெரிடெக்ஸ்' போட்டியில எட்டாவது இடம். 'பைரன் நெல்சன்' போட்டியில் நாலாவது இடம். 281 00:13:37,359 --> 00:13:41,112 அதாவது, கோல்ஃப் உலகமே அந்த பையனுக்காக வழிமேல் விழி வச்சு காத்துட்டு இருந்துச்சு. 282 00:13:41,113 --> 00:13:42,197 ஆனா அவன் என்ன பண்ணான் தெரியுமா? 283 00:13:42,906 --> 00:13:45,533 ஸ்டான்ஃபோர்டு யூனிவர்சிட்டியில ஸ்காலர்ஷிப்ல படிக்க போயிட்டான். 284 00:13:45,534 --> 00:13:47,285 சூப்பரான கோல்ஃப் அகாடமி. 285 00:13:47,286 --> 00:13:49,620 படிச்சு முடிச்சதும் 'கார்ன் ஃபெரி' தொடர்ல கொஞ்சம் காலம் விளையாடினான். 286 00:13:49,621 --> 00:13:52,040 அப்புறம் ஆசிய டூர்ல ஒரு வருஷம் இருந்தான். 287 00:13:52,833 --> 00:13:55,335 இப்போ அந்த பில்லி போவ்மேன் எங்கே இருக்கான்னு உனக்கு தெரியுமா? 288 00:13:56,795 --> 00:14:00,299 ஃபீனிக்ஸ் நகரத்துல ரெண்டு 'சப்வே' ஃபிரான்ச்சைஸி வச்சிருக்கான். 289 00:14:02,176 --> 00:14:04,760 நான் சும்மா சொல்லல. அவன் இப்போ சான்ட்விச் செஞ்சு வித்துட்டு இருக்கான். 290 00:14:04,761 --> 00:14:10,851 105 டிகிரி அரியோனா கோடை வெயில்ல மயோனைஸ் என்ன ஆகும்னு உனக்கு தெரியுமா? 291 00:14:11,768 --> 00:14:13,686 திரிஞ்சு போகுமா? 292 00:14:13,687 --> 00:14:14,855 அது வீணா போயிடும். 293 00:14:15,522 --> 00:14:16,940 அப்புறம் அதை யாரும் ஒரு வாய் கூட சாப்பிட மாட்டாங்க. 294 00:14:20,194 --> 00:14:21,277 அடச்சே. 295 00:14:21,278 --> 00:14:22,737 நீ என் தம்பி மாதிரி, 296 00:14:22,738 --> 00:14:24,947 எனக்கு ப்ரைஸ் மேலயும் ரொம்ப மரியாதை இருக்கு, அவர் ஒரு வாழும் லெஜண்ட்… 297 00:14:24,948 --> 00:14:27,117 நீங்க ரெண்டு பேரும் இதுவரைக்கும் சாதிச்சது எல்லாத்தையும் நான் மதிக்கிறேன். 298 00:14:28,660 --> 00:14:31,078 ஆனா, துணிச்சல் உள்ளவனுக்குத்தான் அதிர்ஷ்டம் கதவு திறக்கும், தம்பி. 299 00:14:31,079 --> 00:14:32,247 யாருமே… 300 00:14:32,789 --> 00:14:35,792 யாரும் அந்த வெயில்ல திரிஞ்சுபோன மயோனைஸ் மாதிரி ஆக விரும்ப மாட்டாங்க. என்னை நம்பு. 301 00:14:45,010 --> 00:14:48,262 வணக்கம், கலிஃபோர்னியா, லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெறும் 'த ஃபவுண்டர்ஸ் இன்விடேஷனல்' 302 00:14:48,263 --> 00:14:50,348 போட்டியின் முதல் சுற்றுக்கு உங்களை வரவேற்கிறேன். 303 00:14:50,349 --> 00:14:51,432 {\an8}நான் ஜிம் நாண்ட்ஸ், 304 00:14:51,433 --> 00:14:54,185 {\an8}என்னுடன் மாஸ்டர்ஸ் சாம்பியன் ட்ரெவர் எம்மெல்மன் இணைந்திருக்கிறார். 305 00:14:54,186 --> 00:14:56,437 {\an8}நன்றி, ஜிம். இங்கே வந்திருப்பது உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமா இருக்கு. 306 00:14:56,438 --> 00:15:00,858 இந்த ஆண்டின் பிஜிஏ டூரின் மூன்றாவது, மிகச்சிறப்பான 307 00:15:00,859 --> 00:15:02,443 பிரதான போட்டி இதுதான். 308 00:15:02,444 --> 00:15:06,782 இது ஒரு அருமையான போட்டி, ஜிம், சிறந்த வீரர்களுக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கு. 309 00:15:18,252 --> 00:15:19,335 ஹே. 310 00:15:19,336 --> 00:15:20,545 இது பார்க்கவே ஒரு மாதிரியா இருக்குல? 311 00:15:20,546 --> 00:15:23,382 - அதாவது, ரொம்ப பிரம்மாண்டமா இருக்கு. - ஆழமா மூச்சு விடுங்க. 312 00:15:30,556 --> 00:15:33,641 இண்டியானாவின் ஃபோர்ட் வெய்ன், நகரைச் சேர்ந்த ஆமெச்சூர் வீரர், 313 00:15:33,642 --> 00:15:35,686 சான்டியாகோ வீலர். 314 00:16:53,347 --> 00:16:54,640 ஆட்டம் ஆரம்பம்! 315 00:17:17,371 --> 00:17:20,832 முதல் சுற்றில் அருமையான ஷாட். சான்டி வீலர் மிகச்சிறந்த ஃபார்மில் இருக்கார். 316 00:17:21,916 --> 00:17:23,710 சுற்று 2 317 00:17:42,187 --> 00:17:43,188 சான்டி வீலர் இடம்: 11 318 00:17:49,319 --> 00:17:51,904 அமெச்சூர் சான்டி வீலர் இரண்டாவது சுற்றிலும் சிறப்பாக விளையாடி 319 00:17:51,905 --> 00:17:54,408 அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார். 320 00:17:57,911 --> 00:17:59,246 சுற்று 3 321 00:18:04,001 --> 00:18:05,502 ஆமா! அப்படித்தான்! 322 00:18:09,339 --> 00:18:10,424 சான்டி வீலர் இடம்: 5 323 00:18:17,139 --> 00:18:19,390 நாம் சான்டி வீலரின் 13-வது ஹோல் ஆட்டத்தைப் பார்க்கிறோம், 324 00:18:19,391 --> 00:18:23,311 {\an8}இன்றைய ஆட்டத்தின் தொடக்கத்தில் அற்புதமாக விளையாடி, இப்போது ஒரு சிறிய சிக்கலில் மாட்டியுள்ளார். 325 00:18:23,312 --> 00:18:27,064 {\an8}ஆமாம், பந்து தண்ணீரின் கரைக்கு பக்கத்தில் இருக்கும் சேற்றில் சிக்கிக் கொண்டுள்ளது. 326 00:18:27,065 --> 00:18:30,693 இது மிகவும் கடினம்தான், ஜிம். வீலர் பெனால்டி எடுத்து பந்தை நகர்த்தி வைத்துதான் விளையாடணும். 327 00:18:30,694 --> 00:18:32,738 என்னால அடிக்க முடியுமான்னு தெரியல. 328 00:18:33,530 --> 00:18:34,531 உனக்கு தெரியுமா? 329 00:18:35,032 --> 00:18:36,116 நீ என்ன நினைக்கிற? 330 00:18:37,701 --> 00:18:39,661 டிராப் பண்ணிட்டு 'பார்' ஸ்கோர் பண்ணுங்க 331 00:18:41,830 --> 00:18:43,832 இல்லன்னா சேத்துல இறங்கி மாஸ் காட்டு, வீரா! 332 00:19:06,647 --> 00:19:07,898 இல்ல. 333 00:19:08,482 --> 00:19:10,108 அவர் தன் ஷூவைக் கழற்றுகிறார், ஜிம். 334 00:19:10,692 --> 00:19:13,028 வீலர் சேற்றில் இறங்கி விளையாட தயங்கவில்லை. 335 00:19:18,158 --> 00:19:20,409 இது பன்கர் ஷாட் அடிப்பது போலத்தான். 336 00:19:20,410 --> 00:19:22,161 அவர் தனது உடலின் எடையை முன்னால் கொடுத்து, 337 00:19:22,162 --> 00:19:25,582 வேகமாக அடிப்பதன் மூலம் பந்தை சேற்றிலிருந்து வெளியே கொண்டு வர முடியும். 338 00:19:27,668 --> 00:19:30,086 அது புதைமணல் போல இருக்கு, ட்ரெவர். 339 00:19:30,087 --> 00:19:32,046 அவர் அதில் மூழ்கிவிட மாட்டார் என்று நம்புவோம். 340 00:19:32,047 --> 00:19:35,424 காலணிகளைக் கழற்றியது அவர் அடிக்கும்போது கால்கள் வழுக்காமல் இருக்க 341 00:19:35,425 --> 00:19:37,135 உண்மையிலேயே உதவியாக இருக்கும். 342 00:19:43,976 --> 00:19:45,561 போ! 343 00:19:47,020 --> 00:19:50,524 ஓ, கடவுளே, சான்டி ஒரு அற்புதமான ஷாட் அடித்துள்ளார்! 344 00:19:51,483 --> 00:19:55,487 மூன்று சுற்றுகளுக்குப் பிறகும், சான்டி வீலர் தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரையும் அசத்துகிறார். 345 00:19:56,071 --> 00:19:57,823 நான் இல்லன்னா நீ என்ன பண்ணுவ? 346 00:19:59,241 --> 00:20:03,703 ஜிம், ஃபவுண்டர்ஸ் போட்டியில் அனைவரும் உற்று நோக்கும் ஒரே வீரன் இவர் மட்டுமே! 347 00:20:03,704 --> 00:20:05,955 நாளை இறுதிச் சுற்று நடைபெற உள்ளது, 348 00:20:05,956 --> 00:20:09,125 ஷோடைம் வீலர் ஒரு புதிய வரலாறு படைக்க வாய்ப்புள்ளது. 349 00:20:09,126 --> 00:20:12,754 இந்த சாம்பியன்களின் நகரம் அவரை ஒரு மாபெரும் நட்சத்திரமாக கொண்டாட தயாராக உள்ளது. 350 00:20:17,050 --> 00:20:18,468 ஹேய். மிட்ஸி! 351 00:20:19,094 --> 00:20:21,846 சான்டியைப் பார்த்தீங்களா? அவன் ஃபோன் சுவிட்ச் ஆஃப்ல இருக்கு. 352 00:20:21,847 --> 00:20:23,347 - நான் அவனை பார்க்கலையே. - சரி. 353 00:20:23,348 --> 00:20:25,141 கொஞ்சம் நில்லு. நாம ரெண்டு பேரும் ஒரு முக்கியமான விஷயம் பேசணும். 354 00:20:25,142 --> 00:20:26,309 சீக்கிரமா சொல்ல முடியுமா? 355 00:20:26,310 --> 00:20:28,352 உனக்கு முதல்ல நல்ல செய்தி வேணுமா, இல்ல கெட்ட செய்தி வேணுமா? 356 00:20:28,353 --> 00:20:29,770 அட, என்ன? மறுபடியும் ஆரம்பிக்காதீங்க. 357 00:20:29,771 --> 00:20:31,939 கெட்ட செய்தி இருக்கும்போது நல்ல செய்தி எப்படி இருக்கும்? 358 00:20:31,940 --> 00:20:33,107 கெட்ட செய்தி மட்டும்தான் இருக்கும், 359 00:20:33,108 --> 00:20:36,152 அது கொஞ்சம் கம்மியா வலிக்கணும்னு நீங்களா ஏதோ ஒரு கதை அளப்பீங்க… 360 00:20:36,153 --> 00:20:38,070 - ஓ, கடவுளே. - …அது இன்னும் அந்த காயத்தை அதிகமாக்கும்… 361 00:20:38,071 --> 00:20:39,698 சரி. நீதானே சீக்கிரம் முடிக்கச் சொன்ன. 362 00:20:40,699 --> 00:20:42,618 - சரி. சொல்லுங்க. - சரி. 363 00:20:43,243 --> 00:20:44,912 எலினாவும் நானும் சேர்ந்து ஒரே வீட்ல வாழப்போறோம். 364 00:20:46,079 --> 00:20:49,081 - நிஜமாவா? இது உண்மையிலேயே நல்ல செய்திதான். - ஆமா. 365 00:20:49,082 --> 00:20:51,125 - ரொம்பவே சூப்பரான நியூஸ். - நன்றி, நண்பா. 366 00:20:51,126 --> 00:20:52,710 - வாழ்த்துகள். - நன்றி. 367 00:20:52,711 --> 00:20:54,921 சரி, கெட்ட செய்தி என்னன்னா, நாம ஊருக்குப் போனதும், 368 00:20:54,922 --> 00:20:56,548 நீ தங்கறதுக்கு வேற ஒரு இடம் தேடிக்கணும். 369 00:20:57,508 --> 00:20:58,925 இது ஒன்னும் அவ்வளவு கெட்ட செய்தி இல்லயே. 370 00:20:58,926 --> 00:21:01,178 எல்லாரும் என்னை வீட்டை விட்டு துரத்துறது எனக்கு பழகிடுச்சு! 371 00:21:03,847 --> 00:21:05,014 சரி. 372 00:21:05,015 --> 00:21:07,183 சரி, நானும் இதை சாப்பிட்டுப் பாக்குறேன். ஆமா, ஆமா, ஆமா. 373 00:21:07,184 --> 00:21:09,310 இது சூப்பரா இருக்கு. நான் நிறைய சாப்பிட்டேன்… 374 00:21:09,311 --> 00:21:11,437 - ரொம்ப ஆடம்பரமா இருக்கு. - எனக்குத் தெரியும். 375 00:21:11,438 --> 00:21:13,440 இங்க இருக்க எல்லாரையும் பாரேன். 376 00:21:14,441 --> 00:21:16,484 நான் இண்டியானாவில 8 மார்க் வாங்குவேன், ஆனா எல்.ஏ-வுல வெறும் 4 தான். 377 00:21:16,485 --> 00:21:17,818 - ஐயோ கடவுளே, நிறுத்துங்க. - ஆமா! 378 00:21:17,819 --> 00:21:20,613 இல்ல, இவங்களுக்கும் நமக்கும் இருக்க ஒரே வித்தியாசம், இவங்ககிட்ட பணம் இருக்கு. 379 00:21:20,614 --> 00:21:21,949 நாம ஷாப்பிங் போகணும். 380 00:21:23,659 --> 00:21:25,493 உங்க டிரஸ்ஸிங் ஸ்டைல் ஐகான் யாரு? 381 00:21:25,494 --> 00:21:26,578 என்னோட யாரு? 382 00:21:27,955 --> 00:21:30,456 அதாவது, நீங்க யாரை மாதிரி டிரஸ் பண்ணணும்னு ஆசைப்படுவீங்க? 383 00:21:30,457 --> 00:21:32,042 உங்க ட்ரீம் வாட்ரோப் மாதிரி. 384 00:21:32,751 --> 00:21:35,253 எனக்கு வந்து 80-களின் தொடக்க கால ஸ்பீல்பெர்க், 385 00:21:35,254 --> 00:21:37,171 2004 சமயத்து ஜெஸிகா சிம்ஸன், 386 00:21:37,172 --> 00:21:38,464 அப்புறம் மிட்ஸ்! 387 00:21:38,465 --> 00:21:39,841 - மிட்ஸா? - ஓ, ஆமா. 388 00:21:39,842 --> 00:21:41,050 அதாவது, அவர் ஸ்டைலே தனி தான். 389 00:21:41,051 --> 00:21:42,885 டாமி பஹாமாவும் ஆர்மி டிரஸ்ஸும் கலந்த மாதிரி இருக்கும். 390 00:21:42,886 --> 00:21:44,136 அதை யாராலும் அடிச்சுக்க முடியாது! 391 00:21:44,137 --> 00:21:45,472 உங்களுக்கு யாரு? 392 00:21:47,724 --> 00:21:49,767 ஈவா லாங்கோரியா. ஓ, ஆமா. 393 00:21:49,768 --> 00:21:50,852 - ஆமா. - ஆமா. ஆமா, ஆமா. 394 00:21:50,853 --> 00:21:53,855 அப்புறம் சான்டி படிச்ச பழைய ஸ்கூல் பிரின்சிபல். 395 00:21:53,856 --> 00:21:54,940 என்னது? 396 00:21:55,566 --> 00:21:56,692 அவங்க 'ரைடிங் பூட்ஸ்' போடுவாங்க. 397 00:21:58,110 --> 00:21:59,986 சரி, ரைடிங் பூட்ஸ். அது நல்லா செட் ஆகும். 398 00:21:59,987 --> 00:22:02,530 ஹேய், சாரி, நீங்க சான்டியைப் பார்த்தீங்களா? 399 00:22:02,531 --> 00:22:05,450 ஆமா, அவன் ஜெரமி கூட 'ஃப்ளெக்ஸ்ஜெட்' அறைக்கு போனான். 400 00:22:20,799 --> 00:22:22,383 - சான்டி. - ப்ரைஸ். 401 00:22:22,384 --> 00:22:25,136 - நீங்க இங்க வந்ததுல சந்தோஷம், நண்பா. - எப்படி இருக்கீங்க, ப்ரைஸ்? 402 00:22:25,137 --> 00:22:26,679 ஹேய். நீ எப்படி இருக்க? 403 00:22:26,680 --> 00:22:27,889 நான் டிரைவிங் ரேஞ்ச்ல இருந்தேன். 404 00:22:27,890 --> 00:22:30,183 14-வது ஹோல் ஷாட்டுக்கு பயிற்சி பண்ணலாம்னு நினைச்சேன். 405 00:22:30,184 --> 00:22:32,518 - ஐயோ. மன்னிச்சிடுங்க, ப்ரைஸ். - சரி. சீக்கிரம் வா. 406 00:22:32,519 --> 00:22:34,312 நான் இப்பதான் மைக்கேல் ஜோர்டனை சந்திச்சேன், நண்பா. 407 00:22:34,313 --> 00:22:36,856 அவரு என்னை ஜஸ்டின் தாமஸ் கூட என்னைக்காவது விளையாட கூப்பிட்டிருக்காரு. 408 00:22:36,857 --> 00:22:39,526 - உங்களால நம்ப முடியுதா? - நீங்க நாலு பேரும் சேர்ந்து விளையாடலாம். 409 00:22:40,068 --> 00:22:41,235 அது செமையா இருக்கும். 410 00:22:41,236 --> 00:22:42,945 - ஆமா. - ஆமா, கண்டிப்பா விளையாடணும். 411 00:22:42,946 --> 00:22:45,489 சரி, இன்னும் கொஞ்சம் வெளிச்சம் இருக்கு. நாம போய் பயிற்சி எடுக்கலாமா? 412 00:22:45,490 --> 00:22:47,533 - அந்த வேகத்தை தக்க வச்சுப்போம். - ஓ, இல்ல ப்ரைஸ், எனக்கு ஓகே தான். 413 00:22:47,534 --> 00:22:48,826 கேளுங்க, எனக்கு இப்போ அது தேவையில்ல. 414 00:22:48,827 --> 00:22:50,661 நானும் ஜெரமியும் இப்பதான் பேசிட்டு இருந்தோம், சரி, 415 00:22:50,662 --> 00:22:54,165 நாளைக்கு அப்புறம், நாம இதை செய்யுறதைப் பத்தி யோசிக்கணும். 416 00:22:54,166 --> 00:22:55,249 ஆமா. 417 00:22:55,250 --> 00:22:56,710 எதை செய்யுறதைப் பத்தி? 418 00:22:57,544 --> 00:22:58,628 புரொஃபஷனலா மாறுறது. 419 00:22:58,629 --> 00:23:01,047 நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்கு புரியுது, ஆனா இதுதான் சரியான நேரம். 420 00:23:01,048 --> 00:23:03,299 ஆமா, நம்ம பையனுக்கு இப்போ நல்ல நேரம், எல்லாமே சாதகமா அமையுது. 421 00:23:03,300 --> 00:23:04,384 ஆமா, ஆமா. 422 00:23:04,927 --> 00:23:07,428 - சொல்லுங்க, ப்ரைஸ். நாம இதை தொடருவோம். - ஆமா. 423 00:23:07,429 --> 00:23:09,764 கேளுங்க, உங்களுக்கு காலேஜ் படிப்பு தான் முக்கியம்னு தோணுது, 424 00:23:09,765 --> 00:23:12,433 ஆனா கடந்த சில நாளா நடக்குறதை பார்த்த அப்புறம், இனி காத்திருக்கிறதுல அர்த்தமே இல்ல. 425 00:23:12,434 --> 00:23:13,727 ஆனா எனக்கு அர்த்தம் இருக்குன்னு தோணுது. 426 00:23:15,103 --> 00:23:17,439 என்ன சொல்றீங்க, ப்ரைஸ்? 427 00:23:18,065 --> 00:23:19,815 நான் இன்னைக்கு தான் டாப் 10-க்குள்ள நுழைஞ்சிருக்கேன். 428 00:23:19,816 --> 00:23:23,027 நான் செமயா விளையாடுறேன், ஃபுல் ஃபார்ம்ல இருக்கேன். நாளைக்கு ஜெயிக்கப் போறேன். 429 00:23:23,028 --> 00:23:24,737 - நாம அடுத்த கட்டத்துக்கு போவோம், நண்பா. - சரி. 430 00:23:24,738 --> 00:23:26,280 நிறைய பணம் சம்பாதிப்போம். 431 00:23:26,281 --> 00:23:28,992 ஆமா, எனக்கு புரியுது, நீ சொல்றதும் நியாயம்தான். 432 00:23:29,826 --> 00:23:33,454 இங்க இருக்குறதும் இதெல்லாம் நடக்குறதும் ரொம்பவே த்ரில்லா தான் இருக்கும், 433 00:23:33,455 --> 00:23:36,583 ஆனா நீ இன்னும் அதுக்கு தயாராகல, சான்டி. 434 00:23:38,001 --> 00:23:41,212 கேளு… நமக்குன்னு ஒரு திட்டம் இருக்கு. 435 00:23:41,213 --> 00:23:42,296 நாம ஏற்கனவே பேசினோம்… 436 00:23:42,297 --> 00:23:44,423 - சான்டி, ஏதாச்சும் குடிக்கலாமா? - ஆமா, போலாம். 437 00:23:44,424 --> 00:23:45,925 நான் குடிக்க போறேன். உங்களுக்கு ஏதாச்சும் வேணுமா? 438 00:23:45,926 --> 00:23:47,218 - இல்ல, என்கிட்ட இருக்கு, ஆனா… - உங்ககிட்ட இருக்கா? 439 00:23:47,219 --> 00:23:49,221 - சரி, எனக்கு வாங்கிக்குறேன். சரி, பை. - வந்து… 440 00:23:52,432 --> 00:23:53,809 சான்டி… 441 00:23:54,309 --> 00:23:55,393 நான் உன்கிட்ட ஒண்ணு சொல்லணும். 442 00:23:55,394 --> 00:23:56,853 இல்ல, இப்போ வேண்டாம், கிளார்க். 443 00:23:56,854 --> 00:23:58,145 ப்ளீஸ், என்னை தனியா விடு. 444 00:23:58,146 --> 00:24:00,356 - இல்ல, இல்ல. இல்ல, நீ நான் சொல்றதை கேட்டே ஆகணும். - இல்ல, இல்ல. ப்ளீஸ். 445 00:24:00,357 --> 00:24:02,693 நீ இந்த கோல்ஃப் ஆட்டத்துல இருந்து விலகினப்போ, 446 00:24:03,569 --> 00:24:04,694 என் மனசுக்குள்ள நான் அழுதேன். 447 00:24:04,695 --> 00:24:07,990 "மனசுக்குள்ள அழுதியா"? என்ன இது, கிளார்க். நீ அழுதியா? 448 00:24:09,533 --> 00:24:12,368 சரி, நான் அழலை. உண்மையை சொல்லனும்னா நீ தோத்து ஓடினப்போ நான் சந்தோஷப்பட்டேன். 449 00:24:12,369 --> 00:24:14,370 சரி, ஆமா. இதுதான் நீ பேசுற மாதிரி இருக்கு. 450 00:24:14,371 --> 00:24:17,540 நீ ஒரு தற்காலிக மின்னல்னு எனக்குள்ள சொல்லிகிட்டேன். ஒரு ஜோக்னு. 451 00:24:17,541 --> 00:24:20,626 நீ இல்லாம கோல்ஃப் ரொம்ப நல்லா இருக்குன்னு நினைச்சேன். ஆனா உண்மைய சொல்லனும்னா… 452 00:24:20,627 --> 00:24:23,254 என் மனசின் ஒரு பகுதி நீ என்ன சாதிச்சு இருப்ப, 453 00:24:23,255 --> 00:24:25,464 உன்னோட திறமை என்னன்னு யோசிச்சுகிட்டே தான் இருந்துச்சு. 454 00:24:25,465 --> 00:24:26,632 ப்ரைஸ், உனக்காகவே நீ… 455 00:24:26,633 --> 00:24:30,179 இந்த வாய்ப்பு போறதுக்கு முன்னாடி உன்னோட சிறந்த ஆட்டத்தை இந்த விளையாட்டுக்கு நீ கொடுத்தாகணும். 456 00:24:33,348 --> 00:24:34,933 ஒருவேளை அது போதாம போயிட்டா? 457 00:24:36,935 --> 00:24:39,188 எல்லாரும் என்னை பத்தி நினைச்சது தப்பா இருந்தா? 458 00:24:41,064 --> 00:24:42,648 என்ன பேசுற நீ? 459 00:24:42,649 --> 00:24:45,485 அந்த 18-வது ஹோல்ல அடிச்சதுதான் என்னோட அதிகபட்ச திறமையா இருந்தா? 460 00:24:47,487 --> 00:24:49,238 அது உண்மை இல்லன்னு உனக்கே தெரியும். 461 00:24:49,239 --> 00:24:50,740 இல்ல, எனக்கு தெரியாது. 462 00:24:50,741 --> 00:24:52,743 அதை தெரிஞ்சுக்கவும் எனக்கு விருப்பமில்ல. 463 00:24:54,745 --> 00:24:58,039 நம்மால சாதிக்க முடியும்ன்ற நம்பிக்கையோட சாகுறது, 464 00:24:58,040 --> 00:24:59,833 நம்மால முடியாதுன்னு தெரிஞ்சு வாழ்றதை விட மேலானது. 465 00:25:02,503 --> 00:25:06,672 உன்கிட்ட இருக்கற திறமையில ஒரு பங்கு கூட இல்லாம இருந்தாலும் 466 00:25:06,673 --> 00:25:09,259 முயற்சி பண்ணி தோத்துப்போன எங்கள மாதிரி ஆளுங்க சார்பா சொல்றேன், 467 00:25:10,093 --> 00:25:12,346 முயற்சியே பண்ணாம இருக்க நீ செத்தே போகலாம் 468 00:25:20,771 --> 00:25:23,439 'த ஃபவுண்டர்ஸ் இன்விடேஷனல்' போட்டியின் இந்த இறுதிச் சுற்று 469 00:25:23,440 --> 00:25:25,984 {\an8}மிகக் கடுமையான போராட்டமாக அமைந்துள்ளது, நண்பர்களே. 470 00:25:26,610 --> 00:25:29,987 இன்றைய நாளில் வெறும் எட்டு வீரர்கள் மட்டுமே 'அண்டர் பார்' எடுத்துள்ளனர். 471 00:25:29,988 --> 00:25:32,698 முன்னணியில் உள்ள ஏழு வீரர்களுக்கும் இடையே நான்கு ஷாட்கள் மட்டுமே வித்தியாசம். 472 00:25:32,699 --> 00:25:33,783 சான்டி வீலர் இடம்: T4 473 00:25:33,784 --> 00:25:39,247 ஆனால், இளம் வீரன் சான்டி வீலரை விட வேறு யாரும் இவ்வளவு தீவிரமாகப் போராடவில்லை. 474 00:25:39,248 --> 00:25:41,624 அவர் 'பர்டி' போடுவதற்கு 13 அடி தூரம் உள்ளது, 475 00:25:41,625 --> 00:25:44,210 இதை அவர் சரியாக அடித்தால், மூன்றாம் இடத்திற்கு முன்னேறுவதோடு, 476 00:25:44,211 --> 00:25:48,298 ஒரு ஆமெச்சூராக பிஜிஏ டூரில் தனது சிறந்த ரெக்கார்டை பதிவு செய்வார். 477 00:25:54,388 --> 00:25:56,557 ஷோடைமுக்கு இது ஒரு அருமையான வாய்ப்பு. 478 00:26:18,620 --> 00:26:20,037 ஆமா! 479 00:26:20,038 --> 00:26:22,331 - ஆமா! - செம! 480 00:26:22,332 --> 00:26:24,333 கலக்கிட்ட! 481 00:26:24,334 --> 00:26:25,335 சூப்பர்! 482 00:26:26,170 --> 00:26:27,254 செம! 483 00:26:27,880 --> 00:26:32,301 இதோ முடிந்தது! ஷோடைம் வீலர் மீண்டும் தனது அபாரமான ஆட்டத்தால் கலக்கிவிட்டார்! 484 00:26:35,554 --> 00:26:37,723 கலக்கிட்ட, செல்லம். ஐ லவ் யூ! 485 00:26:38,974 --> 00:26:42,477 சான்டி! சான்டி! சான்டி! 486 00:26:49,276 --> 00:26:53,196 ஹேய், ஹேய், ஹேய். இந்த இடத்தை… நாம ரசிச்சு பார்க்கணும்! 487 00:26:53,197 --> 00:26:56,282 அதாவது, ஜாம்பவான்கள் எல்லாம் இந்த பார்ல உக்காந்திருக்காங்க! 488 00:26:56,283 --> 00:26:59,535 எனக்கு… இவங்க யாரைப் பத்தியும் எதுவும் தெரியாது. 489 00:26:59,536 --> 00:27:01,078 அப்படி சொல்லாதே. சும்மா இரு. 490 00:27:01,079 --> 00:27:03,706 ஜோ டிமாஜியோ யாருன்னு உனக்கு தெரியும்ல? 491 00:27:03,707 --> 00:27:06,542 ஜோ டிமாஜியாவா? ஆமா, அவர் முகத்தை உர்ருனு வச்சிருக்கறதை பார்த்தா 492 00:27:06,543 --> 00:27:09,545 - பேஸ்பால் பிளேயர் மாதிரி தெரியுது! - வாவ். வாவ். 493 00:27:09,546 --> 00:27:10,755 ஜோல்டின் ஜோ! 494 00:27:10,756 --> 00:27:11,964 தி யாங்கி கிளிப்பர். 495 00:27:11,965 --> 00:27:13,758 மர்லின் மன்றோவை கல்யாணம் பண்ணவர். 496 00:27:13,759 --> 00:27:16,553 டைலர், தி கிரியேட்டர் இங்க சுத்திட்டு இருந்தார்னு சொன்னா கூட கெத்தா இருக்கும். 497 00:27:17,179 --> 00:27:18,222 அவர் யாருன்னு எனக்குத் தெரியாது. 498 00:27:19,306 --> 00:27:20,473 செல்லக் குட்டி. 499 00:27:20,474 --> 00:27:22,391 - உன்னை நினைச்சா பெருமையா இருக்கு, செல்லம். - எனக்கு அப்படி தோணல. 500 00:27:22,392 --> 00:27:24,644 - ஹேய், ஹேய், ஒரு டோஸ்ட் பண்ணலாமா? - பண்ணலாம்! 501 00:27:24,645 --> 00:27:25,645 - வாங்க. சான்டிக்காக. - சரி. சான்டிக்காக. 502 00:27:25,646 --> 00:27:26,562 சரி. 503 00:27:26,563 --> 00:27:28,148 - சான்டிக்கு சியர்ஸ்! - நன்றி. 504 00:27:32,778 --> 00:27:34,279 சரி, ப்ரைஸ். 505 00:27:34,863 --> 00:27:35,864 சரி, என்ன? 506 00:27:36,740 --> 00:27:39,159 நான் புரொஃபஷனல் ஆகுறதுக்கு இன்னும் தயாரா இல்லனு சொன்னீங்களே. 507 00:27:40,369 --> 00:27:41,953 ஆமா, சொன்னேன். 508 00:27:41,954 --> 00:27:43,330 இப்போ என்ன சொல்றீங்க? 509 00:27:44,790 --> 00:27:46,375 நான் இன்னும் என் முடிவை மாத்திக்கலை. 510 00:27:47,084 --> 00:27:48,793 - என்ன விளையாடுறீங்களா? - இல்ல. 511 00:27:48,794 --> 00:27:50,586 ப்ரைஸ், இந்த டோர்னமென்ட்ல வேற யாரையும் விட 512 00:27:50,587 --> 00:27:52,713 அவன்தான் அதிக தடவை பந்தை சரியா இலக்குக்கு கொண்டு போய் சேர்த்திருக்கான். 513 00:27:52,714 --> 00:27:54,549 எனக்கு தெரியும், அவன் ரொம்ப நல்லா விளையாடுறான். 514 00:27:54,550 --> 00:27:56,635 ஆனா நல்லா விளையாடுறதும், முழுசா தயாராகுறதும் ஒண்ணு இல்ல. 515 00:27:58,387 --> 00:28:01,848 இது எப்படி… நான் தயாராயிட்டேன்னு நிரூபிக்காம போகும்? 516 00:28:01,849 --> 00:28:05,268 நான்… நான் இப்பவே டூர்ல இருந்தா, 'டிரைவிங் டிஸ்டன்ஸ்'ல 31-வது இடத்துல இருப்பேன், 517 00:28:05,269 --> 00:28:07,937 'ஸ்ட்ரோக்ஸ் கெயின்ட் டி டு கிரீன்'ல 23-வது இடத்துல இருப்பேன். 518 00:28:07,938 --> 00:28:10,106 ப்ரைஸ், அங்க இருக்குற முக்கால்வாசி பேரை விட நான் சிறப்பா புட்டிங் பண்றேன்! 519 00:28:10,107 --> 00:28:13,609 எனக்கு புரியுது, ஆனா நான் என்ன சொல்றேன்னா… நீ நல்லா விளையாடுற, 520 00:28:13,610 --> 00:28:15,487 ஆனா அவங்க விளையாடுற ஆட்டமே வேற. 521 00:28:17,990 --> 00:28:19,323 என்ன… அதுக்கு என்ன அர்த்தம்? 522 00:28:19,324 --> 00:28:20,950 சரி, இதை பத்தி நாம நாளைக்கு பேசலாமே. 523 00:28:20,951 --> 00:28:23,286 இல்ல. அம்மா, நாம இத இப்போவே பேசி ஆகணும். 524 00:28:23,287 --> 00:28:24,787 - ஆமா, இதைப் பத்தி பேசுவோம். - சரி. 525 00:28:24,788 --> 00:28:27,624 "அவங்க விளையாடுற ஆட்டமே வேற"னா என்ன அர்த்தம்? 526 00:28:28,500 --> 00:28:31,377 இன்னைக்கு நீயும் அவங்களும் ஒரே கிரவுண்ட்ல விளையாடின மாதிரி தான் தெரியும், 527 00:28:31,378 --> 00:28:32,546 ஆனா உண்மையிலேயே அப்படி இல்ல. 528 00:28:33,922 --> 00:28:35,632 நீங்க… நீங்க என்ன பேசிட்டு இருக்கீங்க? 529 00:28:36,133 --> 00:28:39,677 பாரு, சான்டி, அவங்க இருக்குற உலகமே வேற. சரியா? 530 00:28:39,678 --> 00:28:41,762 நீ ஒரு அமெச்சூர் பிளேயரா விளையாடுறப்ப, 531 00:28:41,763 --> 00:28:44,640 அது ஒரு புரொஃபஷனலா விளையாடுறதை விட முற்றிலும் வேற விஷயம். 532 00:28:44,641 --> 00:28:47,810 அங்க ரிஸ்க் அதிகம், அழுத்தமும் ரொம்பவே அதிகம். 533 00:28:47,811 --> 00:28:49,645 மக்கள் உன்னை பார்க்குற விதமே மாறிடும். புரியுதா? 534 00:28:49,646 --> 00:28:53,065 நீ அமெச்சூரா விளையாடுறப்போ, இன்னைக்கு நீ ஜெயிச்ச மாதிரி விளையாடினா கூட, 535 00:28:53,066 --> 00:28:54,692 எல்லாரும் உன்னை சாதாரணமாக எடுத்துப்பாங்க. 536 00:28:54,693 --> 00:28:57,403 ஆனா நீ புரொஃபஷனலா மாறின அடுத்த நிமிஷமே எல்லாமே மாறிடும். சரியா? 537 00:28:57,404 --> 00:29:00,364 - அது வேற ஆட்டம். சத்தம் நிறைந்த ஒரு ஆட்டம். - ஆமா. 538 00:29:00,365 --> 00:29:03,117 ரொம்பவே கஷ்டமான ஆட்டம். சொல்லப்போனால் அது ஆட்டமே இல்ல! 539 00:29:03,118 --> 00:29:06,954 நான் என்ன சொல்றேன்னா, உனக்கு கொஞ்சம் அவகாசம் எடுக்க வாய்ப்பு இருக்கு. 540 00:29:06,955 --> 00:29:08,748 காலேஜுக்கு போ. சின்ன பையனா ஜாலியா இரு. 541 00:29:08,749 --> 00:29:10,082 நான் ஒண்ணும் சின்ன பையன் இல்ல. 542 00:29:10,083 --> 00:29:13,044 இல்ல, ஆனா நான் சொல்ல வர்றது உனக்கு புரியுதுல்ல? எந்த அழுத்தமும் இல்லாம சந்தோஷமா இரு. 543 00:29:13,045 --> 00:29:14,046 ப்ரைஸ், ப்ரைஸ். 544 00:29:15,130 --> 00:29:16,381 சுற்றிப் பாருங்க. 545 00:29:17,508 --> 00:29:21,345 நாம சாதிச்சிட்டோம்! 'த ஃபவுண்டர்ஸ்' போட்டியில மூணாவது இடம் பிடிச்சிருக்கேன். இது நம்ம நேரம்! 546 00:29:22,012 --> 00:29:23,888 இதுக்காகத்தானே நாம இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டோம். 547 00:29:23,889 --> 00:29:26,892 நாம அடுத்த கட்டத்துக்கு போய் என் திறமை என்னன்னு எல்லாருக்கும் காட்டுவோம். 548 00:29:28,852 --> 00:29:30,437 இது ரொம்ப சீக்கிரம். 549 00:29:37,194 --> 00:29:42,199 எனக்கு என்னவோ, இதெல்லாம் உங்களோட சொந்தப் பிரச்சனையாலன்னு தோணுது, ப்ரைஸ். 550 00:29:43,867 --> 00:29:45,952 சின்ன வயசுல உங்களுக்கு கிடைச்ச வாய்ப்பை நீங்களா தூக்கி வீசினீங்க. 551 00:29:45,953 --> 00:29:47,662 ஆமா, அது உண்மையா கூட இருக்கலாம். 552 00:29:47,663 --> 00:29:49,580 நான் ஒரு தப்பான உதாரணம் தான், 553 00:29:49,581 --> 00:29:53,167 அதனாலதான் நீயும் அதே தப்பை செஞ்சிடக் கூடாதுன்னு உன்னை காப்பாத்த நினைக்கிறேன். 554 00:29:53,168 --> 00:29:55,419 ஆமா, ஆனா நான் நீங்க இல்ல. அட, நான் நீங்க இல்ல! 555 00:29:55,420 --> 00:29:56,839 நாம ரெண்டு பேரும் வெவ்வேறு ஆளுங்க. 556 00:29:58,090 --> 00:30:00,092 நான் தயார். இந்த பெரிய ஆட்டத்துக்கு நான் தயாரா இருக்கேன். 557 00:30:02,344 --> 00:30:04,262 நீ தயாரா இருக்கேன்னு நீ நினைக்கிறது எனக்குப் புரியுது, 558 00:30:04,263 --> 00:30:06,138 ஆனா இது தவறான முடிவுனு எனக்கு தோணுது. 559 00:30:06,139 --> 00:30:07,224 என்னை மன்னிச்சிடு. 560 00:30:08,183 --> 00:30:09,560 வாய்ப்புகள் அப்புறமும் வரும். 561 00:30:11,562 --> 00:30:12,729 யோசிச்சுப் பாரு. 562 00:30:17,150 --> 00:30:20,320 நான் புரொஃபஷனலா மாறப்போறேன், ப்ரைஸ். 563 00:30:21,780 --> 00:30:22,948 நான் முடிவு பண்ணிட்டேன். 564 00:30:25,200 --> 00:30:27,327 நீங்க என்ன சொன்னாலும் என் முடிவை மாத்த முடியாது. 565 00:30:31,373 --> 00:30:32,457 சரி. 566 00:30:34,960 --> 00:30:37,462 சரி, நீ இதை முடிவு பண்ணிட்டனா, அப்புறம் என்ன, இறங்கிடுவோம். 567 00:30:38,505 --> 00:30:39,590 நாம புரோவா ஆவோம். 568 00:30:40,340 --> 00:30:42,593 இல்ல, நான் இதை நீங்க இல்லாம தனியா தான் பண்ணணும். 569 00:30:48,891 --> 00:30:50,225 ப்ரைஸ், ஐ லவ் யூ. 570 00:30:51,727 --> 00:30:53,729 நீங்க எனக்கு எவ்வளவோ பண்ணியிருக்கீங்க, ஆனா என்னால… 571 00:30:55,856 --> 00:31:00,526 என்னால இதை சாதிக்க முடியும்னு நம்பிக்கையே இல்லாத ஒருத்தரை என்னோட கூட வச்சுக்க முடியாது. 572 00:31:00,527 --> 00:31:01,945 இரு, நான்… 573 00:31:04,823 --> 00:31:06,074 என்னை மன்னிச்சிடுங்க. 574 00:31:08,076 --> 00:31:09,161 நான் கிளம்புறேன். 575 00:31:11,288 --> 00:31:12,289 கிளம்பு. 576 00:31:17,294 --> 00:31:19,295 சரி, நீ எவ்வளவு நாள் இங்க தங்கப்போற? 577 00:31:19,296 --> 00:31:22,507 தெரியல. நான் சான்டியோட திட்டம் என்னனு பார்க்கணும். 578 00:31:22,508 --> 00:31:24,176 - சரி. சரி. - சரி. 579 00:31:25,469 --> 00:31:27,888 ஹேய், ப்ரைஸ்! ப்ரைஸ்! 580 00:31:28,680 --> 00:31:30,223 அவர் நல்லா இருப்பார்ல? 581 00:31:30,224 --> 00:31:31,933 ஆமா, அவனுக்கு ஒண்ணும் ஆகாது. 582 00:31:31,934 --> 00:31:33,352 எங்க கார் வந்துடுச்சுன்னு நினைக்கிறேன். 583 00:31:35,020 --> 00:31:36,938 - தரையிறங்குனதும் ஃபோன் பண்ணுங்க. - கண்டிப்பா பண்றேன். 584 00:31:36,939 --> 00:31:38,231 ஐ லவ் யூ. 585 00:31:38,232 --> 00:31:40,191 நானும் தான். வீட்ல சந்திப்போம். 586 00:31:40,192 --> 00:31:41,193 சரியா? 587 00:31:41,693 --> 00:31:43,529 - பை. - பை. 588 00:31:44,988 --> 00:31:46,490 என்ன விஷயம், பெரியவரே? 589 00:32:05,592 --> 00:32:06,677 எப்படி இருக்க? 590 00:32:08,929 --> 00:32:10,347 நல்லா தூங்குனியா? 591 00:32:15,018 --> 00:32:17,187 இத நினைச்சு நீ ரொம்ப வருத்தப்பட்டு உடைஞ்சு போகப்போறியா, ப்ரைஸ்? 592 00:32:19,314 --> 00:32:20,565 எனக்குத் தெரியல. 593 00:32:20,566 --> 00:32:21,650 அப்படி ஆகாத. 594 00:32:22,734 --> 00:32:24,318 நீ இப்போ வேற ஒரு கட்டத்துல இருக்க. 595 00:32:24,319 --> 00:32:26,070 - அப்படியா? - ஆமா. 596 00:32:26,071 --> 00:32:28,072 நீ ஒரு சாதாரண பையனை புரோ லெவலுக்கு கொண்டு வந்திருக்க. 597 00:32:28,073 --> 00:32:30,908 அது ஒரு பெரிய விஷயம். எல்லாருக்கும் அது தெரியும். உனக்கு இப்போ நல்ல பேரு இருக்கு. 598 00:32:30,909 --> 00:32:33,744 நீ இனிமே வேற புது திறமையான பசங்களைத் தேடி போகலாம், 599 00:32:33,745 --> 00:32:36,289 அவங்க பெத்தவங்ககிட்ட பேசுனா நல்ல காசு கிடைக்கும். 600 00:32:36,290 --> 00:32:38,709 எல்லாரும் சாதிக்க போறதில்லதான், ஆனா பொழப்பு நடக்குமே. 601 00:32:39,334 --> 00:32:41,919 இல்லனா நீ அந்த ஸ்போர்ட்ஸ் கடையில மறுபடியும் வேலைக்கு சேரலாம். 602 00:32:41,920 --> 00:32:43,755 நேரடியா மேனேஜராவே ஆரம்பிக்கலாம். 603 00:32:44,464 --> 00:32:46,132 அப்புறம் இந்த வீட்டை விட்டு போற விஷயம்… 604 00:32:46,133 --> 00:32:49,135 பாரு, நீ வேணும்னா அந்த வேன்ல தங்கிக்கோ, 605 00:32:49,136 --> 00:32:50,637 வீட்டுக்குள்ள வந்து நீ குளிச்சுக்கோ. 606 00:32:51,972 --> 00:32:55,392 எலினாவுக்கு இதில எந்த பிரச்சனையும் இருக்காது. நாம எல்லாரும் நண்பர்கள் ஆச்சே. 607 00:33:21,960 --> 00:33:23,170 ப்ரைஸ்? 608 00:33:24,046 --> 00:33:25,380 நாம அதைச் செய்யலாம் 609 00:34:46,670 --> 00:34:48,672 வசனங்கள் மொழிபெயர்ப்பு மேனகா மணிகண்டன்