1 00:00:01,502 --> 00:00:04,588 வெட்டுகள், காயங்கள், தியாகங்கள், இதெல்லாம் நிஜம். 2 00:00:04,671 --> 00:00:07,883 என் கணவர் இப்ப ஒஹாயோவில வேலைக்கான 3 00:00:07,966 --> 00:00:11,053 இன்டெர்வியூக்கு போயிருக்கார், அது நிஜம். 4 00:00:11,136 --> 00:00:14,848 அதாவது, நாங்க மொத்தமா அங்க இடமாறி போகணும். அது நிஜம். 5 00:00:14,932 --> 00:00:17,768 நீ வச்சிருக்கிறது இன்னொருத்தியோட கணவனோட ஒரு லூசுத்தனமான கற்பனை வாழ்க்கை. 6 00:00:18,519 --> 00:00:19,686 நீ ஊரவிட்டு போறியா? 7 00:00:19,770 --> 00:00:22,105 - இப்ப அதுவா முக்கியம்? - நீ என்ன சொல்ற? 8 00:00:22,189 --> 00:00:23,941 - நீ என்னோட உற்ற தோழி. - ஆமா! 9 00:00:24,024 --> 00:00:26,985 நான்ஸியும் தான். நீ அவ கணவன் கூட உறவு வச்சிருக்க. 10 00:00:27,069 --> 00:00:29,821 மேரி சிம்ப்ஸன் எப்போதும் மக்களிடம் அவர்களது சிறந்த குணங்களை மட்டுமே பார்த்தாள். 11 00:00:30,489 --> 00:00:32,991 அதாவது, மக்கள் அது தவறு என்று அவளுக்கு நிரூபித்தாலும் கூட. 12 00:00:33,075 --> 00:00:34,993 - என் வீட்டை விட்டு வெளிய போ. - மேரி. 13 00:00:35,577 --> 00:00:36,578 இப்பவே. 14 00:00:36,662 --> 00:00:38,163 மேரி உலகம் தெரியாதவள் கிடையாது. 15 00:00:38,247 --> 00:00:41,333 இந்த உலகம் எவ்வளவு மோசமாக போகலாமென தெரியும் அளவு அவள் நிறையவே பார்த்திருக்கிறாள். 16 00:00:43,627 --> 00:00:46,338 அதனால் அவள் தனக்கென ஒரு புதிய நிஜத்தை உருவாக்கக் கற்றுக்கொண்டாள். 17 00:00:48,382 --> 00:00:51,051 ஆனால் நிஜ உலகமோ மேரிக்கு வேறு திட்டங்களைக் கொண்டிருந்தது. 18 00:00:55,097 --> 00:00:56,348 உனக்கு அது கேட்டுச்சா, நான்ஸ்? 19 00:00:59,810 --> 00:01:01,311 இறுதியாக அவள் விரும்பியது அவளுக்குக் கிடைத்தது. 20 00:01:02,396 --> 00:01:05,816 அத்தியாயம் மூன்று மேரி 21 00:01:05,899 --> 00:01:09,278 எப்போது தன்னைத் தானே கடைசியாக அவள் ஆச்சரியப்படுத்தினாளென மேரிக்கு ஞாபகமில்லை. 22 00:01:09,361 --> 00:01:11,947 தன்னால் எதுவும் முடியும் என்று அவளுக்கு தோன்றிய காலம் ஒன்று இருந்தது. 23 00:01:12,531 --> 00:01:16,201 அது காஸ்ட்கோவுக்கு யாத்திரை போனது, PTA-ல கேக் சேல்ஸ் பண்ணது… 24 00:01:16,285 --> 00:01:18,120 "…உள்ளடையை உள்ளாடையாக மட்டும் வாங்கியது இது எல்லாவற்றுக்கும் முன்பாக. 25 00:01:18,203 --> 00:01:22,541 மேரிக்கு குறிக்கோளும், ஆசைகளும் இருந்தன. அவளுக்கே சொந்தமான ஒரு ரகசிய நெருப்பு. 26 00:01:22,624 --> 00:01:26,336 தனக்கென்ன வேண்டுமென அவளுக்குத் தெரியும். அவள் அதை எடுத்துக்கொண்டாள். அப்படி தான் ஹாவர்டும் கிடைத்தான். 27 00:01:26,420 --> 00:01:30,007 அவளது முனைவர் படிப்பின் முதல் வருடத்திலேயே, அவள் அவனுடைய உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தாள். 28 00:01:31,091 --> 00:01:36,054 பல வருடங்கள் கழித்து, இன்னும் தன் மேல் அவனுடைய உடலின் எடையையும், ஆடையில்லா அவள் மேனியில் 29 00:01:36,847 --> 00:01:40,726 அவனது படுக்கைத் துணிகளின் சிராய்ப்பையும் அவளால் உணர முடிந்தது." 30 00:01:42,561 --> 00:01:44,521 "அவளால்…" மன்னிக்கணும். 31 00:01:45,772 --> 00:01:48,567 "அவனது திருமணம் பல வருடங்களாக உயிரற்று இருந்தது. 32 00:01:48,650 --> 00:01:50,152 அவன் இந்நேரம் தன் மனைவியை விட்டுச் சென்றிருப்பான், 33 00:01:50,235 --> 00:01:53,238 அவள் மட்டும் தன் மணிக்கட்டினை வெட்டிக்கொள்வாள் என்று அவன் கவலைப்படாதிருந்தால். மீண்டுமாக. 34 00:01:53,322 --> 00:01:56,325 அந்தப் பாவப்பட்ட பெண்ணைப் பார்த்துப் பரிதாபப்படுவதாக மேரி தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள். 35 00:01:56,408 --> 00:02:01,455 ஆனால், உண்மையில், அந்த துரோகம் மொத்த வாழ்க்கையையும் சுவையாக்கியது. 36 00:02:01,538 --> 00:02:05,292 அவளுக்கு அவன் வேண்டும். அவள் அது குறித்து வெட்கப்படவில்லை." 37 00:02:08,252 --> 00:02:10,130 ஆக. இது தான் தொடக்கம்னு நினைக்கிறேன். 38 00:02:11,632 --> 00:02:13,926 நான் நினைச்சதை விட வாசிக்கும் போது கொஞ்சம் ஆபாசமா இருக்கு. 39 00:02:15,344 --> 00:02:17,554 அந்த எழுத்தே அதை பேசட்டும். 40 00:02:17,638 --> 00:02:19,765 அதில நிறைய நல்ல விஷயங்கள் இருக்கு. 41 00:02:19,848 --> 00:02:23,435 "உள்ளடையை உள்ளாடையாக"? எனக்கு பழக்கமானவ மாதிரி தோணுது. 42 00:02:23,519 --> 00:02:27,147 - நன்றி. - சரி. உங்க எண்ணங்கள்? எதிர்வினைகள்? 43 00:02:28,023 --> 00:02:29,024 யாராச்சும்? 44 00:02:29,942 --> 00:02:31,777 இந்த நேர்மையைப் பாராட்டுறேன். 45 00:02:32,361 --> 00:02:37,366 ஒப்புக்குறேன். நம்மளையே ஒழுக்கமில்லாதவளா காட்டுறதுக்கு தைரியம் வேணும். 46 00:02:37,449 --> 00:02:41,245 ஒழுக்கமில்லாதவள். ஆமா. விரும்பத்தகாதவளும் கூட. 47 00:02:42,412 --> 00:02:45,749 மேரியின் கதையின் நாயகியை வேற யாருக்குப் பிடிக்கல? 48 00:02:45,832 --> 00:02:48,377 நான் சொல்றேன். ஒரு திருமணமானவன் கூட உறவு வச்சிருக்கா, 49 00:02:48,460 --> 00:02:51,213 அதுவும், மனைவி தற்கொலை பண்றதை விரும்புறா. 50 00:02:51,296 --> 00:02:53,924 ம், அவள் விரும்பல. 51 00:02:54,007 --> 00:02:56,510 வாசகரோட ஆவலைச் சீக்கிரமாத் தூண்ட மேரி என்ன பண்ணலாம்? 52 00:02:56,593 --> 00:02:59,847 என்னைப் பொறுத்தவரை, நான் நான்ஸியைப் பத்தி கேட்க விரும்புறேன். 53 00:03:00,597 --> 00:03:01,598 சொல்லு. 54 00:03:02,099 --> 00:03:04,101 நான் அவளைப் பத்தி குறிப்பிடவே இல்லையே. 55 00:03:04,184 --> 00:03:05,644 மக்களே, கொஞ்சம் கவனம் செலுத்தலாமா? 56 00:03:05,727 --> 00:03:08,146 உன்னோட படங்களை அவளோட சமூக ஊடகங்கள்ல பார்த்திருக்கோம். 57 00:03:08,230 --> 00:03:10,440 ரஸல் சொல்றதுக்கு நான் உடன்படுறேன். நான்ஸியைப் பத்தி எழுது. 58 00:03:10,524 --> 00:03:13,360 கொஞ்சம் மர்ம சாயல்லேயும் நீ எழுதலாம். த்ரில்லர் கூட. 59 00:03:13,443 --> 00:03:14,778 - அற்புதம். - ஆமா. 60 00:03:14,862 --> 00:03:16,947 நிஜ வாழ்க்கையில, கொலை பண்ணது கணவனா? 61 00:03:17,030 --> 00:03:19,157 - தோழியாவும் இருக்கலாம். - யாரந்த தோழி? 62 00:03:19,241 --> 00:03:21,034 - ம், அது… - ஒரு முடிவுக்கு வாங்க. 63 00:03:21,118 --> 00:03:22,703 இன்னைக்குக் காலைல மகள் ஒரு வீடியோ போஸ்ட் பண்ணியிருக்கா. 64 00:03:22,786 --> 00:03:24,913 - என்ன வீடியோ? - அது வைரலா ஆச்சு. 65 00:03:24,997 --> 00:03:26,582 பார்த்தோம்னா, அந்த கணவன்… 66 00:03:26,665 --> 00:03:28,667 - ராபர்ட். - ராபர்ட், 67 00:03:28,750 --> 00:03:30,252 - அவன் ரொம்ப அழகு… - ரொம்ப அழகு. 68 00:03:30,335 --> 00:03:33,505 …அவன் நான்ஸியோட நெருங்கின தோழி, எலனார் கூட உறவு வச்சிருக்கான். 69 00:04:20,761 --> 00:04:22,721 ஆரமின்ட்டா ஹாலின் புத்தகத்தைத் தழுவியது 70 00:04:30,479 --> 00:04:32,022 அவர்கள் சந்தித்த நாள் முதல், 71 00:04:32,105 --> 00:04:36,360 நான்ஸியுடன் நட்பில் இருப்பது தன்னைப் பற்றிய மிகுந்த சுவாரஸ்யமான விஷயமென மேரிக்குத் தெரிந்தது. 72 00:04:37,569 --> 00:04:39,029 மிளிரும் சருமத்துடன் உள்ள இயல்பிலே அழகான 73 00:04:39,112 --> 00:04:41,907 ஒரு ப்ளாண்ட் பெண்ணின் அந்த ஈர்ப்பை மேரி புரிந்துக்கொண்டாள். 74 00:04:41,990 --> 00:04:43,367 நிஜமான நான்ஸி ஹென்னஸி யார்? 75 00:04:43,450 --> 00:04:46,453 ஒப்பீட்டளவில் தான் எங்கு நிற்கிறோம் என்று அவளுக்குத் தெரியும். 76 00:04:54,253 --> 00:04:57,673 ஆனால் எது சரியானது என்ற உலகின் எண்ணம் குறித்து மேரிக்கு எந்த ஆர்வமும் கிடையாது. 77 00:04:58,882 --> 00:05:02,803 80-களில் கஞ்சா தோட்டத்தில் வளர்ந்த ஐந்து குழந்தைகளில் மூத்தவள் அவள். 78 00:05:03,303 --> 00:05:04,972 அவளும் ஒரு போதும் தனக்கு எதுவும் இல்லை என்று உணர்ந்ததில்லை. 79 00:05:06,139 --> 00:05:10,394 ஏனெனில் அவளுக்குப் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை, தன் தேவைக்கு யதார்த்தத்தை வளைத்துக்கொள்ளக்கூடியவள். 80 00:05:11,687 --> 00:05:12,938 மன்னிக்கணும், நீங்க ஷானா? 81 00:05:13,522 --> 00:05:15,691 - ஆமா. - உங்களுக்குத் தெரியும்னு சொன்னாங்க. 82 00:05:15,774 --> 00:05:18,110 எனக்கு ஜலதோஷத்துக்கு மருந்து வேணும். 83 00:05:18,986 --> 00:05:20,654 உங்க கிட்ட… உங்க கிட்ட அது இருக்கா? 84 00:05:20,737 --> 00:05:21,905 பகலுக்கா, ராத்திரிக்கா? 85 00:05:21,989 --> 00:05:23,240 நிச்சயமா பகலுக்குத் தான். 86 00:05:23,991 --> 00:05:26,201 - நான் பின்னால போய்ப் பார்க்கணும். - உங்களுக்குத் தொந்தரவில்லைன்னு நினைக்கிறேன். 87 00:05:27,744 --> 00:05:28,745 நன்றி. 88 00:05:28,829 --> 00:05:29,830 எலனார் புஷே 89 00:05:29,913 --> 00:05:32,332 மற்றவர்களிடம் பணமும் அந்தஸ்தும் இருந்த போது, 90 00:05:33,208 --> 00:05:35,544 மேரியிடம் அதிக பயனுள்ள ஒரு விஷயம் இருந்தது. 91 00:05:38,046 --> 00:05:39,673 வளங்கள். 92 00:05:43,302 --> 00:05:45,012 - நன்றி. - நன்றி. 93 00:05:47,222 --> 00:05:49,474 ஆடரால் 94 00:06:00,986 --> 00:06:02,070 சரி. 95 00:06:08,577 --> 00:06:15,167 இளவரசி டில்லி டுமாரோ சூரிய பிரமிடின் படிகளை அண்ணாந்துப் பார்த்தாள். 96 00:06:15,250 --> 00:06:19,046 ட்ராகன், சூரியப் பிரமிடின் உச்சியிலே என்ன இருக்கு? 97 00:06:20,130 --> 00:06:24,635 அவன் நெருப்பைக் கக்குகிறான், ஆனால் நட்பாக, நல்ல விதமாக. 98 00:06:24,718 --> 00:06:29,139 இன்று, நீ உன் அம்மா, புகழ்பெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர், 99 00:06:29,223 --> 00:06:35,395 மற்றும் ராணியார் டான்யா டுமாரோ அவர்களுடன் மீண்டும் இணைவாய். 100 00:06:35,479 --> 00:06:41,443 பின்னர் இளவரசி டில்லி டுமாரோ சூரியப் பிரமிடின் படிகளில் தாவி ஏறினாள். 101 00:06:41,527 --> 00:06:44,238 அவள் மேலே சென்றடைய மிகுந்த ஆவலாக இருந்தாள். 102 00:06:45,239 --> 00:06:46,532 அவள் திகைத்தாள். 103 00:06:49,076 --> 00:06:51,286 - மிச்சத்தை நாளைக்குச் சொல்றேன். - இல்ல! 104 00:06:51,370 --> 00:06:52,621 அம்மா, முடிங்க. 105 00:06:52,704 --> 00:06:55,707 முடிக்கிறேன். ஆனால் நாளைக்கு. 106 00:06:55,791 --> 00:06:57,709 - யாருக்கு டிராகன் வேணும்? - எனக்கு! 107 00:06:57,793 --> 00:07:00,712 சரி. இந்த முறை ஜூனிக்கு, செல்லம். 108 00:07:00,796 --> 00:07:04,049 சாரி, ஆனால் உனக்கு இந்த இளவரசி. சரியா? 109 00:07:04,550 --> 00:07:06,218 - இந்தா, பிடிச்சுக்கோ. - நன்றி. 110 00:07:06,301 --> 00:07:07,386 ஐ லவ் யூ. 111 00:07:07,886 --> 00:07:10,264 - லவ் யூ டூ. - குட் நைட். 112 00:07:10,347 --> 00:07:12,891 டிராகனை வென்றவர். 113 00:07:12,975 --> 00:07:15,853 - குட் நைட். லவ் யூ. - குட் நைட். லவ் யூ. 114 00:07:19,106 --> 00:07:21,275 பிறகு, உள்ளூர் செய்திகளில், பாஸடீனா இல்லத்தரசி 115 00:07:21,358 --> 00:07:24,653 நான்ஸி ஹென்னஸியின் கொலை நடந்து ஏறக்குறைய இரண்டு மாதம் ஆகிறது. 116 00:07:24,736 --> 00:07:26,905 - சமீபத்தில் வெளிவந்த விஷயங்களை வைத்து… - பாரு, நான்ஸ், நீ டிவியில வந்திருக்க. 117 00:07:26,989 --> 00:07:29,199 …இறந்தவரின் நெருங்கிய தோழி, எலனார் புஷே, 118 00:07:29,283 --> 00:07:31,869 இப்போது கொலையில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. 119 00:07:31,952 --> 00:07:33,620 எங்களுக்குக் கிடைத்தத் தகவலின் படி, 120 00:07:33,704 --> 00:07:35,706 - போலீஸார் மீண்டும்… - முட்டாள்தனம். என்ன ஆதாரம் இருக்கு? 121 00:07:35,789 --> 00:07:38,083 …கொலையுண்டவரின் கணவர், ராபர்ட் ஹென்னஸியை விசாரிக்கின்றனர். 122 00:07:38,166 --> 00:07:41,378 திருமதி. புஷே, திரு. ஹென்னஸி இருவரிடமும் கருத்து கேட்க இன்று தொடர்பு கொள்ள முடியவில்லை. 123 00:07:41,461 --> 00:07:44,089 ஆனால் ஹென்னஸி குடும்பத்திடமிருந்து நாளை ஸ்ட்டேட்மென்ட் வெளிடப்படும் என்று… 124 00:07:44,173 --> 00:07:46,383 - மேரி, மேரி, என் காதல் ராணி. - …கூறப்படுகிறது. 125 00:07:46,466 --> 00:07:48,260 - நீ இன்னும் தூங்கவில்லையா? - ஹே! 126 00:07:48,343 --> 00:07:53,682 உன்னை நான் தேடுகிறேன் உன்னை எண்ணிப் பாடுகிறேன். 127 00:07:55,726 --> 00:07:57,644 உங்க ஃப்ளைட் நாளைக்குன்னு சொன்னீங்க. இப்ப என்ன… 128 00:07:57,728 --> 00:08:00,022 காலை நிகழ்ச்சியை ரத்து பண்ணிட்டாங்க, அதனால முன்னாலயே வந்துட்டேன். 129 00:08:00,105 --> 00:08:01,523 உன் கிட்ட நேர்ல சொல்லணும்னு விரும்பினேன். 130 00:08:02,774 --> 00:08:03,775 எனக்கு வேலை கிடைச்சுருச்சு. 131 00:08:04,776 --> 00:08:05,777 வாவ். 132 00:08:05,861 --> 00:08:07,362 சீக்கிரம் பதவி உயர்வு கிடைச்சிடும், பேபி. 133 00:08:07,863 --> 00:08:09,156 டீன் மதிய சாப்பாட்டப்ப சொன்னாரு. 134 00:08:09,239 --> 00:08:12,284 விண்ணப்பிச்ச மற்றவங்க சொதப்பிட்டாங்க, உன் கணவனை அவங்களுக்குப் பிடிச்சுப் போச்சு. 135 00:08:12,367 --> 00:08:13,535 அதானே, எப்படிப் பிடிக்காம போகும்? 136 00:08:13,619 --> 00:08:15,454 அவங்க என் வேலையெல்லாம் புரிஞ்சிக்கிட்டாங்க. 137 00:08:15,537 --> 00:08:17,998 வாழ்த்துகள். இது அருமை. 138 00:08:18,081 --> 00:08:19,333 "அருமையா"? 139 00:08:19,416 --> 00:08:22,544 போரிலிருந்து வெற்றிப் பெற்று தன் படையுடன் பீடு நடை போட்டு 140 00:08:22,628 --> 00:08:25,881 வருகிறான் சீஸர், ஆனால் நீ, "அருமை" என்கிறாயா? 141 00:08:25,964 --> 00:08:28,425 சாரி. எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு. 142 00:08:29,259 --> 00:08:31,929 வெற்றி வாகை சூடிய வீரனுக்கு வாழ்த்துகள்! 143 00:08:34,306 --> 00:08:35,349 சரி, நீங்க எப்ப சேரணும்? 144 00:08:35,432 --> 00:08:36,892 ஆகஸ்ட்ல. 145 00:08:36,975 --> 00:08:38,519 நாம முடிவு பண்றதுக்கு எவ்வளவு நேரம் இருக்கு? 146 00:08:39,602 --> 00:08:40,812 எதை முடிவு பண்றதுக்கு? 147 00:08:40,895 --> 00:08:43,482 நாம குடும்பமா ஒஹாயோவுக்கு போறது பத்தி. 148 00:08:44,358 --> 00:08:46,193 நான் இதுவரைக்கு ஒஹாயோ போனதில்ல. 149 00:08:46,276 --> 00:08:48,403 பக்ஐஸ், ஸ்பெகட்டியில சில்லி… உனக்குக் கண்டிப்பா பிடிக்கும். 150 00:08:48,487 --> 00:08:49,655 செல்லம், நான் சீரியஸா பேசுறேன். 151 00:08:49,738 --> 00:08:51,990 ஆர்டீக்கு ஒருவழியா இப்பதான் ஸ்கூல் செட்டாயிருக்கு. 152 00:08:52,074 --> 00:08:54,826 பிறகு ஜூனி… அவளுக்கு இந்த பியானோ வகுப்புகள் பிடிச்சிருக்கு. 153 00:08:54,910 --> 00:08:56,328 - மார்கஸ்… - மார்கஸ் அவன் வளர்ந்துட்டான். 154 00:08:56,411 --> 00:08:58,163 பொண்ணுங்க தேவைகளை வச்சு நாம முடிவு பண்ண முடியாது. 155 00:08:58,247 --> 00:09:00,082 நானும் இந்த குடும்பத்துல ஒருத்தன், தெரியுமா? 156 00:09:00,165 --> 00:09:01,750 நமக்கு இங்க நண்பர்கள் இருக்காங்க. இந்த… 157 00:09:01,834 --> 00:09:03,669 நீ என்ன விளையாடுறியா? 158 00:09:03,752 --> 00:09:06,004 நான் என்ன தப்பான வீட்ல நுழைஞ்சிட்டேன்னா? 159 00:09:06,088 --> 00:09:07,548 இந்த வேலை நம்ம கனவு. 160 00:09:07,631 --> 00:09:09,758 இதே வேற ஒரு சூழ்நிலையா இருந்திருந்தா, அது… 161 00:09:09,842 --> 00:09:13,178 என்னோட முந்தின வேலை ஒரு உருப்படாத பாலே நிகழ்ச்சிக்கு குறிப்பு எழுதுறது. 162 00:09:13,262 --> 00:09:15,305 நான் ஒரு ஸ்காலர். எனக்கு ஏத்த வேலை கிடையாது அது. 163 00:09:15,389 --> 00:09:16,974 அதான், கொஞ்சம் பணம் கிடைச்சா நமக்கு நல்லது தானே? 164 00:09:17,641 --> 00:09:19,351 ம், நான் வேலைக்குப் போறேன். 165 00:09:19,434 --> 00:09:21,687 - நான் வேலைக்குப் போலாம்னு தான் நாம பேசினோம். - அப்படியா? 166 00:09:21,770 --> 00:09:25,482 ஆமா, மார்கஸ் வயித்துல இருக்கும் போது. உங்களுக்கு ஞாபகம் இல்லையா? 167 00:09:25,566 --> 00:09:29,862 அவன்… அவன் குட்டியா இருக்கும் போது நீ உன்னோட கரியரை தொடரணும்னு பேசினோம். 168 00:09:29,945 --> 00:09:32,447 ஆனால் அதுக்குப் பிறகு நான் போகணும்னு பேசினோம். 169 00:09:32,531 --> 00:09:34,741 அது பல வருஷத்துக்கு முன்னால. இப்ப நிறைய மாறிடுச்சு, மேர். 170 00:09:34,825 --> 00:09:37,578 அப்போ… கடவுளே, நான் அந்த சைக்கோ ஜெனி கூட இருந்தேன். 171 00:09:38,245 --> 00:09:39,872 நான் ஒரு தீர்வைப் பார்க்கிறதுக்கு முயற்சிப் பண்றேன், அதனால… 172 00:09:39,955 --> 00:09:42,124 நீ உருவாக்குற ஒரு பிரச்சினைக்குத் தீர்வு. சே! 173 00:09:43,375 --> 00:09:47,045 வேலைல என்னோட சிறந்த நாளன்னைக்கு உனக்குப் பொறுக்கல. 174 00:09:47,129 --> 00:09:48,964 நீ என்னை நல்லா உற்சாகப்படுத்துவ. 175 00:09:49,047 --> 00:09:51,300 அருமை, மேரி. சூப்பர். 176 00:09:51,383 --> 00:09:53,510 சாரி. சாரி. 177 00:09:53,594 --> 00:09:55,846 நீங்க சொன்னது சரி. அது… நான் சந்தோஷமா இருக்கேன். 178 00:09:55,929 --> 00:09:57,014 - உண்மையாவா? - ஆமா. 179 00:09:57,097 --> 00:10:00,100 இது எல்லாம, என்னவோ, நான் எதிர்பார்த்ததை விட வேகமா நடக்குது. 180 00:10:00,184 --> 00:10:02,102 இது நமக்கு நல்லதா இருக்கப் போகுது. 181 00:10:02,186 --> 00:10:03,896 நாம அங்க சந்தோஷமா இருப்போம். என்னை நம்பு. 182 00:10:03,979 --> 00:10:05,397 சரி. 183 00:10:09,234 --> 00:10:10,652 என்னோட மெசேஜைப் பார்த்தீங்களா? 184 00:10:10,736 --> 00:10:13,322 - என்ன மெசேஜ்? - எலனாரைப் பத்தி. 185 00:10:14,489 --> 00:10:16,742 ஆமா. நான் ஏற்கனவே பதில் போட்டுட்டேன்னு நினைச்சேன். 186 00:10:18,577 --> 00:10:20,913 நாங்க ரெண்டு பேரும் மாறி, மாறி ரொம்ப மோசமா பேசிகிட்டோம். 187 00:10:20,996 --> 00:10:23,540 நாங்க… நாங்க இதுவரைக்கும் இப்படிச் சண்டை போட்டுக்கிட்டதே இல்ல. 188 00:10:23,624 --> 00:10:25,792 ம், கொஞ்சம் நேரம் பிரிஞ்சு இருக்கிறது நல்லது தான். 189 00:10:25,876 --> 00:10:28,337 ஒருத்தரை ஒருத்தர் சார்ந்து இருப்பது ஆரோக்கியமானது இல்ல. 190 00:10:31,131 --> 00:10:32,716 இதுக்கு மேல என்னால உட்கார முடியாது. 191 00:10:32,799 --> 00:10:34,635 - மேல வரேல்ல? - ஆமா, சீக்கிரம் வந்திடுறேன். 192 00:11:09,503 --> 00:11:12,005 ஒண்ணு மட்டும். ஏன்னா நீ கட்டுப்பாட்டுல இருக்க. 193 00:11:19,471 --> 00:11:21,473 ஆரமின்ட்ஸ் 194 00:11:39,449 --> 00:11:42,119 மேரிக்கு எப்போதும் "ஹவுஸ்ஃவைப்" என்கிற வார்த்தை பிடிக்காது. 195 00:11:43,287 --> 00:11:44,788 அதை விட மோசம் "ஹோம்மேக்கர்". 196 00:11:46,373 --> 00:11:50,586 ஒவ்வொரு நாளையும் தான் கழிக்கும் விதத்தை அவை தாராளமாகவும், துல்லியமாகவும் விவரிக்கவில்லை. 197 00:11:51,753 --> 00:11:54,256 ஆனால் அவள் என்ன தான் செய்கிறாள் என்று யாராவது கேட்டால், 198 00:11:55,007 --> 00:11:57,009 அவள் அதைச் சொல்லத் தடுமாறியிருப்பாள். 199 00:11:57,593 --> 00:12:00,971 நடந்தவைகளையும், விவரங்களையும் நினைவுக்கூர்வதில் அவள் ஒன்றும் கைதேர்ந்தவளில்லை. 200 00:12:02,055 --> 00:12:06,602 அவள் நெருங்கிய தோழி கொலையாகும் வரை, அவளைக் கேள்விக் கேட்குமளவு யாரும் அக்கறைக் கொண்டதில்லை. 201 00:12:06,685 --> 00:12:08,187 பார்த்து, சூடாயிருக்கு. 202 00:12:08,270 --> 00:12:09,271 நன்றி. 203 00:12:10,397 --> 00:12:13,192 மேர். டிடெக்டிவ் கேன்ஸ் நம்ம கிட்ட ஏதோ கேள்வி கேட்கணும்னு சொன்னாங்க. 204 00:12:13,775 --> 00:12:14,776 சரி. 205 00:12:14,860 --> 00:12:16,195 கொஞ்சம் தான். 206 00:12:17,946 --> 00:12:18,947 ஹே. 207 00:12:21,200 --> 00:12:25,120 திரு. ஹென்னஸிக்கும் மிஸ் புஷேக்கும், ம், இடையே உள்ள தொடர்பு, 208 00:12:25,204 --> 00:12:26,788 உங்களுக்கு எப்ப முதல்ல தெரியும்? 209 00:12:26,872 --> 00:12:28,373 - நேத்து காலைல. - மேரி எங்கிட்ட நேத்து சொன்னா. 210 00:12:28,457 --> 00:12:30,834 உங்களுக்குத் தெரிஞ்சு, இந்த உறவு எப்போ தொடங்கிச்சு? 211 00:12:30,918 --> 00:12:32,127 நான்ஸி இறந்தப் பிறகு. 212 00:12:32,211 --> 00:12:34,505 - உறுதியா சொல்றீங்களா? - ஆமா. 213 00:12:34,588 --> 00:12:38,967 எலனார் பண்ணது மோசம் தான், ஆனால் இது ஒரு பழைய கிரஷ். 214 00:12:39,051 --> 00:12:41,845 அது… அந்த துக்கமான தருணத்தில அவள அறியாம நடந்துடுச்சு. 215 00:12:43,180 --> 00:12:44,681 அவங்க ஒண்ணும் சேர்ந்து ஓடிப் போகப் போறதில்ல. 216 00:12:45,849 --> 00:12:47,518 அது ஒண்ணுமில்ல. 217 00:12:47,601 --> 00:12:51,271 அவங்க ரெண்டு பேர்ல யாராவது கோபப்பட்டு கை நீட்டுறதை நீங்க பார்த்திருக்கீங்களா? 218 00:12:51,355 --> 00:12:54,274 எலனார்? அப்படியில்ல. 219 00:12:55,192 --> 00:12:56,568 ஆமா, ஆனால் ராபர்ட்… 220 00:12:58,237 --> 00:13:00,072 கொஞ்சம் போதை ஏறுச்சுன்னா, சீக்கிரம் எரிச்சல் அடைஞ்சிடுவான். 221 00:13:00,155 --> 00:13:01,490 எரிச்சல்ன்னா? 222 00:13:01,573 --> 00:13:05,702 ராபர்ட்… எப்படி சொல்றது? எப்போதும் அவனுக்கு வேண்டியது அவனுக்குக் கிடைச்சிடும். 223 00:13:05,786 --> 00:13:08,664 அதான், நீங்க அவனை பார்த்திருக்கீங்க. அழகானவன், பணக்காரன், வசதியாக வாழ்ந்தவன். 224 00:13:08,747 --> 00:13:11,583 நல்ல ஆடம்பர படிப்பு, ஆனால், அப்படித் தெரியாது. 225 00:13:12,417 --> 00:13:17,840 அவன் நினைச்சது ஏதாவது நடக்கலைன்னா… என்ன பண்ணுவாங்கிறதை நான் பார்த்திருக்கேன். 226 00:13:18,507 --> 00:13:21,301 - அவன் நான்ஸிக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கான். - என்ன கடிதம்? 227 00:13:21,385 --> 00:13:23,053 ராபர்ட்டுக்கு அந்தத் தொடர்பைப் பத்தி தெரிஞ்சிருக்கு. 228 00:13:23,637 --> 00:13:27,140 ஆனால் அவனுக்குத் தெரியாதது மாதிரி நடிச்சிருக்கான். 229 00:13:27,224 --> 00:13:31,979 அவங்களுக்குள்ள சண்டை வந்திருக்கு, நான்ஸி அவனைப் பார்த்து பயந்திருக்கா. 230 00:13:32,646 --> 00:13:34,523 அதனால அவன் அவளுக்கு ஒரு மன்னிப்புக் கடிதம் எழுதியிருக்கான். 231 00:13:34,606 --> 00:13:36,441 எலனார் இதை என்கிட்ட நேத்து சொன்னா. 232 00:13:37,734 --> 00:13:38,735 நான் அதைப் பார்க்கிறேன். 233 00:13:39,403 --> 00:13:43,073 நான்ஸியோட சித்தப்பா? ஸ்காட்? 234 00:13:43,657 --> 00:13:45,075 நீங்க திரு. ரீடை சொல்றீங்களா? 235 00:13:45,158 --> 00:13:49,246 ஆமா. அவ குழந்தையா இருந்தப்போ அவர் அவகிட்ட தவறா நடந்துகிட்டது உங்களுக்குத் தெரியுமா? 236 00:13:49,329 --> 00:13:50,581 நீ அதை செக் பண்ணீங்களா? 237 00:13:50,664 --> 00:13:52,291 நாங்க திரு. ரீட் கிட்ட பேசினோம், 238 00:13:52,374 --> 00:13:55,085 திருமதி. ஹென்னஸியோட கடந்த 20 வருஷமா 239 00:13:55,169 --> 00:13:56,962 எந்த தொடர்பும் இல்லேன்னு சொன்னார். 240 00:13:57,045 --> 00:13:58,589 உங்களுக்கு ஏதாவது தெரியுமா? 241 00:13:58,672 --> 00:14:00,924 எனக்குத் தெரிஞ்சதெல்லாம், அவ அவரை நினைச்சு பயந்து இருந்தா. 242 00:14:01,758 --> 00:14:04,553 அவ வச்சிருக்கிற ஸ்க்ராப் புக்ல அவரை வரைஞ்சு வச்சிருக்கா. 243 00:14:04,636 --> 00:14:05,804 அவ… அவ… 244 00:14:06,305 --> 00:14:07,806 அவ நிச்சயமா அவரை நினைச்சு பயந்து போய் இருந்தா. 245 00:14:09,183 --> 00:14:10,517 சரி. 246 00:14:11,518 --> 00:14:12,686 "சரியா"? 247 00:14:13,812 --> 00:14:16,565 இந்த விஷயங்களை வச்சி நீ உங்க விசாரணையை தொடங்கலாம், டிடெக்டிவ், சரியா? 248 00:14:16,648 --> 00:14:18,567 இவங்கள்ல ஒருத்தன் என் தோழியைக் கொலை பண்ணியிருக்கான். 249 00:14:19,401 --> 00:14:21,069 அது ஒரு ஆண் தான்னு எப்படி உறுதியா சொல்றீங்க? 250 00:14:22,070 --> 00:14:23,405 நீங்க என்ன… 251 00:14:23,488 --> 00:14:26,366 டிடெக்டிவ் கேன்ஸ், என்னோட மனைவி உங்களுக்காக இவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தாங்க. 252 00:14:26,450 --> 00:14:30,204 அதுக்கு நன்றி. எனக்கு… எனக்கு இன்னொரு கேள்வி மட்டும் இருக்கு. 253 00:14:31,205 --> 00:14:33,916 அன்னைக்கு ராத்திரி எத்தனை மணிக்கு டின்னர் முடிஞ்சு கிளம்பினீங்க? 254 00:14:33,999 --> 00:14:35,417 சொன்னேனே, ஒன்பது மணியை ஒட்டி. 255 00:14:35,501 --> 00:14:38,253 உங்க தோழிகள் போனப் பிறகு, உங்களுக்கு ரெண்டு மூணு டிரிங்ஸ் கொடுத்ததா 256 00:14:38,921 --> 00:14:41,882 ஒரு பார்டென்டர் சொல்றான்னா, அது பொய்யா? 257 00:14:42,966 --> 00:14:44,718 அவங்க போனப் பிறகு நான் கொஞ்சம் நேரம் குடிச்சிருக்கலாம். 258 00:14:44,801 --> 00:14:48,555 உங்களை ஊபர் டாக்ஸியில தூக்கி வைக்க வேண்டியிருந்ததுன்னு அவன் சொன்னான். 259 00:14:48,639 --> 00:14:51,433 அதனால உங்களுக்கு அன்னைக்கு நடந்ததுல சில விஷயங்கள் ஞாபகம் இல்லாதிருக்க வாய்ப்பிருக்கா? 260 00:14:52,684 --> 00:14:55,187 என் மனைவி பத்தரை மணிக்கு வந்து, நேரா தூங்கப் போயிட்டா. 261 00:14:55,270 --> 00:14:56,772 ராத்திரி முழுக்க நான் கூட தான் இருந்தேன். 262 00:14:58,065 --> 00:15:00,984 - ஊ! ஐயோ. என்னால முடியும். - சரி. சரி. 263 00:15:05,364 --> 00:15:07,407 இப்ப என்ன, நான் ஒரு வக்கீலை கூப்பிடணுமா? 264 00:15:08,075 --> 00:15:10,244 வேண்டாம். நாங்க கிளம்புறோம். 265 00:15:28,554 --> 00:15:30,556 இது தான் அந்த, ம்… ஸ்க்ராப் புக்கா? 266 00:15:31,139 --> 00:15:33,016 நீ அந்த டிடெக்டிவ் கிட்ட சொன்னது? 267 00:15:33,100 --> 00:15:37,020 ஆமா. ஒத்திகை அப்ப, இல்ல, எப்பயாவது நான்ஸி இதில வரையிறதை நீங்க கண்டிப்பா பார்த்திருப்பீங்க. 268 00:15:37,771 --> 00:15:40,482 இருக்கலாம். போலீஸ் அதைப் பார்த்தாங்களா? 269 00:15:40,566 --> 00:15:42,150 ஆமா, ஆனால் அதுல எதுவும் பயனுள்ளதா இருக்கிறதா அவங்க நினைக்கல. 270 00:15:43,360 --> 00:15:45,112 - ம், பயனுள்ளதா இருக்கா என்ன? - அப்படிதான் நினைக்கிறேன். 271 00:15:45,195 --> 00:15:48,907 ஆனால் நான் இதை பத்திப் பேசினப்போ டிடெக்டிவ் கேன்ஸ் மதிக்காததை நீங்க பார்த்தீங்கள்ல. 272 00:15:49,491 --> 00:15:53,453 எலனார் மேல இருந்து சந்தேகத்தை வேற பக்கம் திருப்புறதுக்கு என்னால ஏதாவது உருப்படியா… 273 00:15:53,537 --> 00:15:55,247 கண்டுப்பிடிக்க முடிஞ்சா நல்லா இருக்கும். 274 00:15:55,330 --> 00:15:57,374 நான்ஸிக்கு என்ன நடந்ததுன்னு எனக்குத் தெரியணும். 275 00:16:01,253 --> 00:16:05,382 ம், ஒஹாயோவில ஒரு ரியல் எஸ்டேட் ஏஜென்ட் கிட்ட இருந்து கால் வரும். 276 00:16:05,465 --> 00:16:06,884 பேசலாமா, இல்ல கேன்ஸல் பண்ணட்டுமா? 277 00:16:09,469 --> 00:16:10,679 வேண்டாம், வேண்டாம். 278 00:16:15,058 --> 00:16:16,143 இப்ப அதைத் தூக்கி ஓரமா வை. 279 00:16:16,727 --> 00:16:19,188 அந்த டிடெக்டிவ் இந்த கேஸை தீவிரமா பார்த்திட்டிருக்கிற மாதிரி தோணுது. 280 00:16:20,105 --> 00:16:21,607 அவங்க வேலையை அவங்கள பண்ணவிடு. என்ன? 281 00:16:46,298 --> 00:16:49,092 நான்ஸி, நீ என் கிட்ட என்ன சொல்ல வர? 282 00:16:49,760 --> 00:16:52,679 மேரிக்கு ஒரு போதும் கடவுள் மேல நம்பிக்கை கிடையாது. 283 00:16:53,472 --> 00:16:56,767 ஆனால் அந்த அரிதான விலகல்களின் சில தருணங்களின் போது, 284 00:16:56,850 --> 00:17:01,230 தன்னை வழிநடத்தும் ஒரு சக்தியை அவளால் உணர முடிவதை அவள் கண்டாள். 285 00:17:02,064 --> 00:17:06,984 அன்று அந்த இதமான ஜூன் மாத மதிய வேளையில் அந்த சக்தி மீண்டும் வேலை செய்வதை மேரி உணர்ந்தாள். 286 00:17:07,653 --> 00:17:09,029 அல்லது அது நான்ஸியாக இருக்கலாம். 287 00:17:09,530 --> 00:17:10,989 அல்லது ஆடராலாக இருக்கலாம். 288 00:17:11,073 --> 00:17:12,406 ஆனால் அது வேலை செய்தது. 289 00:17:18,288 --> 00:17:20,790 கேட்டுலஸ் VI 290 00:17:25,878 --> 00:17:27,548 நீ எனக்கு ஆயிரமாயிரம் முத்தங்கள் கொடுப்பாய். 291 00:17:30,133 --> 00:17:31,385 பின்னர் நாமிருவரும் அந்த எண்ணிக்கையை மறப்போம், 292 00:17:31,468 --> 00:17:32,761 ஆக தனிமையான ஒரு மனிதனும் பொறாமை கொள்ளமாட்டான், 293 00:17:32,845 --> 00:17:34,263 நமது அதீத அன்பை குறித்து அவன் அறிகையில். 294 00:18:02,291 --> 00:18:03,458 கேட்டுலஸ் கவிதை தொகுப்பு ஒரு புதிய மொழிப்பெயர்ப்பு 295 00:18:03,542 --> 00:18:05,544 டாக்டர் ஹாவர்ட் சிம்ப்ஸன், PHD 296 00:18:15,929 --> 00:18:18,807 "எனக்கு ஆயிரம் முத்தங்கள் கொடு, பின்னர் ஒரு நூறு, 297 00:18:18,891 --> 00:18:21,810 பின்னர் இரண்டாவதாக ஒரு ஆயிரம், பின்னர் இரண்டாவதாக ஒரு நூறு. 298 00:18:21,894 --> 00:18:24,521 பின்னர் இன்னொரு ஆயிரம், பின்னர் இன்னொரு நூறு." 299 00:18:24,605 --> 00:18:28,734 "நீ எனக்கு ஆயிரமாயிரம் முத்தங்கள் கொடுப்பாய். 300 00:18:29,484 --> 00:18:31,153 பின்னர் நாமிருவரும் அந்த எண்ணிக்கையை மறப்போம், 301 00:18:31,904 --> 00:18:37,242 ஆக தனிமையான ஒரு மனிதனும் பொறாமை கொள்ளமாட்டான், நமது அதீத அன்பை குறித்து அவன் அறிகையில்." 302 00:18:38,076 --> 00:18:42,581 பழமையான மொழிகள்ல உங்க புலமை உண்மையிலேயே… ஆவலைத் தூண்டுது. 303 00:18:43,332 --> 00:18:49,963 ஒரு சின்ன விஷயம். இலத்தீன்ல "கான்டர்போ" வார்த்தைக்கு "மறப்பது" என்பதை விட "குழப்பம்" என்று சொல்லலாம். 304 00:19:00,182 --> 00:19:02,851 - எனக்கும் ஜெனிக்கும் எல்லாம் முடிஞ்சது. - அது அவளுக்குத் தெரியுமா? 305 00:19:02,935 --> 00:19:04,102 அவ மனநிலை சரியில்லாதவ. 306 00:19:05,771 --> 00:19:08,941 அவளுக்கு… சொல்ல கஷ்டமா இருக்கு, அவளுக்கு ஒரு கணவன் தேவை இல்ல. 307 00:19:09,024 --> 00:19:10,275 அவளுக்கு ஒரு டாக்டர் வேணும். 308 00:19:11,527 --> 00:19:13,946 அவ கொஞ்சம் பரவாயில்லாம இருக்கும்போது, அவ கிட்ட சொல்லிருவேன். 309 00:19:26,250 --> 00:19:27,876 - ஹாய், ஜெனி. - மேரி, அவர் உள்ள இருக்காரா? 310 00:19:38,095 --> 00:19:40,430 நீ எனக்கு ஆயிரமாயிரம் முத்தங்கள் கொடுப்பாய் 311 00:19:55,362 --> 00:19:58,115 நல்லது. அந்த வீட்டு விவரங்களை அனுப்பு, நான் என் மனைவியோடு பேசுறேன். 312 00:19:58,615 --> 00:20:00,200 நன்றி, ரீட்டா. நல்ல நேரத்துல உதவின. 313 00:20:01,952 --> 00:20:03,871 யாரோ ஒருத்தருக்கு அவங்களுக்குன்னு ஒரு ஆஃபீஸ் கிடைக்கப் போகுது. 314 00:20:03,954 --> 00:20:05,581 நான் இதை நான்ஸியோட ஸ்க்ராப் புக்கில பார்த்தேன். 315 00:20:08,584 --> 00:20:09,835 என்னது அது? 316 00:20:10,502 --> 00:20:13,046 உங்க கேட்டுலஸ் புத்தகத்திலிருந்து ஒரு பக்கம். 317 00:20:13,714 --> 00:20:14,923 சரி, அதுக்கென்ன இப்போ? 318 00:20:15,591 --> 00:20:17,843 இங்க அதே வரில கீழ கோடு போட்டிருக்கு. 319 00:20:19,636 --> 00:20:20,637 அது ஒரு நல்ல வரி. 320 00:20:21,388 --> 00:20:25,893 ஹாவர்ட், ஒரு பழங்காலத்து கவிஞரோட உங்க தெளிவில்லாத மொழிப்பெயர்ப்பு 321 00:20:25,976 --> 00:20:27,603 நான்ஸி கையில எப்படி கிடைச்சது? 322 00:20:27,686 --> 00:20:29,062 தெரியல. அது அமேஸான்ல இருக்கு. 323 00:20:29,146 --> 00:20:32,524 பிரிண்ட் பண்ண புத்தகம் விக்கவே இல்ல. யாரும்… யாரும் அந்த புத்தகத்தை வாசிக்கவே இல்ல. 324 00:20:32,608 --> 00:20:34,735 தெரியல. ஒருவேளை நான் அவகிட்ட கொடுத்திருக்கலாம். எனக்கு ஞாபகமில்ல. 325 00:20:41,491 --> 00:20:43,827 நீங்க நான்ஸிக்கு கவிதை புத்தகம் கொடுத்தீங்களா? 326 00:20:45,495 --> 00:20:46,747 ஆமா. 327 00:20:47,331 --> 00:20:52,085 ஆமா, ம், ஒரு முறை ஒத்திகையின் போது பேச்சு என்னோட வேலை பத்தி திரும்புச்சு, 328 00:20:52,169 --> 00:20:53,629 அப்புறம், அவளுக்கு ஒரு காப்பி தரேன்னு சொன்னேன். 329 00:20:53,712 --> 00:20:54,755 அவ வாசிச்சதே எனக்கு ஆச்சரியமா இருக்கு. 330 00:20:54,838 --> 00:20:55,839 மேரி, உனக்கு ஒண்ணுமில்லையே? 331 00:20:55,923 --> 00:20:57,591 என்ன நடக்குதுன்னு சொல்லுங்க, ஹாவர்ட். 332 00:20:57,674 --> 00:20:59,259 நான் தான் அந்தக் கேள்வியை உன கிட்ட கேட்கணும். 333 00:20:59,343 --> 00:21:01,345 நீங்க ஏன் இதை அவ கிட்ட கொடுத்தீங்க? 334 00:21:05,432 --> 00:21:08,310 மேரி, கண் பாவை அப்படி விரிஞ்சிருக்கு. 335 00:21:09,061 --> 00:21:11,730 நாம இதைப் பத்தி ஏற்கனவே பேசியிருக்கோம். நீ அதை நிறுத்திட்டேன்னு நினைச்சேன். 336 00:21:11,813 --> 00:21:13,315 நீ திரும்ப மாத்திரை போட ஆரம்பிச்சிட்டியா? 337 00:21:13,398 --> 00:21:14,733 நீங்க பேச்சை மாத்துறீங்க. நீங்க… 338 00:21:14,816 --> 00:21:16,860 மேரி, திரும்ப நீ கட்டுப்பாட்டை இழக்கக் கூடாது. 339 00:21:16,944 --> 00:21:19,238 கடந்த முறை நீ பாதிக்கப்பட்ட போது என்ன நடந்துச்சுன்னு ஞாபகம் இருக்கா? 340 00:21:19,321 --> 00:21:20,572 எவ்வளவு பயந்து போனோம்? 341 00:21:20,656 --> 00:21:23,534 - இல்ல, இது… இல்ல, இது வேற. - உன்னால நம்ம குழந்தைகளுக்கு ஆபத்தாச்சு. 342 00:21:23,617 --> 00:21:26,745 நல்ல வேளை ஜூனிக்கு ஒண்ணும் ஆகல. ஒவ்வொரு முறையும் நமக்கு அதிர்ஷ்டம் இருக்காது. 343 00:21:42,010 --> 00:21:44,930 மேரி திரும்பத் திரும்ப அவற்றை மனதில் ஓடவிட்டுப் பார்த்தாள். 344 00:21:45,013 --> 00:21:48,934 எல்லா கோணங்களில் இருந்தும் பார்க்க முயற்சி செய்தாள், ஆனால் எதுவுமே அர்த்தம் தருவதாக இல்லை. 345 00:21:49,017 --> 00:21:52,479 நான்ஸியும், ஹாவர்டும். ஹாவர்டும், நான்ஸியும். 346 00:21:54,106 --> 00:21:57,067 மேரிக்கு ஹாவர்ட் முற்றிலுமாக அறியாத ஒருவனாகத் தோன்றியது. 347 00:21:57,150 --> 00:22:00,737 ஆனால் அதே சமயம் அவனைப் போலவே, ஒரு போலி ஹாவர்ட் போலவும் தோன்றியது. 348 00:22:03,365 --> 00:22:05,325 அவன் எப்போதுமே அந்த வாசனை தான் கொண்டிருந்தானா? 349 00:22:35,189 --> 00:22:37,524 நான்ஸியும் போலியாகத் தான் இருந்திருக்கிறாளா? 350 00:22:38,901 --> 00:22:41,069 உண்மையான நான்ஸி ஹென்னஸி யார்? 351 00:22:50,913 --> 00:22:52,623 அந்த பாழாய் போன பாலே. 352 00:22:54,374 --> 00:22:55,375 அந்த இரவு. 353 00:22:59,463 --> 00:23:01,381 அன்றிரவு அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். 354 00:23:16,438 --> 00:23:18,524 அப்போது மேரி ஹாவர்டிடம் பேசியிருக்க வேண்டும்… 355 00:23:21,360 --> 00:23:23,946 …ஆனால் அவன் ஏதோ ஒரு மனநிலையில் இருந்தான். 356 00:23:28,575 --> 00:23:30,702 கவலையாகத் தோன்றியது நான்ஸி தான். 357 00:23:33,038 --> 00:23:34,623 நீங்கள் நான்ஸி ஹென்னஸியின் தொலைபேசியை அழைத்துள்ளீர்கள். 358 00:23:34,706 --> 00:23:36,917 என்னால் உங்கள் அழைப்பை இத்தருணத்தில் எடுக்க முடியவில்லை. 359 00:23:37,000 --> 00:23:40,003 ஆர்வத்துக்கு கரிசனத்தை ஒரு காரணமாகப் பயன்படுத்தலாம். 360 00:23:52,474 --> 00:23:55,727 24 மணி நேரம் திறந்திருக்கும் 361 00:24:11,618 --> 00:24:12,995 அந்த கண்ணீர் நிஜமானது. 362 00:24:14,162 --> 00:24:15,247 மேரி? 363 00:24:16,707 --> 00:24:18,667 - மற்ற எல்லாமே ஒரு பொய். - ஹே. 364 00:24:18,750 --> 00:24:21,628 - மேரியைப் பொறுத்தவரை. - ஹே. சரி. சரி. 365 00:24:22,754 --> 00:24:23,797 சரி. 366 00:24:23,881 --> 00:24:26,133 ராபர்ட் குடிச்சா, ஆளே மாறிடுறான். 367 00:24:26,216 --> 00:24:29,344 இன்னைக்கு அவனை எது தூண்டுச்சுன்னு தெரியல, ஆனால் அங்கிருந்து வௌியேறுறது நல்லதுன்னு தோணுச்சு. 368 00:24:29,428 --> 00:24:30,971 மனசில எந்த திட்டமும் இல்ல, சும்மா ஓட்டிட்டு வந்துட்டேன். 369 00:24:33,182 --> 00:24:36,894 நீ ஏன் ஹாவர்ட் கிட்ட போன, என் கிட்ட இல்ல எலனார் கிட்ட வராம? 370 00:24:38,604 --> 00:24:40,314 நீ ராபர்ட்டை வெறுக்கிறதை நான் விரும்பல. 371 00:24:42,107 --> 00:24:43,358 அதான், ஹாவர்ட் ஏற்கனவே வெறுக்கிறான். 372 00:24:43,442 --> 00:24:47,154 அதோட அவனுக்கு ஏற்கனவே அனுபவம் இருக்கு… அதான். 373 00:24:50,824 --> 00:24:54,036 அட, நான் ஒண்ணும் ஹெராயினுக்கு அடிமையாகலையே. 374 00:24:54,119 --> 00:24:56,079 எனக்கு கொஞ்சம் நேரம் சக்தி தேவைப்பட்டுச்சு. 375 00:24:56,163 --> 00:24:59,541 - நாம எல்லாரும் காலேஜ்ல பண்ணாததா. - மேர், எனக்குத் தெரியும். நான்… 376 00:24:59,625 --> 00:25:02,211 எப்படியும் ஹாவர்ட் ஒண்ணும் பெரிசா உதவல. 377 00:25:02,294 --> 00:25:05,631 அதான்… சூழ்நிலை அப்படி. 378 00:25:05,714 --> 00:25:07,633 சரி நீ வீட்டுக்குப் போகப் போறியா? 379 00:25:07,716 --> 00:25:09,384 போகத் தான் வேணும்னு நினைக்கிறேன். 380 00:25:10,469 --> 00:25:12,179 ராத்திரிக்கு நீ எங்க வீட்டுக்கு வந்து தங்கலாமே? 381 00:25:12,262 --> 00:25:13,305 - வேண்டாம். - வா. 382 00:25:13,388 --> 00:25:15,307 இல்ல, இல்ல. ம், வேண்டாம். நான்… 383 00:25:15,390 --> 00:25:17,643 நான்… ஓஹாய் போகலாம்னு நினைக்கிறேன். 384 00:25:17,726 --> 00:25:18,977 சரி. 385 00:25:22,689 --> 00:25:25,609 மேர், இன்னைக்கு நல்லா தான் ஆரம்பிச்சது. ஆனால் கடைசியில… 386 00:25:25,692 --> 00:25:28,237 நீயும் உன் நெருங்கின தோழியும், 387 00:25:28,320 --> 00:25:31,990 தனியா உட்கார்ந்து நாரம் கேக் மெனுவில உள்ளதை எல்லாம் சாப்பிட்டதோட முடிஞ்சது. 388 00:25:32,074 --> 00:25:34,618 இன்னைக்கு ராத்திரி பத்தி அது தான் உனக்கு ஞாபகத்தில இருக்கணும், சரியா? 389 00:25:35,327 --> 00:25:37,996 நல்லது. ம், நாம செய்ய வேண்டிய வேலை இன்னும் இருக்கு, அதனால… 390 00:25:38,080 --> 00:25:41,124 சார், கேக் மெனுவை கொஞ்சம் தரீங்களா? 391 00:25:41,208 --> 00:25:44,753 மென்மையான, இரக்கம் வழியும் இதயத்தின் மாதாவான, இனிய மேரியும், 392 00:25:44,837 --> 00:25:47,005 அந்தக் கதையை நம்பினாள். 393 00:25:49,049 --> 00:25:51,093 ஹே, செல்லம். நீ முழிச்சு என்ன பண்ணிட்டிருக்க? 394 00:25:51,176 --> 00:25:52,469 என்னால தூங்க முடியல. 395 00:25:52,553 --> 00:25:55,514 ம்-ம். நீ தான் இடி விழுந்தாலும் எந்திரிக்க மாட்டியே. 396 00:25:57,224 --> 00:25:58,225 ம், ஒண்ணுமில்ல. 397 00:25:58,308 --> 00:25:59,935 அது சரி. என்ன மாதிரியான ஒண்ணுமில்ல? 398 00:26:02,896 --> 00:26:04,356 முதல்ல, நீங்க கோபப்பட மாட்டீங்கன்னு சத்தியம் பண்ணுங்க. 399 00:26:05,899 --> 00:26:07,025 சத்தியம். 400 00:26:10,487 --> 00:26:13,615 அது எலனார் ஆன்ட்டி. அந்த டிடெக்டிவ் இன்னைக்குச் சொன்னதைக் கேட்டேன். 401 00:26:14,908 --> 00:26:15,909 நீ கேட்டிட்டிருந்தியா? 402 00:26:15,993 --> 00:26:19,329 நான்ஸி ஆன்ட்டியை அவங்க தான் கொன்னதா போலீஸ் நினைக்கிறாங்கன்னு தெரியும், ஆனால்… 403 00:26:21,957 --> 00:26:23,083 அவங்க பண்ணலைன்னு எனக்குத் தெரியும். 404 00:26:27,588 --> 00:26:29,047 உனக்கு எப்படித் தெரியும், மார்கஸ்? 405 00:26:29,673 --> 00:26:31,383 ஏன்னா ஆன்ட்டி இறந்த அன்னைக்கு ராத்திரி… 406 00:26:33,468 --> 00:26:34,845 அவங்க என் கூட இருந்தாங்க. 407 00:26:34,928 --> 00:26:36,138 யாரு? 408 00:26:36,221 --> 00:26:39,391 எலனார் ஆன்ட்டி. அவங்க என்னைக் கூட்டிப் போக வான் நயிஸ் வந்தாங்க. 409 00:26:40,100 --> 00:26:41,518 நீ அங்க வான் நயிஸ்ல என்ன பண்ணிட்டிருந்த? 410 00:26:42,978 --> 00:26:45,397 ஆமா, போனது முட்டாள்தனம்னு தெரியும், நான் ஒருத்தனுக்குப் பணம் கொடுக்கணும், அவன்… 411 00:26:45,480 --> 00:26:46,773 அவன் ஏதாவது பண்ணிக்கலாம்னு சொன்னான். 412 00:26:46,857 --> 00:26:48,483 சே, மார்கஸ். நீ திரும்பவும் சூதாடினியா? 413 00:26:48,567 --> 00:26:50,652 உங்க கிட்ட காசு கேட்க வேண்டாம்னு தான் நான் அதை பண்ணேன். 414 00:26:50,736 --> 00:26:51,737 என்ன? 415 00:26:51,820 --> 00:26:53,488 நீங்களும், அப்பாவும் ஏற்கனவே பணத்தைப் பத்தி கவலைப் பட்டுட்டிருக்கீங்க. 416 00:26:53,572 --> 00:26:56,575 - நீ ப்ரொபேஷன்ல இருக்க. உனக்குத் தெரியுதா… - அம்மா. சரிம்மா. சத்தியம் பண்ணியிருக்கீங்க. 417 00:27:00,454 --> 00:27:02,372 பணம் கொடுக்காம என்னை விட மாட்டேன்னு சொல்லிட்டாங்க. 418 00:27:02,456 --> 00:27:06,960 கடவுளே. அதனால எலனாரைக் கூப்பிட்டியா? 419 00:27:07,044 --> 00:27:08,962 அந்த அளவு பணம் அவங்கிட்ட மட்டும் தான் இருக்குன்னு தெரியும். 420 00:27:09,046 --> 00:27:10,547 அவ உன் புக்கிக்கு பணம் கொடுத்தாளா? 421 00:27:10,631 --> 00:27:15,177 நான்ஸி ஆனட்டியை அவங்க தான் கொன்னதா, போலீஸ் நினைக்கிறாங்க, நான் தான் அவங்க ஒரே சாட்சி. 422 00:27:15,969 --> 00:27:17,137 அவ உன்னைப் பாதுகாக்கிறா. 423 00:27:17,221 --> 00:27:19,932 அவங்க மட்டும் அன்னைக்கு வரலேன்னா என்ன நடந்திருக்கும்னு எனக்கு உண்மையிலேயே தெரியல. 424 00:27:20,015 --> 00:27:21,934 ஆனால் அவங்க பிரச்சினையில மாட்டிக்கிறதை என்னால அனுமதிக்க முடியாது, நான்… 425 00:27:22,017 --> 00:27:22,935 செல்லம். 426 00:27:23,018 --> 00:27:25,229 - எனக்கு… எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. - செல்லம், பரவாயில்ல. 427 00:27:25,312 --> 00:27:28,774 - அம்மா, என்ன பண்றதுன்னு தெரியல. - வாடா, வாடா. ஒண்ணுமில்ல. 428 00:27:28,857 --> 00:27:31,527 என்னால நீங்களும் எல்லி ஆன்டியும் பகைச்சிக்கிறது எனக்குப் பிடிக்கல. 429 00:27:31,610 --> 00:27:34,154 நாங்க எப்பவும் தோழிகளா தான் இருப்போம். 430 00:27:35,531 --> 00:27:37,866 நாங்க ஏற்கனவே நிறைய அனுபவிச்சிட்டோம்… 431 00:27:37,950 --> 00:27:39,576 - ஆமா. ஆமா. - …அவளும், நானும். இல்ல? 432 00:27:39,660 --> 00:27:42,162 நீ நல்லவன், சரியா? 433 00:27:43,413 --> 00:27:45,290 என்ன, அடுத்த முறை என்னைக் கூப்பிடு, சரியா? 434 00:27:45,374 --> 00:27:47,042 தெரியும். வீட்டுக்கு வந்து உங்க கிட்ட சொல்ல தான் இருந்தேன். 435 00:27:47,125 --> 00:27:50,170 ஆனால்… நீங்க தூங்கிட்டிருந்தீங்க அப்பாவும் வீட்ல இல்ல. 436 00:27:51,213 --> 00:27:52,214 என்ன சொல்ற நீ… 437 00:27:53,090 --> 00:27:54,383 அப்பா எங்க இருந்தாங்க? 438 00:27:54,466 --> 00:27:56,885 தெரியல. அவர் கார் வெளியில இல்ல. 439 00:28:06,186 --> 00:28:08,438 - அம்மா? - சாரி, ஒண்ணுமில்ல. நீ… 440 00:28:09,898 --> 00:28:11,775 நீ போய் கொஞ்சம் நேரம் தூங்கு, சரியா? 441 00:28:12,359 --> 00:28:14,736 நாம நாளைக்கு அதைப் பத்தி பேசலாம். பரவாயில்ல. 442 00:28:27,791 --> 00:28:29,459 ஹாவர்ட் எல்லாத்தையும் பத்தி பொய் சொல்லிட்டு இருந்திருக்கார். 443 00:28:38,969 --> 00:28:41,013 அவர் வீட்ல இருந்ததா போலீஸ் கிட்ட சொன்னார். 444 00:28:44,558 --> 00:28:45,893 அவர் எப்ப வெளிய போனார்? 445 00:28:52,608 --> 00:28:53,984 அவர் அந்த பிலேஸரைப் போட்டிருந்தார். 446 00:30:31,498 --> 00:30:33,458 நான் கொடுத்த கிளாடா மோதிரத்தையா போட்டிருக்க? 447 00:30:33,542 --> 00:30:35,794 இது என்னைத் தரையில நிக்க வைக்கும்னு சொன்ன தானே? 448 00:30:57,441 --> 00:30:59,401 பார்க்க கோபமா இருக்க. கோபமாவா இருக்க? 449 00:30:59,902 --> 00:31:02,154 ஆமா, கோபமா தான் இருக்கேன்… உன் மேல, நான்ஸி. 450 00:31:04,656 --> 00:31:08,202 நம்ம நட்பு உனக்கு ஒரு பொருட்டாவே இல்லையா? 451 00:31:08,869 --> 00:31:10,412 உன்னால எப்படி எனக்கு இதைப் பண்ண முடிஞ்சது? 452 00:31:10,495 --> 00:31:11,997 ம், நீயும் தான் பண்ண. 453 00:31:12,664 --> 00:31:14,124 ஹாவர்டோட மனைவிக்கு. 454 00:31:17,878 --> 00:31:21,673 என்ன? இல்ல, அது சுத்தமா வேற. 455 00:31:21,757 --> 00:31:22,966 எப்படி? 456 00:32:34,830 --> 00:32:35,831 யாரது? 457 00:32:36,832 --> 00:32:37,875 ஜெனி? 458 00:32:38,709 --> 00:32:39,751 யாரது? 459 00:32:39,835 --> 00:32:40,836 நான் மேரி. 460 00:32:41,879 --> 00:32:43,255 மேரி மெக்கோர்மாக். 461 00:32:46,508 --> 00:32:48,177 கடவுளே. மேரி. 462 00:32:50,429 --> 00:32:54,558 - இப்படி திடீர்ன்னு வந்ததுக்கு மன்னிச்சிடுங்க. - எப்படி கண்டுப்பிடிச்ச? 463 00:32:55,475 --> 00:32:59,104 உங்கள ஃபேஸ்புக்குல ஃபாலோ பண்றேன், ஒத்துக்கிறதுக்கு சங்கடமா இருக்கு. 464 00:32:59,938 --> 00:33:02,024 ஹாவர்ட் உன்னை அனுப்பினாா? நான் எங்க இருக்கேன்னு அவனுக்குத் தெரியுமா? 465 00:33:02,691 --> 00:33:03,942 நான் இங்க வந்தது அவருக்குத் தெரியாது. 466 00:33:23,086 --> 00:33:24,338 என்ன ஆச்சு, மேரி? 467 00:33:26,507 --> 00:33:28,008 நான் பண்றதை என்னால நம்ப முடியல. 468 00:33:28,091 --> 00:33:29,968 நீங்களும் ஹாவர்டும்… 469 00:33:30,969 --> 00:33:32,304 இல்ல, நான் என்ன சொல்ல வரேன்? 470 00:33:34,723 --> 00:33:36,558 நீங்களும், ஹாவர்டும் முதல்ல சந்திக்க ஆரம்பிச்சப்போ… 471 00:33:39,311 --> 00:33:40,979 அவர் உங்களுக்குக் கவிதை வாசிச்சிருக்காரா? 472 00:33:41,730 --> 00:33:42,940 அது தான் உன் கேள்வியா? 473 00:33:47,194 --> 00:33:49,905 எனக்கு நீங்க புரிய வைக்கிறதுக்கு நீங்க உதவணும். 474 00:33:54,076 --> 00:33:56,703 இல்ல, அது… சாரி, அது முட்டாள்தனம். 475 00:33:57,496 --> 00:33:58,872 முட்டாள்தனமா பேசுறேன். 476 00:33:58,956 --> 00:34:00,582 நீங்க எனக்குப் பதில் சொல்லணும்னு அவசியமே இல்ல. 477 00:34:01,291 --> 00:34:05,254 ஏன்னா எனக்காக உங்க கணவர் உங்கள விட்டுப் போனார், அதனால, நீங்க என்னை வெறுப்பீங்க. 478 00:34:07,005 --> 00:34:08,674 அப்படிதான் அவன் சொன்னானா? 479 00:34:08,757 --> 00:34:10,050 அவன் விட்டுப் போனதா? 480 00:34:11,134 --> 00:34:12,386 ஆமா, ஆமா. 481 00:34:14,721 --> 00:34:16,723 நான் கர்ப்பமான போது, உங்களை விவாகரத்து பண்ணார், அதனால… 482 00:34:16,806 --> 00:34:17,808 வாவ். 483 00:34:19,476 --> 00:34:20,978 உனக்கு உண்மை தெரியணுமா? 484 00:34:28,777 --> 00:34:31,655 உண்மை என்னான்னா, நீ ஒண்ணும் அவனோட முதல் மாணவி இல்ல, 485 00:34:32,364 --> 00:34:33,532 ஆனால் நீ கொஞ்சம் வித்தியாசமா இருந்த. 486 00:34:34,074 --> 00:34:35,324 நீ என்னை தேடி வந்த. 487 00:34:35,826 --> 00:34:39,788 நீ புத்திசாலியான, இளம் பெண்ணா இருந்த. உனக்கு முன்னால ஒரு அற்புதமான எதிர்காலம் இருந்தது. 488 00:34:39,871 --> 00:34:41,998 நான் ஒரு முட்டாள், உனக்கு வழிகாட்டியா இருக்கலாம்னு நினைச்சேன். 489 00:34:44,126 --> 00:34:46,879 உன்னை என் வாழ்க்கையில அப்படியே வர அனுமதிச்சேன், 490 00:34:46,962 --> 00:34:49,755 நீ என்னைப் பயன்படுத்தி அவன் கிட்ட நெருக்கமான. 491 00:34:49,840 --> 00:34:51,717 இல்ல, ஜெனி. அது உண்மையில்ல. 492 00:34:52,676 --> 00:34:54,511 நான் உங்கள ரொம்ப மதிச்சேன், 493 00:34:55,929 --> 00:34:58,849 உங்க வேலை தான் நான் இந்த துறையில இறங்குறதுக்கு எனக்கு ஆர்வத்தை தூண்டிச்சு. 494 00:34:59,474 --> 00:35:01,268 அப்படியே என்னோட கணவனோட கட்டில்லேயும். 495 00:35:05,772 --> 00:35:08,650 உன்னைப் பத்தி நான் கண்டுப்பிடிச்சதும், எல்லாம் முடிஞ்சதுன்னு சொன்னேன். 496 00:35:10,444 --> 00:35:12,112 போகாதேன்னு கெஞ்சினான். 497 00:35:14,948 --> 00:35:18,410 உன்னை இன்னொரு அர்த்தமில்லாத உறவுன்னு சொன்னான். 498 00:35:18,493 --> 00:35:24,041 நான் இருக்க ஒத்துக்கிட்டா குழந்தையை தன்னோடது இல்லேன்னு மறுக்கிறேன்னு சொன்னான். 499 00:35:26,585 --> 00:35:29,588 இல்ல, அவர்… அவர் உங்களுக்கு மனநிலை சரியில்லேன்னு சொன்னார். 500 00:35:30,088 --> 00:35:31,715 என்னைப் பார்த்தா அப்படித் தெரியுதா? 501 00:35:33,634 --> 00:35:38,096 நீ கண்ணால பார்த்ததை விட அவன் சொல்றதை நம்ப முடிவெடுத்த. 502 00:35:38,931 --> 00:35:40,474 அவன் வேறென்ன சொன்னான்? 503 00:35:41,391 --> 00:35:45,187 நீங்க மணிக்கட்டுல வெட்டிக்கிட்டு, 504 00:35:45,938 --> 00:35:47,564 தற்கொலை பண்ணிக்க முயற்சிப் பண்ணதா சொன்னார். 505 00:35:56,448 --> 00:35:58,200 ஆனால் இதுக்கு அவன் தான் காரணம். 506 00:35:59,660 --> 00:36:01,328 ரெண்டு மாடிப்படிக்கட்டில இருந்து விழுந்தது. 507 00:36:01,912 --> 00:36:04,039 நான் விட்டுப் போறேன்னு சொன்ன அன்னைக்கு ராத்திரி நடந்தது. 508 00:36:04,540 --> 00:36:05,791 எங்களுக்குள்ள ஒரு வாக்குவாதம் ஏற்பட்டுச்சு. 509 00:36:07,292 --> 00:36:10,587 தனியா விட்டுப் போறத ஹாவர்டால நினைச்சுப் பார்க்க முடியல. 510 00:36:11,463 --> 00:36:13,549 இத்தனை வருஷமா உன்னைப் பத்தி நிறைய நினைச்சிருக்கேன். 511 00:36:14,550 --> 00:36:16,510 உனக்கு எப்படிப் போயிட்டிருக்குன்னு யோசிட்டிருப்பேன். 512 00:36:19,346 --> 00:36:20,973 அவனைப் பத்தி நான் உனக்கு எச்சரிக்கை பண்ணியிருக்கலாம். 513 00:36:23,267 --> 00:36:24,726 நான் உங்கள நம்பியிருக்க மாட்டேன். 514 00:36:26,186 --> 00:36:27,688 ஹாவர்ட் உனக்கு என்ன பண்ணான்? 515 00:36:57,301 --> 00:36:58,760 டேவிட் யாருன்னு எனக்குத் தெரியும். 516 00:37:02,097 --> 00:37:06,268 இந்த கவிதை எங்க கதையில ஒரு பகுதின்னு எப்பவும் நினைச்சேன், ஆனால் இப்ப… 517 00:37:07,186 --> 00:37:11,815 அது முதல்ல என்னோடது தானாங்கிறது எனக்குத் தெரியல. 518 00:37:11,899 --> 00:37:14,610 மேரி, அவன் வேட்டையாடுறவன். 519 00:37:14,693 --> 00:37:17,112 இதை அவன் நான்ஸி கிட்ட வாசிச்சு காட்றதையே கற்பனைப் பண்ணிட்டிருக்கேன். 520 00:37:18,488 --> 00:37:24,161 ஏன்னா, அது நிச்சயமா அவளுக்கு முக்கியமா இருந்திருக்கு. அதனால அதைக் கிழிச்சு வச்சிருக்கா. 521 00:37:24,244 --> 00:37:29,124 ஒருவேளை ஒரு நாள் நீ அதைக் கண்டுப்பிடிப்பேன்னு அவளுக்கு எங்கேயோ தோணியிருக்கலாம். 522 00:37:29,208 --> 00:37:30,959 நான் சரியான முட்டாள்னு அவ நினைச்சிருக்கணும். 523 00:37:31,043 --> 00:37:32,544 - இல்ல. - நான் முட்டாள் தான். 524 00:37:32,628 --> 00:37:35,631 - கடவுளே. உன் கிட்ட அட்வில் இருக்கா? - இருக்கு. 525 00:37:36,673 --> 00:37:42,513 நீ ஒண்ணும் முட்டாள் இல்ல. உனக்கு இது தெரிஞ்சிருக்க வாய்ப்பே இல்ல. 526 00:37:42,596 --> 00:37:45,140 அட. இதை தான் ஜெனிக்கும் பண்ணியிருக்கார். 527 00:37:45,224 --> 00:37:46,767 எனக்கு மட்டும் ஏன் பண்ண மாட்டார்? 528 00:37:46,850 --> 00:37:48,727 நீ உன் மேலயே தப்பு சொல்லிக்காத. 529 00:37:52,648 --> 00:37:54,399 - மத்தவங்களும் இருந்தாங்க. - என்ன சொல்ற? 530 00:37:57,152 --> 00:37:58,987 மத்த பெண்களும் இருந்தாங்க. 531 00:37:59,988 --> 00:38:01,532 நீ எதுவுமே சொல்லலையே. 532 00:38:01,615 --> 00:38:02,908 சொல்லி என்ன புண்ணியம்? 533 00:38:02,991 --> 00:38:04,910 அவரை நான் விட்டு வந்திருக்கவே மாட்டேன். 534 00:38:05,410 --> 00:38:07,329 அந்த கஷ்டத்தை நான் பசங்களுக்குக் கொடுக்க மாட்டேன். 535 00:38:09,081 --> 00:38:10,541 ஆனால் எப்பவும் திரும்ப வருவார், தெரியுமா? 536 00:38:10,624 --> 00:38:14,586 நான்… அவருக்கு நான் தேவை, எனக்கு அவர் தேவை, அது தான் முக்கியமா பட்டது. 537 00:38:15,587 --> 00:38:17,965 ஒரு முறை, ஒரு அஞ்சாறு வருஷம் முன்னால இருக்கும், 538 00:38:18,048 --> 00:38:20,843 பொண்ணுங்களை குளிப்பாட்டிட்டு இருந்தேன். அப்ப வீட்டுக்கு ஒருத்தி வந்தா. 539 00:38:20,926 --> 00:38:25,514 சின்ன வயசு, இருபது என்னமோ இருக்கும். ஒல்லியா. 540 00:38:25,597 --> 00:38:28,433 அவ காலேஜ் மாணவி, மார்க் குறைவானதால கவலையா இருக்கிறதா ஹாவர்ட் சொன்னார். 541 00:38:29,309 --> 00:38:31,353 மேல அவரோட ஆஃபீஸ்க்கு கூட்டிட்டுப் போய், கதவை மூடிக்கிட்டார். 542 00:38:33,522 --> 00:38:34,731 நீ என்ன பண்ண? 543 00:38:36,358 --> 00:38:37,985 நான் குளிப்பாட்டி முடிச்சேன். 544 00:38:41,905 --> 00:38:43,448 நான் அதைப் பத்தி ஒரு வார்த்தை பேசல. 545 00:38:44,157 --> 00:38:47,119 நீ உன்னையும் உன் குடும்பத்தையும் காப்பாத்திட்டிருந்திருக்க. 546 00:38:47,202 --> 00:38:52,082 ஆனால் நான் ஏதாவது சொல்லியிருந்தா, அப்ப… நான்ஸி இன்னும் உயிரோட இருந்திருக்கலாம். 547 00:38:52,165 --> 00:38:53,876 ஆமா, ஆனால் நீீ இல்லாம போயிருக்கலாம். 548 00:38:53,959 --> 00:38:58,213 கடவுளே. இந்த மோதிரம், அதை அவ சடலத்தில இருந்து எடுத்திருக்கார். 549 00:38:58,297 --> 00:38:59,256 கடவுளே. 550 00:38:59,339 --> 00:39:03,343 எல்லி, ஹாவர்ட் அதை அவ சடலத்தில இருந்து எடுத்திருக்கார். 551 00:39:03,427 --> 00:39:06,597 எப்படி இதெல்லாம் றிஜம்? எனக்கு வாழ்க்கையில எதுவுமே நிஜமா தோணல. 552 00:39:06,680 --> 00:39:07,723 இல்ல. நான் சொல்றதைக் கேளு. 553 00:39:08,891 --> 00:39:11,643 நீயும், நானும் நிஜம். 554 00:39:12,269 --> 00:39:13,270 இது நிஜம். 555 00:39:15,689 --> 00:39:16,982 நான் உனக்குத் தேவைன்னு வரும் போது, 556 00:39:18,692 --> 00:39:21,695 நான் உன்னை துரத்தி விட்டேன். என்னை மன்னிச்சிடு. 557 00:39:21,778 --> 00:39:25,032 நான் ராபர்ட் பத்தி உன்கிட்ட பொய் சொல்லியிருக்கக் கூடாது. 558 00:39:25,115 --> 00:39:27,284 இல்ல, மார்கஸ் நீ என்ன பண்ணேன்னு சொன்னான். 559 00:39:28,202 --> 00:39:33,165 என மகனைக் காப்பாத்துறதுக்கு உன் சுதந்திரத்தை இழக்கத் துணியுற? ஏன்? 560 00:39:33,248 --> 00:39:34,374 என்ன விளையாடுறியா? 561 00:39:34,458 --> 00:39:38,921 அது என் குழந்தை. அவன் பிறந்தப்போ நான் அந்த அறையில இருந்தேன். 562 00:39:39,004 --> 00:39:42,132 அவனைப் பாதுகாப்பா வைக்கிறதுக்கு நான் எதுவும் பண்ணுவேன். 563 00:39:42,841 --> 00:39:45,385 தெரியும். நீ பண்ணுவேன்னு தெரியும். 564 00:39:48,847 --> 00:39:50,015 - எல்லி. - என்ன? 565 00:39:50,516 --> 00:39:52,351 அவர் தான். கடவுளே. என்னோட ஃபோனை வீட்ல விட்டுட்டு வந்துட்டேன். 566 00:39:52,434 --> 00:39:53,435 மொபைல் ஹாவர்ட் 567 00:39:55,395 --> 00:39:56,396 நான் என்ன பண்றது? 568 00:39:56,980 --> 00:39:58,482 - எடுத்துப் பேசு. - சரி. 569 00:39:58,565 --> 00:40:01,193 - அவருக்கு என்ன தெரியும்னு நீ கண்டுப்பிடிக்கணும். - சரி. 570 00:40:03,654 --> 00:40:04,655 ஹலோ? 571 00:40:04,738 --> 00:40:06,698 எலனார், எங்க அவளை? மேரி எங்க? 572 00:40:07,199 --> 00:40:09,535 என்ன? நீ என்ன பேசுறன்னு எனக்குத் தெரியல, ஹாவர்ட். 573 00:40:09,618 --> 00:40:11,036 இது நடுராத்திரி. 574 00:40:11,119 --> 00:40:14,831 அவகிட்ட உடனே பேசணும். ஆர்டெமிஸ். அவ ஹாஸ்பிட்டல்ல இருக்கா. 575 00:40:20,462 --> 00:40:22,631 சரி, ரூம் நம்பர் எட்டுன்னு சொன்னாங்க. 576 00:40:27,386 --> 00:40:29,555 கடவுளே. ஆர்டீ, செல்லம். அம்மா வந்திருக்கேன். 577 00:40:29,638 --> 00:40:31,265 அவளுக்கு என்னாச்சு? என்னாச்சு? 578 00:40:31,849 --> 00:40:33,559 மே'ம், நீங்க கொஞ்சம் வழியை விடணும். 579 00:40:33,642 --> 00:40:35,894 - மேரி, அவங்க வேலையைப் பார்க்க விடு. - அவளுக்கு நான் தேவை. 580 00:40:35,978 --> 00:40:38,105 ப்ளீஸ், என்ன நடக்குதுன்னு யாராவது சொல்லுங்களேன். 581 00:40:38,188 --> 00:40:39,898 இங்க வாங்க. அவளை ஸ்டெபிலைஸ் பண்ண முயற்சிக்கிறோம். 582 00:40:39,982 --> 00:40:41,066 - சரி. - என்ன? 583 00:40:41,149 --> 00:40:42,609 அவள் எதோ மாத்திரைகளை விழுங்கினதா உங்க கணவர் சொன்னார். 584 00:40:42,693 --> 00:40:44,444 - என்ன மாத்திரை? - இதில இருந்தது. 585 00:40:44,528 --> 00:40:45,904 உங்களுக்குத் தெரியுதா? 586 00:40:46,697 --> 00:40:47,698 இது என்ன மாத்திரை? 587 00:40:48,282 --> 00:40:50,617 நீங்க சொன்னா தான், உங்க மகளுக்கு எப்படி உதவணும்னு எங்களுக்குத் தெரியும். 588 00:40:50,701 --> 00:40:55,414 அது… ஆடரால். பத்து மில்லிகிராம்னு நினைக்கிறேன். அது ஆடரால். 589 00:40:55,497 --> 00:40:56,915 ஆடரால், பத்து மில்லிகிராம். 590 00:40:57,749 --> 00:40:59,334 - மேரி… - பல்ஸ் அதிகரிக்குது. 591 00:40:59,418 --> 00:41:01,962 145. 160. 592 00:41:02,045 --> 00:41:04,214 என்ன நடக்குது? என்ன நடக்குது? 593 00:41:04,298 --> 00:41:05,340 என்ன நடக்குது? அவளுக்கு ஒண்ணுமில்லையே? 594 00:41:06,091 --> 00:41:07,467 ஆர்டீ, அம்மா இங்க தான் இருக்கேன், சரியா? 595 00:41:07,551 --> 00:41:08,886 நீங்க கொஞ்சம் தள்ளிப் போகணும். 596 00:41:08,969 --> 00:41:11,013 ஆர்டீ, அம்மா இங்க இருக்கேன். நான் இங்க தான் இருக்கேன், செல்லம். 597 00:41:11,096 --> 00:41:12,139 உங்க அம்மா உன்கூட தான் இருக்கேன். 598 00:41:12,222 --> 00:41:13,682 எல்லாம் சரியாயிடும், செல்லம். 599 00:41:13,765 --> 00:41:16,185 அம்மா இங்க இருக்கேன், செல்லம். அம்மா இங்க தான் இருக்கேன். 600 00:41:16,268 --> 00:41:17,936 எல்லாம் சரியாயிடும். 601 00:41:18,020 --> 00:41:20,355 என் குழந்தைக்கு என்ன ஆகுது? 602 00:41:20,439 --> 00:41:23,567 அவளுக்கு உதவுங்க. ப்ளீஸ். 603 00:42:16,286 --> 00:42:18,288 தமிழாக்கம் மரிய ஜோசப் ஆனந்த் மொராய்ஸ்