1 00:00:33,659 --> 00:00:35,661 நிலாவுல காலடி எடுத்து வச்ச முதல் பெண்மணி நீதான். 2 00:00:37,663 --> 00:00:39,414 அது உனக்கு ஒரு பாதுகாப்பைத் தரும். 3 00:00:42,835 --> 00:00:45,128 முதல் ஆளா இருந்தது ககாரினைக் காப்பாத்தல. 4 00:00:50,425 --> 00:00:52,302 விண்கலப் பாதை திட்டமிட்டபடிதான் இருக்கு. 5 00:00:52,386 --> 00:00:53,387 உத்தரவு கொடு. 6 00:00:53,470 --> 00:00:56,056 லூனா 16, நீங்க டீ-ஆர்பிட் பர்னை ஆரம்பிக்கலாம். 7 00:00:56,139 --> 00:00:58,016 ஸ்டார் சிட்டி, இது லூனா 16. 8 00:00:58,100 --> 00:01:03,564 டீ-ஆர்பிட் பர்ன், காலை 08:07 UTC-க்கு தானாகவே ஆரம்பிக்கும். 9 00:01:03,647 --> 00:01:05,566 கால அளவு, 122 வினாடிகள். 10 00:01:13,282 --> 00:01:14,533 ஸ்டார் சிட்டி. 11 00:01:14,616 --> 00:01:16,618 டீ-ஆர்பிட் பர்ன் பாதி முடிஞ்சிடுச்சு. 12 00:01:16,702 --> 00:01:18,328 சரி, லூனா 16. 13 00:01:26,295 --> 00:01:27,546 ஸ்டார் சிட்டி, இது லூனா 16. 14 00:01:28,463 --> 00:01:29,923 டீ-ஆர்பிட் பர்ன் முடிஞ்சிடுச்சு. 15 00:01:30,007 --> 00:01:33,135 சரி, லூனா 16. பிரிக்கும் வேலையை ஆரம்பிங்க. 16 00:01:33,218 --> 00:01:37,264 இதோ பிரிக்கும் வேலையை ஆரம்பிக்கிறோம், மூணு, ரெண்டு, ஒண்ணு. 17 00:01:42,060 --> 00:01:43,061 பிரிக்கும் வேலை முடிஞ்சது… 18 00:01:49,276 --> 00:01:50,694 இன்னும் ஒட்டியிருக்கு. 19 00:01:50,777 --> 00:01:52,029 அது பிரியவே இல்ல. 20 00:01:52,112 --> 00:01:54,907 ஸ்டார் சிட்டி, இன்னொரு தொடர்பு போல்ட் கோளாறா இருக்கு. 21 00:01:54,990 --> 00:01:56,617 அது அந்த சர்வீஸ் மாட்யூலை பின்னாடியே இழுத்துட்டு வருது. 22 00:01:56,700 --> 00:01:59,620 - விண்கலத்தோட வெளிப்பகுதி ரொம்ப சூட்டுல இருக்கு. - அமைதியா இருங்க. அமைதி. 23 00:01:59,703 --> 00:02:01,955 இப்படி இழக்குறதுக்காக நாம அவங்களை நிலாவுக்கு அனுப்பல. 24 00:02:02,039 --> 00:02:04,917 வளிமண்டலம் அந்த கேபிளை எரிச்சுடும். 25 00:02:05,000 --> 00:02:08,127 அப்படி எரிக்கலன்னா, நமக்கும் சேர்த்துதான் அரசாங்க மரியாதை செய்வாங்க. 26 00:02:08,211 --> 00:02:09,963 முட்டாள்தனமா பேசாதீங்க. 27 00:02:10,047 --> 00:02:11,798 அரசாங்கம் நம்ம ஈமச்சடங்குக்கு ஒரு பைசா கூட செலவு பண்ணாது. 28 00:02:12,841 --> 00:02:14,343 - எனக்கு தொடர்பைக் கொடு. - சரிங்க, சார். 29 00:02:21,266 --> 00:02:23,685 என் ஈகிள்களே, நான் வாக்கு கொடுக்குறேன், 30 00:02:23,769 --> 00:02:26,522 அந்த விண்கலம் சோவியத் யூனியன் தயாரிச்சதுலயே 31 00:02:26,605 --> 00:02:28,774 மிகச்சிறந்த டைட்டானியத்தால ஆனது. 32 00:02:29,650 --> 00:02:32,611 அந்த வயர் அறுந்து போற வரைக்கும் அது தாங்கும். 33 00:02:50,921 --> 00:02:52,798 ஸ்டார் சிட்டி, விண்கலத்தின் நிலை சீர்செய்யப்பட்டது. 34 00:02:54,007 --> 00:02:55,551 வெளிப்பக்கச் சூடு குறையுது. 35 00:02:55,634 --> 00:02:58,011 லூனா 16, உங்க விண்கலப் பாதையை உறுதிப்படுத்த முடியுமா? 36 00:02:58,095 --> 00:02:59,847 திட்டமிட்டதை விட ரொம்ப செங்குத்தா உள்ள வர்றோம். 37 00:03:01,098 --> 00:03:02,099 அப்படின்னா அவங்க எங்க தரை இறங்குவாங்க? 38 00:03:03,517 --> 00:03:05,143 300… இல்ல. 39 00:03:05,227 --> 00:03:08,105 பாதையிலிருந்து 450 கிலோமீட்டர் தள்ளி போயிட்டாங்க. 40 00:03:08,188 --> 00:03:11,275 பைக்கால் ஏரிக்கு பக்கத்துல இருக்க மத்திய சைபீரியப் பீடபூமி. 41 00:03:11,358 --> 00:03:13,652 மீட்புக்குழு, உங்ககிட்ட அந்த இடத்தோட கோ-ஆர்டினேட்ஸ் இருக்கா? 42 00:03:46,560 --> 00:03:47,978 கொஞ்சம் காத்து வரட்டும். 43 00:04:39,279 --> 00:04:41,990 அவங்க நம்மள வந்து அடைய எவ்வளவு நேரம் ஆகும்னு யாருக்குத் தெரியும்? 44 00:04:43,450 --> 00:04:46,119 நான் முதலுதவி கிட்ல இருந்து சிக்னல் ஃபிளாரை எடுக்குறேன். 45 00:04:48,247 --> 00:04:50,499 - வாலியா. - என்னாச்சு? 46 00:04:50,582 --> 00:04:52,042 துப்பாக்கியை எடு. துப்பாக்கியை எடு. 47 00:04:53,293 --> 00:04:54,920 அசையாத. 48 00:07:18,146 --> 00:07:19,439 உங்களை வரவேற்கிறோம், தோழரே. 49 00:07:24,403 --> 00:07:26,613 துணைத் தலைவர் டாராசோவை நான் அறிமுகப்படுத்துறேன். 50 00:07:29,324 --> 00:07:30,325 உட்காரு. 51 00:07:34,830 --> 00:07:36,206 இந்த பெண்ணை உனக்குத் தெரியுமா? 52 00:07:40,961 --> 00:07:42,337 - தெரியாது. - நிஜமாவா? 53 00:07:42,921 --> 00:07:44,882 இவள்தான் அனஸ்தாஸியா பெலிகோவா, 54 00:07:44,965 --> 00:07:46,633 நிலாவுல காலெடுத்து வைத்த முதல் பெண்மணி. 55 00:07:46,717 --> 00:07:52,347 உன்னைப் போல இல்லாம, நாட்டுக்காக எப்படி நடந்துக்கணும்னு அவளுக்குத் தெரியும். 56 00:07:53,682 --> 00:07:56,226 அனஸ்தாஸியா பெலிகோவாங்கிற பெயர்… 57 00:07:57,227 --> 00:07:59,354 இனிமே உன்னுடையது இல்ல, தோழரே. 58 00:08:03,317 --> 00:08:05,485 எனக்கு… எனக்கு… என்ன சொல்றதுன்னே தெரியல. 59 00:08:05,569 --> 00:08:07,654 நிலாவுல இருக்குறப்போ உனக்கு இல்லாத ஒரு தயக்கம் இப்போ இருக்கே. 60 00:08:09,489 --> 00:08:13,452 இந்த மிஷன்ல உனக்கு முன்னாடி இருந்தவங்க விட்ட இடத்துல உன்னை நியமிக்கலாம்னு 61 00:08:13,535 --> 00:08:18,207 கர்னல் ரஸ்கோவா சொன்னப்போ, உன் நிலைமையை நீ புரிஞ்சுக்குவன்னு அவங்க எனக்கு உறுதி கொடுத்தாங்க. 62 00:08:18,290 --> 00:08:19,791 ஆமா, நான் புரிஞ்சுக்கிட்டேன். இப்பவும் புரியுது. 63 00:08:19,875 --> 00:08:24,213 இருந்தாலும், இப்போ நான் சைபீரியாவோட காட்டுல வண்டிக்கு பின்னாடி உட்கார்ந்திருக்கேன். 64 00:08:25,422 --> 00:08:27,591 திரும்பவும் இது மாதிரி ஏதாவது நடந்தா… 65 00:08:27,674 --> 00:08:29,218 திரும்ப நடக்காது, கர்னல் ரஸ்கோவா. 66 00:08:30,636 --> 00:08:31,762 நான் சத்தியம் பண்றேன். 67 00:08:33,179 --> 00:08:34,515 நல்லது. 68 00:08:41,980 --> 00:08:43,482 சரி, இப்போ எல்லாம் முடிவுக்கு வந்துடுச்சு. 69 00:08:43,565 --> 00:08:48,487 இங்கிருந்து நீ உலன்-உடே விமான நிலையத்துக்குப் போவ, அங்கிருந்து ஸ்டார் சிட்டிக்கு போய், 70 00:08:49,196 --> 00:08:51,740 ரெட் ஸ்கொயர்ல நடக்கப்போற அணிவகுப்புக்குத் தயாராகணும். 71 00:08:51,823 --> 00:08:54,409 நம்ம நாட்டை ஒரு முறை சுத்திப் பார்த்ததுக்கு அப்புறம், 72 00:08:55,035 --> 00:08:56,870 உன்னோட இந்தச் சாதனையை உலகப் பத்திரிகைகளோட கொண்டாடுறதுக்காகவும் 73 00:08:57,454 --> 00:09:00,916 சோவியத்தின் மேன்மையை உலகத்துக்கு காட்டுறதுக்காகவும் 74 00:09:01,458 --> 00:09:04,461 உன்னை நாங்க பாரிஸுக்கு அனுப்பத் திட்டமிட்டிருக்கோம். 75 00:09:05,254 --> 00:09:08,674 ஆனா, அதுல நாம தீர்க்க வேண்டிய ஒரு பிரச்சனை இருக்கு. 76 00:09:10,342 --> 00:09:13,554 சோவியத் பெண்களோட அடையாளமா இருக்கணும்னா, 77 00:09:13,637 --> 00:09:14,847 நீ தனியா இருக்க முடியாது. 78 00:09:21,103 --> 00:09:22,729 ஆனா நான் இன்னும் கல்யாணம் பண்ணாத பொண்ணு தான். 79 00:09:25,023 --> 00:09:28,569 அதனாலதான் இந்தச் சுற்றுலா முடிஞ்சதும் நீ கல்யாணம் பண்ணிக்கப் போற. 80 00:09:28,652 --> 00:09:30,112 கல்யாணமா? 81 00:09:32,698 --> 00:09:34,783 அது அவசியமா? 82 00:09:34,867 --> 00:09:36,994 நீ ஒத்துழைக்க மாட்டேன்னு சொல்றியா? 83 00:09:38,704 --> 00:09:39,705 இல்ல. 84 00:09:40,581 --> 00:09:41,582 இல்ல, இல்ல. 85 00:09:45,627 --> 00:09:46,712 எனக்குத் தெரியல… நான்… 86 00:09:46,795 --> 00:09:49,715 - எங்க அப்பாகிட்ட, நான் பேசணும்… - உன் அப்பாக்குத் தகவல் சொல்லிடுவோம். 87 00:09:49,798 --> 00:09:51,425 நாங்க ஏற்கனவே எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சுட்டோம். 88 00:09:51,508 --> 00:09:55,262 அது ஒரு… அழகான சோவியத் திருமணமா இருக்கும். 89 00:09:58,056 --> 00:09:59,141 வாழ்த்துகள். 90 00:10:02,686 --> 00:10:05,772 நான் யாரைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு தெரிஞ்சுக்கலாமா? 91 00:10:10,485 --> 00:10:12,196 - என்ன விளையாடுறீங்களா? - அவ இளமையா இருக்கா, 92 00:10:12,279 --> 00:10:13,405 பார்க்க ஒண்ணும் அவ்வளவு மோசமா இல்ல, 93 00:10:13,488 --> 00:10:15,991 அப்புறம் இப்போ இந்த உலகத்துலயே அவதான் ரொம்பப் பிரபலமான பொண்ணு. 94 00:10:16,074 --> 00:10:18,827 - அதுக்காக அவளைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு இல்லையே. - சோவியத் யூனியன்ல இருக்க எல்லா பிரம்மச்சாரிகளும் 95 00:10:18,911 --> 00:10:21,205 உன்னோட இடத்துக்கு வர அவங்ககிட்ட இருக்குற கடைசிப் பணத்தையும் கொடுக்கத் தயாரா இருப்பாங்க. 96 00:10:21,288 --> 00:10:22,289 அப்போ அவங்கள்ல யாரையாவது கேளுங்களேன். 97 00:10:22,372 --> 00:10:24,750 உனக்காக வேற யாரும் காத்துட்டு இல்லதானே? 98 00:10:24,833 --> 00:10:27,085 நீ கல்யாணம் பண்ணி செட்டில் ஆகுறதுதான் நல்லது. 99 00:10:27,169 --> 00:10:29,546 மத்தியக் குழு அவளை ஒரு விண்வெளி வீரரைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு விரும்புறாங்க. 100 00:10:29,630 --> 00:10:32,883 உனக்குப் பிடிச்சிருக்கோ இல்லயோ, இப்போதைக்கு நீ ஒருத்தன்தான் பிரம்மச்சாரியா இருக்க. 101 00:10:34,092 --> 00:10:35,302 அவ எனக்கு ஏத்த பொண்ணு இல்ல. 102 00:10:36,470 --> 00:10:38,263 அதாவது, அவ… அவ ஒரு மாதிரி விசித்திரமானவ. அவ… 103 00:10:38,347 --> 00:10:40,474 சாஷா. நீ ஒரு நல்ல பைலட்தான், 104 00:10:40,557 --> 00:10:43,310 ஆனா, இது வரைக்கும் உனக்கு ஒரு மிஷன் கூட ஒதுக்காததுக்கு ஒரு காரணம் இருக்கு. 105 00:10:44,686 --> 00:10:45,687 ஆமா, அது எனக்குத் தெரியும். 106 00:10:45,771 --> 00:10:47,856 உன்னோட எல்லாப் பிரச்சனைகளுக்கும் 50 வருஷத்துக்கு முன்னாடி 107 00:10:47,940 --> 00:10:50,234 உன் தாத்தா பாட்டி பின்பற்றின அந்த மதத்தை காரணம் சொல்ல முடியாது. 108 00:10:50,317 --> 00:10:52,611 - அப்பறம் ஏன் நான் இன்னும் விண்வெளிக்கு போகல? - ஏன்னா உனக்கு எல்லாமே விளையாட்டுதான், 109 00:10:52,694 --> 00:10:56,365 சாஷா. இந்தத் திட்டத்துல நீ எவ்வளவு சீரியஸா இருக்குறன்னு நீ நிரூபிக்கணும். 110 00:10:56,448 --> 00:10:58,033 என்னது? அந்த இயந்திரப் பொம்மையைக் கல்யாணம் பண்ணிக்கிறதா? 111 00:10:58,116 --> 00:10:59,868 அதாவது, இங்க யாரு விளையாடுறதுன்னு எனக்கே புரியல. 112 00:10:59,952 --> 00:11:01,620 சாஷா, இவ்வளவு அழுத்தத்துக்கு நடுவுல 113 00:11:01,703 --> 00:11:03,914 நான் இப்படி தரகர் வேலை பார்க்க விரும்புறேன்னு நீ நினைக்கிறியா? 114 00:11:03,997 --> 00:11:06,208 என் நேரத்தை நான் இப்படித்தான் செலவிட விரும்புறேன்னு நினைக்கிறியா? 115 00:11:09,002 --> 00:11:12,172 இந்த உலகத்துல நமக்கு வேண்டியது கிடைக்கணும்னா, சில தியாகங்களைச் செஞ்சுதான் ஆகணும்னு 116 00:11:12,256 --> 00:11:13,799 நான் ரொம்ப நாளைக்கு முன்னாடியே கத்துக்கிட்டேன். 117 00:11:14,550 --> 00:11:16,426 - நீ அதைச் செய்யத் தயாரா இருக்கியா? - ஆமா. 118 00:11:17,302 --> 00:11:20,764 உத்தரவுகளை எதிர்க்க வேண்டிய நேரம் இது இல்ல, என்னை நம்பு. 119 00:11:37,698 --> 00:11:38,699 என் கூட வா. 120 00:11:54,047 --> 00:11:55,215 கர்னல் ரஸ்கோவாவா? 121 00:11:55,299 --> 00:11:56,550 கதவை மூடு. 122 00:12:20,157 --> 00:12:22,659 பெர்லின்ல ஏதாவது முன்னேற்றம் இருக்கா? 123 00:12:22,743 --> 00:12:25,537 என் மேஜையில இருக்குற ஃபைல்களைப் படிக்கிறது புத்திசாலித்தனம்னு நினைக்கிறியா? 124 00:12:25,621 --> 00:12:27,414 மன்னிச்சிடுங்க, கர்னல். எனக்குத் தெரியல… 125 00:12:29,208 --> 00:12:30,876 நான் என்ன நினைச்சேன்னு எனக்கே தெரியல. 126 00:12:36,965 --> 00:12:40,427 ஒருத்தனை அமெரிக்கத் தூதுவர்னு நினைச்சு ஸ்டாஸி பிடிச்சு வச்சிருக்காங்க. 127 00:12:41,053 --> 00:12:43,305 அந்த நிலவுத் தளம் பத்தின திட்டங்களைக் கொண்டு வந்தவனா? 128 00:12:44,014 --> 00:12:46,558 எனக்கு ஜெர்மன் மொழி தெரியும், அது ஏதாவது உதவியா இருக்குமோனு சொல்றேன். 129 00:12:46,642 --> 00:12:49,311 உன்னைப் புரிஞ்சுக்கவே முடியல, இரினா வெஸ்லியவ்னா. 130 00:12:49,937 --> 00:12:51,855 உனக்கு நல்ல குறிக்கோள் இருக்கு, கற்பனைத் திறன் அதிகம், 131 00:12:51,939 --> 00:12:54,650 உன் லட்சியத்தை அடைய எதை வேணும்னாலும் செய்வன்னு தெரியுது. 132 00:12:54,733 --> 00:12:59,029 உன்னை மாதிரி ஒருத்தர் நாட்டுக்கும் சரி, எனக்கும் சரி ரொம்ப உதவியா இருப்பாங்க. 133 00:12:59,112 --> 00:13:02,241 என்னால முடிஞ்ச உதவியைச் செய்ய நான் தயாரா இருக்கேன், கர்னல். 134 00:13:04,326 --> 00:13:05,452 ஆனா ஒரு குறிப்பிட்ட எல்லை வரைக்கும் தான். 135 00:13:09,915 --> 00:13:12,125 தோழர் பெலிகோவா பாரிஸ் பயணம் போகும்போது, 136 00:13:12,209 --> 00:13:15,879 கூடவே போற வாலியா மற்றும் டான்யா மிரொனோவை தொடர்ந்து கண்காணி. 137 00:13:15,963 --> 00:13:18,173 அப்புறம் நம்மோட புது ஜோடி மேலயும் ஒரு கண்ணு வச்சுக்கோ. 138 00:13:19,174 --> 00:13:21,051 பெலிகோவா முறைப்படி நடந்துக்கிறாளான்னு பாத்துக்கோ. 139 00:13:21,969 --> 00:13:25,138 அவளை நம்ப முடியாதுன்னு தெரிஞ்சு போச்சு. 140 00:13:25,222 --> 00:13:26,890 அப்புறம் நீங்க ரொம்ப விழிப்புணர்வோட இருக்கணும். 141 00:13:26,974 --> 00:13:31,270 நாம ஸ்டார் சிட்டியை விட்டு வெளிய போயிட்டா, அந்நிய நாட்டுத் தலையீடு இருக்க வாய்ப்பு இருக்கு. 142 00:13:31,353 --> 00:13:32,396 எனக்குப் புரியுது. 143 00:14:10,142 --> 00:14:12,394 என்னை மன்னிச்சுடுங்க, ஆனா நன்றி, சீஃப் டிசைனர். 144 00:14:12,477 --> 00:14:13,604 எதுக்குக் கண்ணா? 145 00:14:13,687 --> 00:14:15,564 நீதான் எனக்கு டீ ஊத்தித் தர்ற. 146 00:14:15,647 --> 00:14:18,442 ஆமா, ஆனா சோவியத் பெண்கள் எதற்கும் சளைத்தவர்கள் இல்லைனு நீங்க உலகத்துக்கே காட்டிட்டீங்க. 147 00:14:18,525 --> 00:14:20,194 அவ சொல்றது சரிதான், தோழரே. 148 00:14:20,277 --> 00:14:22,112 சோவியத் பெண்களைப் பார்த்து உலகமே பொறாமைப்பட வச்சுட்டீங்க, 149 00:14:22,196 --> 00:14:25,449 இப்போ எங்க மனைவிகளெல்லாம் ஓயாம இதைப் பத்தியே பேசிட்டு இருக்காங்க. 150 00:14:27,784 --> 00:14:31,038 உங்களோட அந்தத் தெளிவான கண்ணோட்டம்தான் நாம திரும்பவும் அமெரிக்கர்களை விட 151 00:14:31,121 --> 00:14:34,499 ஒரு படி மேலே இருக்க உதவுதுன்னு ஜெனரல் செக்ரட்டரி ப்ரெஷ்நேவுக்கு தெரியும். 152 00:14:35,667 --> 00:14:39,922 அந்த முன்னேற்றம் அப்படியே தொடர அவர் ஆசைப்படுறார், அதனாலதான், இன்னைக்கு உங்களை இங்க வரவழைச்சோம். 153 00:14:40,005 --> 00:14:42,174 சரி, இத கேட்கவே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. 154 00:14:42,257 --> 00:14:46,386 இந்த நிலவு மிஷன் நம்ம திட்டத்துல ஒரு பகுதிதான், நாம பண்ணப்போற மத்த ப்ராஜெக்ட்கள் பத்தின 155 00:14:46,470 --> 00:14:50,933 என்னோட திட்டங்களை நான் கொண்டு வந்திருக்கேன், ஆனா நாம இன்னும் பெருசா யோசிக்கணும். 156 00:14:51,016 --> 00:14:52,392 அமெரிக்கர்களை நிஜமாவே ஜெயிக்கணும்னா 157 00:14:52,476 --> 00:14:55,771 நாம தொடர்ந்து வேகமா முன்னேறிட்டே இருக்கணும். 158 00:14:55,854 --> 00:14:59,024 இப்போ, ஒரு சோவியத் விண்வெளி வீரரை… நன்றி… 159 00:14:59,107 --> 00:15:02,194 பக்கத்துல இருக்குற கிரகங்களுக்கு அனுப்பணும், 160 00:15:02,277 --> 00:15:04,571 - அதாவது வீனஸ்க்கு… - தோழரே, நான் ஒன்னு சொல்லலாமா, 161 00:15:04,655 --> 00:15:07,241 உங்களோட அந்த ஸ்வெஸ்டா திட்டங்களை அமெரிக்கர்கள் திருடுறதுக்கு முன்னாடி 162 00:15:07,950 --> 00:15:10,118 ஒருவேளை இதெல்லாம் சாத்தியமா இருந்திருக்கலாம். 163 00:15:11,370 --> 00:15:15,082 இப்போ அந்த நிலவு தளம்தான் தோழர் ப்ரெஷ்நேவ்வோட முன்னுரிமையா இருக்கு. 164 00:15:15,165 --> 00:15:16,166 அது… 165 00:15:16,959 --> 00:15:17,960 ஒரு தவறா இருக்கும். 166 00:15:19,711 --> 00:15:21,255 தவறா எடுத்துக்க வேண்டாம். 167 00:15:21,338 --> 00:15:24,091 ஆனா தோழர் ப்ரெஷ்நேவ்வோட விருப்பம் ரொம்பத் தெளிவா இருக்கு. 168 00:15:24,758 --> 00:15:29,221 நம் திட்டங்களை வச்சே அமெரிக்கர்கள் நம்மை ஜெயிக்கிறதை அவர் அனுமதிக்க மாட்டார். 169 00:15:32,558 --> 00:15:34,142 நீங்க என்கிட்ட என்ன எதிர்பார்க்கிறீங்க? 170 00:15:34,726 --> 00:15:37,729 ஸ்வெஸ்டா லாஞ்ச்சை குறித்த தேதிக்கு முன்னாடியே பண்ணச் சொல்றோம். 171 00:15:38,480 --> 00:15:41,149 அந்தப் பாராட்ரூப்பர்ஸ் தின கொண்டாட்டத்துக்குள்ள அது தயாராகிடுமா? 172 00:15:41,233 --> 00:15:43,694 அது இன்னும் சில மாசங்கள்ல வருமே. 173 00:15:44,945 --> 00:15:46,238 நிலாவு தளத்தோட மறுவடிவமைப்பை முடிக்கவே 174 00:15:46,321 --> 00:15:49,032 இன்னும் ஒரு வருஷத்துக்கு மேல ஆகும். 175 00:15:49,116 --> 00:15:50,117 அதுமட்டுமில்லாம, 176 00:15:50,200 --> 00:15:54,454 நிலவோட மேற்பரப்புல தண்ணி இருக்கா இல்லையான்னு கூட இன்னும் நமக்குத் தெரியாது 177 00:15:54,538 --> 00:15:57,749 இந்த வேலையை முடிக்க உங்களுக்கு என்ன வேணும்னாலும் கேளுங்க. பணம், வசதிகள், ஆட்கள். 178 00:15:57,833 --> 00:15:58,917 நீங்க எதைக் கேட்டாலும் அது உங்களுக்குக் கிடைக்கும். 179 00:15:59,001 --> 00:16:00,169 - இது… - நேரம் மட்டும் தான் இல்லை. 180 00:16:00,252 --> 00:16:01,879 என்னை மன்னிச்சிடுங்க, தோழரே, ஆனா இது அபத்தமா இருக்கு. 181 00:16:02,963 --> 00:16:04,298 அபத்தமா இருக்கு. 182 00:16:05,048 --> 00:16:07,009 இந்த மேசையைச் சுத்தி இருக்குற எல்லாரையும் விட எனக்கும் அமெரிக்கர்களை 183 00:16:07,092 --> 00:16:09,928 ஜெயிக்கணும்னு ஆசை தான், ஆனா இவ்வளவு சீக்கிரம் லாஞ்ச் பண்றதா? 184 00:16:12,514 --> 00:16:16,435 நீங்க இந்த ஆண்களையும் பெண்களையும் சாகத்தான் அனுப்பப் போறீங்க. 185 00:16:20,439 --> 00:16:23,901 சரி, பொதுச் செயலாளருக்காக நீங்க இத கண்டிப்பா செஞ்சு முடிப்பீங்கன்னு 186 00:16:25,027 --> 00:16:27,321 எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கு. 187 00:16:27,404 --> 00:16:28,405 நீங்கதான் 188 00:16:29,072 --> 00:16:30,866 எங்களோட மிக முக்கியமான பலமே. 189 00:16:33,410 --> 00:16:37,080 சரி, தோழர் பெலிகோவாவோட சுற்றுப்பயணம் பத்தின அடுத்த திட்டம் என்ன? 190 00:16:46,590 --> 00:16:47,883 சீஃப் டிசைனர்? 191 00:16:52,137 --> 00:16:53,722 தோழர் பெலிகோவா. 192 00:16:55,516 --> 00:16:56,725 உங்க கூட கொஞ்சம் பேசலாமா? 193 00:16:59,603 --> 00:17:01,063 தாராளமா, சொல்லு. 194 00:17:11,240 --> 00:17:12,241 நான்… 195 00:17:13,659 --> 00:17:17,996 லூனா 17 மிஷன்ல சேரலாம்னு விருப்பப்பட்டேன். 196 00:17:18,914 --> 00:17:20,790 மேல போனது உனக்குப் பிடிச்சிருக்கு போல? 197 00:17:21,708 --> 00:17:24,252 அது என் வாழ்க்கையிலேயே ஒரு சிறந்த தருணம். 198 00:17:24,336 --> 00:17:26,755 உன்னை நெனச்சு நாங்க எல்லாரும் ரொம்பப் பெருமைப்படுறோம். 199 00:17:27,756 --> 00:17:31,176 ஆனா இப்போதைக்கு உன் முன்னாடி இருக்குற வேலையில மட்டும் கவனம் செலுத்து. 200 00:17:34,096 --> 00:17:35,931 உன் சுற்றுப்பயணத்துக்கு நீ தயாரா? 201 00:17:36,974 --> 00:17:39,393 உண்மையாவே, எனக்கு அதை நினைச்சா பயமா இருக்கு. 202 00:17:42,563 --> 00:17:45,023 லியோனோவ் அவரோட அந்தப் புகழையெல்லாம் ரொம்ப ரசிச்சாரு. 203 00:17:46,483 --> 00:17:48,151 நான் ஒண்ணும் லியோனோவ் இல்ல. 204 00:17:48,235 --> 00:17:49,486 எனக்குத் தெரியும். 205 00:17:50,153 --> 00:17:51,989 நீ எனக்கு யூரியை ஞாபகப்படுத்துற. 206 00:17:53,949 --> 00:17:56,410 அவருக்கும் வோஸ்டோக் 1-ல பாதிலேயே திரும்புற வாய்ப்பு இருந்தது, 207 00:17:56,493 --> 00:17:59,913 ஆனா உன்னை மாதிரியே மிஷனுக்காக அவர் எல்லாத்தையும் பணயம் வச்சாரு. 208 00:18:00,789 --> 00:18:04,418 அவரை மாதிரியே, நீயும் இந்தப் புகழையெல்லாம் ரசிக்க கத்துக்குவ. 209 00:18:06,003 --> 00:18:08,839 நீங்களும் எங்க கூட பாரிஸுக்கு வருவீங்களா, சீஃப் டிசைனர்? 210 00:18:12,092 --> 00:18:13,093 எனக்கு… 211 00:18:14,845 --> 00:18:17,264 சோவியத் யூனியனை விட்டு வெளிய போக தடை விதிக்கப்பட்டிருக்கு 212 00:18:21,768 --> 00:18:24,188 - நிஜமாவா? - என் பாதுகாப்புக்காக… 213 00:18:25,439 --> 00:18:26,648 அப்படித்தான் அவங்க சொல்றாங்க. 214 00:18:28,692 --> 00:18:31,278 உன்னோட பயணம் சிறப்பா அமையட்டும், தோழர் பெலிகோவா. 215 00:18:32,196 --> 00:18:33,614 எங்களை பெருமைப்படுத்து. 216 00:18:33,697 --> 00:18:34,698 நன்றி. 217 00:18:44,458 --> 00:18:45,918 நீங்க எங்க போறீங்க? 218 00:18:46,001 --> 00:18:49,296 கூட வேலை பாக்குறவங்க எல்லாம் ஒரு சுற்றுலா போறாங்க. 219 00:18:50,339 --> 00:18:51,465 அதனால நானும் போயே ஆகணும். 220 00:18:52,049 --> 00:18:54,676 நட்டாலியா ஃபோன்ல பேசுறத நான் கேட்டேன். 221 00:18:55,385 --> 00:18:59,348 நீங்க பில்டிங் 12-ல வேலை பாக்குறதுனால, உங்க கிட்ட எதுவும் பேச முடியாதுன்னு சொன்னாங்க. 222 00:19:04,228 --> 00:19:07,064 ஓ, அது ஒண்னுமில்ல, அவளுக்கு அங்க வேலை கிடைக்கலன்ற பொறாமை. 223 00:19:07,898 --> 00:19:08,899 வா, போலாம். 224 00:19:10,234 --> 00:19:11,735 அந்த டிவிய கொஞ்சம் ஆஃப் பண்றியா? 225 00:19:17,616 --> 00:19:20,118 நமது தாய்நாட்டின் தலைநகரில் 226 00:19:20,202 --> 00:19:22,287 முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கூட்டத்தை ஈர்த்த 227 00:19:22,371 --> 00:19:26,375 விண்வெளி வீராங்கனை அனஸ்தாஸியா பெலிகோவா, 228 00:19:26,458 --> 00:19:29,878 இப்போது சோவியத் சோசலிச குடியரசுகளின் தலைநகரங்களுக்குத் தனது பயணத்தைத் தொடர்கிறார். 229 00:19:30,754 --> 00:19:35,133 சோவியத் யூனியனின் தொழிலாளர்கள் அவருக்கு அனைத்து இடங்களிலும் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். 230 00:19:35,217 --> 00:19:37,594 விரைவில் சக விண்வெளி வீரரைத் திருமணம் செய்யவிருக்கிறார், 231 00:19:37,678 --> 00:19:39,179 அவரது வரலாற்றுச் சாதனையை உலகப் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் 232 00:19:39,263 --> 00:19:42,432 கொண்டாடுவதற்காக அவர்கள் ஜோடியாக பாரிஸுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளனர். 233 00:19:55,237 --> 00:19:56,363 ஹலோ. 234 00:19:57,030 --> 00:19:58,031 ஹலோ! 235 00:19:58,824 --> 00:19:59,992 மாஸ்கோவிலிருந்து வாழ்த்துகள். 236 00:20:08,375 --> 00:20:09,751 இது பிரமாதமா இருக்கு. 237 00:20:10,627 --> 00:20:12,379 நான் கற்பனை செஞ்சதை விட இது ரொம்ப நல்லா இருக்கு. 238 00:20:17,301 --> 00:20:18,302 அட, கொஞ்சம் சந்தோஷமா இரு. 239 00:20:19,344 --> 00:20:21,722 உன்னைப் பாக்குறதுக்காகவே அவங்க வரிசையில நிக்கிறாங்க. பாரு. 240 00:20:25,934 --> 00:20:27,352 அனஸ்தாஸியா! 241 00:21:07,726 --> 00:21:11,063 ஸ்வெஸ்டாவை 15 மாசத்துல கட்டி முடிச்சாலே நாம அதிர்ஷ்டசாலிகள் தான். 242 00:21:11,730 --> 00:21:13,565 அதுல ஒரு பங்கு நேரத்துல நாம எப்படி இதை முடிக்க முடியும்? 243 00:21:13,649 --> 00:21:17,486 நாம பயந்து பயந்து அமெரிக்கர்களை ஜெயிக்கல. இப்போ மட்டும் எதுக்கு தயங்கணும்? 244 00:21:17,569 --> 00:21:20,697 ஆனா, இப்போ இருக்குற லூனார் மாட்யூல்களை லான்ச் பண்றதுக்கே N-1-ல போதுமான சக்தி இல்ல. 245 00:21:20,781 --> 00:21:23,075 அவற்றுல இன்னும் எதையாவது சேர்த்தா, கண்டிப்பா நம்மால லாஞ்ச் பண்ணவே முடியாது. 246 00:21:23,158 --> 00:21:24,785 நாம ஆரம்பிச்ச இடத்துக்கே திரும்ப வந்துட்டோம். 247 00:21:24,868 --> 00:21:26,870 நீ ஏன் எப்ப பாத்தாலும் இப்படி எதிர்மறையாப் பேசுற, ரெம்? 248 00:21:26,954 --> 00:21:28,872 யதார்த்தத்தைப் பேசுறது எதிர்மறை இல்ல. 249 00:21:28,956 --> 00:21:30,958 - நான்… - இன்ஃப்ளேட்டபிள் முறையை பயன்படுத்தினால்? 250 00:21:34,086 --> 00:21:35,087 நாம… 251 00:21:36,004 --> 00:21:38,799 லியோனோவ் விண்வெளியில நடந்தப்போ பயன்படுத்தின ஏர் லாக் மாதிரியே, 252 00:21:38,882 --> 00:21:41,051 நாம காத்து அடிச்சு விரிவடையுற அறைகளா அறைகளா மாத்தி 253 00:21:41,134 --> 00:21:43,512 நிலவு விண்கலத்தோட இட வசதியை அதிகப்படுத்தலாம். 254 00:21:44,137 --> 00:21:45,889 நாம தரை இறங்குனதுக்கு அப்புறம் அதை விரிவுபடுத்தினா, 255 00:21:45,973 --> 00:21:48,559 அதே லேண்டிங் முறையையே நாம பயன்படுத்தலாம். 256 00:21:49,101 --> 00:21:50,853 நம் நிலவு தளம் கூடாரம் மாதிரி இருக்கணும்றியா? 257 00:21:51,562 --> 00:21:53,355 வேற எதுக்கும் இப்போ நேரமில்லை. 258 00:21:53,438 --> 00:21:56,149 இந்த மிஷனுக்கு திரும்பவும் மூணு பேரு தேவைப்படுவாங்க. 259 00:21:56,233 --> 00:21:58,819 ரெண்டு பேரு தரைப்பகுதியில, ஒருத்தர் சுற்றுப்பாதையிலேயே இருக்கணும். 260 00:21:58,902 --> 00:22:01,113 ரெண்டு பேரை வச்சு லாஞ்ச் செய்ய உருவாக்கின விண்கலத்துல 261 00:22:01,196 --> 00:22:04,241 மூணு பேரை எப்படி அடைக்கிறதுன்னு நீங்க யோசிக்கணும், 262 00:22:04,324 --> 00:22:09,246 ஆனா, இப்போதைக்கு இத ஆரம்பிச்சிட்டு அப்புறம் என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம். 263 00:22:12,666 --> 00:22:13,917 இது ஒரு சுவாரஸ்யமான யோசனைதான். 264 00:22:14,710 --> 00:22:17,588 ஆனா நேரமாயிடுச்சு. 265 00:22:18,589 --> 00:22:19,923 நாம… 266 00:22:22,301 --> 00:22:24,136 வீட்டுக்குப் போய் நல்லாத் தூங்கிட்டு, 267 00:22:25,095 --> 00:22:26,597 திரும்ப காலையில சந்திப்போம். 268 00:24:16,248 --> 00:24:20,002 உலகப் பத்திரிகையாளர்களைச் சந்திக்குற அந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு நீங்க டிரஸ் மாத்திக்கணும். 269 00:24:20,085 --> 00:24:21,753 மாஸ்கோவுக்கு நாளைக்கு காலையில சீக்கிரமே விமானம் கிளம்பிடும், 270 00:24:21,837 --> 00:24:23,839 அப்போதான் கல்யாணத்துக்கு சரியான நேரத்துக்கு நீங்க ரோஸ்டோவுக்கு போக முடியும். 271 00:24:25,716 --> 00:24:27,551 மாஸ்கோவுல இருந்து வந்த பத்திரிகை செய்திகள் எல்லாம் அங்க இருக்கு. 272 00:24:28,343 --> 00:24:30,137 - தோழர் கலின்ஸ்கி, நான்… - நேரத்தை வீணாக்காதீங்க. 273 00:24:30,220 --> 00:24:31,680 நீங்க ஒரு நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தணும். 274 00:25:28,862 --> 00:25:30,697 - என்ன பண்ணிட்டு இருக்க? - ஒண்ணுமில்ல. 275 00:25:30,781 --> 00:25:32,824 சும்மா இந்த பெர்ஃப்யூம் பாட்டிலை ரசிச்சிட்டு இருக்கேன். 276 00:25:32,908 --> 00:25:33,909 அதைத் தொடாதே. 277 00:25:34,660 --> 00:25:37,496 ஏன் கூடாது? இதெல்லாம் பரிசுப் பொருட்கள். வேற எதுக்காக இதெல்லாம் கொடுத்திருக்காங்க? 278 00:25:48,882 --> 00:25:50,342 அந்த வாசனையை அவங்க கண்டுபிடிச்சுடுவாங்க. 279 00:25:51,552 --> 00:25:53,762 பாரிஸோட ஆடம்பரங்கள் உன்னை மயக்கிடுச்சுன்னு 280 00:25:54,763 --> 00:25:56,390 அவங்க நினைப்பாங்க. 281 00:25:56,473 --> 00:25:58,642 பாரிஸோட ஆடம்பரங்கள் என்னை மயக்கிட்டுதான் இருக்கு. 282 00:25:58,725 --> 00:26:00,060 அவங்க ஒட்டுக் கேட்டுட்டு கூட இருக்கலாம். 283 00:26:01,186 --> 00:26:02,980 நான் பெர்ஃப்யூம் போடுறேன்! 284 00:26:03,605 --> 00:26:04,898 யாரும் கண்டுக்கல, வால்யுஷ். 285 00:26:06,358 --> 00:26:07,943 இன்னைக்கு ராத்திரி நாம சும்மா ஜாலியா இருப்போம். 286 00:26:25,210 --> 00:26:26,211 கர்னல் ரஸ்கோவா. 287 00:26:36,305 --> 00:26:37,389 பாத்தியா, வால்யுஷ்? 288 00:26:37,973 --> 00:26:38,974 நீதான் தேவையில்லாம கவலைப்பட்ட. 289 00:26:40,684 --> 00:26:42,895 நாம ரெண்டு பேரும் சேர்ந்து, அந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு போலாம்னு நினைச்சேன். 290 00:26:43,645 --> 00:26:44,980 நான் இத முடிக்கணும். 291 00:26:45,063 --> 00:26:46,064 நீ என்னை விட்டுட்டு போ. 292 00:26:46,148 --> 00:26:49,067 - நான் அனஸ்தாஸியாவோட கீழே போறேன். - இல்ல இல்ல செல்லம், நான் காத்திருக்கேன். 293 00:26:49,151 --> 00:26:50,444 பரவால்ல. நீ கிளம்பு. 294 00:26:53,071 --> 00:26:54,239 சரி. 295 00:26:56,241 --> 00:26:57,284 ஆனா ரொம்ப நேரமாக்கிடாதே. 296 00:27:02,456 --> 00:27:04,249 லிஃப்ட்ல நாம ஏதாவது கருவி வச்சிருக்கோமா? 297 00:27:05,834 --> 00:27:07,377 இல்ல. இல்ல, கர்னல். 298 00:27:21,850 --> 00:27:22,893 நீ என்னை தவிர்க்கிறியா? 299 00:27:22,976 --> 00:27:24,019 நான் என் கணவர் கூட இருக்கேன். 300 00:27:25,562 --> 00:27:27,689 உன் வாசனை நல்லா இருக்கு. 301 00:27:29,608 --> 00:27:30,609 நிறுத்து. 302 00:27:32,277 --> 00:27:33,403 இன்னைக்கு ராத்திரி நாம எங்காவது போலாம். 303 00:27:34,571 --> 00:27:36,573 எனக்குப் பக்கத்துல ஒரு கிளப் பத்தித் தெரியும், அங்க அந்த இசை… 304 00:27:36,657 --> 00:27:38,659 நான் உன் கூட எங்கயும் வரமாட்டேன், சாஷா. 305 00:27:42,329 --> 00:27:43,664 அனஸ்தாஸியா விஷயத்தால இப்படி பண்றியா? 306 00:27:43,747 --> 00:27:44,873 எனக்கு வேற வழி இல்லாம போச்சு. 307 00:27:44,957 --> 00:27:45,958 எனக்கு அது தெரியும். 308 00:27:46,500 --> 00:27:47,793 அப்புறம் ஏன் நீ வருத்தமா இருக்க? 309 00:27:49,169 --> 00:27:50,838 நிஜத்துல உனக்குத்தான் கல்யாணம் ஆயிருக்கு. 310 00:27:53,757 --> 00:27:54,967 ஆமா, நீ சொல்றது சரிதான். 311 00:27:58,220 --> 00:28:00,430 ஒருவேளை இதுதான் நம்ம ரெண்டு பேருக்கும் தேவையோ என்னவோ. 312 00:28:03,141 --> 00:28:04,226 நீ அதை மனசாரச் சொல்லல. 313 00:28:22,035 --> 00:28:25,038 தோழர் பெலிகோவா, இதுவரைக்கும் இந்தச் சுற்றுலாவுல அவள் எப்படி நடந்துகொண்டாள்? 314 00:28:27,374 --> 00:28:28,792 ரொம்பச் சிறப்பாக. 315 00:28:28,876 --> 00:28:33,297 நிலவுல இருந்தப்போ அவங்க பண்ண அந்தத் தப்பான விஷயங்கள் எதையும் இங்க அவங்க பண்ணல. 316 00:28:35,215 --> 00:28:36,550 உன் கோட்டை எடுத்துக்கோ. 317 00:28:38,218 --> 00:28:40,971 - நாம எங்க போறோம்? - சரி, உனக்கு ஜெர்மன் மொழி தெரியும்னு சொன்னியே. 318 00:28:41,054 --> 00:28:43,724 உன் படிப்பு ஒரு வழியா ஒரு நல்ல காரியத்துக்கு உதவப் போகுது. 319 00:28:43,807 --> 00:28:44,933 ஜெர்மனிக்கா? 320 00:28:45,017 --> 00:28:49,021 அந்த நிலவு தளம் பத்தின திட்டங்களை தனக்கு யாரு கொடுத்தாங்கன்னு அவன் இன்னும் சொல்லல. 321 00:28:49,104 --> 00:28:53,567 ஸ்டாஸியோட இந்தத் திறமையின்மையைப் பார்த்து எனக்கு அலுத்துப் போச்சு. 322 00:28:53,650 --> 00:28:55,110 தோழர் பெலிகோவா நிலைமை? 323 00:28:55,194 --> 00:28:58,113 நீ இல்லாத நேரத்துல, கலிட்ஸின் உன் வேலைகளை பாத்துப்பான். 324 00:28:58,197 --> 00:28:59,948 சீக்கிரம் கிளம்பு, நாம விமானத்தைப் பிடிக்கணும். 325 00:29:03,827 --> 00:29:05,120 என் அன்பு நண்பர்களே… 326 00:29:06,205 --> 00:29:07,206 என் அன்பு நண்பர்களே… 327 00:29:08,790 --> 00:29:10,000 பெரியோர்களே தாய்மார்களே, 328 00:29:10,959 --> 00:29:12,544 தன்னுடைய இந்த மிகப்பெரிய சாதனையை 329 00:29:13,045 --> 00:29:14,880 நம்மோடு சேர்ந்து கொண்டாட வந்த 330 00:29:16,507 --> 00:29:20,093 அனஸ்தாஸியா பெலிகோவாவுக்கு நன்றி சொல்ல என்னோடு இணைந்திடுங்கள். 331 00:29:20,177 --> 00:29:21,595 நிலாவில் நடந்த முதல் பெண்ணைக் கௌரவிக்குறதுக்காக 332 00:29:22,221 --> 00:29:24,598 உலகெங்கிலும் இருக்குற பத்திரிகையாளர்களும் 333 00:29:25,390 --> 00:29:26,808 ஃபிரான்ஸ் மக்களும் 334 00:29:27,351 --> 00:29:30,687 இன்று இங்கே ஒன்றாக கூடியுள்ளனர். 335 00:29:49,706 --> 00:29:51,083 இதெல்லாம் சுத்த கோமாளித்தனம். 336 00:29:52,251 --> 00:29:53,836 யானாவா இருந்தா இதையெல்லாம் எப்படி சமாளிச்சிருப்பாள்னு யோசிக்குறேன். 337 00:29:54,795 --> 00:29:56,922 அவ ஒரே நாள்ல ஃபிரான்ஸையே தன் கைக்குள்ள கொண்டு வந்திருப்பா. 338 00:29:58,841 --> 00:30:00,008 ஹலோ, செல்லம். 339 00:30:03,929 --> 00:30:06,181 சரி, உன் நிச்சயதார்த்தம் எப்படிப் போகுது? இன்னும் காதல் வரலையா? 340 00:30:07,349 --> 00:30:08,350 வாய்ப்பே இல்ல. 341 00:30:08,433 --> 00:30:10,102 - அவ கூட இருக்குறதே… - இங்க பாருங்க! 342 00:30:10,185 --> 00:30:11,186 …ஒரு சித்திரவதை. 343 00:30:12,271 --> 00:30:13,564 அப்புறம் கல்யாணம். 344 00:30:23,115 --> 00:30:24,283 அனஸ்தாஸியா! 345 00:30:55,230 --> 00:30:56,481 என்னை மன்னிச்சுடுங்க. நான் கிளம்பணும். 346 00:30:57,399 --> 00:30:58,400 வழி விடுங்க. 347 00:31:24,009 --> 00:31:26,929 - சீஃப் டிசைனர். - குட் ஈவ்னிங், தோழர் நிகுலோவ். 348 00:31:31,725 --> 00:31:33,393 மன்னிச்சிடுங்க, சீஃப். 349 00:31:35,562 --> 00:31:36,647 நான் உள்ள வரலாமா? 350 00:31:37,481 --> 00:31:38,732 தாராளமா! வாங்க. 351 00:31:43,153 --> 00:31:46,240 என்னை மன்னிச்சிடு. நீ யாருக்காவது காத்திருக்கியா? 352 00:31:47,908 --> 00:31:48,909 இல்ல. 353 00:32:14,726 --> 00:32:18,021 எனக்கு… எனக்குத் தெரியும் ஃபியோடோரோவ் இப்போ… 354 00:32:19,606 --> 00:32:20,607 வந்து… 355 00:32:22,234 --> 00:32:23,277 தடை செய்யப்பட்டவர். 356 00:32:26,029 --> 00:32:27,614 நான் உங்களுக்கு என்ன செய்யணும், சீஃப்? 357 00:32:27,698 --> 00:32:29,449 லூனா 16 மிஷன் அப்போ, 358 00:32:30,117 --> 00:32:34,663 எஸ்-பேண்ட் ஆண்டெனா அனஸ்தாஸியாவுக்கு எட்டும் தூரத்துலதான் இருக்கும்னு உனக்கு எப்படி தெரிஞ்சது? 359 00:32:34,746 --> 00:32:37,291 வந்து, நான் திட்டங்களை மனப்பாடம் செஞ்சு வச்சிருந்தேன். 360 00:32:37,374 --> 00:32:41,920 ஆனா விண்கலத்தை ஒன்னா சேர்க்குற கடைசி நேரத்துல ஆண்டெனா இருக்குற இடத்தை நாங்க மாத்திட்டோமே. 361 00:32:42,004 --> 00:32:43,172 ஆமா, 362 00:32:43,255 --> 00:32:46,049 அதுமட்டுமில்லாம பைகோனூர்ல இருந்து வர்ற இன்ஜினியரிங் அறிக்கைகளையும் நான் படிச்சேன். 363 00:32:46,133 --> 00:32:50,596 அது ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஆவணங்களாச்சே. அது… 364 00:32:50,679 --> 00:32:52,890 எனக்கு நிறைய நேரம் மிச்சமிருக்கு. 365 00:32:52,973 --> 00:32:53,974 சரி. 366 00:32:58,187 --> 00:32:59,521 சரி. 367 00:33:00,355 --> 00:33:02,357 இது ஒரு அழகான மாலைப்பொழுது, செர்கே. 368 00:33:04,776 --> 00:33:05,986 நாம கொஞ்சம் நடந்துட்டு வரலாமா? 369 00:33:58,664 --> 00:34:00,958 சில நேரத்துல நான் மேல போகாமலே இருந்திருக்கலாம்னு தோணுது. 370 00:34:03,752 --> 00:34:04,753 நீ என்ன சொல்ற? 371 00:34:06,630 --> 00:34:07,923 நிலவோட மேற்பரப்புல இருக்குறப்போ… 372 00:34:11,051 --> 00:34:12,344 அங்க எந்தச் சத்தமும் இருக்காது. 373 00:34:13,178 --> 00:34:14,596 வெறும் அமைதி மட்டும் தான் இருக்கும். 374 00:34:17,516 --> 00:34:20,476 ஒரு வழியா என்னால நிம்மதியா மூச்சு விட முடியுற மாதிரி இருந்தது. 375 00:34:27,067 --> 00:34:28,610 கடவுள் உன்னைத் தண்டிக்கணும்னு நினைச்சா… 376 00:34:30,654 --> 00:34:33,824 உன்னைச் சந்தோஷமா இருக்க வைப்பார்னு எங்க தாத்தா சொல்லுவாரு. 377 00:34:53,260 --> 00:34:54,803 உனக்கு இங்கிருந்து கிளம்பணுமா? 378 00:35:02,477 --> 00:35:04,021 ஷாம்பெயின் அவ மண்டையில ஏறிடுச்சு. 379 00:35:21,830 --> 00:35:24,041 நான் அவளைப் பத்திரமா அறைக்கு கூட்டிட்டு போய் விடுறேன், சரியா? 380 00:36:22,266 --> 00:36:23,392 நாம எங்க போறோம்? 381 00:36:24,601 --> 00:36:25,602 இந்தப் பக்கம் வா! 382 00:37:15,485 --> 00:37:16,486 அவரைப் போகச் சொல்லு. 383 00:37:18,572 --> 00:37:20,616 நன்றி. நீங்க போகலாம். 384 00:37:22,659 --> 00:37:24,912 நான் அவன்கிட்ட சொல்றதையும், அவன் சொல்ற பதிலயும் 385 00:37:24,995 --> 00:37:26,121 நீ அப்படியே மொழிபெயர்க்கணும். 386 00:37:26,205 --> 00:37:29,124 எந்தக் குழப்பமும் இருக்கக் கூடாது. புரியுதா? 387 00:37:29,208 --> 00:37:30,250 புரியுது. 388 00:37:44,765 --> 00:37:47,017 அவ அந்த பெரும் தேசபக்தி போர்ல சண்டை போட்டானான்னு கேளு. 389 00:37:49,686 --> 00:37:52,773 நீங்க அந்த பெரும் தேசபக்தி போர்ல சண்டை போட்டீங்களா? 390 00:37:56,944 --> 00:37:59,112 நான் குர்ஸ்க் போர்முனையில இருந்தேன். 391 00:38:03,200 --> 00:38:05,077 அவர் குர்ஸ்க் போர்முனையில இருந்தாராம். 392 00:38:07,120 --> 00:38:09,540 நாங்க சந்திப்பது இது முதல் முறை இல்லன்னு அவர்கிட்ட சொல்லு. 393 00:38:10,791 --> 00:38:15,420 நீங்க சந்திப்பது இது முதல் முறை இல்லன்னு இவங்க சொல்றாங்க. 394 00:38:19,258 --> 00:38:21,343 இந்தத் தடவையாவது உனக்குச் சாதகமா நடக்கும்னு நம்புவோம். 395 00:38:49,288 --> 00:38:50,289 சீஃப். 396 00:38:56,044 --> 00:38:57,045 வா. 397 00:39:10,976 --> 00:39:11,977 இதெல்லாம் என்ன? 398 00:39:14,104 --> 00:39:15,355 பழைய மிஷன்களோட… 399 00:39:17,566 --> 00:39:18,817 ஆவிகள். 400 00:39:20,360 --> 00:39:21,778 வாஷ்கோட். 401 00:39:24,823 --> 00:39:25,824 வோஸ்டோக். 402 00:39:28,660 --> 00:39:29,661 சோயுஸ். 403 00:39:39,338 --> 00:39:40,923 ஆனா நாம இதுங்களுக்குத் திரும்பவும் உயிர் கொடுக்க முடியும். 404 00:39:43,050 --> 00:39:44,551 ஃபியோடோரோவ் சொன்ன மாதிரி. 405 00:39:46,803 --> 00:39:49,806 சாகாவரம், செர்கே. 406 00:39:52,017 --> 00:39:54,019 கடைசி எதிரி மேல அடையுற வெற்றி இது. 407 00:39:58,815 --> 00:40:00,108 ப்ரெஷ்நேவ்வுக்கும் அந்த கமிட்டிக்கும் 408 00:40:00,192 --> 00:40:02,903 நிலவுல கொடியை நடுறதுலயும், 409 00:40:02,986 --> 00:40:05,364 ஒரு கைப்பிடி மண்ணுக்காகச் சண்டை போடுறதுலயும் தான் ஆர்வம். 410 00:40:06,698 --> 00:40:08,116 நிஜமாவே நாம… 411 00:40:09,284 --> 00:40:12,120 இந்த பிரபஞ்சத்தைப் பத்தியும், எல்லையற்ற தன்மையைப் பத்தியும்… 412 00:40:12,829 --> 00:40:14,665 சாகாவரத்தைப் பத்தியும் தெரிஞ்சுக்கணும்னு நினைச்சா… 413 00:40:17,876 --> 00:40:19,378 நாம இதோட நிறுத்தக்கூடாது. 414 00:40:25,509 --> 00:40:26,552 வீனஸ். 415 00:40:26,635 --> 00:40:27,636 ஆமா. 416 00:40:30,848 --> 00:40:32,224 ஆனா ப்ரெஷ்நேவ்? 417 00:40:32,307 --> 00:40:35,978 சரியான நேரம் வரும்போது அவரை இதுக்குச் சம்மதிக்க வைக்க முடியும். 418 00:40:37,980 --> 00:40:40,566 அதுவரைக்கும், நாம இத ரகசியமாத்தான் செய்யணும். 419 00:40:42,526 --> 00:40:45,237 நாம இங்க என்ன பண்றோம்னு ஒரு சிலருக்கு மட்டும் தான் தெரியணும். 420 00:40:45,320 --> 00:40:46,822 நாம இத எப்படி… 421 00:40:47,823 --> 00:40:51,243 இது மாதிரி ஒரு முயற்சிக்கு நிறைய வசதிகள் தேவைப்படுமே. 422 00:40:51,326 --> 00:40:53,120 நான் கேக்குற எல்லாத்தையும் அவங்க கொடுப்பாங்க, 423 00:40:53,203 --> 00:40:55,455 ஆனா அது நிலவு தளத்துக்காகத்தான்னு அவங்க நம்பற வரைக்கும். 424 00:40:58,375 --> 00:41:01,879 உங்களுக்குத் தெரிஞ்ச இன்னும் நிறைய சீனியர் இன்ஜினியர்ஸ் இருப்பாங்களே… 425 00:41:02,713 --> 00:41:03,714 அவங்களை இதுல சேர்த்துக்கலாமே. 426 00:41:03,797 --> 00:41:06,550 - நான் சரியான ஆளா இருப்பேன்னு தோணல. - உன்னை நீயே குறைச்சு மதிப்பிடாத, செர்கே. 427 00:41:06,633 --> 00:41:07,676 உன்கிட்ட அந்தத் துடிப்பு இருக்கு. 428 00:41:09,720 --> 00:41:11,638 அப்புறம் எதையும் ஏத்துக்கிற மனப்பக்குவம் இருக்கு. 429 00:41:12,472 --> 00:41:13,640 ஆனா நீ சம்மதிக்கிறதுக்கு முன்னாடி 430 00:41:13,724 --> 00:41:19,354 ஒன்னைப் புரிஞ்சுக்கணும், நீ மத்தியக் குழுவோட நேரடி உத்தரவை மீறுற, 431 00:41:19,438 --> 00:41:22,191 அதுமட்டுமில்லாம அரசு சொத்தைத் தவறா பயன்படுத்துற. 432 00:41:25,652 --> 00:41:27,112 ஒருவேளை இத கண்டுபிடிச்சாங்கன்னா… 433 00:41:29,406 --> 00:41:31,825 அதோட விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும். 434 00:41:37,539 --> 00:41:38,665 நாம எப்போ தொடங்கணும்? 435 00:41:40,834 --> 00:41:42,044 இப்பவே. 436 00:41:50,219 --> 00:41:51,345 இதுதான்னு நினைக்கிறேன். 437 00:41:59,728 --> 00:42:00,771 நான் என்ன சொன்னேன்? 438 00:42:01,730 --> 00:42:03,065 போ ரேவ் 439 00:42:05,651 --> 00:42:06,777 வா, போலாம். 440 00:42:08,987 --> 00:42:11,490 - சாஷா! சாஷா! - எனக்கு நீ பேசுறது கேக்கல. 441 00:42:11,573 --> 00:42:12,741 நீ பேசுறது கேக்கல, மன்னிச்சிடு. 442 00:42:29,925 --> 00:42:30,926 ஸ்தாஸியா. 443 00:42:45,983 --> 00:42:46,984 இந்தா. 444 00:42:47,734 --> 00:42:50,445 - சாஷா, இது தப்பான யோசனைன்னு தோணுது. - ஒரே ஒரு ட்ரிங்க் தான். 445 00:42:50,529 --> 00:42:52,239 உனக்கு இங்கிருந்து போகணும்னா, நான் உன்னைக் கூட்டிட்டுப் போறேன், 446 00:42:52,322 --> 00:42:54,700 அப்புறம் ஆர்க்காடி வந்து உன்னைத் தூங்க வைப்பாரு. 447 00:43:03,083 --> 00:43:04,960 வாலியா, என் பெர்ஃப்யூமை பாத்தியா? 448 00:43:09,131 --> 00:43:10,382 வாலியா? 449 00:43:21,268 --> 00:43:23,437 - வாலியா? - எனக்கு யோசனையாவே இருக்கு… 450 00:43:24,521 --> 00:43:27,274 இன்னைக்கு ராத்திரி யானாவை தான் இங்க எல்லாரும் கொண்டாடியிருக்கணும். 451 00:43:27,357 --> 00:43:28,650 அவ அதுக்குத் தகுதியானவள். 452 00:43:28,734 --> 00:43:30,194 அவ ரொம்ப விசேஷமானவள். 453 00:43:33,530 --> 00:43:36,200 பயிற்சி ஆரம்பிச்ச அந்த நிமிஷமே அது எங்களுக்குத் தெரியும். 454 00:43:37,075 --> 00:43:38,327 அது வந்து… 455 00:43:38,410 --> 00:43:40,746 கேளுங்க, நீங்க ரொம்ப நல்லவர். 456 00:43:41,830 --> 00:43:43,332 அதனாலதான் நான் உங்களைக் காதலிச்சேன். 457 00:43:44,583 --> 00:43:46,084 ஆனா உன்னால வேற எதுவும் செஞ்சிருக்க முடியாது. 458 00:44:50,816 --> 00:44:52,734 பின்னால போங்க. கொஞ்சம் இடம் விடுங்க. 459 00:44:53,527 --> 00:44:55,153 அனஸ்தாஸியா, இது உனக்காக. 460 00:45:05,831 --> 00:45:07,791 ஹே! ஹே! 461 00:45:40,490 --> 00:45:43,118 இன்னைக்கு ராத்திரி முழுக்க உங்ககிட்ட பேச சரியான நேரத்துக்காக காத்திருந்தேன். 462 00:45:45,162 --> 00:45:47,456 வழக்கமா இப்படிப் பொது இடத்துல நான் யாரையும் அணுக மாட்டேன், 463 00:45:47,539 --> 00:45:50,709 ஆனா மத்தவங்க கண்ணுல படாம உங்களை நெருங்குறது ரொம்பக் கஷ்டமா இருக்கு. 464 00:45:55,923 --> 00:45:57,424 உங்க நாட்டுல நீங்க சந்தோஷம் இல்லன்னா… 465 00:45:59,343 --> 00:46:00,802 நாங்க உங்களை வெளிய கூட்டிட்டு போயிடுவோம். 466 00:46:04,097 --> 00:46:05,349 நீங்க என்ன சொல்றீங்க? 467 00:46:07,809 --> 00:46:10,812 அமெரிக்கர்கள், அவங்ககிட்ட உங்களுக்காக ஒரு இடம் இருக்கு. 468 00:46:17,402 --> 00:46:19,112 இல்ல. 469 00:46:19,821 --> 00:46:21,990 நான் ஒருபோதும் என் நாட்டுக்கு துரோகம் பண்ண மாட்டேன். 470 00:46:32,501 --> 00:46:33,836 ஒருவேளை உங்க மனசு மாறினா, இது தேவைப்படும். 471 00:46:52,479 --> 00:46:56,191 - உனக்கு ஒண்ணுமில்லயே? - இல்ல. திடீர்னு ஒரு மாதிரி களைப்பா இருக்கு. 472 00:47:10,789 --> 00:47:12,207 கிளம்ப வேண்டிய நேரம் வந்துடுச்சுன்னு நினைக்கிறேன். 473 00:47:13,166 --> 00:47:14,501 சரி. 474 00:47:25,304 --> 00:47:28,891 அமெரிக்கர்களிடம் கொடுக்குறதுக்காக 475 00:47:28,974 --> 00:47:30,767 உங்ககிட்ட அந்த ஆவணங்களைக் கொடுத்தது யாரு? 476 00:47:30,851 --> 00:47:32,895 நான் எத்தனை முறை இதைச் சொல்றது? 477 00:47:33,687 --> 00:47:35,480 வோக்ஸ்பார்க் ஃப்ரீட்ரிச்ஷைன்ல இருக்குற 478 00:47:35,564 --> 00:47:40,068 ஒரு மறைவிடத்துல இருந்துதான் எல்லா ஆவணங்களையும் எடுத்தேன்னு நான் ஒத்துக்கிறேன். 479 00:47:40,152 --> 00:47:42,946 நான் மேற்கு பெர்லினுக்குப் போனதும், 480 00:47:43,030 --> 00:47:48,827 பார்ன்ஹோமர் சாலையில இருக்குற ஒரு குப்பைத் தொட்டியில அந்த உறையைப் போட்டுட்டேன். 481 00:47:50,037 --> 00:47:52,873 அவர் ஒவ்வொரு முறையும் சொல்ற அதே விஷயத்தைத்தான் அப்படியே சொல்றார். 482 00:47:53,498 --> 00:47:54,666 எந்த மாற்றமும் இல்ல. 483 00:47:59,713 --> 00:48:00,714 காஃபி வேணுமா? 484 00:48:05,260 --> 00:48:06,762 வேணாமா? வருத்தம்தான். 485 00:48:09,264 --> 00:48:10,849 பெர்லின் ரொம்ப அழகான ஒரு நகரம். 486 00:48:12,643 --> 00:48:14,686 நான் முதல் முறையா இங்க வந்தப்போ, 487 00:48:15,270 --> 00:48:18,106 ஃப்ரீட்ரிச் சாலை வழியா டி-34 டேங்க்கை ஓட்டிட்டு போனது ஞாபகம் இருக்கு. 488 00:48:18,190 --> 00:48:20,234 நான் முதல் முறையா வந்தப்போ வந்தப்போ. 489 00:48:20,317 --> 00:48:21,610 ஆரம்பத்துல மெதுவாத்தான் போனோம், 490 00:48:21,693 --> 00:48:23,987 ஏன்னா நாஜிகளோட பிணங்கள் அங்கங்க சிதறிக் கிடந்தது. 491 00:48:24,071 --> 00:48:27,908 ஃப்ரீட்ரிச் சாலை வழியா டி-34 டேங்க்கை ஓட்டிட்டு போனது ஞாபகம் இருக்கு. 492 00:48:28,700 --> 00:48:30,702 - ஆரம்பத்துல மெதுவாத்தான் போனோம்… - என்ன? 493 00:48:32,996 --> 00:48:34,998 …நாஜிகளோட பிணங்கள் அங்கங்க சிதறிக் கிடந்தது. 494 00:48:35,082 --> 00:48:36,625 பத்து நிமிஷத்துல வந்துடுறேன். 495 00:48:36,708 --> 00:48:40,546 அதுக்குள்ள அவன் பெயரைச் சொல்லலன்னா, நான் அவனோட தலையிலேயே சுட்டுடுவேன். 496 00:49:04,319 --> 00:49:09,283 உங்ககிட்ட அந்த ஆவணங்களைக் கொடுத்தது யாரு? 497 00:49:12,494 --> 00:49:14,538 எனக்கு எதுவும் தெரியாது. 498 00:49:40,564 --> 00:49:43,108 நான்… இன்னைக்கு ராத்திரி உன்னைப் பத்தி ஒன்னு புரிஞ்சுக்கிட்டேன். 499 00:49:44,776 --> 00:49:47,154 நீ நிஜமாவே ஒரு மோசமான டான்சர். 500 00:49:57,122 --> 00:49:59,875 அவங்க திரும்பி வந்துட்டாங்க. இப்பவே அவங்களைக் கைது பண்ணலாமா? 501 00:49:59,958 --> 00:50:01,126 வேணாம். 502 00:50:02,294 --> 00:50:03,921 நான் தோழர் டுகோர்னோ கிட்ட பேசணும். 503 00:50:16,433 --> 00:50:17,601 என்ன ஆச்சு? 504 00:50:17,684 --> 00:50:20,771 நான் அவகிட்ட பேசிட்டேன். பெலிகோவாவைப் பத்தி நீங்க கவலைப்படத் தேவையில்லை. 505 00:50:20,854 --> 00:50:22,648 - அவ விசுவாசமானவள் தான். - நல்லது. 506 00:50:42,626 --> 00:50:43,710 நான் சொல்றதக் கேளுங்க. 507 00:50:43,794 --> 00:50:46,547 அவங்க வர்றதுக்கு முன்னாடி உங்களுக்குத் தெரிஞ்சதைச் சொல்லிடுங்க. 508 00:50:46,630 --> 00:50:48,757 அவங்களால என்ன பண்ண முடியும்னு நான் பாத்திருக்கேன். 509 00:50:48,841 --> 00:50:50,634 எனக்குத் தெரியாத ஒன்னை நான் எப்படிச் சொல்ல முடியும்? 510 00:50:50,717 --> 00:50:55,222 அவங்க வர்றதுக்கு முன்னாடி அந்த திட்டங்களை உங்ககிட்ட கொடுத்தது யாருன்னு நீங்க சொல்லியே ஆகணும். 511 00:50:55,889 --> 00:50:57,391 அது உங்க நல்லதுக்குத்தான். 512 00:51:06,483 --> 00:51:08,151 நீ ஒரு நல்ல மனுஷி. 513 00:51:08,235 --> 00:51:09,528 நீ ஒரு நல்ல மனுஷி. 514 00:51:09,611 --> 00:51:11,822 இந்த ஸ்டாஸி பன்றிகளை விட நீ எவ்வளவோ மேலானவள். 515 00:51:12,531 --> 00:51:15,325 - எனக்கு உதவி பண்ணு. - வேற என்ன பண்ண முயற்சி பண்றேன்னு நினைக்குறீங்க? 516 00:51:15,951 --> 00:51:17,953 பெயரைச் சொல்லுங்க, நான் உதவி பண்றேன்! 517 00:51:18,036 --> 00:51:19,329 எனக்குத் தெரியாது. 518 00:51:32,759 --> 00:51:34,511 பெயரைச் சொல்லுங்க. 519 00:51:35,137 --> 00:51:36,930 எனக்குத் தெரியாது. 520 00:51:41,310 --> 00:51:42,644 இல்ல. வேணாம். 521 00:51:58,076 --> 00:52:00,037 பெயரைச் சொல்லுங்க! 522 00:52:00,579 --> 00:52:02,706 பெயரைச் சொல்லுங்க! 523 00:52:03,207 --> 00:52:05,042 பெயரைச் சொல்லுங்க! 524 00:52:05,125 --> 00:52:08,045 அவன் ரைக்கஸ்டிராஸ் சாலையில இருக்கான்! 525 00:52:08,795 --> 00:52:11,673 எனக்கு வேற எதுவும் தெரியாது! 526 00:52:11,757 --> 00:52:14,635 என்னால எல்லையைத் தாண்டி பொருட்களைக் கொண்டு போக மட்டும்தான் முடியும். 527 00:52:14,718 --> 00:52:18,680 ஸ்டார் சிட்டிக்குள்ள எதையும் கொண்டு வர என்னால முடியாதுன்னு நான் அவன்கிட்ட சொல்லிட்டேன். 528 00:52:20,390 --> 00:52:24,978 ஸ்டார் சிட்டிக்குள்ள எதையாவது கொண்டு வர்றதுன்னா என்ன அர்த்தம்? 529 00:52:27,022 --> 00:52:28,857 …ஸ்டார் சிட்டிக்குள்ளயா? 530 00:52:29,525 --> 00:52:31,276 நீங்க அப்படித்தான் சொன்னீங்க. 531 00:52:31,360 --> 00:52:34,279 இல்ல. நான் சொல்லல. நான் சொல்லல. 532 00:52:34,363 --> 00:52:37,449 அவங்க உங்களை எதை ஸ்டார் சிட்டிக்குள்ள கொண்டு வரச் சொன்னாங்க? 533 00:52:38,700 --> 00:52:40,994 சத்தியமா, அப்படி ஒண்ணும் நடக்கவே இல்ல! 534 00:52:41,078 --> 00:52:43,372 அப்படி நடக்கவே இல்ல! 535 00:52:43,455 --> 00:52:45,290 சூப்பர், தோழரே. 536 00:52:59,012 --> 00:53:02,850 அவங்க எதை கடத்திட்டு வரணும்னு என்கிட்ட சொல்லவே இல்ல. 537 00:53:02,933 --> 00:53:04,476 சத்தியமாச் சொல்றேன். 538 00:53:05,602 --> 00:53:09,356 ப்ளீஸ், என் மனைவி… 539 00:53:13,402 --> 00:53:18,115 ப்ளீஸ், அவளுக்கு இது எதப் பத்தியும் தெரியாது… 540 00:53:21,952 --> 00:53:23,370 கவலைப்படாதே. 541 00:53:25,455 --> 00:53:28,917 உன் மனைவி 542 00:53:30,002 --> 00:53:33,463 இனி உன்னைப் பார்க்கப் போறதே இல்ல. 543 00:54:04,369 --> 00:54:05,537 அப்புறம் இன்னொன்னு. 544 00:54:06,747 --> 00:54:07,748 அது போதும். 545 00:54:08,916 --> 00:54:09,917 உங்களோட உறுதிமொழிகள். 546 00:54:11,543 --> 00:54:13,253 இதுல குறிப்பா இந்த இடம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. 547 00:54:13,337 --> 00:54:15,214 "அன்பு, புரிதல், மரியாதையின் அடிப்படையில் உருவானது." 548 00:54:21,678 --> 00:54:23,013 ஹலோ, அப்பா. 549 00:54:25,182 --> 00:54:26,225 நாஸ்டியா. 550 00:54:31,855 --> 00:54:34,566 ரெட் ஸ்கொயர்ல நடந்த அணிவகுப்புல நாங்க உங்களை மிஸ் பண்ணோம். 551 00:54:36,443 --> 00:54:38,779 நீ பேசும்போது நிமிர்ந்து நின்னு பேசணும். 552 00:54:41,323 --> 00:54:44,117 இவர்தான் அலெக்சாண்டர் டிமிட்ரியாவிச் பொலிவானோவ். 553 00:54:45,410 --> 00:54:47,412 தோழர் பெலிகோவ், உங்களைச் சந்திச்சதுல சந்தோஷம். 554 00:54:48,580 --> 00:54:50,666 அப்புறம் தயவுசெஞ்சு என்னை சாஷான்னே கூப்பிடுங்க. 555 00:54:53,502 --> 00:54:55,212 அப்போ நீதான் என் நாஸ்டியாவை கல்யாணம் பண்ணிக்கப் போறியா? 556 00:54:57,923 --> 00:54:59,132 ஆமா. 557 00:55:12,604 --> 00:55:14,147 நாம ஹாலுக்கு நடந்து போகணும். 558 00:55:14,648 --> 00:55:17,150 வாங்க, தோழர் பொலிவானோவ். உங்க இடத்துக்குப் போற நேரமாயிடுச்சு. 559 00:55:32,124 --> 00:55:34,042 நாம இதப் பண்ணனும்னு அவசியம் இல்ல. 560 00:55:35,961 --> 00:55:36,962 நீ என்ன சொல்ல வர்ற? 561 00:55:39,214 --> 00:55:40,215 கல்யாணம் பண்ணிக்கிறதை. 562 00:55:43,302 --> 00:55:45,012 ஆமா, ஆனா நாம பண்ணலன்னா, நாம… 563 00:55:45,095 --> 00:55:46,096 அப்படின்னா பண்ணிக்க வேணாம். 564 00:55:48,515 --> 00:55:49,725 சாஷா, வா. 565 00:56:22,508 --> 00:56:24,134 அதோ என் கழுகு வந்துடுச்சு. 566 00:56:25,135 --> 00:56:26,136 சீஃப். 567 00:56:26,678 --> 00:56:27,679 ஹாய். 568 00:56:29,765 --> 00:56:31,808 - நீ நல்லா இருக்கியா? - ஆமா. சும்மா ஒரு… 569 00:56:31,892 --> 00:56:32,893 பதட்டம். 570 00:56:33,894 --> 00:56:35,229 எங்க கல்யாண நாள் அன்னைக்கு இவரும் இப்படித்தான் இருந்தாரு. 571 00:56:35,312 --> 00:56:38,148 தேன்நிலவுக்காக பெலோயே ஏரிக்கரையில இருக்குற 572 00:56:38,232 --> 00:56:40,025 என் பண்ணை வீட்டை நீ பயன்படுத்திக்கலாம். 573 00:56:40,567 --> 00:56:41,568 நன்றி, சீஃப். 574 00:56:41,652 --> 00:56:43,612 ஆனா அது ரொம்ப குறுகிய காலம்தான், சாஷா. 575 00:56:43,695 --> 00:56:47,574 உன் பயிற்சியை ஆரம்பிக்க நீ ஸ்டார் சிட்டிக்குத் திரும்ப வர வேண்டியிருக்கும். 576 00:56:48,575 --> 00:56:49,701 விலாடிமிர். எப்படி இருக்கீங்க? 577 00:56:49,785 --> 00:56:51,703 - எப்படி இருக்கீங்க? - மனைவி எப்படி இருக்காங்க? 578 00:57:54,099 --> 00:57:57,311 அனஸ்தாஸியா விலாடிமிரோவ்னா பெலிகோவா மற்றும் அலெக்சாண்டர் டிமிட்ரியாவிச் பொலிவானோவ் 579 00:57:57,394 --> 00:58:01,064 ஆகியோரின் திருமணத்தை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்ய 580 00:58:01,148 --> 00:58:04,860 - நாம் இங்கே கூடியிருக்கிறோம். - அவ திரும்பவும் எப்போ விண்வெளிக்கு போவா? 581 00:58:06,236 --> 00:58:07,321 அவ போக மாட்டா. 582 00:58:07,404 --> 00:58:08,405 அவ… 583 00:58:09,907 --> 00:58:11,783 நாட்டுக்கு ரொம்ப முக்கியமான பொக்கிஷம். 584 00:58:11,867 --> 00:58:14,453 தோழர் பொலிவானோவ், உங்கள் திருமண உறுதிமொழிகளை சொல்லத் தயாரா? 585 00:58:14,536 --> 00:58:16,496 அவகிட்ட இதைச் சொல்ல எனக்கு மனசு வரல. 586 00:58:18,290 --> 00:58:21,418 அலெக்சாண்டர் டிமிட்ரியாவிச் பொலிவானோவ் எனும் நான்… 587 00:58:23,962 --> 00:58:25,756 என் குடும்பம், 588 00:58:25,839 --> 00:58:29,426 நண்பர்கள் மற்றும் சோவியத் அரசின் முன்னிலையில், 589 00:58:29,510 --> 00:58:33,388 அனஸ்தாஸியா விலாடிமிரோவ்னா பெலிகோவா எனும் உன்னை, 590 00:58:33,472 --> 00:58:35,224 அன்பு, புரிதல் மற்றும் 591 00:58:35,307 --> 00:58:37,684 மரியாதையின் அடிப்படையில் உருவான இந்தச் சமத்துவமான உறவில்… 592 00:58:39,895 --> 00:58:42,064 என் சட்டப்பூர்வமான மனைவியாக ஏற்றுக்கொள்கிறேன். 593 00:58:44,441 --> 00:58:48,362 தோழர் பெலிகோவா, உங்கள் திருமண உறுதிமொழிகளை சொல்லத் தயாரா? 594 00:59:07,339 --> 00:59:11,510 அனஸ்தாஸியா விலாடிமிரோவ்னா பெலிகோவா எனும் நான், 595 00:59:13,095 --> 00:59:15,597 என் குடும்பம், நண்பர்கள் மற்றும் சோவியத் அரசின் முன்னிலையில், 596 00:59:15,681 --> 00:59:19,268 அன்பு, மரியாதை மற்றும் புரிதலின் அடிப்படையில் 597 00:59:19,351 --> 00:59:22,312 இந்தச் சமத்துவமான உறவில், 598 00:59:23,105 --> 00:59:24,773 அலெக்சாண்டர் டிமிட்ரியாவிச் பொலிவானோவ் எனும் உங்களை 599 00:59:26,358 --> 00:59:33,323 என் சட்டப்பூர்வமான கணவராக ஏற்றுக்கொள்கிறேன். 600 00:59:42,833 --> 00:59:44,251 நமக்கு ஒரு பெரிய அச்சுறுத்தல் இருக்கு. 601 00:59:45,377 --> 00:59:48,172 பாதுகாப்பு நிலை லெவல் ஒன்னுக்கு உயர்த்தப்பட்டிருக்கு. 602 00:59:49,173 --> 00:59:52,926 ஒவ்வொருத்தரும் ஒரு செயலை செய்யறதுக்கு முன்னாடியே அவங்க என்ன செய்யப் போறாங்கன்னு எனக்குத் தெரியணும். 603 00:59:54,469 --> 00:59:58,473 ஒவ்வொருத்தரும் ஒரு விஷயத்தைப் பேசுறதுக்கு முன்பே அவங்க என்ன பேசப்போறாங்கன்னு எனக்குத் தெரியணும். 604 01:00:00,434 --> 01:00:05,814 ஒவ்வொருத்தரும் ஒரு விஷயத்த யோசிக்கிறதுக்கு முன்பே அவங்க என்ன யோசிக்கிறாங்கன்னு எனக்குத் தெரியணும். 605 01:00:07,566 --> 01:00:09,735 ஸ்டார் சிட்டி இப்போ போர்முனையில இருக்கு. 606 01:00:11,195 --> 01:00:12,196 அதனால… 607 01:00:13,780 --> 01:00:14,781 வேலையை ஆரம்பிக்கலாம். 608 01:01:43,787 --> 01:01:45,789 வசனங்கள் மொழிபெயர்ப்பு மேனகா மணிகண்டன்