1 00:00:12,888 --> 00:00:16,308 ஜெனரல் கான்ஸ்டான்டின் ஃபிலோனோவ் லுபியான்காவுக்கான நிலை அறிக்கை. 2 00:00:17,059 --> 00:00:21,313 இரண்டாவது இயக்குநரகத்தின் உத்தரவுப்படி, விண்வெளித் திட்டத்தின் கவனம் 3 00:00:21,396 --> 00:00:23,732 பூமியின் சுற்றுப்பாதையோடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 4 00:00:24,316 --> 00:00:28,987 கடந்த கோடையில் பயிற்சி விபத்தில் மூன்று விண்வெளி வீரர்கள் சோகமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, 5 00:00:29,071 --> 00:00:33,158 ஸ்டார் சிட்டி மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட முடிவு இது. 6 00:00:35,994 --> 00:00:39,373 அறிவியல் ஆராய்ச்சி என்ற போர்வையில், புதிய விண்வெளி நிலையமான சாலியுட்-1 மூலம் 7 00:00:39,456 --> 00:00:43,627 சேகரிக்கப்படும் உளவுத் தகவல்கள், மிகவும் விலைமதிப்பற்றவை என நிரூபணமாகியுள்ளன. 8 00:00:48,423 --> 00:00:51,426 இதற்கு முன்பு வான்வழி கண்காணிப்புக்கு எட்டாத 9 00:00:51,510 --> 00:00:54,847 மேற்கத்திய ராணுவ நிலைகள் இப்போது முழுமையாகக் கண்காணிக்கப்படுகின்றன. 10 00:00:56,932 --> 00:01:01,019 ICBM சைலோக்கள், வான் பாதுகாப்புகள் மற்றும் 11 00:01:01,103 --> 00:01:05,941 முக்கிய அணுஆயுதத் திறன்களைக் கவனிக்கும் சாலியுட்டின் திறன் நாட்டிற்கு மிக முக்கியமானது. 12 00:01:09,194 --> 00:01:10,654 இந்தத் திட்டத்திற்குத் தேவையான ஆதரவை 13 00:01:10,737 --> 00:01:12,823 பொதுச் செயலாளர் ப்ரெஷ்நேவ் கொடுக்கும் வரை 14 00:01:12,906 --> 00:01:15,659 இந்தக் கண்காணிப்பு தொடரும். 15 00:01:16,660 --> 00:01:21,123 மேலும் சீஃப் டிசைனரின் நேரடி மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் இது நடக்கும். 16 00:01:24,251 --> 00:01:26,086 அவர் கேட்ட உளவுத் துறை அறிக்கைகள் இதோ. 17 00:01:26,170 --> 00:01:27,546 அவர் உங்களுக்காகக் காத்திருக்கிறார். 18 00:01:30,591 --> 00:01:33,218 சாலியுட் கண்காணிப்புத் திட்டம் குறித்த சமீபத்திய தகவல்கள். 19 00:01:33,302 --> 00:01:34,845 நன்றி, தோழர் கர்னல். 20 00:01:49,151 --> 00:01:50,194 அவ்வளவுதான், நீங்க கிளம்பலாம். 21 00:02:03,624 --> 00:02:06,210 சீஃப் டிசைனர் ராடிமிர் செர்கேவிச் பெட்ரோவ்ஸ்கி 22 00:04:12,211 --> 00:04:13,504 நிகுலோவ். 23 00:04:15,255 --> 00:04:17,966 அடுத்த சாலியுட் பேலோடுக்கு இன்னும் கூடுதல் 100 கிலோ ஏறுது, 24 00:04:18,050 --> 00:04:21,011 லோட் பகுப்பாய்வை இன்னைக்குள்ள ரீ-டூ பண்ணனும்னு பைகோனூர் கேக்குறாங்க. 25 00:04:21,094 --> 00:04:23,931 இல்ல, நான் ஏற்கனவே புதிய N-1 பூஸ்டருக்காக, த்ரஸ்ட் சமன்பாடுகள்ல 26 00:04:24,014 --> 00:04:25,516 வேலை செஞ்சுட்டு இருக்கேன். 27 00:04:27,059 --> 00:04:28,519 அப்போ நீ நீ லேட் நைட்டு வரைக்கும் வேலை செஞ்சுதான் ஆகணும். 28 00:05:09,351 --> 00:05:10,561 விடிஞ்சிடுச்சு. 29 00:05:23,407 --> 00:05:24,700 அப்பா, நான் உங்களுக்கு உதவுறேன். 30 00:05:32,416 --> 00:05:34,001 டிராக்டரை ஸ்டார்ட் பண்ணிட்டேன். 31 00:05:34,501 --> 00:05:36,795 நீங்க இப்போ கிழக்கு வயல்ல விதைக்க ஆரம்பிக்கலாம். 32 00:05:39,840 --> 00:05:42,968 நீயே டிராக்டரைச் சரி பண்ணிட்ட. விதைக்கிற வேலையையும் நீயே பாத்துக்கோ. 33 00:05:46,513 --> 00:05:49,183 விவசாய சங்கத்துல எனக்கு ஒரு பேச்சு இருக்கு, ஞாபகம் இருக்கா? 34 00:05:52,644 --> 00:05:53,896 நீ இதைச் செய்யக் கூடாது. 35 00:05:54,897 --> 00:05:56,315 நீ இன்னும் துக்கத்துல இருக்க. 36 00:05:57,274 --> 00:05:58,317 இப்போ சாப்பிடுங்க. 37 00:06:15,751 --> 00:06:19,755 ஐநா-வுக்கான அமெரிக்கத் தூதர் ஜார்ஜ் புஷ், 38 00:06:19,838 --> 00:06:22,674 உலகின் முதல் விண்வெளி நிலையமான சாலியுட் குறித்து இன்று 39 00:06:22,758 --> 00:06:25,761 அவதூறான மற்றும் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 40 00:06:25,844 --> 00:06:27,429 ஒரு சோவியத் ஃபிலிம் கேப்சூல் 41 00:06:27,513 --> 00:06:31,433 அமெரிக்க மண்ணில் கண்டெடுக்கப்பட்டதாகவும், அந்த விண்வெளி நிலையம் அறிவியல் ஆய்வுகளுக்காக அல்லாமல், 42 00:06:31,517 --> 00:06:34,603 ராணுவ உளவுப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படுவதாகவும் 43 00:06:34,686 --> 00:06:38,565 தூதர் புஷ் குற்றம் சாட்டியுள்ளார். 44 00:06:38,649 --> 00:06:39,900 இந்த ஆதாரத்தை சாலியுட் விண்வெளி நிலையம் 45 00:06:39,983 --> 00:06:42,986 - உளவு வேலைகளில் ஈடுபடுவதாகக் கூறப்படும்… - அம்மா, நான் தயார். 46 00:06:43,070 --> 00:06:47,616 …இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சோவியத் அதிகாரிகளும் உலக நாடுகளும் நிராகரித்துள்ளன. 47 00:06:48,534 --> 00:06:50,327 ஞாபகம் இருக்கட்டும், இன்னைக்கு ஸ்கூல் முடிஞ்சதும் உனக்கு ஓல்காகிட்ட கிளாஸ் இருக்கு. 48 00:06:50,410 --> 00:06:52,496 எனக்கு இந்தப் பியானோ கிளாஸ் பிடிக்கல. 49 00:06:53,747 --> 00:06:55,499 நீ அதைத் தொடர்ந்து கத்துக்கணும். 50 00:06:55,582 --> 00:06:57,167 உனக்கு ஒரு நல்ல டீச்சரை நாம கண்டுபிடிப்போம். 51 00:06:58,961 --> 00:07:00,420 டான்யா என்ன ஆனாங்க? 52 00:07:00,504 --> 00:07:02,506 ஒருவேளை அவங்க திரும்ப வருவாங்களா? 53 00:07:05,008 --> 00:07:06,051 அவங்க வர மாட்டாங்க. 54 00:07:15,602 --> 00:07:18,188 இந்த ரசோல்னிக் நல்லா இருக்கு. ஏதாவது வித்தியாசமா பண்ணியா? 55 00:07:18,856 --> 00:07:21,483 நான் கொஞ்சம் கூடுதலா ஊறுகாய் வெள்ளரிக்காய் சேர்த்தேன். 56 00:07:21,984 --> 00:07:23,527 வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமா. 57 00:07:23,610 --> 00:07:26,029 அதுதான் காரணமா இருக்கும். ருசி இன்னும் கூடிடுச்சு. 58 00:07:26,113 --> 00:07:27,531 கேரட்டும் ரொம்ப நல்லா வெந்திருக்கு. 59 00:07:27,614 --> 00:07:30,200 ஆமா. அதையெல்லாம் சின்னதா வெட்டினதால நல்லா வெந்துடுச்சு. 60 00:07:33,579 --> 00:07:35,998 அடச்சே, அந்த ஜன்னல் திரும்பவும் மங்கலாகுது. 61 00:07:36,081 --> 00:07:39,418 நான் முன்னாடியே கிளாஸைத் துடைச்சேன், ஆனா காத்து உள்ள வருது. 62 00:07:39,501 --> 00:07:40,544 குட் மார்னிங், இரினா. 63 00:07:40,627 --> 00:07:42,838 - நீங்க அதை சரி பண்ணப்போறேன்னு சொன்னீங்க. - நான் சரி பண்ணிட்டேன். 64 00:07:45,257 --> 00:07:46,592 நாளைக்கு திரும்பவும் அதை சரி பாக்குறேன். 65 00:07:46,675 --> 00:07:48,010 எப்பவும் நாளைக்குத்தான். 66 00:07:51,889 --> 00:07:53,974 மாஸ்கோ அதிகாரிகள் ரொம்பக் கோபமா இருக்காங்க. 67 00:07:54,057 --> 00:07:56,101 சோவியத் விண்வெளி நிலையத்திலிருந்து உளவுப் புகைப்படங்களை அமெரிக்கா கைப்பற்றியது 68 00:07:56,185 --> 00:07:59,021 இந்தச் சாலியுட் ஃபிலிம் சொதப்பல் எல்லாச் செய்திகள்ல பரவிட்டு இருக்கு. 69 00:08:00,022 --> 00:08:02,065 நாம நம்ம கண்காணிப்புத் தகவல்களைத் தொலைத்தது மட்டும் இல்லாம, 70 00:08:02,149 --> 00:08:04,860 இப்போ நம்ம கேமராக்கள் எதைக் கண்காணிக்குதுன்னு அமெரிக்கர்களுக்கும் தெரிஞ்சுடுச்சு. 71 00:08:04,943 --> 00:08:07,321 விண்வெளியில இருந்து ஃபிலிம் டப்பாக்களைத் தூக்கிப் போடுறது 72 00:08:07,404 --> 00:08:08,989 ஒண்ணும் அவ்ளோ சிறப்பான வழியாத் தெரியல. 73 00:08:09,072 --> 00:08:13,452 நான் என் அறிக்கையில சொன்ன மாதிரி, இதுக்கு ஒரு பொறியியல் தீர்வு தேவைப்படுது. 74 00:08:13,535 --> 00:08:17,497 ஆனா நேரடியா விண்வெளி நிலையத்துல இருந்து புகைப்படங்களை அனுப்ப 75 00:08:17,581 --> 00:08:19,166 நல்ல வழியை பொறியியல் குழு 76 00:08:19,249 --> 00:08:21,793 - இன்னும் கண்டுபிடிக்கவே இல்ல. - அதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? 77 00:08:21,877 --> 00:08:24,713 எனக்குத் தெரிஞ்சு, தோழர் புர்கோவ் உங்ககிட்டதான் ரிப்போர்ட் பண்ணிட்டு இருந்தாரு. 78 00:08:26,757 --> 00:08:29,343 அது வந்து, அவரு எனக்கு முன்னாடி இருந்தவருக்கு விசுவாசமானவரு. 79 00:08:31,094 --> 00:08:34,306 அவர் வேணுனே தீர்வை மறைக்கிறார்னு நீங்க நினைக்கிறீங்களா? 80 00:08:34,389 --> 00:08:37,351 பழைய ஆட்சியிலதான் எல்லாம் நல்லா இருந்ததுன்னு அவர் நம்புறார்னு நான் நினைக்கிறேன். 81 00:08:38,477 --> 00:08:40,854 அதனால அவருக்கு தரும் தண்டனை மத்தவங்களுக்கு ஒரு பாடமா இருக்கணும். 82 00:08:41,563 --> 00:08:44,858 உங்க தலைமையில நடந்த எல்லாத்துக்கும் அப்புறமும், ஸ்டார் சிட்டியைத் திரும்பவும் வழிக்குக் கொண்டு வர்ற 83 00:08:44,942 --> 00:08:46,944 பொறுப்பை பொதுச் செயலாளர் என்கிட்ட தந்திருக்காரு. 84 00:08:47,027 --> 00:08:48,612 என் தலைமையிலயா? 85 00:08:49,196 --> 00:08:52,157 முதல்ல மிரோனோவ், அப்புறம் வெனேரா, இப்போ இந்த விசுவாசம் இல்லாத இன்ஜினியர்கள். 86 00:08:52,241 --> 00:08:53,909 நான் வெனேராவை முடிவுக்குக் கொண்டு வந்தேன். 87 00:08:53,992 --> 00:08:56,411 நான் மிரோனோவை அழித்துவிட்டேன். 88 00:08:56,495 --> 00:08:58,956 இப்போ நீங்க தோழர் புர்கோவை கவனிக்கணும், 89 00:08:59,039 --> 00:09:02,459 இல்லன்னா ஸ்டார் சிட்டியில இன்னும் பெரிய மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும். 90 00:09:06,922 --> 00:09:08,215 இன்னும் ஒரு விஷயம். 91 00:09:08,298 --> 00:09:09,383 சொல்லுங்க. 92 00:09:10,300 --> 00:09:12,261 இரினா மொரோசோவா, அவ எப்படி வேலை செய்யுறா? 93 00:09:14,221 --> 00:09:15,556 நல்லா. அவ நல்லா வேலை செய்வா. 94 00:09:15,639 --> 00:09:18,851 வாலியா மிரோனோவோட செயல்களை முதல்ல கண்டுபிடிச்சது அவதான், இல்லையா? 95 00:09:18,934 --> 00:09:21,186 ஆமா, ஆனா தன்னை முன்னிலைப்படுத்திக்கணும்ன்ற ஆர்வத்துல, 96 00:09:21,270 --> 00:09:23,063 அவ சரியான நேரத்துல எனக்குத் தகவல் சொல்லல. 97 00:09:24,106 --> 00:09:28,360 அவகிட்ட திறமையும் ஆசையும் இருக்கு, நான் ஒத்துக்கிறேன், ஆனா ஒழுக்கம் இல்ல. 98 00:09:28,443 --> 00:09:30,070 அவ வயசுல நானும் அப்படித்தான் இருந்தேன். 99 00:09:31,321 --> 00:09:32,531 இப்போ நான் எங்க இருக்கேன்னு பாருங்க. 100 00:09:33,824 --> 00:09:34,825 ஆமா. 101 00:09:35,492 --> 00:09:36,952 ரொம்பப் பிரமாதம். 102 00:09:38,954 --> 00:09:43,458 அவளோட பலவீனங்களை மட்டும் பாக்காம, பலங்களையும் யோசிச்சுப் பார்க்கச் சொல்றேன். 103 00:09:44,334 --> 00:09:47,462 சரி, இது என் டிபார்ட்மென்ட், அதனால எனக்கு சரின்னு படுற மாதிரி நான் நடத்துவேன். 104 00:09:48,964 --> 00:09:50,632 இது வெறும் பரிந்துரைதான். 105 00:09:54,553 --> 00:09:56,054 நல்ல நாளா அமையட்டும், தோழர் கர்னல். 106 00:10:23,040 --> 00:10:24,458 மதிய வணக்கம். 107 00:10:26,168 --> 00:10:29,838 என்னுடைய இந்த விண்வெளிப் பயணம் ஆரம்பித்த இதே இடத்தில், 108 00:10:30,881 --> 00:10:34,134 அதன் வெற்றியைப் பற்றிய இந்தத் திரைப்படத்தை 109 00:10:35,427 --> 00:10:38,055 உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் நான் பெருமைப்படுகிறேன். 110 00:10:38,847 --> 00:10:42,935 ரொஸ்டோவ்ஸ்காயா ஓப்லாஸ்ட்டின் பொது விவசாய நிலம். 111 00:10:59,993 --> 00:11:03,163 துணைத் தலைவர் டாராசோவ், நீங்க இங்க இருப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கல. 112 00:11:03,247 --> 00:11:05,624 இதை நான் மிஸ் பண்றதா இல்ல. 113 00:11:17,010 --> 00:11:20,430 தொழிலாளர்களின் மகள். நம் நாட்டின் அடையாளம். 114 00:11:20,514 --> 00:11:24,893 இந்தப் படம் சோவியத் யூனியன் முழுக்கக் காட்டப்படும், அப்புறம் இது மேற்கத்திய நாடுகள்லயும் வெளியாகும், 115 00:11:25,602 --> 00:11:28,272 இந்த அரசாங்கம் மக்கள்கிட்ட இருந்து மறைக்கப் பார்த்த 116 00:11:28,355 --> 00:11:30,357 அதே அனஸ்தாஸியாவை இது அவங்களுக்குக் காட்டும் 117 00:11:30,440 --> 00:11:34,611 …தியாகமும் கூட்டு வலிமையும் நட்சத்திரங்களை எட்ட முடியும் என்பதை நிரூபித்தது. 118 00:11:36,280 --> 00:11:38,490 நேத்து நடந்தது மாதிரி இருக்கு, இல்லையா? 119 00:11:39,700 --> 00:11:43,871 …கடமை, மனஉறுதி அப்புறம் ஒரு லட்சியத்துக்காக ஒண்ணா சேர்ந்த மக்களோட அந்த தளராத உறுதி 120 00:11:43,954 --> 00:11:46,290 இது எல்லாத்தையும் தான் இது படம் பிடிச்சுக் காட்டுது. 121 00:11:47,833 --> 00:11:53,672 அவரது கணவர் அலெக்சாண்டர் டிமிட்ரியாவிச் பொலிவானோவும் இதே இலட்சியத்தோடுதான் இருந்தார். 122 00:11:55,716 --> 00:11:58,510 அவர்கள் ஒருத்தர் மீது ஒருத்தர் வைத்திருந்த அன்புக்கும் உறுதிக்கும் எல்லையே இல்லை, 123 00:11:59,511 --> 00:12:02,931 அதே மாதிரி தான் விண்வெளி மீதும் இந்த நாட்டின் மீதும், அவர்கள் வைத்திருந்த பற்றுக்கு எல்லையே இல்லை. 124 00:12:05,058 --> 00:12:09,021 அவரது இந்த உன்னதமான தியாகத்தை நம் மக்கள் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள். 125 00:12:11,982 --> 00:12:12,983 இதோ வந்திடுறேன். 126 00:12:13,066 --> 00:12:16,111 …பகிர்ந்து கொள்ளப்பட்ட தியாகத்தாலும், உலகிற்கான ஒளியை நாம்தான் சுமந்து செல்கிறோம் என்ற 127 00:12:16,737 --> 00:12:18,947 அறிவாலும் செதுக்கப்பட்ட நமது மாபெரும் தேசத்தின் 128 00:12:19,489 --> 00:12:21,408 எதிர்காலத்தின் மீது கவனம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது… 129 00:13:40,654 --> 00:13:43,448 நாமதான் முதல் மனிதனை விண்வெளிக்கு அனுப்புனோம். 130 00:13:44,908 --> 00:13:47,077 நாமதான் விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பினோம். 131 00:13:47,160 --> 00:13:50,289 நாம அவர்களை வேற ஒரு கிரகத்துக்குக் கூட அனுப்ப முயற்சி செய்தோம். 132 00:13:51,665 --> 00:13:53,917 அது நம்மை எங்க கூட்டிட்டுப் போயிருக்கும்னு யாருக்குத் தெரியும்? 133 00:13:55,711 --> 00:14:00,132 ஆனா இப்போ, நாம பண்றதெல்லாம் வெறும் கீழ குனிஞ்சு, 134 00:14:01,592 --> 00:14:06,471 அந்த ஏவுகணை தளங்களைப் படம் பிடிக்கிறதுக்காக பூமியையே முறைச்சுப் பாத்துட்டு இருக்கிறதுதான். 135 00:14:08,932 --> 00:14:11,351 நீங்க கூட அந்த வித்தியாசத்தை ஒத்துக்கிட்டுதான் ஆகணும். 136 00:14:13,854 --> 00:14:17,858 அப்போ உங்களோட விசுவாசம் இன்னும் பழைய சீஃப் டிசைனர் கிட்டதான் இருக்குன்னு ஒத்துக்குறீங்க. 137 00:14:19,735 --> 00:14:21,695 சீஃப் டிசைனர்னா அது ஒருத்தர் தான். 138 00:14:23,906 --> 00:14:26,366 ராடிமிர் பெட்ரோவ்ஸ்கி ஒரு கேஜிபி கைக்கூலி. 139 00:14:26,450 --> 00:14:29,369 அவருக்குத் திரவ ஆக்சிஜனுக்கும் வோட்காவுக்கும் இருக்குற வித்தியாசமே தெரியாது. 140 00:14:29,453 --> 00:14:31,955 இந்த உரையாடல் பதிவு செய்யப்படுதுன்றத நான் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புறேன். 141 00:14:32,039 --> 00:14:34,875 நீங்க பேசுற வார்த்தைகளை ரொம்பக் கவனமா தேர்ந்தெடுங்க. 142 00:14:40,756 --> 00:14:42,633 நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டேன். 143 00:14:47,888 --> 00:14:51,725 இந்தச் சாலியுட் விண்வெளி நிலையத்தை நவீனப்படுத்துற சீஃப் டிசைனர் பெட்ரோவ்ஸ்கியின் முயற்சிகளை 144 00:14:51,808 --> 00:14:57,523 நீங்க சீர்குலைச்சதா ஒத்துக்கிட்டு இந்த வாக்குமூலத்துல கையெழுத்து போடுவீங்களா? 145 00:15:04,196 --> 00:15:07,157 இதை வச்சு அவங்களை வழிக்குக் கொண்டு வரலாம்னு நீங்க நினைக்கிறீங்க, ஆனா அது நடக்காது. 146 00:15:08,575 --> 00:15:13,330 சாலியுட் ஃபிலிம் சொதப்பல் பிரச்சனையை என் டீமால தீர்க்க முடியாம போனதுக்குக் காரணம் 147 00:15:13,413 --> 00:15:17,709 எங்களுக்கு விருப்பம் இல்லைன்னோ இல்ல நாங்க கீழ்ப்படியலன்னோ அர்த்தம் இல்ல. 148 00:15:22,256 --> 00:15:25,133 யோசனைகள் ஒண்ணும் தானா வானத்துல இருந்து குதிச்சிடாது. 149 00:15:26,593 --> 00:15:28,470 அதுக்கு ஒரு உந்துதல் வேணும். 150 00:15:33,600 --> 00:15:37,312 அதைச் செய்யக் கூடிய ஒரே ஒரு நபர் யாருன்னு உங்களுக்கே தெரியும். 151 00:15:50,409 --> 00:15:51,577 அப்படியே வாயைப் பாத்துட்டு நிக்காதீங்க. 152 00:15:51,660 --> 00:15:53,036 வேலையைப் பாருங்க. 153 00:15:57,916 --> 00:15:59,751 வாழ்த்துகள், தோழர் ஸ்டெபானோவ். 154 00:15:59,835 --> 00:16:03,172 நீங்கதான் இப்போ சாலியுட்-1-இன் முதன்மை இன்ஜினியர். 155 00:16:04,089 --> 00:16:06,842 கண்டிப்பா, தோழர் கர்னல். 156 00:17:32,344 --> 00:17:34,346 நீ அவரைத் தொடர்புகொள்ள முடிஞ்சதா? 157 00:17:35,097 --> 00:17:37,224 நீ இதை யோசிச்சதே அவருக்கு ஆச்சரியமா இருக்கு. 158 00:17:38,475 --> 00:17:41,395 ஸ்டார் சிட்டியில இருக்குற ஒரு இன்ஜினியர் அவரோட யுனிவர்சிட்டியில பாடம் எடுக்குறது. 159 00:17:41,895 --> 00:17:43,772 இதை அவர்கிட்ட சேர்த்ததுக்கு நன்றி. 160 00:17:45,357 --> 00:17:47,693 இந்த வேலை மேல எனக்கு இருக்குற ஆர்வத்தை இது விளக்கும். 161 00:17:51,864 --> 00:17:53,323 நிச்சயமா, நான் அவர்கிட்ட இதைச் சேர்த்துடுறேன். 162 00:17:53,407 --> 00:17:56,034 ஆனா செர்கே, எனக்கு ஒண்ணு மட்டும் புரியல… 163 00:17:57,786 --> 00:18:00,247 ஏன் இங்க இருக்குற வேலையை விட்டுட்டு ஒரு புரொஃபசரா போகணும்னு நினைக்கிற? 164 00:18:02,708 --> 00:18:04,126 எனக்கு ஒரு மாற்றம் தேவைப்படுது. 165 00:18:05,711 --> 00:18:07,796 ஸ்டார் சிட்டி இப்போ முன்பு மாதிரி இல்ல. 166 00:18:37,201 --> 00:18:38,243 நான் உன்கிட்ட சொல்லிட்டே இருக்கேன், 167 00:18:38,327 --> 00:18:41,538 இந்த அறுவடை முடியுறதுக்குள்ள உனக்கு ரசம் குடிச்சே அலுத்துப் போயிடும். 168 00:18:43,540 --> 00:18:44,958 அன்பே. 169 00:18:45,042 --> 00:18:46,043 என்ன? 170 00:18:47,419 --> 00:18:48,795 செல்லம். 171 00:18:49,671 --> 00:18:52,174 உங்களைப் பார்க்க யாரோ வந்திருக்காங்க. 172 00:19:09,483 --> 00:19:11,276 நீங்க இங்க நல்லா செட்டில் ஆகிட்டீங்க போல. 173 00:19:12,986 --> 00:19:14,363 நல்ல காட்சி. 174 00:19:14,988 --> 00:19:18,158 ஆமா, என்னைச் சுத்தி இருக்குற அந்த ஆயுதம் ஏந்திய காவலர்களையும் தாண்டி என்னால இதப் பாக்க முடியுது. 175 00:19:18,242 --> 00:19:20,327 சரி, இது சிறைச்சாலையை விட எவ்வளவோ பரவாயில்ல. 176 00:19:25,374 --> 00:19:27,209 சீக்கிரம் விஷயத்துக்கு வாங்க, லூட்மிலா. 177 00:19:27,292 --> 00:19:29,962 கலினா அநேகமா அங்க கத்தியைத் தீட்டிட்டு இருப்பா. 178 00:19:31,463 --> 00:19:35,926 நம்ம புது விண்வெளி நிலையமான சாலியுட்-1, ஆர்பிட்ல இருந்து உலகம் முழுக்கக் கண்காணிக்குது. 179 00:19:37,344 --> 00:19:40,180 முன்னாடி இருந்த டுபொலெவ் விமானங்களை விட 180 00:19:40,264 --> 00:19:42,224 இதுல கண்காணிப்புத் திறன் ரொம்ப அதிகமா இருக்கு. 181 00:19:42,850 --> 00:19:45,519 அவங்க இப்போ கண்காணிப்புல கவனம் செலுத்துறது நல்ல விஷயம் தான். 182 00:19:46,812 --> 00:19:50,148 ஆமா, ஆனா அந்தப் புகைப்படங்களை ஸ்டார் சிட்டிக்கு அனுப்புறதுக்கு 183 00:19:50,232 --> 00:19:53,193 நமக்கு இன்னும் பாதுகாப்பான ஒரு வழிமுறை தேவைப்படுது. 184 00:19:57,573 --> 00:20:00,200 உங்க பழைய இன்ஜினியர்கள் எல்லாம் வேலையை இழுத்தடிக்குறாங்க. 185 00:20:00,868 --> 00:20:02,369 அவங்க அப்படித்தான் பண்ணணும். 186 00:20:11,211 --> 00:20:12,921 என்னால உங்களுக்கு உதவ முடியாது, லூட்மிலா. 187 00:20:17,092 --> 00:20:19,344 என் ஈகிள்களுக்கு நீங்க பண்ணதுக்கு அப்புறம் கண்டிப்பா முடியாது. 188 00:20:20,888 --> 00:20:24,308 நான் எப்பவும் பண்ணுற மாதிரி நம்ம நாட்டைப் பாதுகாக்க என்ன பண்ணணுமோ அதைத்தான் பண்ணேன். 189 00:20:25,100 --> 00:20:28,145 உங்களுக்குத் தெரியுமா, உங்க கூட இருந்தவங்க எல்லாரும் இப்போ ஜெயில்ல இல்லாம இருக்கதுக்கு காரணம் 190 00:20:28,228 --> 00:20:32,024 அந்தத் தோல்விக்கு நீங்களே முழுப் பொறுப்பையும் ஏத்துக்க நான் அனுமதிச்சது தான். 191 00:20:32,107 --> 00:20:34,818 அனுமதிச்சீங்களா? நீங்க ரொம்பப் பெரிய மனசுக்காரங்க தான். 192 00:20:38,280 --> 00:20:41,742 உங்க புது சீஃப் டிசைனரை வச்சு உங்க பிரச்சனையைத் தீர்த்துக்க வேண்டியதுதானே? 193 00:20:42,534 --> 00:20:43,535 பெட்ரோவ்ஸ்கி. 194 00:20:43,619 --> 00:20:45,871 அவரோட சொந்தப் பேரை வச்சுக்க அவங்க அனுமதிச்சிருக்காங்க போல. 195 00:20:46,705 --> 00:20:47,706 அவரு… 196 00:20:50,876 --> 00:20:52,211 உங்களைப் போல இல்ல. 197 00:20:54,880 --> 00:20:56,131 மத்தியக் குழுவுக்கும் அது தெரியும். 198 00:20:56,215 --> 00:20:58,175 அதனால்தான் நீங்க இன்னும் உயிரோட இருக்கீங்கன்னு நினைக்கிறேன். 199 00:20:58,258 --> 00:21:03,597 அப்போ, நான் சொல்லிக் குடுக்கிற பதில்களை அவர் அப்படியே அந்த இன்ஜினியர்கள்கிட்ட போய் ஒப்பிக்கணுமா? 200 00:21:07,935 --> 00:21:12,481 இல்லன்னா, உங்களோட இந்த அமைதியான ஓய்வுக்காலம் ரொம்ப மோசமானதா மாறிடும். 201 00:21:17,528 --> 00:21:19,905 நான் இப்போ ஒண்ணும் சின்னப் பையன் இல்ல, லூட்மிலா. 202 00:21:23,408 --> 00:21:25,577 என் விதியைப் பத்தி நான் கவலைப்படல. 203 00:21:25,661 --> 00:21:28,121 அது ஒரு பக்கம் இருக்கட்டும், ஆனா பெட்ரோவ்ஸ்கியோட… 204 00:21:31,208 --> 00:21:35,170 செயல்கள் ஸ்டார் சிட்டிக்கு யாராலயும் சரிசெய்ய முடியாத அளவுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம். 205 00:21:53,063 --> 00:21:54,731 அப்போ நான் என்ன பண்ணனும்னு எதிர்பார்க்குறீங்க? நான்… 206 00:21:57,609 --> 00:21:58,777 இப்போ வீட்டுக்காவல்ல இருக்கேன், 207 00:21:58,861 --> 00:22:01,363 வெளில இருக்குற உலகத்துல யார்கிட்டயும் பேச வழியே இல்ல. 208 00:22:07,452 --> 00:22:10,122 ஸ்டாலின் எந்தக் காரணமும் இல்லாம உங்களை சிறைச்சாலைக்குள்ள தள்ளுனாரு. 209 00:22:12,416 --> 00:22:17,504 நீங்க பட்டினியா இருந்தீங்க, அடி வாங்குனீங்க, உறைஞ்சு போய் சாகுற நிலைக்கே போனீங்க. 210 00:22:19,756 --> 00:22:23,594 ஆனா உங்களைத் திரும்பவும் கூப்பிட்டப்போ, நீங்க தயங்கவே இல்ல. 211 00:22:25,304 --> 00:22:28,473 நீங்க ஒரு தேசபக்தரா இருந்ததுனால என்ன பண்ணணுமோ அதைச் செஞ்சீங்கச. 212 00:22:28,557 --> 00:22:29,641 தேசபக்தன். 213 00:22:34,897 --> 00:22:36,190 நான் ஒரு முட்டாளா இருந்தேன். 214 00:22:36,732 --> 00:22:38,525 சரி, பெட்ரோவ்ஸ்கி இதுல ரெண்டுமே இல்ல. 215 00:22:40,194 --> 00:22:43,071 அவருக்குத் தேவையான ரிசல்ட் கிடைக்கலன்னா, 216 00:22:43,155 --> 00:22:46,033 ஸ்டார் சிட்டி சுக்குநூறாகிடும். 217 00:22:46,116 --> 00:22:49,453 நாம ரெண்டு பேரும் சேர்ந்து உருவாக்கிய எல்லாமே அழிஞ்சுடும். 218 00:22:55,167 --> 00:22:57,544 அன்பே, காலை உணவு தயார். 219 00:23:08,722 --> 00:23:12,935 வெனேரா கம்ப்யூட்டர்ல ஒரு அல்காரிதம் இருக்கு. 220 00:23:13,018 --> 00:23:18,565 அந்தப் ப்ரோப்-ல இருந்து வர்ற உயர்தரப் புகைப்படங்களை 221 00:23:18,649 --> 00:23:22,277 பூமிக்கு அனுப்புறதுக்கு ஏத்த மாதிரி மாத்துறதுக்கு ஒரு வழி அதுல இருக்கு. 222 00:23:22,361 --> 00:23:25,322 அவங்க அதை ஆரம்பப் புள்ளியா வச்சுக்கலாம். 223 00:23:27,991 --> 00:23:31,411 அந்த கோட்கள் இன்னும் சாலியுட் தகவல்தொடர்பு சாதனத்துல இருக்கலாம். 224 00:23:32,079 --> 00:23:33,205 நன்றி. 225 00:23:33,705 --> 00:23:35,958 உங்களுக்கு என்கிட்ட இருந்து இவ்வளவுதான் கிடைக்கும், லூட்மிலா. 226 00:23:38,669 --> 00:23:40,212 என் காலம் முடிஞ்சுடுச்சு. 227 00:23:43,632 --> 00:23:46,134 இப்போ போங்க. போய் உங்களுக்கு ஏத்த வேற ஒரு முட்டாளைக் கண்டுபிடிச்சுக்கோங்கச். 228 00:23:53,892 --> 00:23:56,061 டொனெட்ஸ் மற்றும் வோல்கா பகுதிகளில் சிலவற்றை 229 00:23:56,144 --> 00:24:00,190 வழக்கத்திற்கு மாறான வறண்ட வானிலை பாதித்துள்ளதாக 230 00:24:00,274 --> 00:24:01,817 வேளாண்மை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. 231 00:24:02,401 --> 00:24:05,571 இப்பகுதிகளில் மழைப்பொழிவு இன்னும் பருவகால அளவை எட்டவில்லை என்று 232 00:24:05,654 --> 00:24:07,364 வானிலை ஆய்வு மையங்கள் தெரிவிக்கின்றன… 233 00:24:07,447 --> 00:24:08,991 அப்பா, நான் வந்துட்டேன். 234 00:24:09,074 --> 00:24:10,659 - நீங்க சாப்பிட்டீங்களா? - அமைதியா இரு. 235 00:24:10,742 --> 00:24:12,703 - அவங்க வறட்சியைப் பத்திப் பேசிட்டு இருக்காங்க. - …தற்காலிக சிரமங்கள். 236 00:24:12,786 --> 00:24:15,622 உள்ளூர் கட்சி குழுக்களும் கூட்டுப்பண்ணை தலைவர்களும் 237 00:24:15,706 --> 00:24:17,875 தீர்க்கமான நடவடிக்கைகளுடன் பதிலளித்து வருகின்றனர். 238 00:24:18,667 --> 00:24:21,295 நீர்த்தேக்கம் மற்றும் கால்வாய் அமைப்புகளைத் திறம்பட பயன்படுத்துவதை 239 00:24:21,378 --> 00:24:25,048 உறுதி செய்வதற்காக, பலர் பாசனப் படைகளைத் திரட்டி வருகின்றனர், 240 00:24:26,633 --> 00:24:30,429 மேலும் பயிர்களைத் தக்கவைக்க பம்பு செட்டுகள் இருபத்தி நான்கு மணி நேரமும் இயங்கி வருகின்றன… 241 00:24:30,512 --> 00:24:33,891 அப்பா, யாரோ நம்மூரைப் பாக்க வந்திருக்காங்க. 242 00:24:33,974 --> 00:24:34,975 என்ன? 243 00:24:40,397 --> 00:24:41,732 இந்த நேரத்துலயா? 244 00:24:41,815 --> 00:24:45,777 …மிகவும் தேவைப்படும் இடங்களுக்கு நீர் ஆதாரங்களை நேரடியாகக் கொண்டு செல்ல இது வழிவகை செய்கிறது. 245 00:24:53,619 --> 00:24:55,871 - மாலை வணக்கம். - தோழர் டாராசோவ். 246 00:24:56,371 --> 00:24:57,873 இப்படித் திடீர்னு வந்ததுக்கு மன்னிச்சுடுங்க. 247 00:24:58,707 --> 00:25:00,542 பரவாயில்ல, உள்ளே வாங்க. 248 00:25:00,626 --> 00:25:02,503 - நன்றி. - நாஸ்டியா, கிளாஸ் எடுத்துட்டு வா. 249 00:25:06,381 --> 00:25:07,966 - மாலை வணக்கம். - மாலை வணக்கம். 250 00:25:10,469 --> 00:25:13,889 ப்ளீஸ், அப்படியே இடது பக்கமா வாங்க. 251 00:25:13,972 --> 00:25:15,057 ம்-ம். 252 00:25:17,142 --> 00:25:19,520 சில மாவட்டங்களில் விளைச்சல் குறையக்கூடும் என்றாலும்… 253 00:25:19,603 --> 00:25:21,271 - நாம ஏதாவது குடிக்கலாம். - கூட்டு முயற்சியின் மூலம் 254 00:25:21,355 --> 00:25:25,150 ஒன்றியத்தின் ஒட்டுமொத்த தானியக் கொள்முதல் திட்டத்தை எட்ட முடியும் என்று 255 00:25:25,234 --> 00:25:27,236 ஆரம்பகட்ட கணிப்புகள் தெரிவிக்கின்றன… 256 00:25:27,319 --> 00:25:28,695 நான் உங்களுக்கு என்ன செய்யணும்? 257 00:25:28,779 --> 00:25:33,408 உண்மையில, நான் உங்க மகள், தோழர் பெலிகோவாவிடம் பேசத்தான் வந்தேன். 258 00:25:34,451 --> 00:25:35,452 சரி, கண்டிப்பா. 259 00:25:35,536 --> 00:25:37,704 ஆனா எனக்கு ஏதாவது குடிக்கக் கிடைச்சா நல்லா இருக்கும். 260 00:25:38,830 --> 00:25:40,541 - சரி. - நன்றி. 261 00:25:47,798 --> 00:25:52,052 இது பிரையன்ஸ்காயா ஓப்லாஸ்ட்ல இருக்குற என்னோட பழைய வீட்டை ஞாபகப்படுத்துது, 262 00:25:52,135 --> 00:25:53,554 அது இங்க இருந்து பக்கத்துல தான் இருக்கு. 263 00:26:05,399 --> 00:26:06,567 நன்றி. 264 00:26:14,032 --> 00:26:15,742 சரி, நான் உள்ளே போறேன். 265 00:26:24,251 --> 00:26:26,587 சோவியத் யூனியனின் ஹீரோக்களுக்காக. 266 00:26:38,265 --> 00:26:39,474 தயவுசெஞ்சு உட்காரு. 267 00:26:45,230 --> 00:26:50,444 அந்தப் பயிற்சி விபத்துக்கு முன்னாடி, நீயும் தோழர் பொலிவனோவும் 268 00:26:50,527 --> 00:26:52,112 ரொம்ப நெருக்கமாயிருப்பீங்கன்னு நினைக்கிறேன். 269 00:26:55,073 --> 00:26:56,742 அந்தப் பழமொழி உண்மைதான் போல. 270 00:26:58,243 --> 00:27:00,829 நாம எதிர்பார்க்காத நேரத்துல வர்றதுதான் நிஜமான காதல். 271 00:27:10,464 --> 00:27:12,007 என்னை மன்னிச்சுடுங்க, தோழரே. 272 00:27:12,090 --> 00:27:15,469 ஆனா உங்களைப் போன்ற ஒருத்தருக்கு இவ்வளவு தூரம் வந்து குடிக்கிறதை விட 273 00:27:15,552 --> 00:27:17,846 வேற முக்கியமான வேலைகள் இருக்கும்னு எனக்குத் தெரியும். 274 00:27:18,388 --> 00:27:19,640 ஆமா, ஆமா. 275 00:27:19,723 --> 00:27:20,849 நான் ஏன் இங்க வந்திருக்கேன்? 276 00:27:22,100 --> 00:27:25,354 சரி, நீ இங்கேயே இருக்கிறது இனிமே நம்ம நாட்டுக்கு 277 00:27:25,437 --> 00:27:26,939 நல்லது இல்லைன்னு வச்சுப்போம். 278 00:27:29,149 --> 00:27:30,692 அது உனக்கும் நல்லது இல்ல. 279 00:27:32,528 --> 00:27:35,322 நாங்க கேட்ட எல்லாத்தையும் நீ செஞ்சுட்ட, தோழர் பெலிகோவா. 280 00:27:36,073 --> 00:27:38,242 இப்போ நாங்க உனக்கு கைமாறு செய்ய வேண்டிய நேரம் வந்துடுச்சு. 281 00:27:41,495 --> 00:27:42,788 எனக்குப் புரியல. 282 00:27:42,871 --> 00:27:47,835 சாலியுட்-1 விண்வெளி நிலையத்துக்கு இன்னொரு விண்வெளி வீரர் தேவைப்படுறாங்க, 283 00:27:47,918 --> 00:27:50,671 அந்த மிஷனை வழிநடத்த நாங்க உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கோம். 284 00:27:54,007 --> 00:27:55,092 அந்த மிஷனோட கமாண்டராவா? 285 00:27:57,636 --> 00:27:59,304 நான் அதுக்காகப் பயிற்சி எடுக்கலையே. 286 00:27:59,388 --> 00:28:03,433 லூனா-16-ல அது உன்னைத் தடுக்கலையே, நீ நிலவு வரைக்கும் போயிட்டு வந்திருக்கியே. 287 00:28:09,147 --> 00:28:11,608 ஆனா, நான் திரும்பவும் 288 00:28:11,692 --> 00:28:15,404 விண்வெளிக்குப் போறது ரொம்பப் பெரிய ஆபத்துன்னு அரசாங்கம் நினைச்சதா கேள்விப்பட்டேன். 289 00:28:15,487 --> 00:28:17,781 ஆனா, நீ இங்கேயே இருக்கிறதுதான் 290 00:28:17,865 --> 00:28:19,491 அதை விடப் பெரிய ஆபத்தாத் தெரியுது. 291 00:28:23,120 --> 00:28:25,789 தோழர் பெலிகோவா, இதுதானே நீ ஆசைப்பட்டது? 292 00:28:29,585 --> 00:28:31,253 நான் இதையேதான் ஆசைப்பட்டேன். 293 00:28:32,546 --> 00:28:34,548 நான் முதல் முதலா விண்வெளிக்குப் போனதுல இருந்து. 294 00:28:37,467 --> 00:28:38,468 மன்னிச்சுடுங்க, 295 00:28:39,303 --> 00:28:44,391 ஆனா நீங்க சும்மா ஒரு நல்லெண்ணத்துல இதைச் செய்யுறீங்கன்னு என்னால நம்ப முடியல. 296 00:28:51,565 --> 00:28:52,566 வாவ்… 297 00:28:56,445 --> 00:29:01,074 கடைசியா நாம பேசினதுல இருந்து நீ ரொம்ப வளர்ந்துட்ட. 298 00:29:03,994 --> 00:29:07,539 நாம உளவு பார்க்க சாலியுட்டைப் பயன்படுத்துறதா அமெரிக்கர்கள் நம்ம மேல குற்றம் சுமத்துறாங்க. 299 00:29:08,207 --> 00:29:09,208 நாம அப்படிச் செய்யுறோமா? 300 00:29:10,375 --> 00:29:14,505 நாம மேற்கத்திய நாடுகளோட தூண்டுதல்ல இருந்து சோவியத் யூனியனைப் பாதுகாக்குறோம். 301 00:29:14,588 --> 00:29:17,132 ஆனா பிரச்சனை அதிகமாகாமல் தடுக்க, 302 00:29:17,216 --> 00:29:21,094 சாலியுட் ஒரு அமைதியான நோக்கத்துக்காகத்தான் இருக்குன்னு நாம உலகத்தை நம்ப வைக்கணும். 303 00:29:23,472 --> 00:29:24,806 ஒருவேளை நான் திரும்பவும் விண்வெளிக்குப் போனா, அப்போ… 304 00:29:24,890 --> 00:29:29,770 அப்போ அந்த மிஷனோட கமாண்டரா நீ திரும்பவும் விண்வெளிக்கு வெற்றி வீரரா போறது, 305 00:29:30,646 --> 00:29:33,023 அது ஒரு… 306 00:29:33,106 --> 00:29:35,067 ஒரு மாற்றுக் கதையைச் சொல்லும். 307 00:29:57,548 --> 00:29:58,674 சரி, நான் போறேன். 308 00:29:59,258 --> 00:30:01,134 நல்லது, அப்போ எல்லாம் முடிவாயிடுச்சு. 309 00:30:02,636 --> 00:30:07,641 நாளைக்கு காலைல டாகன்ரோக் விமான தளத்துல இருந்து ஒரு பிளேன் உன்னை பைகோனூருக்கு கூட்டிட்டு போகும். 310 00:30:08,600 --> 00:30:10,018 வாழ்த்துகள். 311 00:31:28,680 --> 00:31:29,681 ஹலோ? 312 00:33:04,193 --> 00:33:07,529 நான் உன்கிட்ட தனியாப் பேச நினைத்ததுக்கு ஒரு காரணம் இருக்கு. 313 00:33:19,041 --> 00:33:21,460 உன் மேலதிகாரி உன்னை நடத்துற விதம் எனக்குப் பிடிக்கல. 314 00:33:23,212 --> 00:33:24,796 அவங்க உன்னை முன்னேற விடாமத் தடுக்குறாங்க. 315 00:33:25,380 --> 00:33:27,508 ஆனா உன்கிட்ட நல்ல திறமை இருக்குன்னு எனக்குத் தெரியும். 316 00:33:28,133 --> 00:33:29,510 நான் இன்னும் அவங்ககிட்ட இருந்து கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு. 317 00:33:29,593 --> 00:33:31,553 நீ அவங்ககிட்ட இருந்து கத்துக்க எதுவுமே இல்ல. 318 00:33:36,975 --> 00:33:41,188 வெனேரா பிரச்சனைக்கு அப்புறம் எல்லாத்தையும் சரி பண்ணத்தான் நான் ஸ்டார் சிட்டிக்கு அனுப்பப்பட்டேன். 319 00:33:41,271 --> 00:33:45,192 ஆமா, நிலைமையைச் சரி பண்ணவும், சில மாற்றங்களைச் செய்யவும் தான். 320 00:33:46,568 --> 00:33:48,529 இதை ஒரு நவீன காலத்துக்குக் கொண்டு வரணும். 321 00:33:48,612 --> 00:33:50,614 பிரச்சனை என்னன்னா, பல வருஷமா இங்கேயே இருக்குற 322 00:33:50,697 --> 00:33:52,991 சில பழமைவாதிகள் மாற மறுக்குறாங்க. 323 00:33:53,825 --> 00:33:56,495 நாம அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துல 324 00:33:56,578 --> 00:34:00,832 முன்னணியில இருக்கணும்னா, நம்மள மாதிரி ஆளுங்க… 325 00:34:02,417 --> 00:34:06,296 நீயும் நானும்தான் இரினா, ஸ்டார் சிட்டியைக் கட்டுப்படுத்தணும். 326 00:34:16,264 --> 00:34:19,643 ஒரு அமெரிக்க உளவாளி சட்டவிரோதமான மிஷன் மூலம் தப்பிக்க அனுமதிக்கப்பட்டிருக்கான், 327 00:34:19,726 --> 00:34:23,272 இதப் பத்தி கர்னல் ரஸ்கோவாவுக்கு எதுவுமே தெரியாதுன்னு நாம நம்பணுமா? 328 00:34:23,355 --> 00:34:25,357 - அவங்களுக்கு எதுவும் தெரியாது. - அவங்களோட காலம் இங்க முடிஞ்சுடுச்சு. 329 00:34:27,525 --> 00:34:31,780 அவங்களை பதவியில இருந்து நீக்குறது தான் நாட்டுக்கு நல்லதுன்னு நிரூபிக்க எனக்கு ஒரு ஆதாரம் தேவை. 330 00:34:40,163 --> 00:34:43,708 அதை நான் உங்களுக்கு கொண்டு வரணும்னு நினைக்கிறீங்களா? 331 00:34:46,962 --> 00:34:49,297 இங்க உனக்கு ஒரு பிரகாசமான எதிர்காலம் இருக்கு, இரினா. 332 00:34:51,382 --> 00:34:53,677 நீ நினைக்கிறதை விட, நீ ரொம்பபலமானவள், புத்திசாலி. 333 00:34:56,221 --> 00:34:57,931 நீ எதையெல்லாம் கடந்து வந்திருக்கன்னு எனக்குத் தெரியும். 334 00:35:00,726 --> 00:35:04,438 இங்க வர்றதுக்கு முன்னாடி நீ எவ்வளவு கஷ்டங்களை அனுபவிச்சிருக்கன்னு எனக்குத் தெரியும். 335 00:35:07,691 --> 00:35:09,776 என்னால அதை கற்பனை கூட பண்ண முடியல… 336 00:35:11,320 --> 00:35:13,906 அந்த மாதிரி ஒரு மிருகத்தோட கையில நீ அனுபவிச்ச சித்திரவதை. 337 00:35:13,989 --> 00:35:15,365 நான் அப்படி நினைக்கல… 338 00:35:15,449 --> 00:35:17,951 கடைசியில, நடந்த விஷயத்துல இருந்து ஒரு நல்லது நடந்துருக்கு. 339 00:35:18,035 --> 00:35:19,203 உன் மகள், ஸோயா. 340 00:35:19,286 --> 00:35:22,748 அதே மாதிரி இதுல இருந்தும் ஏதாவது நல்லது நடக்கும்னு நான் நினைக்கிறேன். 341 00:35:28,420 --> 00:35:31,548 ரூப்லியோவ்காவைச் சேர்ந்த நாம, ஒருத்தரை ஒருத்தர் பாதுகாத்துக்கணும். 342 00:35:38,847 --> 00:35:41,308 - எனக்கு நேரமாகுது. நான் கிளம்பணும்… - கண்டிப்பா. கண்டிப்பா. 343 00:35:46,355 --> 00:35:47,648 நான் கேட்டதைப் பத்தி யோசிச்சுப் பாரு. 344 00:35:50,359 --> 00:35:51,485 நான் யோசிக்கிறேன். 345 00:35:54,154 --> 00:35:55,322 நாம சீக்கிரம் சந்திக்கலாம். 346 00:36:32,693 --> 00:36:34,069 இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்? 347 00:36:35,028 --> 00:36:36,196 கொஞ்சம் நேரம்தான். 348 00:36:39,575 --> 00:36:40,993 இவரோட கதை என்ன? 349 00:36:43,620 --> 00:36:44,872 அனடோலி ஃப்ரோலொவ். 350 00:36:44,955 --> 00:36:47,541 அவர் கடைசியா வந்த விண்வெளி வீரர் குழுவைச் சேந்தவர். 351 00:36:48,250 --> 00:36:49,376 அப்போ அவரு கேஜிபி ஆளு. 352 00:36:50,961 --> 00:36:53,338 ஆமா, நாங்க ரெண்டு பேருமே ஒரு வேலையைச் செய்யத்தான் நியமிக்கப்பட்டிருக்கோம்… 353 00:36:54,756 --> 00:36:56,842 இந்த மிஷனோட உண்மையான காரணத்துக்காகவா? 354 00:37:10,189 --> 00:37:13,275 விண்வெளி வீராங்கனை பெலிகோவா, விண்வெளிக்கு திரும்புறதால் ஆர்வமா இருக்கிறீர்களா? 355 00:37:13,358 --> 00:37:16,028 கண்டிப்பாக, உலகின் முதல் விண்வெளி நிலையத்தில் எங்களுடைய 356 00:37:16,111 --> 00:37:20,616 அறிவியல் லட்சியங்களைத் தொடர இந்த மிஷன் ஒரு அற்புதமான வாய்ப்பு. 357 00:37:22,117 --> 00:37:23,118 கேமராவைப் பார்த்து கை அசையுங்கள். 358 00:37:56,610 --> 00:37:58,028 ஃபையரிங் செயின் தயாரா இருக்கு. 359 00:37:58,111 --> 00:37:59,404 மெயின் என்ஜினைத் தொடங்கலாம். 360 00:38:01,156 --> 00:38:06,411 ஸ்டார் சிட்டி, 11 முதல் 17 வரை, கம்பஷன் சேம்பர்ஸ் முழு அழுத்தத்துல இருப்பதை உறுதி செய்யவும். 361 00:38:07,120 --> 00:38:08,413 புரிந்தது. ப்ரோச் டூ. 362 00:38:10,499 --> 00:38:11,500 இக்னிஷன். 363 00:38:52,749 --> 00:38:55,586 இன்னும் ரெண்டு மணிநேரத்தில் சாலியுட்-1-ஐ அடைஞ்சிடுவோம். 364 00:38:58,630 --> 00:38:59,673 எல்லாரும் கவனிங்க. 365 00:39:06,847 --> 00:39:08,599 உங்க எல்லாருக்கும் என்னோட பாராட்டுக்கள். 366 00:39:09,474 --> 00:39:11,351 இன்னொரு வெற்றிகரமான லான்ச் மூலமா, 367 00:39:11,435 --> 00:39:14,855 சோவியத் யூனியனோட வலிமையை நாம திரும்பவும் நிரூபிச்சுட்டோம். 368 00:39:15,689 --> 00:39:20,027 ஆனா நாம இன்னும் கவனமாகவும் உறுதியாகவும் இருக்கணும். 369 00:39:21,153 --> 00:39:23,447 பெரிய சவால்கள் எல்லாம் இன்னும் நம் முன்னாடிதான் இருக்கு. 370 00:39:25,574 --> 00:39:26,575 நல்லா பண்ணீங்க. 371 00:39:39,254 --> 00:39:40,255 சூப்பரா பண்ணீங்க. 372 00:39:40,339 --> 00:39:43,634 இதெல்லாம் ஒன்னா சேர்ந்து நல்லபடியா அமைஞ்சதுல பொதுச் செயலாளர் ரொம்ப சந்தோஷமா இருக்காரு. 373 00:39:44,843 --> 00:39:46,678 நன்றி, துணைத் தலைவர் அவர்களே. 374 00:39:46,762 --> 00:39:48,263 உதவியா இருந்ததுல சந்தோஷம். 375 00:40:10,911 --> 00:40:12,079 கிரில் எங்கே? 376 00:40:12,162 --> 00:40:13,413 எனக்குத் தெரியாது. 377 00:40:13,497 --> 00:40:15,082 இன்னைக்குக் காலையில அவர் வரல. 378 00:41:12,097 --> 00:41:15,058 பாதை சீரா இருக்கு. சாலியுட்டைச் அடைவதற்கான சரியான பாதையில் இருக்கோம். 379 00:41:16,268 --> 00:41:19,354 சோயுஸ், நெருங்கும் முன் சாலியுட்-1-ன் தகவல்தொடர்புபை கொடுக்கிறோம். 380 00:41:20,814 --> 00:41:24,026 சாலியுட் ஸ்டேஷன், உங்களோட மாற்று ஊழியர்கள் இணைப்பில் இருக்காங்க. 381 00:41:24,943 --> 00:41:26,111 நாங்க உங்களைப் பார்த்துட்டோம், சோயுஸ். 382 00:41:26,820 --> 00:41:28,739 நீங்க உங்க ஹைஜீன் பேக்ல கொஞ்சம் வோட்காவை ஒளிச்சு எடுத்துட்டு வந்திருப்பீங்கன்னு நம்புறேன் 383 00:41:28,822 --> 00:41:30,449 ஏன்னா எங்ககிட்ட இருக்குறதை நாங்க வீட்டுக்கே எடுத்துட்டு போகப்போறோம். 384 00:41:40,959 --> 00:41:42,169 இது ரொம்ப அழகா இருக்கு. 385 00:41:55,182 --> 00:41:59,186 ஸ்டார் சிட்டி, சாலியுட் நிலையத்தைச் சந்திப்பதற்கான 386 00:41:59,269 --> 00:42:01,188 பேஸிங் ஆர்பிட் சர்க்குலரைசேஷன் பர்ன்-க்கு தயாராகிறோம். 387 00:42:24,127 --> 00:42:26,713 இணைப்பைத் தொடருங்க, கமாண்டர் பெலிகோவா. 388 00:42:27,214 --> 00:42:28,841 ஃப்யூயல் ரியாக்டர் செல் சீரா இருக்கு. 389 00:42:53,991 --> 00:42:57,578 நெருங்குற வேகம் ஒரு செகண்டுக்கு 0.91 மீட்டர். 390 00:42:58,245 --> 00:43:00,914 கொஞ்சம் வேகமா பண்ண முடியுமா? வீட்டுக்குக் கிளம்பத் தயாரா இருக்கோம். 391 00:43:03,000 --> 00:43:04,501 ஐந்து மீட்டர். 392 00:43:04,585 --> 00:43:06,420 நெருங்கும் வேகத்தைக் கவனிங்க. 393 00:43:22,436 --> 00:43:24,271 லாட்ச் நேர்க்கோடு சரியா இருக்கு. 394 00:43:28,817 --> 00:43:30,068 காண்டாக்ட் ஒன். 395 00:43:31,153 --> 00:43:32,738 காண்டாக்ட் டூ. 396 00:43:34,031 --> 00:43:35,991 முதல் கட்ட இணைப்பு முடிஞ்சது. 397 00:43:37,701 --> 00:43:39,453 சாலியுட்-1-க்கு உங்களை வரவேற்கிறோம். 398 00:44:31,505 --> 00:44:32,923 நீ இங்க எதுக்கு வந்த? 399 00:44:33,590 --> 00:44:36,510 மன்னிச்சுடுங்க, தோழர் கர்னல். சாலியுட்-1-ல ஒரு அவசரப் பிரச்சனை வந்திருக்கு. 400 00:44:37,469 --> 00:44:38,887 நாளைக்கு வரைக்கும் பொறுக்க முடியாதா? 401 00:44:38,971 --> 00:44:40,180 முடியாதுன்னுதான் தோணுது. 402 00:44:40,264 --> 00:44:42,850 சீஃப் டிசைனர் பெட்ரோவ்ஸ்கி, சாலியுட் எடுத்த முதல் கண்காணிப்புப் புகைப்படங்களை 403 00:44:42,933 --> 00:44:46,019 தலைமையகத்துக்கு அனுப்பப்போறதைப் பாத்தேன். 404 00:44:48,105 --> 00:44:49,356 என்னோட கையெழுத்து இல்லாமலா? 405 00:44:50,023 --> 00:44:51,024 ஆமா. 406 00:44:51,942 --> 00:44:54,361 நீங்க செக் பண்ணணுறதுக்காக அதை நானே எடுத்துட்டு வந்திருக்கேன். 407 00:44:55,320 --> 00:44:56,655 அப்போ உள்ளே வா. 408 00:45:00,951 --> 00:45:02,452 நான் அந்த ஃபைலைப் பார்க்கலாமா? 409 00:45:19,553 --> 00:45:21,346 ஒரு நிமிஷம் இரு. நான் ஓவன்ல ஏதோ வச்சிருக்கேன். 410 00:46:14,983 --> 00:46:16,777 அவன் பெயர் டிமா. 411 00:46:26,662 --> 00:46:28,121 அவன் போர்ல கொல்லப்பட்டான். 412 00:46:30,749 --> 00:46:32,251 மன்னிச்சிடுங்க, எனக்குத் தெரியாது. 413 00:46:34,878 --> 00:46:36,463 அது ரொம்ப காலத்துக்கு முன்னாடி நடந்தது. 414 00:46:47,599 --> 00:46:49,226 இதை என் கவனத்துக்குக் கொண்டு வந்ததுக்கு நன்றி. 415 00:46:49,309 --> 00:46:52,145 இது லுபியான்காவுக்குச் சேருறதை நான் உறுதி செய்யுறேன். 416 00:46:52,729 --> 00:46:54,398 நேரமாகிடுச்சு, நீ இப்போ கிளம்பலாம். 417 00:47:03,198 --> 00:47:04,825 இன்னும் ஒரு விஷயம். 418 00:47:08,871 --> 00:47:10,080 என்ன? 419 00:47:19,464 --> 00:47:20,549 இதை நீ எங்கிருந்து எடுத்த? 420 00:47:24,136 --> 00:47:25,596 இதைக் கொண்டு வந்ததே நான்தான். 421 00:47:28,182 --> 00:47:29,641 நீ என்னை உளவு பார்க்கப் பாத்தியா? 422 00:47:34,271 --> 00:47:37,441 அப்படி செய்யச் சொல்லி எனக்கு உத்தரவு வந்தது, ஆனா என்னால முடியல. 423 00:47:39,109 --> 00:47:40,110 பெட்ரோவ்ஸ்கியா? 424 00:47:42,446 --> 00:47:43,947 உங்களைப் பதவியில இருந்து நீக்கணும்னு அவர் நினைக்கிறார். 425 00:47:52,206 --> 00:47:54,124 அப்புறம் எதுக்காகக் காத்திருக்க? 426 00:47:57,002 --> 00:47:58,003 என்ன சொன்னீங்க? 427 00:47:59,463 --> 00:48:02,216 இரினா வெஸ்லியவ்னா, ஸ்டார் சிட்டியோட தலைவர் உனக்கு ஒரு உத்தரவு தந்தா, 428 00:48:02,299 --> 00:48:04,510 நீ அதைச் செஞ்சுதான் ஆகணும். 429 00:48:09,056 --> 00:48:10,057 எனக்குப் புரியல. 430 00:48:10,140 --> 00:48:12,434 நீ அவர்கிட்ட ரிப்போர்ட் பண்றதைத் தொடரு. 431 00:48:14,561 --> 00:48:16,146 கண்டிப்பா, எனக்கும் பண்ணணும். 432 00:48:21,401 --> 00:48:23,070 சரிங்க, தோழர் கர்னல். 433 00:48:41,547 --> 00:48:43,882 - நில்லுங்க. நீங்க அனுமதி இல்லாம… - இல்ல, ப்ளீஸ். கேளுங்க. எனக்கு… 434 00:48:43,966 --> 00:48:46,134 - …உள்ளே போக முடியாது. - இது அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயம். 435 00:48:46,218 --> 00:48:48,095 உங்களுக்கு உள்ளே போக அனுமதி இல்ல. 436 00:49:04,444 --> 00:49:05,779 ஸ்டெபானோவ். 437 00:49:10,075 --> 00:49:11,118 ஸ்டெபானோவ். 438 00:49:11,660 --> 00:49:13,662 ப்ளீஸ். நில்லுங்க… இது ரொம்ப முக்கியம். 439 00:49:15,163 --> 00:49:16,957 நான் உங்ககிட்ட பேசுறதை மத்தவங்க பாக்கக் கூடாது. 440 00:49:17,040 --> 00:49:19,501 ஏற்கனவே அந்த நைட் விட்ச் என் பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்கா. 441 00:49:20,085 --> 00:49:22,546 சரி. அப்போ, நான் சொல்றதை எவ்வளவு சீக்கிரம் 442 00:49:22,629 --> 00:49:24,590 நீங்க ஒத்துக்கிறீங்களோ, அது அவ்வளவு நல்லது. 443 00:49:25,549 --> 00:49:27,968 ஒருவேளை சீஃப் டிசைனர் இங்க இருந்திருந்தா, நான் அவர்கிட்டயே கேட்டிருப்பேன். 444 00:49:29,511 --> 00:49:31,138 சரி, உனக்கு ஒரு நிமிஷம்தான் டைம். 445 00:49:32,848 --> 00:49:34,766 நான் சாலியுட்-1-ஐ தொடர்புகொள்ளணும். 446 00:49:37,394 --> 00:49:38,562 இப்போவே. 447 00:49:41,148 --> 00:49:42,858 ப்ளீஸ். எனக்கு உங்க உதவி தேவை. 448 00:50:08,675 --> 00:50:11,553 சாலியுட்-1, இது ஸ்டார் சிட்டி. உங்களுக்கு கேக்குதா? 449 00:50:15,390 --> 00:50:16,642 சாலியுட்-1? 450 00:50:17,851 --> 00:50:19,937 சொல்லுங்க ஸ்டார் சிட்டி, நான் பெலிகோவா பேசுறேன். 451 00:50:20,020 --> 00:50:21,980 கமாண்டர் பெலிகோவா, நான் ஸ்டெபானோவ் பேசுறேன். 452 00:50:22,814 --> 00:50:24,149 ஏதும் பிரச்சனை இல்லயே? 453 00:50:24,233 --> 00:50:25,234 இல்ல. 454 00:50:25,317 --> 00:50:28,195 செக்யூரிட்டி மானிட்டர்ல நாங்க ஒரு டெஸ்ட் பண்ணனும்னு நினைக்கிறோம். 455 00:50:30,572 --> 00:50:32,324 அது ஃப்ரோலோவோட ப்ராஜெக்ட் ஆச்சே. 456 00:50:32,407 --> 00:50:34,076 - நான் அவனை எழுப்புறேன், அவன்… - ஓ, இல்ல, இல்ல. வேணாம். 457 00:50:34,159 --> 00:50:35,452 வேணாம். 458 00:50:36,662 --> 00:50:37,663 ஏன் வேணாம்? 459 00:50:38,747 --> 00:50:41,416 அது வந்து… இது ஒன்னும் அவ்ளோ பெரிய டெஸ்ட் இல்ல. 460 00:50:41,500 --> 00:50:43,460 அதனால அவரோட தூக்கத்தைக் கெடுக்க வேணாம். 461 00:50:44,127 --> 00:50:45,504 நீங்க ஸ்டெபானோவ் கிடையாது. 462 00:50:45,587 --> 00:50:46,964 நீங்க யாரு? 463 00:50:47,798 --> 00:50:49,091 செர்கே நிகுலோவ். 464 00:50:50,008 --> 00:50:51,385 நிகுலோவா? 465 00:50:51,468 --> 00:50:53,011 இது கேள்விப்பட்ட பெயர் மாதிரியே இருக்கே? 466 00:50:53,971 --> 00:50:55,931 லூனா-16 மிஷன் அப்போ, உங்க சூட்ல 467 00:50:56,014 --> 00:50:59,309 CO2-வைக் குறைக்கிற வழியைச் சொன்ன அந்த இன்ஜினியர் நான்தான். 468 00:51:01,603 --> 00:51:06,358 அப்போ, விண்வெளியில என் சூட்ல ஓட்டைப் போடச் சொன்னவர் நீங்கதானா? 469 00:51:11,154 --> 00:51:15,617 - ஆமா. சாரி. நான்… - சாரிலாம் வேணா, நீங்க என் உயிரை காப்பாத்துனீங்க. 470 00:51:17,119 --> 00:51:18,745 நான் என் கடமையைத்தான் செஞ்சேன். 471 00:51:20,122 --> 00:51:21,999 இல்ல, மத்த எல்லாரும்தான் கடமையைச் செஞ்சாங்க. 472 00:51:23,292 --> 00:51:25,460 இப்போ உங்களுக்கு என்ன வேணும், செர்கே நிகுலோவ்? 473 00:51:25,544 --> 00:51:27,254 செர்கே, சீக்கிரம் முடி. 474 00:51:29,590 --> 00:51:32,843 நான் நம்மளை ஒரு பாதுகாப்பான சேனலுக்கு மாத்துறேன். 475 00:51:34,052 --> 00:51:35,179 பாதுகாப்பானதா? 476 00:51:36,346 --> 00:51:38,724 உங்களுக்கு வெனேரா ப்ரோக்ராம் பத்தித் தெரியுமா? 477 00:51:41,268 --> 00:51:42,477 ஓரளவு தெரியும். 478 00:51:42,561 --> 00:51:46,732 உங்க விண்வெளி நிலையத்துல இருக்குற அந்த உளவுத் தொழில்நுட்பம், 479 00:51:46,815 --> 00:51:51,069 வெனேரா மிஷன்ல இருந்து கிடைச்ச ஒரு ஐடியாவை வச்சு உருவாக்கப்பட்டதுதான். 480 00:51:51,153 --> 00:51:52,654 நீங்க எதைப்பத்திப் பேசுறீங்கன்னு புரியல. 481 00:51:52,738 --> 00:51:55,032 ஆமா. ஆமா. இல்ல, கண்டிப்பா புரியாது. 482 00:51:56,617 --> 00:51:58,785 எவ்படோரியா டெலஸ்கோப்ல இருந்து 483 00:51:58,869 --> 00:52:03,999 எனக்குக் கிடைச்ச தகவல்களை நான் ஆராய்ஞ்சப்போ, எனக்கு ஏதோ… 484 00:52:05,459 --> 00:52:06,585 விசித்திரமாத் தெரிஞ்சது. 485 00:52:06,668 --> 00:52:08,170 விசித்திரமாவா? 486 00:52:08,253 --> 00:52:12,382 ஆமா, அதை உறுதிப்படுத்த நீங்க எனக்கு உதவணும்னு நினைக்கிறேன். 487 00:52:15,302 --> 00:52:17,804 இதுக்கும் வெனேராவுக்கும் என்ன சம்பந்தம்? 488 00:52:18,972 --> 00:52:20,974 அதைக் கண்டுபிடிக்கத்தான் நானும் முயற்சி பண்றேன். 489 00:52:21,058 --> 00:52:22,893 இந்த டெஸ்ட்டை மட்டும் ரன் பண்ணுங்க. 490 00:52:23,435 --> 00:52:24,520 ப்ளீஸ். 491 00:52:41,870 --> 00:52:43,664 நான் என்ன பண்ணனும்னு சொல்லுங்க. 492 00:52:44,873 --> 00:52:50,879 UHF டிரான்ஸ்மிட்டரை 922.76 மெகாஹெர்ட்ஸ்ல செட் பண்ணுங்க. 493 00:52:54,466 --> 00:52:58,637 922.76 மெகாஹெர்ட்ஸ்ல செட் பண்ணுறேன். 494 00:53:11,608 --> 00:53:13,235 எனக்கு ஒரு சிக்னல் கிடைக்குது. 495 00:53:17,030 --> 00:53:18,949 தயவுசெஞ்சு அந்தச் சிக்னலை எனக்கு அனுப்புங்க. 496 00:53:19,449 --> 00:53:20,534 அனுப்புறேன். 497 00:53:40,637 --> 00:53:42,055 அது தகவல்கள். 498 00:53:44,558 --> 00:53:48,228 - அது தகவல்கள், ஆனா கம்ப்ரஸ் பண்ணப்பட்டிருக்கு… - எதை வச்சு? 499 00:53:49,438 --> 00:53:50,772 அங்க என்ன நடக்குது? 500 00:53:52,274 --> 00:53:54,193 எதை வச்சு கம்ப்ரஸ் பண்ணாங்க, செர்கே? 501 00:53:55,986 --> 00:53:57,821 இது என்னது? என்னை எதுல மாட்டி விடப் பார்க்குற? 502 00:53:57,905 --> 00:54:00,073 - நான்… - இன்னும் ஒரே ஒரு நிமிஷம். ப்ளீஸ். சீக்கிரம். 503 00:54:00,157 --> 00:54:01,366 எனக்கு ஒரு காலண்டர் தேவைப்படுது. 504 00:54:01,450 --> 00:54:02,534 யார்கிட்ட இருக்கு… 505 00:54:04,828 --> 00:54:06,747 - ஆமா, இன்னும்… இன்னும் ஒரே ஒரு நிமிஷம். - ஹே. 506 00:54:14,379 --> 00:54:15,756 நான் பேசுறது கேக்குதா? லைன்ல இருக்கீங்களா? 507 00:54:15,839 --> 00:54:16,924 இணைப்பில் வாங்க. 508 00:54:23,096 --> 00:54:25,265 - இல்ல, அதுக்கு வாய்ப்பே இல்ல. - எதுக்கு வாய்ப்பில்ல? 509 00:54:25,349 --> 00:54:26,600 செர்கே. 510 00:54:29,728 --> 00:54:31,897 மன்னிக்கவும். மன்னிக்கவும். 511 00:54:31,980 --> 00:54:34,733 - செர்கே. போதும். நீ… - இல்ல. ப்ளீஸ். ப்ளீஸ். 512 00:54:35,359 --> 00:54:36,443 லைன்ல இருக்கீங்களா? 513 00:54:37,361 --> 00:54:39,821 - நான் பேசுறது கேக்குதா? பதில் சொல்லுங்க. - ஹலோ, ஹலோ, ஹலோ. 514 00:54:40,322 --> 00:54:41,448 ஆமா, ஆமா. நான் லைன்லதான் இருக்கேன். 515 00:54:41,532 --> 00:54:43,534 இந்தச் சிக்னல் எங்கிருந்து வருது? 516 00:54:44,368 --> 00:54:49,623 தோழர் பெலிகோவா, என்னோட அல்காரிதத்தைப் பயன்படுத்தி 517 00:54:49,706 --> 00:54:54,378 அந்த அலைவரிசையில தகவல்களை அனுப்பக் கூடிய விண்கலம் ஒன்னே ஒன்னு தான் இருக்கு. 518 00:54:59,049 --> 00:55:00,342 இல்ல. 519 00:55:02,386 --> 00:55:05,722 - அப்படி இருக்காது… அதுக்கு வாய்ப்பே இல்ல. - எனக்குத் தெரியல. 520 00:55:06,682 --> 00:55:10,143 ஆனா எப்படியோ, ஒருவேளை அது அழியாம இருந்திருந்தா, 521 00:55:11,562 --> 00:55:15,566 அப்போ அது பூமிக்குத் திரும்புற நேரம் சரியா… 522 00:55:16,608 --> 00:55:17,609 இப்போதான். 523 00:56:52,246 --> 00:56:54,248 வசனங்கள் மொழிபெயர்ப்பு மேனகா மணிகண்டன்