1 00:00:23,482 --> 00:00:26,068 நான் இன்று பேட்மின்டனுக்குப் பதிவுசெய்யலாம். 2 00:00:26,068 --> 00:00:28,278 நீ என்ன செய்யப் போகிறாய், சார்லி பிரவுன்? 3 00:00:30,572 --> 00:00:31,657 என்ன அது? 4 00:00:33,951 --> 00:00:36,703 ஆஸ்ட்ரோனாட் பயிற்சிக்கான பதிவுசெய்தல் ஷீட். 5 00:00:36,703 --> 00:00:38,747 அது வித்தியாசமான முகாம் செயல்பாடு. 6 00:00:56,139 --> 00:00:58,433 நான் பேட்மின்டனே விளையாடுகிறேன். 7 00:01:01,186 --> 00:01:03,647 “சாலியின் பல்.” 8 00:01:06,233 --> 00:01:07,776 இந்த டோஸ்ட்டைப் பாருங்கள். 9 00:01:07,776 --> 00:01:09,528 சீராக வெண்ணெய் தடவப்பட்டுள்ளது. 10 00:01:09,528 --> 00:01:11,822 மார்மலேட் சமமாக உள்ளது. 11 00:01:11,822 --> 00:01:14,700 நான் சிறப்பாகச் செய்துள்ளேன். 12 00:01:19,246 --> 00:01:21,206 அது அவ்வளவு மோசமில்லை. 13 00:01:22,249 --> 00:01:24,209 நான் ஒரு பல்லை இழந்துவிட்டேன். 14 00:01:24,209 --> 00:01:26,086 அது வலிமையான மார்மலேட்தான். 15 00:01:26,086 --> 00:01:27,546 நலமாக உள்ளாயா? 16 00:01:27,546 --> 00:01:28,797 நலமாகவா? 17 00:01:29,840 --> 00:01:31,091 நான் மிகவும் சிறப்பாக உள்ளேன்! 18 00:01:31,091 --> 00:01:33,635 இது பல் தேவதையின் வருகைக்கான அறிகுறி! 19 00:01:34,928 --> 00:01:37,764 வழி விடுங்கள். 20 00:01:37,764 --> 00:01:40,517 ஒரு பல் இல்லாமல் வருகிறேன். 21 00:01:40,517 --> 00:01:42,477 ஸ்நூப்பி, விஷயம் தெரியுமா? 22 00:01:42,978 --> 00:01:45,063 என் குழந்தைப் பல் ஒன்றை இழந்துவிட்டேன். 23 00:02:14,218 --> 00:02:16,512 நான் ஒரு பல்லை இழந்தது தெரியுமா? 24 00:02:17,054 --> 00:02:19,097 முகாமில் அப்படித்தான் பேசிக்கொள்கிறார்கள். 25 00:02:19,097 --> 00:02:22,893 இப்போது பல் தேவதை எவ்வளவு கொடுக்கிறது எனத் தெரியவில்லை. 26 00:02:22,893 --> 00:02:25,062 அது முன்பல்லா பின்பல்லா? 27 00:02:25,062 --> 00:02:26,230 பின்பல். 28 00:02:26,230 --> 00:02:29,650 அவைதான் பெரும்பாலான மெல்லும் வேலையைச் செய்வதால், அவற்றுக்கு நிறைய கிடைக்கும். 29 00:02:30,234 --> 00:02:32,444 நான் அப்படி நினைக்கவில்லை. 30 00:02:32,444 --> 00:02:35,364 வழக்கமாக பல் தேவதை எனக்கு ஒரு நிக்கல் கொடுக்கும். 31 00:02:35,364 --> 00:02:37,783 எனக்கு இதற்கு 25 செண்ட் கிடைக்கலாம். 32 00:02:37,783 --> 00:02:39,952 இந்தப் பல் ஒரு தங்கச் சுரங்கம். 33 00:02:40,577 --> 00:02:43,914 நிச்சயமாக, நீ முகாமிற்குக் கிளம்பும் முன் உன் வீட்டில் முன்னனுப்பும் முகவரியை 34 00:02:43,914 --> 00:02:45,874 விட்டுச் சென்றிருப்பாய் என நம்புகிறேன். 35 00:02:46,959 --> 00:02:48,585 என்ன சொல்கிறாய்? 36 00:02:48,585 --> 00:02:51,255 பிறகு எப்படி பல் தேவதை உன்னைக் கண்டறிய முடியும்? 37 00:02:51,255 --> 00:02:53,674 இதை என் தலையணைக்கு அடியில் வைத்தால் 38 00:02:53,674 --> 00:02:56,260 அதை எங்கே கண்டறிவது என பல் தேவதைக்குத் தெரியும் என நினைத்தேன். 39 00:02:56,260 --> 00:02:59,930 எப்படி? இது சான்டா கிளாஸ் போல இல்லை. 40 00:02:59,930 --> 00:03:04,560 அவர் ஆண்டில் ஒருமுறை மட்டுமே வேலை செய்வதால் அனைவரது இடத்தையும் தெரிந்து வைத்திருப்பார். 41 00:03:04,560 --> 00:03:06,895 அவருக்கு உதவ எல்ஃப்கள் இருக்கின்றனர். 42 00:03:07,896 --> 00:03:09,898 நான் அதைப் பற்றி நினைக்கவில்லை. 43 00:03:09,898 --> 00:03:14,027 அதனால்தான் எப்போதும் நான் முன்னனுப்பும் முகவரியை வைத்துவிட்டு வருவேன். 44 00:03:14,528 --> 00:03:15,779 உண்மையிலேயே வைப்பாள். 45 00:03:15,779 --> 00:03:19,783 பாட்டி வீட்டுக்குச் செல்வது, ஸ்லம்பர் பார்ட்டிகள், எதுவாக இருந்தாலும். 46 00:03:19,783 --> 00:03:21,743 அதுதான் புத்திசாலித்தனம்! 47 00:03:22,244 --> 00:03:23,871 என் கதை முடிந்தது. 48 00:03:36,049 --> 00:03:38,635 நீ வீட்டுக்குச் செல்லும் வரை அந்தப் பல்லை வைத்திருந்து, பிறகு அதை 49 00:03:38,635 --> 00:03:40,762 உன் தலையணையின் அடியில் வைக்கலாமா? 50 00:03:40,762 --> 00:03:43,432 அதன் மதிப்பு குறையும் வரை நான் காத்திருக்க மாட்டேன். 51 00:03:43,932 --> 00:03:47,477 பல் தேவதைக்கு இந்த முகாமின் முகவரியை ஏன் கடிதத்தில் அனுப்பக் கூடாது? 52 00:03:48,020 --> 00:03:51,315 அதேதான்! கடிதத்தை எழுது, அண்ணா. 53 00:03:52,149 --> 00:03:56,945 அன்புள்ள பல் தேவதையே, நான் சமீபத்திய முகவரி மாற்றத்தை உனக்குத் தெரிவிக்க எழுதுகிறேன், 54 00:03:56,945 --> 00:04:00,782 என் குழந்தைப் பல் விழுந்துவிட்டதால், நீ குழப்பமடைவதை விரும்பவில்லை. 55 00:04:00,782 --> 00:04:04,453 பின்பல்லுக்கான தொகை 25 செண்ட் என்பது புரிகிறது, 56 00:04:04,453 --> 00:04:08,624 ஆனால் எனக்கு நீ ஐந்து நிக்கல்கள் அல்லது இரண்டு டைம் மற்றும் ஐந்து பென்னி... 57 00:04:08,624 --> 00:04:11,877 நாம் இருப்பிடத்தில் மட்டும் கவனம் செலுத்தலாம். 58 00:04:11,877 --> 00:04:13,128 நல்ல பாயிண்ட். 59 00:04:13,128 --> 00:04:18,050 நீ என்னை ஸ்ப்ரிங் லேக் முகாம், கேபின் பி, பின் ஜன்னலருகே முதல் பன்க்கில் காணலாம். 60 00:04:18,050 --> 00:04:19,343 வாழ்த்துகள். 61 00:04:19,343 --> 00:04:21,762 மற்றும் பல. சாலி பிரவுன். 62 00:04:22,930 --> 00:04:24,806 நான் இதை உடனே அனுப்புகிறேன். 63 00:04:24,806 --> 00:04:27,059 நீதான் சிறந்த அண்ணன். 64 00:04:27,059 --> 00:04:28,977 இருபத்து ஐந்து செண்ட் என்பது நிறைய பணம். 65 00:04:28,977 --> 00:04:32,523 நான் பொறுப்புள்ள நிதித் திட்டத்தை உருவாக்க வேண்டும். 66 00:04:33,440 --> 00:04:36,652 இரு. எனக்கு பல் தேவதையின் முகவரி தெரியாதே. 67 00:04:36,652 --> 00:04:38,695 இதை எங்கே அனுப்புவது? 68 00:04:44,952 --> 00:04:48,705 பல்லை இழப்பது என்பது விழுவதைக் குறிப்பது. 69 00:04:48,705 --> 00:04:50,415 அது இன்னும் சாலியிடம்தான் உள்ளது. 70 00:04:57,256 --> 00:04:59,466 அவள் என்னிடம் பல் தேவதைக்கு கடிதம் அனுப்பும்படி கூறினாள், 71 00:04:59,466 --> 00:05:01,718 ஆனால் இதை எங்கே அனுப்புவது எனத் தெரியவில்லை. 72 00:05:01,718 --> 00:05:03,595 நான் அவளை ஏமாற்ற விரும்பவில்லை. 73 00:05:07,432 --> 00:05:09,560 நான் நினைப்பதைத்தான் நீயும் நினைக்கிறாயா? 74 00:05:15,232 --> 00:05:17,568 இல்லை, ஸ்நூப்பி. நான் உன்னிடம் 25 செண்ட் தருகிறேன், 75 00:05:17,568 --> 00:05:22,114 நீ அதை சாலியின் பல்லிற்குப் பதிலாக மாற்றி, பல் தேவதையின் வேலையைச் செய்யலாம். 76 00:05:25,492 --> 00:05:27,160 நாய் பிஸ்கட் தந்தால் செய்வாயா? 77 00:05:30,497 --> 00:05:31,623 இதோ. 78 00:05:32,708 --> 00:05:37,087 இப்போது நான் செய்ய வேண்டியதெல்லாம் தூங்கி, மிச்சத்தை பல் தேவதையிடம் விடுவதுதான். 79 00:05:38,380 --> 00:05:40,841 ஆனால் எனக்கு தூக்கம் வரவில்லை எனில் என்ன செய்வது? 80 00:05:40,841 --> 00:05:42,342 நான் இரவு முழுவதும் விழித்திருந்தால் என்ன செய்வது? 81 00:05:42,342 --> 00:05:43,468 நான்... 82 00:05:46,847 --> 00:05:48,015 சரி, ஸ்நூப்பி. 83 00:05:48,015 --> 00:05:50,976 நீ உள்ளே பதுங்கிச் சென்று யாரையும் எழுப்பாமல் 84 00:05:50,976 --> 00:05:52,895 இதை வைக்க வேண்டும். 85 00:05:53,520 --> 00:05:54,855 புரிந்ததா? 86 00:05:56,940 --> 00:06:00,652 இதுதான் என்னிடம் இருக்கும் ஒரே 25 செண்ட், ஜாக்கிரதை. 87 00:06:27,262 --> 00:06:30,307 ஒருவருக்காக நல்ல விஷயம் செய்வது, மகிழ்ச்சியாக உள்ளது. 88 00:06:34,353 --> 00:06:35,354 நன்றி, நண்பா. 89 00:06:35,354 --> 00:06:39,024 நாளை சாலியின் முகத்தைப் பார்க்க மிகவும் ஆர்வமாக உள்ளேன். 90 00:06:43,320 --> 00:06:44,947 பல் தேவதை வந்துள்ளது. 91 00:06:44,947 --> 00:06:46,114 ஸ்ப்ரிங் லேக் 92 00:06:46,114 --> 00:06:48,408 நாய் பிஸ்கட்டா? 93 00:06:49,117 --> 00:06:50,786 இது மோசமான விஷயம். 94 00:06:50,786 --> 00:06:53,539 இது அதிர்ச்சிகரமானது. நான் வழக்கு தொடுப்பேன். 95 00:06:53,539 --> 00:06:57,209 பல் தேவதை இப்படிச் செய்ய நான் என்ன செய்தேன்? 96 00:06:57,209 --> 00:07:00,254 நான் பணம் எதிர்பார்த்தேன், ஸ்நாக்ஸ் இல்லை. 97 00:07:00,254 --> 00:07:02,840 அதுவும் நாய் பிஸ்கட். 98 00:07:04,049 --> 00:07:05,509 இது கவனக்குறைவாகத்தான் இருக்கும். 99 00:07:05,509 --> 00:07:06,885 கடிதம் எழுதிக்கொள்! 100 00:07:06,885 --> 00:07:12,099 அன்புள்ள பல் தேவதையே, என் பல்லுக்கு பதிலாக உங்கள் “பரிசு” கிடைத்தது. 101 00:07:12,099 --> 00:07:15,644 குழந்தைப் பல்லை இழப்பது என்பது பக்குவமடைவதன் அறிகுறி என்பார்கள். 102 00:07:15,644 --> 00:07:18,397 இப்போது நான் மிகவும் பக்குவமடைந்துவிட்டேன். 103 00:07:18,397 --> 00:07:20,232 பக்குவமடைந்து அதன் தன்மையைப் புரிந்துகொண்டேன். 104 00:07:20,232 --> 00:07:22,276 இதைச் சரிசெய். 105 00:07:23,986 --> 00:07:26,321 வாழ்த்துகள். சாலி பிரவுன். 106 00:07:31,326 --> 00:07:34,413 ஸ்நூப்பி, நீ சாலிக்கு தவறான பொருளைக் கொடுத்துள்ளாய். 107 00:07:35,122 --> 00:07:36,373 ம்ம் ம்ம். 108 00:07:42,963 --> 00:07:48,177 உனக்கு நினைவூட்டுகிறேன், ஒரு குழந்தையின் நியாய உணர்வும் வியப்பும் ஆபத்தில் உள்ளது. 109 00:08:20,000 --> 00:08:21,502 நீ அதை மாற்றி வைத்தாயா? 110 00:08:24,296 --> 00:08:26,423 அந்த 25 செண்ட் எங்கே? 111 00:08:28,300 --> 00:08:30,052 நாம் என்ன செய்யப் போகிறோம்? 112 00:08:30,052 --> 00:08:33,138 நாம் சாலியின் தலையணையின் அடியில் எதையாவது வைக்க வேண்டும். 113 00:08:40,729 --> 00:08:43,065 உனக்குக் கடன்பட்டுள்ளேனா? 114 00:08:44,691 --> 00:08:46,860 பல் தேவதை கையெழுத்திட்டதா? 115 00:08:50,614 --> 00:08:52,115 {\an8}உங்களால் நம்ப முடிகிறதா? 116 00:08:52,115 --> 00:08:56,453 {\an8}பல் தேவதையே எழுதிய ‘உனக்குக் கடன்பட்டுள்ளேன்’ என்பது 25 செண்டைவிட மதிப்புமிக்கது. 117 00:08:56,453 --> 00:08:58,121 {\an8}நான் இதை பணமாக மாற்றாமல் இருக்கலாம். 118 00:08:58,121 --> 00:09:01,375 {\an8}யாரிடம் பல் தேவதையின் கையொப்பம் உள்ளது? 119 00:09:01,375 --> 00:09:02,960 {\an8}நீ இதை ஃபிரேம் செய்து வைக்க வேண்டும். 120 00:09:02,960 --> 00:09:05,254 {\an8}அது நல்ல யோசனை. 121 00:09:05,838 --> 00:09:10,008 ’உனக்குக் கடன்பட்டுள்ளேன்’ என்பதற்கு 25 டாலர் பெறாமல் இருப்பது கடினமான காரியம். 122 00:09:11,927 --> 00:09:13,720 இருபத்து ஐந்து டாலரா? 123 00:09:15,222 --> 00:09:18,809 தசமப் புள்ளியை ஒரு நாயை நம்பி விட்டதற்கு இதுதான் கிடைக்கும். 124 00:09:28,861 --> 00:09:30,279 பீகிள் ஸ்கௌட் கையேடு 125 00:09:30,279 --> 00:09:34,366 “பீகிள் ஸ்கௌட் என்பவர்: பயனுள்ளவர். 126 00:09:37,953 --> 00:09:40,205 அற்புதமான வெளிப்புறங்கள். 127 00:09:40,205 --> 00:09:44,001 அதன் அழகும் அமைதியும் காலத்தைக் கடந்தது. 128 00:09:45,836 --> 00:09:49,590 சோகம் என்னவெனில், எல்லாமே அதிக காலம் இருக்காது. 129 00:09:58,182 --> 00:10:01,643 ஆனால் பயனுள்ள பீகிள் ஸ்கௌட் எப்போதும் உதவத் தயாராக இருப்பார். 130 00:10:39,598 --> 00:10:41,808 பயனுள்ளதாக இருக்க ஒரு பீகிள் ஸ்கௌட் கற்றுக்கொண்ட பிறகு, 131 00:10:41,808 --> 00:10:44,853 அவர்களால் சரிசெய்ய முடியாத பிரச்சினையே இல்லை." 132 00:10:49,608 --> 00:10:51,151 ஸ்விஷ். 133 00:10:54,821 --> 00:10:56,281 அது போட்டதாகத்தான் எடுத்துக்கொள்ளப்படும். 134 00:11:08,460 --> 00:11:10,128 என் டோனட். 135 00:11:10,128 --> 00:11:12,923 இது இப்போது டேனிஷாகிவிட்டது. 136 00:11:16,969 --> 00:11:18,595 அடச்சே. 137 00:11:22,432 --> 00:11:27,688 "நினைவிருக்கட்டும், பயனுள்ளதாக இருப்பது என்றால் அனைத்தையும் சரிசெய்ய வேண்டியதில்லை. 138 00:11:36,530 --> 00:11:40,534 அதாவது, நன்றாக வேலை செய்கிறது எனில் அதைச் சரிசெய்ய வேண்டாம்." 139 00:12:26,246 --> 00:12:28,498 “பபுள் கம் குழப்பம்.” 140 00:13:01,281 --> 00:13:03,909 என்னவொரு சங்கடமான காட்சி! 141 00:13:04,785 --> 00:13:08,747 கூட்டுப்பணி, ஒன்றாக வேலை செய்வது, ஒற்றுமையெல்லாம் எங்கே? 142 00:13:08,747 --> 00:13:12,334 உன் கையேட்டில் அந்த விஷயம் பற்றி கண்டிப்பாக எதாவது இருக்குமே. 143 00:13:16,672 --> 00:13:19,049 {\an8}இதோ எளிதாகவே உள்ளதே. 144 00:13:19,049 --> 00:13:22,928 {\an8}”எந்தவொரு மரியாதைக்குரிய பீகிள் ஸ்கௌட் ட்ரூப்புக்கும் கூட்டுப்பணிதான் அடித்தளமாகும்.” 145 00:13:28,267 --> 00:13:29,726 ஸ்க், ஸ்க். 146 00:13:36,358 --> 00:13:40,362 ஜோ ஷ்லபாட்னிக் ரூக்கி கார்ட் இங்குதான் எங்கோ உள்ளது எனத் தெரியும். 147 00:13:40,362 --> 00:13:41,446 இங்கே பாரேன். 148 00:13:41,446 --> 00:13:44,700 பபுள் கம் பாக்கெட், இதில் இன்னும் மூன்று உள்ளது. 149 00:13:46,034 --> 00:13:49,663 பகிர்ந்துகொள்ளப் போதுமானது இருக்கும் வரை அதை வெளியில் காட்டக் கூடாது, சார்லி பிரவுன். 150 00:13:49,663 --> 00:13:54,168 முகாமில் கடைசியாக இருந்த பபுள் கம் பல நாட்களுக்கு முன்பே காலியாகிவிட்டது. 151 00:13:54,668 --> 00:13:56,670 அது மிகவும் மதிப்புமிக்க பொருள். 152 00:13:57,254 --> 00:13:59,423 இது வெறும் பபுள் கம். அப்படியென்ன முக்கிய... 153 00:13:59,423 --> 00:14:04,136 மன்னிக்கவும், எனக்குக் கேட்டது பபுள் கம் கவரின் சத்தமா? 154 00:14:07,347 --> 00:14:09,224 எனக்கு தவறாகக் கேட்டிருக்கலாம். 155 00:14:13,437 --> 00:14:17,316 எனக்குக் கேட்டது நிம்மதிப் பெருமூச்சின் சத்தமா? 156 00:14:18,984 --> 00:14:22,905 {\an8}"உண்மையான கூட்டுப்பணிக்கு ஒருவர் மீது ஒருவர் கவனம் செலுத்த வேண்டும். 157 00:14:26,575 --> 00:14:31,163 கண்களைப் பார்க்கும் எளிய பயிற்சி மூலம் இந்தப் பண்புகளை அதிகப்படுத்தலாம்." 158 00:14:56,396 --> 00:14:59,900 அந்த பபுள் கம்மை உன் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு திரிவதை நம்ப முடியவில்லை. 159 00:14:59,900 --> 00:15:04,363 நீ சொல்வது போல இந்த இடத்தில் பபுள் கம் மீது அதீத ஆர்வமுள்ளது என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 160 00:15:04,363 --> 00:15:06,281 நீங்கள் பபுள் கம் பற்றிப் பேசுகிறீர்களா? 161 00:15:06,281 --> 00:15:07,824 யாரிடம் பபுள் கம் உள்ளது? 162 00:15:07,824 --> 00:15:10,035 சார்லி பிரவுனிடம் பபுள் கம் உள்ளது! 163 00:15:10,035 --> 00:15:12,746 பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு உன்னிடம் இருக்கும் என நம்புகிறேன், சார்லஸ். 164 00:15:12,746 --> 00:15:14,206 கண்டிப்பாக உள்ளது. 165 00:15:14,206 --> 00:15:16,583 நாம் சக் பற்றிப் பேசுகிறோம். 166 00:15:16,583 --> 00:15:20,504 என்னிடம் மூன்று பபுள் கம்தான் உள்ளது. 167 00:15:21,004 --> 00:15:22,714 - இதை ஏற்க முடியாது. - கமான். 168 00:15:22,714 --> 00:15:25,592 - எங்களுக்கு பபுள் கம் தேவை. - அனைவரும் அமைதியாக இருங்கள். 169 00:15:25,592 --> 00:15:28,303 இந்தக் குழப்பத்திற்கு ஒரு தீர்வு உள்ளது. 170 00:15:28,303 --> 00:15:29,930 - உள்ளதா? - ஆம். 171 00:15:29,930 --> 00:15:32,474 சக் தனக்கு மிகவும் பிடித்த இரண்டு நபர்களைத் தேர்வுசெய்து 172 00:15:32,474 --> 00:15:35,352 அவர்களுடன் பகிர வேண்டும். அவ்வளவுதான். 173 00:15:35,352 --> 00:15:36,895 - இருங்கள். - அது சரியான வழி. 174 00:15:36,895 --> 00:15:38,605 - இதில் சொதப்பிவிடாதே. - நல்ல யோசனை. 175 00:15:38,605 --> 00:15:40,023 - எனக்கும் சரிதான். - நியாயமான முடிவு. 176 00:15:40,023 --> 00:15:41,650 அடச்சே. 177 00:15:42,526 --> 00:15:44,695 "கூட்டுப்பணி என்பது நம்பிக்கையில் உருவாவது. 178 00:15:44,695 --> 00:15:47,614 முறையாகக் கண்காணிக்கப்பட்டு, செயல்படுத்தப்படும் 179 00:15:47,614 --> 00:15:51,785 உங்கள் ட்ரூப்பின் ஒற்றுமையை அதிகப்படுத்த நம்பிக்கையுடன் விழுவது நல்ல வழியாகும். 180 00:15:51,785 --> 00:15:55,372 நம்பிக்கை மற்றும் தோழமையை எடுத்துக்காட்ட, காத்துக்கொண்டிருக்கும் உங்கள் அணியின் 181 00:15:55,372 --> 00:15:58,417 கைகளில் பின்பக்கமாக தரையில் விழுங்கள்." 182 00:16:08,719 --> 00:16:12,764 முகாம் முழுக்க உன் பபுள் கம் பற்றித்தான் பேசுகின்றனர், அண்ணா. 183 00:16:12,764 --> 00:16:14,391 அதை நினைவூட்டாதே. 184 00:16:14,391 --> 00:16:19,188 கூடுதலாக இருக்கும் ஒரு பபுள் கம்மை யார் பெறுவார் என்று நான் பொறாமைப்பட மாட்டேன். 185 00:16:19,771 --> 00:16:22,733 உண்மையில், சாலி, கூடுதலாக இரண்டு பபுள் கம் உள்ளன. 186 00:16:23,525 --> 00:16:27,696 ஆம், ஆனால் நீ எனக்கு ஒன்று கொடுத்துவிட்டால், ஒன்றுதான் மீதமிருக்கும். 187 00:16:28,572 --> 00:16:31,617 நீ எனக்கு ஒன்று கொடுப்பதாக உள்ளாய்தானே? 188 00:16:31,617 --> 00:16:34,786 உன் ஒரே தங்கைக்கு. உன் உடன்பிறந்தவளுக்கு. 189 00:16:34,786 --> 00:16:36,997 கண்டிப்பாக எனக்கு ஒன்று கிடைக்கும். 190 00:16:37,706 --> 00:16:39,917 நான் இதைப் பற்றி யோசிக்க வேண்டும். 191 00:16:42,544 --> 00:16:46,590 உன் குடும்பத்தில் ஒருத்தியானதால், இங்கே சட்டப்படி, எனக்கு கொடுக்க வேண்டிய கடமை உனக்குள்ளது. 192 00:16:48,842 --> 00:16:50,427 இதோ வருகிறான். 193 00:16:52,763 --> 00:16:57,226 அது புதிய சட்டையா, சார்லி பிரவுன்? நன்றாக உள்ளது. 194 00:16:57,226 --> 00:16:59,978 உன் முடியில் எதுவும் மாற்றம் செய்துள்ளாயா? 195 00:16:59,978 --> 00:17:03,857 இந்த நேர்மறையான கவனம் அனைத்தும் பபுள் கம்மிற்காக எனத் தோன்றுகிறது. 196 00:17:05,358 --> 00:17:07,069 ஒருவேளை நான் இழிவாக நினைக்கிறேன் போல. 197 00:17:07,069 --> 00:17:08,278 ஹாய், பபுள் கம். 198 00:17:13,659 --> 00:17:15,786 சக், இங்கே வா. 199 00:17:22,751 --> 00:17:23,919 எப்படி இருக்கிறாய்? 200 00:17:23,919 --> 00:17:25,127 நன்றாக இல்லை. 201 00:17:25,628 --> 00:17:28,382 இது அனைத்திற்கும் நான்தான் பொறுப்பு போல நினைக்கிறேன். 202 00:17:28,382 --> 00:17:29,800 நான் மிகவும் வருந்துகிறேன். 203 00:17:29,800 --> 00:17:31,844 மிக்க நன்றி. 204 00:17:31,844 --> 00:17:35,138 பிறருக்கு எதுவும் தேவைப்படும்போது அவர்கள் மிகவும் போலியாக நடப்பார்கள். 205 00:17:35,138 --> 00:17:37,391 நீ இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாதே. 206 00:17:37,391 --> 00:17:40,227 நீ முதலில் பார்க்கும் ஆளிடம் பபுள் கம்மைக் கொடு. 207 00:17:40,727 --> 00:17:41,937 இப்போதிருந்து. 208 00:17:42,813 --> 00:17:44,064 அதாவது இப்போது. 209 00:17:44,064 --> 00:17:45,399 இந்தத் தருணத்தில். 210 00:17:46,817 --> 00:17:48,652 எனக்கு பபுள் கம் வேண்டும், சக். 211 00:17:51,864 --> 00:17:54,324 - வாய்ப்பே இல்லை. - நான்தான் சார்லி பிரவுனுக்குப் பிடித்த நபர். 212 00:17:54,324 --> 00:17:56,493 - அவன் என்னிடம் கொடுப்பான். - இல்லை, எனக்கு! 213 00:17:56,493 --> 00:17:58,287 என்னால் தாங்க முடியவில்லை! 214 00:17:58,287 --> 00:18:02,124 நான் அந்த பபுள் கம்மைக் கண்டுபிடித்திருக்கக் கூடாது என விரும்புகிறேன்! 215 00:18:04,168 --> 00:18:08,463 "கூட்டுப்பணி என்பது பொதுவான இலக்கை நோக்கிய தகவல்தொடர்பில் உருவாவது. 216 00:18:08,463 --> 00:18:12,050 இதைச் சோதிக்க, தடைகள் உள்ள பாதையில் கண்கள் கட்டப்பட்ட நண்பருக்கு, 217 00:18:12,050 --> 00:18:14,803 ட்ரூப் தங்கள் வார்த்தைகள் மூலம் வழிகாட்ட வேண்டும். 218 00:18:15,971 --> 00:18:19,933 ஒருநேரத்தில் ஒருவர் மட்டும் பேசுவதுதான் கூட்டுப்பணிக்கு முக்கியம். 219 00:18:47,294 --> 00:18:50,964 இறுதியில், கூட்டுப்பணி என்பது கட்டாயப்படுத்தி வருவதில்லை. 220 00:18:59,723 --> 00:19:02,601 பீகிள் ஸ்கௌட் ட்ரூப்பானது தங்கள் வேற்றுமைகளை ஒதுக்கிவிட்டு 221 00:19:02,601 --> 00:19:06,146 ஒன்றாக வேலை செய்யக் கற்றுக்கொள்ளும்போதுதான் ஓர் அணியாக மாறும். 222 00:19:06,146 --> 00:19:09,441 பொதுவான இலக்கைவிட ஓர் அணியை ஒன்றிணைக்கும் விஷயம் எதுவுமில்லை." 223 00:19:21,328 --> 00:19:23,080 நான் என்ன செய்வது, லைனஸ்? 224 00:19:23,080 --> 00:19:27,000 நான் யாரைத் தேர்வுசெய்தாலும், மற்றவர்கள் ஏமாற்றம் அடைவார்கள். 225 00:19:27,000 --> 00:19:29,670 இது சாத்தியமில்லாத சூழல்தான். 226 00:19:30,295 --> 00:19:32,214 ஆனால் அதுதான் வாழ்க்கை. 227 00:19:32,214 --> 00:19:35,092 உன்னால் எல்லாரையும் திருப்திப்படுத்த முடியாது. 228 00:19:36,260 --> 00:19:37,678 அதேதான்! 229 00:19:38,554 --> 00:19:41,265 - நமக்கு இன்னும் பபுள் கம் கிடைக்கவில்லை. - உனக்கு பபுள் கம்மே பிடிக்காது. 230 00:19:41,265 --> 00:19:42,724 அனைவரும் கவனியுங்கள். 231 00:19:42,724 --> 00:19:44,768 நான் ஒரு விஷயத்தைக் கூற வேண்டும். 232 00:19:44,768 --> 00:19:47,229 அனைவரும் அமைதியாக இருங்கள். 233 00:19:47,229 --> 00:19:52,860 தன் குடும்பக் கடமையிலிருந்து ஒருபோதும் விலகாத என் அன்பான அண்ணண்... 234 00:19:52,860 --> 00:19:55,821 தன் பபுள் கம்மை என்ன செய்வதெனத் தீர்மானித்துவிட்டான். 235 00:19:55,821 --> 00:19:57,531 ஆம். 236 00:19:58,198 --> 00:19:59,741 பபுள் கம் என்னிடம் இல்லை. 237 00:20:01,493 --> 00:20:03,871 என்ன சொன்னாய்? 238 00:20:03,871 --> 00:20:05,539 பபுள் கம் என்னிடம் இல்லை. 239 00:20:05,539 --> 00:20:08,250 பபுள் கம் என்னிடம் இல்லை, யாருக்கும் எதுவும் இல்லை. 240 00:20:08,250 --> 00:20:09,459 எனக்கும் கூட. 241 00:20:09,459 --> 00:20:13,589 ஒருவர் மீது ஒருவர் பொறாமைப்படுவதைவிட எல்லாரும் சமமாக ஏமாற்றமடைவது 242 00:20:13,589 --> 00:20:18,135 நல்லது எனத் தோன்றியது, அது என் மீது எல்லாருக்கும் கோபத்தை ஏற்படுத்தினாலும் சரி. 243 00:20:20,053 --> 00:20:21,972 - அவன் சொல்வது சரிதான். - சரி, அண்ணா. 244 00:20:21,972 --> 00:20:24,391 - ஒருமுறையாவது அவன் சரியாகப் பேசுகிறான். - யாருக்குத்தான் பபுள் கம் வேண்டும்? 245 00:20:24,391 --> 00:20:25,767 என்னவொரு சிறுவன். 246 00:20:26,643 --> 00:20:31,356 இந்த உலகத்திற்கு இன்னும் கொஞ்சம் சார்லி பிரவுனின் குணங்கள்தான் தேவை. 247 00:20:31,356 --> 00:20:33,942 அந்த பபுள் கம்மை என்னதான் செய்தாய்? 248 00:20:51,877 --> 00:20:52,920 சார்லஸ் M. ஷுல்ஸ் எழுதிய பீனட்ஸ் காமிக் ஸ்ட்ரிப்பை அடிப்படையாகக் கொண்டது 249 00:21:16,818 --> 00:21:18,820 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம் 250 00:21:21,907 --> 00:21:23,909 நன்றி, ஸ்பார்க்கி. எங்கள் மனதில் என்றும் இருப்பீர்கள்.