1 00:00:22,564 --> 00:00:24,733 நாங்க ஒரு நாளைக்கு சுமார் 300 பேரல்களைக் கையாள்றோம். 2 00:00:25,275 --> 00:00:27,110 அது ரொம்ப அதிகமாகி இருக்கே. 3 00:00:29,947 --> 00:00:32,533 கவலைப்படாத. அவன் பார்த்துக்குவான். 4 00:00:34,159 --> 00:00:36,119 அவருக்கு நிறையவே சுதந்திரம் கொடுக்கிறீங்க. 5 00:00:37,496 --> 00:00:38,789 நான் என்ன பண்றேன்னு எனக்குத் தெரியும். 6 00:00:40,040 --> 00:00:41,542 என்னோட ஒழுங்குமுறை லைசென்ஸ். 7 00:00:42,167 --> 00:00:43,668 பசங்க எப்படி இருக்காங்க? 8 00:00:43,669 --> 00:00:45,462 ம், பெரியவன் காலேஜுக்குப் போறான். 9 00:00:46,380 --> 00:00:47,381 அதுக்கு நிறைய செலவாகுமே. 10 00:00:48,298 --> 00:00:49,799 அதை ஏன் கேட்கிறீங்க? 11 00:00:49,800 --> 00:00:50,843 இது உதவும். 12 00:01:00,394 --> 00:01:01,520 இங்க கையெழுத்து போடுங்க. 13 00:01:18,328 --> 00:01:19,162 கலிஃபோர்னியா எரிசக்தி கமிஷன் 14 00:01:20,205 --> 00:01:21,415 என்ன பதட்டமா இருந்துச்சா? 15 00:01:22,124 --> 00:01:23,125 எப்படிப் போச்சு? 16 00:01:23,625 --> 00:01:25,794 அடுத்த 12 மாசத்துக்கு அரசு அங்கீகாரம் கிடைச்சுடுச்சு. 17 00:01:28,463 --> 00:01:30,840 நம்ம உற்பத்தியை நீ கொஞ்சம் குறைக்கணும். 18 00:01:30,841 --> 00:01:33,510 நிறைய பணம் வரதால, என்னால பாதுகாப்பா மாத்த முடியல. 19 00:01:34,636 --> 00:01:36,304 நீ எனக்கு நன்றி சொல்லணும். 20 00:01:36,305 --> 00:01:37,805 திமிரா பேசாத. 21 00:01:37,806 --> 00:01:39,557 நம்பிக்கை தான் காசு. 22 00:01:39,558 --> 00:01:41,852 இல்ல, ஜான். காசு தான் காசு. 23 00:02:02,831 --> 00:02:03,957 என்ன? 24 00:02:05,042 --> 00:02:06,752 இங்க வரோம்னு நீங்க சொல்லியிருக்கலாம். 25 00:02:07,336 --> 00:02:08,669 சின்னதா ஒரு நிறுத்தம் அவ்வளவு தான். 26 00:02:09,755 --> 00:02:11,757 இதுல நான் பங்கெடுத்துக்க விரும்பலன்னு உங்களுக்குத் தெரியும். 27 00:02:12,424 --> 00:02:13,841 எதுல? 28 00:02:13,842 --> 00:02:15,969 இது. அவங்க. எல்லாமே. 29 00:02:16,720 --> 00:02:17,846 அட. என்னை நம்பு. 30 00:02:18,514 --> 00:02:20,015 இங்க ஒரு நல்ல விஷயம் போயிட்டிருக்கு. 31 00:02:28,106 --> 00:02:29,691 இது நல்லா முடியப் போறதில்ல. 32 00:03:41,722 --> 00:03:43,724 மேரிஸா ஸ்டேப்லியின் நாவலிலிருந்து 33 00:04:40,781 --> 00:04:42,323 எவ்வளவு நேரமா அப்படி இருக்கான்? 34 00:04:42,324 --> 00:04:43,534 ரெண்டு மணிநேரமா. 35 00:04:44,910 --> 00:04:46,160 என்ன கிடைச்சது? 36 00:04:46,161 --> 00:04:47,621 ஒண்ணுமில்ல. பேசமாட்டேங்கிறான். 37 00:04:49,122 --> 00:04:50,541 இது அவன் பர்ஸ்ல இருந்துச்சு. 38 00:04:55,546 --> 00:04:57,881 சரி. ட்ரக்கில இருந்து டூல்பாக்ஸை எடு. 39 00:05:30,539 --> 00:05:32,457 நல்லா தான் அடிச்சிருக்காங்க, என்ன? 40 00:05:32,958 --> 00:05:34,543 என்னைப் பாருங்க. மிஸ்டர் மில்லர்? 41 00:05:35,794 --> 00:05:37,754 என்னைப் பாருங்க, மிஸ்டர் மில்லர். 42 00:05:40,132 --> 00:05:41,716 என் பெயர் டச். 43 00:05:41,717 --> 00:05:45,012 நான்… உங்க கால்ல தோட்டா போட்ட பெண் கிட்ட வேலை பார்க்குறேன். 44 00:05:48,182 --> 00:05:49,265 இந்தாங்க. உங்களுக்கு ஒண்ணு வேணுமா? 45 00:05:49,266 --> 00:05:50,516 என்ன? 46 00:05:50,517 --> 00:05:51,643 - உங்களுக்கு ஒண்ணு வேணுமா? - வே… 47 00:05:52,728 --> 00:05:55,271 - வேண்டாம். - ஆ. நான் சிகரெட்டை நிறுத்த முயற்சி பண்றேன். 48 00:05:55,272 --> 00:05:56,273 அது… 49 00:05:57,566 --> 00:05:59,025 ஆக, நான் வேலை பார்க்கிறேனே, அவங்க, தன்னோட மகனை கண்டுப்பிடிக்க… 50 00:05:59,026 --> 00:06:02,070 …முயற்சிக்கிற ஒரு தாய். 51 00:06:02,946 --> 00:06:05,531 ஒரு குட்டியை விட்டு தாய் பிரியும் போது, ஏதோ ராசாயனம் நடக்குது, 52 00:06:05,532 --> 00:06:08,284 ஏதோ ஒரு மிருக உணர்வு. 53 00:06:08,285 --> 00:06:10,244 என்னால முடிஞ்சா, நான் உங்களுக்கு உதவுவேன். 54 00:06:10,245 --> 00:06:12,289 சத்தியமா, எனக்கு அவனைத் தெரியாது. 55 00:06:20,881 --> 00:06:24,051 பாருங்க, மூக்கு உடைஞ்சா நல்லா வலிக்கத் தான் செய்யும்… 56 00:06:25,219 --> 00:06:26,970 …ஆனால் அது பெரிய வலி இல்ல. 57 00:06:27,638 --> 00:06:30,891 அது நீங்க மூச்சுவிடுறதையும் மாத்தும், ஏன்னா, நீங்க இப்ப வாய் வழியா தான் மூச்சுவிடுறீங்க. 58 00:06:31,391 --> 00:06:33,769 அதனால, இதை கொஞ்சம் வேகப்படுத்த முடியுமான்னு பார்க்கலாம். 59 00:06:34,353 --> 00:06:35,686 என்ன? 60 00:06:35,687 --> 00:06:39,650 கடவுளே. வேண்டாம், வேண்டாம். கடவுளே. ப்ளீஸ், வேண்டாம். 61 00:06:40,484 --> 00:06:41,860 ப்ளீஸ். நான்… 62 00:06:47,115 --> 00:06:49,575 - ஐயோ. ப்ளீஸ் வேண்டாம்… - கேரி மாஸ்டர்ஸன். 63 00:06:49,576 --> 00:06:51,827 எனக்கு… எனக்கு… அவனைத் தெரியாது. 64 00:06:51,828 --> 00:06:53,621 எனக்கு அவனைத் தெரியாது. தெரியாது. 65 00:06:53,622 --> 00:06:55,373 கேரி உங்களைப் பார்க்க வந்தான்னு தெரியும். 66 00:06:55,374 --> 00:06:56,457 இல்ல. 67 00:06:56,458 --> 00:06:57,626 நீங்க என்ன பண்றீங்கன்னு எங்களுக்குத் தெரியும். 68 00:06:58,627 --> 00:07:00,628 நீங்க கேரி மாஸ்டர்ஸனுக்கு ஒரு புதிய அடையாள அட்டை போட்டுக் கொடுத்தீங்களா? 69 00:07:00,629 --> 00:07:02,463 நான் அடையாள அட்டைகள் பண்றதில்ல. 70 00:07:02,464 --> 00:07:07,301 தெரியல, நான்… இல்ல, இது ஏதோ பெரிய தவறு. 71 00:07:07,302 --> 00:07:09,470 கடவுளே. கடவுளே. வேண்டாம். 72 00:07:09,471 --> 00:07:10,972 ப்ளீஸ். ப்ளீஸ். 73 00:07:10,973 --> 00:07:12,224 ப்ளீஸ். ஐயோ. 74 00:07:20,190 --> 00:07:21,482 ஹே. 75 00:07:21,483 --> 00:07:22,776 குட் மார்னிங். 76 00:07:23,861 --> 00:07:25,069 குதிரை சவாரி எப்படி இருந்துச்சு? 77 00:07:25,070 --> 00:07:27,239 நல்லா இருந்துச்சு. மனசு கொஞ்சம் தௌிவாச்சு. 78 00:07:31,451 --> 00:07:33,287 ஒண்ணும் கிடைக்கலையா? 79 00:07:34,204 --> 00:07:37,249 - ப்ளீஸ். எனக்குத் தெரியாது. - ஆமா, அவருக்கு ஒண்ணும் தெரியல. 80 00:07:39,626 --> 00:07:40,627 வீணாயிடுச்சு. 81 00:07:41,253 --> 00:07:43,504 - அமைதியா முடிச்சிடு. - எ-என்ன? 82 00:07:43,505 --> 00:07:45,798 - குதிரைகளைப் பயமுறுத்த வேண்டாம். - போ-போகாதீங்க. 83 00:07:45,799 --> 00:07:47,551 - கண்டிப்பா. - கடவுளே. வேண்டாம், போகாதீங்க. 84 00:07:49,678 --> 00:07:51,053 என்னை விடுங்க. 85 00:07:51,054 --> 00:07:52,055 வேண்டாம். 86 00:07:53,932 --> 00:07:56,017 வேண்டாம். நான்… ப்ளீஸ். கெஞ்சி கேட்கிறேன். 87 00:07:56,018 --> 00:07:57,435 தெரியாது. எனக்கு அவனைத் தெரியாது. 88 00:07:57,436 --> 00:07:58,770 எனக்கு… எனக்குத் தெரியாது… 89 00:08:29,134 --> 00:08:31,136 புற்றுநோய் கொடுமையானது 90 00:08:33,597 --> 00:08:37,307 லாம்பாக் தேசிய சிறையில் உள்ள ஒரு கைதியிடமிருந்து உங்களுக்கு அழைப்பு வருகிறது. 91 00:08:37,308 --> 00:08:39,018 ஜான் ஆர்ம்ஸ்ட்ராங். 92 00:08:39,019 --> 00:08:40,270 ஏற்க ஒன்றை அழுத்தவும். 93 00:08:41,980 --> 00:08:44,774 - அப்பா. - உன்னைக் கூப்பிட்டுட்டே இருந்தேன். 94 00:08:44,775 --> 00:08:47,110 - நான் என்ன பண்றதுன்னு நீங்க சொல்லணும். - உனக்கு ஒண்ணுமில்லையே? 95 00:08:48,612 --> 00:08:51,114 - என்னால முடியும்னு தோணல. - நிச்சயம் உன்னால முடியும். 96 00:08:52,157 --> 00:08:54,910 உங்களுக்கு… உங்களுக்குப் புரியல. ஒவ்வொருத்தரா செத்துட்டிருக்காங்கப்பா. 97 00:08:58,664 --> 00:08:59,790 இல்ல, ஃபோன்ல வேண்டாம். 98 00:09:01,500 --> 00:09:04,126 அடுத்து என்ன பண்றதுன்னு யோசி. எங்கேயாவது பாதுகாப்பான இடத்துக்குப் போ. 99 00:09:04,127 --> 00:09:07,213 அடுத்து முறை உன்னைக் கூப்பிடும் போது, ஒரு நல்ல இடத்தில இரு. அதைத் திருப்பிச் சொல்லு. 100 00:09:07,214 --> 00:09:09,632 - நான் ஒரு நல்ல இடத்தில இருப்பேன். - திருப்பிச் சொல்லு. 101 00:09:09,633 --> 00:09:11,051 நான் ஒரு நல்ல இடத்தில இருப்பேன். 102 00:09:13,011 --> 00:09:14,137 லக்கி? 103 00:10:16,992 --> 00:10:18,075 ஓட்டுனர் உரிமம் மில்லர் நோவா 104 00:10:18,076 --> 00:10:19,119 418 பாக்ஸ்டர் தெரு லாஸ் ஏஞ்சலஸ், கலிஃபோர்னியா 105 00:10:32,674 --> 00:10:36,219 எப்படி இந்த பொண்ணு தொடுறதெல்லாம் தீயில கருகுது? 106 00:10:36,220 --> 00:10:37,763 அவ இப்ப எங்க வேணும்னாலும் இருக்கலாம். 107 00:10:39,097 --> 00:10:40,973 பாருங்க, நீங்க இதை கேட்க விரும்ப மாட்டீங்க… 108 00:10:40,974 --> 00:10:42,226 அப்ப என் கிட்ட சொல்லாத. 109 00:10:42,726 --> 00:10:46,187 வேகஸ்ல இந்த கார் வாடகை கம்பெனியில ஒரு கார் புக் பண்ணதைக் கண்டுப்பிடிச்சோம். 110 00:10:46,188 --> 00:10:49,065 - நாம தான் ஏற்கனவே காரை கண்டுப்பிடிச்சிட்டோமே. - இல்ல, இது இன்னொன்னு. 111 00:10:49,066 --> 00:10:50,608 மொகாவே கவுன்டி தீயணைப்பு துறை 112 00:10:50,609 --> 00:10:52,109 இது ப்ரிஸில்லாவோட பேரில முன்பதிவு செய்யப்பட்டிருக்கு. 113 00:10:52,110 --> 00:10:54,071 இது அவங்க வேகஸ் போய் சேர்ந்த அதே நாள். 114 00:10:54,613 --> 00:10:56,698 அந்த கார்ல தான் கேரி போயிருக்கணும். 115 00:10:57,824 --> 00:10:58,951 அதனால நாம வேற வழியில யோசிக்கணும். 116 00:11:00,452 --> 00:11:01,954 - வேற வழியிலேயா? - ஆமா. 117 00:11:02,829 --> 00:11:04,331 வேற வழியில போறதுக்கு இது சரியான நேரம் இல்ல. 118 00:11:05,123 --> 00:11:06,917 அவ இங்க தான் இருந்திருக்கா. நாம நெருங்கிட்டோம். 119 00:11:08,836 --> 00:11:12,213 வேகஸுக்கு இதுக்கும் வித்தியாசம் இல்ல. ஏற்கனவே கெர்ஷாவோட நிலைமை சரியில்ல. 120 00:11:12,214 --> 00:11:13,297 மொகாவே கவுன்டி ஆம்புலென்ஸ் 121 00:11:13,298 --> 00:11:14,966 கெர்ஷா பத்தி நான் கவலைப்பட்டுக்கிறேன். 122 00:11:14,967 --> 00:11:16,676 நீங்க கவலைப்பட்டா தான் பிரச்சினையில்லையே. 123 00:11:16,677 --> 00:11:19,679 நீங்க செய்ய வேண்டியதைச் செய்ய மாட்டேங்கிறீங்க, ராண்ட். 124 00:11:19,680 --> 00:11:21,264 அது தான் உங்களைச் சிறந்தவளா ஆக்குதுன்னு நீங்க நினைக்கிறீங்க, 125 00:11:21,265 --> 00:11:23,475 ஆனால் இப்ப ரெண்டு முறை அவ உங்க கிட்ட இருந்து தப்பிச்சிட்டா. 126 00:11:24,142 --> 00:11:26,185 நாம தகவல்கள் அடிப்படையில வேலைப்பார்க்கணும், உணர்வுகள் அடிப்படையில இல்ல. 127 00:11:26,186 --> 00:11:27,938 சில சமயம் நம்ம கிட்ட உணர்வுகள் மட்டும் தான் இருக்கும். 128 00:11:28,689 --> 00:11:30,899 நீங்க சொல்றது என் காதில விழல. 129 00:11:34,736 --> 00:11:35,988 கேட்ஸ்! 130 00:11:37,197 --> 00:11:39,657 - உனக்கு அந்த வாடகை காரை விசாரிக்கணுமா? - ஆமா. 131 00:11:39,658 --> 00:11:41,409 போய் விசாரி. 132 00:11:41,410 --> 00:11:43,452 ஆனால் நீ யார் கிட்ட பேசுறேன்னு பார்த்து பேசு. 133 00:11:43,453 --> 00:11:46,206 - நான் உங்களுக்காகத் தான் பார்க்கிறேன், மே'ம். - நீ உனக்காகப் பார்க்கிற. 134 00:12:11,398 --> 00:12:13,191 அது ஒரு தவறா இருக்கலாம். 135 00:12:13,192 --> 00:12:14,318 எது? 136 00:12:15,819 --> 00:12:18,780 அம்மாவுக்கும், மனைவிக்கும் இடையில அவனைத் தேர்வு செய்யச் சொல்றது. 137 00:12:20,657 --> 00:12:21,991 அவன் அவளைத் தேர்வு செஞ்சிருந்தா, 138 00:12:21,992 --> 00:12:23,827 அவ இப்படி பாலைவனத்தில சுத்திட்டிருக்க மாட்டா… 139 00:12:24,328 --> 00:12:25,495 அதுவும் தனியா. 140 00:12:28,457 --> 00:12:29,666 நீ சொல்றது சரியா இருக்கலாம். 141 00:12:30,584 --> 00:12:33,961 அவ அவனை மாத்திட்டான்னு உறுதியா நினைச்சேன், ஆனால், இப்ப… 142 00:12:33,962 --> 00:12:35,380 அவ முகத்தில பார்த்தேன். 143 00:12:36,215 --> 00:12:38,842 நம்மள மாதிரி, அவளுக்கும் அவன் எங்க இருக்கான்னு தெரியல. 144 00:12:39,510 --> 00:12:42,346 அப்படின்னா என்ன நடந்துச்சு? என்ன தான் நடந்திருக்கும்? 145 00:12:43,805 --> 00:12:47,935 ம், தவறான ஆட்கள் கிட்ட அவன் பணத்தைக் காட்ட, அவங்க திருடியிருக்கலாம். 146 00:12:49,811 --> 00:12:51,396 சரி, அப்புறம்? அவங்க அவனைக் கொன்னுட்டாங்கா? 147 00:12:55,234 --> 00:12:56,652 அவன் கார் ஏன் லாங் பீச்ல இருந்துச்சு? 148 00:12:57,444 --> 00:12:58,987 நம்மள குழப்புறதுக்காக இருக்கலாம். 149 00:13:18,173 --> 00:13:19,174 தெரியல. 150 00:13:19,967 --> 00:13:21,093 நான்… 151 00:13:21,844 --> 00:13:26,098 நான் போய் ஒரு நீண்ட குளியலைப் போட்டுட்டு, அடுத்து என்ன பண்றதுன்னு யோசிக்கப் போறேன். 152 00:13:27,140 --> 00:13:30,018 நீ அந்த லாயத்தில இருக்கிற முட்டாளைக் கவனிச்சுக்கோ. 153 00:13:31,311 --> 00:13:32,979 அங்க லாயத்தில யாரும் இல்ல. 154 00:13:32,980 --> 00:13:35,022 முட்டாள்களும் இல்ல யாரும் இல்ல. 155 00:13:35,023 --> 00:13:36,316 நான் இப்ப சரியா யோசிக்கிறதில்ல. 156 00:13:38,485 --> 00:13:39,570 உங்க பையனைக் காணோம். 157 00:13:41,864 --> 00:13:44,157 என்னன்னு தெரியுற வரைக்கும் நம்பிக்கை வைப்போம். 158 00:13:47,286 --> 00:13:48,912 லக்கி? 159 00:13:49,580 --> 00:13:50,831 அவளோட திட்டம் என்ன? 160 00:13:52,249 --> 00:13:53,750 அவளைக் கண்டுப்பிடிக்கும் போது அவ கிட்டேயே கேட்போம். 161 00:14:23,530 --> 00:14:25,364 இந்தா. ஜாலியா இரு. 162 00:14:25,365 --> 00:14:29,286 ரெடியா? ரெடியா இருக்கியா? சரி. 163 00:14:31,163 --> 00:14:32,247 கடவுளே. 164 00:14:35,250 --> 00:14:37,419 டாக்டர் நீல் மற்றும் நெயோமி லேங்கர் மலீபு, கலிஃபோர்னியா 90265 165 00:14:39,922 --> 00:14:42,757 - ஹே, உங்களுக்கு உதவட்டுமா? - கடவுளே. நன்றி. 166 00:14:42,758 --> 00:14:44,300 - இதோ. - நன்றி. 167 00:14:44,301 --> 00:14:46,178 பெண்கள் செய்யுற வேலைகள். 168 00:14:47,387 --> 00:14:49,013 நான் ஸ்கூல்ல உன்னைப் பார்த்திருக்கேனா? 169 00:14:49,014 --> 00:14:50,932 இல்லேன்னு நினைக்கிறேன். 170 00:14:50,933 --> 00:14:52,642 குழந்தைகளைப் பார்த்துக்கிறதுக்கு நெயோமி என்னை வேலைக்கு எடுத்திருக்காங்க. 171 00:14:52,643 --> 00:14:54,477 - நான் அதைத் தூக்கிட்டு வரேன். - நன்றி. 172 00:14:54,478 --> 00:14:55,687 - ம். - ஹே, குட்டிப் பையா. 173 00:14:56,480 --> 00:14:57,563 கைப்பிடிச்சிக்கிறியா? 174 00:14:57,564 --> 00:15:00,066 - கண்டிப்பா. - சரி, போகலாம். 175 00:15:00,067 --> 00:15:01,108 மார்கஸ் 176 00:15:01,109 --> 00:15:03,487 மார்கஸுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். 177 00:15:04,112 --> 00:15:05,238 - ம். - ம். 178 00:15:05,239 --> 00:15:07,114 - ஆர்வமா இருக்கியா? - ஆமா. 179 00:15:07,115 --> 00:15:10,077 இங்க பர்த்டே கேக் இருக்கும்னு நினைக்கிறியா? 180 00:15:10,577 --> 00:15:11,744 கேக். 181 00:15:11,745 --> 00:15:14,205 கேக் நல்லா இருக்கும். 182 00:15:14,206 --> 00:15:16,040 குறிப்பா அந்த க்ரீம். 183 00:15:16,041 --> 00:15:19,086 - க்ரீம் சூப்பரா இருக்கும்ல? - ஆமா. 184 00:15:28,178 --> 00:15:34,142 சரி, செல்லம். நீ போய் உங்க அம்மா கூட விளையாடுறியா? 185 00:15:34,893 --> 00:15:37,687 இதைப் பத்தி கவலைப்படாதீங்க. நீங்க போய் பார்ட்டியை எஞ்சாய் பண்ணுங்க. 186 00:15:37,688 --> 00:15:38,772 இதோ. 187 00:15:42,693 --> 00:15:44,194 ம், லக்கி. நீ எங்க இருக்க? 188 00:16:04,506 --> 00:16:05,757 அட. 189 00:16:13,849 --> 00:16:14,850 சரி. 190 00:16:23,150 --> 00:16:24,860 எங்க இருக்க? எங்க இருக்க? 191 00:16:42,753 --> 00:16:44,671 அது. 192 00:17:14,034 --> 00:17:15,035 ஓகே. 193 00:17:25,378 --> 00:17:26,838 கடவுளே. 194 00:17:26,839 --> 00:17:28,507 அருமையான டிரெஸ். 195 00:17:30,175 --> 00:17:33,554 கவலைப்படாத. நாங்க எல்லாரும் இதைப் பண்ணியிருக்கோம். கன்னாபின்னான்னு நிறைய இருக்கு. 196 00:17:34,388 --> 00:17:35,763 ஆமால்ல? 197 00:17:35,764 --> 00:17:37,932 அவ தான் இங்க வரச் சொன்னா… 198 00:17:37,933 --> 00:17:41,477 டிரெஸ்ல கொஞ்சம் ஒயின் கொட்டிருச்சு. ஆனால் இதை எதிர்பார்க்கல… 199 00:17:41,478 --> 00:17:43,354 இந்த பெர்க்டார்ஃப் குட்மேன் டிரெஸ்ஸை தானே? 200 00:17:43,355 --> 00:17:44,438 - ஆமா. - ஆமா. 201 00:17:44,439 --> 00:17:46,315 அப்படியே ஒரு ஹேண்ட்பேகையும் எடுத்துக்கோ. அவ கவனிக்க மாட்டா. 202 00:17:46,316 --> 00:17:48,861 அதோட, விவாகரத்துல எல்லாமே நீலுக்குக் கிடைக்கப் போகுது. 203 00:17:49,653 --> 00:17:50,737 கேள்விப்பட்டேன். 204 00:17:51,321 --> 00:17:52,322 பாவம் நெயோமி. 205 00:17:52,823 --> 00:17:53,866 அது நல்லதுக்குத் தான். 206 00:17:54,449 --> 00:17:57,160 நீல் ஒரு மனித உப்புத் தாள். 207 00:17:58,370 --> 00:17:59,580 ஆமா. அது… 208 00:18:01,039 --> 00:18:03,124 அவன் மெல்லுற விதம், இல்லையா? 209 00:18:03,125 --> 00:18:05,459 - அது ரொம்ப தெளிவாகத் தெரியும் - கடவுளே. 210 00:18:05,460 --> 00:18:09,547 அவங்களோட உட்கார்ந்து சாப்பிடும் போது, பொய்யா தலைவலின்னு சொல்லிட்டு போயிடுவேன். 211 00:18:09,548 --> 00:18:10,716 புரியுது. 212 00:18:12,009 --> 00:18:14,886 - நீ அந்த டிரெஸ்ல ரொம்ப அழகா இருக்க. - நன்றி. ம்… 213 00:18:14,887 --> 00:18:17,263 ம்… எனக்கு இதைச் சரி செஞ்சு தரமுடியுமா? 214 00:18:17,264 --> 00:18:19,891 எனக்கு எப்படி கட்டுறதுன்னு தெரியல. 215 00:18:19,892 --> 00:18:21,226 - இப்படியா… - ஆமா. 216 00:18:21,935 --> 00:18:22,936 அப்படித் தான். 217 00:18:23,478 --> 00:18:24,688 உன்னோட டிரெஸ். 218 00:18:27,274 --> 00:18:28,566 உன் பேர் என்ன? 219 00:18:28,567 --> 00:18:30,819 - ஷாரன். - ஹே, ஷாரன். நான் ஏமி. 220 00:18:31,570 --> 00:18:33,989 - இதோ. இன்னும் ஒண்ணு. - நான் பார்க்கட்டும். 221 00:18:35,407 --> 00:18:36,866 - ஆமா. - ஷாரன். 222 00:18:36,867 --> 00:18:37,950 பார்த்தியா? 223 00:18:37,951 --> 00:18:39,076 இந்த பக்கம். 224 00:18:39,077 --> 00:18:40,912 - என் பர்ஸ் எங்க? - உன் கிட்ட இருக்கா? 225 00:18:40,913 --> 00:18:43,332 - ஆமா. ஆமா, ஆமா. - சரி. சரி, சரி. 226 00:18:45,167 --> 00:18:46,959 ஒரு ஷாட் எடுக்கலாமா? 227 00:18:46,960 --> 00:18:48,503 - கண்டிப்பா. - இதுக்கெல்லாம் நான் காரை 228 00:18:48,504 --> 00:18:50,422 எடுத்து வர்றது அபத்தம். எப்படியும் கடைசியில ஊபர்ல போகப் போறேன். 229 00:18:52,925 --> 00:18:54,217 - உன் டிரெஸ் பிடிச்சிருக்கு. - மன்னிக்கணும். 230 00:18:54,218 --> 00:18:57,012 - சொன்னதுக்கு நன்றி. - வா. வா. 231 00:18:58,180 --> 00:18:59,431 எங்களுக்கு ரெண்டு டான் ஹூலியோ கொடுங்க. 232 00:19:00,891 --> 00:19:02,308 ஷாரன், நீ ரொம்ப ஜாலியா இருக்க. 233 00:19:02,309 --> 00:19:05,395 - நன்றி. நீயும் தான் ஜாலியா இருக்க. ம். - நன்றி. இது எனக்கு ரொம்ப தேவைப்பட்டது. 234 00:19:06,813 --> 00:19:08,065 - டூ யூ. - டூ யூ. 235 00:19:12,361 --> 00:19:13,403 யா. 236 00:19:38,804 --> 00:19:40,347 அங்க இருக்கிற பரிசுப் பொருட்கள் தெரியுதா? 237 00:19:40,848 --> 00:19:43,391 அங்க பரிசுப் பொருட்களோட ஒட்டி வைக்கப்படாத எந்த கவரையும் எடுத்துக்கோ. 238 00:19:43,392 --> 00:19:45,017 அந்த கவர்கள்ல பணம் இருக்கும். 239 00:19:45,018 --> 00:19:47,019 அடுத்து பர்ஸ்களை எடு. 240 00:19:47,020 --> 00:19:48,187 அவங்க என்னைப் பார்க்கப் போறாங்க. 241 00:19:48,188 --> 00:19:50,649 இல்ல, பார்க்க மாட்டாங்க. நீ யார் கண்லயும் படாம இருக்கப் போற. 242 00:19:51,358 --> 00:19:52,650 நான் எப்படி கண்ல படாம இருக்க முடியும்? 243 00:19:52,651 --> 00:19:54,861 என்னை இந்த பார்ட்டிக்கு கூப்பிடக் கூட இல்ல. 244 00:19:54,862 --> 00:19:56,863 கண்ல படாம இருக்கிறது சுத்தி உள்ளதைப் பொறுத்தது. 245 00:19:56,864 --> 00:19:59,824 - நல்லா கவனமா பாருங்க. - ஒரு குழந்தையோட பிறந்தநாள் பார்ட்டியில… 246 00:19:59,825 --> 00:20:01,200 ரொம்ப மெதுவா… 247 00:20:01,201 --> 00:20:03,745 …சுத்தமா கண்ல படாம இருக்கிறது ஒரு குழந்தை தான். 248 00:20:05,038 --> 00:20:06,290 சரி. 249 00:20:10,377 --> 00:20:11,378 இப்ப இல்ல. 250 00:20:12,379 --> 00:20:14,631 இப்ப. 251 00:20:30,314 --> 00:20:33,107 சுதந்திர சந்தை வென்ற வேடிக்கைக்கு வருக 252 00:20:33,108 --> 00:20:34,358 பணமே பிரதானம் 253 00:20:34,359 --> 00:20:37,529 கசியாத எதுவும் இறங்கி ஓடாது 254 00:20:41,992 --> 00:20:44,660 பசித்த எறும்புகள் பாக்கெட்டினில் உள்ளே கைகளுடன் 255 00:20:44,661 --> 00:20:46,037 தங்களையே பார்த்துக்கொள்ள விரும்பி 256 00:20:46,038 --> 00:20:49,416 மற்ற எவருக்கும் முன்னே, பேராசையாய் 257 00:20:50,542 --> 00:20:53,377 திருடுவதில் தேர்ந்திருப்பதால் நம்புவதை நிறுத்துவதில்லை 258 00:20:53,378 --> 00:20:56,715 அது என்னுடையது, என்னுடையதென்று நம்புவதை நிறுத்துவதில்லை 259 00:20:58,926 --> 00:21:01,845 என்னுடையது, என்னுடையது 260 00:21:04,056 --> 00:21:06,683 என்னுடையது, என்னுடையது 261 00:21:09,686 --> 00:21:12,731 என்னுடையது, என்னுடையது 262 00:21:14,983 --> 00:21:17,945 என்னுடையது, என்னுடையது 263 00:21:20,072 --> 00:21:22,616 என்னுடையது, என்னுடையது 264 00:21:24,034 --> 00:21:26,744 பயணம் 418 பாக்ஸ்டர் தெரு நோக்கித் துவங்குகிறது. 265 00:21:26,745 --> 00:21:29,164 பசிஃபிக் கடற்கரை நெடுஞ்சாலையில் தொடர்ந்து பத்து மைல்கள் செல்லவும். 266 00:22:27,347 --> 00:22:29,433 நீங்க தேடினது கிடைச்சதா? 267 00:22:35,189 --> 00:22:38,441 உங்க லாயங்களைக் கழுவும் போது எப்பவுமே ப்ளீச் பயன்படுத்துவீங்களா? 268 00:22:38,442 --> 00:22:41,445 எனக்குத் தெரியாது. அது இங்க வேலை பார்க்கிறவங்களோட வேலை. 269 00:22:42,613 --> 00:22:43,614 அது சரி. 270 00:22:44,239 --> 00:22:46,282 உன் கைகள் அழுக்குப்பட நீ விரும்ப மாட்டேன்னு தெரியும். 271 00:22:46,283 --> 00:22:49,285 என் பையன் செத்துட்டான்னு சொல்றதுக்காக நீங்க வந்திருந்தா, 272 00:22:49,286 --> 00:22:50,996 முன் வாசல் வழியா வந்திருப்பீங்க. 273 00:22:52,831 --> 00:22:54,081 கேரி எங்க இருக்கான்னு எனக்குத் தெரியாது. 274 00:22:54,082 --> 00:22:55,083 ஆனால்… 275 00:22:56,126 --> 00:22:57,919 அவன் நிறைய பிரச்சினையில இருக்கான்னு தெரியும். 276 00:22:57,920 --> 00:22:59,963 சொல்லுங்க, ஏஜென்ட் ராண்ட். உங்களுக்குக் குழந்தைகள் இருக்கா? 277 00:23:03,717 --> 00:23:04,884 கண்டிப்பா நீங்க சொல்ல மாட்டீங்க, 278 00:23:04,885 --> 00:23:08,138 ஏன்னா நீங்க என் பையன் பின்னால வர்ற மாதிரி நான் அவங்க பின்னால் வந்துடுவேன்னு உங்களுக்குப் பயம். 279 00:23:08,639 --> 00:23:10,265 உன் பையன் வளர்ந்தவன். 280 00:23:11,433 --> 00:23:13,060 அவனே முடிவெடுக்கிற அளவுக்கு, 281 00:23:13,936 --> 00:23:15,353 நல்லாவே வளர்ந்தவன். 282 00:23:15,354 --> 00:23:17,605 அது சரி, நீங்க இங்க என்ன பண்றீங்க, ஏஜென்ட் ராண்ட்? 283 00:23:17,606 --> 00:23:19,483 ஒரு துப்பு கிடைச்சது, அதைப் பின்தொடர்ந்து வரேன். 284 00:23:21,109 --> 00:23:22,735 அது கதை. 285 00:23:22,736 --> 00:23:25,656 நீங்க கேரிக்காக வரல. நம்ம பழைய கதையை மனசில வச்சிட்டு வந்திருக்கீங்க. 286 00:23:26,156 --> 00:23:29,201 என்னைப் பிடிச்சது உங்களுக்கு பெரிய சாதனை, ஆனால் அது நிக்கல. 287 00:23:29,952 --> 00:23:31,286 இந்த முறை நிக்கும். 288 00:23:32,412 --> 00:23:34,039 ஆமா. அது… 289 00:23:35,082 --> 00:23:36,959 உங்க ஆட்கள் மோதி தூக்கினது… 290 00:23:37,876 --> 00:23:39,336 ஒரு ஃபெடரல் ஏஜென்ட்டை. 291 00:23:41,004 --> 00:23:42,171 அது என்னோட ஏஜென்ட்கள்ல ஒருத்தர். 292 00:23:42,172 --> 00:23:44,091 நீங்க என்ன பேசுறீங்கன்னு எனக்கு உண்மையிலேயே தெரியல. 293 00:23:45,259 --> 00:23:48,804 ஆனால் என் மேல ஏதாவது ஆதாரம் இருந்திருந்தா, நீங்க என்னைக் கைது பண்ணியிருப்பீங்க. 294 00:23:49,763 --> 00:23:52,306 அது சீக்கிரம் நடக்கும். இப்ப நான் நினைச்சா டச்சை கைது பண்ணலாம். 295 00:23:52,307 --> 00:23:54,141 துரதிஷ்டவசமா அவன் இங்க இல்ல. 296 00:23:54,142 --> 00:23:58,021 உண்மையாவா? ஏன்னா அங்க இருக்கிற ட்ரக்கை நேத்து ராத்திரி அவன் ஓட்டிட்டிருந்தான். 297 00:24:01,650 --> 00:24:03,151 ஏதாவது குற்றம் பண்ணானா? 298 00:24:03,902 --> 00:24:04,903 நிறைய. 299 00:24:05,571 --> 00:24:06,947 ஆனால் நான் ஒண்ணும் பண்ணப் போறதில்ல. 300 00:24:08,615 --> 00:24:11,326 உங்க பள்ளத்தை இன்னும் ஆழமாகத் தோண்டுறதுக்கு 301 00:24:12,244 --> 00:24:14,037 உங்களுக்கு உதவ அவனை அனுமதிக்கப் போறேன். 302 00:24:14,997 --> 00:24:17,416 நீங்க ரொம்ப ஆசைப்படுறீங்க போல, ஏஜென்ட் ராண்ட். 303 00:24:24,840 --> 00:24:25,841 இருக்கலாம். 304 00:24:33,223 --> 00:24:34,224 நீ தான்… 305 00:24:36,310 --> 00:24:39,354 கேரிக்கு அந்த காரை வாடகைக்கு எடுத்தேன்னு எங்களுக்குத் தெரியும். 306 00:24:39,980 --> 00:24:41,772 அவனை நாங்க கண்டுப்பிடிக்கப் போறோம். 307 00:24:41,773 --> 00:24:46,153 ஆனால் விட்டேக்கர் கண்டுப்பிடிக்கிறதுக்கு முன்னால நாங்க அவனைக் கண்டுப்பிடிக்கணும்னு நீ வேண்டிக்கோ. 308 00:24:48,697 --> 00:24:49,907 அந்த காரை வச்சு ஒரு புண்ணியமும் இல்ல. 309 00:24:51,992 --> 00:24:52,993 உண்மையாவா? 310 00:24:55,579 --> 00:24:56,663 லக்கி பத்தி பேசலாமா? 311 00:24:58,040 --> 00:24:59,041 அவளுக்கு என்ன? 312 00:25:04,922 --> 00:25:06,048 உனக்கு உண்மையிலேயே தெரியல. 313 00:25:10,802 --> 00:25:14,222 நேத்து ராத்திரி டச் பெட்ரோல் பங்க்ல துப்பாக்கிச் சூடு நடத்துனப் பிறகு, 314 00:25:14,223 --> 00:25:17,726 லக்கி அவன் ட்ரக்குக்கு பின்னால ஏறி சவாரி பண்ணியிருக்கா. 315 00:25:18,769 --> 00:25:20,853 அதோ அங்க நிக்கிற ட்ரக். 316 00:25:20,854 --> 00:25:24,066 அந்த ட்ரக் பத்தி தான் உனக்கு எதுவுமே தெரியாதுன்னு சொன்னேல. 317 00:25:28,529 --> 00:25:30,531 அவ உன் கண்ணுக்கு முன்னாலயே தான் இருந்திருக்கா… 318 00:25:32,282 --> 00:25:33,575 மொத்த நேரமும். 319 00:25:37,079 --> 00:25:38,080 ப்ரிஸில்லா. 320 00:25:43,043 --> 00:25:44,253 நான் கிளம்புறேன். 321 00:26:05,190 --> 00:26:08,818 கேரி மாஸ்டர்ஸனோட வாடகை கார் GPS-ஐ அனுப்பி வச்சிருக்கேன். 322 00:26:08,819 --> 00:26:09,902 அது புண்ணியமில்ல. 323 00:26:09,903 --> 00:26:13,198 அவன் காரை பின்தொடர்றது என்னோட திட்டம் என்கிறதால, நீங்க அதை நிராகரிக்கணும்னு அவசியமில்ல. 324 00:26:13,699 --> 00:26:16,868 கேட்ஸ், இந்த கார் விஷயம் நமக்கு உதவாது. அவன் அதை விட்டுட்டுப் போயிட்டான். 325 00:26:16,869 --> 00:26:18,035 உங்களுக்கு எப்படித் தெரியும்? 326 00:26:18,036 --> 00:26:19,120 அது முக்கியமில்ல. 327 00:26:19,121 --> 00:26:20,788 சரி இப்ப என்ன பண்றது? 328 00:26:20,789 --> 00:26:24,542 தெற்கு கலிஃபோர்னியாவில எல்லா கார் டீலரையும் போய் செக் பண்ணு. 329 00:26:24,543 --> 00:26:28,547 கடந்த ரெண்டு நாள்ல ரொக்கமா கொடுத்து கார் வாங்கின எல்லாரோட பேரும் எனக்கு வேணும். 330 00:26:29,256 --> 00:26:31,091 அவன் புது கார் வாங்கியிருக்கான்னு எதனால நினைக்கிறீங்க? 331 00:26:31,717 --> 00:26:35,179 கையில பத்து மில்லியன் டாலரோட, செலவழிக்கத் துடிக்கிற 29 வயசு பையன் அவன். 332 00:26:35,888 --> 00:26:37,222 ஏதோ உள்ளுணர்வு. 333 00:27:01,079 --> 00:27:02,413 ஹலோ? 334 00:27:02,414 --> 00:27:03,582 நிறுத்தப்பட்டுள்ளது ஆட்டத்தைத் தொடர்ந்திடு 335 00:28:02,641 --> 00:28:03,642 வழி தவறிட்டீங்களா? 336 00:28:05,435 --> 00:28:07,938 ஆமா. இருக்கலாம். கொஞ்சமா. 337 00:28:11,149 --> 00:28:15,278 அதை விடுங்க. தேவையில்லாம நேரத்தை வீணடிச்சிட்டேன். 338 00:28:15,279 --> 00:28:16,362 தவறுதலா வந்துட்டேன். 339 00:28:16,363 --> 00:28:17,447 இங்க ஏன் வந்தீங்க? 340 00:28:20,325 --> 00:28:24,621 ஏன்னா உங்களால உதவ முடியும்னு சொன்னாங்க. 341 00:28:25,497 --> 00:28:26,832 அல்லது இங்க இருக்கிற வேற யாரோ. 342 00:28:27,958 --> 00:28:30,419 இருக்கலாம். ஆனால் அது உங்களுக்கு என்ன தேவைன்னு பொறுத்தது. 343 00:28:33,964 --> 00:28:34,965 நான்… 344 00:28:36,967 --> 00:28:39,970 வேறொருத்தரா மாறணும். 345 00:28:43,265 --> 00:28:44,558 என்னை எப்படிக் கண்டுப்பிடிச்சீங்க? 346 00:28:46,226 --> 00:28:47,728 உண்மையைச் சொல்லணும்னா, ரெடிட்ல யாரோ சொன்னாங்க. 347 00:28:49,354 --> 00:28:50,980 - ரெடிட்லயா? - ஆமா, தெரியும். 348 00:28:50,981 --> 00:28:52,691 எனக்கு வேற எங்க பார்க்கிறதுன்னு தெரியல. 349 00:28:54,776 --> 00:28:56,778 நான் இதுக்கு முன்னால இதைப் பண்ணதில்ல. 350 00:28:57,362 --> 00:28:58,905 ஆமா. பெரும்பாலானவங்க பண்ணிருக்க மாட்டாங்க. 351 00:28:58,906 --> 00:28:59,907 கரெக்ட். 352 00:29:03,410 --> 00:29:05,036 உங்களுக்கு ஏன் அடையாளத்தை மாத்தணும்? 353 00:29:05,037 --> 00:29:06,205 அது முக்கியமா என்ன? 354 00:29:07,247 --> 00:29:09,291 உங்களுக்கு என்ன தேவைன்னு எனக்கு தெரிஞ்சுக்க அது உதவும். 355 00:29:10,751 --> 00:29:14,046 சரி. ம்… ம், எனக்கு டைவர்ஸ் வேணும். 356 00:29:16,215 --> 00:29:18,007 - நான் லாயர் இல்ல. - ஆமா. 357 00:29:18,008 --> 00:29:20,427 ஆனால் நான் நிரந்தரமா ஒண்ணை எதிர்பார்க்கிறேன். 358 00:29:22,262 --> 00:29:24,264 அவரோட பேர் வேண்டாம், என்னோட பேர் வேண்டாம். 359 00:29:25,057 --> 00:29:28,268 நான் இப்ப ரொம்ப மாறிட்டேன், அவரும் என்னை ரொம்ப மாத்திட்டார். 360 00:29:30,145 --> 00:29:31,897 அந்தப் பெண்ணா நான் இருக்க விரும்பல. 361 00:29:35,943 --> 00:29:37,069 சாரி. நான் அதை எதிர்பார்க்கல. 362 00:29:37,653 --> 00:29:39,655 சாரி. ரெடியா? 363 00:29:43,742 --> 00:29:45,327 என்ன மாதிரியான ஆட்கள் உங்க கிட்ட வருவாங்க? 364 00:29:46,245 --> 00:29:47,537 அந்த மாதிரி ஒண்ணு இருக்கா என்ன? 365 00:29:47,538 --> 00:29:49,664 சிலருக்கு இன்ஷூரன்ஸ் வேணும். 366 00:29:49,665 --> 00:29:52,501 சிலருக்கு பணத்தை வேற பேரில பேங்கில ஒளிச்சு வைக்கணும். 367 00:29:54,127 --> 00:29:56,504 பெரும்பாலானவங்களுக்கு சும்மா பாருக்கு போறதுக்கு வேணும். 368 00:29:56,505 --> 00:29:57,881 ஆக, எல்லாரும் தப்பிச்சு ஓடுறவங்க இல்ல? 369 00:29:58,382 --> 00:29:59,800 இல்ல. 370 00:30:00,592 --> 00:30:03,636 ஆழ் மனசுல நம்ம எல்லாருக்கும், நம்ம கிட்ட இருந்தே விடுதலை வேணும்னு நினைக்கிறேன். 371 00:30:03,637 --> 00:30:06,473 இடைநிறுத்தப்பட்ட சமநிலை பத்திக் கேள்விப்ட்டிருக்கீங்களா? 372 00:30:07,307 --> 00:30:08,558 இல்ல. 373 00:30:08,559 --> 00:30:10,142 அது ஒரு பரிணாம கருத்து. 374 00:30:10,143 --> 00:30:13,272 தீவிர சூழல்களுக்குத் திடீர் அடிப்படை மாற்றங்கள் தேவை. 375 00:30:14,398 --> 00:30:16,275 அதாவது, குறைந்தபட்சம் நாம பிழைக்கணும்னு நினைச்சா. 376 00:30:21,780 --> 00:30:25,199 இதோ. இது தப்பா பிரிண்ட ஆனது. இதை நான் என்ன பண்ணலாம்ங்கிறதுக்கு எடுத்துக்காட்டா பயன்படுத்துறேன். 377 00:30:25,200 --> 00:30:26,325 உங்களுக்கு எது பிடிச்சிருக்குன்னு பாருங்க. 378 00:30:26,326 --> 00:30:27,327 நன்றி. 379 00:30:27,911 --> 00:30:30,413 இந்த அடையாள அட்டைக்கு ஒரு சரியான முகவரி வேணும், 380 00:30:30,414 --> 00:30:32,164 அதை நான் கிரெடிட் கார்டுகளோட இணைச்சிடுவேன். 381 00:30:32,165 --> 00:30:33,166 சரி. 382 00:30:41,717 --> 00:30:43,927 கலிஃபோர்னியா - ஸ்மித் - கோல்ஸன் 383 00:30:55,564 --> 00:30:57,232 நீங்க எங்க போறீங்கன்னு உங்களுக்குத் தெரியுமா? 384 00:31:01,069 --> 00:31:02,196 தெரியும். 385 00:31:11,079 --> 00:31:12,455 பெயர் தெரியாத அழைப்பு 386 00:31:12,456 --> 00:31:14,124 - ஹலோ? - ஹே, செல்லம். 387 00:31:15,250 --> 00:31:16,876 - அப்பா? - எனக்கு ஒரு பர்னர் ஃபோன் கிடைச்சிருக்கு. 388 00:31:16,877 --> 00:31:18,295 இப்ப நாம எப்ப வேணும்னாலும் பேசலாம். 389 00:31:21,089 --> 00:31:25,260 ம், நான் அவனைக் கண்டுப்பிடிச்சிட்டேன். அவன் பெயரை மாத்தி, புது அடையாள அட்டை வச்சிருக்கான். 390 00:31:26,762 --> 00:31:27,845 683 கோஸ்ட் - வாடகைக்கு கொடுத்தாயிற்று 391 00:31:27,846 --> 00:31:30,557 ஆனால் அவன் முகவரி என் கிட்ட இருக்கு, அவன் கிட்ட இருந்து அதை திரும்ப எடுக்கப் போறேன். 392 00:31:31,225 --> 00:31:33,977 நம்ம கிட்ட இருந்து அவன் திருடின எல்லாத்தையும், நான் திரும்ப எடுக்கப் போறேன்ப்பா. 393 00:31:35,521 --> 00:31:38,899 சரி. சரி, நல்லது. இப்ப, கொஞ்சம் அமைதியாகு. 394 00:31:40,734 --> 00:31:42,527 - என்ன சொல்றீங்க? நான் நல்லா இருக்கேன். - செல்லம், 395 00:31:42,528 --> 00:31:45,571 நீ நேசிச்ச ஒருத்தன் உன்னை ஏமாத்தினது இப்ப உறுதியாயிருக்கு. 396 00:31:45,572 --> 00:31:47,532 நீ இப்ப உணர்ச்சிவசத்தில இருக்கலாம், இல்லையா? 397 00:31:47,533 --> 00:31:50,077 எனக்கு இப்ப பாடம் எடுக்காம இருக்கீங்களா? 398 00:31:50,744 --> 00:31:52,412 நான்… ஸ்ட்ராங்கா தான் இருக்கேன். 399 00:31:53,080 --> 00:31:54,872 இப்போ இது பணம் தான் முக்கியம். 400 00:31:54,873 --> 00:31:58,251 {\an8}சரியான நேரம் பார்த்து, நீ சட்டுன்னு உள்ள புகுந்து, 401 00:31:58,252 --> 00:32:00,628 {\an8}பணத்தை எடுத்துட்டு, வெளிய கிளம்பிடணும். 402 00:32:00,629 --> 00:32:02,964 அவன் ஏன், எதுக்கு பண்ணான்னு 403 00:32:02,965 --> 00:32:06,384 {\an8}தேவையில்லாம அவன் கிட்ட எதுவும் வச்சிக்காத. புரியுதா? 404 00:32:06,385 --> 00:32:08,220 {\an8}அவன் என்ன பதில் சொன்னாலும் அது போதுமானதா இருக்காது. 405 00:32:11,014 --> 00:32:12,390 இதை உனக்கு அவன் பண்ணத் துணிஞ்சிருக்கான்னா, 406 00:32:12,391 --> 00:32:14,643 வேற என்னவெல்லாம் செய்யத் துணிவான்னு நமக்குத் தெரியாது, சரியா? 407 00:32:16,812 --> 00:32:17,813 லக்கி? 408 00:32:20,774 --> 00:32:23,235 சரி. சரி, புரியுது. உள்ள போயிட்டு உடனே வந்துடுவேன். 409 00:32:59,980 --> 00:33:01,815 - இந்தாங்க. - நன்றி. 410 00:33:30,010 --> 00:33:32,596 - ஏன் அடிச்சுப் பார்க்கிற? அட. என்ன? - ஒண்ணுமில்ல. 411 00:33:33,263 --> 00:33:37,100 இல்ல… நீ யார் மாதிரியோ இருக்க. 412 00:33:37,726 --> 00:33:39,227 - அப்புறம்… - அவ்வளவு தான். 413 00:33:39,228 --> 00:33:40,811 அது நல்ல விஷயமா? 414 00:33:40,812 --> 00:33:44,358 ஆமா. சில நாட்களுக்கு முன்னால வரை. 415 00:33:46,443 --> 00:33:48,445 - சண்டைப் பிடிச்சிட்டீங்களா? - ஓ, ஆமா, உனக்குப் புரியாது. 416 00:33:50,822 --> 00:33:53,242 ம். அவன் உனக்கு என்ன பண்ணான்னு எனக்குத் தெரியாது… 417 00:33:54,159 --> 00:33:55,451 ரெண்டா கொடுங்க. 418 00:33:55,452 --> 00:33:57,329 ஆனால், என் அனுபவத்தில, 419 00:33:58,163 --> 00:33:59,706 நான் சொல்றது இதுதான், 420 00:34:00,290 --> 00:34:04,294 அவன் உன்னை சரியா பார்த்துக்கலேன்னா, உன்னை விட நஷ்டம் அவனுக்குத் தான். 421 00:34:05,128 --> 00:34:06,463 புரியுதா? 422 00:34:08,090 --> 00:34:09,299 ஆமா. 423 00:34:10,007 --> 00:34:12,885 அது… ரொம்ப நன்றி. 424 00:34:12,886 --> 00:34:15,847 இதைக் கேட்டதும் தான் நிம்மதியா இருக்கு. வாவ். 425 00:34:15,848 --> 00:34:19,226 தெரியாதவங்க சொல்ற கருத்து, மனசில எதுவுமே இல்லாம, நிஜமா மட்டும் தான் இருக்கும். 426 00:34:19,726 --> 00:34:21,519 அதனால அதை லேசா எடுத்துக்காத. 427 00:34:21,520 --> 00:34:23,187 வேற என்ன சொல்லுவாங்கன்னு தெரியுமா? 428 00:34:23,188 --> 00:34:24,730 - இல்ல, வேற என்ன சொல்லுவாங்க? - ம். 429 00:34:24,731 --> 00:34:28,150 நல்லா வாழுறது தான் பழிவாங்குறதுலேயே சிறந்தது… 430 00:34:32,489 --> 00:34:34,573 …அதனால மோசமான குப்பைக்கு குட்பை சொல்லலாம். 431 00:34:34,574 --> 00:34:36,659 - அட ஆமா. அருமை. - ஆமா. 432 00:34:39,204 --> 00:34:40,288 ஓ, உனக்கு ஒண்ணுமில்லையே? 433 00:34:40,289 --> 00:34:42,206 - ம். நான்… - சரி. 434 00:34:43,333 --> 00:34:45,251 நான் வீட்டுக்குப் போகணும். நான் போகணும். 435 00:34:45,252 --> 00:34:47,837 ம், பாரு, இங்க டாக்ஸி போட்டா வர்றதுக்கு ஒரு மணிநேரம் போல ஆகும். 436 00:34:47,838 --> 00:34:49,005 ஆனால் என்னோட ஆஃபீஸ்… 437 00:34:49,755 --> 00:34:51,216 இங்க எதிர்த்தாற்போல, எனக்கு ஒரு ஆஃபீஸ் இருக்கு. 438 00:34:53,135 --> 00:34:54,928 உன்னை அங்க கூட்டிப் போய், உனக்குக் காபி போட்டுத் தரேன். 439 00:34:55,596 --> 00:34:56,972 அங்க இருந்து உனக்கு கார் புக் பண்ணி தரேன். 440 00:34:57,472 --> 00:34:58,807 அது பாதுகாப்பா, கதகதப்பா இருக்கும். 441 00:35:04,313 --> 00:35:07,691 அதைப் பத்தி யோசிச்சுப் பார்த்தேன். சரி, கேளு. கவனம். 442 00:35:09,526 --> 00:35:13,362 நான் குடிச்சிருக்கலாம், ஆனால் என் கிட்ட வாலாட்டுறது உனக்கு நல்லதில்ல. 443 00:35:13,363 --> 00:35:14,364 தெரியுது. 444 00:35:16,283 --> 00:35:17,825 அது ஒரு மோசமான யோசனை. 445 00:35:17,826 --> 00:35:19,035 இது தான் என் ஆஃபீஸ். 446 00:35:19,036 --> 00:35:20,037 ம்… 447 00:35:21,538 --> 00:35:23,415 இங்க இருந்து பார்க்கிறதுக்கு நல்லா இருக்கு. 448 00:35:24,124 --> 00:35:25,125 நன்றி. 449 00:35:26,293 --> 00:35:28,128 ம், நீ என்ன பண்ற, பகட்டுக்காரனே? 450 00:35:29,087 --> 00:35:30,796 ரியல் எஸ்டேட். 451 00:35:30,797 --> 00:35:32,256 ரியல் எஸ்டேட் பண்றானாம். 452 00:35:32,257 --> 00:35:33,925 ஆமா, ரியல் எஸ்டேட் பண்றேன். 453 00:35:33,926 --> 00:35:35,384 லா-டி-டா. 454 00:35:35,385 --> 00:35:37,679 உனக்கு டிரிங்ஸ் கொண்டு வரட்டுமா? ஸ்காட்ச் வேணுமா? 455 00:35:39,473 --> 00:35:40,974 இன்னொன்னு குடிச்சா என்ன ஆகப் போகுது? 456 00:35:41,558 --> 00:35:43,184 - ஸ்காட்ச். - ம், அது, 457 00:35:43,185 --> 00:35:46,771 அது, ஆமா ஒண்ணுதானே. 458 00:35:46,772 --> 00:35:48,398 - ஆமா. - ஆமா. 459 00:35:49,858 --> 00:35:50,859 குடி. 460 00:35:51,818 --> 00:35:52,819 - நன்றி. - இங்க வா. 461 00:35:53,487 --> 00:35:56,823 நீ, ம், தனிக் கட்டை, இல்லையா? 462 00:35:57,324 --> 00:35:59,742 ஆமா. உனக்கு எப்படித் தெரியும்? 463 00:35:59,743 --> 00:36:00,786 ம், மோதிரம் இல்ல. 464 00:36:02,371 --> 00:36:03,914 படங்கள் இல்ல. 465 00:36:05,290 --> 00:36:08,876 என்னால சுத்திப் பாத்து சொல்ல முடியும். நான் அதை நல்லா பண்ணுவேன். 466 00:36:08,877 --> 00:36:09,878 அப்படியா? 467 00:36:11,630 --> 00:36:13,048 உன் கிட்ட வேற என்ன நல்ல விஷயம் இருக்கு தெரியுமா? 468 00:36:13,924 --> 00:36:14,925 நல்லா குடிக்கிறதா? 469 00:36:15,884 --> 00:36:17,427 இல்ல, அழகுன்னு சொல்ல வந்தேன். 470 00:36:19,972 --> 00:36:21,014 ம், நல்லது. 471 00:36:27,646 --> 00:36:30,148 - நீ ரொம்ப செக்ஸியா இருக்க. - சரி. 472 00:36:31,275 --> 00:36:33,276 இல்ல, இல்ல. பொறு… 473 00:36:33,277 --> 00:36:34,819 வேண்டாம், வேண்டாம். 474 00:36:34,820 --> 00:36:36,864 ஐயே. நான்… 475 00:36:37,406 --> 00:36:39,615 நான் என் ரூம்மேட்டைக் கூப்பிடணும். 476 00:36:39,616 --> 00:36:42,452 - கடவுளே. நிறுத்து. - சரி. 477 00:36:44,621 --> 00:36:46,039 உன் ஃபோனைப் பயன்படுத்தலாமா? 478 00:36:46,748 --> 00:36:48,959 - என்னோடதுல சார்ஜ் இல்ல. - என்ன? 479 00:36:50,294 --> 00:36:52,545 - ஏன்? - ஆமா, என் ஃபோன்ல சார்ஜ் இல்ல. 480 00:36:52,546 --> 00:36:54,338 - சரி. - ரூம்மேட்டைக் கூப்பிட்டப் பிறகு, இதைப் பண்ணலாம், 481 00:36:54,339 --> 00:36:55,965 - சரியா? - சரி. கண்டிப்பா. 482 00:36:55,966 --> 00:36:57,009 நன்றி. 483 00:36:58,051 --> 00:37:01,387 இந்தா. ஒரு நிமிஷம். இந்தா. 484 00:37:01,388 --> 00:37:03,307 ரொம்ப நன்றி. 485 00:37:12,149 --> 00:37:13,901 நீ உன் ஃபோன்ல சார்ஜ் இல்லேன்னு சொன்ன? 486 00:37:16,570 --> 00:37:18,447 நான் குடிச்சிருக்கேன்னும் நீ நினைச்ச. 487 00:37:18,947 --> 00:37:20,907 தப்பு. ரெண்டு தப்பு. 488 00:37:20,908 --> 00:37:24,285 உன்னோட மனைவியோட நம்பரை எனக்கு மெசேஜ் பண்ணிக்கிட்டேன். அவ அழகு. 489 00:37:24,286 --> 00:37:26,579 உன் ஆஃபீஸ்ல வச்சு, ஒரு போதைல இருக்கிற பெண்ணை நீ பலாத்காரம் 490 00:37:26,580 --> 00:37:28,665 பண்ணப் போறன்னு சொல்லப் போறேன். 491 00:37:29,416 --> 00:37:32,460 நாம சேர்ந்து அவளுக்கு வீடியோ கால் பண்ணலாமா? அது நல்லா இருக்கும். 492 00:37:32,461 --> 00:37:33,794 என்ன எழவு நடக்குது? 493 00:37:33,795 --> 00:37:36,130 - நீ என்ன பேசுற… - ம், இது பேரு ப்ளாக்மெயில், எரிக். 494 00:37:36,131 --> 00:37:38,258 ஆனால் என்னை நம்பு, உனக்கு ஒண்ணும் ஆகாது. 495 00:37:38,759 --> 00:37:41,677 நீ வாடகைக்கு விட்டிருக்கிற வீடுகள்ல ஒரு வீட்டோட பின் நம்பரும், சாவியையும் கொடு, 496 00:37:41,678 --> 00:37:44,138 நான் உன்னை விட்டு போயிட்டே இருப்பேன். 497 00:37:44,139 --> 00:37:45,515 உனக்கு என்ன எழவு தான் பிரச்சினை? 498 00:37:45,516 --> 00:37:46,517 அது நிறைய இருக்கு. 499 00:37:47,017 --> 00:37:51,271 ஆனால் உண்மையில, மகனே, இப்போ நஷ்டம் உனக்குத் தான். எனக்கில்ல. 500 00:37:54,691 --> 00:37:55,775 ஹே. 501 00:37:55,776 --> 00:37:57,610 வேற யாரோ பேசுற மாதிரி இருக்கு. 502 00:37:57,611 --> 00:38:00,239 களைப்பா இருக்கேன், மனநிலையும் சரியில்ல, அதனால அப்படித் தான் இருக்கும். 503 00:38:01,156 --> 00:38:03,450 ம், நான் சொல்லப் போறதைக் கேட்டு சந்தோஷப்படப் போறீங்க. 504 00:38:04,243 --> 00:38:05,619 சொல்லு பார்க்கலாம். 505 00:38:07,037 --> 00:38:08,580 உன் நிலைமை தெரியுது, மகனே. 506 00:38:20,592 --> 00:38:23,971 நேரமாயிட்டிருக்குன்னு தெரியும். மிரட்டுறதை விட்டுட்டு நேரா விஷயத்துக்கு வா. 507 00:38:24,805 --> 00:38:26,306 உன்னோட தொனியைக் கேட்டா… 508 00:38:28,308 --> 00:38:31,895 இந்த சூழ்நிலையோட தீவிரத்தை நீ புரிஞ்சுகிட்ட மாதிரியே தெரியல. 509 00:38:33,105 --> 00:38:36,190 நீங்க சொன்னது சரி. கேரி ஒரு கார் வாங்கியிருக்கான், ரொக்கம் கொடுத்து. 510 00:38:36,191 --> 00:38:38,609 அது ஒரு நீல ஹெரிடேஜ் ப்ரான்கோன்னு இதுல சொல்லுது. 511 00:38:38,610 --> 00:38:41,488 - உறுதியா சொல்றியா? - ஆமா. நூறு சதவீதம். 512 00:38:42,155 --> 00:38:45,658 நீ பத்து மில்லியன் டாலர் தொலைச்சிருக்க. எனக்குப் புரியுது, என்னை நம்பு. 513 00:38:45,659 --> 00:38:47,785 நான் எதுவும் தொலைக்கல, நீ தான் தொலைச்சிருக்க. 514 00:38:47,786 --> 00:38:50,038 அதோட, பணம் ஒரு பிரச்சினை இல்ல, 515 00:38:52,416 --> 00:38:54,626 நீங்க பண்ண விஷயம் தான் பிரச்சினை. 516 00:38:55,252 --> 00:38:56,503 யாரும் என் கிட்ட இருந்து திருடக்கூடாது. 517 00:38:57,171 --> 00:38:59,840 வேய்ன், இது என் பையன். 518 00:39:01,383 --> 00:39:05,845 தெரியும். அதனால தான் சொல்றேன், நீ அவனைப் பத்தி கவலைப்படுறது தவறு, 519 00:39:05,846 --> 00:39:09,015 நீ என்னைப் பத்தி கவலைப்படணும், 520 00:39:09,016 --> 00:39:11,058 ஏன்னா இதோட முடிவுல நீ உயிரோட இருக்கணும்னா, 521 00:39:11,059 --> 00:39:13,561 ஒண்ணே ஒண்ணு தான் நடக்கணும். 522 00:39:13,562 --> 00:39:15,063 உனக்குப் புரியுதுன்னு சொல்லு. 523 00:39:16,023 --> 00:39:17,440 புரியுது. 524 00:39:17,441 --> 00:39:19,525 அந்த காரோட நம்பர் கிடைச்சுதா? 525 00:39:19,526 --> 00:39:22,905 இல்ல, அதை விட நல்ல விஷயம் இருக்கு. அவனோட புது அடையாள அட்டை என்கிட்ட இருக்கு. 526 00:39:24,406 --> 00:39:25,866 என்னை ஆஃபீஸ்ல வந்து பார். 527 00:39:26,450 --> 00:39:27,659 ஒரு பேனா இருக்கா? 528 00:39:28,493 --> 00:39:29,703 உன் பையனைக் கண்டுப்பிடிச்சிட்டேன். 529 00:41:00,502 --> 00:41:04,714 என்ன தான் இங்கு நடக்கிறது? 530 00:41:04,715 --> 00:41:08,218 இது என்னவாகத் தான் இருக்கும்? 531 00:41:08,969 --> 00:41:12,306 நான் ஒரு விழிப்பின் விளிம்பில இருக்கிறேன் 532 00:41:12,931 --> 00:41:17,018 எனக்குப் புது விதமான வலிமை 533 00:41:17,019 --> 00:41:21,230 இது வரை உணர்ந்திராத ஒரு விசையை உணர்கிறேன் 534 00:41:21,231 --> 00:41:25,526 இனியும் அதை எதிர்த்துப் போராட நான் விரும்பவில்லை 535 00:41:25,527 --> 00:41:29,614 வலிமையான உணர்வுகள் அதைப் புறக்கணிக்க முடியாது 536 00:41:29,615 --> 00:41:33,827 நான் வெகுண்டெழுந்தேன் நான் மாறினேன் 537 00:41:34,453 --> 00:41:38,497 இது வரை உணர்ந்திராத ஒரு விசையை உணர்கிறேன் 538 00:41:38,498 --> 00:41:42,877 இனியும் அதை எதிர்த்துப் போராட நான் விரும்பவில்லை 539 00:41:42,878 --> 00:41:46,964 வலிமையான உணர்வுகள் அதைப் புறக்கணிக்க முடியாது 540 00:41:46,965 --> 00:41:51,052 முகத்துக்கு நேராக சிரித்தேன் அது பினந்திண்ணி கழுகு சட்டம் 541 00:41:51,053 --> 00:41:55,015 நான் வெகுண்டெழுந்தேன் நான் மாறினேன் 542 00:42:23,752 --> 00:42:25,212 ஒரு விசையை உணர்கிறேன் 543 00:42:27,339 --> 00:42:31,760 எனக்கு வேண்டும் எனக்கு வேண்டும் அவ்வளவே 544 00:42:57,160 --> 00:42:58,995 உங்களுடைய 12 வார்த்தை ரகசிய வாக்கியம் பாதுகாப்பான இடத்தில் வைக்கவும். 545 00:42:58,996 --> 00:43:00,539 இந்த வாக்கியம் உள்ள எவரும் உங்கள் வாலட்டை அணுகலாம். 546 00:44:53,151 --> 00:44:55,153 தமிழாக்கம் மரிய ஜோசப் ஆனந்த் மொராய்ஸ்