1 00:00:11,595 --> 00:00:12,596 இது ஒரு கற்பனைக் கதை. 2 00:00:12,679 --> 00:00:14,556 எந்தவொரு வாழும் அல்லது வாழ்ந்த நபர், நிகழ்வு அல்லது 3 00:00:14,640 --> 00:00:16,433 இடத்தோடு ஒத்திருந்தால் அது முற்றிலும் தற்செயலானது. 4 00:00:19,228 --> 00:00:20,521 கால் டிரான்ஸ்கிரிப்ஷன் 5 00:00:26,193 --> 00:00:28,195 நோவோசிபிர்ஸ்க் சிசி: 6 00:00:32,198 --> 00:00:33,867 நோவோசிபிர்ஸ்க் கட்டுப்பாட்டு மையம், டேவிடோவ் பேசுகிறேன். 7 00:00:33,951 --> 00:00:35,369 டிமா, நமக்கு ஒரு பிரச்சினை. 8 00:00:35,452 --> 00:00:36,453 இது என்ன எண்? 9 00:00:36,537 --> 00:00:38,830 அது முக்கியமில்லை, ஒரு கைதியைக் காணவில்லை. 10 00:00:38,914 --> 00:00:40,791 அவள் பஸ்ஸில் இல்லை. 11 00:00:41,458 --> 00:00:43,502 ஒருவேளை அவள் TPK-7-இல் தூங்கிவிட்டாளோ? 12 00:00:43,585 --> 00:00:44,753 குலிகோவிடம் விசாரி. 13 00:00:44,837 --> 00:00:47,256 ச்சே, டிமா, நான் சொல்வதைக் கேள், அவள் போய்விட்டாள். 14 00:00:47,339 --> 00:00:49,591 குலிகோவும் போய்விட்டான், ச்சே! 15 00:00:49,675 --> 00:00:50,717 நான் சொல்வதைக் கேட்கிறாயா? 16 00:00:50,801 --> 00:00:52,970 பொறு, ஒரு நிமிடம் பொறு! 17 00:00:53,303 --> 00:00:54,721 குலிகோவ் போய்விட்டானா? 18 00:00:54,805 --> 00:00:56,890 ஓ, நாசமாய்ப் போய்விட்டது… 19 00:00:56,974 --> 00:00:59,268 சரி, வாஸ்யா, வாஸ்யா… 20 00:00:59,977 --> 00:01:03,313 நான் பேசுவது கேட்கிறதா? நீ கவனம் செலுத்த வேண்டும். 21 00:01:03,772 --> 00:01:05,482 உன்னால் செய்ய முடியுமா? 22 00:01:05,566 --> 00:01:06,900 ஆம்… 23 00:01:07,359 --> 00:01:09,111 - ச்சே. - கைதி எண்ணைச் சொல். 24 00:01:09,778 --> 00:01:14,533 கடவுளே, டிமா, கைதி எண் 4-0-3-6-7. 25 00:01:14,908 --> 00:01:18,287 அவளுடைய பெயர் காலி லெவி. 26 00:01:19,496 --> 00:01:20,664 புரிந்தது. 27 00:01:20,956 --> 00:01:23,709 வாஸ்யா, ஃபோனை வை. 28 00:01:23,792 --> 00:01:25,627 யாரிடமும் பேசாதே. 29 00:02:32,486 --> 00:02:35,948 மாஸ்கோ சர்வதேச விமான நிலையம் 30 00:03:03,225 --> 00:03:08,188 டாக்ஸி 31 00:03:14,945 --> 00:03:17,614 வா, அவர்களால் அதை நன்றாக விளக்க முடியும். 32 00:03:20,075 --> 00:03:21,827 சரியாக அவள் எப்படி காணாமல் போனாள் என்று 33 00:03:21,910 --> 00:03:23,662 தூதரகத்தில் இருக்கும் எங்களிடம் பதில் இல்லை. 34 00:03:23,745 --> 00:03:25,497 ரஷ்யர்களால் கூட சொல்ல முடியாது. 35 00:03:25,914 --> 00:03:27,708 "சொல்ல முடியாது" என்றால் என்ன அர்த்தம்? 36 00:03:27,791 --> 00:03:29,751 அவர்கள் அவளை ஏதாவது செய்தார்களா? எங்கே அவள்? 37 00:03:29,960 --> 00:03:33,213 நோவோசிபிர்ஸ்கில் ஒரு காவலர் பஸ்சிலிருந்து கைதி காணாமல் போனதைக் கவனித்து, 38 00:03:33,297 --> 00:03:35,215 அதை மாஸ்கோவுக்குத் தெரிவித்திருக்கிறார். 39 00:03:35,299 --> 00:03:36,633 இந்த சம்பவம் கணினியில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 40 00:03:36,717 --> 00:03:38,802 "சம்பவம்" என்று ஏன் சொல்கிறீர்கள்? என்ன சம்பவம்? 41 00:03:38,886 --> 00:03:41,305 அந்த பஸ்கள் வழியில் இருக்கும் நிலையங்களில் நிற்கும், 42 00:03:41,388 --> 00:03:44,474 அங்கே கைதிகள் ஒரு இரவுக்கு தூங்கக்கூடிய தற்காலிக வசதிகள் இருக்கின்றன, 43 00:03:44,558 --> 00:03:46,935 சில சமயம் ஏதாவது சாப்பிட கொடுத்துவிட்டு, மீண்டும் பஸ்களில் ஏற்றப்படுவார்கள். 44 00:03:47,019 --> 00:03:51,565 கிராஸ்னோயார்ஸ்கில் கடைசி நிறுத்தத்தில், காலியை ஏற்றாமல் விட்டுவிட்டார்கள் போல தெரிகிறது. 45 00:03:51,648 --> 00:03:53,066 அங்கேதான் அவளைத் தொலைத்திருக்கிறார்கள். 46 00:03:55,319 --> 00:03:57,029 நீங்கள் அவர்களிடம் காவலனைப் பற்றி சொல்லலாம். 47 00:03:59,573 --> 00:04:02,993 காலியை விடுவிக்க ஒரு காவலனுக்கு யாரோ லஞ்சம் கொடுத்ததாக சந்தேகப்படுகிறார்கள். 48 00:04:03,076 --> 00:04:07,414 மாஸ்கோவிலிருந்து ஒரு விசாரணை அதிகாரியைக் கூட வரவைத்திருக்கிறார்கள், 49 00:04:07,497 --> 00:04:10,125 ஆனால் அவர் வந்தடைந்தபோது, அந்தக் காவலன் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறிவிட்டான். 50 00:04:10,209 --> 00:04:12,294 வீட்டுக் காவலில் இருந்து முழு குடும்பத்துடன் தப்பியிருக்கிறான், 51 00:04:12,377 --> 00:04:13,879 தன்னுடைய மனைவி, பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு. 52 00:04:14,379 --> 00:04:16,130 அவர்கள் நாயையும் கூட்டிப் போயிருக்கிறார்கள். 53 00:04:16,632 --> 00:04:18,884 எனவே, லஞ்சம் கொடுத்தவன்… 54 00:04:19,551 --> 00:04:21,011 செலவைப் பற்றி கவலைப்படவில்லை. 55 00:04:21,094 --> 00:04:24,348 பெண்களே, உங்களுக்கு பதில் கிடைத்துவிட்டது என்று நினைக்கிறேன். 56 00:04:24,640 --> 00:04:25,849 அதுதான் விஷயம், இந்த விஷயத்தில் தூதரகத்தின் 57 00:04:25,933 --> 00:04:27,851 பங்கு முடிவுக்கு வந்துவிட்டதாக பயப்படுகிறேன். 58 00:04:27,935 --> 00:04:30,354 "முடிவு" என்றால் என்ன அர்த்தம்? என் மகள் எங்கே? 59 00:04:30,437 --> 00:04:32,856 நீங்களும் கேட்டீர்கள். யாரோ அவளை சிறையில் இருந்து கடத்திச் சென்றதாக தெரிகிறது. 60 00:04:32,940 --> 00:04:35,275 - யார்? - எங்களிடம் கேட்கிறீர்களா? 61 00:04:35,359 --> 00:04:36,818 இல்லை, நான் தெரிந்துகொள்ள வேண்டாமா? 62 00:04:36,902 --> 00:04:38,654 தயவுசெய்து ஒரு நிமிடம் நிற்கிறீர்களா? 63 00:04:41,323 --> 00:04:45,536 விஷயம் என்னவென்றால், அது இப்போது பத்திரிக்கை செய்தியாகிவிட்டது. 64 00:04:46,286 --> 00:04:48,580 சிறை காவலில் இருந்து தப்பிப்பது, காவலர்களுக்கு லஞ்சம் கொடுப்பது… 65 00:04:49,289 --> 00:04:52,501 ஒரு அதிகாரப்பூர்வ அமைப்பாக, இதைக் கையாள்வது எங்களுக்கு சௌகரியமாக இல்லை, 66 00:04:52,584 --> 00:04:53,919 மறைமுகமாகக் கூட. 67 00:04:54,002 --> 00:04:55,796 எனவே இந்தச் சந்திப்பு கூட, 68 00:04:55,879 --> 00:04:58,423 நாம் ஏன் தூதரகத்தில் இல்லாமல் யூத ஆலயத்தில் சந்திக்கிறோம் என்று நினைக்கிறீர்களா? 69 00:04:58,757 --> 00:05:00,759 நாங்கள் இதை உங்களுக்கு ஒரு உதவியாகச் செய்கிறோம். 70 00:05:01,885 --> 00:05:04,096 உங்கள் மகள் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டாள், 71 00:05:04,346 --> 00:05:06,765 அவள் வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் இருக்கும்போது, சிறையிலிருந்து தப்பியிருக்கிறாள், 72 00:05:06,849 --> 00:05:08,976 யாரோ காவலனுக்கு லஞ்சம் கொடுத்திருக்கிறார்கள். அட, அது உங்களுக்கு சாதாரணமாகத் தெரிகிறதா? 73 00:05:09,059 --> 00:05:12,020 அது எப்படி தெரிகிறது என்று கவலையில்லை, நீங்கள் எனக்கு உதவ வேண்டும். 74 00:05:12,104 --> 00:05:14,815 ஒருவேளை FSB-இல் இருக்கும் உங்கள் புதிய நண்பர்களிடம் உதவி கேளுங்களேன்? 75 00:05:14,898 --> 00:05:16,275 எனக்கு உன் உதவி தேவையில்லை, அமி. 76 00:05:19,027 --> 00:05:21,530 ஓர்னா, அனுதாபத்துடன் சொல்கிறேன், 77 00:05:21,905 --> 00:05:25,242 இது சில காலத்திற்கு முன்பே ராஜதந்திரத்திலிருந்து குற்றவியல் வழக்காக மாறிவிட்டது. 78 00:05:26,159 --> 00:05:28,120 உங்கள் சொந்த நாட்டில் அமெரிக்கர்களுடன் நீங்கள் ஏற்படுத்திய பிரச்சினைகளுக்குப் பிறகும், 79 00:05:28,203 --> 00:05:30,873 இந்தச் சந்திப்புக்கு ஒப்புக்கொண்டதற்குக் கூட நீங்கள் எங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். 80 00:05:30,956 --> 00:05:34,251 ராமி, இரண்டாவது முறையாக நன்றி சொல்ல வேண்டும் என்று கேட்பதை நீ உணர்கிறாயா? 81 00:05:34,334 --> 00:05:38,797 நான் உன் இடத்தில் இருந்தால், தொழில்ரீதியாகவோ, தனிப்பட்ட முறையிலோ, 82 00:05:38,881 --> 00:05:41,884 ஒருவேளை குழந்தை பருவத்திலிருந்தோ எது உன்னைத் தூண்டுகிறது என்று பார்த்திருப்பேன். 83 00:05:41,967 --> 00:05:43,260 நன்றி, ரீட்டா. 84 00:05:44,553 --> 00:05:46,138 போகலாம், அமி. 85 00:05:50,142 --> 00:05:52,436 அவளுடைய அப்பா இறந்தது கூட அவளுக்குத் தெரியாது. 86 00:05:59,443 --> 00:06:01,111 மிகவும் வருந்துகிறேன். 87 00:06:24,593 --> 00:06:27,095 கொஞ்சம் இனிப்பு சாப்பிடு, நீ நன்றாக உணர்வாய். 88 00:06:29,973 --> 00:06:31,934 காலி இன்னும் உயிருடன் இருக்கிறாள் என்று நினைக்கிறீர்களா? 89 00:06:35,604 --> 00:06:37,523 85%, என்று சொல்வேன். 90 00:06:37,940 --> 00:06:40,859 அதாவது, ஒருவரை சிறையிலிருந்து கடத்திகொண்டு போய் அவளை உடனே கொல்ல 91 00:06:40,943 --> 00:06:43,487 ஏன் ஒரு காவலனுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும்? 92 00:06:44,696 --> 00:06:49,034 எனவே, காவலனுக்கு லஞ்சம் கொடுத்தவனிடம்தான் அவள் இப்போது இருக்க வேண்டும். 93 00:06:49,535 --> 00:06:50,744 ஆம். 94 00:06:52,412 --> 00:06:54,039 - யூரி கிளாஸ்கோவ். - இல்லை. 95 00:06:54,623 --> 00:06:55,707 ஏன் கூடாது? அவள் அவனுக்காக வேலை செய்தாள். 96 00:06:55,791 --> 00:06:58,043 - நீ நினைக்கிறாயா… - சரி, எனக்கு ஒரு உள்ளுணர்வு… 97 00:06:58,126 --> 00:07:01,630 ஒரு பெற்றோரின் உள்ளுணர்வு, நான் மரியாதை குறைவாகச் சொல்லவில்லை, 98 00:07:01,964 --> 00:07:03,173 முட்டாள்தனமான விஷயங்களில் ஒன்று… 99 00:07:03,257 --> 00:07:04,842 நாட்யா, யூரி கிளாஸ்கோவ் என்ற பெயர் கொண்ட 100 00:07:04,925 --> 00:07:08,303 ஆயுத வியாபாரியைப் பற்றி குறிப்பிட்டாள். ஒரு பாடலின் பெயர் "யூரி கிளாஸ்கோவ்." 101 00:07:08,720 --> 00:07:11,014 காலி அதைக் கேட்பாள், குறிப்பாக, அதைப் பிடித்த பாடலாக குறித்து வைத்திருந்தாள். 102 00:07:11,098 --> 00:07:14,560 அது குறைந்தபட்சம் விரைவான சரிபார்ப்புக்குக் கூட தகுதியானது இல்லையா? 103 00:07:17,229 --> 00:07:19,731 - என்ன? - அதை என்னிடம் விடு. 104 00:07:20,065 --> 00:07:22,526 - நீ அதற்காக இங்கே இல்லை. - பிறகு நான் எதற்காக இங்கே இருக்கிறேன்? 105 00:07:23,235 --> 00:07:25,195 தேவைப்படும்போது முகத்தை சோகமாக வைத்துக்கொள்ள, 106 00:07:25,529 --> 00:07:26,905 தேவைப்படும்போது பவர் ஆஃப் அட்டார்னியில் கையெழுத்திட, 107 00:07:26,989 --> 00:07:28,365 தேவைப்படும்போது அதிகாரிகளுக்கு முன் அழ. 108 00:07:28,448 --> 00:07:30,075 அம்மாக்களின் விஷயம். 109 00:07:34,079 --> 00:07:35,455 நீங்கள் எதற்காக இங்கே இருக்கிறீர்கள்? 110 00:07:36,290 --> 00:07:38,250 அம்மாக்களின் விஷயமாக இல்லாததற்கு. 111 00:07:41,461 --> 00:07:42,296 சரி… 112 00:07:45,507 --> 00:07:48,635 இங்கேயே இரு, ஐந்து நிமிடங்களில் ஒரு சந்திப்புக்குக் கிளம்புகிறோம். 113 00:07:51,722 --> 00:07:53,098 தி ஃபேண்டம் லிம்ப் - யூரி கிளாஸ்கோவ் 114 00:08:00,272 --> 00:08:01,982 இசை நிகழ்வுகள் அடுத்த தேதிகள் 115 00:08:02,065 --> 00:08:06,361 மாஸ்கோ ப்ளாட்டன்பௌ கிளப் - இன்றிரவு! 116 00:08:06,445 --> 00:08:09,615 வெளிநாட்டு இலக்கியங்களுக்கான நூலகம் 117 00:08:21,001 --> 00:08:25,422 சொல், கடைசியாக நீ எப்போது ஒரு பொது நூலகத்தில் ரொமாண்டிக் டேட்டிற்குப் போனாய்? 118 00:08:36,433 --> 00:08:38,268 அவர்கள் இன்றிரவு இங்கே நிகழ்ச்சி நடத்துகிறார்கள். 119 00:08:38,852 --> 00:08:39,770 யார்? 120 00:08:40,354 --> 00:08:43,315 யூரி கிளாஸ்கோவ் பற்றி பாடலை பாடும் அந்த இசைக்குழு. 121 00:08:43,398 --> 00:08:46,235 அவர்கள் இங்கே மாஸ்கோவில் இருக்கும் ஒரு கிளப்பில் வாசிக்கிறார்கள். 122 00:08:46,318 --> 00:08:47,569 சரி. 123 00:08:48,570 --> 00:08:51,240 சரி, அப்படியென்றால் நாம் போக வேண்டும் என்று நினைக்கிறேன். 124 00:08:55,619 --> 00:08:59,164 அவன் யாரென்று அவர்களுக்குத் தெரியும், அவர்கள் யூரி கிளாஸ்கோவ் பற்றிய பாடல் பாடுகிறார்கள். 125 00:08:59,456 --> 00:09:01,875 அது சரிபார்க்க தகுதியானது இல்லை என்று நினைக்கிறீர்களா? ஏன்? 126 00:09:01,959 --> 00:09:03,085 நான் ஏற்கனவே சரிபார்த்துவிட்டேன் என்பதால். 127 00:09:03,168 --> 00:09:07,214 மக்கள் தொகை பதிவேட்டில் மூன்று யூரி கிளாஸ்கோவ்கள் இருக்கிறார்கள். 128 00:09:07,506 --> 00:09:09,883 ஒருவர் 25 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார், 129 00:09:10,133 --> 00:09:11,677 ஒருவர் 2008-இல் இறந்துவிட்டார், 130 00:09:12,094 --> 00:09:14,847 ஒருவர் உயிருடன் இருக்கிறார், ஆனால் நம் விஷயத்தில் பொருத்தமில்லாவர். 131 00:09:14,930 --> 00:09:17,182 அவர் நமக்குப் பொருத்தமில்லாவர் என்பதை ஏன் முன்பே முடிவு செய்தீர்கள்? 132 00:09:17,266 --> 00:09:19,977 உன் மகளை விடுவிக்க காவலனுக்கு லஞ்சம் கொடுத்த யூரி கிளாஸ்கோவ் 133 00:09:20,060 --> 00:09:21,812 யகுட்ஸ்கில் ஒரு தொடக்கப்பள்ளியில் படிக்கும் 134 00:09:21,895 --> 00:09:24,189 எட்டு வயது சிறுவனாக இருப்பான் என்று நீ நினைக்க மாட்டாய் என்பதால்… 135 00:09:24,273 --> 00:09:27,484 - சரி, புரிகிறது. - எனவே அப்படி ஒரு நபர் ரஷ்யாவில் இல்லை. 136 00:09:27,568 --> 00:09:28,735 ஆனால் என்ன தெரியுமா? 137 00:09:28,819 --> 00:09:30,988 நீ ஒரு நிகழ்ச்சியைப் பார்க்க விரும்பினால், போய் பாரு… 138 00:09:31,071 --> 00:09:32,698 சரி, போதும். 139 00:09:32,990 --> 00:09:36,785 இதோ அவன் வந்துவிட்டான். சோகமாக இரு. கேடுகெட்டவன். எப்போதும் தாமதமாகத்தான் வருவான். 140 00:09:36,869 --> 00:09:40,497 - மீண்டும் கேட்கிறேன் யார் இவர்? - ரஷ்யாவில் இருக்கும் எங்கள் உளவாளிகளில் ஒருவன். 141 00:09:40,747 --> 00:09:43,083 ஆனால் நேர்மையாகச் சொன்னால், மிக மோசமான உளவாளி. 142 00:09:43,542 --> 00:09:45,586 செர்கெ, இங்கே வா. 143 00:09:45,669 --> 00:09:46,962 என்னவொரு முட்டாள்… 144 00:09:48,338 --> 00:09:49,673 யார் இது? 145 00:09:49,882 --> 00:09:52,926 - இவர் ஏன் இங்கே இருக்கிறார்? - இவர்தான் அந்த அம்மா, செர்கெ. 146 00:09:53,177 --> 00:09:55,470 - ரீட்டா… - செர்கெ… 147 00:09:55,679 --> 00:09:58,640 உன் முகத்தைப் பார்க்க கடுமையானவனாகத் தெரிந்தாலும் 148 00:09:58,724 --> 00:10:02,477 நீ கணிவானவன் என்று எனக்குத் தெரியும் என்பதால் 149 00:10:02,895 --> 00:10:04,688 இவரை இங்கே கூட்டி வந்தேன். 150 00:10:04,938 --> 00:10:07,941 உண்மை, நீ சோகமான, வழுக்கை விழும் கோழை, 151 00:10:08,025 --> 00:10:11,236 ஆனால் நல்லுள்ளம் கொண்டவன். 152 00:10:11,778 --> 00:10:12,946 உட்காரு. 153 00:10:23,290 --> 00:10:25,417 எனக்கு உண்மையாகவே வழுக்கை விழுகிறதா? 154 00:10:27,794 --> 00:10:29,880 உன் குடும்பம், பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள்? 155 00:10:30,297 --> 00:10:33,133 அவர்களுக்கு என்னைப் பிடிப்பதாக நான் நினைக்கவில்லை. 156 00:10:33,634 --> 00:10:37,846 - எப்படி ஒருவருக்கு உன்னைப் பிடிக்காமல் போகும்? - என் அம்மா அப்படிச் சொல்வார். 157 00:10:38,222 --> 00:10:41,099 நாம் ஏற்கனவே அம்மாக்களைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதால், 158 00:10:41,183 --> 00:10:44,102 ஒருவேளை நீ எனக்கும் இங்கிருக்கும் என் தோழிக்கும் விளக்கலாம், 159 00:10:44,186 --> 00:10:47,648 இவருடைய மகளை உன்னுடைய சகாக்கள் என்ன செய்தார்கள் என்று. 160 00:10:49,816 --> 00:10:52,736 இவரோடு ஒரு ஒப்பந்தம் செய்தாய், இவர் தன் பங்கை செய்துவிட்டார். 161 00:10:52,819 --> 00:10:55,697 இவர் அந்த ஹேக்கர் பெண்ணை மேல்முறையீட்டில் கையெழுத்திட வைத்தார். 162 00:10:55,781 --> 00:10:57,407 எனவே, இங்கே என்ன நடக்கிறது? 163 00:10:59,284 --> 00:11:00,786 நீ ரொம்ப ஜென்டில்மேனாக இருந்தாய். 164 00:11:02,913 --> 00:11:07,084 சொல்லப் போனால் இவரோடு அந்த ஒப்பந்தம் செய்ததுதான் முதல் தவறு. 165 00:11:07,167 --> 00:11:08,168 ஏன்? 166 00:11:08,252 --> 00:11:10,879 ஏனென்றால் இவருடைய மகளை எங்களால் ஒப்படைக்க முடியாது. 167 00:11:10,963 --> 00:11:11,964 விளக்கு. 168 00:11:18,804 --> 00:11:23,517 எங்கள் ஆப்பரேட்டிவ்வான நாட்யாவுக்கான பேச்சுவார்த்தைகளுக்கு உதவ 169 00:11:25,227 --> 00:11:29,022 எங்களுக்கு FSB-யால் கடனாக மட்டுமே கொடுக்கப்பட்டவள்தான் காலி. 170 00:11:29,106 --> 00:11:35,195 ஆனால் உண்மையில், உங்கள் மகளின் கைது முழுவதுமாக அவை எல்லாவற்றுக்கும் சம்பந்தமில்லாததாக இருந்தது. 171 00:11:35,279 --> 00:11:38,198 எனவே, போதைப்பொருள் இல்லையென்றால் அவள் ஏன் கைது செய்யப்பட்டாள்? 172 00:11:40,492 --> 00:11:43,120 செல்வாக்கு கொண்ட யாரோ சரியான ஆட்களுக்கு 173 00:11:43,704 --> 00:11:49,126 பணம் கொடுத்ததால் அவள் கைது செய்யப்பட்டாள். 174 00:11:49,209 --> 00:11:54,047 விமான நிலைய காவலர்கள், நீதிமன்ற அதிகாரிகள், பாதுகாவலர்கள். 175 00:11:54,548 --> 00:11:56,758 இப்போது கடன் முடிந்துவிட்டது, 176 00:11:56,842 --> 00:12:00,053 உங்கள் மகள் சிறையில் இருந்து கடத்தப்பட்டு 177 00:12:00,554 --> 00:12:03,891 அவளுடைய அசல் உரிமையாளரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுவிட்டாள். 178 00:12:04,474 --> 00:12:06,810 "அவளுடைய அசல் உரிமையாளர்" என்றால்? 179 00:12:06,894 --> 00:12:08,061 ஓர்னா… 180 00:12:08,145 --> 00:12:09,229 அது யார், செர்கெ? 181 00:12:10,314 --> 00:12:13,734 இந்த ஒரு பெண் கிடைக்க இவ்வளவு பேருக்கு பணம் கொடுத்தது யார்? 182 00:12:15,360 --> 00:12:17,487 - இதை என்னால் சொல்ல முடியாது, ரீட்டா. - செர்கெ… 183 00:12:18,405 --> 00:12:19,656 ரீட்டா… 184 00:12:20,240 --> 00:12:22,534 நீ கொஞ்சம் பயப்படுவதால் இருக்குமா? 185 00:12:23,118 --> 00:12:24,286 கொஞ்சமில்லை. 186 00:12:25,204 --> 00:12:26,705 நான் ரொம்ப பயப்படுகிறேன். 187 00:12:28,832 --> 00:12:30,375 நீங்களும் பயப்பட வேண்டும். 188 00:12:33,253 --> 00:12:34,796 அவனுடைய பெயர் யூரி கிளாஸ்கோவா? 189 00:12:36,423 --> 00:12:38,133 காலியைப் பிடியில் வைத்திருக்கும் ஆள். 190 00:12:39,426 --> 00:12:42,095 இல்லை, அவனில்லை. நான் வருந்துகிறேன். 191 00:12:43,514 --> 00:12:45,432 மார்கரீட்டா, தயவுசெய்து, 192 00:12:45,682 --> 00:12:50,354 நீயோ, நானோ அல்லது உங்களை இங்கே அனுப்பியவர்களோ 193 00:12:50,562 --> 00:12:55,442 இதில் தலையிடக் கூடாது என்று நான் சொல்லும்போது என்னை நம்பு, 194 00:12:55,817 --> 00:12:59,571 குறிப்பாக, ரஷ்ய மண்ணில். 195 00:13:01,740 --> 00:13:03,075 அவர் என்ன சொல்கிறார்? 196 00:13:04,493 --> 00:13:06,995 தயவுசெய்து என்னிடம் சொல்கிறீர்களா? 197 00:13:07,079 --> 00:13:08,163 இதில் நானும் ஒரு பக்கம் இருக்கிறேன். 198 00:13:08,247 --> 00:13:11,041 ஆம், வருந்தத்தக்க விதமாக, அது முக்கிய பக்கம் இல்லை. 199 00:13:11,500 --> 00:13:13,252 நான் ஒரு கால் செய்ய வேண்டும். 200 00:13:13,627 --> 00:13:15,504 கொஞ்ச நேரம் எடுத்துக்கொள், ஒரு புத்தகத்தைப் படி. 201 00:13:32,938 --> 00:13:36,525 - ஹலோ? - யெவ்கேனி, நான் ஓர்னா. 202 00:13:36,608 --> 00:13:37,651 என்னை ஞாபகம் இருக்கிறதா? 203 00:13:37,734 --> 00:13:40,362 ஆம், இஸ்ரேலை சேர்ந்த ஓர்னா. 204 00:13:40,445 --> 00:13:42,990 நீங்கள் எனக்குச் செய்வதாக உறுதியளித்த அந்த உதவி எனக்கு இப்போது வேண்டும். 205 00:13:55,460 --> 00:13:57,629 நான் நீதிமன்ற பதிவுகளைச் சரிபார்த்தேன். 206 00:13:57,713 --> 00:14:04,636 இரண்டு மாதங்களுக்கு முன்பு, இங்கே மாஸ்கோவில் புனின் என்ற நபர், யூரி கிளாஸ்கோவ் என்ற 207 00:14:05,679 --> 00:14:07,806 நபர் மீது ஒரு புகாரைப் பதிவு செய்திருக்கிறான். 208 00:14:08,515 --> 00:14:12,019 ஆனால், மக்கள் தொகை பதிவேட்டில் யூரி கிளாஸ்கோவ் என்ற பெயரில் 209 00:14:12,102 --> 00:14:16,315 யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் அந்தப் புகார் நிராகரிக்கப்பட்டது. 210 00:14:16,815 --> 00:14:18,817 எனவே என் முன்னாள் வாடிக்கையாளரிடம் விசாரித்தேன். 211 00:14:18,901 --> 00:14:22,863 அவரும் அவன் பதிவேட்டில் இல்லாத ஒரு ஆள்தான் என்றார். 212 00:14:28,785 --> 00:14:31,371 எனவே, அவன் எங்கே இருக்கிறான்? அந்த புனின். 213 00:14:32,122 --> 00:14:33,373 அவன் பாரில் இருக்கிறான். 214 00:14:34,124 --> 00:14:35,501 வலதுபக்கம் இருக்கும் பாரில். 215 00:14:35,584 --> 00:14:38,795 அதைக் காணாமல் போனவர்களின் மாஸ்கோ பணியகம் என்று சொல்லலாம். 216 00:15:25,467 --> 00:15:26,468 ஹலோ. 217 00:15:27,344 --> 00:15:31,598 இங்கே ஒருவேளை அவ்வப்போது வந்துபோகும் ஒருவரைத் தேடுகிறேன், உங்களுக்குத் தெரியுமா? 218 00:15:32,099 --> 00:15:33,725 எனக்குப் புரியவில்லை. 219 00:15:35,310 --> 00:15:38,397 நான் புனினைத் தேடுகிறேன். 220 00:15:38,730 --> 00:15:39,982 புனினா? 221 00:15:40,065 --> 00:15:41,149 ஆம். 222 00:15:41,233 --> 00:15:43,777 அவன் ஃபிரிட்ஜை சரிசெய்து கொண்டிருக்கிறான். 223 00:15:44,528 --> 00:15:45,821 நன்றி. 224 00:16:06,884 --> 00:16:09,261 ஹாய், ஹலோ. நீங்கள் புனினா? 225 00:16:13,223 --> 00:16:14,349 உங்களைத் தொந்தரவு செய்வதற்கு மன்னியுங்கள். 226 00:16:14,433 --> 00:16:19,980 நான் ஒருவரைத் தேடுகிறேன், அதற்கு ஒருவேளை உங்களால் உதவ முடியும் என்று நினைக்கிறேன். 227 00:16:20,814 --> 00:16:22,399 ஏன் அப்படி நினைக்கிறீர்கள்? 228 00:16:26,028 --> 00:16:28,071 அவருடைய பெயர் யூரி கிளாஸ்கோவ். 229 00:16:35,329 --> 00:16:36,955 ஸ்டாஸ். 230 00:16:40,709 --> 00:16:42,377 நாம் தனியாகப் பேசுவோம், சரியா? 231 00:16:46,131 --> 00:16:47,132 ஆம், சரி. 232 00:17:12,199 --> 00:17:14,034 உன்னைப் போன்ற ஒருவளுக்கு 233 00:17:15,077 --> 00:17:17,538 யூரி போன்ற ஒருவனிடம் என்ன தேவை? 234 00:17:18,664 --> 00:17:23,126 - அவருக்காக ஒரு வணிக யோசனையை வைத்திருக்கிறேன். - உன்னிடம் இல்லை. 235 00:17:24,002 --> 00:17:25,796 அவன் உன் பணத்தையும் தொலைத்துவிட்டானா? 236 00:17:26,380 --> 00:17:28,590 - இல்லை, நான்… நான் வெறும்… - நீ போலீஸா? 237 00:17:29,633 --> 00:17:31,218 என்ன? இல்லை. 238 00:17:32,010 --> 00:17:35,472 இல்லை, நான் எப்படி போலீஸாக இருக்க முடியும்? நான்… எனக்கு ரஷ்ய மொழி கூட தெரியாது. 239 00:17:36,014 --> 00:17:39,476 - நீ வேறு எங்காவது போலீஸாக இருக்கலாம். - இல்லை, நான்… நான் போலீஸ் இல்லை. 240 00:17:40,185 --> 00:17:41,186 நான் போலீஸ் இல்லை. 241 00:17:44,022 --> 00:17:45,524 நீ போலீஸ் இல்லையா, ம்? 242 00:17:47,985 --> 00:17:49,111 நிஜமாகத்தான். 243 00:17:51,613 --> 00:17:53,699 நான் யூரியிடம் பேச வேண்டும். 244 00:17:55,367 --> 00:17:57,911 வரிசையில் நில், எல்லோருக்கும் யூரி வேண்டும். 245 00:17:57,995 --> 00:17:59,746 சரி, கேள். 246 00:17:59,830 --> 00:18:01,748 உன்னிடம் நிஜமாகவே ஒரு தொழில் யோசனை இருந்தால், 247 00:18:02,249 --> 00:18:05,002 என்னால் உதவ முடியும். உனக்குத் தேவையான எல்லாவற்றையும் என்னால் ஏற்பாடு செய்ய முடியும். 248 00:18:05,544 --> 00:18:09,006 எனக்கு அருமையான தொடர்புகள் இருக்கின்றன, அனுபவம் இருப்பவர்கள்… 249 00:18:09,089 --> 00:18:14,052 நன்றி. நான்… நான் நிஜமாகவே அவருடன் பேச வேண்டும். யூரியிடம். 250 00:18:14,136 --> 00:18:17,639 எனவே உங்களிடம் அவருடைய ஃபோன் எண் இருந்தால், அல்லது… 251 00:18:17,723 --> 00:18:19,266 ஃபோன் எண் உனக்கு உதவாது. 252 00:18:19,850 --> 00:18:20,851 ஏன்? 253 00:18:21,643 --> 00:18:24,021 ஏனென்றால் இறந்த மனிதர்களால் பதில் சொல்ல முடியாது. 254 00:18:24,104 --> 00:18:26,440 மூன்று மாதங்களாக யாரும் அவனிடம் பேசவில்லை. 255 00:18:26,523 --> 00:18:29,067 அலுவலகம் பூட்டப்பட்டிருக்கிறது, ஃபோன் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. 256 00:18:29,151 --> 00:18:30,777 உனக்கு யூரி தேவையில்லை, உனக்கு நாங்கள் தேவை. 257 00:18:30,861 --> 00:18:32,446 பொறுங்கள், அவருக்கு அலுவலகம் இருக்கிறதா? 258 00:18:33,322 --> 00:18:34,573 இங்கே மாஸ்கோவிலா? 259 00:18:39,995 --> 00:18:43,582 - அவர்கள் முன்னாள் ராணுவ வீரர்கள். - நல்லது, "வீரர்கள்." 260 00:18:43,665 --> 00:18:46,585 இனி ஒருபோதும் எனக்குத் தெரியாமல் அப்படிச் செய்யாதே. 261 00:18:46,668 --> 00:18:53,509 கேளுங்கள். யூரி கிளாஸ்கோவ் 3 மாதங்களுக்கு முன்பு கூரியர்களாக அவர்களை வேலைக்கு வைத்திருக்கிறான். 262 00:18:53,592 --> 00:18:55,886 அவர்கள் இங்கே, இந்த அலுவலகத்திற்கு, 263 00:18:55,969 --> 00:18:59,014 அவனுடைய ஒரு பணியாளரைச் சந்தித்து, கையெழுத்திட்டு, முன்பணம் வாங்க வந்திருக்கிறார்கள். 264 00:18:59,097 --> 00:19:02,518 அவர்கள் நேபாளத்திற்குப் போய், இந்தியாவில் இருந்து வரும் 265 00:19:02,601 --> 00:19:07,814 பேக்கேஜூக்காக காத்திருந்து, அதை ரஷ்யாவிற்குக் கடத்தி வர இருந்தார்கள். 266 00:19:07,898 --> 00:19:11,276 ஆனால் அவர்கள் நேபாளத்திற்குப் போய், 267 00:19:11,485 --> 00:19:13,278 ஒரு வாரம் காத்திருந்தும், பேக்கேஜ் வரவே இல்லை. 268 00:19:14,571 --> 00:19:17,324 எனவே அவர்கள் விமான டிக்கெட் இல்லாமல், 269 00:19:17,407 --> 00:19:19,993 பணம் இல்லாமல் சிக்கித் தவித்திருக்கிறார்கள், 270 00:19:20,452 --> 00:19:23,872 அவர்கள் திரும்பி வந்தபோதுதான், யூரி கிளாஸ்கோவ் காணாமல் போனதை உணர்ந்திருக்கிறார்கள். 271 00:19:25,040 --> 00:19:27,709 அவர்களில் ஒருவன் யூரி கிளாஸ்கோவ் தான் வேலை செய்த கொடுங்கோலனிடம் இருந்து 272 00:19:27,793 --> 00:19:30,546 திருடியதைக் கேள்விப்பட்டதாகவும், அதனால்தான் அவன் காணாமல் போனதாகவும் சொன்னான். 273 00:19:30,629 --> 00:19:33,215 எனவே அவன் அவனை விட்டு ஓடியிருக்கிறான்… 274 00:19:33,423 --> 00:19:34,925 அல்லது சரியான நேரத்தில் ஓடவில்லை. 275 00:19:35,342 --> 00:19:37,010 இங்கே வெளிச்சம் காட்டு. 276 00:19:37,511 --> 00:19:39,346 இது காலியுடன் தொடர்புடையதா என்பது இன்னும் உனக்குத் தெரியாது. 277 00:19:39,429 --> 00:19:40,264 எனக்குத் தெரியும். 278 00:19:40,597 --> 00:19:42,975 அவர்கள் இங்கே சந்தித்த பணியாளன், அவர்கள் அவளை விவரித்தார்கள். 279 00:19:43,267 --> 00:19:47,479 இருபதுகளில் இருக்கும் ஒரு பெண், ஆங்கில உச்சரிப்புடன், 280 00:19:47,563 --> 00:19:49,565 இங்கே ஒரு அங்க அடையாளம், கண்ணுக்கு பக்கத்தில். 281 00:19:53,068 --> 00:19:54,528 இதை எப்படிச் செய்வது என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? 282 00:19:54,611 --> 00:19:56,989 இயற்கையாக கிடைத்த திறமையா, அவர்கள் உங்களுக்குப் பயிற்சி கொடுத்தார்களா? 283 00:19:57,072 --> 00:19:58,365 பயிற்சி. 284 00:20:02,411 --> 00:20:06,081 "உண்மையில், ஓர்னா, நீ வலியுறுத்தியதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. உண்மையில்… 285 00:20:06,164 --> 00:20:08,876 நான் உன்னைப் பற்றி முழுவதும் தவறாக நினைத்தேன், நான் ரொம்ப வருந்துகிறேன்." 286 00:20:10,002 --> 00:20:12,254 உன் மகள் உன்னைப் போலவே எரிச்சலூட்டுபவள் என்றால், 287 00:20:12,963 --> 00:20:15,340 அவள் ஏன் காணாமல் போனாள் என்பதை முழுமையாகப் புரிந்துகொள்கிறேன். 288 00:20:57,382 --> 00:20:59,843 ஒரு ஆயுத வியாபாரியின் அலுவலகம் எப்படி இருக்கும் என்று நான் எதிர்பார்த்தேன் என்று தெரியவில்லை, 289 00:20:59,927 --> 00:21:00,844 ஆனால் இப்படி இல்லை. 290 00:21:00,928 --> 00:21:04,848 ஏனென்றால் இது அவனுடையது இல்லை, இது மணிநேர வாடகைக்கு எடுக்கப்படும் இடம். 291 00:21:05,098 --> 00:21:07,601 பல மாதங்களாக இங்கே யாரும் வராதது போல தெரிகிறது. 292 00:21:16,485 --> 00:21:18,111 நாம் இப்போதே இங்கிருந்து வெளியேற வேண்டும். 293 00:21:18,195 --> 00:21:20,489 - ஏன்? - நாம் வந்தது அவர்களுக்குத் தெரியும். உடனே. 294 00:21:27,913 --> 00:21:31,917 - இங்கேயா? - ஆம், இரண்டாவது மாடி. சீக்கிரம்! 295 00:21:44,304 --> 00:21:45,514 வா. 296 00:21:52,437 --> 00:21:54,439 - லிஃப்டை விடு! - ஆனால் அவர்கள் இங்கே இருக்கிறார்கள்! 297 00:21:54,815 --> 00:21:56,650 அவர்கள் படிக்கட்டில் போகிறார்கள்! அவர்கள் அதோ அங்கே! 298 00:22:10,497 --> 00:22:12,541 நில்லுங்கள்! நில்லுங்கள், வேசிகளா! 299 00:22:14,459 --> 00:22:16,587 வாருங்கள்! 300 00:22:28,390 --> 00:22:29,975 எனக்குப் புரியவில்லை. அவர்கள் யார்? 301 00:22:30,058 --> 00:22:32,102 கிளாஸ்கோவைத் தேடுபவர்கள். 302 00:22:32,186 --> 00:22:33,896 அவர்கள் அலுவலகத்தைக் கண்காணிப்பில் வைத்திருந்தார்கள். 303 00:22:35,189 --> 00:22:37,065 - எனவே இப்போது என்ன செய்வது? - ஒன்றுமில்லை. 304 00:22:38,734 --> 00:22:40,652 ஒன்றுமில்லையா? ஆனால் நமக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. 305 00:22:40,736 --> 00:22:43,280 உனக்கு எந்தப் பதில் கிடைக்கவில்லை? எல்லா பதில்களும் கிடைத்துவிட்டன. 306 00:22:43,363 --> 00:22:45,282 யூரி கிளாஸ்கோவ் ஒரு ஆயுத வியாபாரி. 307 00:22:45,365 --> 00:22:48,118 அவன் வேலை செய்த கொடுங்கோலனிடம் இருந்து திருடிவிட்டு, பெரும் சிக்கலில் மாட்டினான். 308 00:22:48,202 --> 00:22:51,872 உன் மகளும் கிளாஸ்கோவிடம் வேலை செய்து, பெரும் பிரச்சினையில் மாட்டியிருக்கிறாள். முடிந்தது. 309 00:22:51,955 --> 00:22:53,332 அது எப்படி எதற்கும் முடிவாகும்? 310 00:22:53,415 --> 00:22:56,919 பொறுங்கள், எனவே அந்தக் கொடுங்கோலன்தான் காலியைக் கைது செய்ய வைத்ததா? 311 00:22:57,002 --> 00:22:59,087 - அவன்தான் இப்போது அவளை வைத்திருக்கிறானா? - அப்படித்தான் நினைக்கிறேன். 312 00:22:59,171 --> 00:23:03,717 அப்படியென்றால் அந்தக் கொடுங்கோலனைக் கண்டுபிடித்து, காலி அதில் ஈடுபடவில்லை என்று விளக்குவோம், அவள்… 313 00:23:03,800 --> 00:23:06,720 ஓர்னா, தனக்காக விமான நிலையத்தில் 314 00:23:06,803 --> 00:23:08,931 ஆட்களைக் கைது செய்ய வைத்து, 315 00:23:09,014 --> 00:23:11,975 அவர்களை சிறையிலிருந்து காணாமல் போகச் செய்யும் ஒருவனை 316 00:23:12,059 --> 00:23:14,770 உன்னால் தொடர்புகொள்ள முடிந்தாலும், நீ அவனிடம் என்ன சொல்வாய்? 317 00:23:14,853 --> 00:23:17,523 "உன்னிடம் திருடியவனுக்காகத்தான் என் மகள் வேலை செய்தாள்" என்றா? 318 00:23:17,606 --> 00:23:19,191 ஆம் என்று வைத்துக்கொள்வோம். 319 00:23:19,733 --> 00:23:22,152 அப்படியென்றால் யூரி கிளாஸ்கோவைக் கண்டுபிடிப்போம். 320 00:23:22,402 --> 00:23:23,612 அது இப்போது எப்படி உனக்கு உதவும்? 321 00:23:23,695 --> 00:23:26,281 ஏனென்றால் அது அவனுடைய தவறு. எல்லாமே அவன் தவறு. 322 00:23:26,365 --> 00:23:29,952 அவன்தான் திருடினான், அதற்கு காலி ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்? 323 00:23:30,744 --> 00:23:33,956 சரி, நீ அவரைக் கண்டுபிடிக்கிறாய், அவன் குற்ற உணர்ச்சியால் தூங்க முடியாமல் இருக்கிறான், 324 00:23:34,039 --> 00:23:37,209 ஏனென்றால், ஒருவேளை அவன் கேவலமானவனாக இல்லாமல், அவன் ஒரு அற்புதமான நபராக இருக்கிறான். 325 00:23:37,292 --> 00:23:41,046 எனவே அவன் உன்னிடம், "மன்னியுங்கள், நான் உங்கள் மகளை இதில் இழுத்துவிட்டேன், திருமதி. ஓர்னா" என்கிறான். 326 00:23:41,255 --> 00:23:43,882 அப்புறம் என்ன? அது எப்படி நம்மை முன்னோக்கி நகர்த்தும்? 327 00:23:43,966 --> 00:23:47,761 எனக்குத் தெரியாது. நான் வேறு என்ன செய்வது? அவனிடம் என் மகள் இருக்கிறாள். 328 00:23:47,845 --> 00:23:49,596 அவள் நலமாக இருந்தால், அவள் எங்கே இருக்கிறாள் என்று எனக்குத் தெரியாது. 329 00:23:49,680 --> 00:23:51,765 நீங்கள் சொல்லுங்கள், நான் என்ன செய்வது? 330 00:23:51,849 --> 00:23:54,101 முதலில், நாம் இங்கிருந்து வெளியேற வேண்டும். 331 00:23:54,184 --> 00:23:57,813 நாளை நாடு திரும்ப டிக்கெட் புக் செய்கிறேன். 332 00:23:58,021 --> 00:24:00,440 நாம் இதை வேறு கோணத்தில் அணுகுவோம், என்னை மன்னித்துவிடு. 333 00:24:01,692 --> 00:24:03,861 எனக்கு உதவுவதாகச் சொன்னீர்கள். 334 00:24:03,944 --> 00:24:06,029 ஆம், நாம் சந்தித்தபோது நான் உன்னிடம் சொன்னேன், 335 00:24:06,113 --> 00:24:08,866 நான் செய்ய அனுமதிக்கப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன, செய்யக் கூடாதவை இருக்கின்றன. 336 00:24:09,575 --> 00:24:12,661 உள்ளூர் கொடுங்கோலனோடு உலகப் போரைத் தொடங்குவது… 337 00:24:13,620 --> 00:24:15,455 அது பட்ஜெட்டில் இல்லை. 338 00:24:22,754 --> 00:24:24,131 காரை நிறுத்துகிறீர்களா? 339 00:24:28,886 --> 00:24:30,971 தயவுசெய்து காரை நிறுத்துகிறீர்களா? 340 00:24:33,015 --> 00:24:34,808 இதோ, சரி. 341 00:24:35,642 --> 00:24:37,603 அட, ஓர்னா, நீ எங்கே போகிறாய்? 342 00:24:37,895 --> 00:24:39,354 நீ என்ன செய்கிறாய்? 343 00:24:39,438 --> 00:24:42,149 அப்படியானால், நல்லது. உனக்கு வாழ்த்துகள். 344 00:25:06,423 --> 00:25:10,093 மாஸ்கோ ப்ளாட்டன்பௌ கிளப் - இன்றிரவு! 345 00:25:37,871 --> 00:25:38,997 ஹாய். 346 00:25:40,332 --> 00:25:43,460 நான்… நான் உள்ளே போகலாமா… 347 00:25:45,003 --> 00:25:46,380 நன்றி. 348 00:27:35,948 --> 00:27:36,949 ஹேய். 349 00:27:44,540 --> 00:27:45,457 ஹேய். 350 00:27:51,672 --> 00:27:53,173 எனக்கு உங்கள் இசையைப் பிடிக்கும். 351 00:27:57,803 --> 00:28:01,223 நான் ஓர்னா. உங்கள் பெயர் என்ன? 352 00:28:03,600 --> 00:28:04,601 ஏன்? 353 00:28:06,436 --> 00:28:07,896 தெரியவில்லை… எனக்குத் தெரியவில்லை. 354 00:28:09,815 --> 00:28:10,816 அது ரகசியமா? 355 00:28:12,359 --> 00:28:15,404 நான் கிளம்புகிறேன், உன் வேலை முடித்ததும் என்னை அழை. 356 00:28:15,487 --> 00:28:16,321 சரி. 357 00:28:18,615 --> 00:28:21,285 நீங்கள் எங்கள் திரு. சிடுமூஞ்சியை கண்டுபிடித்துவிட்டது போல தெரிகிறது. 358 00:28:21,702 --> 00:28:25,581 இவன் எளிதாக வாயை திறக்க மாட்டான், ஆனால் இவனுக்கு ஒரு பெரிய இதயமும் 359 00:28:25,664 --> 00:28:27,833 ஒரு பெரிய ஆண்குறியும் இருக்கிறது. 360 00:28:27,916 --> 00:28:30,002 எனக்கு ரஷ்ய மொழி புரியாது, வருந்துகிறேன். 361 00:28:30,085 --> 00:28:32,629 இவருக்குப் பெரிய ஆண்குறி இருக்கிறது என்றேன். 362 00:28:35,048 --> 00:28:39,469 நான் இன்னும் இவருடைய பெயர் என்னவென்று தெரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். 363 00:28:39,553 --> 00:28:41,722 பரவாயில்லை. நான் நலம். 364 00:28:42,764 --> 00:28:45,809 ஒருவேளை நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருக்கலாம். ஒரு நொடி இவன் பேச மாட்டான், 365 00:28:45,893 --> 00:28:49,688 அடுத்த நொடி உங்களை மயக்கி இங்கேயே இருந்து இவன் டீஜே செய்வதை கேட்க வைப்பான். 366 00:28:49,771 --> 00:28:52,065 என்ன, ரோமா? 367 00:28:58,238 --> 00:29:01,867 எனவே, நீங்கள் இப்போது இங்கே டீஜே செய்கிறீர்களா, ரோமா? 368 00:29:01,950 --> 00:29:04,119 உங்களுக்குத் தெரியுமா, நான் இஸ்ரேலைச் சேர்ந்தவள். 369 00:29:04,203 --> 00:29:08,957 நான் இவ்வளவு தூரம் வந்தேன், நீங்கள் எனக்குப் பிடித்த பாடலை இசைக்கவில்லை. 370 00:29:11,585 --> 00:29:14,129 அந்தப் பாடலின் பெயர் "யூரி கிளாஸ்கோவ்" என்று நினைக்கிறேன். 371 00:29:15,005 --> 00:29:16,965 - இல்லை, நாங்கள் அந்தப் பாடலை இசைப்பதில்லை. - என்ன? 372 00:29:17,549 --> 00:29:20,552 - இனி அந்தப் பாடலை இசைப்பதில்லை என்றேன். - ஏன்? 373 00:29:23,931 --> 00:29:25,807 நிறைய புதிய பாடல்கள் இருக்கின்றன. 374 00:29:26,934 --> 00:29:28,894 மன்னியுங்கள், நான் போக வேண்டும். 375 00:29:28,977 --> 00:29:31,688 நான் நினைத்தேன்… பொறுங்கள், மன்னியுங்கள்… 376 00:29:31,772 --> 00:29:36,276 நீங்கள்… நிகழ்ச்சியில், 377 00:29:36,360 --> 00:29:38,195 நீங்கள் என்னைப் பார்த்தீர்களா? 378 00:29:39,446 --> 00:29:41,448 இல்லை, அது… 379 00:29:41,532 --> 00:29:45,452 மேடை, எல்லாம், விளக்குகள்… 380 00:29:45,536 --> 00:29:48,330 கண் கூசுகிறது. அதனால் நான் வருந்துகிறேன். 381 00:29:48,413 --> 00:29:50,332 எனவே… அதோடு… பொறுங்கள். 382 00:29:50,415 --> 00:29:51,834 சும்மா… மன்னியுங்கள். 383 00:29:52,876 --> 00:29:56,463 அந்தப் பாடலின் யூரி கிளாஸ்கோவ் யார்? 384 00:29:58,090 --> 00:30:01,385 அது யாருமில்லை. அது வெறும்… 385 00:30:01,468 --> 00:30:04,179 என் சிறுவயதில் இருந்த ஆசிரியர். 386 00:30:06,265 --> 00:30:09,017 வருந்துகிறேன். நான் போக வேண்டும்… சரியா? 387 00:30:35,169 --> 00:30:36,461 உங்கள் பானத்தை மறந்துவிட்டீர்கள். 388 00:30:37,838 --> 00:30:40,340 - பாருங்கள், நீங்கள் என்னைத் தொந்தரவு செய்கிறீர்கள். - உங்கள் பானம் வேண்டாமா? 389 00:30:40,424 --> 00:30:42,843 இல்லை, நான் கவனம் செலுத்த வேண்டும், நீங்கள் என்னைத் தொந்தரவு செய்கிறீர்கள். 390 00:30:42,926 --> 00:30:45,679 - எனவே யூரி கிளாஸ்கோவ் யார் என்று சொல்லுங்கள். - நான் சொன்னேனே, 391 00:30:45,762 --> 00:30:48,724 - அவர் என் பள்ளியின் விளையாட்டு ஆசிரியர். - ஆனால் நீங்கள் பொய் சொல்வது எனக்குத் தெரியும். 392 00:30:48,807 --> 00:30:52,436 எனவே, யூரி கிளாஸ்கோவ் யார் என்று சொல்லுங்கள், நான் உங்களை விட்டுவிடுகிறேன். 393 00:33:07,237 --> 00:33:09,281 மன்னியுங்கள், செல்வி… 394 00:33:17,581 --> 00:33:19,124 இங்கே. 395 00:33:21,460 --> 00:33:22,461 எனவே… 396 00:33:24,296 --> 00:33:27,841 நான் இப்போது போகப் போகிறேன். சரியா? 397 00:33:28,383 --> 00:33:29,468 சரி. 398 00:33:29,968 --> 00:33:30,928 சரி. 399 00:33:31,428 --> 00:33:33,514 எனக்கு உடம்பு சரியில்லை. 400 00:33:42,648 --> 00:33:44,316 என்ன செய்தீர்கள்? ஏதாவது எடுத்துக்கொண்டீர்களா? 401 00:33:51,990 --> 00:33:56,411 ஆனால் உங்களிடம் ஃபோன் இருக்கிறதுதானே? உங்களால் டாக்ஸியை அழைக்க முடியுமா? 402 00:33:57,120 --> 00:33:58,997 - ஆம். - சரி. 403 00:34:06,463 --> 00:34:07,548 எனவே… 404 00:34:09,466 --> 00:34:12,135 எனவே உங்களுக்கு ஒன்றுமாகாதுதானே? 405 00:34:12,803 --> 00:34:14,679 சரியா? நீங்கள் நலமா? 406 00:34:18,058 --> 00:34:20,978 அடடா… இந்தக் கவர்ச்சியானப் பெண்ணைப் பாருங்கள்! 407 00:34:33,739 --> 00:34:35,449 சரி, எனவே… 408 00:34:35,951 --> 00:34:38,536 எங்கே… எங்கே தங்கியிருக்கிறீர்கள்? 409 00:34:40,080 --> 00:34:42,206 முகவரி? முகவரி என்ன? 410 00:34:44,501 --> 00:34:47,129 18 பா'அலேய் ஹா'நிசிம் தெரு. 411 00:36:20,305 --> 00:36:23,684 ஹேய்… எப்படி இருக்கிறாய், நல்ல பையா? 412 00:36:26,603 --> 00:36:27,938 நீங்கள் உட்காரலாம். 413 00:36:29,648 --> 00:36:32,526 வாருங்கள். சோபாவில் உட்காருங்கள். 414 00:36:32,609 --> 00:36:33,610 ஜாகோ. 415 00:36:49,293 --> 00:36:51,879 ஒருவேளை நீங்கள் குடித்த கிளாஸ் ஒன்றில் ஏதாவது இருந்திருக்கலாம். 416 00:37:10,480 --> 00:37:13,358 நீங்கள் வெளிறிப் போய்விட்டீர்கள். தூங்கினால் சரியாகிவிடுவீர்கள் என்று நினைக்கிறேன். 417 00:37:19,990 --> 00:37:21,700 எனவே யூரி கிளாஸ்கோவ் யார்? 418 00:37:24,328 --> 00:37:25,537 நான் சொன்னேனே. 419 00:37:27,122 --> 00:37:28,624 அது உண்மை இல்லை என்று எனக்குத் தெரியும். 420 00:37:43,931 --> 00:37:46,850 இதைப் பார்க்கிறீர்களா? இது நான். 421 00:37:46,934 --> 00:37:52,231 எனக்கு எட்டு வயதாக இருந்தபோது, என் அப்பா என்னை ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் பள்ளிக்கு அனுப்பினார். 422 00:37:52,940 --> 00:37:56,276 இவர் என் விளையாட்டு ஆசிரியர். 423 00:37:56,360 --> 00:37:57,861 அவர் ஒரு கடினமான மனிதர். 424 00:37:58,946 --> 00:38:03,158 என் அப்பாவைப் போல ரொம்ப ஆண்மையுள்ள மனிதர். 425 00:38:03,242 --> 00:38:09,957 புதன்கிழமைகளில் நாங்கள் ஓட்டப் பாதைகளுக்கு அவர் எங்களைக் கூட்டிப் போவது எனக்கு நினைவிருக்கிறது. 426 00:38:10,040 --> 00:38:13,710 இந்த ஆசிரியருடன், எல்லாமே ரொம்ப கொடூரமான போட்டிதான். 427 00:38:14,503 --> 00:38:19,716 கடைசியாக வந்தால், மற்ற எல்லா குழந்தைகளுக்கும் முன்னால் அவமானப்படுத்துவார். 428 00:38:20,467 --> 00:38:22,469 நான் விளையாட்டில் திறமையானவன் இல்லை. 429 00:38:23,262 --> 00:38:28,600 ஆனால் என் வகுப்பில் ஒருவன் இருந்தான், அன்டோன், அவன் இன்னும் மோசமானவன், 430 00:38:28,684 --> 00:38:30,018 அதனால் எனக்கு அதிர்ஷ்டம் அடித்தது. 431 00:38:30,686 --> 00:38:36,149 ஆனால் அந்த நாளில், அன்டோனுக்கு உடல்நிலை சரியில்லை, அதனால் அதிர்ஷ்டம் இல்லை. 432 00:38:37,401 --> 00:38:43,824 நான் ஓடும்போது எப்படி அழ ஆரம்பித்தேன் என்று எனக்கு நினைவிருக்கிறது. 433 00:38:44,366 --> 00:38:48,996 மற்ற எல்லா குழந்தைகளும் ஓட்டப் பாதைகளின் முடிவில் எனக்காகக் காத்திருப்பதைப் பார்க்கிறேன், 434 00:38:50,455 --> 00:38:51,915 இரத்த வெறியோடு, 435 00:38:53,417 --> 00:38:54,793 ஆனால் நான் அங்கே போனதும்… 436 00:38:57,337 --> 00:38:59,256 அவர்கள் என்னைப் பார்க்க கூட இல்லை. 437 00:39:00,757 --> 00:39:02,676 அவர்கள் கண்ணீரைப் பார்க்கவில்லை. 438 00:39:04,761 --> 00:39:06,680 நான் அங்கே இருப்பதை அவர்கள் கவனிக்கவில்லை, 439 00:39:06,763 --> 00:39:10,225 ஏனென்றால் அந்த மனிதர் ஓட்டப் பாதைகளில் 440 00:39:11,268 --> 00:39:13,604 சரிந்து விழுந்து இறந்தார். 441 00:39:17,107 --> 00:39:21,528 மற்ற எல்லா குழந்தைகளுக்கும் முன்னால் 442 00:39:22,070 --> 00:39:23,697 45 வயதில் மாரடைப்பு. 443 00:39:24,823 --> 00:39:27,075 அவர் பெயர் யூரி கிளாஸ்கோவ். 444 00:39:29,578 --> 00:39:31,830 அதைப் பற்றியதுதான் அந்தப் பாடல். 445 00:39:39,379 --> 00:39:40,839 அது ரொம்ப வருத்தமாக இருக்கிறது. 446 00:39:41,798 --> 00:39:44,510 இல்லை, அது வருத்தமாக இல்லை. அவர் ஒரு கொடுமைக்காரர். 447 00:39:45,636 --> 00:39:46,970 அவர் அதற்குத் தகுதியானவர். 448 00:40:02,110 --> 00:40:03,987 நீ ரொம்ப இனிமையான பையன். 449 00:40:09,993 --> 00:40:12,538 உன் அப்பா ஏன் உன்னை அவ்வளவு இளவயதில் அங்கே அனுப்பினார்? 450 00:40:20,838 --> 00:40:23,924 யூரி கிளாஸ்கோவ் 451 00:40:30,764 --> 00:40:33,851 யூரி கிளாஸ்கோவ் 452 00:40:42,568 --> 00:40:44,903 நான் இப்போது கண்களை மூடப் போகிறேன், சரியா? 453 00:41:39,791 --> 00:41:45,130 கூகிள் யூரி கிளாஸ்கோவ் 454 00:41:46,048 --> 00:41:48,217 யூரி கிளாஸ்கோவ் இசை வீடியோ 455 00:42:19,164 --> 00:42:21,792 ஹாய், ரீட்டா பேசுகிறேன். நான்கு முகங்களை அனுப்பியிருக்கிறேன், 456 00:42:21,875 --> 00:42:23,919 அவற்றை கணினி மூலம் தேட முடியுமா? 457 00:42:25,420 --> 00:42:27,172 ஆம், இணைப்பில் இருக்கிறேன். 458 00:42:35,556 --> 00:42:36,431 ஆம். 459 00:42:40,477 --> 00:42:42,771 புரிந்தது. அப்படியென்றால் அந்த அடையாளம் உறுதியானதா? 460 00:42:44,940 --> 00:42:46,316 நன்றி, குட் நைட். 461 00:42:49,278 --> 00:42:50,946 ஓர்னா லெவி 462 00:43:14,261 --> 00:43:17,222 ஓர்னா, எங்கே இருக்கிறாய்? அந்த நிகழ்ச்சியிலிருந்து விலகி இரு. 463 00:43:17,306 --> 00:43:19,850 இதைக் கேட்டவுடன் என்னை அழை. 464 00:43:21,310 --> 00:43:22,477 கோஸ்ட்யா. 465 00:43:51,757 --> 00:43:54,092 ரீட்டா: முடிந்த அளவுக்கு சீக்கிரம் என்னை அழை! 466 00:44:30,212 --> 00:44:33,048 உடி ஷரபானி நாம் இதை அடிக்கடி செய்ய வேண்டும் 467 00:44:33,131 --> 00:44:35,884 காலி, என் அன்பே, இதோ ஒரு சின்ன பரிசு 468 00:44:35,968 --> 00:44:38,554 இனிய பாஸ்ஓவர்! அன்பு, அம்மா 469 00:44:39,221 --> 00:44:41,306 தயவுசெய்து என் பொருட்களைத் தொடாதீர்கள். 470 00:44:42,015 --> 00:44:43,517 அவளுடைய புத்தகம் ஏன் இங்கே இருக்கிறது? 471 00:44:45,644 --> 00:44:48,230 - என்னிடம் இருந்தது எனக்குத் தெரியாது. - இதை ஏன் வைத்திருக்கிறாய்? 472 00:44:51,900 --> 00:44:53,902 உங்களை இங்கே கூட்டி வந்ததே தப்பு என்றேன்… 473 00:44:53,986 --> 00:44:57,030 ஏன் என் மகளின் புத்தகத்தை உன் அபார்ட்மெண்டில் வைத்திருக்கிறாய்? 474 00:44:59,366 --> 00:45:00,617 ஏனென்றால் அவள் அதை இங்கே விட்டுவிட்டுப் போனாள். 475 00:45:06,373 --> 00:45:09,042 காலி… அவள் ஏன் இதோடு இங்கே இருந்தாள்? என்ன? 476 00:45:09,126 --> 00:45:10,878 நீ அவளை ஏதாவது செய்தாயா? 477 00:45:10,961 --> 00:45:13,922 - நான் அவளை எதுவும் செய்யவில்லை. - பிறகு ஏன் பொய் சொன்னாய்? ஏன் இங்கே இருந்தாள்? 478 00:45:14,006 --> 00:45:17,009 நான் அவளை ஒன்றும் செய்யவில்லை, அவள்தான் என்னைப் பயன்படுத்தினாள். 479 00:45:21,430 --> 00:45:22,890 அவள் என் காதலி. 480 00:45:29,730 --> 00:45:34,067 "காதலி" என்றால்? எவ்வளவு காலமாக? 481 00:45:34,151 --> 00:45:37,196 எனக்குத் தெரியவில்லை, இரண்டு வாரங்கள். ஒரு மாதம். 482 00:45:38,822 --> 00:45:39,990 நான்… 483 00:45:40,490 --> 00:45:43,535 அவள் எங்கே என்று எனக்குத் தெரியவில்லை, நான்… ரொம்ப கவலையாக இருக்கிறேன். 484 00:45:43,619 --> 00:45:46,205 அவள் இங்கே மாஸ்கோவில் கொஞ்ச நாட்களை கழித்ததை எனக்குத் தெரியும். 485 00:45:46,788 --> 00:45:50,250 அவளை சிக்கலில் சிக்க வைத்த யூரி கிளாஸ்கோவ் என்றவனுக்காக அவள் வேலை செய்தது 486 00:45:50,334 --> 00:45:53,378 - எனக்குத் தெரியும், நான்… - அவள் யூரி கிளாஸ்கோவிற்கு வேலை செய்யவில்லை. 487 00:45:53,462 --> 00:45:55,464 - இல்லை, அவள் வேலை செய்தது எனக்குத் தெரியும். - இல்லை, அவள் செய்யவில்லை. 488 00:45:55,547 --> 00:45:57,049 ஏன் இவ்வளவு உறுதியாகச் சொல்கிறாய்? 489 00:45:58,175 --> 00:46:00,344 ஏனென்றால் அவள்தான் யூரி கிளாஸ்கோவ். 490 00:46:05,182 --> 00:46:06,892 அவளுடைய நிஜப் பெயரை அவளால் பயன்படுத்த முடியவில்லை, 491 00:46:07,559 --> 00:46:11,396 அதனால் அவள் ஒரு போலி பெயரைத் தேர்ந்தெடுத்தாள். என் பாடலில் இருந்து. 492 00:46:14,316 --> 00:46:16,818 அதைப் பற்றி நான் கேட்டபோது நீ ஏன் என்னிடம் பொய் சொன்னாய்? 493 00:46:16,902 --> 00:46:18,779 ஏனென்றால் உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க முயற்சித்தேன். 494 00:46:18,862 --> 00:46:20,155 எதிலிருந்து பாதுகாப்பாக? 495 00:46:21,198 --> 00:46:22,616 அந்தக் கொடுங்கோலனிடம் இருந்தா? 496 00:46:24,701 --> 00:46:27,454 அவன் யாரென்று உனக்குத் தெரியும். சொல். 497 00:46:29,790 --> 00:46:31,083 சொல். 498 00:46:31,166 --> 00:46:35,295 அவளால் நீங்கள் பிரச்சினையில் சிக்குவதை காலி விரும்ப மாட்டாள். சரியா? 499 00:46:35,379 --> 00:46:37,214 நீங்கள் இஸ்ரேலுக்குத் திரும்ப வேண்டும் என்று நினைக்கிறேன். 500 00:46:37,297 --> 00:46:40,175 நான் என்ன… எனக்கு இப்போது தேவை அந்த மனிதன் யார் என்று தெரிய வேண்டும். 501 00:46:40,259 --> 00:46:42,678 - அந்தக் கொடுங்கோலனின் பெயர் என்ன? - இல்லை, வேண்டாம், நீங்கள் தெரிந்துகொள்ள கூடாது, 502 00:46:42,761 --> 00:46:44,847 ஏனென்றால் இப்படித்தான் மக்கள் கைகளை உடைத்துக்கொள்கிறார்கள். 503 00:46:44,930 --> 00:46:47,140 காலி உன்னைப் பயன்படுத்தியதாகச் சொன்னாய். அவள் எப்படி உன்னைப் பயன்படுத்தினாள்? 504 00:46:47,224 --> 00:46:50,394 காலிக்குத் தேவையான எது உன்னிடம் இருந்தது? 505 00:46:50,477 --> 00:46:51,645 அது என்ன? 506 00:46:52,271 --> 00:46:54,106 - சொல். - ரோமா, கதவைத் திற! 507 00:46:54,189 --> 00:46:58,193 கேள். அந்த ஆள், அவனிடம் காலி இருக்கிறாள். அது உனக்குப் புரிகிறதா? 508 00:46:58,277 --> 00:47:00,153 அமைதியாக இருங்கள். 509 00:47:00,237 --> 00:47:01,488 அவள் அங்கே தனியாக இருக்கிறாள். 510 00:47:02,364 --> 00:47:04,700 நான் அவளுக்கு உதவ விரும்புகிறாள். 511 00:47:04,783 --> 00:47:09,162 எனவே தயவுசெய்து சொல், அவன் யார்? 512 00:47:17,629 --> 00:47:20,591 சீக்கிரம், சீக்கிரம்! அவளை உன்னுடன் கூட்டிப் போ. 513 00:47:20,674 --> 00:47:23,385 உடைகளை அணி. சீக்கிரம். அவளுடைய பொருட்களையும் எடுத்துக்கொள். 514 00:47:23,468 --> 00:47:26,096 - வா. போகலாம், பேசாதே. - இல்லை. பொறுங்கள். ஏன் கூட்டிப்… 515 00:49:18,625 --> 00:49:20,335 அவர்களில் யார் அம்மா? 516 00:49:21,086 --> 00:49:22,462 அவள். 517 00:49:36,226 --> 00:49:37,853 நான் யார் என்று தெரியுமா? 518 00:49:40,480 --> 00:49:44,193 என்னிடம் இருந்துதான் உன் மகள் திருடினாள். 519 00:49:44,818 --> 00:49:46,236 அவருக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 520 00:49:46,320 --> 00:49:47,946 வாயை மூடு. 521 00:49:48,947 --> 00:49:53,076 நீ போதுமான சேதத்தை ஏற்படுத்திவிட்டாய். 522 00:49:53,744 --> 00:49:56,038 "அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை…" 523 00:49:56,538 --> 00:50:01,710 இங்கிருக்கும் இவளுடைய தோழி இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை செய்கிறாள், 524 00:50:02,920 --> 00:50:04,963 அதனால்தான் அவள் இப்போது இங்கே இருக்கிறாள். 525 00:50:06,465 --> 00:50:11,178 கேள்வி என்னவென்றால், இவளுடைய மகள் என்னிடம் திருடியதை அவர்கள் கண்டுபிடித்தார்களா, இல்லையா? 526 00:50:11,261 --> 00:50:12,930 மன்னியுங்கள், தயவுசெய்து. 527 00:50:13,305 --> 00:50:18,310 நான் திருடப்பட்ட பொருளைத் தேடியது உண்மைதான், 528 00:50:18,393 --> 00:50:22,147 ஆனால் அது உங்களுடையது என்று தெரிந்தவுடன் நான் பின்வாங்கிவிட்டேன். 529 00:50:22,231 --> 00:50:23,982 தன் மகளைத் தேடும் 530 00:50:24,066 --> 00:50:28,695 என் தோழியிடமும் அதையே செய்யச் சொன்னேன். அதுதான் நடந்தது. 531 00:50:28,779 --> 00:50:31,990 நாங்கள் நாளை இஸ்ரேலுக்குத் திரும்பப் போகிறோம், 532 00:50:32,074 --> 00:50:35,202 எனவே நீங்கள் எங்களை எங்கள் ஹோட்டலுக்குத் திரும்ப அனுமதித்தால், 533 00:50:35,285 --> 00:50:39,039 நாங்கள் நாளைப் போய்விடுவோம், ஒருபோதும் திரும்பி வர மாட்டோம். 534 00:50:40,165 --> 00:50:41,166 தயவுசெய்து. 535 00:50:42,125 --> 00:50:45,003 அவள் என்ன செய்திருந்தாலும், என்னால் அதைச் சரிசெய்ய முடியும் அல்லது… 536 00:50:45,087 --> 00:50:48,090 தயவுசெய்து… அவள் எங்கே என்று சொல்லுங்கள். 537 00:50:56,139 --> 00:50:58,517 - முழு சோதனை செய்தீர்களா? - ஆம். 538 00:50:59,226 --> 00:51:01,019 அவர்களின் தனிப்பட்ட பொருட்களையும் உடம்பிலும் சோதனை செய்தோம். 539 00:51:01,103 --> 00:51:03,522 - ஹோட்டலில்? - நிச்சயமாக. 540 00:51:04,815 --> 00:51:07,651 நாங்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை, ஆனால்… 541 00:51:09,570 --> 00:51:11,613 அந்த அம்மாவிடம் இது இருந்தது. 542 00:51:24,459 --> 00:51:25,460 வாய்டிக் இக்னாசி 543 00:51:25,544 --> 00:51:26,962 இவனை உனக்குத் தெரியுமா? 544 00:51:29,131 --> 00:51:30,132 எனக்குத் தெரியாது. 545 00:51:35,888 --> 00:51:37,514 அவரை விடுங்கள்! 546 00:51:37,848 --> 00:51:40,142 அவர் எதிலும் ஈடுபடவில்லை! 547 00:51:40,225 --> 00:51:42,728 காலி மாஸ்கோவில் இருந்தது கூட அவருக்குத் தெரியாது! 548 00:51:42,811 --> 00:51:46,523 நீ என்னிடம் பொய் சொல்கிறாய். இவனுடைய பாஸ்போர்ட்டை எதற்காக வைத்திருக்கிறாய்? 549 00:51:46,607 --> 00:51:48,400 நான் அவனைச் சந்தித்ததில்லை. ஒருபோதும் இல்லை. 550 00:51:48,483 --> 00:51:51,987 நான்… என் மகளின் பொருட்களில் அதைக் கண்டுபிடித்தேன். 551 00:51:52,070 --> 00:51:54,990 அவன் இறந்துவிட்டான் என்று நினைக்கிறேன். நான் உங்களுக்கு என்ன வேண்டுமென்றாலும் செய்வேன். 552 00:51:55,073 --> 00:51:57,201 எனக்கு என் மகள் திரும்ப வேண்டும். 553 00:51:59,328 --> 00:52:00,662 உன் மகள் இறந்துவிட்டாள். 554 00:52:03,832 --> 00:52:05,167 இஸ்ரேலுக்குத் திரும்பிப் போ. 555 00:52:15,177 --> 00:52:16,595 ஓர்னா, அவள் சாகவில்லை. 556 00:52:19,681 --> 00:52:20,807 அவர் பொய் சொல்கிறார். 557 00:52:34,363 --> 00:52:38,200 வாயை மூடுகிறாயா? உன்னுடைய இன்னொரு கையையும் உடைப்பேன். 558 00:52:42,871 --> 00:52:45,832 அவர்களை விமான நிலையத்திற்குக் கூட்டிப் போங்கள். அவன் என்ன செய்வது என்று யோசிக்கட்டும். 559 00:52:45,916 --> 00:52:49,002 அவள் சாகவில்லை. அவர் பொய் சொல்கிறார். 560 00:52:56,802 --> 00:52:58,136 உன் மகள் இறந்துவிட்டாள். 561 00:52:58,804 --> 00:53:01,139 நாங்கள் அவளை சிறையில் இருந்து விடுவித்தோம். 562 00:53:01,932 --> 00:53:04,393 நான் அவளைக் காட்டில் சுட்டேன். ம்? 563 00:53:05,143 --> 00:53:06,520 அவள் துடிதுடித்து சாகவில்லை. 564 00:53:06,603 --> 00:53:08,063 ஓர்னா, இல்லை. 565 00:53:08,146 --> 00:53:11,275 போதும், ரோமன்! தயவுசெய்து, முட்டாள்தனமாக பேசாதே! 566 00:53:15,487 --> 00:53:16,572 இன்னும்… 567 00:53:17,739 --> 00:53:19,324 ஒரு வார்த்தை சொல். 568 00:53:19,408 --> 00:53:20,450 அவள் சாகவில்லை. 569 00:53:22,578 --> 00:53:25,998 அவள் சாகவில்லை. இவர் அவளை தன் வீட்டில் வைத்திருக்கிறார். 570 00:53:26,790 --> 00:53:29,418 அவளை யாரும் பார்க்க விட மாட்டார். 571 00:53:31,003 --> 00:53:32,629 சரிதானே, அப்பா? 572 00:54:58,966 --> 00:55:00,968 வசனத் தமிழாக்கம் அருண்குமார்