1 00:00:12,888 --> 00:00:15,224 வுட்க்ளென் அபார்ட்மெண்ட்கள் 2 00:00:39,206 --> 00:00:40,874 என்ன விஷயம், ப்ரை-டாக்? 3 00:00:40,958 --> 00:00:44,711 யோ, டென்-மேன். சிசிலியாவுக்கு அவசரமாக ஒரு உதவி தேவைப்படுகிறது. 4 00:00:44,795 --> 00:00:46,713 சரி, நான் உதவ விரும்புகிறேன், நண்பா, 5 00:00:46,797 --> 00:00:48,924 ஆனால் இப்போது ஒரு முக்கியமான வேலையில் இருக்கிறேன். 6 00:00:49,007 --> 00:00:51,343 ச்சே. உதவி என்றா சொன்னேன்? 7 00:00:51,426 --> 00:00:52,553 தவறாக சொல்லிவிட்டேன். 8 00:00:52,636 --> 00:00:54,263 இப்போதே நீ அதைச் செய்தாக வேண்டும். 9 00:00:54,346 --> 00:00:56,890 கோரிக்கையை நிராகரிக்கும் நிலையில் நீ இல்லை. 10 00:00:56,974 --> 00:00:58,642 இப்போதுதான் தொழில்நுட்ப உதவியிடம் பேசினேன். 11 00:00:59,226 --> 00:01:01,937 சகோ, அது சின்ன பிரச்சினைதான். 12 00:01:02,020 --> 00:01:04,397 ஆம், அது சின்ன பிரச்சினையாகத் தெரியவில்லை, நண்பா. 13 00:01:04,897 --> 00:01:09,570 உன் ஆட்களில் ஒருவனான ட்ரெவர், உனக்குத் தெரியாமல் ஏதோ வேலை செய்திருக்கிறான். 14 00:01:09,653 --> 00:01:13,615 - ப்ரை, கேள்… - நீங்கள் நெருக்கமானவர்கள் என்று கேள்விப்பட்டேன். 15 00:01:13,699 --> 00:01:15,909 ஒருவேளை அதனால்தான் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாயா? 16 00:01:16,493 --> 00:01:17,911 ஒருவேளை நீ தவறு செய்திருக்கலாம். 17 00:01:18,620 --> 00:01:19,788 நாம் அம்பலப்பட்டுவிட்டோமா? 18 00:01:21,373 --> 00:01:22,457 குறைந்தபட்ச அளவில். 19 00:01:24,418 --> 00:01:25,836 நான் ஜெனிஃபரை இதில் ஈடுபடுத்த வேண்டுமா? 20 00:01:26,336 --> 00:01:28,964 வேண்டாம். எல்லாம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படுகிறது, நண்பா. 21 00:01:29,047 --> 00:01:30,591 இப்போதே எல்லாவற்றையும் சரி செய்கிறேன். 22 00:01:30,674 --> 00:01:32,551 இதையெல்லாம் தெரிந்துகொள்வதில் எனக்கு விருப்பமில்லை. 23 00:01:32,634 --> 00:01:34,928 உன்னுடைய வேலையே, இதிலிருந்து நம்மை முற்றிலும் இரகசியமாக வைத்திருப்பதுதான். 24 00:01:35,012 --> 00:01:37,973 - எப்போதும் பாதுகாப்பான சூழலில்தான் செயல்படுவோம். - புரிந்தது. 25 00:01:38,056 --> 00:01:39,766 இனி எல்லாம் நல்லபடியாக நடக்கும், ப்ரை. 26 00:01:39,850 --> 00:01:42,227 அது அப்படியே நடக்கும் என்று உன் நலன் கருதி நம்புவோம். 27 00:01:43,270 --> 00:01:46,273 சிசிலியாவுக்கு வேண்டிய உதவியை உடனே செய். உன் பர்னர் ஃபோனுக்கு தகவல் அனுப்பியிருக்கிறேன். 28 00:01:46,356 --> 00:01:48,483 அவளுடைய பெயர் ஜாய்ஸ் டெர்செக். 29 00:01:48,984 --> 00:01:50,068 உடனே அவளைக் கண்டுபிடி. 30 00:01:50,736 --> 00:01:52,279 உடனே, டென்னிஸ். 31 00:01:52,362 --> 00:01:53,614 செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக நினைத்துக்கொள். 32 00:02:06,126 --> 00:02:07,127 ச்சே! 33 00:02:25,229 --> 00:02:27,064 சன்னிசைடு காவல் நிலையம் 34 00:02:30,984 --> 00:02:32,277 நல்ல தண்ணீர். 35 00:02:32,986 --> 00:02:35,030 என் மனைவி, இப்போதைய மனைவி தாக்கப்பட்டதால் அது பற்றி ஏதாவது 36 00:02:35,113 --> 00:02:37,533 துப்பு கிடைத்திருக்கும் என்றுதான் என்னை இங்கே வரச் சொன்னதாக நினைத்தேன். 37 00:02:37,616 --> 00:02:40,619 எனவே அவர்கள் சொல்வது போல இது கொஞ்சம் எதிர்பாராத ஒன்றாக இருக்கிறது. 38 00:02:40,702 --> 00:02:44,581 பௌலாவிற்கு இதில் சம்பந்தமிருக்கிறது என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. 39 00:02:44,665 --> 00:02:46,750 கடவுள் மீது சத்தியமாக அவளுக்கு இதில் சம்பந்தமில்லை. 40 00:02:46,834 --> 00:02:49,253 அவள் திமிரானவள்தான், ஆனால் பௌலா கொஞ்சம் திமிரானவள். 41 00:02:49,336 --> 00:02:50,963 அவளுடைய கைகள் ரொம்ப சின்னது. 42 00:02:51,046 --> 00:02:53,924 அதை ஏன் சொன்னேன் என்று தெரியவில்லை. கொஞ்சம் பதட்டமாக இருக்கிறேன் என்று நினைக்கிறேன். 43 00:02:54,007 --> 00:02:56,218 போர்ட்லேண்டில் நடந்தது ஒரு துயர சம்பவம், ஒரு விபத்து, 44 00:02:56,301 --> 00:02:57,594 ஆனால் எந்த வழக்கும் பதிவாகவில்லை. 45 00:02:57,678 --> 00:02:59,263 ஒருவர் இறந்திருக்கிறார். 46 00:02:59,972 --> 00:03:01,265 அது ஒரு துயர சம்பவம். 47 00:03:01,765 --> 00:03:02,975 ஆனால் இது? 48 00:03:03,976 --> 00:03:07,521 இது ஒரு கொலை. இதுவும் ஒரு கொலைதான். 49 00:03:07,604 --> 00:03:08,981 இது அதே கொலைதான். 50 00:03:09,690 --> 00:03:12,276 ஆனால் இது ஒரு கொலை, இன்று நாம் அதைப் பற்றித்தான் பேசுகிறோம், 51 00:03:12,359 --> 00:03:15,404 மன்னித்துவிடுங்கள், நான் பீதியாகிவிட்டது போல தோன்றுகிறது. 52 00:03:15,487 --> 00:03:17,573 அதோடு நான் அதைச் சொல்வது முக்கியம் என்று நினைக்கிறேன்… 53 00:03:18,365 --> 00:03:19,366 அது… 54 00:03:20,075 --> 00:03:23,495 இது… இந்த ஆள் எனக்கு ஃபேஸ்டைம் செய்தான். 55 00:03:23,579 --> 00:03:26,623 என் ஃபோன் எண் எப்படி அவனுக்குக் கிடைத்தது என்று தெரியவில்லை, ஆனால் என்னை அழைத்தான். 56 00:03:27,291 --> 00:03:28,542 அவன் நல்ல நிலையில் இல்லை. 57 00:03:29,209 --> 00:03:31,670 என் யூகத்தின்படி, உங்கள் வேலையை எப்படி செய்வது என்று நான் சொல்லவில்லை, 58 00:03:31,753 --> 00:03:34,506 அதை ஃபெண்டனில் அல்லது மெத் போதையில் செய்திருக்கலாம். 59 00:03:34,590 --> 00:03:36,717 எனக்குத் தெரியவில்லை. எனக்கு போதைப் பழக்கம் கிடையாது. 60 00:03:36,800 --> 00:03:40,220 நான் கஞ்சா புகைத்திருக்கிறேன், கோகைன் பயன்படுத்தியிருக்கிறேன், சரி. 61 00:03:40,304 --> 00:03:42,973 சமீபத்தில் இல்லை, ஆனால் இளைஞனாக இருந்தபோது செய்திருக்கிறேன். 62 00:03:43,056 --> 00:03:44,349 ஆனால் இந்த மெத் அல்லது ஃபெண்டனில் இவற்றில் ஒன்று, 63 00:03:44,433 --> 00:03:46,226 பற்களுக்கு ரொம்ப கேடு என்று எனக்குத் தெரியும். 64 00:03:46,310 --> 00:03:49,980 அது பற்களை கெட்டுப்போக செய்துவிடும், ஆனால் அவனுடைய பற்கள் நன்றாகத்தான் இருந்தன. 65 00:03:52,566 --> 00:03:54,985 நாம் மேற்கொண்டு தொடர்கிறோம் என்றால், எனக்கு இன்னும் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா? 66 00:03:55,068 --> 00:03:58,113 நான் பேசுகிறேன், ஆனால் சத்தம் வரவில்லை என்று தோன்றுகிறது. 67 00:04:01,950 --> 00:04:04,161 கேம்பாப் 68 00:04:08,415 --> 00:04:11,543 சரி, நன்றி. நன்றி, உங்கள் அன்புக்கு நன்றி. 69 00:04:11,627 --> 00:04:12,920 ஸ்கையும் உங்களை நேசிக்கிறான். 70 00:04:13,921 --> 00:04:16,673 ஆனால் அன்பை வைத்து உணவுக்குப் பணம் செலுத்த முடியாது. 71 00:04:17,257 --> 00:04:19,885 மக்களே, அன்பு மட்டும் போதாது, இல்லை. 72 00:04:19,968 --> 00:04:23,222 எனவே, தரமான ஒன்றைப் பார்க்க வேண்டுமென்றால், கிரெடிட் கார்டைப் பயன்படுத்துங்கள். 73 00:04:23,805 --> 00:04:25,933 முனையை மட்டும் பார்க்க வேண்டுமென்றால், கிரிப்டோ பயன்படுத்துங்கள்… 74 00:04:28,060 --> 00:04:29,937 என்னை முழு நிர்வாணமாகப் பார்க்க வேண்டுமா? 75 00:04:30,020 --> 00:04:32,356 கடவுளே, எனக்குப் பணம் கொடுங்கள், நீங்கள் விரும்புவதையெல்லாம் செய்கிறேன். 76 00:04:32,439 --> 00:04:34,983 இது ஒன்றும் ராக்கெட் அறிவியல் கிடையாது. என்னிடம் காசு இல்லை மக்களே. ஆரம்பிக்கலாம். 77 00:04:35,859 --> 00:04:37,444 வெட்கப்படாதீர்கள், வாருங்கள். 78 00:04:37,528 --> 00:04:39,321 முன்பதிவை செய்யுங்கள் ஸ்கைலருடன் உங்கள் டேட்டிங்கை அனுபவியுங்கள் 79 00:04:40,072 --> 00:04:42,533 அம்மா, எனக்கு சில உறைந்த வாஃபிள்கள் கிடைக்குமா? 80 00:04:42,616 --> 00:04:45,118 ஃபிரெஞ்சு டோஸ்ட் எப்படி? 81 00:04:45,202 --> 00:04:46,203 வாஃபிள்கள்! 82 00:04:46,286 --> 00:04:47,579 சரி. 83 00:04:48,747 --> 00:04:50,457 ச்சே. சரி. 84 00:04:50,541 --> 00:04:51,959 பார்க்கலாம். 85 00:04:55,712 --> 00:04:59,466 - ஹாய். - தயாராக இரு. எல்லாம் மிக வேகமாக நடக்கிறது. 86 00:05:00,300 --> 00:05:01,343 ஆஹா. எவ்வளவு வேகமாக? 87 00:05:01,426 --> 00:05:03,720 அடுத்த இரண்டு வாரங்களில் நடக்கலாம், அவ்வளவு வேகமாக. 88 00:05:03,804 --> 00:05:05,848 கடவுளே. ஆம், அது ரொம்ப வேகம்தான். 89 00:05:05,931 --> 00:05:07,432 ஆம், நிறைய வேலை இருக்கிறது. 90 00:05:07,516 --> 00:05:08,684 பார், நீ வெற்றி பெற வேண்டும். 91 00:05:08,767 --> 00:05:11,311 அதாவது, கார்லும் மேலொரியும் எல்லோரையும் ஐடஹோவிற்கு மாற்ற பார்க்கிறார்கள். 92 00:05:11,395 --> 00:05:14,731 - நீ எல்லாம் பழையபடி இருக்க முயற்சிக்கிறாய். - ஹேஸல்! பூட்ஸ், ஷூ போடு. 93 00:05:14,815 --> 00:05:16,775 நமக்குச் சிறந்த பரிந்துரைக் கடிதங்கள் தேவைப்படும். 94 00:05:16,859 --> 00:05:18,610 தனிப்பட்ட முறையில், வேலையிலிருந்து, மற்ற அம்மாக்களிடமிருந்து. 95 00:05:18,694 --> 00:05:21,613 - உனக்குத் தெரிந்த பாதிரியார் இருக்கிறாரா? - எனக்கா? பாதிரியாரா? 96 00:05:21,697 --> 00:05:23,365 இல்லை டக், எனக்கு எந்த பாதிரியாரையும் தெரியாது. 97 00:05:23,448 --> 00:05:25,492 ரொம்ப மோசம். நீதிமன்றங்களுக்குப் பாதிரியார்களைப் பிடிக்கும். 98 00:05:25,576 --> 00:05:27,995 கடிதங்களை வாங்க நான் வேறு வழிகளைப் பார்க்கிறேன். 99 00:05:28,078 --> 00:05:31,164 அருமை, எங்கள் தரப்பிலிருந்து நாங்களும் விஷயங்களைத் தோண்ட ஆரம்பிக்கிறோம். 100 00:05:31,248 --> 00:05:34,251 என் அலுவலகத்திலிருந்து முன்பணமாக 10,000 டாலர்கள் செலுத்தச் சொல்லி அழைப்பார்கள். 101 00:05:34,334 --> 00:05:37,337 - என்ன? எவ்வளவு? - பத்தாயிரம் டாலர்கள். 102 00:05:38,672 --> 00:05:39,673 சரி, நாம் ஜெயிக்க வேண்டும். 103 00:05:40,465 --> 00:05:42,467 - சரி, நான் போக வேண்டும். பை. - பிறகு பேசலாம். 104 00:05:46,638 --> 00:05:48,682 சரி, நாம் போகும் வழியில் அதைச் சாப்பிடு, 105 00:05:48,765 --> 00:05:51,435 ஏனென்றால் பள்ளிக்கு ரொம்ப தாமதமாகிவிட்டது. 106 00:05:51,518 --> 00:05:53,770 நீ எனக்கு ஒரு வாய் கொடுத்தால், உன்னை வண்டி ஓட்ட விடுவேன். 107 00:05:53,854 --> 00:05:54,897 சரி. 108 00:05:55,647 --> 00:05:56,648 பொறுங்கள், என்ன? 109 00:05:57,482 --> 00:05:58,984 அது என் வாஃபிளில் பாதி. 110 00:05:59,067 --> 00:06:01,403 சரி. இடது பக்கம் ஆக்சிலரேட்டர், வலது பக்கம் பிரேக். 111 00:06:16,210 --> 00:06:18,837 ஹேய். என்ன விஷயம்? எல்லாம் எப்படிப் போகிறது? 112 00:06:18,921 --> 00:06:20,297 - ஹாய். - ஹேய். 113 00:06:20,380 --> 00:06:21,757 ஹாய். 114 00:06:21,840 --> 00:06:24,593 - கடவுளே. அந்த உடை ரொம்ப அழகாக இருக்கிறது. - அப்படியா? 115 00:06:24,676 --> 00:06:28,263 இதுவா? கடவுளே, நாற்றம் வரவில்லை என்பதால்தான் இதைத் தேர்ந்தெடுத்தேன். 116 00:06:29,890 --> 00:06:32,392 என் மகள் என் துணிகளைப் போர்வையாகப் பயன்படுத்துகிறாள். 117 00:06:33,101 --> 00:06:34,102 எனவே… 118 00:06:35,062 --> 00:06:38,774 பௌலா, இந்த வருடம் கால்பந்து சந்திப்பு எதாவது நடத்தப் போகிறீர்களா? 119 00:06:39,816 --> 00:06:41,902 வழக்கமாக ஒன்று நடக்கும். எங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை நீங்கள்… 120 00:06:41,985 --> 00:06:43,779 ஆம். இல்லை, கண்டிப்பாக இருக்கிறது. 121 00:06:43,862 --> 00:06:45,197 ஆம், இல்லை, நான்… 122 00:06:45,280 --> 00:06:48,825 உங்கள் எல்லோரையும் அழைத்து, நீங்களே பீட்சா தயாரிக்கும் விருந்து 123 00:06:48,909 --> 00:06:50,702 ஒன்று வைக்கலாம் என்று திட்டமிட்டிருந்தேன். 124 00:06:50,786 --> 00:06:52,621 - என்ன… - எவ்வளவு பெரிய திட்டம். 125 00:06:52,704 --> 00:06:55,999 ஆம். ஆம், கண்டிப்பாக. 126 00:06:56,083 --> 00:06:57,543 நானே சமைப்பேன். 127 00:06:58,335 --> 00:07:00,796 அது ரொம்ப ஜாலியாக இருக்கும், ஆம். 128 00:07:02,005 --> 00:07:04,466 இது பேச்சை மாற்றுவது போல இருக்கலாம், ஆனால்… 129 00:07:04,967 --> 00:07:07,553 நான் இப்போது உங்களிடம் நேர்மையாக ஒன்று சொல்லட்டுமா? 130 00:07:07,636 --> 00:07:09,012 - நிச்சயமாக. ஆம். - ஆம். 131 00:07:09,596 --> 00:07:15,018 எனவே என் முன்னாள் கணவர் கார்லும், அவர் புது மனைவி மேலொரியும், நான் நினைக்கிறேன்… 132 00:07:15,102 --> 00:07:16,687 - மேலொரியை பிடிக்கும். - அவர்கள் அருமையானவர்கள். 133 00:07:16,770 --> 00:07:18,981 ஆம், கண்டிப்பாக. ஆம், அவர்கள் அருமையானவர்கள்தான். 134 00:07:19,648 --> 00:07:20,899 இந்தக் கதையில் அப்படி இல்லாமல் இருக்கலாம். 135 00:07:21,859 --> 00:07:24,736 நாங்கள் எங்கள் மகளின் கஸ்டடிக்காக போராடிக்கொண்டிருக்கிறோம்… 136 00:07:24,820 --> 00:07:27,239 - என் வழக்கறிஞர்… - அவருக்குக் கடிதங்கள் தேவை, சரியா? 137 00:07:27,322 --> 00:07:30,367 ஆம். ஆம். உங்களுக்கு எப்படித் தெரியும்? 138 00:07:30,450 --> 00:07:31,743 நான் விவாகரத்து ஆனவள். 139 00:07:31,827 --> 00:07:33,287 அவளுக்காக அருமையான கடிதம் ஒன்றை எழுதினேன். 140 00:07:33,370 --> 00:07:35,789 அது இந்த AI வருவதற்கு முன்பாக, எனவே… எல்லா வார்த்தைகளையும் நானே தேடி எழுதினேன். 141 00:07:35,873 --> 00:07:37,082 ஓ, ஆஹா. சரி. 142 00:07:37,165 --> 00:07:39,877 கடிதங்களைவிட உதவியாக இருப்பது எது தெரியுமா, பணம்தான். 143 00:07:39,960 --> 00:07:42,129 - ஆம். ஹீதரும் நானும் பிரிந்தபோது… - ஆம். 144 00:07:42,212 --> 00:07:44,965 …என் வழக்கறிஞருக்குப் பணத்தை வாரி இறைத்தேன், அவர் தன் வித்தையைக் காட்டினார். 145 00:07:45,591 --> 00:07:48,135 என்னிடம் வித்தையைக் காட்ட வைக்கும் பணம் இல்லை. 146 00:07:49,052 --> 00:07:51,138 - சரி. - சரி… 147 00:07:51,221 --> 00:07:54,933 எங்களால்… நாங்கள்… நாங்கள் சிறந்த கடிதங்களை எழுதுவோம். 148 00:07:55,017 --> 00:07:57,186 - ஆம். - அருமை. சரி. 149 00:07:57,269 --> 00:07:58,729 என்னால் அதை திரும்ப செய்ய முடியும். 150 00:07:58,812 --> 00:07:59,813 - எங்காளால் அதைச் செய்ய முடியும். - கண்டிப்பாக. 151 00:07:59,897 --> 00:08:01,648 - உங்களுக்காக. - அற்புதம். 152 00:08:01,732 --> 00:08:02,733 நான் பௌலா. 153 00:08:03,233 --> 00:08:05,527 - சரி. சரி. பௌலா… - சரி. சாண்டர்ஸ். சரி. 154 00:08:22,753 --> 00:08:24,379 - ஹாய். - என்னை பயமுறுத்திவிட்டீர்கள். 155 00:08:24,463 --> 00:08:27,382 - மன்னித்துவிடுங்கள். - உங்கள்… முகத்தைப் பார்த்து பயப்படவில்லை. 156 00:08:28,550 --> 00:08:33,554 சரி. நான் அரிதான மேஜிக் தி கேதரிங் கார்டுகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன். 157 00:08:33,639 --> 00:08:35,474 உங்களிடம் இருக்கும் ரொம்ப விலையுயர்ந்த கார்டு எது? 158 00:08:35,557 --> 00:08:37,851 டைம்ட்விஸ்டர், ஆல்பா எடிஷன். 159 00:08:37,934 --> 00:08:41,063 புதிதாக தயாரித்து, பேக் செய்யப்பட்டது, 10,000 டாலர்கள்தான். 160 00:08:42,731 --> 00:08:44,691 மூன்றாவது ரொம்ப விலையுயர்ந்த கார்டு எது? 161 00:08:45,359 --> 00:08:47,402 நியூயார்க் குடும்ப நீதிமன்றம் வாசிப்பு அறை 162 00:08:47,486 --> 00:08:49,488 செல்வி. லேம்பெர்ட் என்ன நடந்தது? 163 00:08:49,571 --> 00:08:50,948 நீங்கள் இன்னொருவனைப் பார்த்திருக்க வேண்டும். 164 00:08:52,407 --> 00:08:55,369 ஹேய், நான் சில பெட்டிகளைச் சுத்தம் செய்துகொண்டிருந்தேன். 165 00:08:55,452 --> 00:08:56,954 உங்களுக்கு இதில் ஆர்வம் உண்டுதானே? 166 00:08:57,037 --> 00:08:58,205 அதிர்ஷ்டச் சக்கரம் எல்லா வீரர்களும் தங்கள் கையில் இருக்கும் 167 00:08:58,288 --> 00:08:59,289 சீட்டுகளைக் கைவிட்டு, ஏழு புதிய சீட்டுகளை எடுக்க வேண்டும் 168 00:09:02,000 --> 00:09:03,919 இது நல்லதா? கெட்டதா? மோசமானதா? 169 00:09:04,002 --> 00:09:05,379 அற்புதமானது. 170 00:09:06,463 --> 00:09:08,924 நீங்கள்… ஹேய், நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். 171 00:09:09,007 --> 00:09:11,718 உங்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகட்டும் அல்லது என்னவோ. 172 00:09:12,344 --> 00:09:13,345 நன்றி. 173 00:09:13,428 --> 00:09:16,682 இல்லை, நீங்கள் செய்யும் எல்லா உதவிகளுக்கும் நன்றி. நிஜமாகத்தான். 174 00:09:17,558 --> 00:09:18,809 அதைப் பற்றி பேசும்போது, 175 00:09:19,351 --> 00:09:23,146 நான் வேகமாக அந்த ஒதுக்கீடு அறைக்குள் சென்றுவிட்டு வர எதாவது வாய்ப்பு இருக்கிறதா? 176 00:09:24,064 --> 00:09:26,525 - அதற்கு அனுமதியில்லை என்று உங்களுக்கே தெரியும். - தெரியும், நான் வெறும், என்… 177 00:09:26,608 --> 00:09:28,694 என் கால் வலி என்னை ரொம்பத் தாமதப்படுத்துகிறது. 178 00:09:28,777 --> 00:09:30,696 வரப்போகும் வழக்குகளைப் பற்றிச் சும்மா பார்த்துக்கொள்கிறேன். 179 00:09:30,779 --> 00:09:31,864 மன்னித்துவிடுங்கள், செல்வி. லேம்பெர்ட். 180 00:09:33,115 --> 00:09:36,326 இப்போது, நீங்கள் அனுமதித்தால், நான் இடைவேளை அறைக்கு போய் 181 00:09:36,410 --> 00:09:39,538 ஒரு 5 நிமிடங்கள் எனக்காக காபி போடப் போகிறேன். 182 00:09:55,387 --> 00:09:56,597 நீதிபதி நார்லெஸ்கி 183 00:09:57,514 --> 00:09:59,141 நீதிபதி ஹெர்னாண்டஸ் 184 00:10:04,479 --> 00:10:06,106 ஹென்ட்ரிக்ஸ் V. சாண்டர்ஸ் வழக்கு எண் 38501/1581 185 00:10:15,032 --> 00:10:16,700 அது ட்ரெவரின் நண்பன். 186 00:10:16,783 --> 00:10:17,951 அது ஸ்கை. 187 00:10:18,035 --> 00:10:20,370 விரைவான சிந்தனை. நாம் இதை பிறகு செய்யலாம். 188 00:10:20,454 --> 00:10:22,623 - இங்கே வேண்டாம். - இல்லை, இப்போதே செய்யலாம். 189 00:10:22,706 --> 00:10:26,043 முன்கூட்டியே பதிவு செய்து, அவனுக்குப் பணம் செலுத்த வேண்டும். 190 00:10:26,126 --> 00:10:29,755 மன்னித்துவிடுங்கள், பிரவுன் பல்கலைக்கழகத்தில் கேமிங் பற்றி சொல்லித்தரவில்லை. 191 00:10:29,838 --> 00:10:31,840 பிரவுனிலா? ஒருவேளை சொல்லித்தந்திருக்கலாம். 192 00:10:31,924 --> 00:10:32,966 சரி. 193 00:10:33,050 --> 00:10:35,886 ஒருவேளை இவன்தான் அந்த மோதிரம் அணிந்தவனாக இருந்தால்? 194 00:10:35,969 --> 00:10:37,346 இவனும் அந்த மோசடிக்காரர்களில் ஒருவனாக இருந்தால்? 195 00:10:37,846 --> 00:10:40,015 அப்படியென்றால் அவனுக்கு, கண்டிப்பாக ஏதோ தெரிந்திருக்கும். 196 00:10:40,098 --> 00:10:41,391 - சரி. - சரி. 197 00:10:41,475 --> 00:10:43,560 - ச்சே. - ஜாக்கிரதையாக இருங்கள். 198 00:10:43,644 --> 00:10:45,270 ஹேய். 199 00:10:46,855 --> 00:10:48,482 ஹாய், கவர்ச்சியானவளே. 200 00:10:48,565 --> 00:10:50,776 நாம் அலுவலகத்தில் இருப்பது போல தெரிகிறது, ம்? 201 00:10:50,859 --> 00:10:54,112 நாம் என் பர்ஃபார்மன்ஸ் மதிப்பாய்வைத் தொடங்கலாமா? 202 00:10:54,196 --> 00:10:56,281 ஓ, இல்லை. இல்லை. இல்லை. இல்லை. 203 00:10:56,365 --> 00:10:57,574 நான் சும்மா பேச விரும்புகிறேன். 204 00:10:57,658 --> 00:10:59,451 நான் பௌலா. 205 00:11:00,661 --> 00:11:02,663 நான் ட்ரெவரின் நண்பர்களில் ஒருத்தி. 206 00:11:04,706 --> 00:11:08,502 சரி. நீங்கள் இருவரும் சேர்ந்து வேலை செய்தது தெரியும். உன்னை இதற்கு முன்பே பார்த்திருக்கிறேன். 207 00:11:09,670 --> 00:11:11,088 எனவே நீங்கள் கேள்விப்பட்டீர்களா? 208 00:11:11,964 --> 00:11:13,131 ஆம், அது ரொம்பக் கொடுமை. 209 00:11:13,215 --> 00:11:15,968 இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. இப்போதுதான் அவனைப் பார்த்தது போல இருக்கிறது. 210 00:11:16,635 --> 00:11:17,636 ஆம்… 211 00:11:18,679 --> 00:11:20,973 என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். 212 00:11:21,056 --> 00:11:24,393 தெரியுமா, அவனுடைய மரணம் பற்றிய சில தகவல்கள் என்னிடம் இருக்கின்றன, 213 00:11:24,476 --> 00:11:28,105 ஆனால் ஒருவேளை உன்னிடமும் இருக்கலாம் என்று நினைத்தேன், நாம் அதை ஒப்பிட்டுப் பார்க்கலாமா? 214 00:11:28,856 --> 00:11:31,567 - என்னிடம் எதுவும் இல்லை. - சரி, நாம்… 215 00:11:31,650 --> 00:11:34,611 அதாவது, போலீஸுக்கு இதில் அக்கறை இருப்பது போல தோன்றவில்லை. 216 00:11:34,695 --> 00:11:39,116 எனவே, நாம் உண்மைகளை ஒன்றிணைத்தால், அவர்களின்… கவனத்தைப் பெற முடியும். 217 00:11:41,535 --> 00:11:43,203 உன் நேரத்திற்காக நான் பணம் தருகிறேன். 218 00:11:45,706 --> 00:11:46,874 சரி. 219 00:11:49,877 --> 00:11:52,004 நான் நேரில் சொல்கிறேன். இது நான் வேலை செய்யும் இடம். 220 00:11:52,087 --> 00:11:53,672 நீ நகரத்துக்குப் பக்கத்தில் வசிக்கிறாயா? 221 00:11:54,173 --> 00:11:56,758 சொல்லுங்கள்… "நான் நகரத்தில் வசிக்கவில்லை" என்று சொல்லுங்கள். 222 00:11:56,842 --> 00:11:58,218 ஆம். 223 00:11:58,302 --> 00:12:00,846 அருமை, உன் அக்கவுண்ட்டுக்கு முகவரியை அனுப்புகிறேன். 224 00:12:00,929 --> 00:12:02,723 - சரி. - சரி. 225 00:12:04,558 --> 00:12:06,101 சரி. 226 00:12:06,602 --> 00:12:07,769 நான் மோதிரத்தைப் பார்க்கவில்லை. 227 00:12:07,853 --> 00:12:10,856 - இல்லை, நானும் பார்க்கவில்லை. - நிஜமாகவே நேரில் சந்திக்கப் போகிறீர்களா? 228 00:12:10,939 --> 00:12:12,441 நேரில் சந்திப்பது விநோதமாக இருக்கும். 229 00:12:12,524 --> 00:12:14,318 அதாவது, நமக்கு வேறு வழி இல்லை. 230 00:12:14,943 --> 00:12:16,820 - நமக்கா? - நாம் போகிறோம். 231 00:12:17,487 --> 00:12:18,530 அருமை. 232 00:12:19,281 --> 00:12:21,533 பௌலாவுக்கு நோக்கம் இருந்ததாக அவளுடைய முன்னாள் கணவன் உறுதிப்படுத்தியிருக்கிறான். 233 00:12:21,617 --> 00:12:23,660 அந்த கேம் பாய் அவர் வாழ்க்கையில் இருந்த எல்லாரையும் தொந்தரவு செய்திருக்கிறான். 234 00:12:23,744 --> 00:12:25,037 ஆம், அதைப் பற்றி அவள் சொன்னாள். 235 00:12:25,120 --> 00:12:26,705 அவள் அதை மறைக்கவில்லை. 236 00:12:26,788 --> 00:12:29,291 அவள் கொடுத்த இந்த வங்கி கணக்கு ரொம்ப சலிப்பானது. 237 00:12:29,374 --> 00:12:30,959 இந்த ஆவணங்களில் தேடும் வேலையை வெறுக்கிறேன். 238 00:12:31,043 --> 00:12:34,087 சலிப்பான ஆவணங்களில் தேடுவதுதான் கைதில் கொண்டுபோய் விடும். 239 00:12:34,171 --> 00:12:35,714 ஆம். 240 00:12:35,797 --> 00:12:37,299 டைமண்ட்பேக்ஸ் அணியைப் பற்றி என்ன நினைக்கிறாய்? 241 00:12:37,382 --> 00:12:38,383 ஸ்போர்ட்ஸ் பெட்ஸ் 242 00:12:38,467 --> 00:12:41,470 தங்கள் சொந்த ஊருக்கு வெளியே இருக்கும் ஒரு பேஸ்பால் அணியைப் பற்றி அக்கறை கொண்ட எவரும் 243 00:12:41,553 --> 00:12:43,180 சீரழிந்த சூதாட்டக்காரர் என்று நான் நினைக்கிறேன். 244 00:12:44,723 --> 00:12:47,226 என் சூதாட்டத்தில் சீரழிவு எதுவும் இல்லை. 245 00:12:47,309 --> 00:12:52,689 நம் வாழ்க்கை அதிர்ஷ்டத்தால் வரையறுக்கப்படுகிறது, அதைப் புறக்கணிக்கும் எவரும் முட்டாள். 246 00:12:53,982 --> 00:12:55,984 நான் தோற்பதால் நீ என்னை கேலி செய்கிறாய், 247 00:12:56,068 --> 00:12:58,320 ஆனால் கடைசியில் நிலைமை மாறப் போகிறது. 248 00:12:58,862 --> 00:13:03,742 கடைசியாக உனக்கு அதிர்ஷ்டமடிக்கும்போது விளையாட்டில் இல்லாமல் இருப்பதுதான் நிஜ இழப்பு. 249 00:13:04,910 --> 00:13:06,245 சரி, அரிஸ்டாட்டில். 250 00:13:07,037 --> 00:13:09,623 டைமண்ட்பேக்ஸுக்கு உங்கள் தத்துவம் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். 251 00:13:10,582 --> 00:13:12,084 நான் கப்ஸ் மீது பந்தையம் கட்டுவேன் என்று நினைக்கிறேன். 252 00:13:14,628 --> 00:13:17,005 மோட்டல் அபார்ட்மெண்ட்கள் 253 00:13:18,757 --> 00:13:21,343 சரி, நான் ஒரு காபி கடையை எதிர்பார்த்தேன். 254 00:13:21,426 --> 00:13:24,805 ஆம், நாம் ஒருவேளை ஒரு காபி கடைக்குப் போக வேண்டும், 255 00:13:24,888 --> 00:13:27,224 ஏனென்றால் இது ஒரு திகில் படம் போல தெரிகிறது. 256 00:13:27,307 --> 00:13:28,934 - சரி, ஒன்றுமாகாது. - அப்படியா? 257 00:13:29,017 --> 00:13:31,478 தன்னுடைய முலைக்காம்புகளுக்கு அலங்காரம் செய்யும் ஒருவன் 258 00:13:31,562 --> 00:13:35,107 கைவிடப்பட்ட கொலை விடுதியில் நேரில் சந்திக்க விரும்புகிறான். 259 00:13:35,190 --> 00:13:37,901 - அதனால்… - ஒன்றுமாகாது. இது பகல் நேரம். 260 00:13:37,985 --> 00:13:40,654 சரி, பகலில் யாரும் கொல்லப்படுவதில்லை. 261 00:13:40,737 --> 00:13:43,323 அதாவது, நான் ஏதாவது செய்ய வேண்டும். நான் உள்ளே போகிறேன். 262 00:13:44,199 --> 00:13:45,200 பொறுங்கள். பொறுங்கள். ஹேய். 263 00:13:45,826 --> 00:13:47,911 இதைப் பயன்படுத்துங்கள். இது உலர் ஷாம்பு. 264 00:13:47,995 --> 00:13:50,205 - என்ன? - ஏதாவது தவறு நடந்தால். 265 00:13:51,039 --> 00:13:53,667 ஒரு முறை என் கண்களில் பட்டுவிட்டது, அது நிஜமாகவே எரிந்தது. 266 00:13:55,836 --> 00:13:59,506 முப்பது நிமிடங்களில் நான் திரும்பி வரவில்லை என்றால், என்னை அழையுங்கள். 267 00:13:59,590 --> 00:14:00,883 - அலாரம் வைத்துக்கொள்ளுங்கள். - சரி. 268 00:14:37,961 --> 00:14:39,838 டக் வார்விக்கின் அலுவலகம் 10,000 டாலர்கள் மின்னணு பரிமாற்ற வழிமுறைகள் 269 00:14:55,771 --> 00:14:57,147 வணக்கங்கள். 270 00:14:58,065 --> 00:15:00,025 நான் ஸ்கை. உன்னைச் சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சி. 271 00:15:00,108 --> 00:15:01,568 எனக்கும்தான். நான் பௌலா. 272 00:15:11,119 --> 00:15:12,496 கட்டிட வேலை நடந்துகொண்டிருக்கிறது. 273 00:15:12,579 --> 00:15:14,122 நானும் ட்ரெவரும் ஒரு நண்பருடன் இந்த இடத்தை வாங்கினோம். 274 00:15:14,206 --> 00:15:16,792 இதை கல்லூரி மாணவர்களுக்கான குடியிருப்புகளாக மாற்றப் போகிறோம். 275 00:15:16,875 --> 00:15:19,419 - ஆஹா, அது ரொம்ப அருமையான யோசனை. - எனக்குத் தெரியும். 276 00:15:19,503 --> 00:15:21,964 பாலியல் வேலையிலும் ரியல் எஸ்டேட்டிலும் ட்ரெவர் எனக்கு வழிகாட்டியாக இருந்தான். 277 00:15:22,047 --> 00:15:23,966 அது ஒரு சுவாரஸ்யமான கலவை. 278 00:15:24,049 --> 00:15:27,386 ஆனால் அவன் இல்லாமல் என்னால் இதை முடிக்கவே முடியாது. 279 00:15:27,970 --> 00:15:29,304 அவன் இறந்ததை என்னால் நம்ப முடியவில்லை. 280 00:15:30,347 --> 00:15:33,016 ஆம், என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன். 281 00:15:33,100 --> 00:15:34,101 நானும்தான். 282 00:15:35,060 --> 00:15:37,312 அதாவது, கேம் துறையில், உனக்கு நிறைய பேர் தெரியும், 283 00:15:37,396 --> 00:15:41,108 ஆனால் நிஜமாகத் தெரியாது. எல்லோரும் ஒரு பயனர்பெயரும் படமும்தான். 284 00:15:41,191 --> 00:15:43,402 எங்களைத் தவிர எல்லோரும் முகம் தெரியாதவர்கள். 285 00:15:43,485 --> 00:15:44,528 மக்கள் எங்களைப் பார்க்கிறார்கள். 286 00:15:45,404 --> 00:15:46,488 அது பயமாக இருக்கிறது. 287 00:15:47,906 --> 00:15:50,784 ட்ரெவரின் மரணம் பற்றி உன்னிடம் ஏதோ தகவல் இருப்பதாகவா சொன்னாய்? 288 00:15:52,411 --> 00:15:53,704 உனக்குத் தெரிந்ததைச் சொல். 289 00:15:55,080 --> 00:15:57,124 உனக்கு என்ன தெரியும் என்று எனக்குத் தெரியும் வரை நான் சொல்ல மாட்டேன். 290 00:15:59,668 --> 00:16:00,669 சரி. 291 00:16:02,963 --> 00:16:07,259 இதை உன்னிடம் கேட்டால் எனக்கு சலிப்பாக இருக்கிறது என்று உனக்கே தெரியும். வை எப்படி இருக்கிறாள்? 292 00:16:08,093 --> 00:16:09,887 அது முடிந்தது. 293 00:16:09,970 --> 00:16:11,638 - என்ன? - ஆம், அவளை வெளியே போகச் சொல்லிவிட்டேன். 294 00:16:12,347 --> 00:16:14,308 அது ரொம்ப பெரிய விஷயம். நீ ஏன் எதுவும் சொல்லவில்லை? 295 00:16:14,391 --> 00:16:17,144 நான் ஒவ்வொரு முறை சொல்லும்போதும் நீ என்னைக் கேலி செய்வதால் இருக்கலாம். 296 00:16:17,227 --> 00:16:20,522 அது நடந்து ஒரு வாரமாகிவிட்டது. அது… பரவாயில்லை. நான் நன்றாக இருக்கிறேன். 297 00:16:20,606 --> 00:16:22,566 இனி அவளைப் பற்றி நான் உன்னை எரிச்சலூட்ட மாட்டேன். 298 00:16:22,649 --> 00:16:27,696 சரி. என்னை எரிச்சலூட்ட சீக்கிரத்தில் நீ ஒருவரைக் கண்டுபிடிப்பாய் என்று நம்புகிறேன். 299 00:16:28,864 --> 00:16:31,158 சட்டக் கல்லூரியில் இருக்கலாம். 300 00:16:31,909 --> 00:16:35,037 - நீ நிஜமாகவே வழக்கறிஞராக விரும்புகிறாயா? - ஆம், அப்படித்தான் நினைக்கிறேன். 301 00:16:35,120 --> 00:16:36,413 மீண்டும் கேட்கிறேன், வழக்கறிஞர் யார்? 302 00:16:36,496 --> 00:16:37,623 பற்களை சுத்தம் செய்பவர்கள்தானே? 303 00:16:38,457 --> 00:16:40,542 நான் மொழியியலில் பிஏ முடித்தேன், 304 00:16:40,626 --> 00:16:43,837 அது மொத்தமாக 3 லட்சம் டாலர்கள் வீண் என்று என் அப்பா நினைக்கிறார். 305 00:16:43,921 --> 00:16:46,840 எனவே, இப்போது யதார்த்தமாக இருக்க முயற்சிக்கிறேன், தெரியுமா? 306 00:16:46,924 --> 00:16:48,967 ஆம். தெரியும். 307 00:16:49,051 --> 00:16:51,845 ஆனால், நீ நிஜமாகவே புத்திசாலி, எனவே, நீ ஒரு அருமையான சட்டக் கல்லூரியில் சேர்வாய். 308 00:16:52,429 --> 00:16:53,722 நன்றி. 309 00:16:53,805 --> 00:16:55,724 என் அப்பாவும் ரொம்ப ஆதரவானவர் இல்லை. 310 00:16:55,807 --> 00:16:58,435 அவர் எப்போதும், "ஜெர்-பேர், இந்த வீணாய்ப் போன இதழியலில் 311 00:16:58,519 --> 00:17:01,230 உன் நேரத்தை வீணடிக்கிறாய். செய்தி துறையில் எல்லாம் 312 00:17:01,313 --> 00:17:03,273 AI ஆகப் போகிறது" என்று சொல்வார். 313 00:17:03,357 --> 00:17:05,192 வருந்துகிறேன், அது கடுமையானது. 314 00:17:07,152 --> 00:17:09,530 இருந்தாலும் அது அப்படி ஒன்றில்லை, சரியா? 315 00:17:09,613 --> 00:17:11,114 - நீ என்ன சொல்கிறாய்? - சரி, அதாவது, 316 00:17:11,198 --> 00:17:13,825 மொழியியல் என்பது ஒரு கிளாசிக்கல் படிப்பு. 317 00:17:13,909 --> 00:17:15,577 இது பல வேலைகளுக்கு ஒரு உறுதியான அடித்தளம். 318 00:17:15,661 --> 00:17:20,374 இதழியல் என்பது முழுவதுமான காலாவதியான, அழிந்துகொண்டிருக்கும் ஊடகம். 319 00:17:20,457 --> 00:17:22,416 நீ எல்சாட்களில் தோற்பாய் என்று நம்புகிறேன். 320 00:17:23,292 --> 00:17:26,380 சரி, நல்ல பேச்சு, ஜெர்-பேர். 321 00:17:39,601 --> 00:17:40,978 நிச்சயமாக குடிக்க ஏதாவது வேண்டாமா? 322 00:17:41,061 --> 00:17:42,437 எங்களிடம் ஃபிஸ்ஸி வாட்டரும் இருக்கிறது. 323 00:17:42,521 --> 00:17:43,856 அதோடு பாலும். 324 00:17:44,481 --> 00:17:46,066 ஒருபோதும் ஃபிஸ்ஸி பால் தயாரிக்கப்படவில்லை என்பது வினோதம். 325 00:17:46,149 --> 00:17:47,401 இல்லை, நான் நன்றாக இருக்கிறேன். 326 00:17:47,484 --> 00:17:49,152 எனவே, சரி… 327 00:17:49,236 --> 00:17:51,488 கேமிங்கைத் தவிர ட்ரெவர் வேறு என்னென்ன செய்தான்? 328 00:17:51,572 --> 00:17:52,906 எனக்கு நிஜமாகவே எதுவும் தெரியாது. 329 00:17:52,990 --> 00:17:57,244 நான் சொன்னது போல, ட்ரெவர் வெவ்வேறு நபர்களுடன் சுற்றுபவன் என்பது எனக்குத் தெரியும். 330 00:17:57,327 --> 00:17:58,704 அவர்கள் எல்லோரையும் எனக்குத் தெரியாது. 331 00:17:59,204 --> 00:18:03,917 ட்ரெவர் பாலியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ரொம்ப நெகிழ்வானவன், அதனால்தான் அவன் 332 00:18:04,001 --> 00:18:05,460 அதிகம் சம்பாதிப்பவனாக இருந்தான். 333 00:18:05,544 --> 00:18:07,212 அதாவது, மக்களை மனம் திறக்க வைக்கும் ஒரு வழி அவனிடம் இருந்தது… 334 00:18:08,755 --> 00:18:09,798 - ட்ரெவர்? - உதவி! 335 00:18:09,882 --> 00:18:11,425 அவன் என்ன செய்கிறான் என்று அவனுக்குத் தெரியும். 336 00:18:11,508 --> 00:18:13,260 அதாவது, நாங்கள் இதில் நிஜ முன்னேற்றங்களைச் செய்கிறோம்… 337 00:18:15,429 --> 00:18:19,183 அவரிடம் இருந்தது… மக்களிடம் எப்படி… 338 00:18:21,435 --> 00:18:22,728 யார் நீ? 339 00:18:23,770 --> 00:18:26,106 - …அவன் இன்பம் அனுபவிக்கும்… - அது நீதான். 340 00:18:27,191 --> 00:18:29,234 அந்த வீடியோவில் ட்ரெவரைத் தாக்கியது நீதான். 341 00:18:29,818 --> 00:18:31,195 - என்ன? - ஆம்… 342 00:18:31,278 --> 00:18:34,031 நீ இடதுகை பழக்கம் கொண்டவன், உனக்குப் பச்சை நிற கண்கள், அதோடு அந்தப் பல். 343 00:18:34,114 --> 00:18:37,367 அதாவது நான்… உன் வினோதமான இரண்டு விரல் மோதிரம் எங்கே? 344 00:18:37,451 --> 00:18:38,827 - அது நீதான். - இல்லை. இல்லை. 345 00:18:38,911 --> 00:18:40,579 - ஆம், அது நீதான். - அது நீ நினைப்பது போல இல்லை. 346 00:18:40,662 --> 00:18:42,706 அதாவது, ஆம், அது நான்தான், ஆனால் அது போலியானது. 347 00:18:42,789 --> 00:18:45,584 அதெல்லாம் ஏமாத்து வேலை. நான் ட்ரெவரைக் காயப்படுத்த மாட்டேன். நான் யாரையும் காயப்படுத்தியதில்லை. 348 00:18:45,667 --> 00:18:48,253 - மக்கள் கொல்லப்பட்டார்கள். - சரி, நான் அவனைக் கொல்லவில்லை. 349 00:18:48,337 --> 00:18:49,755 நீ பார்த்தது போலியானது. 350 00:18:49,838 --> 00:18:51,048 அது திட்டமிட்டு செய்யப்பட்டது. 351 00:18:51,131 --> 00:18:52,424 அது ட்ரெவரின் யோசனை. 352 00:18:52,508 --> 00:18:54,718 "எனக்கு உதவு, நான் அழகாக இருக்கிறேன், சிக்கலில் இருக்கிறேன்" என்ற 353 00:18:54,801 --> 00:18:57,429 விஷயத்தின் மூலம் சில வாடிக்கையாளர்களை உலுக்க இந்த முழு திட்டமும் அவனுடையதுதான். 354 00:18:57,513 --> 00:19:00,432 நாங்கள் பணத்தைப் பெற முயற்சித்தோம். அது ஒரு சாக்கு என்று இல்லை. 355 00:19:00,516 --> 00:19:02,684 நான் அதை உனக்கு செய்திருக்கக் கூடாது. யாருக்கும் செய்திருக்கக் கூடாது, 356 00:19:02,768 --> 00:19:05,771 ஆனால் இப்போது என் நண்பனைக் கொன்றது யார் என்று கண்டுபிடிக்க வேண்டும். 357 00:19:07,105 --> 00:19:10,192 நான் சுற்றிப் போய் பார்க்கிறேன். பௌலா திரும்பி வந்தால் இங்கேயே இரு. 358 00:19:10,275 --> 00:19:12,611 - நான் இங்கே தனியாக இருக்க விரும்பவில்லை… - கதவுகளைப் பூட்டிக்கொள். 359 00:19:12,694 --> 00:19:16,573 யாராவது வந்தால், உன் அப்பாவைப் பற்றிய சலிப்பான கதையைச் சொல். 360 00:19:16,657 --> 00:19:18,283 என்னை நம்பு, அவர்கள் போய்விடுவார்கள். 361 00:19:24,122 --> 00:19:25,123 அருமை. 362 00:19:25,207 --> 00:19:27,584 பார், நாங்கள் ஏமாற்றிய வேறு யாராவதாக இருக்கலாம். 363 00:19:27,668 --> 00:19:30,879 ச்சே, அதாவது, அது யாராகவும் இருக்கலாம், ஆணாக, பெண்ணாக. 364 00:19:30,963 --> 00:19:32,381 அது ஒரு ஆண். 365 00:19:32,464 --> 00:19:35,092 - அதாவது, பெரும்பாலும், ஆம். - அது, அது ஒரு ஆண். 366 00:19:35,175 --> 00:19:36,343 நான் அதைப் பார்த்தேன். 367 00:19:36,426 --> 00:19:37,636 அலமாரியில் ஒளிந்திருந்தேன். 368 00:19:37,719 --> 00:19:38,720 நான்… 369 00:19:40,222 --> 00:19:41,723 ஒரு ஆண் அதைச் செய்ததைப் பார்த்தேன். 370 00:19:42,808 --> 00:19:43,809 நீ அங்கே இருந்தாயா? 371 00:19:44,768 --> 00:19:46,061 அவன் எப்படி இருந்தான்? 372 00:19:46,144 --> 00:19:48,105 நான் அவனை நன்றாகப் பார்க்கவில்லை. 373 00:19:48,814 --> 00:19:51,066 என்னால் பார்க்க முடிந்த ஒரே விஷயம் அவனுடைய பூட்ஸ். 374 00:19:51,149 --> 00:19:52,192 பூட்ஸா? 375 00:19:52,901 --> 00:19:54,319 அவன் ட்ரெவரின் ரெட் விங்க்ஸ் பூட்ஸை அணிந்திருந்தான். 376 00:19:54,403 --> 00:19:56,071 வெவ்வேறு லேஸ்களை வைத்து என்னால் சொல்ல முடிந்தது. 377 00:19:56,154 --> 00:19:57,155 வெவ்வேறு லேஸ்கள். 378 00:19:58,740 --> 00:20:00,158 சரி. 379 00:20:00,242 --> 00:20:02,119 அது யார் என்று உனக்குத் தெரியும், இல்லையா? 380 00:20:02,703 --> 00:20:03,704 இல்லை, நான்… 381 00:20:04,538 --> 00:20:05,664 ஹாய். 382 00:20:05,747 --> 00:20:08,500 நான் இதற்காக வருந்துகிறேன், ஆனால் அசையாதே. 383 00:20:18,343 --> 00:20:19,636 ஹாய். 384 00:20:24,349 --> 00:20:25,893 உடற்பயிற்சி நேரம். அருமை. 385 00:20:29,605 --> 00:20:31,899 நீங்கள் யேலில் மாணவர் சேர்க்கையில் இருக்கிறீர்கள், இல்லையா? 386 00:20:32,774 --> 00:20:34,818 - ஆம், உங்களுக்கு எப்படி… - வெல்லுங்கள், புல்டாக்ஸ். 387 00:20:37,988 --> 00:20:41,408 ஆம், எனக்குத் தெரியவில்லை, அது ஒரு நண்பரின் மகன், ரொம்ப நல்ல பையன். 388 00:20:41,491 --> 00:20:43,744 அவன் அங்கே நிராகரிக்கப்பட்டான். 389 00:20:45,245 --> 00:20:46,246 வருந்துகிறேன். 390 00:20:46,747 --> 00:20:48,540 நிறைய கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும், 391 00:20:48,624 --> 00:20:50,209 அதோடு சேர்க்கைகளில் நிறைய பேர் இருக்கிறோம், எனவே… 392 00:20:50,292 --> 00:20:53,670 ஆம், ஆனால் நீங்கள் மட்டும்தான் அந்தக் கல்லூரியை வைத்து மோசடி செய்கிறீர்கள், ஜாய்ஸ். 393 00:20:56,590 --> 00:20:59,092 மைக்ரோசாப்ட் வேகமாக இறங்குகிறது. 394 00:20:59,176 --> 00:21:01,512 மோசடியா? அது அபத்தமானது. 395 00:21:02,513 --> 00:21:05,015 எப்போதும் அபத்தம் என்று சொல்வார்கள். 396 00:21:05,807 --> 00:21:09,311 இருந்தாலும், ஆவணங்கள். 397 00:21:10,938 --> 00:21:12,397 உங்கள் தரகு கணக்கு. 398 00:21:12,481 --> 00:21:13,482 ஓபன் எண்ட் மியூச்சுவல் ஃபண்டுகள் 399 00:21:14,107 --> 00:21:17,027 ஹேய், நீங்கள் ரிஸ்க் எடுத்தீர்கள். நான் எதுவும் நினைக்கவில்லை. 400 00:21:17,110 --> 00:21:20,197 திருடுவதில் திறமைசாலியாக இருந்தீர்கள், மறைந்திருப்பதில் அவ்வளவாக இல்லை. 401 00:21:20,781 --> 00:21:27,162 ஆனால் என்னுடைய நண்பருக்கு நீங்கள் ஒரு உதவி செய்தால் ஒரு வழி இருக்கிறது. 402 00:21:28,455 --> 00:21:32,960 இந்த இளைஞனுக்கு நீங்கள் இடம் கொடுத்தால்… 403 00:21:33,043 --> 00:21:34,044 பிளேக் வாண்டர்வால் 404 00:21:34,127 --> 00:21:35,128 அவன் பெயரைப் பார்த்தீர்களா? 405 00:21:36,088 --> 00:21:38,715 - சரி என்ற பதில் வேண்டும், ஜாய்ஸ். - சரி. 406 00:21:38,799 --> 00:21:42,511 ஆம், வரவிருக்கும் புதிய மாணவர் வகுப்பில் அவனுக்கு இடம் கொடுத்தால், 407 00:21:42,594 --> 00:21:43,762 நீங்கள் ஜெயிலுக்குப் போக மாட்டீர்கள். 408 00:21:45,848 --> 00:21:46,974 ஊப்! 409 00:21:47,057 --> 00:21:50,185 நீங்கள் இன்னொரு கடினமான முடிவை எடுத்தது போல தெரிகிறது. 410 00:21:54,648 --> 00:21:55,649 நான் இங்கே வெளியேற வேண்டும். 411 00:21:58,235 --> 00:21:59,444 அந்தப் பையனுக்கு இடம் கோடு. 412 00:22:17,337 --> 00:22:20,048 பாட் இல்லை 413 00:22:36,440 --> 00:22:38,901 - ஆஷ், நீ என்ன செய்கிறாய்? - தயவுசெய்து என்னை வீட்டிற்குப் போக விடுங்கள்… 414 00:22:38,984 --> 00:22:41,486 வாயை மூடு அல்லது சுட்டுவிடுவேன். புரிகிறதா? 415 00:22:42,654 --> 00:22:45,032 - அவள் யாரைப் பற்றி பேசுகிறாள் தெரியுமா? - கண்டிப்பாக எனக்குத் தெரியும். 416 00:22:45,115 --> 00:22:46,783 அது அநேகமாக அவனாகத்தான் இருக்கும் என்று சொன்னேனே. 417 00:22:46,867 --> 00:22:49,369 நாம் அவனுக்குத் தெரியாமல் மக்களை ஏமாற்றுவதை அவன் எப்போதாவது 418 00:22:49,453 --> 00:22:51,246 கண்டுபிடித்தால் அது மோசமாக இருக்கும் என்று 419 00:22:51,330 --> 00:22:53,582 - ட்ரெவ் நம்மை எச்சரித்தான். - சரி, நீ சொல்வது சரிதான். எப்போதும் சரிதான். 420 00:22:53,665 --> 00:22:54,917 அவன் நம்மை தேடியும் வரப்போகிறான். 421 00:22:55,000 --> 00:22:57,836 - நாம் என்ன செய்வது? - என்னிடம் ஒரு யோசனை இருக்கிறது. 422 00:22:57,920 --> 00:22:59,129 நீ என்னை நம்புகிறாயா? 423 00:22:59,755 --> 00:23:00,756 ஆம். 424 00:23:13,894 --> 00:23:15,729 ஹேய், ப்ரை-டாக். 425 00:23:16,480 --> 00:23:19,983 கேள், நல்ல செய்தி, நண்பா, சிசிலியாவுக்காக அந்த உதவியைச் செய்தேன், 426 00:23:20,067 --> 00:23:22,402 எனவே… நன்றாக போக வேண்டும். 427 00:23:23,153 --> 00:23:25,489 சரி, உன்னுடன் பிறகு பேசுகிறேன், நண்பா. 428 00:23:28,033 --> 00:23:29,326 ப்ரை-டாக். 429 00:23:30,118 --> 00:23:31,370 என்னை நானே கொல்வேன். 430 00:23:37,709 --> 00:23:38,710 ஹலோ. 431 00:23:38,794 --> 00:23:41,797 நீ கொலை செய்ததை நேரில் பார்த்த ஒருவர் என்னிடம் இருக்கிறார். 432 00:23:41,880 --> 00:23:45,759 நீதான் என்பதை அவரால் நிரூபிக்க முடியும், ஆனால் அவரை நன்றாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்கிறேன், 433 00:23:45,843 --> 00:23:48,762 ஒரு விலைக்கு என்னால் அவரை உன்னிடம் ஒப்படைக்க முடியும். 434 00:23:50,222 --> 00:23:51,473 சரி. 435 00:23:51,557 --> 00:23:55,018 அவரை நீயே வைத்துக்கொள்வது எப்படி? 436 00:23:57,437 --> 00:23:59,106 நீ பணம் கொடுக்கவில்லை என்றால், 437 00:23:59,189 --> 00:24:01,692 இந்த ஃபோன் எண்ணையும் உன் பெயரையும் கொடுத்து பக்கத்தில் இருக்கும் 438 00:24:01,775 --> 00:24:05,404 காவல்நிலையத்தில் அவரை இறக்கிவிடப் போகிறேன், பிறகு நீயே அதைப் பார்த்துக்கொள்ளலாம். 439 00:24:07,489 --> 00:24:08,490 எவ்வளவு? 440 00:24:09,700 --> 00:24:11,076 முப்பதாயிரம் டாலர்கள். 441 00:24:15,956 --> 00:24:16,957 இருபது. 442 00:24:18,375 --> 00:24:20,961 பாதியை இப்போதே அனுப்பு, பிறகு முகவரியை அனுப்புகிறேன். 443 00:24:22,504 --> 00:24:24,006 பணத்தை எங்கே அனுப்புவது என்று உனக்கு மெசேஜ் அனுப்புகிறேன். 444 00:24:29,094 --> 00:24:31,388 நீங்கள் நிஜமாகவே இதைச் செய்ய வேண்டியதில்லை, ஏனென்றால் நான்… 445 00:24:31,471 --> 00:24:33,140 வாயை மூடு. 446 00:24:33,807 --> 00:24:35,934 உனக்குப் பைத்தியமா? நீ என்ன யோசிக்கிறாய்? நீ… 447 00:24:36,018 --> 00:24:38,770 நான் நினைக்கிறேன் அது நான் என்று அவனுக்குத் தெரியாது, 448 00:24:38,854 --> 00:24:40,564 அவன் இப்போது நமக்கு பத்தாயிரம் டாலர்களை அனுப்பப் போகிறான். 449 00:24:41,190 --> 00:24:43,066 எனவே நாம் அநேகமாக இங்கிருந்து போக வேண்டும், சரிதானே? 450 00:24:43,150 --> 00:24:46,153 - ஆம், ஆனால் அவனுக்கு அனுப்புவது… - பார், நம்மிடம் பணம் இல்லை. 451 00:24:46,653 --> 00:24:50,157 நம்மிடம் இருக்கும் ஒவ்வொரு பென்னியும் ட்ரெவர் பேசி உன்னை ஒப்புக்கொள்ள வைத்த பிரயோஜனமில்லாத 452 00:24:50,240 --> 00:24:51,700 இந்த மோட்டலில் இருக்கிறது. 453 00:24:51,783 --> 00:24:54,953 எனவே அவன் பணம் அனுப்புவான், அவன் இங்கே வரும்போது, 454 00:24:55,913 --> 00:24:57,289 நாம் போய் ரொம்ப நேரம் ஆகியிருக்கும். 455 00:24:57,372 --> 00:24:58,540 இவளுக்கு என்ன ஆகும்? 456 00:24:59,124 --> 00:25:01,043 இப்போது நான் உன்னையும் என்னையும் பற்றி மட்டும்தான் கவலைப்படுகிறேன். 457 00:25:01,126 --> 00:25:02,544 நமக்குப் பணம் வருகிறது, பிறகு நாம் போகிறோம். 458 00:25:02,628 --> 00:25:05,631 அதாவது… கேள். நான் சொல்வதைக் கேள். 459 00:25:06,340 --> 00:25:07,508 நீ என்னைப் போக விடலாம். 460 00:25:07,591 --> 00:25:10,719 நீ என்னை வீட்டிற்குப் போக விடலாம், 461 00:25:10,802 --> 00:25:14,014 ஏனென்றால் நான் யாரிடமும் எதுவும் சொல்ல மாட்டேன். 462 00:25:14,097 --> 00:25:15,390 நான்… நான் ஏன் சொல்வேன்… 463 00:25:15,474 --> 00:25:17,309 - நான் ஏன் எதையும் சொல்வேன்… - என்ன? நான் உன்னை நோக்கி 464 00:25:17,392 --> 00:25:19,186 துப்பாக்கியைக் காட்டுவதைப் பற்றி நீ எதுவும் சொல்ல மாட்டாயா? 465 00:25:19,895 --> 00:25:20,896 நிச்சயமாக. 466 00:25:23,899 --> 00:25:25,234 நமக்குப் பணம் வந்துவிட்டது. 467 00:25:28,195 --> 00:25:29,321 அவளைக் கட்டுவோம். 468 00:25:34,451 --> 00:25:35,744 ஒரு ஹூண்டாய் காரில் என் இயர்பட்டைப் போட்டுவிட்டேன். 469 00:25:35,827 --> 00:25:37,454 ஒருமுறை, என்னுடையதை கழிப்பறையில் போட்டிருக்கிறேன், 470 00:25:37,538 --> 00:25:39,623 ஆனால் அது மோசமான எதிலும் மோதுவதற்கு முன்பு எடுத்துவிட்டேன். 471 00:25:39,706 --> 00:25:41,333 இல்லை, நான் அதை கேம் பாய் காரில் போட்டேன். 472 00:25:41,416 --> 00:25:42,918 எனவே இப்போது நம்மால் அவனைக் கண்காணிக்க முடியும். 473 00:25:43,001 --> 00:25:44,753 அது நிஜமாகவே புத்திசாலித்தனம். 474 00:25:48,340 --> 00:25:49,633 நாம் பௌலாவை அழைக்க வேண்டுமா? 475 00:25:49,716 --> 00:25:51,844 இல்லை. எல்லாம் நன்றாக இருப்பதாக தெரிந்தது. 476 00:25:53,136 --> 00:25:54,555 இல்லை. தயவுசெய்து. 477 00:25:54,638 --> 00:25:56,306 - நாற்காலியில் உட்காரு. - வேண்டாம். தயவுசெய்து. இப்படி செய்யாதீர்கள். 478 00:25:56,390 --> 00:25:58,475 தயவுசெய்து. எனக்கு இதெல்லாம் நடக்கக் கூடாது. இல்லை… 479 00:25:58,559 --> 00:26:00,769 - என்ன செய்கிறாய்? துப்பாக்கியை உயர்த்து! - நீ இதைச் செய்ய வேண்டியதில்லை. 480 00:26:00,853 --> 00:26:03,313 நீ என்னைக் கட்ட வேண்டியதில்லை. நான் எதுவும் செய்யப் போவதில்லை. 481 00:26:03,397 --> 00:26:04,898 வாயை மூடு. நாற்காலியில் உட்காரு. 482 00:26:04,982 --> 00:26:06,984 ஸ்கை, என்னைப் பார். நீ இதைச் செய்ய வேண்டியதில்லை. 483 00:26:07,067 --> 00:26:08,861 நாற்காலியில் உட்காரு! 484 00:26:09,778 --> 00:26:10,904 நீ என்ன செய்கிறாய்? 485 00:26:10,988 --> 00:26:13,156 - கவனி. நடப்பதில் கவனம் செலுத்து. - நான் முயற்சிக்கிறேன்… 486 00:26:13,240 --> 00:26:14,408 - என்ன செய்கிறாய்? - கவனம் செலுத்த முயற்சிக்கிறேன். 487 00:26:14,491 --> 00:26:15,701 ச்சே! 488 00:26:22,249 --> 00:26:23,709 நான் உன்னைக் கொல்லப் போகிறேன்! 489 00:26:36,972 --> 00:26:38,348 ச்சே! 490 00:26:55,616 --> 00:26:56,825 டபிள்யூ? 491 00:26:56,909 --> 00:26:58,535 - இல்லை. - சி? 492 00:26:58,619 --> 00:26:59,912 இல்லை. 493 00:26:59,995 --> 00:27:01,371 கடவுளே. 494 00:27:01,455 --> 00:27:02,539 ஐயையோ. 495 00:27:03,832 --> 00:27:05,792 - ஓட்டு! - சரி. 496 00:27:05,876 --> 00:27:07,127 - ஓட்டு, ஓட்டித்தொலை! - ச்சே. 497 00:27:07,211 --> 00:27:08,962 - சரி. - என்ன ஆனது? 498 00:27:18,972 --> 00:27:19,973 கடவுளே. 499 00:27:20,057 --> 00:27:22,434 அது… இது ஆழமாக இறங்கியிருக்கிறது. 500 00:27:22,518 --> 00:27:24,019 நான்… எனக்குத் தெரியவில்லை. 501 00:27:24,102 --> 00:27:26,355 நான் இதைப் பிடுங்கினால், அதிகமாக இரத்தம் வரும். 502 00:27:26,438 --> 00:27:28,774 - அது ரொம்ப வலிக்கும்! - சரி! சரி. 503 00:27:28,857 --> 00:27:30,567 நான் காரை வெளியே கொண்டு வருகிறேன். 504 00:27:31,693 --> 00:27:35,197 பிறகு இதை ரொம்ப வேகமாக பிடுங்கிவிட்டு, உன்னை மருத்துவரிடம் கூட்டிப் போகிறேன், சரியா? 505 00:27:35,280 --> 00:27:36,949 - சீக்கிரம். - இரண்டு நிமிடங்களில் வந்துவிடுகிறேன். 506 00:27:37,032 --> 00:27:38,116 இரண்டு நிமிடங்கள். 507 00:27:39,409 --> 00:27:41,537 அடக் கடவுளே. என்னால் முடியவில்லை… 508 00:27:42,162 --> 00:27:44,081 - என்னால் இன்னும் சுவாசிக்க முடியவில்லை. - பரவாயில்லை. நலமாக இருக்கிறீர்கள். 509 00:27:44,164 --> 00:27:46,124 இப்போது பாதுகாப்பாக இருக்கிறீர்கள். உங்களை வீட்டிற்குக் கூட்டிப் போகிறோம். 510 00:27:46,208 --> 00:27:47,543 - உங்களுக்கு ஒன்றுமில்லை. - கிட்டத்தட்ட வீட்டிற்கு வந்துவிட்டீர்கள். 511 00:27:47,626 --> 00:27:48,836 ஆம். 512 00:27:50,879 --> 00:27:53,298 - எனவே அது ரௌடி கும்பல் விஷயமா? - ரூடி, வாயை மூடு! 513 00:27:53,382 --> 00:27:55,509 வாயை மூடு. 514 00:27:56,718 --> 00:27:58,679 எல்லாம் சரியாகிவிடும். பொறுமையாக இருங்கள். 515 00:28:09,398 --> 00:28:11,525 ஜி, இதைப் பாருங்கள். 516 00:28:11,608 --> 00:28:13,193 நான் ஏதாவது கண்டுபிடித்திருக்கலாம். 517 00:28:13,694 --> 00:28:16,405 கொல்லப்பட்டவன் கட்டுமானப் பொருட்களில் நிறைய செலவு செய்திருக்கிறான். 518 00:28:16,488 --> 00:28:18,240 ஒவ்வொரு மாதமும், அவன் பணம் செலுத்தியிருக்கிறான். 519 00:28:18,323 --> 00:28:20,450 ஐந்தாயிரம் டாலர்கள். ஏழாயிரம் டாலர்கள். 520 00:28:20,534 --> 00:28:23,370 எனவே, மரக்கடையை அழைத்தேன், விநியோகிக்கப்பட்ட முகவரியை வாங்கினேன். 521 00:28:23,453 --> 00:28:26,081 அரை மணிநேர தூரத்தில் ஒரு மோட்டல் இருப்பது போல தெரிகிறது. 522 00:28:28,166 --> 00:28:30,043 சலிப்பான ஆவணங்களில் தேடும் வேலை, ம்? 523 00:28:31,670 --> 00:28:33,338 ஒருவேளை நிலைமை மாறலாம். 524 00:28:33,422 --> 00:28:35,048 ஒருவேளை நமக்கு அதிர்ஷ்டம் ஏற்படலாம். 525 00:28:35,549 --> 00:28:36,550 நல்லது. 526 00:28:46,351 --> 00:28:47,352 ச்சே. 527 00:28:48,770 --> 00:28:50,397 கடவுளே. இல்லை. 528 00:28:52,566 --> 00:28:53,567 ச்சே. 529 00:28:57,696 --> 00:28:59,865 - எங்கே இருக்கிறாய்? - டென்னிஸ் இங்கே வந்துவிட்டான். நீ… 530 00:28:59,948 --> 00:29:01,408 நீ இப்போதே வெளியேற வேண்டும். 531 00:29:01,491 --> 00:29:02,826 தரையில் வைத்து ஆணியடிக்கப்பட்டிருக்கிறேன்! 532 00:29:02,910 --> 00:29:04,244 சரி. ச்சே. 533 00:29:05,245 --> 00:29:06,663 - நான் வருகிறேன். - இல்லை. இல்லை. 534 00:29:06,747 --> 00:29:08,207 - பரவாயில்லை. - இல்லை, நீ என்ன சொல்கிறாய்? 535 00:29:08,290 --> 00:29:09,791 - எனக்கு ஒன்றுமாகாது. - அவன் இப்போது வருகிறான். 536 00:29:09,875 --> 00:29:11,668 - நீ அங்கிருந்து வெளியேற வேண்டும். - என்னிடம் துப்பாக்கி இருக்கிறது. 537 00:29:11,752 --> 00:29:13,670 எப்படியும் உங்களால் எதுவும் செய்ய முடியாது. 538 00:29:15,631 --> 00:29:18,258 சரி. நான் கேட்க இணைப்பிலேயே இரு. 539 00:29:25,015 --> 00:29:26,558 ச்சே. 540 00:29:40,280 --> 00:29:42,491 ஹேய், டென்னிஸ், ஸ்கை பேசுகிறேன். 541 00:29:42,574 --> 00:29:43,992 எப்படி இருக்கிறாய், நண்பா? 542 00:29:44,743 --> 00:29:45,744 அந்த சாட்சி போய்விட்டார். 543 00:29:46,245 --> 00:29:47,955 நிஜமாகவே அதற்காக வருந்துகிறேன். 544 00:29:49,289 --> 00:29:51,250 கேள், நான்… நண்பா, உன் மீது எனக்கு பெரிய மரியாதை இருக்கிறது. 545 00:29:51,333 --> 00:29:52,709 எனக்கு எந்தப் பிரச்சினையும் வேண்டாம். 546 00:29:53,210 --> 00:29:57,422 ஆனால் நான் உன்னிடம் சொல்ல வேண்டும், என்னிடம் பெரிய துப்பாக்கி இருக்கிறது, சரியா? 547 00:29:59,049 --> 00:30:00,884 நான் அதைப் பயன்படுத்த விரும்பவில்லை, அதனால், 548 00:30:00,968 --> 00:30:05,389 ஒருவேளை இதை மறந்துவிட்டு, எப்போதாவது ஒன்றாகக் குடிப்போம். 549 00:30:05,931 --> 00:30:08,100 உனக்கு சாகி பானம் பிடிக்கும் என்று ட்ரெவர் சொன்னான். 550 00:30:12,229 --> 00:30:13,814 தயவுசெய்து ஏதாவது சொல், சகோ. 551 00:30:18,443 --> 00:30:20,112 உன்னைச் சுட வைக்காதே, நண்பா. 552 00:30:21,446 --> 00:30:23,740 நான் உன்னைச் சுட்டுவிடுவேன்! 553 00:30:26,743 --> 00:30:28,036 நான் சுடுவேன்! 554 00:30:33,500 --> 00:30:35,627 ஸ்கை. ஸ்கை? 555 00:30:37,838 --> 00:30:38,922 ஸ்கை? 556 00:30:41,967 --> 00:30:43,010 ஸ்கை! 557 00:30:54,813 --> 00:30:57,566 என்ன நடக்கிறது? 558 00:30:59,735 --> 00:31:01,945 ஸ்கை? 559 00:31:06,783 --> 00:31:08,035 ச்சே. 560 00:31:14,917 --> 00:31:15,959 ஒரு பிரச்சினையும் இல்லை, நண்பா. 561 00:31:16,627 --> 00:31:19,213 பரவாயில்லை. அவள் எங்கே இருக்கிறாள் என்று தெரியும், அவளைக் கண்டுபிடிக்க முடியும். 562 00:31:21,131 --> 00:31:23,967 எங்களிடம் கார் இருக்கிறது. நீ என்னுடன் வரலாம். 563 00:31:24,051 --> 00:31:26,178 நாம்… நீ பாதுகாப்புக்கு வரலாம். 564 00:31:27,679 --> 00:31:31,266 தெரியுமா, ட்ரெவரின் எல்லா நண்பர்களிலும், எப்போதும் உன்னைத்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். 565 00:31:35,562 --> 00:31:36,980 ஆனால் நீ ரொம்ப பேசுகிறாய். 566 00:31:58,919 --> 00:32:00,212 ஸ்கை? 567 00:32:00,295 --> 00:32:01,296 ஸ்கை? 568 00:32:02,005 --> 00:32:03,006 ஸ்கை! 569 00:32:04,633 --> 00:32:05,926 ஆஷ் 570 00:32:06,009 --> 00:32:07,010 ஸ்கை! 571 00:32:08,512 --> 00:32:10,806 வருந்துகிறேன், ஸ்கையால் இப்போது ஃபோனை எடுக்க முடியாது. 572 00:32:11,723 --> 00:32:14,184 நான் உன்னைக் கொல்லப் போகிறேன். 573 00:32:14,268 --> 00:32:15,644 ஆஷ்லி, நீயா? 574 00:32:15,727 --> 00:32:18,021 வாய்ஸ் ஸ்க்ராம்ப்ளர் இல்லாமல் உன் குரலை அடையாளம் தெரியவில்லை. 575 00:32:18,564 --> 00:32:20,732 தெரியுமா, ஒருவேளை நாம் இதைப் பற்றி பேச வேண்டும். 576 00:32:21,358 --> 00:32:22,359 நான் உன்னைத் தேடி வருவேன். 577 00:32:33,871 --> 00:32:36,081 - உனக்கு நாள் எப்படிப் போனது? - எனக்கா? 578 00:32:36,164 --> 00:32:38,292 அருமையாக. ஆம், நன்றாக. 579 00:32:38,375 --> 00:32:40,794 முற்றிலும் சலிப்பான நாள். 580 00:32:40,878 --> 00:32:43,297 வழக்கமாகத்தான். புதிதாக எதுவும் இல்லை. உனக்கு? 581 00:32:44,631 --> 00:32:45,716 வழக்கமாக. 582 00:32:46,675 --> 00:32:47,926 எனக்கு வழக்கமானதைப் பிடிக்கும். 583 00:32:50,053 --> 00:32:52,472 - வழக்கறிஞரிடம் இருந்து ஈமெயில் வந்ததா? - இல்லை. 584 00:32:52,556 --> 00:32:54,850 நீதிபதி நார்லெஸ்கியிடம் நம் வழக்குப் போகிறது. 585 00:32:55,767 --> 00:32:56,768 உனக்கு அவரைத் தெரியாதா? 586 00:32:56,852 --> 00:33:00,480 வேறு எந்த நீதிபதியையும்விட அப்பாக்களுக்கு கஸ்டடி கொடுப்பவர், அவர்தான் நமக்கானவர். 587 00:33:01,315 --> 00:33:02,441 - நிஜமாகவா? - ஆம். 588 00:33:02,524 --> 00:33:03,525 ஆஹா. 589 00:33:03,609 --> 00:33:06,695 அவர் பெண்கள் விரோத கருத்து கொண்டவராக இருக்கலாம், ஆனால் இந்த விஷயத்தில் அது நமக்கு உதவுகிறது. 590 00:33:07,196 --> 00:33:09,364 - அருமை. அது எனக்குப் பரவாயில்லை. - எனக்கும்தான். 591 00:33:10,115 --> 00:33:12,326 நமக்குத் தேவைப்பட்ட இடைவேளை கிடைக்கிறது. 592 00:33:13,035 --> 00:33:14,328 ஆனால் இது சுவாரஸ்யமாக இருக்கிறது. 593 00:33:19,833 --> 00:33:22,336 ஈஸி அடகு கடை இங்கே பணத்தைப் பெறுங்கள் 594 00:33:27,841 --> 00:33:32,054 நாங்கள் தங்கத்தை வாங்குகிறோம் 595 00:33:32,137 --> 00:33:36,266 என்னிடம் ஒரு மில்லியன் டாலர் இரகசியம் இருக்கிறது 596 00:33:36,350 --> 00:33:38,810 அது என்னவென்று உன்னிடம் சொல்ல முடியாது 597 00:33:38,894 --> 00:33:42,314 அதை என்னிடமே வைத்திருக்கிறேன் 598 00:33:42,397 --> 00:33:44,733 நான் அதைச் சொல்லிவிட மாட்டேன் 599 00:33:48,320 --> 00:33:50,531 பௌலா - ஆகஸ்ட் 2024-இல் மார்ஜினில் வேலையைத் தொடங்கினார் 600 00:33:50,614 --> 00:33:52,157 8 வயது ஹேஸலின் அம்மா விவாகரத்தானவர் 601 00:33:52,741 --> 00:33:56,453 அதை எனக்குள் வைத்திருக்க எனக்குத் தைரியம் இருக்கிறது என்று நம்புகிறேன் 602 00:33:57,371 --> 00:34:00,624 விட்டுக்கொடுக்க மாட்டேன் மற்றும் வெளியே சொல்ல மாட்டேன் 603 00:34:03,794 --> 00:34:05,379 இதற்கு நீங்கள் எவ்வளவு தருவீர்கள்? 604 00:34:06,255 --> 00:34:11,051 கொஞ்சம் பக்கத்தில் வா அதை உன் காதில் கிசுகிசுப்பேன் 605 00:34:11,844 --> 00:34:14,554 நீ உண்மையிலேயே தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், அன்பே 606 00:34:14,638 --> 00:34:15,806 இரண்டாயிரம்? 607 00:34:15,889 --> 00:34:19,226 அதை உன் காதில் கிசுகிசுப்பேன் 608 00:34:19,726 --> 00:34:23,981 ஒருவேளை நான் மறந்திருப்பேன் நான் என்ன சொல்ல வந்தேன் 609 00:34:24,063 --> 00:34:28,443 ஆனால் கொஞ்சம் பக்கத்தில் வா எப்படியோ உன் காதில் கிசுகிசுக்கிறேன் 610 00:34:28,527 --> 00:34:30,027 ஸ்கேம்பாய்: உடலுறவு, கொலை, மற்றும் ஒரு சிங்கிள் மாம் 611 00:34:32,197 --> 00:34:33,532 எப்படியோ 612 00:34:35,993 --> 00:34:39,871 நீ மீண்டும் மீண்டும் கேட்கலாம் 613 00:34:39,955 --> 00:34:43,583 ஆனால் நான் சொல்லத் தயாராக இல்லை 614 00:34:44,208 --> 00:34:47,504 ஏனென்றால் உன் கவனமெல்லாம் என்னிடம் இருக்கிறது இந்த உணர்வு 615 00:34:47,588 --> 00:34:49,715 - அதன் விலை என்ன? - காற்றில் பரவியிருக்கிறது 616 00:34:49,797 --> 00:34:52,967 எனக்கு அது தேவைப்படும் வரை என்னால் அதை வைத்திருக்க முடியும் 617 00:34:53,051 --> 00:34:57,514 அது ஒரு மர்மமாக இருக்கும் வரை உன் முழு கவனத்தையும் பெறுவேன் 618 00:36:34,820 --> 00:36:36,738 வசனத் தமிழாக்கம் அருண்குமார்