1 00:00:08,800 --> 00:00:11,136 ஹாய். நான் பௌலா சாண்டர்ஸுக்காக வாங்க வந்திருக்கிறேன். 2 00:00:11,220 --> 00:00:12,679 சரி. 3 00:00:15,891 --> 00:00:17,309 ஆந்தைகள் வெல்லட்டும்! 4 00:00:17,392 --> 00:00:18,602 அழகான எழுத்து வடிவம். 5 00:00:19,478 --> 00:00:20,479 கேக் வாங்கு 6 00:00:21,271 --> 00:00:22,523 பார்ட்டி பீப்பிள் 7 00:00:23,732 --> 00:00:25,692 அலங்கார ஃபாயில் திரை 8 00:00:25,776 --> 00:00:26,860 அலங்காரப் பொருட்களை வாங்கு 9 00:00:30,447 --> 00:00:31,490 காகித தட்டுகள் 10 00:00:35,577 --> 00:00:36,662 பலூன்கள் 11 00:00:45,712 --> 00:00:46,713 ஆம். 12 00:00:46,797 --> 00:00:49,383 துப்பாக்கிச் சுடக் கற்றுக்கொள் 13 00:01:11,530 --> 00:01:12,531 ஜெரியின் இயர்பட்ஸ் 14 00:01:14,783 --> 00:01:16,159 பேட்டரி 12 சதவிகிதத்தில் இருக்கிறது, பௌலா. 15 00:01:16,243 --> 00:01:18,078 அவள் இன்னும் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறாள். என்ன செய்ய விரும்புகிறீர்கள்? 16 00:01:18,161 --> 00:01:20,622 அடக் கடவுளே. ஒரு பீட்சா கட்டர் மூலம் என் மணிக்கட்டை வெட்ட விரும்புகிறேன். 17 00:01:20,706 --> 00:01:22,958 "குளூட்டன் குறைக்கப்பட்டது" என்றால் என்ன கருமம்? 18 00:01:23,041 --> 00:01:26,128 அதிக குளூட்டன் கொல்லும் என்றால், கொஞ்சம் குறைவானது குருடாக்கிவிடாதா? 19 00:01:26,211 --> 00:01:28,672 கவனம் செலுத்துங்கள். தங்கும் விடுதியில் இருந்த பெண் கொலையாளியை அழைத்தாள்தானே? 20 00:01:28,755 --> 00:01:30,757 நாம் எப்படியாவது அவள் ஃபோனைக் கண்டுபிடித்தால், ஒருவேளை அவனைக் கண்டுபிடிக்கலாம். 21 00:01:30,841 --> 00:01:33,135 ஆம். உங்கள் அபத்தமான பீட்சா பார்ட்டியை மறந்துவிடுங்கள், சரியா? 22 00:01:33,218 --> 00:01:35,012 சொல்லப் போனால், நம் இருவருக்குமே அங்கே அழைப்பு இல்லை. 23 00:01:35,095 --> 00:01:38,015 உனக்கு எட்டு வயதாக இருந்து, சென்டர்-மிட்டில் விளையாடுபவனாக இருந்தால், அழைப்பு வந்திருக்கும். 24 00:01:38,098 --> 00:01:39,224 உண்மையில் இது வெறும்… 25 00:01:40,434 --> 00:01:43,187 இந்த "அபத்தமான பார்ட்டி" உண்மையில் ரொம்ப முக்கியம், 26 00:01:43,270 --> 00:01:45,147 ஏனென்றால் அது நிஜமாகவே நன்றாக நடக்க வேண்டும், 27 00:01:45,230 --> 00:01:47,608 அப்போதுதான் நான் எவ்வளவு அற்புதமான அம்மா என்று எல்லாரும் பாராட்டுவார்கள், 28 00:01:47,691 --> 00:01:51,528 அப்போதுதான் கார்ல் என் மகளை அந்தத் தொலைதூர கௌண்டிக்குக் கூட்டிப் போக மாட்டான். 29 00:01:52,362 --> 00:01:53,363 பதினோரு சதவிகிதம். 30 00:01:53,906 --> 00:01:55,407 இருவரும் எனக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறீர்கள். 31 00:01:55,490 --> 00:01:56,825 என் வயிறு ஏதோ செய்கிறது. என்னால் அதை உணர முடிகிறது. 32 00:01:56,909 --> 00:01:58,202 நாம் வேலையைப் பிரித்துக்கொண்டால் என்ன? 33 00:01:58,285 --> 00:01:59,620 அருமை, ஆம். அது ஒரு நல்ல யோசனை. 34 00:01:59,703 --> 00:02:01,205 நீங்கள் அழகான குழந்தைகள் இருக்கும் பார்ட்டிக்குப் போங்கள், 35 00:02:01,288 --> 00:02:03,207 ஜெரியும் நானும் அந்த ஆபத்தான பைத்தியக்காரனைக் கண்டுபிடிப்போம். 36 00:02:03,290 --> 00:02:05,709 - நியாயமாகத் தெரிகிறது. பொறுங்கள், அது அருமை. - நாங்கள் போகிறோம். 37 00:02:06,293 --> 00:02:08,336 நன்றி. உங்களுக்கு ரொம்ப நன்றி. 38 00:02:08,419 --> 00:02:11,548 அதாவது, நம்மிடம் இருக்கும் ஒரே தடையம் இதுதான், அதோடு நான்… 39 00:02:13,050 --> 00:02:15,260 நீங்கள் இல்லாமல் என்னால் இதைச் செய்யவே முடியாது. 40 00:02:16,845 --> 00:02:17,846 பத்திரமாக இருங்கள். 41 00:02:18,931 --> 00:02:21,683 - வா. போகலாம். - வற்புறுத்துவது எனக்குப் பிடிக்காது, சரியா? 42 00:02:21,767 --> 00:02:24,728 என் மனநல மருத்துவர் எனக்கு எதிர்ப்பு மனப்பான்மை கோளாறு இருப்பதாகச் சொல்கிறார். 43 00:02:24,811 --> 00:02:26,980 வற்புறுத்தினால், நேர்மாறாகச் செய்ய வேண்டும் என்று எனக்குத் தோன்றும். 44 00:02:27,064 --> 00:02:28,899 அற்புதம். அப்படியென்றால் அவசரப்படதே. 45 00:02:28,982 --> 00:02:31,401 ஹா, ஹா, ஹா. அது அப்படி வேலை செய்யாது. 46 00:02:32,236 --> 00:02:33,987 ஆம், உண்மையில், அது வேலை செய்கிறது. 47 00:02:36,281 --> 00:02:37,324 - போகலாம். - நல்லது. 48 00:02:50,462 --> 00:02:53,465 சிக்கன் நக்கட்கள் 49 00:02:58,512 --> 00:02:59,513 தி சன்னிசைட் பள்ளி 50 00:03:04,518 --> 00:03:05,894 ஸ்க்விஷி ஃப்ரூட் அசல் பழங்களால் தயாரிக்கப்பட்டது 51 00:03:55,694 --> 00:03:57,404 திறமையைக் காட்டும் நிகழ்ச்சி 52 00:03:57,487 --> 00:03:59,114 ஹேஸல் பள்ளிக்குப் பிறகு கூட்டிவரும் நேரம் - மதியம் 2:30 மணி 53 00:04:39,154 --> 00:04:41,114 வீட்டில் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. 54 00:04:41,198 --> 00:04:44,535 கட்டுமானப் பொருட்களுக்குப் பணம் செலுத்திய அந்தக் கணக்கின் உரிமையாளரான கேம் பாய் 55 00:04:44,618 --> 00:04:47,204 இப்போது சவக்கிடங்கில் கூலாக இருக்கிறான், அதனால் அவன் இங்கே இருக்க வாய்ப்பில்லை. 56 00:04:47,287 --> 00:04:49,289 அந்த கிண்டல். எரிச்சலூட்டுகிறது. 57 00:04:50,207 --> 00:04:52,918 - அந்தப் பூனைக்கு இன்னும் பெயர் வைக்கவில்லையா? - இல்லை, எதுவும் சரியாக அமையவில்லை. 58 00:04:53,418 --> 00:04:54,628 ஸ்டெல்லா என்று வைத்துப் பார். 59 00:04:55,420 --> 00:04:56,421 முட்டாள். 60 00:04:56,505 --> 00:04:59,466 என்ன? உன் முன்னாள் காதலி திரும்பி வந்தால்தான், அது சங்கடமாக இருக்கும். 61 00:04:59,550 --> 00:05:00,551 அமைதியாக இருங்கள். 62 00:05:01,051 --> 00:05:04,263 நிஜமாகவா? நடுராத்திரியில் அவள் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவதும், அவள் வராமல் இருப்பதும் 63 00:05:04,346 --> 00:05:05,639 உனக்கு நன்றாகப் பழக்கப்பட்டதுதான். 64 00:05:06,390 --> 00:05:09,560 மேல் மாடியில் இருந்து ஆரம்பிப்போம். நீங்கள் முன்னால் செல்லுங்கள். நான் உங்களைப் பாதுகாப்பேன். 65 00:05:09,643 --> 00:05:11,186 மறுபடியும் கிண்டல் செய்கிறாய். 66 00:05:14,481 --> 00:05:16,441 தங்கும் விடுதி அபார்ட்மெண்ட்கள் 67 00:05:18,569 --> 00:05:20,195 டிங்-டாங், நியூயார்க் காவல்துறை 68 00:06:08,535 --> 00:06:10,037 போலீஸ், கதவைத் திறங்கள்! 69 00:06:22,049 --> 00:06:23,133 இங்கே ஒரு சடலம் இருக்கிறது. 70 00:06:25,302 --> 00:06:26,303 வலதுபுறம் இருக்கும் அறை. 71 00:06:29,097 --> 00:06:30,766 - யாரும் இல்லை. - கழிவறை. 72 00:06:33,143 --> 00:06:34,144 யாரும் இல்லை. 73 00:06:42,653 --> 00:06:43,779 என்ன கொடுமை இது? 74 00:06:54,998 --> 00:06:56,124 மேலிடத்திற்குத் தெரிவிப்பது நல்லது. 75 00:07:11,390 --> 00:07:13,559 - அவன் சிறையிலிருந்து தப்பித்துவிட்டான். - கடவுளே! 76 00:07:13,642 --> 00:07:15,894 - ஆம். - அந்தப் பலூன்களை உள்ளே இழு. அப்படித்தான். 77 00:07:15,978 --> 00:07:18,981 அம்மா, எனக்கு முன்பே ரொம்ப பசியாக இருந்தது, நீங்கள் எனக்கு ஃபுட் கோர்ட்டில் 78 00:07:19,064 --> 00:07:21,859 எதுவுமே வாங்கித் தரவில்லை என்பதால் ரொம்பத் தவித்துப் போய்விட்டேன். 79 00:07:21,942 --> 00:07:23,819 - என்னால் எல்லாவற்றையும் தூக்க முடியவில்லை. - நான் சிறுநீர் கழிக்க வேண்டும். 80 00:07:23,902 --> 00:07:24,903 சரி. 81 00:07:32,369 --> 00:07:34,830 - கடவுளே. அம்மா! - ஹேஸல். 82 00:07:36,164 --> 00:07:37,249 ஹேஸல்! 83 00:07:39,251 --> 00:07:41,170 செல்லம், என்ன நடந்தது? நீ நலமா? 84 00:07:46,341 --> 00:07:47,593 அடடா. 85 00:07:48,594 --> 00:07:51,680 கடவுளே. என்னை பயமுறுத்திவிட்டாய். 86 00:07:59,438 --> 00:08:01,607 அம்மா! அதைக் கொன்றுவிட்டீர்கள். 87 00:08:02,149 --> 00:08:04,776 கரப்பான்பூச்சியைக் கொல்ல முடியாது, சரியா? 88 00:08:04,860 --> 00:08:07,321 அது ஒருவேளை அங்கே தன் லட்சக்கணக்கான நண்பர்களுடன் சேர்ந்து, உலகத்தை எப்படி 89 00:08:07,404 --> 00:08:09,198 ஆள்வது என்று திட்டம் போட்டுக்கொண்டிருக்கும். அது பரவாயில்லை. 90 00:08:09,281 --> 00:08:10,490 லட்சக்கணக்கிலா? 91 00:08:11,366 --> 00:08:12,826 அவை கழிவறை வழியாக மேலே ஊர்ந்து வருமா? 92 00:09:01,792 --> 00:09:02,793 சரி. 93 00:09:14,304 --> 00:09:15,973 அருமையான வேலை செய்தாய், என் செல்லமே. 94 00:09:16,056 --> 00:09:17,099 நன்றி. 95 00:09:19,726 --> 00:09:20,727 சரி. 96 00:09:22,813 --> 00:09:24,314 - சரி. ஹாய். - ஹேய். 97 00:09:24,398 --> 00:09:26,149 - ஹேஸல். - சில்வ்… 98 00:09:26,859 --> 00:09:29,444 மன்னித்துவிடுங்கள். தெரியும். எப்போதும் சீக்கிரமாக வந்துவிடுவேன். 99 00:09:29,528 --> 00:09:31,572 நீங்கள் அதை அன்பானதாகப் பார்க்கலாம் அல்லது எனக்கு விவாகரத்து கொடுக்கலாம். 100 00:09:33,115 --> 00:09:34,950 உங்களுக்கு உதவி தேவைப்படலாம் என்று நினைத்தேன். 101 00:09:35,534 --> 00:09:37,369 அல்லது இது அதிகமாக 102 00:09:37,452 --> 00:09:39,830 அம்மாக்களுக்கும் மகள்களுக்குமானது, ஆண்கள் என்றால் அலர்ஜி என்று தோன்றினால், 103 00:09:39,913 --> 00:09:40,998 சில்வியாவை விட்டுவிட்டுப் போகட்டுமா? 104 00:09:41,081 --> 00:09:43,834 இல்லை. பிரச்சினை இல்லை. அதற்கான சர்ச்சைக்குரிய தடுப்பூசியை முன்பே போட்டுவிட்டேன். 105 00:09:43,917 --> 00:09:46,712 - எனவே, ஆம். அது அருமையாக இருக்கும். - சரி. 106 00:09:46,795 --> 00:09:48,505 உள்ளே வாருங்கள். சரி, நான் பதட்டத்தில் இருக்கிறேன். 107 00:10:02,936 --> 00:10:06,356 சில விஷயங்கள். நாம் சிலரை சந்திக்க வேண்டும். கார்ல், மேலொரி, இது ஃபிராங்க் பட்கின்ஸ். 108 00:10:06,440 --> 00:10:09,234 இவர்தான் உங்கள் வழக்கில் வேலை செய்யும் தனியார் துப்பறிவாளர். 109 00:10:09,318 --> 00:10:11,737 - ஹாய். - நாம் துப்பறிவாளரை வேலைக்கு வைத்திருக்கிறோமா? 110 00:10:11,820 --> 00:10:14,031 ஆம். அது என் யோசனைதான். எல்லோரும் தனியார் துப்பறிவாளரை வேலைக்கு வைக்கிறார்கள். 111 00:10:14,114 --> 00:10:16,158 - எல்லோரும் துப்பறிவாளரை வேலைக்கு வைக்கிறார்களா? - ஆம். 112 00:10:16,241 --> 00:10:18,660 ஃபிராங்க் ரொம்ப திறமையானவர். என் முன்னாள் மனைவியிடம் கேட்டுப் பாருங்கள். 113 00:10:18,744 --> 00:10:20,704 அவள் என்னிடம் இருப்பதாக நினைத்த எல்லாவற்றிலும் பாதி அவளுக்குப் போய்விட்டது. 114 00:10:23,540 --> 00:10:25,292 ஃபிராங்க், உங்களிடம் என்ன தகவல் இருக்கிறது? 115 00:10:25,375 --> 00:10:27,961 கடந்த சில நாட்களாக, பௌலா சாண்டர்ஸைக் கண்காணித்து வருகிறேன். 116 00:10:28,045 --> 00:10:30,797 அவரது வீட்டைக் கண்காணிக்கிறேன். இதுவரை, பெரிதாக எதுவும் சிக்கவில்லை. 117 00:10:30,881 --> 00:10:33,050 அவர் போதைப்பொருள் பயன்படுத்துவதோ அதிகமாக மது அருந்துவதோ இல்லை. 118 00:10:35,219 --> 00:10:36,428 வேலைக்குப் போகிறார். 119 00:10:37,513 --> 00:10:39,848 கடைகளுக்குப் போகிறார். கால்பந்து பயிற்சி கொடுக்கிறார். 120 00:10:40,349 --> 00:10:42,434 - இரவு 11 மணிக்கு தூங்கப் போகிறார். - எனவே அவ்வளவுதானா? 121 00:10:42,518 --> 00:10:45,187 அவள் யாரிடமும் வினோதமாக பேசவில்லையா? விசித்திரமான சந்திப்புகள் எதுவும் இல்லையா? 122 00:10:45,270 --> 00:10:46,438 நான் இன்னும் முடிக்கவில்லை. 123 00:10:46,522 --> 00:10:49,066 அவர் வாழ்க்கையில் ஒரு புதிய காதலன் இருப்பதாகத் தெரிகிறது. 124 00:10:50,275 --> 00:10:52,402 இன்று பௌலாவின் அபார்ட்மெண்டில் இவன் மட்டும் தனியாக இருந்தான். 125 00:10:53,070 --> 00:10:56,156 நான் பிறகு மீண்டும் போகிறேன். இன்னும் தெளிவான படத்தை எடுக்க முயற்சிக்கிறேன். 126 00:10:56,240 --> 00:10:59,284 அது தீவிரமானது என்று நினைக்கிறேன். அவனிடம் வீட்டின் சாவி இருக்கிறது. 127 00:10:59,368 --> 00:11:00,661 - என்ன அது? - என்ன? 128 00:11:00,744 --> 00:11:03,956 - புதிய காதலனைப் பற்றி உன்னிடம் சொன்னாளா? - இல்லை, அவள் என்னிடம் எதையும் சொல்லவில்லை. 129 00:11:04,039 --> 00:11:05,999 அவன் முகம் தெளிவாக இல்லை. 130 00:11:06,083 --> 00:11:09,670 உன் மகளின் வீட்டுச் சாவியை ஏதோ ஒரு தெரியாத நபரிடம் அவள் கொடுத்திருக்கக்கூடாது. 131 00:11:09,753 --> 00:11:11,046 - இல்லை. - பாருங்கள், நல்ல விஷயம் என்னவென்றால், 132 00:11:11,129 --> 00:11:13,966 - இது நம் வழக்கை வலுப்படுத்த மட்டுமே உதவும். - நம் வழக்கை வலுப்படுத்துமா? 133 00:11:14,049 --> 00:11:16,802 பாருங்கள், நான் சட்டம் படிக்கவில்லை, ஆனால் இது எப்படி நம்பகமான ஆதாரம் இல்லை? 134 00:11:16,885 --> 00:11:19,513 இது வழக்கைப் புரட்டிப்போட வேண்டும். இது தொலைக்காட்சியில் வர வேண்டும். 135 00:11:19,596 --> 00:11:21,723 இது அனுபவசாலிக்கும் கத்துக்குட்டிக்கும் நடக்கும் சண்டைப் போன்றது. 136 00:11:21,807 --> 00:11:23,559 - இது வெளிப்படையானது. - சரி. 137 00:11:23,642 --> 00:11:26,436 இது பெரிய விஷயம். இந்த வழக்கில் நாம் எப்படி வெற்றி பெறாமல் இருக்க முடியும்? 138 00:11:27,855 --> 00:11:30,607 நம் வாய்ப்புகளைப் பற்றி எனக்கு ரொம்ப நல்ல உணர்வு ஏற்படுகிறது, சரியா? 139 00:11:30,691 --> 00:11:33,110 ஒரு நொடி கொடுக்க முடியுமா? இங்கே ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். 140 00:11:33,193 --> 00:11:34,194 சரி. 141 00:11:36,488 --> 00:11:38,407 - உனக்கு என்ன ஆனது? - ஒன்றுமில்லை. 142 00:11:38,490 --> 00:11:40,826 - நீ ரொம்ப பதட்டமாக இருக்கிறாய்… - இது அழுத்தமான தருணம். எனக்குத் தெரியும். 143 00:11:40,909 --> 00:11:41,910 …கடந்த இரண்டு நாட்களாக. 144 00:11:42,911 --> 00:11:44,246 சரி… சரி, அது… 145 00:11:46,915 --> 00:11:47,916 என்ன? 146 00:11:48,792 --> 00:11:49,960 அது ஒன்றுமில்லை. 147 00:11:50,043 --> 00:11:51,253 சரி. 148 00:11:52,296 --> 00:11:54,047 நிறைய காஃபி குடித்துவிட்டேன். 149 00:11:54,840 --> 00:11:58,927 ஆம், இரண்டு இருமடங்கு எஸ்பிரெசோக்கள், அதனால் நான்கு மடங்கு எஸ்பிரெசோக்களைக் குடித்திருக்கிறேன். 150 00:11:59,011 --> 00:12:01,805 உன் வயதுக்கு அவ்வளவு குடிக்கக்கூடாது. இனி அப்படிச் செய்யாதே. 151 00:12:01,889 --> 00:12:04,224 சரி, நான் உங்களுக்கு விசாரணை பற்றி சொல்கிறேன், சரியா? 152 00:12:04,308 --> 00:12:08,228 நமக்கு நார்லெஸ்கி இருப்பதால் ரொம்ப சந்தோஷம், ஆனால் பழைய வெற்றிகளால் திருப்தியடைய விரும்பவில்லை. 153 00:12:08,312 --> 00:12:09,938 இது எந்த விதத்திலும் தோற்காததை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன், சரியா? 154 00:12:10,022 --> 00:12:12,107 அதனால், ஆவணங்களை தயார் செய்வதைப் பற்றி பேசுவோம், சரியா? 155 00:12:13,150 --> 00:12:14,985 நம்மிடம் பள்ளி நிர்வாகம் கொடுத்த கடிதம் இருக்கிறது. 156 00:12:15,068 --> 00:12:16,570 வங்கி ஸ்டேட்மெண்ட்கள் இருக்கின்றன. 157 00:12:16,653 --> 00:12:19,156 கார்ல், உங்களிடமிருந்து வங்கி ஸ்டேட்மெண்ட் தேவை. புரிந்ததா? 158 00:12:19,239 --> 00:12:21,074 உங்களுடைய வேலைக்கான கடிதம் தேவை, சரியா? 159 00:12:21,158 --> 00:12:22,618 - அதைக் கொடுக்கிறீர்களா? - ஆம். 160 00:12:22,701 --> 00:12:24,578 நல்லது. நீங்கள் 161 00:12:24,661 --> 00:12:28,207 குழந்தை மனநல மருத்துவரைப் பார்க்க ஏற்பாடு செய்கிறேன். அவர் அற்புதமானவர். 162 00:12:34,046 --> 00:12:35,964 வெறித்தனமாக வெட்டுவது போல தெரிகிறது. 163 00:12:36,048 --> 00:12:37,799 தெரியுமா, ஒரு முறை சாப்டு நிகழ்ச்சியில் பங்கேற்றேன். 164 00:12:37,883 --> 00:12:39,259 என்ன? நிஜமாகவா? 165 00:12:39,343 --> 00:12:43,305 ஆம். போட்டியாளராக இல்லை, ஆனால் பார்வையாளராக இருந்தேன். 166 00:12:43,388 --> 00:12:45,182 சரி, அதுவும் உண்மை இல்லை. 167 00:12:45,265 --> 00:12:47,267 உண்மையில் சாப்டு நகழ்ச்சியை பார்த்ததுகூட இல்லை. பொய் சொன்னேன். 168 00:12:47,351 --> 00:12:48,685 மாயாஜால எட்ச் ஏ ஸ்கெட்ச் திரை 169 00:12:50,687 --> 00:12:52,272 ஆனால் என்னைக் கவர அதைச் செய்தீர்கள். 170 00:12:52,356 --> 00:12:55,150 ஓ, இல்லை. இது என்னையறியாமல் நடப்பது. 171 00:12:56,443 --> 00:12:59,530 என்ன தெரியுமா? நீங்கள் கூர்மையான கத்தியைப் பயன்படுத்த வேண்டும். 172 00:12:59,613 --> 00:13:02,491 - உங்களிடம் கூர்மையான கத்தி இருக்கிறதா? - ஆம். என்னிடம் ஒரு ஃப்ருஸ்டாஃப் இருக்கிறது. 173 00:13:02,574 --> 00:13:03,617 நான் ஒரு ஃப்ருஸ்டாஃப் வைத்திருந்தேன். 174 00:13:03,700 --> 00:13:06,537 - அப்படியா? அதை விவாகரத்தில் இழந்துவிட்டீர்களா? - ஆம். 175 00:13:07,162 --> 00:13:08,664 குறைந்தபட்சம் நியூட்ரிபுல்லட் ப்ளெண்டரை வைத்துக்கொண்டேன். 176 00:13:08,747 --> 00:13:10,123 நான் அதை எப்போதும் பயன்படுத்தவில்லை. 177 00:13:10,207 --> 00:13:11,917 முக்கியமான விஷயம் என்னவென்றால், அவள் அதைப் பயன்படுத்த முடியாது. 178 00:13:12,000 --> 00:13:13,001 அது சரிதான். 179 00:13:15,379 --> 00:13:17,297 அந்தக் கத்தி எங்கே என்று தெரியவில்லை. 180 00:13:18,590 --> 00:13:19,591 பார்ட்டி ஆரம்பிக்கிறது. 181 00:13:19,675 --> 00:13:21,343 - நான் உங்களைத் தொந்தரவு செய்யாமல் கிளம்ப வேண்டும். - ஆம். 182 00:13:21,426 --> 00:13:22,594 குழப்பத்திற்கு வருந்துகிறேன். 183 00:13:22,678 --> 00:13:24,054 சரி. 184 00:13:24,137 --> 00:13:25,138 பை, செல்லம்! 185 00:13:26,181 --> 00:13:27,266 நன்றி. 186 00:13:27,349 --> 00:13:29,726 - ஆம், நிச்சயமாக. ஆம். - ஆம். சரி. 187 00:13:37,442 --> 00:13:40,237 - ஹேய்! இருவரும் ரொம்ப ஜாலியாக இருங்கள். - சரி! 188 00:13:40,320 --> 00:13:42,823 - எல்லோருக்கும் ஹாய். - ஓ, ஹாய்! 189 00:13:42,906 --> 00:13:44,783 சரி. சரி, வழி விடுங்கள். 190 00:13:44,867 --> 00:13:45,868 சரி. 191 00:13:45,951 --> 00:13:47,286 - இது உங்களுக்காக. - ஆஹா! நன்றி. 192 00:13:47,369 --> 00:13:48,370 குட் லக். 193 00:13:48,453 --> 00:13:51,373 - ஹாய். - வீட்டில் ஸ்டீவ், ம்? 194 00:13:51,456 --> 00:13:52,875 ஆம். 195 00:13:53,792 --> 00:13:55,794 - ஹேய். - அளவுக்கதிகமான ஒயின் கொண்டு வந்தேன். 196 00:14:03,260 --> 00:14:04,553 நாம் அதற்கு மேல் இருக்கிறோம் என்கிறது. 197 00:14:04,636 --> 00:14:06,847 நம் புள்ளியும் அந்தப் புள்ளியும் ஒரே புள்ளியாகக் காட்டுகிறது. 198 00:14:06,930 --> 00:14:07,931 அது எங்கே? 199 00:14:11,643 --> 00:14:12,769 அங்கே. 200 00:14:13,353 --> 00:14:14,605 ஆம். 201 00:14:14,688 --> 00:14:16,690 எங்கே போகிறாய்? என்ன நடக்கிறது? 202 00:14:16,773 --> 00:14:19,526 ஹேய். அடடா. மெதுவாக. 203 00:14:19,610 --> 00:14:21,403 ஏன்? 3 சதவிகிதம்தான் இருக்கிறது. 204 00:14:21,486 --> 00:14:23,989 அது ஆஃப் ஆகிவிடும், பிறகு நமக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்காது. 205 00:14:31,580 --> 00:14:33,207 ஹேய், கையை உள்ளே விட்டு, அதைத் திற. 206 00:14:33,290 --> 00:14:35,792 - நீ கையை உள்ளே விட்டு, அதைத் திற. - இல்லை, உன் கைகள் ரொம்ப நீளமானவை. 207 00:14:35,876 --> 00:14:38,337 என் கைகள் இயல்பானவை. இவை சாதாரண ஆணின் கைகள். 208 00:14:38,420 --> 00:14:40,547 நீ ஒரு வினோதமாக அகலமாக இருக்கும் ராட்சதன். 209 00:14:40,631 --> 00:14:43,342 எனவே அந்தக் கையை உள்ளே விட்டு, அதைத் திற. செய். 210 00:14:49,515 --> 00:14:50,974 - அடச்சே. - அடக் கடவுளே. 211 00:14:53,602 --> 00:14:55,062 கேடுகெட்ட நாய். 212 00:14:55,145 --> 00:14:57,147 யார் இப்படி நாயை காரில் விட்டுவிட்டுப் போவர்கள்? 213 00:14:57,231 --> 00:14:58,857 ஹாய், இளவரசியே. 214 00:15:01,527 --> 00:15:02,778 அது உன் உதடுகளைக் கடிக்கும் என்று நம்புகிறேன். 215 00:15:02,861 --> 00:15:04,446 உன்னால் உள்ளே ஃபோனைத் தேட முடியுமா? 216 00:15:13,705 --> 00:15:15,791 - சீக்கிரம்! - நான் பார்க்கிறேன். 217 00:15:16,416 --> 00:15:17,417 இல்லை. 218 00:15:18,669 --> 00:15:20,963 - அதைக் கண்டுபிடித்தாயா? - கண்டுபிடித்துவிட்டேன். 219 00:15:22,047 --> 00:15:23,131 சரி. வா. 220 00:15:24,383 --> 00:15:25,384 வா. 221 00:15:26,301 --> 00:15:27,719 சரி. போ. சரி. 222 00:15:27,803 --> 00:15:29,513 பொறு. என் இயர்பட். 223 00:15:29,596 --> 00:15:32,140 இல்லை. அவள் எந்த நொடியும் வெளியே வருவாள். எனக்கும் ரேபிஸ் வந்திருக்கலாம். 224 00:15:32,224 --> 00:15:35,018 நான் வயிற்றில் ஒரு டஜன் ஊசிகளைப் போட வேண்டும், அல்லது வாயில் நுரை தள்ளிவிடும். 225 00:15:37,062 --> 00:15:38,021 வுட்க்ளென் அபார்ட்மெண்ட்கள் 226 00:15:45,529 --> 00:15:47,948 அதைப் பார்த்தீர்களா? பலூன் அப்படியே பறந்துப் போனது. 227 00:15:49,449 --> 00:15:50,450 ஹேய். 228 00:15:53,704 --> 00:15:56,081 நான் திரும்பி வந்துவிட்டேன். சிவப்பு ஒயினுடன் வருகிறேன். 229 00:15:56,164 --> 00:15:58,375 ஓ. சீஸுக்கான சாஸ் அளவு பிரமாதம். 230 00:15:58,458 --> 00:15:59,459 நல்ல வேலை செய்தாய். 231 00:15:59,543 --> 00:16:03,755 சரி, சிக்கன், சாசேஜ், M&M'S. நீ நிச்சயமாக வாந்தியெடுக்கப் போகிறாய். 232 00:16:04,631 --> 00:16:06,633 எமிலி, நீ சைவம் என்று உன் அம்மா சொன்னதாக நினைக்கிறேன். 233 00:16:06,717 --> 00:16:09,344 - நீ பெப்பரோனி சாப்பிடுகிறாய். - பெப்பரோனி மிளகில் இருந்து தயாரிக்கப்படுகிறது. 234 00:16:09,428 --> 00:16:10,929 இது ஒரு பொதுவான தவறானக் கருத்து. 235 00:16:11,763 --> 00:16:13,140 அதற்குப் பதிலாக நீ ஏன் இதைப் பயன்படுத்தக்கூடாது? 236 00:16:13,223 --> 00:16:16,143 - ஓ, இல்லை! - நிறைய கொட்டிவிட்டாள். 237 00:16:16,226 --> 00:16:17,644 - அச்சச்சோ. - உங்களிடம் துண்டு இருக்கிறதா? 238 00:16:20,689 --> 00:16:22,900 பரவாயில்லை. தெரியுமா, எனக்கு இந்த விரிப்பைப் பிடிக்காது. 239 00:16:22,983 --> 00:16:25,569 நீ எனக்கு ஒரு உதவி செய்திருக்கிறாய். சரி. 240 00:16:27,654 --> 00:16:28,697 என்ன ஒரு பேரழிவு. 241 00:16:28,780 --> 00:16:32,159 விளையாடுகிறீர்களா? அவர்கள் எவ்வளவு ஜாலியாக இருக்கிறார்கள் என்று பாருங்கள். 242 00:16:32,868 --> 00:16:36,788 நான் கொஞ்சம் போதையாகியிருக்கலாம், ஆனால் நீங்கள் இதைப் பிரமாதப்படுத்துகிறீர்கள் என்று நினைக்கிறேன். 243 00:16:36,872 --> 00:16:39,708 அவர்கள் இன்னும் சாப்பிட வேண்டும். நாம் இன்னும் கடினமான சூழலைத் தாண்டவில்லை. 244 00:16:40,334 --> 00:16:42,085 என்ன? அருமையாக செயல்படுகிறீர்கள். 245 00:16:56,225 --> 00:16:57,768 ஹேய். என்னைப் பார்த்து நிறுத்தாதீர்கள். 246 00:17:00,521 --> 00:17:04,733 "முடியும்போதே ரோஜா மொட்டுகளைச் சேகரியுங்கள், காலம் வேகமாக கடந்துவிடும். 247 00:17:05,692 --> 00:17:10,030 இன்று மலர்ந்திருக்கும் அதே மலர் நாளை வாடிவிடும்." 248 00:17:12,406 --> 00:17:15,035 வாழ்க்கை குறுகியது. எதிர்பாராதது நடக்கும். 249 00:17:16,494 --> 00:17:17,788 நிச்சயமாக. நன்றி. 250 00:17:18,329 --> 00:17:20,457 இளமையாக இருக்கிறீர்கள். நீங்கள் பார்ப்பீர்கள். 251 00:17:22,835 --> 00:17:23,836 அருமை. 252 00:17:24,920 --> 00:17:28,423 வாழ்க்கையின் துயரத்தையும் திகிலையும் மதிப்புக்குரியதாக்குவது 253 00:17:28,507 --> 00:17:30,342 விரும்பும் நபரை முத்தமிடுவதுதான். 254 00:17:32,052 --> 00:17:32,970 அதனால்… 255 00:17:35,973 --> 00:17:36,974 தொடருங்கள். 256 00:17:39,601 --> 00:17:40,602 முத்தமிடுங்கள். 257 00:17:42,479 --> 00:17:43,897 - என்ன? - முத்தமிடுங்கள். 258 00:17:55,534 --> 00:17:56,743 விளையாடுகிறேன். 259 00:18:01,498 --> 00:18:03,917 அந்த ரோஜா மொட்டுகளைச் சேகரிக்க மறக்காதீர்கள்! 260 00:18:10,841 --> 00:18:12,050 ஷ்மூயி. 261 00:18:12,134 --> 00:18:13,135 ஹேஸல் இதை மறந்துவிட்டாள். 262 00:18:14,511 --> 00:18:16,305 ஷ்மூயி இல்லாத படுக்கை நேரம் என்னும் அணு ஆயுதப் பேரழிவிலிருந்து 263 00:18:16,388 --> 00:18:18,599 என்னைக் காப்பாற்றியிருக்கிறாய். நன்றி. 264 00:18:19,808 --> 00:18:21,101 கொஞ்சம் பீட்சா சாப்பிடுகிறாயா? 265 00:18:21,643 --> 00:18:22,978 அதை நானே செய்தேன். 266 00:18:23,061 --> 00:18:26,190 நன்றாக இருக்கிறது என்று என்னால் சொல்ல முடியாது, ஆனால் நீ இதுவரை சாப்பிடாத 267 00:18:26,273 --> 00:18:27,691 சுவைகளின் கலவைகள் இருக்கின்றன. 268 00:18:27,774 --> 00:18:28,775 பரவாயில்லை. 269 00:18:30,861 --> 00:18:33,280 - என்ன… என்ன ஆனது? - என்ன ஆனதா, என்ன? 270 00:18:33,363 --> 00:18:35,407 எதற்காக உன் கோப நடையை நடக்கிறாய்? 271 00:18:35,490 --> 00:18:38,368 எனக்குத் தெரியாது, ஒருவேளை என்னை காவல் நிலையத்திற்கு அழைத்ததால் இருக்கலாம். 272 00:18:39,161 --> 00:18:41,830 ஆம், நீ ஒரு விபச்சாரம் செய்பவனின் மரணத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறாய். 273 00:18:41,914 --> 00:18:43,749 அதனால், அதனால்தான் என் கோப நடையை நடக்கிறேன். 274 00:18:43,832 --> 00:18:47,294 - விபச்சாரம் செய்பவனா? - மன்னித்துவிடு, ஒரு ஆண் பாலியல் தொழிலாளி 275 00:18:47,377 --> 00:18:49,505 கொல்லப்பட்டிருக்கிறான், அதற்கும் உனக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது. அது பரவாயில்லையா? 276 00:18:49,588 --> 00:18:53,300 இல்லை, எனக்கு இல்லை. எனக்கு இல்லை, சரியா? 277 00:18:53,383 --> 00:18:56,803 இது ஒரு பெரிய தவறான புரிதல், நேர்மையாகச் சொன்னால், அது உன் பிரச்சினை இல்லை. 278 00:18:56,887 --> 00:18:59,431 அது தவறு. அவர்கள் என்னை அழைத்ததால் அது என் பிரச்சினை. 279 00:19:00,516 --> 00:19:03,602 அவர்கள் என்னிடம் முதலில் கேட்டது போர்ட்லேண்ட் பற்றி என்பதை நீ தெரிந்துகொள்ள வேண்டும். 280 00:19:05,270 --> 00:19:07,898 இப்போது, உன் அதிர்ஷ்டம், அவர்கள் என்னை மட்டும் அழைத்தார்கள், மேலொரியை அழைக்கவில்லை, 281 00:19:07,981 --> 00:19:09,399 நான் அவளிடம் பொய் சொல்ல வேண்டியிருந்தது, 282 00:19:09,483 --> 00:19:12,486 ஏனென்றால் என்னைக் காவல் நிலையத்துக்கு அழைத்தது அவளுக்குத் தெரிந்தால், 283 00:19:12,569 --> 00:19:14,530 அவர்கள் என்ன கேட்கிறார்கள் என்று அவளுக்குத் தெரிந்தால், 284 00:19:14,613 --> 00:19:16,448 அவள் என்ன செய்வாள் என்று எனக்குத் தெரியவில்லை. 285 00:19:17,115 --> 00:19:19,743 சரி, நான் சொன்னது போல், அது… அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. 286 00:19:19,826 --> 00:19:22,704 அதோடு அது ஒரு பெரிய முட்டாள்தனமான தவறான புரிதல். 287 00:19:23,705 --> 00:19:25,499 முட்டாள்தனமான தவறான புரிதல். 288 00:19:28,001 --> 00:19:31,839 உன் புதிய காதலனுக்குச் சாவியைக் கொடுத்ததும் முட்டாள்தனமான 289 00:19:31,922 --> 00:19:33,674 - தவறான புரிதலா? - என்ன? 290 00:19:33,757 --> 00:19:35,425 நீ என்ன செய்கிறாய் என்று எனக்குக் கவலையில்லை, நிஜமாகவே எனக்குக் கவலையில்லை. 291 00:19:35,509 --> 00:19:39,513 ஆனால் என் மகள் தூங்கும் வீட்டின் சாவியை நீ யாருக்கு வேண்டுமென்றாலும் கொடுக்கிறாய் என்றால், 292 00:19:39,596 --> 00:19:41,181 அதைத் தெரிந்துகொள்ள நான் தகுதியானவன். 293 00:19:41,265 --> 00:19:44,101 நீ எதைப் பற்றி பேசுகிறாய் என்று நிஜமாகவே எனக்குத் தெரியவில்லையா? 294 00:19:44,184 --> 00:19:46,937 - பொய் சொல்வதை நிறுத்து… - நான் யாரையும் பார்க்கவில்லை. 295 00:19:47,020 --> 00:19:49,398 அவனுடைய புகைப்படங்களைப் பார்த்தேன். 296 00:19:49,481 --> 00:19:52,484 - என்ன பேசுகிறாய்? - ஒரு தனியார் புலனாய்வாளரை நியமித்தோம். 297 00:19:53,110 --> 00:19:54,361 நீங்கள் எதை வேலைக்கு வைத்தீர்கள்? 298 00:19:54,444 --> 00:19:57,072 குழந்தைத்தனமாகப் பேசாதே. எல்லோரும் தனியார் புலனாய்வாளரை நியமிக்கிறார்கள். 299 00:19:57,155 --> 00:20:00,951 நீ இல்லாத நேரத்தில் உன் காதலனை உன் வீட்டில் பார்த்தேன். 300 00:20:01,034 --> 00:20:03,704 உன் சோஃபாவில் உட்கார்ந்திருக்கிறான், உன் ஃபிரிட்ஜை திறந்து பார்க்கிறான், 301 00:20:03,787 --> 00:20:05,247 அவன் அங்கே வசிப்பது போல நடந்துகொள்கிறான். 302 00:20:05,330 --> 00:20:07,332 எனவே அவன் யார்? இது எவ்வளவு தீவிரமானது? 303 00:20:07,416 --> 00:20:10,377 அது சாத்தியமில்லாதது, ஏனென்றால் யாரும் இங்கே வரவில்லை. 304 00:20:11,044 --> 00:20:14,506 புகைப்படங்களைப் பார்த்தேன். அவன் அங்கே இருந்தான், பௌலா. 305 00:20:15,924 --> 00:20:17,009 ச்சே. 306 00:20:22,848 --> 00:20:26,476 நீ என்ன செய்தாலும், தயவுசெய்து, அதை நன்றாக செய். 307 00:20:34,943 --> 00:20:35,944 அம்மா! 308 00:20:36,945 --> 00:20:38,363 அம்மா! 309 00:20:38,447 --> 00:20:42,534 - என் இதய வடிவ பீட்சா ஓவனில் வைக்க தயார். - ஓ, ஆம். சரி, அருமை. 310 00:20:42,618 --> 00:20:44,286 - ஷ்மூயி! - வந்திருப்பது யார் என்று பார்… 311 00:20:44,369 --> 00:20:47,122 ஹேய், சரி, நீ இன்றிரவு ஒரு தோழியின் வீட்டில் தங்கப் போகிறாய் என்று நினைக்கிறேன். 312 00:20:47,206 --> 00:20:48,665 - சரி! - அது பரவாயில்லையா? 313 00:20:48,749 --> 00:20:49,750 ஆம், அருமை. 314 00:21:43,053 --> 00:21:46,306 விரிவடையும் நுரையால் மரணம். வேடிக்கை. கொல்லப்பட்டவன் யார்? 315 00:21:46,390 --> 00:21:47,558 அதைப் பற்றி விசாரித்து வருகிறோம். 316 00:21:47,641 --> 00:21:48,809 இதைக் கேட்க விரும்ப மாட்டீர்கள்தான், 317 00:21:48,892 --> 00:21:51,311 ஆனால் இது தோர்வால்ட் கொலையுடன் தொடர்புடையது என்று நினைக்கிறோம். 318 00:21:51,395 --> 00:21:55,524 இறந்த உடல்களை குறைக்கத்தான் சம்பளம் வாங்குகிறீர்கள், கூடுதலாகச் சேர்ப்பதற்கு இல்லை, சரியா? 319 00:21:55,607 --> 00:21:57,276 பொறுங்கள், நிஜமாகவா? ஆஹா. 320 00:21:57,359 --> 00:21:59,528 நாங்கள் அதை அகாடமியில் தலைகீழாக கற்றிருக்க வேண்டும். 321 00:21:59,611 --> 00:22:01,321 துப்பாக்கியின் எந்த முனையிலிருந்து தோட்டாக்கள் வெளியே வருகின்றன? 322 00:22:01,405 --> 00:22:03,031 நீங்கள் புத்திசாலிகளாக இருக்க விரும்புகிறீர்கள், அல்லது… 323 00:22:03,115 --> 00:22:04,616 கடவுளே, பீட், நாங்கள் அவனைக் கொல்லவில்லை. 324 00:22:04,700 --> 00:22:07,411 அப்படியென்றால் கொன்றவனைப் பிடியுங்கள். சரியா? 325 00:22:08,203 --> 00:22:10,038 அதோடு இரண்டு முட்டாள்களாக இருப்பதை நிறுத்துங்கள். 326 00:22:16,461 --> 00:22:19,214 கிளீன்ஃப்ரெஷ் லாண்ட்ரோமேட் 327 00:22:19,298 --> 00:22:21,884 செவ்வாய்க்கிழமை மதியம் செய்யப்பட்ட அழைப்பைத் தேடுகிறோம். 328 00:22:21,967 --> 00:22:25,137 இது மாதிரியான பட்டன் ஃபோனுடன் நான் ரொம்ப சந்தோஷமாக இருப்பேன் என்று நினைக்கிறேன். 329 00:22:25,220 --> 00:22:26,221 கால் ஹிஸ்டரி 330 00:22:26,305 --> 00:22:29,057 நான் ஒரு பட்டன் ஃபோனை வாங்க வேண்டும். அழைப்புகள், மெசேஜ்கள், எனக்கு தேவை அவ்வளவுதான். 331 00:22:30,350 --> 00:22:32,978 உபெர் ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது என்று நினைக்கிறேன். அதோடு ஸ்டேப் கவுண்டர். 332 00:22:33,061 --> 00:22:35,647 அதனால், அழைப்புகள், மெசேஜ்கள், உபெர், என் ஸ்டேப் கவுண்டர். அவ்வளவுதான். 333 00:22:37,941 --> 00:22:39,860 10,000 அடிகள் என்பது கட்டுக்கதை என்று உனக்குத் தெரியுமா? 334 00:22:39,943 --> 00:22:42,988 அது 1960-களில் நடந்தது. ஒரு ஜப்பானிய நிறுவனம் ஒரு பெடோமீட்டரைச் சந்தைப்படுத்தியது, 335 00:22:43,071 --> 00:22:46,617 அதோடு ஜப்பானிய கதாபாத்திரம் பத்தாயிரத்திற்கு ஒருவன் நடப்பது போல காட்டுகிறது. 336 00:22:46,700 --> 00:22:49,119 - எனவே, அது சிக்கலான அறிவியல் இல்லை, ஆனால்… - கண்டுபிடித்துவிட்டேன். 337 00:22:49,203 --> 00:22:50,204 செய்யப்பட்ட அழைப்பு 338 00:22:50,287 --> 00:22:51,872 6:23, செவ்வாய்க்கிழமை. பௌலா தப்பிப்பதற்கு கொஞ்சம் முன்பு. 339 00:22:51,955 --> 00:22:54,458 இது கொலையாளியின் ஃபோன் எண். இவன்தான். 340 00:22:54,541 --> 00:22:57,127 - அல்லது அவள். அவளாக இருக்கலாம். - ஆஹா. இதோ ஆண்டின் பெண்ணியவாதி. 341 00:22:57,211 --> 00:22:58,795 - அது ஒரு ஆண் என்று பௌலா சொன்னார். - சரி. 342 00:22:58,879 --> 00:23:00,130 ச்சே. என்னால் நம்ப முடியவில்லை. 343 00:23:00,214 --> 00:23:02,216 நாம் உண்மையில் கொலையாளியின் ஃபோன் எண்ணைக் கண்டுபிடித்தோம். 344 00:23:04,301 --> 00:23:06,970 - நாம் ஒரு நல்ல அணியாக இருக்கிறோம். - ஆம், நிஜமாகத்தான். 345 00:23:07,054 --> 00:23:10,057 இதைச் சொல்வதை வெறுக்கிறேன், ஆனால் நாம் இப்போது ஹை-ஃபைவ் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். 346 00:23:10,140 --> 00:23:12,059 - இல்லை. - ஆம். நான் அதைச் செய்யப் போகிறேன். 347 00:23:12,142 --> 00:23:14,645 - நான் கையை உயர்த்தப் போகிறேன். - அச்சச்சோ. ஓ, இல்லை. நீ சொல்வது சரிதான். 348 00:23:15,395 --> 00:23:16,396 போகலாம். 349 00:23:18,607 --> 00:23:19,608 ஆஹா. 350 00:23:23,445 --> 00:23:25,072 சரி, நாம் கிளம்புகிறோம். நாம் கிளம்புகிறோம். 351 00:23:25,155 --> 00:23:26,907 ஓ, சரி. 352 00:23:26,990 --> 00:23:28,784 - பை. - பத்திரமாக வீட்டுக்குப் போங்கள். 353 00:23:37,668 --> 00:23:41,797 அம்மா. நான் அவர்கள் வீட்டில் தூங்கினால் பரவாயில்லை என்று பிரேமின் அம்மா சொன்னார். 354 00:23:41,880 --> 00:23:43,090 - அருமை. அற்புதம். - ஆம். 355 00:23:43,173 --> 00:23:45,217 நாங்கள் இரவு 1 மணி வரை விழித்திருப்போம், ட்விலைட் படத்தைப் பார்க்கப் போகிறோம். 356 00:23:45,300 --> 00:23:46,593 அது 13 வயதுக்கும் மேற்பட்டவர்கள் பார்க்கும் படம். 357 00:23:47,803 --> 00:23:49,680 அம்மா, ஹேஸல் நம்மோடு வருகிறாள். 358 00:23:50,180 --> 00:23:51,723 உங்கள் பீட்சா ரொம்ப நன்றாக இருந்தது, அம்மா. 359 00:23:51,807 --> 00:23:52,808 - நிஜமாகவா? - ஆம். 360 00:23:52,891 --> 00:23:54,810 பெலூசி கடையைவிட நன்றாக இருந்தது. 361 00:23:57,229 --> 00:23:59,690 ஹேய், ஜின்னி, நீ நலமா? கடவுளே. 362 00:23:59,773 --> 00:24:01,817 முழு அலர்ஜி பட்டியலையும் சரிபார்த்தேன். நான் நினைத்தேன்… 363 00:24:01,900 --> 00:24:03,151 இல்லை. இல்லை, அது என் தவறு. 364 00:24:03,235 --> 00:24:05,404 இவளுக்கு அன்னாசிப்பழ அலர்ஜி இருப்பதை சொல்ல மறந்துவிட்டேன். 365 00:24:05,487 --> 00:24:06,780 உங்களிடம் ஆண்டிஹிஸ்டமைன் இருக்கிறதா? 366 00:24:06,864 --> 00:24:08,657 - பொதுவாக அது உதவும். - இல்லை. 367 00:24:08,740 --> 00:24:10,367 ஆனால் தெரு முனையில் ஒரு சின்ன மளிகைக் கடை இருக்கிறது. 368 00:24:10,450 --> 00:24:11,910 நீங்கள் நிச்சயமாக அங்கே வாங்கலாம். 369 00:24:11,994 --> 00:24:14,830 - அம்மா, அரிக்கிறது. - சரி, ஜில்லென்ற ஒரு துண்டை கொண்டு வருகிறேன். 370 00:24:14,913 --> 00:24:16,665 நான் பார்த்துக்கொள்கிறேன், நீங்கள் போக முடியுமா? 371 00:24:16,748 --> 00:24:18,834 ரொம்ப நன்றி. நீங்கள் காப்பாற்றிவிட்டீர்கள், பௌலா. 372 00:25:10,594 --> 00:25:14,473 எல்லாம் பூட்டப்பட்டிருக்கிறது. எனக்கு சவரம் செய்ய வேண்டும். 373 00:25:16,850 --> 00:25:18,310 அலர்ஜி நிவாரணி 374 00:25:50,467 --> 00:25:52,678 உதவி! 375 00:29:03,911 --> 00:29:05,913 வசனத் தமிழாக்கம் அருண்குமார்