1 00:00:21,897 --> 00:00:25,400 ஒருவேளை 4-அயனை இங்கே பயன்படுத்த வேண்டும், ஆனால், என்னவோ. 2 00:00:31,949 --> 00:00:33,575 நன்றாக அடித்தீர்கள். 3 00:00:36,453 --> 00:00:37,454 நன்றி. 4 00:00:38,163 --> 00:00:39,831 நீங்கள் சூட்டர் குழுமத்தைச் சேர்ந்தவர்தானே? 5 00:00:40,624 --> 00:00:41,875 சிசிலியா? 6 00:00:43,043 --> 00:00:45,546 ஆம், நான் சூட்டரில் மூத்த துணைத் தலைவராக இருக்கிறேன். 7 00:00:46,213 --> 00:00:47,589 சிசிலியா வாண்டர்வால். 8 00:00:48,257 --> 00:00:50,467 வாண்டர்வால். நான் அதைத்தான் நினைத்தேன். 9 00:00:53,804 --> 00:00:55,681 நான் பௌலா சாண்டர்ஸ். 10 00:00:56,932 --> 00:00:58,809 உங்களுக்காக வேலை செய்யும் ஒருவனை எனக்குத் தெரியும். 11 00:00:59,434 --> 00:01:00,519 அப்படியா? 12 00:01:01,186 --> 00:01:02,604 டென்னிஸ் ஓநீல். 13 00:01:09,820 --> 00:01:11,488 நாம் பேசுவதற்கு நிறைய இருக்கிறது. 14 00:01:35,262 --> 00:01:36,346 நாங்கள் எங்கள் கோபமான நண்பர்களை நேசிக்கிறோம் 15 00:01:36,430 --> 00:01:38,307 இவ்வளவு அழகான ஒரு பூனை எனக்குத் தேவை 16 00:01:38,390 --> 00:01:40,934 இவ்வளவு அழகான ஒரு பூனை எனக்குத் தேவை 17 00:01:41,018 --> 00:01:44,354 இவ்வளவு அழகான ஒரு பூனை எனக்குத் தேவை 18 00:01:44,438 --> 00:01:47,316 இவ்வளவு அழகான ஒரு பூனை எனக்குத் தேவை 19 00:01:47,983 --> 00:01:51,028 பூனைக்குட்டி, மியாவ், மியாவ் பூனைக்குட்டி, மியாவ், மியாவ் 20 00:01:51,111 --> 00:01:52,529 பூனைக்குட்டி, மியாவ், மியாவ் பூனைக்குட்டி… 21 00:01:57,451 --> 00:01:58,869 பா உனக்குத் தேவை அன்பான பராமரிப்பாளர்கள் தவறவிட்ட அழைப்பு 22 00:01:59,661 --> 00:02:02,039 ஹாய், இது பா உனக்குத் தேவை அன்பான பராமரிப்பாளர்கள். 23 00:02:02,122 --> 00:02:04,291 செஸ்டருடைய ஸ்பா நாளின் வீடியோவை உங்களுக்கு அனுப்பியிருக்கிறோம். 24 00:02:04,833 --> 00:02:07,002 உங்கள் பூனை எந்த நேரத்திலும் கூட்டிப் போகத் தயாராக இருக்கிறது. 25 00:02:07,669 --> 00:02:08,669 சீக்கிரம் சந்திப்போம். 26 00:02:29,066 --> 00:02:31,109 வருந்துகிறேன், யாரைப் பற்றி பேசுகிறீர்கள் என்று தெரியவில்லை. 27 00:02:31,193 --> 00:02:33,487 உங்களுக்கு டென்னிஸ் ஓநீலை தெரியும். நீங்கள் அவனோடு வேலை செய்கிறீர்கள். 28 00:02:33,570 --> 00:02:35,280 ப்ரையன், அலுவலகத்தில் டென்னிஸ் ஓநீல் என்று யாராவது இருக்கிறார்களா? 29 00:02:35,364 --> 00:02:37,449 உறுதியாக அவன் உங்கள் சம்பளப் பட்டியலில் இல்லை. 30 00:02:37,533 --> 00:02:41,203 அவனுக்கு தனி அறையோ அல்லது சாஃப்ட்பால் அணியில் ஷார்ட்ஸ்டாப்பில் ஆடுபவனாகவோ இருக்க வாய்ப்பில்லை. 31 00:02:41,286 --> 00:02:44,957 உங்கள் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் விஷயங்களைச் செய்யும்படி பலரை மிரட்டியிருக்கிறான். 32 00:02:45,040 --> 00:02:47,376 சரி, பாதுகாவலர்களைக் கூப்பிடு, சரியா? 33 00:02:47,459 --> 00:02:50,629 கேளுங்கள், நான் இங்கே கோல்ஃப் விளையாட முயற்சிக்கிறேன். சரியா? 34 00:02:50,712 --> 00:02:53,173 அசிங்கமான வேலைகளைச் செய்ய டென்னிஸ் பயன்படுத்திய ஆட்களில் ஒருவன், 35 00:02:53,257 --> 00:02:54,383 ரொம்ப பேராசைப்பட்டு, 36 00:02:54,466 --> 00:02:56,468 மிரட்டிப் பணம் பறிக்கும் மோசடியை என்னிடம் செய்தான். 37 00:02:56,552 --> 00:03:01,265 டென்னிஸ் அவனையும் அவன் கூட்டாளியையும் கொன்றான், பிறகு இரு கொலைகளுக்காக நான் கைது செய்யப்பட்டேன். 38 00:03:01,348 --> 00:03:04,393 ஆஹா, இது… அதாவது, இது ரொம்ப அதிர்ச்சியாக இருக்கிறது. 39 00:03:04,476 --> 00:03:07,396 கோல்ஃப் மைதான பாதுகாவலர்கள் வருவதற்குள் நான் சீக்கிரம் முடித்துவிடுகிறேன். 40 00:03:07,479 --> 00:03:09,648 அமகேன்செட் மண்டல விதிகள், ஒரு பாக்சைட் சுரங்கம், 41 00:03:10,357 --> 00:03:12,150 பிறகு நார்த்ஈஸ்டர்ன் உணவு குழுமத்துக்குச் சொந்தமான 42 00:03:12,234 --> 00:03:13,986 - பிட்சா ஈஸ்டின் காப்புரிமை. - சரி. 43 00:03:14,069 --> 00:03:15,904 நாங்கள் நார்த்ஈஸ்டர்ன் குழுமத்துடன் வேலை செய்கிறோம், 44 00:03:15,988 --> 00:03:19,241 அதோடு, ஆம், பல சுரங்க குழுமங்களோடு எங்களுக்குத் தொடர்பு இருக்கிறது. 45 00:03:19,324 --> 00:03:20,951 - அதேதான். - இவர்கள் வாடிக்கையாளர்கள். 46 00:03:21,034 --> 00:03:23,495 சூட்டர் ஒரு உலகளாவிய இடர் மேலாண்மை ஆலோசனை நிறுவனம். 47 00:03:23,579 --> 00:03:24,746 நாங்கள் சட்டத்தை மீறமாட்டோம். 48 00:03:24,830 --> 00:03:26,957 நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்காக உண்மை சார்ந்த தொழிலில் இருக்கிறோம். 49 00:03:27,040 --> 00:03:29,334 - சரியா? மன்னிக்கவும். - சரி, கேளுங்கள், 50 00:03:29,418 --> 00:03:32,045 நீங்கள் என்ன செய்கிறீர்கள், டென்னிஸ் உங்களுக்காக என்ன செய்தான் என்பதும் எனக்குத் தெரியும். 51 00:03:32,129 --> 00:03:33,964 உண்மைகளைக் கண்டுபிடிப்பதில் நான் கைதேர்ந்தவள். 52 00:03:35,048 --> 00:03:37,342 இன்னும் ஒரு மணிநேரத்தில் எங்களுக்கு நம்பிக்கை வளர்க்கும் பயிற்சி கூட்டம் இருக்கிறது, 53 00:03:37,426 --> 00:03:39,428 நான் இன்னும் சுற்றின் இரண்டாவது பாதியை விளையாட வேண்டும், எனவே… 54 00:03:40,053 --> 00:03:41,346 கடவுளே. நீங்கள் சொல்வது சரிதான். 55 00:03:41,930 --> 00:03:42,931 நீங்கள் சொல்வது சரிதான். 56 00:03:43,015 --> 00:03:46,560 அது உண்மை என்று எனக்குத் தெரியும், ஆனால் என்னிடம் ஆதாரம் இல்லை. 57 00:03:47,352 --> 00:03:49,771 சூட்டர் குழுமத்தை யாராலும் தொட முடியாது. 58 00:03:50,731 --> 00:03:51,732 ஆனால் நீங்கள் அப்படி இல்லை. 59 00:03:51,815 --> 00:03:53,233 உங்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். 60 00:03:53,317 --> 00:03:54,568 பிளேக்? 61 00:03:56,737 --> 00:03:59,656 - நீங்கள் எதைப் பற்றி பேசுகிறீர்கள்? - அவன் லக்ராஸ் விளையாடுவான்தானே? 62 00:04:00,157 --> 00:04:01,658 என் மகள் கால்பந்து விளையாடுகிறாள். 63 00:04:01,742 --> 00:04:02,910 அதாவது, எனக்கு அந்த விளையாட்டைப் பிடிக்காது, 64 00:04:02,993 --> 00:04:05,662 ஆனால் அந்த அணிக்குப் பயிற்சி கொடுக்கிறேன் ஏனென்றால்… 65 00:04:06,663 --> 00:04:09,958 நம் பிள்ளைகள் சந்தோஷமாக இருக்க நாம் எதையும் செய்வோம், சரிதானே? 66 00:04:10,042 --> 00:04:11,668 ஆனால் உங்கள் மகனை யேல் பல்கலைக்கழகத்தில் சேர்க்க 67 00:04:11,752 --> 00:04:15,756 சேர்க்கை அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க டென்னிஸ் ஓநீலைப் பயன்படுத்தியபோது 68 00:04:15,839 --> 00:04:17,548 நீங்கள் எல்லை மீறிவிட்டீர்கள். 69 00:04:17,632 --> 00:04:20,177 அதை… அதை என்னால் நிரூபிக்க முடியும். 70 00:04:20,260 --> 00:04:22,930 என்னால் உங்கள் வாழ்க்கையை நாசமாக்க முடியும். 71 00:04:23,013 --> 00:04:24,264 ஆம். அதாவது, 72 00:04:24,348 --> 00:04:27,184 'ஃபுல் ஹவுஸில்' நடித்த அழகானப் பெண்ணைப் போல நீங்கள் சிறைக்குப் போகாமல் இருக்கலாம், 73 00:04:27,267 --> 00:04:29,978 ஆனால் அவன் ஆசைப்பட்டுச் சேர்ந்த கல்லூரியில் அவனுடைய இடத்தை நிச்சயம் இழப்பான். 74 00:04:30,729 --> 00:04:31,730 - அப்படியா? - ஆம். 75 00:04:31,813 --> 00:04:32,814 அவள்தான். 76 00:04:33,398 --> 00:04:34,858 நண்பர்களே, இங்கே பிரச்சினை செய்ய வேண்டாம். 77 00:04:34,942 --> 00:04:37,194 அவர்களைக் கொன்றது டென்னிஸ் ஓநீல்தான், நான் இல்லை. 78 00:04:37,277 --> 00:04:39,780 என்னை வழக்கிலிருந்து விடுவியுங்கள். முழுமையாக விடுவியுங்கள். 79 00:04:39,863 --> 00:04:42,449 நீங்கள் உண்மை சார்ந்த தொழிலில் இருப்பதாகச் சொன்னீர்கள். இந்த உண்மை எப்படி இருக்கிறது? 80 00:04:42,533 --> 00:04:44,159 நீங்கள் தவறான அம்மாவிடம் மோதிவிட்டீர்கள்! 81 00:04:44,243 --> 00:04:45,661 நீங்கள் கிளம்ப வேண்டும். 82 00:04:46,495 --> 00:04:48,413 - சரி, நான் போகிறேன். - பாதுகாவலர்களைக் கூப்பிடு. 83 00:04:54,545 --> 00:04:55,754 என்ன நிலைமை? 84 00:04:56,296 --> 00:04:58,882 துப்பாக்கிச் சூடு காயம். உயிர்க்குறிகள் சீராக இருக்கின்றன. 85 00:04:59,550 --> 00:05:00,968 இவனுக்கு நினைவு வந்ததா? 86 00:05:01,635 --> 00:05:04,221 இன்னும் இல்லை. எழுப்ப முடியுமா என்று பார்ப்போம். 87 00:05:16,608 --> 00:05:17,609 ஹேய், டென்னிஸ். 88 00:05:22,698 --> 00:05:24,074 - என்ன நடக்கிறது? - நீ நன்றாகத் தேறி வருகிறாய். 89 00:05:24,157 --> 00:05:25,701 என்ன நடக்கிறது? 90 00:05:27,452 --> 00:05:28,996 நீ நன்றாகத் தேறி வருகிறாய். 91 00:05:29,705 --> 00:05:31,164 நிஜமாகவே நல்ல முன்னேற்றம் தெரிகிறது. 92 00:05:34,543 --> 00:05:36,170 எனக்கு உன்னை ஞாபகம் இருக்கிறது. 93 00:05:37,629 --> 00:05:40,215 கொஞ்சம் வெளிக்காற்றைச் சுவாசிக்கும் அளவுக்கு உனக்குத் தெம்பு இருப்பதாகத் தோன்றுகிறதா? 94 00:05:45,429 --> 00:05:47,556 கேட்க மாட்டாய் என்று நினைத்தேன். 95 00:05:47,639 --> 00:05:49,933 நாங்கள் உன்னைத் திரும்ப பழைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும். 96 00:05:50,934 --> 00:05:52,936 மூன்று, இரண்டு… 97 00:05:53,645 --> 00:05:55,689 அப்படித்தான். பிடித்துக்கொள்… 98 00:06:08,368 --> 00:06:10,662 உண்மைகளா? உங்களுக்கு உண்மைகள் வேண்டுமா? 99 00:06:10,746 --> 00:06:12,539 ஆம், உண்மைகள் விஷயத்தில் நான் கைதேர்ந்தவள். 100 00:06:14,750 --> 00:06:16,877 எனவே, இது ட்ரெவரிடமிருந்துதான் தொடங்கியது. 101 00:06:16,960 --> 00:06:18,295 விசாரணை அறை 3 102 00:06:18,378 --> 00:06:20,297 அவன் நான் சந்தித்த ஒரு கேம் பாய். 103 00:06:22,549 --> 00:06:24,009 எங்களுக்குள் நெருக்கம் அதிகமானது. 104 00:06:24,092 --> 00:06:27,721 - சரி. - நாங்கள் பேச ஆரம்பித்தோம்… 105 00:06:43,987 --> 00:06:47,366 - என்ன விஷயம், ப்ரை? - ஜென்-ஜென், எங்கே இருக்கிறாய்? 106 00:06:47,449 --> 00:06:48,450 பாதுகாப்பான ஓரிடத்தில். 107 00:06:48,534 --> 00:06:49,701 நல்லது. 108 00:06:49,785 --> 00:06:52,454 அந்தக் காட்டில் நடந்தது… சரியில்லை. 109 00:06:52,996 --> 00:06:54,623 மேலிடத்திலிருந்து எனக்கு கடுமையான விமர்சனம் வருகிறது. 110 00:06:54,706 --> 00:06:56,041 ஆம், அதைத் தவிர்க்க முடியவில்லை. 111 00:06:56,124 --> 00:06:57,668 பௌலாவின் பிரச்சினையை நானே சரிசெய்கிறேன். 112 00:06:57,751 --> 00:07:00,879 நல்லது. நீ ப்ரியஸ் காரை எரித்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன். புத்திசாலித்தனமான வேலை. 113 00:07:01,672 --> 00:07:03,257 உனக்கு புதிய வாகனம் வேண்டுமா? 114 00:07:07,177 --> 00:07:08,512 ஆம். ஆம், அது உதவியாக இருக்கும். 115 00:07:08,595 --> 00:07:11,932 சரி. யாங்கர்ஸின் இடத்திற்கு உனக்கு ஒரு காரை அனுப்புகிறேன். 116 00:07:12,724 --> 00:07:13,976 அது தயாரானதும் உனக்குத் தகவல் அனுப்புகிறேன். 117 00:07:14,059 --> 00:07:16,061 இந்த வேலைக்காக எங்களிடம் இருக்கும் எல்லா வளங்களையும் பயன்படுத்துகிறோம். 118 00:07:16,144 --> 00:07:17,646 அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வோம். 119 00:07:39,168 --> 00:07:41,086 நீ எழுந்து நிற்க முயற்சி செய்கிறாயா? 120 00:07:44,715 --> 00:07:45,757 அப்படித்தான். 121 00:07:47,050 --> 00:07:48,844 மூன்று, இரண்டு, ஒன்று… 122 00:07:51,805 --> 00:07:53,599 சில அடிகள் எடுத்து வைக்க முயற்சி செய். 123 00:07:58,145 --> 00:08:01,982 முகத்தில் சுடப்பட்ட ஒருவனுக்கு இது மோசமில்லைதானே? 124 00:08:17,748 --> 00:08:19,166 இல்லை. இல்லை! 125 00:08:19,249 --> 00:08:21,168 இப்படி இல்லை! 126 00:08:29,593 --> 00:08:31,345 இப்படி இல்லை! 127 00:08:37,893 --> 00:08:39,602 வுட்க்ளென் அபார்ட்மெண்ட்கள் 128 00:08:39,686 --> 00:08:43,148 அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கையைத்தான் எப்போதும் கனவு கண்டேன். 129 00:08:44,441 --> 00:08:46,568 ஆனால் கடவுளின் கணக்கு வேறாக இருந்திருக்கிறது. 130 00:08:47,736 --> 00:08:49,279 டென்னிஸ் ஓநீல் எனும் நான், என் காதலன் 131 00:08:50,030 --> 00:08:54,493 ஜெஃப் தோர்வால்ட்டையும் சாமுவேல் ஃப்ரேஸியரையும் கொலை செய்ததை ஒப்புக்கொள்கிறேன். 132 00:08:56,036 --> 00:08:59,039 அவர்கள் எனக்குத் துரோகம் செய்தார்கள். 133 00:09:00,332 --> 00:09:02,376 நான் செய்தவற்றின் நினைவுகளோடு வாழ முயற்சி செய்தேன், 134 00:09:02,459 --> 00:09:06,380 ஆனால் "இவ்வளவு உண்மை தெரிந்த பிறகு, ஏது மன்னிப்பு?" 135 00:09:07,047 --> 00:09:09,675 ஒருவேளை அடுத்த ஜென்மத்தில், எனக்கு மகிழ்ச்சி கிடைக்கலாம். 136 00:09:10,592 --> 00:09:12,469 - ஹலோ? - அதுவரை… 137 00:09:12,553 --> 00:09:13,762 - குட்பை. - என்ன? 138 00:09:49,131 --> 00:09:50,424 ஹேஸல். 139 00:09:51,175 --> 00:09:52,676 அம்மா! 140 00:09:58,891 --> 00:10:01,143 நீ இன்று என் வீட்டில் தங்கப் போகிறாய். 141 00:10:01,226 --> 00:10:02,644 - நிஜமாகவா? யே! - ஆம்! 142 00:10:02,728 --> 00:10:06,565 ஆம், மெத்தையில் படுத்தபடி படம் பார்க்கப் போகிறோம். மெத்தையில் இரவு உணவு சாப்பிடப் போகிறோம். 143 00:10:06,648 --> 00:10:08,942 நிறைய சிக்கன் ஃபிங்கர்ஸ் சாப்பிடப் போகிறோம். 144 00:10:09,443 --> 00:10:11,320 - ஃபிரெஞ்ச் ஃப்ரைஸ் எப்படி? - ஆம், ஃபிரெஞ்ச் ஃப்ரைஸ். 145 00:10:11,403 --> 00:10:14,907 - சரி. - சுருள் வடிவம், மடித்த, சாதாரணம், ட்ரஃபிள்… 146 00:10:14,990 --> 00:10:17,117 - அதோடு வாஃபிள் ஃப்ரைஸ்! - வாஃபிள் ஃப்ரைஸ்! 147 00:10:17,201 --> 00:10:18,452 நீ யோசிக்கும் விதம் பிடித்திருக்கிறது! 148 00:10:18,535 --> 00:10:22,331 அடக் கடவுளே. இங்கே வா. இந்த உலகத்திலேயே நீதான் ரொம்ப புத்திசாலி. 149 00:10:22,414 --> 00:10:23,957 நீதான் சிறந்தவள், தைரியசாலி, 150 00:10:24,041 --> 00:10:25,709 வேடிக்கையானவள், விவரமில்லாதவள், 151 00:10:25,792 --> 00:10:27,211 - கோமாளித்தனம் செய்பவள். - அம்மா! 152 00:10:27,294 --> 00:10:29,922 உன்னை ரொம்ப நேசிக்கிறேன். இது நிஜமாகவே சங்கடமானது. 153 00:10:31,006 --> 00:10:32,007 அம்மா. 154 00:10:32,799 --> 00:10:33,884 அம்மா. 155 00:10:33,967 --> 00:10:34,968 எங்கே போனீர்கள்? 156 00:10:40,098 --> 00:10:43,185 அம்மா! சரி, நானும் உங்களை மிஸ் செய்தேன், ஆனால் நான் விளையாடப் போக வேண்டும். 157 00:10:43,268 --> 00:10:45,103 சரி. போய் விளையாடு. 158 00:10:48,899 --> 00:10:50,108 ஹேய், பௌலா! 159 00:10:51,193 --> 00:10:53,237 - ஹேய். - ஹாய்! 160 00:10:53,320 --> 00:10:55,489 - என்னை இவ்வளவு சீக்கிரம் வந்து சந்தித்ததற்கு நன்றி. - சரி. 161 00:10:55,572 --> 00:10:58,158 ஆம், இந்த மோசமான விஷயம் முடிவுக்கு வந்ததில் எனக்கு மகிழ்ச்சி. 162 00:10:58,242 --> 00:10:59,826 கடவுளே, என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. 163 00:10:59,910 --> 00:11:01,203 எனவே, என்ன நடந்தது? 164 00:11:01,286 --> 00:11:04,706 அந்த ஆள் தற்கொலை செய்துகொண்டு, என்ன, எல்லா கொலைகளையும் தான் செய்ததாக ஒப்புக்கொண்டானா… 165 00:11:04,790 --> 00:11:06,416 ஆம், அதாவது, அப்படித்தான் என்னிடம் சொன்னார்கள். 166 00:11:06,500 --> 00:11:08,502 ஆனால் முக்கியமானது, எல்லா குற்றச்சாட்டுகளையும் வாபஸ் பெற்றுவிட்டார்கள், 167 00:11:08,585 --> 00:11:10,087 நான் நிரபராதி என்று எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. 168 00:11:10,170 --> 00:11:11,922 ஹேய், உனக்காக மகிழ்ச்சியடைகிறேன். 169 00:11:12,005 --> 00:11:13,423 நன்றி, சரி. 170 00:11:13,507 --> 00:11:18,512 நான் கடந்து போக விரும்புகிறேன். எனவே, அந்த வகையில், நாளை விசாரணை இருக்கிறது. 171 00:11:18,595 --> 00:11:20,138 இப்போது என் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை என்பதால், 172 00:11:20,222 --> 00:11:23,267 நாம் அந்த கஸ்டடி விஷயத்தைப் பற்றிப் பேச வேண்டும், ஏனென்றால் வெளிப்படையாக… 173 00:11:23,350 --> 00:11:25,477 அதைப் பற்றி நாம் இங்கே பேசுவது சரியாக இருக்காது, சரியா? 174 00:11:25,561 --> 00:11:27,521 - நிறையக் குழந்தைகள் இருக்கிறார்கள். - அது பரவாயில்லை. 175 00:11:28,021 --> 00:11:29,898 முழு கஸ்டடி, இன்னும் அது வேண்டும் என்று நினைக்கிறாயா? 176 00:11:29,982 --> 00:11:32,109 மேலொரி சொல்வதை ஏற்கிறேன். அதைப் பற்றி இங்கே பேச வேண்டாம் என்று நினைக்கிறேன். 177 00:11:32,192 --> 00:11:33,777 சரி, உன்னிடம் ஒரு கேள்வி கேட்டேன். 178 00:11:34,278 --> 00:11:36,154 என்ன? கஸ்டடி பற்றி என்னிடம் இங்கேயே கேட்கிறாயா? 179 00:11:36,238 --> 00:11:38,240 ஆம், ஏனென்றால் நாளை விசாரணை இருக்கிறது. 180 00:11:39,533 --> 00:11:41,410 உனக்கு நடந்ததை வெறுக்கிறேன், ஆனால் அது நமக்குள் நடக்கும் 181 00:11:41,493 --> 00:11:44,580 - விஷயங்களை மாற்றப் போவதில்லை, கண்டிப்பாக. - சரி, ஆனால் அது மாற்றியிருக்க வேண்டும்தானே? 182 00:11:44,663 --> 00:11:45,956 - உன்னுடன் வாதம் செய்ய விரும்பவில்லை. - நானும் செய்யவில்லை. 183 00:11:46,039 --> 00:11:48,041 இப்போது திரும்பத் திரும்ப அதைப் பற்றியே உன்னோடு பேசப் போவதில்லை. 184 00:11:48,125 --> 00:11:50,919 சரி, உன்னைப் போலவே எது சிறந்தது என்று நினைக்கிறோமோ அதைச் செய்கிறோம். சரியா? 185 00:11:51,003 --> 00:11:53,005 தயவுசெய்து. இன்றிரவு ஜாலியாக இருங்கள். 186 00:11:54,339 --> 00:11:56,258 சரி. பை, ஹேஸல்! 187 00:11:56,967 --> 00:11:58,343 பை, ஹேஸல்! 188 00:11:58,427 --> 00:12:01,263 - பை, அப்பா! பை, மேல்! - ஹாய், ஹேஸல்! 189 00:12:06,685 --> 00:12:08,604 - நாம் ஏன் டிரெண்ட் ஆகவில்லை? - என்ன? 190 00:12:09,396 --> 00:12:12,024 TMZ அழைக்கவில்லை. டிம்மி சாலமேவிடமிருந்து எந்த மெசேஜும் வரவில்லை. 191 00:12:12,107 --> 00:12:14,902 எப்படியோ என் டிக்டாக்கில் புதிய ஃபாலோவர்கள் யாரும் இல்லை. 192 00:12:14,985 --> 00:12:17,446 நீ என்ன சின்னப் பெண்ணா? நீ எதைப் பற்றிப் பேசுகிறாய்? 193 00:12:17,529 --> 00:12:19,406 பௌலா விடுதலையானதற்கு நமக்குக் கொஞ்சம் பாராட்டு 194 00:12:19,489 --> 00:12:20,699 கிடைத்திருக்க வேண்டும் என்று சொல்கிறேன். 195 00:12:20,782 --> 00:12:22,201 அதாவது, பொதுமக்களின் பாராட்டு, 196 00:12:22,284 --> 00:12:24,036 ஒருவேளை நம் பெயரை ஒரு சின்ன பூங்காவிற்கு வைக்கலாம். 197 00:12:24,119 --> 00:12:25,329 தெரியவில்லை. தோன்றியதைச் சொல்கிறேன். 198 00:12:25,412 --> 00:12:27,039 யாரோ ஒருவன் தற்கொலை செய்துகொண்டதால் பௌலா தப்பினார். 199 00:12:27,122 --> 00:12:28,665 உண்மையில் நாம் எதுவும் செய்யவில்லை. 200 00:12:28,749 --> 00:12:30,626 நாம் எதுவும் செய்யவில்லையா? நாம் செய்திருக்கிறோம். 201 00:12:30,709 --> 00:12:33,337 இப்போது நாம் பாராட்டப்படாத நாயகர்களாக இருக்கிறோம். 202 00:12:33,420 --> 00:12:35,589 ச்சே. நான் பாராட்டப்பட்ட நாயகனாக வேண்டும். 203 00:12:36,590 --> 00:12:39,384 ஓ, சரி. திரும்ப தேவையற்றவர்களாக மாறிவிட்டோம். 204 00:12:41,762 --> 00:12:43,305 குறைந்தபட்சம் ஜாலியாக நேரத்தைச் செலவிட்டோம். 205 00:12:44,223 --> 00:12:46,517 வேலையைத் தாண்டி வெளியே சுற்றியது நன்றாக இருந்தது, இல்லையா? 206 00:12:51,146 --> 00:12:52,147 சரி. 207 00:12:52,231 --> 00:12:54,525 அந்த முட்டாள்தனமான எல்சாட் தேர்வுக்காக இரவு முழுவதும் படித்துக்கொண்டிருந்தேன், 208 00:12:54,608 --> 00:12:56,235 எனவே நமக்கு காபி கொண்டு வரவா? 209 00:12:56,318 --> 00:12:58,111 - சரி, நன்றி. - சரி. 210 00:13:18,215 --> 00:13:20,509 ட்ரூ, இந்த இரகசிய வேலைகள் எல்லாம் எதற்காக? 211 00:13:20,592 --> 00:13:22,094 புதிய கட்டுரையை எழுதுகிறீர்களா அல்லது… 212 00:13:28,392 --> 00:13:29,768 நல்ல பேச்சு. 213 00:13:29,852 --> 00:13:32,437 எனவே, நாங்கள் அறைக்குள் நுழைந்தோம், 214 00:13:33,021 --> 00:13:36,149 செல்வி. ரூஸோவும், திரு. சானும் முத்தமிட்டதைப் பார்த்தோம்! 215 00:13:36,733 --> 00:13:38,110 அது ரொம்ப அசிங்கமாக இருந்தது. 216 00:13:38,193 --> 00:13:39,319 அடக் கடவுளே. 217 00:13:39,403 --> 00:13:41,697 செல்வி. ரூஸோவும், திரு. சானும் திருமணமானவர்கள் தெரியுமா? 218 00:13:41,780 --> 00:13:43,824 - பொறுங்கள்? என்ன? - ஆம். 219 00:13:43,907 --> 00:13:45,450 - இல்லை! - உன்னை வியக்க வைத்துவிட்டேனா? 220 00:13:45,534 --> 00:13:47,369 அது அருவருப்பானது. ஆம், வியக்க வைத்தீர்கள். 221 00:13:54,751 --> 00:13:56,545 அம்மா, எனக்கு சோர்வாக இருக்கிறது. 222 00:13:56,628 --> 00:13:58,505 தயவுசெய்து இதை நாளைக்குப் பார்க்கலாமா? 223 00:13:58,589 --> 00:14:00,090 - நாளை. - சரி. 224 00:14:01,508 --> 00:14:02,509 சரி. 225 00:14:05,304 --> 00:14:07,723 ஆனால் என்னைக் கட்டிப்பிடித்தபடியே இருப்பாயா, ஹேஸல்ஃபேஸ்? 226 00:14:08,765 --> 00:14:10,267 நாம் ஒரு இரவு தங்கும் பார்ட்டி வைக்கலாம். 227 00:14:10,767 --> 00:14:11,768 - சரி. - சரி. 228 00:14:16,857 --> 00:14:18,192 படத்துக்கு குட் நைட். 229 00:14:25,199 --> 00:14:26,783 - குட் நைட், அம்மா. - குட் நைட். 230 00:14:45,594 --> 00:14:46,762 எல்லோரும் எழுந்திருங்கள். 231 00:14:47,554 --> 00:14:50,933 நியூயார்க் கிங்ஸ் கவுண்டி குடும்ப நல நீதிமன்றத்தின் அமர்வு இப்போது தொடங்குகிறது. 232 00:14:51,016 --> 00:14:54,186 கௌரவத்திற்குரிய நீதிபதி நார்லெஸ்கி தலைமை தாங்குகிறார். 233 00:14:57,523 --> 00:15:00,400 ஹென்ட்ரிக்ஸ் மற்றும் சாண்டர்ஸ் இடையேயான கஸ்டடி ஏற்பாடுகளைப் பரிசீலிக்க 234 00:15:00,484 --> 00:15:03,195 நாம் இங்கே கூடியிருக்கிறோம். 235 00:15:03,278 --> 00:15:04,446 தொடங்கலாம். 236 00:15:06,323 --> 00:15:09,326 நான் தி மார்ஜின் இதழில் உண்மை சரிபார்ப்பு வேலையில் இருக்கிறேன். 237 00:15:09,409 --> 00:15:13,121 என் டிசைன் வேலை ஆன்லைனில் நடக்கிறது, அதனால் நான் எங்கே வேண்டுமானாலும் இருக்கலாம். 238 00:15:13,205 --> 00:15:16,375 இப்போது எனக்குத் துறையின் தலைவராக பதவி உயர்வு கிடைத்திருக்கிறது. 239 00:15:16,458 --> 00:15:20,754 எனவே மேலொரிக்கு போய்ஸியில் வேலை கிடைத்தபோது, அது மிகச் சரியானது என்று நினைத்தேன். 240 00:15:20,838 --> 00:15:23,966 அவள் பள்ளியா? அதில் அதிகம் ஈடுபட்டிருக்கிறேன். கால்பந்து அணிக்குப் பயிற்சி கொடுக்கிறேன். 241 00:15:24,049 --> 00:15:27,261 அங்கே எங்களுக்கு ஒரு நீச்சல் குளம், ஒரு பெரிய முற்றம் இருக்கும். 242 00:15:27,761 --> 00:15:30,013 ஹேஸல் சறுக்கு கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கிறாள். 243 00:15:30,097 --> 00:15:32,599 ஆம், நாங்கள் இதைச் சரிசெய்ய முயற்சித்தோம். அதாவது, நான்… 244 00:15:33,433 --> 00:15:34,434 நான் முயற்சி செய்தேன். 245 00:15:34,518 --> 00:15:36,019 நான் பக்குவப்பட்டுக்கொண்டிருந்தேன். 246 00:15:36,603 --> 00:15:37,938 பௌலா அப்படி இல்லை. 247 00:15:38,939 --> 00:15:40,566 ஒரு கட்டத்தில் எங்களுக்குள் விரிசல் அதிகமானது. 248 00:15:40,649 --> 00:15:46,113 இது எதைப் போன்றது என்றால்… உங்கள் வீட்டுப் புல்வெளி காய்ந்து போவதைப் பார்ப்பது போல. 249 00:15:46,613 --> 00:15:47,614 நான்… 250 00:15:48,574 --> 00:15:50,200 நான் வேறொருவரை காதலிக்க ஆரம்பித்தேன். 251 00:15:50,284 --> 00:15:55,038 ஒரு நாள் கொஞ்சம் காய்ந்திருக்கும், பிறகு மறுநாள் வெறும் மண்தான் இருக்கும். 252 00:15:55,122 --> 00:15:59,042 ஆனால், பாருங்கள், நான் என் மகளை நேசிக்கிறேன், அவள் நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். 253 00:15:59,126 --> 00:16:02,045 நிஜமாகவே, என்னைப் பொறுத்தவரைக்கும் இதெல்லாம் அதைப் பற்றியதுதான். 254 00:16:02,546 --> 00:16:03,547 ஹேஸலைப் பற்றியது. 255 00:16:06,967 --> 00:16:09,052 ஆம், என் மொத்த வாழ்க்கையும் ஹேஸல்தான். 256 00:16:10,304 --> 00:16:11,805 அவளுக்காக நான் எதையும் செய்வேன். 257 00:16:13,265 --> 00:16:15,601 ஐடஹோவுக்குக் குடிபெயர்வதைத் தவிர. 258 00:16:16,810 --> 00:16:20,522 எனவே, நீங்கள் சமீபத்தில் இரண்டு கொலைகளுக்காகக் கைது செய்யப்பட்டீர்கள், சரிதானே? 259 00:16:21,064 --> 00:16:23,775 சரி. நான் விடுவிக்கப்பட்டேன். 260 00:16:23,859 --> 00:16:24,860 வாழ்த்துகள். 261 00:16:24,943 --> 00:16:26,445 உங்களைப் போன்ற ஒரு பாசமான அம்மாவுக்கு, 262 00:16:26,528 --> 00:16:29,323 இந்தக் கொலைகாரர்களுடனும் பாலியல் தொழிலாளர்களுடனும் எப்படி தொடர்பு ஏற்பட்டது? 263 00:16:29,406 --> 00:16:30,657 ஆட்சேபிக்கிறேன். இது வழக்கிற்குத் தொடர்பு இல்லாதது. 264 00:16:30,741 --> 00:16:32,075 ஆட்சேபனை நிராகரிக்கப்படுகிறது. 265 00:16:32,159 --> 00:16:33,285 அது இணையத்தில் மட்டும். 266 00:16:33,785 --> 00:16:34,995 இணையத்தில். 267 00:16:35,078 --> 00:16:39,208 எனவே, உங்கள் வீட்டிலிருந்தே ஒரு பாலியல் தொழிலாளியுடன் உறவில் இருந்திருக்கிறீர்கள். 268 00:16:40,209 --> 00:16:42,336 நீங்கள் எப்போதாவது ஹேஸல் இருக்கும்போது அதைச் செய்தீர்களா? 269 00:16:46,381 --> 00:16:47,382 இருக்கலாம். 270 00:16:48,467 --> 00:16:51,136 ஆனால் அவள் தூங்கிக்கொண்டிருந்தாள். 271 00:16:51,220 --> 00:16:53,138 நீதிபதி அவர்களே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தூங்கும்போது உடலுறவுகொள்வது வழக்கம்தான். 272 00:16:53,222 --> 00:16:55,557 ஆட்சேபனை தெரிவியுங்கள் அல்லது உங்கள் முறைக்கு காத்திருங்கள், திரு. வார்விக். 273 00:16:55,641 --> 00:17:00,187 எனவே, தெளிவுபடுத்துவதற்காகச் சொல்கிறேன், இரட்டைக் கொலையில் ஈடுபட்டிருந்த பணம் பெற்ற அந்நியருடன் 274 00:17:00,270 --> 00:17:02,481 நீங்கள் சுயஇன்பம் அனுபவித்துக்கொண்டிருந்தபோது, 275 00:17:02,564 --> 00:17:05,317 உங்கள் மூன்றாம் வகுப்பு மகள் தூங்கிக்கொண்டிருந்தார். 276 00:17:05,400 --> 00:17:06,401 அது அப்படி இல்லை. 277 00:17:06,484 --> 00:17:09,738 போர்ட்லேண்டில் நீங்கள் கேலப் ஜாக்சனைக் கொன்றபோது எப்படி? 278 00:17:13,784 --> 00:17:15,618 அது ஒரு பயங்கரமான விபத்து. 279 00:17:16,118 --> 00:17:18,247 ஆம், ஆனால் ஹேஸல் காரில் இருந்தார், சரிதானே? 280 00:17:18,329 --> 00:17:22,251 பின் சீட்டில் ஹெட்ஃபோனை மாட்டிக்கொண்டு, தூங்கிக்கொண்டிருந்தாள். 281 00:17:22,751 --> 00:17:25,420 அவள் எதையும் கேட்கவில்லை. அவள் எதையும் பார்க்கவில்லை. 282 00:17:25,503 --> 00:17:27,256 அவளுக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது. 283 00:17:28,089 --> 00:17:31,009 அவர் நல்ல தூக்கத்தில் இருந்தது நம் அதிர்ஷ்டம் என்று நினைக்கிறேன், சரிதானே? 284 00:17:32,719 --> 00:17:34,263 நான் வியந்தேன், நீங்கள் 285 00:17:34,847 --> 00:17:37,015 கேலப் மீது இடிப்பதற்கு முன்பு குடித்திருந்தீர்களா? 286 00:17:37,099 --> 00:17:39,560 ஆட்சேபனை. குற்றவியல் வழக்குகள் எதுவும் பதியப்படவில்லை. 287 00:17:39,643 --> 00:17:40,978 திரும்பத்திரும்ப கேட்கிறார். விஷயத்துக்கு வாருங்கள். 288 00:17:41,645 --> 00:17:43,730 பொதுவாக, நீ செய்வது சரியில்லை, ஸ்காட். 289 00:17:43,814 --> 00:17:45,399 அதெல்லாம் இல்லை. திரு. மெக்கின்னன். 290 00:17:45,482 --> 00:17:49,653 பாருங்கள், ஒரு அம்மாவாக அவர் என்ன மாதிரியான தேர்வுகளைச் செய்கிறார் என்று காட்ட முயற்சிக்கிறேன். 291 00:17:49,736 --> 00:17:51,280 இவர் என்ன மாதிரியான முன்மாதிரி? 292 00:17:51,363 --> 00:17:56,159 பொறுப்பற்ற நடத்தை கொண்ட வரலாறு நிச்சயமாக தொடர்புடையது, ஆனால் திரும்ப பெற்றுக்கொண்டேன். 293 00:17:57,744 --> 00:17:59,997 கேம் பாய்க்கு வருவோம். 294 00:18:01,123 --> 00:18:02,457 அவரைப் பற்றி ஹேஸலுக்குத் தெரியுமா? 295 00:18:03,375 --> 00:18:04,626 நீங்கள் சத்தியம் செய்திருக்கிறீர்கள். 296 00:18:05,794 --> 00:18:08,005 அவர் அவரிடம் பேசியது உண்மைதானே? 297 00:18:09,464 --> 00:18:12,467 ஆம். ஒரு முறை, ஆம். ஃபோனில். ஒரு முறை, ஆம். 298 00:18:12,551 --> 00:18:15,846 ஒரு முறை. ஃபோனில். ஒரு பாலியல் தொழிலாளியுடன். 299 00:18:17,181 --> 00:18:19,641 சரி, அவருடைய அப்பா என்னிடம் சொன்னதிலிருந்து, 300 00:18:19,725 --> 00:18:21,977 அந்த ஒரு முறை, 301 00:18:23,020 --> 00:18:26,064 ஃபோனில், மூன்றாம் வகுப்பு படிப்பவர், ஒரு பாலியல் தொழிலாளியுடன் பேசியது, அது ரொம்ப 302 00:18:27,065 --> 00:18:28,275 அதிர்ச்சியானதாக இருந்திருக்கிறது. 303 00:18:28,358 --> 00:18:29,359 நான் முடித்துவிட்டேன். 304 00:18:37,576 --> 00:18:39,494 இந்த அறையில் நான்தான் ஒரே அம்மா. 305 00:18:40,662 --> 00:18:42,706 - ஒரே ஒரு அம்மா. - நீ பேச வேண்டியதில்லை… 306 00:18:42,789 --> 00:18:45,959 நீங்கள் என் செயல்களுக்கான காரணங்கள் 307 00:18:46,043 --> 00:18:47,961 என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டுமா? 308 00:18:48,045 --> 00:18:49,171 நிச்சயமாக, ஏன் கூடாது? 309 00:18:49,963 --> 00:18:54,635 என் திருமணம் உறவு முடிந்தபோது, அது என்னை அழித்தது. 310 00:18:54,718 --> 00:18:57,054 நான் மோசமான நிலையில் இருந்தேன். நான்… 311 00:18:58,263 --> 00:19:02,643 ஆனால் எனக்கு ஒரு குழந்தை இருக்கிறது, அதனால், நான் மோசமான நிலையில் இருக்க முடியாது. 312 00:19:02,726 --> 00:19:07,814 நான் உழவர் சந்தையிலோ அல்லது புத்தகக் குழுவிலோ யாரையாவது சந்திக்கப் போவதில்லை. 313 00:19:07,898 --> 00:19:11,193 எனவே, பள்ளிக்குப் போய் குழந்தையைக் கூட்டி வருவதற்கும், 314 00:19:11,276 --> 00:19:17,366 வேலையை முடிப்பதற்கான காலக்கெடுவிற்கும் இடையில் ஒரு துணையைத் தேடுவதற்காக இணையத்துக்குப் போனேன். 315 00:19:17,950 --> 00:19:20,619 நீங்கள் அது உகந்தது என்று நினைக்கிறீர்களா? 316 00:19:20,702 --> 00:19:22,663 அதுதான் என் வாழ்க்கைத் திட்டம் என்று நினைக்கிறீர்களா? 317 00:19:22,746 --> 00:19:24,248 அது உயிர் பிழைப்பதற்காக. 318 00:19:25,541 --> 00:19:29,044 ஹேஸல் யாரோவொரு குழந்தை இல்லை. 319 00:19:31,004 --> 00:19:33,006 அவள் எனக்குள் வளர்ந்தவள். 320 00:19:33,632 --> 00:19:35,968 நாங்கள் ஒரு நபராக இருந்தோம். 321 00:19:36,051 --> 00:19:39,304 இரத்தத்தைப் பகிர்ந்துகொண்டோம். ஆக்ஸிஜனைப் பகிர்ந்துகொண்டோம். 322 00:19:39,388 --> 00:19:42,307 நாங்கள் எல்லா வகையிலும் முழுதாக இணைந்திருந்தோம். 323 00:19:42,391 --> 00:19:46,270 அதனால் எனக்குத் தெரியும். அவளுக்கு என்ன தேவை என்று எனக்குத் தெரியும். 324 00:19:46,353 --> 00:19:49,523 அவள் நண்பர்களோடு இங்கே இருக்க வேண்டும். 325 00:19:49,606 --> 00:19:53,944 அவள் இங்கே மோசமாக விளையாடும் கால்பந்து அணியுடன் இருக்க வேண்டும். 326 00:19:54,027 --> 00:19:57,364 அதோடு எங்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் அந்த டே க்வோன் டூ பயிற்சியில். 327 00:19:58,198 --> 00:19:59,616 இது எனக்குத் தெரியும். 328 00:20:00,993 --> 00:20:03,829 அவள் தொடர்ந்து என்னுடன் வளர வேண்டும். 329 00:20:04,454 --> 00:20:07,833 ஹேஸலும் நானும் இன்னும் இணைந்திருப்பதால் அது எனக்குத் தெரியும். 330 00:20:07,916 --> 00:20:09,334 நாங்கள்… 331 00:20:09,418 --> 00:20:12,504 நீங்கள் இங்கே சொல்லும் எதாலும் அதை மாற்ற முடியாது. 332 00:20:13,672 --> 00:20:15,966 எங்கள் பந்தம் பிரிக்க முடியாதது. 333 00:20:22,931 --> 00:20:24,141 அது அழகாக இருந்தது. 334 00:20:24,224 --> 00:20:26,518 ஆனால் அன்பு மட்டும் போதாது. 335 00:20:26,602 --> 00:20:30,606 அவருடைய அப்பாவுடன் அவருடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும், அது நம் எல்லோருக்கும் தெரியலாம். 336 00:20:35,194 --> 00:20:36,778 ஒரு சின்ன இடைவேளை எடுத்துக்கொள்வோம். 337 00:20:44,703 --> 00:20:46,580 - நான் வந்துவிடுகிறேன். - சரி. 338 00:20:47,873 --> 00:20:48,874 ஆம். 339 00:20:51,793 --> 00:20:55,464 பௌலா, ஏன் உன்னால் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு எங்களுடன் போய்ஸிக்கு வரமுடியவில்லை? 340 00:20:56,465 --> 00:20:58,509 ஏன் உன்னால் கொஞ்சம் சமரசம் செய்துகொள்ள முடியவில்லை? 341 00:21:18,695 --> 00:21:21,949 புதிய செய்திக்கட்டுரைக்கான யோசனைகள் 342 00:21:24,952 --> 00:21:26,954 எல்சாட் தேர்வு 343 00:21:54,356 --> 00:21:56,358 போலீஸ் குற்றம் நடந்த இடத்துக்குப் போகும் குழு 344 00:22:07,202 --> 00:22:09,413 பிரிவு 4G படுக்கையறை எண் 2 345 00:22:09,496 --> 00:22:12,499 படுக்கையறை எண் 1 குளியலறை 346 00:22:24,052 --> 00:22:26,138 சரி, கவனியுங்கள், இது மீண்டும் தொடங்குவதற்கான நேரம். 347 00:22:26,889 --> 00:22:28,849 இது ஒரு சிக்கலான சூழ்நிலை. 348 00:22:29,433 --> 00:22:32,352 போய்ஸியில் ஹேஸலுக்கு ஒரு அற்புதமான வாழ்க்கைக் காத்திருக்கிறது. 349 00:22:33,187 --> 00:22:36,190 திரு. ஹென்ட்ரிக்ஸ், நான் உங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு சொல்ல வேண்டும். 350 00:22:38,567 --> 00:22:42,905 இருந்தாலும், உங்கள் இருவருக்கும் ஏற்கனவே உடன்பாடு இருந்தது. 351 00:22:44,281 --> 00:22:47,201 அதை மீறும் வகையில் திருமதி. சாண்டர்ஸ் எதுவும் செய்யவில்லை. 352 00:22:47,868 --> 00:22:51,455 உண்மையில், அவர் அனுபவித்த கஷ்டங்கள் இருந்தபோதும், 353 00:22:51,955 --> 00:22:54,917 ஹேஸல் நம்பியிருக்கக் கூடிய ஒரு அம்மாவாகவே அவர் இருந்திருக்கிறார். 354 00:22:58,587 --> 00:23:01,173 எனவே, நீதிமன்றம் ஒரு கடினமான முடிவை எடுக்க வேண்டியிருக்கிறது. 355 00:23:01,256 --> 00:23:06,261 எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு, தற்போது ஒப்புக்கொள்ளப்பட்டபடி 356 00:23:07,471 --> 00:23:10,766 குழந்தைப் பராமரிப்பைத் தொடர வேண்டும் என்பதே என் தீர்ப்பு. 357 00:23:10,849 --> 00:23:13,227 ஒப்பந்தத்தின்போது அவரது பெற்றோர்கள் 358 00:23:13,310 --> 00:23:16,897 வசித்த இடமான நியூயார்க்கிலேயே ஹேஸல் இருப்பார். 359 00:23:18,815 --> 00:23:20,859 இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. 360 00:23:57,396 --> 00:24:00,858 ப்ரையன் சாம்பல் நிற நிஸான். குட் லக். 361 00:24:10,450 --> 00:24:12,202 நீ மூன்று கப்கேக்கள்தான் சாப்பிட வேண்டும். 362 00:24:12,286 --> 00:24:13,662 இது இரண்டாவதுதான். 363 00:24:18,500 --> 00:24:19,710 இப்போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்? 364 00:24:19,793 --> 00:24:21,336 நான்… 365 00:24:23,005 --> 00:24:24,590 சிரித்து சிரித்து என் முகம் வலிக்கிறது. 366 00:24:24,673 --> 00:24:27,050 ஆம், அழகுப் போட்டிப் போட்டியாளர் போல, 367 00:24:27,134 --> 00:24:30,304 அந்த வினோதமான, பயமுறுத்தும் ஜூனியர்களில் ஒருவரைப் போல… 368 00:24:31,930 --> 00:24:32,931 அடக் கடவுளே. 369 00:24:43,317 --> 00:24:45,068 - வாழ்த்துகள். - என் சமையலறையில் வாந்தியெடுத்துவிடாதே. 370 00:24:45,152 --> 00:24:46,820 எல்லாம் நன்றாக நடந்ததில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. 371 00:24:46,904 --> 00:24:48,614 நன்றி. ஆம். எனக்கும்தான். 372 00:24:49,114 --> 00:24:51,992 உங்கள் இருவருக்கும் நன்றி… ஆம். 373 00:24:52,868 --> 00:24:53,869 சரி. 374 00:24:55,495 --> 00:24:57,873 டென்னிஸ் தற்கொலை விஷயம் எனக்குப் புரியவில்லை. 375 00:24:58,373 --> 00:24:59,541 - என்ன? - ஏனென்றால் அவனை முகத்தில் 376 00:24:59,625 --> 00:25:01,001 சுட்டுக் கொன்றதாகத்தானே சொன்னீர்கள்? 377 00:25:01,084 --> 00:25:02,878 நிஜமாகவா? அதைப் பற்றி இங்கே பேச வேண்டுமா? இப்போதா? 378 00:25:02,961 --> 00:25:04,755 கிசுகிசுக்கலாம், அது பரவாயில்லை என்று நினைத்தேன். 379 00:25:04,838 --> 00:25:07,007 ஆம். அதாவது, ஆம், நான் செய்தேன். அவனைச் சுட்டதாக நினைத்தேன். 380 00:25:07,090 --> 00:25:08,759 அவனைச் சுட்டேன், அவன் இறந்துவிட்டதாக நினைத்தேன். 381 00:25:08,842 --> 00:25:10,969 - என்ன நடந்திருக்கும்? - சரி, நிறுத்து. நிறுத்து. 382 00:25:11,053 --> 00:25:12,304 - பௌலா! - ச்சே! 383 00:25:21,396 --> 00:25:22,606 இன்று நீ அற்புதமாக செயல்பட்டாய். 384 00:25:23,440 --> 00:25:24,441 நன்றி. 385 00:25:25,150 --> 00:25:26,652 என் பக்கம் இருந்ததற்கு நன்றி. 386 00:25:27,319 --> 00:25:28,320 நீங்கள்… 387 00:25:29,112 --> 00:25:32,449 ஒரு நல்ல வழக்கறிஞர், ஆனால் நீங்கள் ரொம்ப ரொம்ப நல்ல மனிதர். 388 00:25:33,033 --> 00:25:34,034 நான் ஒப்புக்கொள்கிறேன். 389 00:25:36,078 --> 00:25:37,704 உன் நண்பர்கள் யாருக்காவது விவாகரத்து வாங்கித்தரும் வழக்கறிஞர் 390 00:25:37,788 --> 00:25:39,790 தேவையா என்று கேட்பது பொருத்தமில்லாததாக இருக்குமா? 391 00:25:39,873 --> 00:25:40,999 ரொம்ப. 392 00:25:50,050 --> 00:25:54,179 - கடவுளே! என்னவொரு சேவை. நன்றி. - சியர்ஸ். 393 00:25:54,263 --> 00:25:55,264 ஜாலியாக இருக்கிறீர்களா? 394 00:25:56,890 --> 00:25:59,142 ஆம், இதுதான், நான் இதுவரை பங்கேற்றதிலேயே சிறந்த விடுதலை பெற்றதுக்கான பார்ட்டி. 395 00:26:00,102 --> 00:26:03,605 நான் நிறைய கும்பல் தாக்குதலுக்குப் போயிருக்கிறேன். 396 00:26:03,689 --> 00:26:06,316 - தெரியும், பரிச்சியமானவர். - ஆம். 397 00:26:12,322 --> 00:26:16,118 ஹேய், நான் யோசித்துக்கொண்டிருந்தேன், இரவு உணவு எப்படி? சனிக்கிழமை? 398 00:26:20,539 --> 00:26:21,665 நான் ஏதாவது முயற்சி செய்யலாமா? 399 00:26:21,748 --> 00:26:22,833 ஆம், நிச்சயமாக. 400 00:26:35,512 --> 00:26:38,515 ஆம். ஆம், சனிக்கிழமை போகலாம். 401 00:26:45,522 --> 00:26:47,733 ஆம், ஹலோ. உள்ளே வாருங்கள். திறந்துதான் இருக்கிறது. 402 00:26:57,576 --> 00:26:58,577 ஒரு நிமிடம் கிடைக்குமா? 403 00:27:18,889 --> 00:27:21,225 எல்லாம் முடிந்தது. வருங்காலம் நன்றாக இருக்கும். 404 00:27:23,852 --> 00:27:24,978 உங்களுக்கு என்ன வேண்டும்? 405 00:27:25,562 --> 00:27:27,564 என் கூட்டாளி, துப்பறிவாளர் பேக்ஸ்டர் சுடப்பட்டான். 406 00:27:27,648 --> 00:27:30,442 அதைச் செய்த பெண் உங்களை சிறையில் சந்தித்த போலி வழக்கறிஞர். 407 00:27:30,526 --> 00:27:32,152 கடவுளே. 408 00:27:32,236 --> 00:27:35,572 உங்கள் விடுதலை, டென்னிஸின் ஒப்புதல் வாக்குமூலம், அவனுடைய தற்கொலை, 409 00:27:35,656 --> 00:27:39,993 மரணத்திற்கான காரணம் ரொம்ப வெளிப்படையானது, அவர்கள் பிரேத பரிசோதனை கூட செய்யவில்லை, 410 00:27:40,077 --> 00:27:41,745 இதெல்லாம் ரொம்ப வசதியானது. 411 00:27:42,871 --> 00:27:44,581 ஆம், நான் உங்களிடம் பேச விரும்பவில்லை, சரியா? 412 00:27:44,665 --> 00:27:47,918 நான் கொண்டாடுகிறேன். நீங்கள் என்னை ஜெயிலில் போட்டீர்கள். 413 00:27:48,001 --> 00:27:49,086 எனக்கு ஒரு உள்ளுணர்வு இருக்கிறது. 414 00:27:50,045 --> 00:27:51,088 உங்களுக்கு ஏதோ தெரியும். 415 00:27:51,171 --> 00:27:53,924 ஏதாவது அர்த்தம் தரும் எதுவும் எனக்குத் தெரியாது. 416 00:27:54,007 --> 00:27:58,387 எனக்குத் தெரியாது. நான் உள்ளே போய் என் மகளுக்கு கப்கேக்குகளை ஊட்டப் போகிறேன், 417 00:27:58,470 --> 00:28:00,472 திங்கட்கிழமை வேலைக்குப் போகப் போகிறேன் என்பது எனக்குத் தெரியும். 418 00:28:00,556 --> 00:28:04,434 சரியா, ஒருவேளை நான் ஒரு டேட் போகலாம் என்று எனக்குத் தெரியும். 419 00:28:04,518 --> 00:28:06,812 ஆனால் மற்ற எல்லாவற்றையும் விடப்போகிறேன். 420 00:28:06,895 --> 00:28:08,480 - பௌலா! - ஒருவேளை நீங்களும் அதைச் செய்ய வேண்டும். 421 00:28:08,564 --> 00:28:11,400 - என்ன தெரியுமா? வாழ்த்துகள். - உங்களுக்கு ஏதோ தெரியும். இது முடியவில்லை. 422 00:28:14,444 --> 00:28:16,113 இவன் பௌலாவுடன் இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. 423 00:28:16,905 --> 00:28:20,868 எனக்குத் தெரியவில்லை. அவன் டயர் மாற்றுவான், ஜி-ஸ்பாட்டைக் கண்டுபிடிப்பான் போல தெரிகிறது. 424 00:28:21,702 --> 00:28:23,537 அந்த இரண்டும்தான் அடிப்படை அறிவு. 425 00:28:23,620 --> 00:28:25,539 அந்த இரண்டும் தெரிந்தவர்கள் ரொம்ப அரிது. 426 00:28:26,248 --> 00:28:28,292 பெரும்பாலான பெண்கள் இரண்டையும் தாங்களாகவே செய்யலாம். 427 00:28:28,375 --> 00:28:30,127 - நியாயம்தான். - எல்சாட் எப்படிப் போனது? 428 00:28:30,711 --> 00:28:31,712 ஒருவேளை நன்றாக எழுதியிருக்கலாம். 429 00:28:32,671 --> 00:28:35,757 உண்மையில், நான் சட்ட உதவியாளர் ஆவது பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறேன். 430 00:28:36,884 --> 00:28:40,721 ஆம், நண்பன் காய், அது சலிப்பானது என்று சொல்கிறான், அவன் நிறுவனம் நிக்ஸ் டிக்கெட்டுகளைப் பெறுகிறது… 431 00:28:42,389 --> 00:28:43,724 அப்படியென்றால் நீ என்னை ஏமாற்றுகிறாயா? 432 00:28:44,266 --> 00:28:47,686 ஆம், நான் ஒரு வழக்கறிஞராக ஆனால், அது என் பிம்பத்துக்குப் பொருத்தமாக இருக்கும். 433 00:28:48,896 --> 00:28:53,483 மன்னித்துவிடு, ஜெர்-பேர், ஆனால் ஒவ்வொரு ஆணும் தன்னைத்தானே கவனித்துக்கொள்ளும் ஒரு நேரம் வரும். 434 00:28:54,359 --> 00:28:55,360 ஆஹா. 435 00:28:55,861 --> 00:28:57,738 குட்டிப் பறவை கூட்டை விட்டு பறக்கிறது. 436 00:28:57,821 --> 00:28:59,198 ஆம், அப்படித்தான் நினைக்கிறேன். 437 00:29:01,867 --> 00:29:03,243 ஹேய், இங்கிருந்து வெளியே போவோமா? 438 00:29:04,745 --> 00:29:06,413 என்னால் உனக்கு ஒரு அதிர்ஷ்ட காக்டெய்ல் வாங்கித் தர முடியும். 439 00:29:09,833 --> 00:29:12,753 ஆம், நான் அதை விரும்புகிறேன். அதைச் செய்வோம். வா… 440 00:29:13,545 --> 00:29:15,464 சொல்லாமல் இங்கிருந்து பதுங்கிப் போவோம். 441 00:29:17,090 --> 00:29:18,091 ஆம். 442 00:29:27,142 --> 00:29:28,769 ஆம். உன்னால் இதைக் கையாள முடியுமா? 443 00:29:40,405 --> 00:29:43,075 ஹேய், என் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் பாருக்குப் போவோம், சரியா? 444 00:29:45,661 --> 00:29:46,662 வோவ். சரி. 445 00:29:46,745 --> 00:29:48,080 ஓ, இல்லை. அப்படி இல்லை. நான்… 446 00:29:48,664 --> 00:29:50,040 வை 10 மணிக்கு வருகிறாள். 447 00:29:53,752 --> 00:29:54,753 மன்னித்துவிடு. 448 00:29:54,837 --> 00:29:55,838 வையா? 449 00:29:56,755 --> 00:30:00,259 இனி பேசமாட்டேன் என்று கேவலமாகப் பேசினாயே அவளா? 450 00:30:00,926 --> 00:30:03,512 ஆம். ஆம், நாங்கள் திரும்ப டேட் செய்கிறோம், அதனால்… 451 00:30:04,221 --> 00:30:05,514 நீ என்னை சீண்டுகிறாய். 452 00:30:05,597 --> 00:30:07,349 அது நிஜமாகவே நடந்தது. 453 00:30:07,850 --> 00:30:09,852 ஒரு ஹீரோவாக இருந்தது உதவியது என்று நினைக்கிறேன். 454 00:30:10,561 --> 00:30:12,396 நீதான் என்னை வற்புறுத்தி அதைச் செய்ய வைத்தாய். 455 00:30:12,479 --> 00:30:15,732 எனவே நாங்கள் மீண்டும் ஒன்றாக இருப்பது உனக்கு நிஜமாகவே நன்றி. 456 00:30:16,733 --> 00:30:17,734 ஆம், நான். 457 00:30:18,986 --> 00:30:22,573 ஆம், நிச்சயமாக. எங்கே வேண்டுமானாலும் போகலாம். 458 00:30:25,158 --> 00:30:28,579 ஹேய், நீ எந்த மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துகிறாய்? உன் கைகள் வெண்ணெய் போல இருக்கின்றன. 459 00:30:29,162 --> 00:30:30,163 அது வேடிக்கையானது. 460 00:30:41,675 --> 00:30:43,343 - ஹேய். - இறங்கி வந்ததற்கு நன்றி. 461 00:30:43,427 --> 00:30:44,428 இதோ அவளுடைய பொருட்கள். 462 00:30:44,511 --> 00:30:45,804 - சரி. இதுதானா? - அருமை. 463 00:30:45,888 --> 00:30:46,889 - ஆம். - சரி. 464 00:30:48,056 --> 00:30:49,224 ஒரு நொடி பேசலாமா? 465 00:30:52,686 --> 00:30:53,979 - தயவுசெய்து? - அடக் கடவுளே. 466 00:30:54,062 --> 00:30:55,939 கோர்ட்டில் நிறைய பேசினோம். 467 00:30:57,191 --> 00:30:59,443 எனக்குத் தெரியும், அதற்காக நான் வருந்துகிறேன். 468 00:30:59,526 --> 00:31:01,737 ஸ்காட் அதைப் பற்றி பேசுவார் என்று நான் நினைக்கவில்லை, அதுதான் உண்மை. 469 00:31:01,820 --> 00:31:04,364 அவன் உனக்குச் செய்தது தேவையில்லாதது என்று நினைத்தேன். 470 00:31:04,448 --> 00:31:05,991 - அவர் ரொம்ப ஆழமாகப் போனார் என்று நினைக்கிறேன். - அது ரொம்ப கொடூரமானது. 471 00:31:06,074 --> 00:31:08,160 அது கொடுமையாக இருந்தது, என்னை மன்னித்துவிடு. 472 00:31:08,243 --> 00:31:09,995 - சரி. - எனவே இப்போது என்ன? 473 00:31:12,289 --> 00:31:14,333 அதை நீதான் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். 474 00:31:14,416 --> 00:31:15,959 அதாவது, எப்போது போய்ஸிக்கு குடி போகிறீர்கள்? 475 00:31:17,044 --> 00:31:18,462 எனக்குத் தெரியவில்லை. சீக்கிரத்தில். ஆனால்… 476 00:31:20,130 --> 00:31:21,590 நான் தோற்பேன் என்று நினைக்கவில்லை, 477 00:31:21,673 --> 00:31:25,969 எனவே இதை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக நான் நிறைய விஷயங்களை யோசிக்க வேண்டியிருக்கிறது, 478 00:31:26,053 --> 00:31:27,888 ஏனென்றால் திட்டம் என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை. 479 00:31:27,971 --> 00:31:29,139 நீ என்ன நினைக்கிறாய்? 480 00:31:29,890 --> 00:31:31,725 நான் நினைக்கிறேன்… 481 00:31:34,102 --> 00:31:37,105 நான் ஹேஸலின் அம்மா, உன்னுடைய அம்மா இல்லை. 482 00:31:38,106 --> 00:31:39,608 நீதான் அதைக் கண்டுபிடிக்க வேண்டும். 483 00:31:39,691 --> 00:31:41,068 எனக்குப் புரிகிறது. நான் என்ன செய்கிறேன் என்று 484 00:31:41,151 --> 00:31:43,946 நினைக்கிறேன் என்றால், இங்கே நடைமுறை ரீதியாக ஒரு சின்ன உதவியை உன்னிடம் கேட்கிறேன். 485 00:31:44,029 --> 00:31:47,533 நான்… நீ உன் வாழ்க்கையை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று நினைக்கிறேன், கார்ல். 486 00:31:54,456 --> 00:31:55,457 பௌலா. 487 00:31:58,544 --> 00:32:00,170 - பௌலா. - பை, கார்ல். 488 00:32:05,050 --> 00:32:06,051 அடச்சே. 489 00:32:06,552 --> 00:32:07,803 நான் நரகத்தில் இருக்கிறேனா? 490 00:32:08,846 --> 00:32:10,889 இன்னும் மோசம். குயின்ஸில் இருக்கிறாய். 491 00:32:11,682 --> 00:32:13,267 உனக்காக ஒன்றை கொண்டு வந்தேன். 492 00:32:15,394 --> 00:32:17,604 ஹேய், குட்டிப் பையா. 493 00:32:18,230 --> 00:32:21,233 அடடா, பூனை ஸ்பா உன்னை கவர்ச்சியாக ஆக்கிவிட்டது. 494 00:32:21,316 --> 00:32:22,568 நன்றி, ஜி. 495 00:32:25,571 --> 00:32:26,864 சாகாததற்கு நன்றி. 496 00:32:31,243 --> 00:32:32,327 இன்னொன்று… 497 00:32:33,370 --> 00:32:35,038 உன்னைச் சுட்டவளை யாரோ சுட்டுவிட்டார்கள். 498 00:32:35,122 --> 00:32:37,708 அது தோட்டக் குள்ளன் அளவில் இருக்கும் யாரோ ஒருவரா, 499 00:32:38,333 --> 00:32:40,752 அவர்கள் அழகான ஃபிலிப்பினோ உச்சரிப்பில் பேசுவார்களா? 500 00:32:40,836 --> 00:32:43,172 யார் செய்தார்கள், ஏன் செய்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. 501 00:32:43,797 --> 00:32:46,466 சீக்கிரம் குணமாகு, ஏனென்றால் நாம் அதைக் கண்டுபிடிக்கப் போகிறோம். 502 00:33:05,277 --> 00:33:07,362 நாசமாய்ப் போ. ஒவ்வொரு ஆணும் தன்னைத்தானே கவனித்துக்கொள்ளும் ஒரு நேரம் வரும். 503 00:33:10,490 --> 00:33:12,743 ஸ்கேம்பாய்: உடலுறவு, கொலை, மற்றும் ஒரு சிங்கிள் மதர் - ஜெரி சோட்டோ 504 00:33:59,873 --> 00:34:00,874 கடவுளே. 505 00:34:10,007 --> 00:34:11,134 இல்லை. 506 00:34:29,695 --> 00:34:31,697 அழைப்பாளர் பெயர் இல்லை 507 00:34:50,507 --> 00:34:53,427 ஃபோனை எடு. நாம் பேச வேண்டும். 508 00:34:57,306 --> 00:34:59,558 இணைப்பு: 1 வீடியோ 509 00:35:00,684 --> 00:35:01,935 அனுப்பியவர் உங்கள் தொடர்பு பட்டியலில் இல்லை 510 00:35:15,324 --> 00:35:16,909 என்னைத் தவிர்ப்பதை நிறுத்து. 511 00:35:16,992 --> 00:35:18,785 நகரு! நகர்ந்து தொலை! 512 00:35:19,328 --> 00:35:21,246 நான் விலகிப் போக மாட்டேன். 513 00:35:21,747 --> 00:35:23,957 என்னிடம் பேசு அல்லது ஒருவேளை நான் பேச ஆரம்பிப்பேன். 514 00:35:24,041 --> 00:35:25,334 அது எப்படி இருக்கிறது, ம்? 515 00:35:26,168 --> 00:35:28,086 - என்ன? - வழியை விட்டு நகரு. 516 00:35:29,880 --> 00:35:32,966 நான் உனக்கு உறுதியளித்தேன். நீ என்ன, முட்டாளா? 517 00:35:34,468 --> 00:35:36,220 நான் உன்னைக் கொல்லப் போகிறேன். 518 00:35:36,303 --> 00:35:38,305 நீ இதை விரும்பினாய், ஞாபகம் இருக்கிறதா? 519 00:35:40,182 --> 00:35:41,183 நாசமாய்ப் போ! 520 00:36:01,036 --> 00:36:03,789 நீ எங்களுக்குச் சொந்தம். 521 00:36:03,872 --> 00:36:07,251 நீ எங்களுக்கு ஒரு உதவி செய்யப் போகிறாய். 522 00:36:11,964 --> 00:36:16,009 அழைப்பாளர் பெயர் இல்லை அழைப்பை எடுக்க ஸ்லைடு செய்யவும் 523 00:36:29,022 --> 00:36:30,023 ஹலோ? 524 00:37:47,184 --> 00:37:49,186 வசனத் தமிழாக்கம் அருண்குமார்