1 00:00:08,759 --> 00:00:09,801 நீங்கள் லோர்கன் இல்லை. 2 00:00:12,971 --> 00:00:13,972 என்னை இறக்கி விடுங்கள்! 3 00:00:15,474 --> 00:00:16,558 நுழைவாயிலை மூடுங்கள்! 4 00:00:18,227 --> 00:00:19,895 அவனை கீழே விடுங்கள்! 5 00:00:34,868 --> 00:00:36,119 யார் அது? 6 00:00:36,203 --> 00:00:38,664 தன்னுடைய முதல் சந்திப்பை மேம்படுத்த வேண்டிய ஒருவர். 7 00:00:38,747 --> 00:00:42,251 மறுபக்கத்தில் மினட்டோர்கள் இந்தத் தோற்றத்தில் தான் இருக்குமென்றால், 8 00:00:42,334 --> 00:00:44,461 நாம் நினைத்ததை விட சிக்கலான பிரச்சினை காத்திருக்கிறது. 9 00:01:07,484 --> 00:01:10,487 எபிசோடு பத்து சிக்கலை தீர்ப்பவர்களும் போராளிகளும் 10 00:01:28,338 --> 00:01:30,507 பாருங்கள்! குழந்தைகளின் படகு. 11 00:01:30,591 --> 00:01:32,426 அவர்கள் இங்கே இருக்கும் விஷயமாவது தெரிந்துவிட்டது. 12 00:01:32,509 --> 00:01:35,095 இது நல்ல விஷயம் என்பது போல சொல்கிறீர்கள். 13 00:01:35,179 --> 00:01:38,599 ஒருவேளை அவர்கள் நுழைவாயிலை நெருங்கும் முன்பே நாம் அவர்களை பிடிக்க முடியலாம். 14 00:01:39,850 --> 00:01:40,851 வாருங்கள்! 15 00:01:41,476 --> 00:01:43,103 ஹேய், மேலதிகாரி, எங்கே இருக்கிறீர்கள்? 16 00:01:43,604 --> 00:01:46,190 மன்னித்துவிடு, லேலண்ட், பேசுவதற்கு இது சரியான நேரமில்லை. 17 00:01:47,107 --> 00:01:48,483 அதேதான் இங்கேயும். 18 00:01:48,567 --> 00:01:51,528 கோபம் கொண்ட தீவுவாசிகள் பலர் மயானத்திற்குள் நுழைய விரும்புகிறார்கள். 19 00:01:51,612 --> 00:01:53,530 எங்கள் முன்னோர்களுக்கு மரியாதை செய்வது 20 00:01:53,614 --> 00:01:56,366 மத்திய கோடைகால நிலவு திருவிழாவின் முக்கியமான பகுதி. 21 00:01:56,450 --> 00:01:58,452 எங்களை தடுத்து நிறுத்துவது நல்லதல்ல! 22 00:01:59,036 --> 00:02:00,579 அவர்கள் நியாயமாக பேசுகிறார்கள், மேலதிகாரி. 23 00:02:01,747 --> 00:02:03,165 ஜார்ஜ்? 24 00:02:05,042 --> 00:02:06,126 ஜார்ஜ்? 25 00:02:06,668 --> 00:02:07,669 நான் போக வேண்டும். 26 00:02:09,086 --> 00:02:11,173 மேலதிகாரி? 27 00:02:12,049 --> 00:02:13,050 அன்பே? 28 00:02:18,847 --> 00:02:19,681 ம். 29 00:02:20,682 --> 00:02:24,186 -இந்தப் பக்கம். வாருங்கள். நேரத்தை வீணாக்காதீர்கள். -நான் இதற்காகத்தான் காத்திருந்தேன். 30 00:02:28,148 --> 00:02:29,274 என்ன இதெல்லாம்? 31 00:02:29,358 --> 00:02:31,985 மறு அறிவிப்பு வரும் வரை மயானம் மூடப்படுகிறது. 32 00:02:32,569 --> 00:02:33,946 மூடப்படுகிறதா? 33 00:02:34,029 --> 00:02:37,658 இந்த மக்கள் எல்லாம் எவ்வளவு தூரத்தில் இருந்து வந்திருக்கிறார்கள், 34 00:02:38,367 --> 00:02:43,830 நிலவு திருவிழாவை அனுபவிக்க எவ்வளவு பணம் செலுத்தி இருக்கிறார்கள் என்று தெரியுமா? 35 00:02:43,914 --> 00:02:46,792 மயானத்தை விடுங்கள். நாங்கள் மினட்டோரைப் பார்க்க வேண்டும். 36 00:02:46,875 --> 00:02:50,546 -ஆம், அது எங்கே? -இப்போது, அவசரப்படாதீர்கள். 37 00:02:50,629 --> 00:02:53,090 வண்டியை எடுத்துப் போய் லோர்கனை அழைத்து வா. 38 00:02:53,173 --> 00:02:56,093 அவன் இருக்குமிடம் எனக்குத் தெரியாது. தவிர, நான் சொல்வதை அவன் கேட்க மாட்டான். 39 00:02:56,176 --> 00:02:59,388 -அவனைக் கண்டுபிடித்து சொல்வதை கேட்க வை. -எப்படி? 40 00:02:59,972 --> 00:03:03,642 பணம்! பொய்கள்! நாய் பிஸ்கட்கள்! எனக்குக் கவலையில்லை. அவனை அழைத்து வா! 41 00:03:03,725 --> 00:03:06,645 இந்த முட்டாள்கள் விரைவில் மினட்டோரை பார்க்கவில்லை என்றால் 42 00:03:07,312 --> 00:03:09,147 நிலைமை மிகவும் மோசமடைந்துவிடும். 43 00:03:11,608 --> 00:03:12,818 சரி, எங்கே நிறுத்தினேன்? 44 00:03:34,006 --> 00:03:38,510 லோர்கன் கிடைக்காத நிலையில் திருவிழாவுக்குப் போவது சரியாகத் தோன்றவில்லை. 45 00:03:39,178 --> 00:03:41,972 தெரியும், ஆனால் நாம் சந்தேகப்படும்படி நடக்கக் கூடாது. 46 00:03:42,055 --> 00:03:45,350 இந்த தீவின் இரகசியங்களை பாதுகாப்போம் என உறுதிமொழி எடுத்திருக்கிறோம். 47 00:03:45,434 --> 00:03:47,269 எதுவும் நடக்காதது போல இருக்க வேண்டும். 48 00:03:47,853 --> 00:03:50,981 லோர்கன் வேறொரு உலகத்திற்கான நுழைவாயிலைக் கண்டுபிடித்து 49 00:03:51,064 --> 00:03:52,733 அதன் வழியாக மறைந்து போகவில்லை என்றால்? 50 00:03:52,816 --> 00:03:53,984 அதேதான். 51 00:03:58,322 --> 00:03:59,323 என்ன? 52 00:04:30,020 --> 00:04:33,065 முட்டாள்தனமான, கேவலமான குப்பையே! 53 00:04:47,913 --> 00:04:50,749 அது வெறும்... நான்... இது... 54 00:04:51,750 --> 00:04:52,751 என்ன? 55 00:05:02,511 --> 00:05:03,971 கொஞ்சம் பொறுங்கள். 56 00:05:04,888 --> 00:05:06,139 கண்டிப்பாக. 57 00:05:10,894 --> 00:05:13,146 நீ வீட்டிற்குத் திரும்புவதால் உன் பெற்றோர் மிகவும் நிம்மதியடைவார்கள். 58 00:05:13,814 --> 00:05:15,357 -என்னால் அங்கே தங்க முடியாது. -என்ன சொல்கிறாய்? 59 00:05:15,941 --> 00:05:18,610 தீய சக்தி மறுபக்கத்தை அழித்துக்கொண்டிருக்கிறது, 60 00:05:18,694 --> 00:05:20,571 மினட்டோர்கள் அதைச் செய்ய உதவுகின்றன. 61 00:05:20,654 --> 00:05:22,823 ஆனால், லோர்கன், உன்னால் என்ன செய்ய முடியும்? 62 00:05:22,906 --> 00:05:26,451 என் அப்பா இறந்துவிட்டார். அது என்னை அரியணைக்கு அடுத்த வாரிசாக்குகிறது. 63 00:05:26,535 --> 00:05:29,496 நான் மினட்டோர் ராஜாவாகும்போது, எல்லாவற்றையும் மாற்றுவேன். 64 00:05:29,580 --> 00:05:30,873 அவள் அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டாள். 65 00:05:31,373 --> 00:05:32,249 யார்? 66 00:05:32,332 --> 00:05:36,170 காய். நீ உயிரோடு இருப்பதை அறிந்த ஒரே மினட்டோர். 67 00:05:36,670 --> 00:05:39,256 அவள் ஏற்கனவே உன்னை தடுத்து நிறுத்தப் பார்த்தாள். 68 00:05:39,339 --> 00:05:42,968 ஆனால் ஆட்சி உரிமை, அடுத்து வாரிசாக இருப்பவருக்கே போகும் என்று நீங்கள் தானே சொன்னீர்கள். 69 00:05:43,594 --> 00:05:47,806 உனக்கு அடுத்து, வாரிசாக அவள் தான் இருக்கிறாள். 70 00:05:47,890 --> 00:05:48,974 எனக்குப் புரியவில்லை. 71 00:05:49,683 --> 00:05:52,686 காய் உன் சகோதரி. 72 00:05:56,648 --> 00:05:58,859 நமக்குத் தேவை ஒரு திட்டம். 73 00:05:58,942 --> 00:06:02,446 நமக்கு வேண்டியதெல்லாம் கதவுக்கு மறுபக்கத்தில் உள்ள ஆறு அடி உயர, 74 00:06:02,529 --> 00:06:04,072 திரிசூலத்தை ஏந்தியிருக்கும் மினட்டோர் தான். 75 00:06:06,283 --> 00:06:08,160 நல்லவேளை, எனக்கு தாமதமாகவில்லை. 76 00:06:08,243 --> 00:06:11,580 எங்களை தடுத்து நிறுத்த இங்கே வந்திருந்தால், நீங்கள் உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள். 77 00:06:11,663 --> 00:06:14,458 நான் உங்களை தடுத்த நிறுத்த வரவில்லை. நானும் உங்களோடு வருகிறேன். 78 00:06:14,541 --> 00:06:15,542 நீங்களா? 79 00:06:15,626 --> 00:06:19,296 நிச்சயமாக. லோர்கனுக்கு நாம் தேவை. நாம் எல்லோரும். 80 00:06:19,379 --> 00:06:21,006 இந்த தருணத்தைக் கெடுப்பதை வெறுக்கிறேன், 81 00:06:21,089 --> 00:06:24,343 ஆனால் இரண்டாவது கதவுக்கு பின்னால் இருப்பதைப் பற்றி நீ சொல்கிறாயா அல்லது நான் சொல்லவா? 82 00:06:32,601 --> 00:06:36,021 நீ வந்த நாள் முதல், நாங்கள் உன்னிடம் இரகசியங்களை மறைத்து வருகிறோம், 83 00:06:36,104 --> 00:06:38,524 ஆனால் உனக்கு ஒரு சகோதரி இருப்பது எங்களுக்கே தெரியாது. 84 00:06:39,107 --> 00:06:42,069 இரட்டையர், லோர்கனுக்குப் பிறகு சில நிமிடங்களில் பிறந்தாள். 85 00:06:43,153 --> 00:06:45,989 அவள் எப்படி தன் சகோதரனை விட்டுவிட்டு ஆட்சி உரிமையை தேர்ந்தெடுக்க முடியும்? 86 00:06:46,073 --> 00:06:48,659 தீய சக்தி அவளை ஆட்டிப்படைக்கிறது. 87 00:06:49,660 --> 00:06:51,703 மினட்டோர்களின் புத்தி அவர்களுடையதாக இருக்காது. 88 00:06:52,829 --> 00:06:55,582 இந்த தீய சக்தியால் நீங்கள் ஏன் பாதிக்கப்படவில்லை. 89 00:06:55,666 --> 00:06:58,377 நான் பல வருடங்களாக தலைமறைவாக வாழ்ந்து வருகிறேன். 90 00:06:59,336 --> 00:07:03,423 ஆனால் அது வேகமாக பரவுகிறது. விரைவில் எங்கும் ஒளிய முடியாத நிலை ஏற்படும். 91 00:07:03,507 --> 00:07:06,677 நான் காயை எதிர்கொள்ள வேண்டும். அதுதான் ஒரே வழி. 92 00:07:06,760 --> 00:07:09,304 வேண்டாம். அவள் மிகவும் வலிமையானவள். 93 00:07:09,388 --> 00:07:10,722 நான் அவளிடம் பேச முடிந்தால்... 94 00:07:10,806 --> 00:07:15,686 உன்னால் ஒருபோதும் திரும்பிப் போக முடியாது. என் உலகம் காப்பாற்றும் கட்டத்தை தாண்டிவிட்டது. 95 00:07:15,769 --> 00:07:19,481 இப்போது நாங்கள் உன்னையும் இந்த உலகத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும், 96 00:07:20,065 --> 00:07:22,734 நுழைவாயில்கள் நிரந்தரமாக மூடியே இருக்க வேண்டும். 97 00:07:22,818 --> 00:07:25,529 நுழைவாயில்களா? ஒன்றுக்கும் மேற்பட்டவை இருக்கின்றனவா? 98 00:07:27,197 --> 00:07:30,158 மினட்டோரோ இல்லையோ, நாம் நுழைவாயிலை திறக்க வேண்டும். 99 00:07:30,242 --> 00:07:31,493 நமக்கு வேறு வழி இல்லை. 100 00:07:31,577 --> 00:07:32,911 தாத்தா சொல்வது சரிதான். 101 00:07:32,995 --> 00:07:35,956 மீண்டும் லோர்கனைப் பார்க்க இதுதான் நம்முடைய ஒரே நம்பிக்கை. 102 00:07:37,124 --> 00:07:39,334 நீ அப்படி சொல்கிறாய் என்றால்... 103 00:07:39,418 --> 00:07:40,419 ஏற்றுக்கொள்கிறேன். 104 00:07:50,095 --> 00:07:54,183 நிறுத்து! அது சொல்வதைக் கேட்காதே. தாயத்தைக் கொடு. 105 00:07:54,766 --> 00:07:57,936 அது உருமாறும் மிருகம். அதனிடம் தாயத்தைக் கொடுக்காதே. 106 00:07:58,020 --> 00:08:00,981 கண்டிப்பாக அது சொல்லும். அதுதான் உருமாறும் மிருகம். 107 00:08:01,732 --> 00:08:02,774 நான் என்ன செய்வேன்? 108 00:08:02,858 --> 00:08:04,359 -அதை இவரிடம் கொடு. -அதை அவரிடம் கொடுக்காதே. 109 00:08:04,443 --> 00:08:06,153 நீ என்ன பேசுகிறாய்? 110 00:08:06,236 --> 00:08:07,362 உதவவில்லை. 111 00:08:12,284 --> 00:08:17,581 பல வரலாற்றாசிரியர்கள் இடிபாடுகள் இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம் என்று நம்புகிறார்கள்... 112 00:08:20,626 --> 00:08:21,752 ஹலோ, நண்பர்களே. 113 00:08:23,253 --> 00:08:24,546 சார்லியையோ ஜார்ஜையோ பார்த்தீர்களா? 114 00:08:25,214 --> 00:08:27,132 ஏன், இல்லை, நாங்கள் பார்க்கவில்லை. 115 00:08:27,216 --> 00:08:28,383 டேனாவைக் கேட்டீர்களா? 116 00:08:28,467 --> 00:08:32,136 அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நாள் முழுவதும் யாரும் எந்த குழந்தைகளையும் பார்க்கவில்லை. 117 00:08:32,221 --> 00:08:33,347 அது விநோதமாக இருக்கிறது. 118 00:08:33,429 --> 00:08:35,265 நான் கவலைப்பட மாட்டேன். 119 00:08:35,349 --> 00:08:38,143 ஒரு தெளிவான விளக்கம் இருக்க வேண்டும். 120 00:08:43,065 --> 00:08:44,358 என்னை பயமுறுத்தாதே, உருமாறும் மிருகமே. 121 00:08:44,983 --> 00:08:47,528 உருமாறும் மிருகங்கள் வஞ்சகமான உயிரினங்கள், இல்லையா? 122 00:08:52,824 --> 00:08:53,659 நாம் உதவ வேண்டுமா? 123 00:08:56,703 --> 00:08:58,747 -நாம் உதவ வேண்டும் என்று தோன்றுகிறது. -யாருக்கு உதவுவது? 124 00:09:07,673 --> 00:09:10,384 உன் தாத்தாவுக்கு வயதாகி இருந்தாலும், அவரால் இன்னமும் சண்டை போட முடியும் போல தெரிகிறது. 125 00:09:10,467 --> 00:09:12,511 தாயத்திடமிருந்து விலகி இரு. 126 00:09:13,178 --> 00:09:14,847 நான்தான் உருமாறும் மிருகம் என்று இன்னமும் நினைக்கிறீர்களா? 127 00:09:14,930 --> 00:09:17,766 கோபிக்க வேண்டாம், ஆனால் ஒருவேளை? 128 00:09:17,850 --> 00:09:19,893 ஒரு முதியவரால், தற்காப்புக் கலைகளில் தேர்ச்சி பெற்ற 129 00:09:19,977 --> 00:09:22,312 ஒருவராக இருந்தாலும் கூட, ஒரு உருவத்தை மாற்றும் அரக்கனோடு 130 00:09:22,396 --> 00:09:26,525 நேருக்கு நேராக சண்டையிடுவது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது. 131 00:09:26,608 --> 00:09:29,695 இவள் நீட்டி முழக்கினாலும், ஒரு நல்ல கருத்தை சொல்கிறாள். 132 00:09:39,329 --> 00:09:42,833 நிச்சயமாக அரக்கன் தன் எதிரிக்கு முதுகைக் காட்டாத வரை. 133 00:09:45,127 --> 00:09:48,213 இதை எந்தவொரு தற்காப்பு கலை வீரரும் செய்ய மாட்டார். 134 00:09:48,297 --> 00:09:52,050 அது அவர்தான். எங்கிருந்தாலும் என் தாத்தாவை எனக்குத் தெரியும். 135 00:09:58,015 --> 00:09:58,932 ஹலோ. 136 00:09:59,016 --> 00:10:02,144 நான் என் தாத்தாவுடன் அதிகமான நேரத்தை செலவிட வேண்டும். 137 00:10:02,227 --> 00:10:05,314 அதிகப்படியாக நடித்துவிட்டேன் என்று நினைக்கிறேன், இல்லையா? 138 00:10:06,273 --> 00:10:08,692 இப்போது நுழைவாயிலைத் திறங்கள். 139 00:10:08,775 --> 00:10:12,029 சார்லியை நீ பிடித்து வைத்திருக்கும் வரை, நுழைவாயில் மூடியே தான் இருக்கும். 140 00:10:12,112 --> 00:10:13,447 நீ நுழைவாயிலைத் திறந்த பிறகு 141 00:10:13,530 --> 00:10:15,991 நான் உன் நண்பனை விடுவிக்கிறேன். 142 00:10:16,491 --> 00:10:18,702 -நீ என்னை நம்பலாம். -அதைத் திறக்காதே! 143 00:10:20,537 --> 00:10:21,538 நல்லது. 144 00:10:27,961 --> 00:10:29,046 அப்படித்தான். 145 00:10:36,136 --> 00:10:37,638 இப்போது அவனை விடு. 146 00:10:37,721 --> 00:10:39,765 நான் ஏன் அதைச் செய்ய வேண்டும்? 147 00:10:40,432 --> 00:10:42,476 நீ சத்தியம் செய்திருப்பதால். 148 00:10:42,559 --> 00:10:44,311 இப்போது அந்தப் பையனை விடு. 149 00:10:46,647 --> 00:10:49,441 நீ யாரோடு மோதுகிறாய் என்று உனக்குத் தெரியவில்லை. 150 00:10:49,525 --> 00:10:50,817 தெரியப்படுத்து. 151 00:11:19,513 --> 00:11:23,100 தெரியும். இதைப் புரிந்துகொள்வது கடினம். ஆனால் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். 152 00:11:23,183 --> 00:11:24,434 உங்கள் வாயை மூடுங்கள். 153 00:11:25,435 --> 00:11:27,980 நீங்களும் ஜார்ஜும் இங்கிருந்து வெளியே போங்கள். 154 00:11:28,063 --> 00:11:29,606 நீங்கள் என்ன சொன்னாலும் செய்கிறோம், மேலதிகாரி. 155 00:11:29,690 --> 00:11:31,525 லோர்கன் இல்லாமல் நான் போக மாட்டேன். 156 00:11:31,608 --> 00:11:36,071 லோர்கன் இந்த தீவுக்கு வந்த இரவு முதல், நான்தான் அவனுடைய பாதுகாவலராக இருக்கிறேன். 157 00:11:36,154 --> 00:11:40,951 அவனை மீண்டும் அழைத்து வர என்னால் முடிந்த எல்லாவற்றையும் சத்தியமாக செய்வேன். 158 00:11:41,034 --> 00:11:44,830 ஆனால் இப்போது, ஜார்ஜுக்குத்தான் உங்கள் உதவி தேவைப்படுகிறது. 159 00:11:48,375 --> 00:11:51,712 சரி, தாத்தாவுக்காக. ஆனால் லோர்கனுக்காக திரும்பி வருவேன். 160 00:12:05,142 --> 00:12:07,019 நான் எப்படி உன்னை உணராமல் போனேன்? 161 00:12:07,853 --> 00:12:10,147 முற்றிலும் வியப்பூட்டுகிறது. 162 00:12:10,230 --> 00:12:14,026 நீ யாருடன் மோதுகிறாய் என்று உனக்குக் தெரியவில்லை. 163 00:12:22,201 --> 00:12:26,330 எனவே, அமானுஷ்யமான அமைதி அதிகாரிக்கு என்ன ஆனது? 164 00:12:27,998 --> 00:12:32,002 மேலதிகாரி வாக்கர் லோர்கனின் பாதுகாவலர் என்பதை விட 165 00:12:32,085 --> 00:12:34,630 சில புராணக்கதைகளின்படி அவர் தேவதை போர்வீரர். 166 00:12:35,380 --> 00:12:39,259 நுழைவாயில்கள் சீல் வைக்கப்பட்டதிலிருந்து அவர் அவற்றை காவல் காக்கிறார். 167 00:12:39,343 --> 00:12:44,014 ஆனால் அது அவரை ஆயிரம் வருடங்கள் பழமையானவராக காட்டாதா? 168 00:12:44,097 --> 00:12:45,098 கண்டிப்பாக. 169 00:12:45,182 --> 00:12:48,268 ஆம். இப்போது எல்லாம் புரிகிறது. 170 00:12:48,352 --> 00:12:49,811 என்ன சொன்னாய்? 171 00:12:49,895 --> 00:12:51,605 நுழைவாயில்கள் சீல் வைக்கப்பட்டதிலிருந்து, 172 00:12:51,688 --> 00:12:54,191 இரு தாயத்துகளும் இந்த தீவிலேயே தான் இருந்துள்ளன. 173 00:12:54,274 --> 00:12:59,071 குழந்தை லோர்கனை உள்ளே விட நுழைவாயிலைத் திறந்தது ஒரு தேவதை தான். 174 00:12:59,655 --> 00:13:02,366 எனவே வாக்கர் இங்கே நீண்ட காலமாக இருக்க வேண்டும். 175 00:13:02,449 --> 00:13:05,118 மேலதிகாரி வாக்கர் நிஜமாகவே ஆயிரம் வருடங்கள் பழமையானவர் தான். 176 00:13:05,786 --> 00:13:08,121 ஆஹா. வயது அதிகரிப்பதை குறைப்பதற்கான சடங்குகளை செய்திருப்பார். 177 00:13:17,673 --> 00:13:18,924 நிறுத்து. 178 00:13:19,007 --> 00:13:20,133 நான் எதுவும் செய்யவில்லை. 179 00:13:20,217 --> 00:13:24,847 ஆம், செய்யவில்லை. நீ யோசிக்கிறாய், நீ என்ன யோசிக்கிறாய் என்று எனக்குத் தெரியும். 180 00:13:24,930 --> 00:13:26,306 நீ நிறுத்த வேண்டும். 181 00:13:27,015 --> 00:13:28,016 என்னால் முடியாது. 182 00:13:28,767 --> 00:13:31,645 மறுபக்கம் ஒரு தீய சக்தியால் அழிந்து கொண்டிருக்கிறது, 183 00:13:32,145 --> 00:13:36,650 மினட்டோர்களின் மனதில் தீய எண்ணத்தை விதைத்து, தனது பாதையில் உள்ள எல்லாவற்றையும் அழித்தது. 184 00:13:37,317 --> 00:13:39,653 இறுதியாக நான் வாழக் கூடிய ஒரு உலகத்தைக் கண்டுபிடித்தேன், 185 00:13:40,654 --> 00:13:41,697 அது அழிந்துகொண்டிருக்கிறது. 186 00:13:44,825 --> 00:13:47,160 நான் இப்போது எப்படி என் பழைய வாழ்க்கைக்குத் திரும்புவேன்? 187 00:13:47,244 --> 00:13:49,413 என்னால் இங்கே ஒளிந்துகொண்டு நடப்பதை வேடிக்கை பார்க்க முடியாது. 188 00:13:50,080 --> 00:13:54,001 மிகவும் தாமதமாகிவிட்டது, லோர்கன். ஏரியனிஸ் சொன்னதை கேட்டாய் தானே. 189 00:13:54,084 --> 00:13:56,378 எனக்கு ஒரு சகோதரி இருக்கிறாள் என்று சொன்னதையும் கேட்டேன். 190 00:13:56,461 --> 00:13:59,590 உன்னை விட்டுவிட்டு அரியணையை தேர்ந்தடுத்த சகோதரி. 191 00:14:00,174 --> 00:14:02,676 ஏனென்றால் தீய சக்தி அவள் மனதை கெடுத்துவிட்டது. 192 00:14:03,302 --> 00:14:04,469 காய்க்கு என் உதவி தேவை. 193 00:14:19,943 --> 00:14:21,069 இல்லை! 194 00:14:53,852 --> 00:14:57,147 நாம் இருவரும் ஒருவரையொருவர் குறைத்து மதிப்பிட்டுவிட்டோம் என்று நினைக்கிறேன். 195 00:15:04,071 --> 00:15:05,531 சரி, போகலாம். 196 00:15:09,159 --> 00:15:11,703 வாய்ப்பே இல்லை. முடியாது. அது நடக்காது. 197 00:15:11,787 --> 00:15:14,581 நான்தான் இங்கே படகை ஓட்டிவந்தேன். உங்களில் ஒருவர் செய்யுங்கள். 198 00:15:15,207 --> 00:15:17,042 -தோள்பட்டை வலிக்கிறது. -குடை வைத்திருக்கிறேன். 199 00:15:17,125 --> 00:15:18,252 கால். 200 00:15:36,645 --> 00:15:41,567 -அப்படித்தான். ஆம்! -இல்லை! 201 00:15:43,026 --> 00:15:44,027 இல்லை! 202 00:15:52,703 --> 00:15:55,497 இறுதியாக, நம் காலம் முடிந்துவிட்டது. 203 00:15:55,581 --> 00:15:59,793 குட்பை, மேலதிகாரி வாக்கர். மாயமாக இருந்தது. 204 00:16:43,670 --> 00:16:45,005 மன்னியுங்கள், ஜார்ஜ். 205 00:16:45,088 --> 00:16:47,299 இவை எதுவும் நடக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. 206 00:16:47,382 --> 00:16:49,551 நாங்கள் லோர்கனுக்கு உதவத்தான் முயன்றோம். 207 00:16:50,052 --> 00:16:54,681 ஆனால் இப்போது நீங்கள் காயப்பட்டீர்கள், லோர்கனைக் காணவில்லை, எல்லாம் எங்கள் தவறு. 208 00:16:55,349 --> 00:17:00,020 சத்தியம் செய்கிறேன், லோர்கன் திரும்ப கிடைத்தவுடன், எங்கள் சாகச நாட்கள் முடிந்துவிடும். 209 00:17:00,103 --> 00:17:02,606 முடிந்துவிடுமா? இது வெறும் ஆரம்பம்தான். 210 00:17:02,689 --> 00:17:05,567 லோர்கனுக்கு மட்டும் தலைவிதி இல்லை. 211 00:17:05,651 --> 00:17:07,236 என்ன சொல்கிறீர்கள்? 212 00:17:07,319 --> 00:17:12,031 நீங்கள், நீங்கள் மூவரும், அடுத்த தலைமுறை மூத்தவர்களாக இருக்க வேண்டும். 213 00:17:12,115 --> 00:17:15,493 சில குறுகிய வாரங்களில், நீங்கள் பல இரகசியங்களை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள், 214 00:17:15,577 --> 00:17:21,791 அதோடு உங்களுக்கு முன் இருந்த மூத்தவர்களை விட அதிக தைரியத்தையும் பலத்தையும் காட்டினீர்கள். 215 00:17:22,416 --> 00:17:25,378 அடுத்த மூத்தவர்களா, நாங்களா? 216 00:17:26,547 --> 00:17:27,923 பொறுங்கள், நாங்களா? 217 00:17:28,006 --> 00:17:29,967 ஆனால் நாங்கள் குழந்தைகள். 218 00:17:30,050 --> 00:17:32,511 நாங்கள் எப்படி உலகத்தை ஒரு தீய மினட்டோர் 219 00:17:32,594 --> 00:17:34,972 பேரரசிடம் இருந்து காப்பாற்றுவோம்? 220 00:17:35,055 --> 00:17:38,934 எனக்குத் தெரியாது, ஆனால் நாம் எதையாவது சீக்கிரம் சிந்திப்பது நல்லது. 221 00:17:46,984 --> 00:17:48,360 எங்களை உள்ளே விடு! 222 00:17:48,443 --> 00:17:51,405 -எங்களை உள்ளே விடு! -போதும், லேலண்ட். 223 00:17:51,488 --> 00:17:56,118 நீ இப்போது இந்த வாயிலைத் திற அல்லது நாங்கள் அதை உடைப்போம்! 224 00:17:56,702 --> 00:17:59,663 சரி, நாம் எல்லோரும் ஆசுவாசப்படுத்திக்கொண்டு, அமைதி காப்போம். 225 00:18:01,039 --> 00:18:03,125 நீங்கள் இதை சரிசெய்வீர்கள் என்று நினைத்தேன். 226 00:18:03,208 --> 00:18:05,085 எனவே நான் செய்யப் போகிறான். 227 00:18:06,128 --> 00:18:08,005 இதோ என் கூட்டாளி வந்துவிட்டார். 228 00:18:09,298 --> 00:18:12,342 -லோர்கன் எங்கே? -அவன் இங்கே இல்லை. 229 00:18:12,426 --> 00:18:13,886 அது எனக்குத் தெரிகிறது. 230 00:18:13,969 --> 00:18:18,473 இல்லை. அதாவது அவன் இந்த உலகத்தில் இல்லை. 231 00:18:19,057 --> 00:18:21,310 வெஸ்லி, "இல்லை என்பதற்கு குறைவான" 232 00:18:21,393 --> 00:18:23,937 நீ சொல்லும் எதுவும் உதவாது என்பதை தெரிந்துகொள். 233 00:18:24,980 --> 00:18:26,106 அடடா. 234 00:18:26,190 --> 00:18:28,358 பிரையனி தீவின் மர்மமான நாட்டுப்புறக் கதைகள் மூலம் 235 00:18:28,442 --> 00:18:31,403 நீங்கள் எங்களுக்கு ஒரு மாயாஜால பயணத்துக்கு உறுதியளித்தீர்கள். 236 00:18:31,486 --> 00:18:36,283 இதுவரை நாங்கள் ஒரு மாயாஜாலத்தையும் மர்மத்தையும் பார்க்கவில்லை... 237 00:18:49,338 --> 00:18:50,339 ஹாய். 238 00:19:04,520 --> 00:19:07,272 -அவளை ஒருபோதும் விஞ்ச மாட்டோம். -நாம் இங்கே இருக்க முடியாது. 239 00:19:07,356 --> 00:19:09,691 புயல் மோசமடைகிறது, ஜார்ஜுக்கு உதவி தேவை. 240 00:19:09,775 --> 00:19:13,403 பார், ஒளிப் பந்தம், "ஒரு நீண்ட தூர ஆபத்து சமிக்ஞை." 241 00:19:13,487 --> 00:19:14,821 -செய்! -பொறு. 242 00:19:14,905 --> 00:19:16,865 சில பாதுகாப்பு வழிமுறைகள் இருக்கின்றன. 243 00:19:17,366 --> 00:19:20,827 "எண் ஒன்று: மக்கள் அல்லது பொருள் மீது சுட்டிக்காட்டக் கூடாது. 244 00:19:21,328 --> 00:19:24,164 எண் இரண்டு: வீட்டிற்குள் பயன்படுத்தக் கூடாது. 245 00:19:24,248 --> 00:19:27,626 எண் மூன்று: எப்பொழுதும் உங்கள் உடலை நோக்கிக் காட்டக் கூடாது. 246 00:19:27,709 --> 00:19:30,087 -எண் நான்கு"... -இதை வேகப்படுத்த முடியும் என்று நினைக்கிறாயா? 247 00:19:30,170 --> 00:19:34,216 நான் ஆபத்துக்கு வழிவகுக்க மாட்டேன். ஒளிப் பந்தங்கள் ஆபத்தானவை. 248 00:19:34,299 --> 00:19:36,635 ஆயுதமேந்திய கோபமான மினட்டோர்களைப் போல இல்லையா? 249 00:19:38,512 --> 00:19:39,596 "எண் நான்கு." 250 00:19:47,145 --> 00:19:49,648 -நாங்கள் மிகவும் கவலைப்பட்டோம். -நான் நன்றாக இருக்கிறேன், அம்மா. 251 00:19:50,315 --> 00:19:51,692 உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி, மகனே. 252 00:19:51,775 --> 00:19:53,277 ஆம், நன்றி. 253 00:19:54,069 --> 00:19:56,154 இது ஏரியனிஸ். அவர் என்னுடைய... 254 00:19:57,614 --> 00:20:01,201 உன் அம்மா. ஆம், எனக்குத் தெரியும். அவருக்கு நம் உதவி தேவைப்படுவது போல தெரிகிறது. 255 00:20:01,827 --> 00:20:02,828 நான் அவரைப் பிடித்துக்கொள்கிறேன். 256 00:20:04,538 --> 00:20:06,164 நான் இவரை என் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறேன். 257 00:20:09,293 --> 00:20:14,298 "எண் 24: சூடான காற்று பலூனை பறக்கவிடும் பருவத்தில் பயன்படுத்தக் கூடாது." 258 00:20:14,381 --> 00:20:15,465 சரி, போதும். 259 00:20:24,725 --> 00:20:27,853 பின்வாங்குங்கள். அங்கேயே இருங்கள். இங்கே பார்க்க எதுவும் இல்லை. 260 00:20:27,936 --> 00:20:29,354 பின்வாங்குங்கள். அங்கேயே இருங்கள். 261 00:20:29,438 --> 00:20:32,149 -நாம் போக வேண்டும். -பொறுங்கள். சார்லி எங்கே? 262 00:20:32,232 --> 00:20:35,152 எங்களுக்குத் தெரியாது. அவனை நாள் முழுவதும் காணவில்லை. ஜார்ஜ் கூட. 263 00:20:35,235 --> 00:20:37,821 டேனா அல்லது ஹார்பரை எங்கும் பார்க்க முடியவில்லை. 264 00:20:38,530 --> 00:20:39,531 பாருங்கள். 265 00:20:42,743 --> 00:20:43,744 நீ என்ன செய்கிறாய்? 266 00:20:43,827 --> 00:20:45,495 அது அவர்கள்தான். எனக்குத் தெரியும். 267 00:20:48,123 --> 00:20:50,375 -இல்லை! லோர்கன், பொறு! -திரும்பி வா! 268 00:20:55,714 --> 00:20:58,342 இது அருமை! 269 00:20:58,425 --> 00:21:02,137 அடுத்தது என்ன? இல்லை, என்னிடம் சொல்லாதீர்கள். நான் அதைக் கெடுக்க விரும்பவில்லை. 270 00:21:02,221 --> 00:21:03,388 என்னவொரு காட்சி! 271 00:21:03,472 --> 00:21:05,015 காட்சியா? 272 00:21:20,113 --> 00:21:22,908 எல்லோரும், மீண்டும் பேருந்தில் ஏறுங்கள். 273 00:21:43,762 --> 00:21:47,891 கிட்டத்தட்ட தப்பிவிட்டீர்கள், ஆனாலும் பிடித்துவிட்டேன். 274 00:21:50,102 --> 00:21:54,273 என் தாத்தாவுக்கு காயம் ஏற்பட்டது, அவர் தேவையான உதவியைப் பெறுவதை எதுவும் தடுக்கப் போவதில்லை. 275 00:21:56,066 --> 00:21:57,985 லோர்கன்! நீ திரும்பி வந்துவிட்டாய்! 276 00:21:58,068 --> 00:22:01,280 நல்ல விஷயமும் கூட. உன்னால் பிரச்சினையில் சிக்காமல் இருக்க முடியாது, இல்லையா? 277 00:22:03,991 --> 00:22:04,992 தாத்தா? 278 00:22:06,785 --> 00:22:08,412 நீங்கள் இவரை டாக்டர் எல்சனிடம் அழைத்துச் செல்லுங்கள். 279 00:22:12,749 --> 00:22:13,876 இதை வாங்கிக்கொள். 280 00:22:14,376 --> 00:22:17,129 நீ விளையாடுகிறாயா? அவளை நீ தனியாக எதிர்கொள்ள முடியாது. 281 00:22:17,212 --> 00:22:19,631 இது எனக்கும் என் சகோதரிக்கும் இடையிலான பிரச்சினை. இப்போது போ! 282 00:22:20,299 --> 00:22:22,259 "சகோதரி" என்று சொன்னானா? 283 00:22:22,342 --> 00:22:23,886 எனக்கு ஒரு ஒன்றுவிட்ட சகோதரி இருக்கிறாளா? 284 00:22:23,969 --> 00:22:26,346 வாழ்த்துக்கள். அவள் இனிமையானவள். 285 00:22:27,931 --> 00:22:29,766 வாருங்கள். ஜார்ஜூக்கு நாங்கள் தேவை. 286 00:22:30,601 --> 00:22:31,602 நாங்கள் உதவி பெறுவோம்! 287 00:22:31,685 --> 00:22:35,689 எனவே இறுதியாக நீ ஓடுவதை நிறுத்திவிட்டு சண்டையிட முடிவு செய்திருக்கிறாய். 288 00:22:36,273 --> 00:22:38,150 ஒருவேளை, நீயும் ஒரு மினட்டோராக இருக்கலாம். 289 00:22:38,233 --> 00:22:39,526 நான் சண்டையிட இங்கே வரவில்லை. 290 00:22:40,152 --> 00:22:42,529 சரி, இதற்கு நீண்ட நேரம் ஆகாது. 291 00:22:47,159 --> 00:22:50,913 இது நீ இல்லை காய். நீ அந்த தீய சக்தியை விட்டுவிட வேண்டும். 292 00:22:50,996 --> 00:22:52,414 உனக்கு எதுவும் தெரியாது. 293 00:23:03,717 --> 00:23:05,427 வேகமாகக் கற்றுக்கொள்பவன் இல்லை, அப்படித்தானே? 294 00:23:23,904 --> 00:23:28,575 நீ ஒருபோதும் என் அப்பாவின் கிரீடத்தை அணிய மாட்டாய். அது எனக்குச் சொந்தமானது! 295 00:23:28,659 --> 00:23:30,410 எனக்கு கிரீடம் தேவையில்லை. 296 00:23:30,494 --> 00:23:32,079 ஆனால் நான் மாற்றத்தை விரும்புகிறேன். 297 00:23:32,579 --> 00:23:35,374 மறுபக்கம் இறந்து கொண்டிருக்கிறது. உனக்குத் தெரியவில்லையா? 298 00:23:35,457 --> 00:23:38,627 ஆரபோர்! அதன் பெயர் ஆரபோர். 299 00:23:38,710 --> 00:23:41,922 நம் உலகின் பெயர் கூட உனக்குத் தெரியவில்லை, ஆனால் அவர்கள் உன்னை ராஜாவாக்குவார்கள். 300 00:23:42,005 --> 00:23:44,258 நீ நம் அப்பா போல இருக்க வேண்டியதில்லை. 301 00:23:44,341 --> 00:23:47,761 நீ ஆரபோருக்கு அமைதியைக் கொண்டுவரலாம். தீய சக்தியை வெளியேற்றலாம். 302 00:23:52,349 --> 00:23:53,350 பார்த்தாயா? 303 00:23:53,433 --> 00:23:56,061 விஷயங்கள் எப்படி நடக்க வேண்டும் என்று நீ ஏற்கனவே முடிவு செய்ய தொடங்கிவிட்டாய், 304 00:23:56,645 --> 00:23:58,897 நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறாய். 305 00:23:58,981 --> 00:24:03,944 நான் அரியணையில் அமர்வதற்கான தயாரிப்பில் என் வாழ்க்கையை செலவிட்டேன். 306 00:24:04,027 --> 00:24:06,822 நீ என்னை தடுக்க முடியாது! 307 00:24:24,464 --> 00:24:25,757 பாருங்கள், அது டேனா! 308 00:24:26,425 --> 00:24:27,426 நிறுத்துங்கள். 309 00:24:35,100 --> 00:24:37,394 என்னை கவலைப்பட வைக்காதே, டேனா. 310 00:24:37,477 --> 00:24:38,562 ஜார்ஜுக்கு அடிபட்டுள்ளது. 311 00:24:38,645 --> 00:24:40,647 கவலைப்படாதே. நாங்கள் அவரைப் பார்த்துக்கொள்கிறோம். 312 00:24:40,731 --> 00:24:41,815 நன்றி, அப்பா. 313 00:24:43,483 --> 00:24:45,068 ஓ, ஜார்ஜ். 314 00:24:45,152 --> 00:24:47,529 கவலைப்படுவதை நிறுத்து. நான் நன்றாக இருக்கிறேன். 315 00:24:48,572 --> 00:24:52,034 -நீ நலமாக இருக்கிறாயா, சார்லி? -ஆம். ஆனால் லோர்கனுக்கு நம் உதவி தேவை. 316 00:25:01,752 --> 00:25:04,171 மேலதிகாரி, லேலண்ட் பேசுகிறேன். கேட்கிறதா? 317 00:25:06,798 --> 00:25:08,217 மேலதிகாரி வாக்கர், உங்களுக்குக் கேட்கிறதா? 318 00:25:17,976 --> 00:25:21,021 கடற்கரையில் ஒரு சிறிய பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. ஓவர். 319 00:25:22,689 --> 00:25:25,776 நான் இங்கே என்ன பார்க்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அது நன்றாக இல்லை. 320 00:25:27,277 --> 00:25:30,072 அட, அன்பே, எனக்கு நீங்கள் தேவை. எங்கள் எல்லோருக்கும். 321 00:25:30,864 --> 00:25:31,865 ஓவர். 322 00:25:59,810 --> 00:26:01,186 அவ்வளவுதான் உன்னால் முடியுமா? 323 00:26:01,937 --> 00:26:03,355 நீ திரிசூலத்தை கொண்டு வந்திருக்க வேண்டும். 324 00:26:03,939 --> 00:26:05,023 ஒருவேளை நாம் பகிர்ந்துகொள்ளலாம். 325 00:27:11,465 --> 00:27:12,591 இல்லை! 326 00:27:17,137 --> 00:27:19,097 நான் உன்னைக் காயப்படுத்த விரும்பவில்லை, காய். 327 00:27:21,850 --> 00:27:26,480 மன்னித்துவிடு, ஆனால் உன்னை திரும்பிப் போக விட முடியாது. நீ நீயாக இல்லை. 328 00:27:27,940 --> 00:27:29,316 உனக்கு என்னைத் தெரியும் என்று நினைக்கிறாயா? 329 00:27:29,399 --> 00:27:34,613 இல்லை. நான் உன்னை இதுவரை சந்தித்ததில்லை, தீய சக்தி மட்டுமே உன் மனதைக் கட்டுப்படுத்துகிறது. 330 00:27:35,405 --> 00:27:36,823 அது உன்னைப் பயன்படுத்துகிறது, காய். 331 00:27:37,407 --> 00:27:38,825 என்னைப் பயன்படுத்துகிறதா? 332 00:27:38,909 --> 00:27:41,870 நான் ஒருபோதும் இதைவிட அதிக சக்திவாய்ந்தவளாகவோ அல்லது கட்டுப்பாட்டுடனோ இருந்ததாக தோன்றியதில்லை. 333 00:27:41,954 --> 00:27:45,916 உனக்கு அப்படி தோன்றியது என்று எனக்குத் தெரியும். உன் கனவில் நான் பார்த்தேன். 334 00:27:45,999 --> 00:27:48,752 அது நீயா? நான் நினைத்தேன்... 335 00:27:49,336 --> 00:27:50,587 நம் அப்பா என்றா? 336 00:27:51,255 --> 00:27:56,343 "எனக்கு உதவு, லோர்கன், எனக்கு உதவு!" இல்லை, அதெல்லாம் நான்தான். 337 00:27:56,885 --> 00:28:00,556 நான் உன் மனதில் இருந்தேன், அங்கு தீய சக்தியை உணர்ந்தேன். 338 00:28:01,181 --> 00:28:03,600 -நீயும் என்னைப் போன்றவன்தான். -அது உண்மை அல்ல. 339 00:28:03,684 --> 00:28:06,520 ஏதோ நடக்கிறது. வாருங்கள். 340 00:28:07,020 --> 00:28:08,564 என்னுடன் வா, லோர்கன். 341 00:28:08,647 --> 00:28:11,608 நாம் ஒன்றாக உலகங்களை வெல்ல முடியும். 342 00:28:11,692 --> 00:28:12,818 நீ விரும்புவது அதுதான். 343 00:28:12,901 --> 00:28:14,194 எப்படி உன்னால் அப்படி நினைக்க முடிந்தது? 344 00:28:14,278 --> 00:28:16,321 ஏனென்றால் நீ எப்போதும் விரும்பியது அதைத்தான். 345 00:28:17,072 --> 00:28:20,075 இறுதியாகச் சொந்தம் கொண்டாடும் வாய்ப்பை உனக்கு வழங்குகிறேன். 346 00:28:20,158 --> 00:28:22,953 அதை நிறுத்து. நீ என்ன செய்ய முயற்சிக்கிறாய் என்று எனக்குத் தெரியும். 347 00:28:23,036 --> 00:28:25,247 நமது உலகங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. 348 00:28:25,330 --> 00:28:27,708 அவை வெற்றிபெறும் பக்கம் நீ இருக்க வேண்டாமா? 349 00:28:27,791 --> 00:28:30,002 நான் ஏற்கனவே என் பக்கத்தைத் தேர்ந்தெடுத்துவிட்டேன். 350 00:28:31,086 --> 00:28:32,796 அது எந்தப் பக்கம், லோர்கன்? 351 00:28:33,297 --> 00:28:35,174 உன்னைக் கொஞ்சம் கூட விரும்பாத உலகமா 352 00:28:35,883 --> 00:28:38,510 அல்லது நீ ஒருபோதும் ஒரு பகுதியாக இருக்க முடியாத உலகமா? 353 00:28:39,845 --> 00:28:40,971 போதும்! 354 00:28:47,728 --> 00:28:50,439 -அதைச் செய்யாதே! -நீ அவளைப் போல இல்லை. 355 00:28:50,522 --> 00:28:52,441 இது நீ அல்ல, லோர்கன். 356 00:29:04,328 --> 00:29:08,123 மனிதர்கள் வளர்த்ததால் நீ பலவீனமாகிவிட்டாய். 357 00:29:09,374 --> 00:29:11,043 நீ மினட்டோர் இல்லை. 358 00:29:11,126 --> 00:29:13,504 நான் உன்னைப் போல இல்லையே என்று ஆசைப்பட்ட ஒரு காலம் இருந்தது. 359 00:29:14,254 --> 00:29:18,342 மனிதனாக இருக்க நான் எதையும் செய்திருப்பேன். மற்ற எல்லா குழந்தைகளையும் போலவே. 360 00:29:19,426 --> 00:29:22,262 ஆனால் நான் மற்ற எல்லா குழந்தைகளையும் போல இல்லை, இல்லையா? 361 00:29:23,222 --> 00:29:25,807 நான் மனித இதயம் கொண்ட மினட்டோர், 362 00:29:26,391 --> 00:29:29,186 உலகங்களை ஒன்றிணைக்க நான் மிகச்சரியாக அப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும். 363 00:29:29,269 --> 00:29:31,522 உலகங்களை ஒன்றிணைக்கவா? 364 00:29:31,605 --> 00:29:32,940 நீ யாரென்று நினைக்கிறாய்? 365 00:29:35,484 --> 00:29:40,572 நான் லோர்கன் மெக்ரீடி. மெக்ரீடிக்கள் சரி செய்பவர்கள், போராளிகள் அல்ல. 366 00:29:40,656 --> 00:29:44,284 இன்னும் காலம் கடந்துவிடவில்லை, காய். நான் உனக்கு உதவுகிறேன். 367 00:30:10,727 --> 00:30:12,354 அது முடிந்துவிட்டது, காய். 368 00:30:12,437 --> 00:30:14,439 எதுவும் முடியவில்லை. 369 00:30:41,341 --> 00:30:42,718 இப்போது, அது ஒரு நல்ல காட்சி! 370 00:31:02,237 --> 00:31:03,739 அவர்கள் நன்றாக இருப்பார்கள், பிள்ளைகளே. 371 00:31:10,287 --> 00:31:13,665 திரு. கிரேய்க்னெல்டர், நீங்கள் ஆச்சரியங்கள் நிறைந்தவர். 372 00:31:16,293 --> 00:31:19,004 இந்த பண்டிகையை தொடங்குவோம்! 373 00:31:19,087 --> 00:31:20,130 பேருந்தில் சந்திப்போம். 374 00:31:21,131 --> 00:31:23,634 மன்னிக்கவும், நீங்கள் எல்லோரும் இப்போது உணவகத்தில் இருக்க வேண்டாமா? 375 00:31:23,717 --> 00:31:25,969 அல்லது ஒரு பண்டிகை இருப்பதை மறந்துவிட்டீர்களா? 376 00:31:26,553 --> 00:31:29,806 இந்தக் குடும்பம் ஒரு நாளுக்குப் போதுமான உற்சாகத்தை அடைந்துவிட்டது என்று நினைக்கிறேன். 377 00:31:29,890 --> 00:31:31,600 நாங்கள் இந்த பண்டிகையில் பங்கேற்கப் போவதில்லை. 378 00:31:34,478 --> 00:31:36,897 மகிழ்ச்சியான குடும்பங்களுக்கு இது நேரமில்லை. 379 00:31:37,481 --> 00:31:41,443 எனது விருந்தினர்கள் ஒரு மத்திய கோடைகால நிலவு திருவிழாவை எதிர்பார்க்கிறார்கள். 380 00:31:41,527 --> 00:31:44,363 உணவு இல்லாமல் பண்டிகையை கொண்டாட முடியாது. 381 00:31:44,446 --> 00:31:45,989 மோசமான யோசனையாக தெரியவில்லை. 382 00:31:46,657 --> 00:31:49,368 இப்போது சுற்றுலாப் பயணிகள் இதையெல்லாம் பண்டிகையின் ஒரு பகுதி என்று நினைக்கிறார்கள். 383 00:31:49,451 --> 00:31:50,452 அவர் சொல்வதில் விஷயம் இருக்கிறது. 384 00:31:50,953 --> 00:31:53,539 நாம் அவர்களை ஏமாற்ற விரும்பினால், அவர்கள் போக்கிலேயே நாம் அதை தொடர வேண்டும். 385 00:31:54,039 --> 00:31:57,876 உங்களுக்கும் உங்கள் உணவகத்திற்கும் பிரகாசமான எதிர்காலத்தின் தொடக்கமாக இருக்கலாம். 386 00:31:57,960 --> 00:31:59,753 அட. எனக்கு உதவுங்கள். 387 00:32:00,587 --> 00:32:01,839 இது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. 388 00:32:01,922 --> 00:32:05,259 ஆம், ஆனால்... கிரேய்க்னெல்டருக்கு உதவுவதா? 389 00:32:05,968 --> 00:32:09,096 சரி. முதலில், அச்சச்சோ, என் உணர்வுகளை காயப்படுத்திவிட்டர்கள். 390 00:32:09,179 --> 00:32:12,558 இரண்டாவதாக, நான் மெக்ரீடிக்கள் சரிசெய்பவர்கள் என்று நினைத்தேன். 391 00:32:13,267 --> 00:32:17,563 அது இல்லை... நான் செய்யவில்லை... உங்களால் முடியாது... 392 00:32:19,106 --> 00:32:20,232 நான் இதை நம்பவில்லை. 393 00:32:25,320 --> 00:32:27,531 மத்திய கோடைகால நிலவு 394 00:32:28,949 --> 00:32:31,493 பேக்கரி 395 00:32:33,579 --> 00:32:35,205 மீன் & சிப்ஸ் 396 00:32:35,289 --> 00:32:38,250 -ஃப்ரைஸ், ஹாம்பர்கர். வேறு எதாவது? -ஃப்ரைஸுடன் பர்கரா? 397 00:32:38,333 --> 00:32:39,877 ஓ, டா-டா. 398 00:32:43,589 --> 00:32:47,509 நாளை முதல் வேலையாக, இரண்டாவது நுழைவாயிலை சரிசெய்யும் வேலையை செய்கிறேன். 399 00:32:47,593 --> 00:32:49,386 தீய சக்தியை அதன் மூலத்திலிருந்து துண்டிப்பது 400 00:32:49,469 --> 00:32:51,054 அதன் பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 401 00:32:51,138 --> 00:32:54,016 இத்தனை வருடங்களாக என்னை கவனித்துக்கொண்டதற்கு நன்றி. 402 00:32:54,099 --> 00:32:57,311 அது எளிதானது அல்ல, ஆனால் அது ஒரு கௌரவம். 403 00:33:02,149 --> 00:33:03,150 நான் உங்களுக்கு உதவலாமா? 404 00:33:03,859 --> 00:33:06,904 நீங்கள் ஒரு தேவதை போர்வீரராக மாறி, உருமாறும் மிருகத்துடன் சண்டையிட்டு, 405 00:33:06,987 --> 00:33:09,781 பிறகு ஒரு திரிசூலத்தை பிடுங்க தீவை கடந்து பறந்து வந்தீர்கள். 406 00:33:10,449 --> 00:33:13,327 நாங்கள் உங்களை பார்த்துக்கொண்டே இருக்கப் போகிறோம். 407 00:33:13,410 --> 00:33:15,913 நியாயமாகச் சொல்வதென்றால், மேலதிகாரி, யோசித்துப் பார்க்க ஏராளம் இருக்கிறது. 408 00:33:16,830 --> 00:33:18,624 என் கணவர் என்ன நினைப்பார் என்று நினைக்கிறீர்கள்? 409 00:33:19,958 --> 00:33:23,045 பொறு. இல்லை. 410 00:33:24,171 --> 00:33:27,716 நான் அவரை அவரது கற்பனையில் இருந்து காப்பாற்றுவது நல்லது. நான் போகிறேன். 411 00:33:29,301 --> 00:33:33,639 தீவுவாசிகள் மீண்டும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்ப்பது இதயத்துக்கு இதமளிக்கிறது. 412 00:33:34,223 --> 00:33:37,017 அதற்கு அவர்கள் உனக்கு உன் நண்பர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும். 413 00:33:37,100 --> 00:33:39,228 அவர்களுக்கு உண்மை தெரிந்தால். 414 00:33:39,311 --> 00:33:43,065 காயிடம் இரண்டாவது தாயத்து இருக்கும் வரை, அவர்கள் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள். 415 00:33:43,148 --> 00:33:45,150 அதை நாளை விவாதிக்கலாம். 416 00:33:45,651 --> 00:33:48,987 ஆனால் இன்றிரவு கொண்டாட்டத்திற்கானது. 417 00:33:49,071 --> 00:33:51,615 எனவே செல்லுங்கள், கொண்டாடுங்கள். 418 00:33:51,698 --> 00:33:53,825 ஆம், மகிழ்ச்சியாக இருங்கள். 419 00:33:55,077 --> 00:33:57,246 எனவே, நீ ஒரு இளவரசன் என்று கேள்விப்பட்டோம். 420 00:33:57,746 --> 00:33:59,164 மேன்மை பொருந்திய இளவரசே. 421 00:33:59,248 --> 00:34:03,293 நீ வரலாற்றில் மிக இளைய மூத்தவராக ஆகப் போவதாக நான் கேள்விப்படுகிறேன். 422 00:34:03,377 --> 00:34:05,337 அது இன்னும் நிஜமானதாக நான் நினைக்கவில்லை. 423 00:34:05,420 --> 00:34:06,964 அது நடக்குமா என்றே எனக்குத் தெரியவில்லை. 424 00:34:18,141 --> 00:34:21,353 -நாம் மூத்தவர்களாக இருக்க விரும்புகிறோமா? -நமக்கு வேறு வழியிருக்கிறதா? 425 00:34:21,436 --> 00:34:23,355 நேரம் வரும்போது நாம் தயாராக இருப்போமா? 426 00:34:23,438 --> 00:34:27,734 நேரம் ஏற்கனவே வந்துவிட்டது. உங்களைப் பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் நான் தயார். 427 00:34:27,818 --> 00:34:28,985 நீ சொல்வது சரிதான். 428 00:34:29,069 --> 00:34:32,197 நாம் அனுபவித்த எல்லாவற்றுக்கும் பிறகு, நாம் எதற்கும் தயார் என்று நினைக்கிறேன். 429 00:34:33,364 --> 00:34:35,242 இதைத் தவிர வேறு எதையும். 430 00:34:35,324 --> 00:34:39,538 ஓ, இல்லை. இல்லை! 431 00:34:39,621 --> 00:34:41,623 ஹலோ, பிரையனி தீவு! 432 00:34:42,833 --> 00:34:45,043 நாங்கள் எக்ஸ்ட்ரா மீடியம்… 433 00:34:45,127 --> 00:34:46,128 எக்ஸ்ட்ரா மீடியம் 434 00:34:46,210 --> 00:34:48,255 …நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள்! 435 00:34:50,757 --> 00:34:56,013 எக்ஸ்ட்ரா மீடியம், எக்ஸ்ட்ரா மீடியம் உங்கள் கண்முன்னே 436 00:34:56,847 --> 00:34:59,725 எக்ஸ்ட்ரா மீடியம், எக்ஸ்ட்ரா மீடியம் 437 00:34:59,808 --> 00:35:04,938 அளவிற்கு எங்களை முயற்சித்துப் பாருங்கள் 438 00:35:18,827 --> 00:35:20,412 சரி. 439 00:35:22,998 --> 00:35:23,832 காலை வணக்கம். 440 00:35:24,499 --> 00:35:27,711 ஆஹா. என்னவொரு இரவு. நான் சொல்வது சரிதானே? 441 00:35:27,794 --> 00:35:30,631 உண்மை. எல்லா விதத்திலும் வெற்றி. 442 00:35:30,714 --> 00:35:31,715 திரு. கிரேய்க்னெல்டர்? 443 00:35:31,798 --> 00:35:35,010 நான் என் மகன் வெஸ்லி ஜூனியரை தொலைத்துவிட்டதாகத் தோன்றுகிறது. 444 00:35:35,093 --> 00:35:38,639 அவன் தனது நண்பர்களுடன் இங்கே இருப்பான் என்று நான் நம்பினேன். 445 00:35:40,098 --> 00:35:42,184 அவர்கள் அவனைப் பார்த்தார்களா என்று நான் சிறுவர்களிடம் கேட்கிறேன். 446 00:35:45,395 --> 00:35:46,480 சிறுவர்களே. 447 00:35:48,190 --> 00:35:49,191 சிறுவர்களா? 448 00:36:05,874 --> 00:36:07,626 இதைப் பற்றி உறுதியாக இருக்கிறாயா? 449 00:36:07,709 --> 00:36:08,794 இதுதான் என் விதி. 450 00:36:09,586 --> 00:36:11,713 நான் மறுபக்கத்திற்கு அமைதியைக் கொண்டுவந்து, 451 00:36:11,797 --> 00:36:14,675 தீய சக்தியை விரட்டி, உலகங்களை ஒன்றிணைக்கப் போகிறேன். 452 00:36:14,758 --> 00:36:18,887 அது ஆபத்தானதாகத் தெரிகிறது. குறிப்பாக, ஒரு சிறுவனுக்கு. 453 00:36:18,971 --> 00:36:21,849 சிறுவனா? நான் மினட்டோர்களின் ராஜா. 454 00:36:21,932 --> 00:36:23,350 அவர்களுக்கு அது இன்னும் தெரியாது. 455 00:36:25,018 --> 00:36:28,355 காய் தனது மினட்டோர் இராணுவத்தை நம் உலகத்திற்கு கொண்டு வருவதற்காக நான் காத்திருந்தால், 456 00:36:28,438 --> 00:36:29,940 நம்மால் எதிர்கொள்ள முடியாது. 457 00:36:30,023 --> 00:36:32,568 எனக்கு வேறு வழியில்லை, ஆனால் உங்களுக்கு இருக்கிறது. 458 00:36:33,402 --> 00:36:35,529 இது என்னுடைய விதி, உங்களுடையது அல்ல. 459 00:36:35,612 --> 00:36:37,865 அதை மறந்துவிடு. இதை நீ தனியாக செய்யப் போவதில்லை. 460 00:36:37,948 --> 00:36:41,368 மினட்டோர் ராஜாவாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், இன்னும் நீ என் அண்ணன்தான். 461 00:36:41,451 --> 00:36:44,121 இவற்றின் மூலம் நான் கற்றுக்கொண்ட ஒன்று இருந்தால், 462 00:36:44,204 --> 00:36:45,873 அது உனக்கு நான் தேவை என்பதுதான். 463 00:36:46,456 --> 00:36:48,250 -நிஜமாகவா? -நிஜமாகத்தான். 464 00:36:48,333 --> 00:36:52,713 நானும் வர வேண்டும். புராண கவிதையின் இரண்டாம் பாதி தெளிவாக சொல்கிறது, 465 00:36:52,796 --> 00:36:55,299 "நீல நிலவு வானத்தை ஒளிரச் செய்யும் போது, 466 00:36:55,382 --> 00:36:58,135 அரசாட்சி வீழும், ஒரு வாரிசு எழுவான்" என்று. 467 00:36:58,218 --> 00:36:59,511 அதற்கு அர்த்தம் என்ன? 468 00:36:59,595 --> 00:37:02,389 எனக்குத் தெரியாது. அதனால்தான் நான் வர வேண்டும். 469 00:37:02,472 --> 00:37:03,307 ஹார்பர்? 470 00:37:04,308 --> 00:37:07,269 சரி, வெளிப்படையாக நான் வர வேண்டும். நான்தான் உங்கள் தலைவி. 471 00:37:10,189 --> 00:37:12,858 ஹேய்! அதை விடுங்கள். நாம் அவசரமாக போக வேண்டும் என்று நினைத்தேன். 472 00:37:14,610 --> 00:37:15,611 சரி. 473 00:37:36,173 --> 00:37:38,383 நாம் நிஜமாகவே இதைச் செய்கிறோம். 474 00:37:38,467 --> 00:37:39,510 எல்லோரும் தயாரா? 475 00:37:39,593 --> 00:37:42,262 -எதற்குத் தயாரா? -எனக்கு எதுவும் தெரியாது. 476 00:38:42,155 --> 00:38:44,157 வசனத் தமிழாக்கம் அருண்குமார்